புது மங்கள சௌபாக்யம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
"என்னடி நிப்பான் பெயிண்ட் கம்பெனி எதுவும் நஷ்டத்துல போகுதா??"

"என்ன டி உளறுற??"

"இல்ல சரண்.. உன் முகம் அப்பிட்டு வர பெயிண்ட் ரெண்டு லேயர் கம்மியா இருக்கே அதான்.."

"போடி பைத்தியக்காரி.. நானே சோகமா இருக்கேன்.."

"ஏன் டி என்னாச்சு??"

"இந்தா பாரு.." என்ற சரண்யா ஒரு தாளை தூக்கி வெண்ணிலா கையில் திணிக்க அதில், 'வங்கியின் சிஸ்டம் மற்றும் பிற உபகரணங்களுக்கான வேலை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதால் அன்று வங்கி விடுமுறை.' என்றுயிருக்க..

"ஏண்டி எனக்கு சத்தியமா புரியல நீ வார நாளுல லீவு விட்டாலே ஜாலியா இருப்ப, இப்போ வார கடைசி லீவு அதுக்கென்ன சோகமோ?? "

"ஹே எரும நம்ம என்ன பிளான் போட்டோம் சாட்டர்டே வெளில போலாம்னு பிளான் போட்டோமே டி இப்ப லீவு விட்டா என்ன பண்றது??"

"ஹரே பைத்தியம்! ஹால்ப் டே மட்டும் வெளில போலாம்னு தான் சொல்லியிருந்தோம். இப்ப லீவ் விட்டு இருக்காங்க சோ முழு நாளும் நம்ம வெளில சுத்தலாமே இதுல என்ன பிரச்சனை உனக்கு?? ஒரு வேலை உங்க வீட்ல எதுவும் சாட்டர் டே வீட்டுக்கு வர சொல்லிட்டாங்களோ??"

"அடியே எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லடி.. எங்க அம்மா கிட்ட நான் சாட்டர் டே லீவு உன் கூட வெளியில் சுத்திட்டு சண்டே தான் வருவேன்னாலும் என்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க.. ஆனா உனக்கு முன்ன மாதிரியா உன் ஹஸ்பண்ட் வீட்டையும் சமாளிக்கணும்ல. "

"அடி! இதுக்கா ஒப்பாரி வச்ச?? அது என் பிரச்சனை நம்ம சனிக்கிழமை எப்போதும் போல கிளம்பி வந்து முழு நேரமும் வெளிய சுத்துறோம் மஜா பண்றோம் டாட்.. "

என்று ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்..

தன் இடத்திற்கு வந்து வேலை செய்ய அமர்ந்தவள் கையிலிருக்கும் தாளையும், நித்திக் சரண் அறையையும் யோசனையாக பார்த்துக்கொண்டே இருந்தாள்..

பின்னே நித்திக் அனுமதி வாங்காமல் வங்கி இதை செய்வது சாத்தியம் இல்லையே?? ஆனால் இப்போது இந்த வேலையை அவசரமாக வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் அவளுக்கு புரியவில்லை..

வெள்ளி இரவே நித்திகிற்கு தெரியாமல் யசோதாவிடம் வெளியே செல்ல அனுமதி வாங்கியிருக்க வழக்கம் போல சனி காலை எழுந்தவள் கொஞ்சம் தன் மாமியாருக்கு வேலையில் உதவி செய்து குளிக்க தங்கள் அறை வந்தாள்..

"ஹே குட் மார்னிங்.. ஒரு காபி கிடைக்குமா ப்ளீஸ்.."

என்று முகத்தை சுருக்கி நித்திக் கேட்டான்.. உடனே சென்று காபி கலந்து வந்து அமைதியாக கையில் குடுத்துவிட்டு குளியறைக்குள் செல்லும் வெண்ணிலாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

"ஏய்!! என்ன இவ்ளோ ஏர்லியா குளிச்சுட்ட??"

"எப்போதும் இப்புடி தானே.." என்றவள் கண்ணாடி முன்னால் அமர்ந்து தலையை உலர்த்த,

"எங்கையும் கிளம்புறியா??"

"ஆமா"

"எங்க??"

"பிரண்ட்ஸ் கூட அவுட்டிங்.."

"அம்மாகிட்ட கேட்டுட்டியா??"

"உங்க அம்மாகிட்ட நான் ஏன் கேட்கணும்.."

தலையை திருப்பாமல் தன் பின்னே நிற்கும் கணவனை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே பேசும் வெண்ணிலா, அதும் இந்த அதிரடி பதிலில் முகம் கலவரமாக அவளை பார்க்க,

"ஜேகே.. ஜேகே.. ஜஸ்ட் கிட்டிங்.." என்று பளீர் புன்னகையை வீசிவிட்டு, "நேத்து நைட்டே அத்தைகிட்ட கேட்டுட்டேன்.. ஓகே சொல்லிட்டாங்க.."

என்றவள் தன் ஆடைகள் அடங்கிய பீரோவை திறந்தாள்..

"ஆமா கேட்க மறந்துட்டேன்.. அத்தைக்கு பிடிக்காத கலர் என்னது??"

"ஏன்??"

"என்கிட்ட எல்லா கலர்லயும் டிரஸ் இருக்கும் சொல்லுங்க??"

"டிபிக்கல் அம்மா கலர் தான்.. என்ன புரியல பிளாக்.."

"ஹாஹா!! அத்த கூடவா இதெல்லாம் பாப்பாங்க??"

"அய்யோ! ரொம்ப.. சின்னப் பிள்ளையில் படிக்கும் போது தான் என்ன பிளாக் கலர் எடுக்கவில்லை. ஆனால் வேலைக்கு போய் நானே சம்பாரிச்சு ஆசையா பிளாக் கலர் டி-ஷர்ட் எடுத்துட்டு வந்தேன். தாம் தூம் என்று ஒரே குதி ஆச பட்டதுனால அந்த டிரஸ் என்னால பீரோக்குள்ள வச்சுக்க முடிஞ்சுச்சு ஆனா இப்ப வரைக்கும் என்னால போடவே முடியவில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச கலரு பிளாக் தான். ஆனா என்கிட்ட பிளாக் கலர்ல டிரஸ் இல்ல சோ சாட்.."

"ஓஓஓஓ!!"

"ஆமா!! இதுல இந்த பப்பூ இருக்காளே அவ அதுக்கும் மேல.. அவளுக்கு பிளாக் கலர் பிடிக்காது.. என்னைய பைக் கலர் கூட பிளாக் வாங்க விடாம.. இதுங்க ரெண்டும் படுத்துன பாடு இருக்கே.."

"ஏன் அவங்களுக்கு பிளாக் பிடிக்காது??"

"அவ எங்க அம்மா பக்தை அப்புடித்தான் சொல்லணும்.. இவங்களுக்கு பிடிக்கலேன்னா அவளுக்கும் பிடிக்காது.. இதுல எங்க அம்மா வேற எந்த டீனேஜ் பிள்ளையாவது பிளாக் பிடிக்காம இருக்குமா?? என் தங்கம் எனக்காக தான் இதெல்லாம் பண்ணுதுன்னு பெரும வேற.."

"சூப்பர்! தேங்க்ஸ் ஃபார் த எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்."

என்றவள் பீரோவை உருட்டி ஏதோ ஆடையை எடுத்துக்கொண்டு குளியறைக்குள் சென்றாள்..

'அய்யயோ!! இவ பேசி நம்மள டைவேர்ட் பண்ணிட்டாலே வந்ததும் அதுங்க கூட ஊர் சுத்த போக விடாம தடுக்கணும்.. என்ன சொல்லலாம்??" என்றவன் யோசனையை கலைக்க கதவு சத்தம் கேட்டது..

திரும்பி பார்த்த நித்திக் கண்கள் இமைக்க மறந்தது.. இதழ்கள் தானாக அசைந்தது, "கார்ஜியஸ்!" என்று..

ப்ளூ ஜீன்ஸ் அணிந்து மேலே கருப்பு ஷார்ட் டாப்.. சிறிதாக கை வைத்த டாப் அது, அந்த டாப்பில் கழுத்தில் இருக்கும் டிசைன் கூட கருப்பு ஜமிகியில் இருந்தது.. கண்ணாடி முன் நின்று கருப்பு வட்ட குட்டி பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள்.. சிகையின் இரு புறமும் எடுத்து குட்டி கருப்பு கேட்ச் கிளிப்பில் அடைக்க காற்றில் கூந்தல் மயில் தோகையாக விரிந்து அவள் முதுகில் நடனமாடியது.. காதில் கருப்பு வளைய தோடு, கழுத்தில் அடுகடுக்காக கருப்பு பாசி, கையில் கருப்பு கைஜெயின், கருப்பு வாட்ச் இதெல்லாம் விட கூடுதலாக கண்ணில் அழுத்தி வரையப்பட்ட காஜல், கூடவே தன் கருப்பு ஹாண்ட் பேகை தூக்கிக்கொண்டு அவள் முன்னே செல்ல, அவள் செய்வதை பொறுமையாக பார்த்தவனின் பார்வையில் ரசனை மிகுந்திருந்தது..

"அத்த!!"

திரும்பி யசோதா பார்க்க அவள் முகம் பாகற்காயை பச்சையாக கடிக்க வைத்தது போல இருந்தது.. தன் மாமியாரின் இந்த ஒவ்வாமை பார்வை மனதை காயப்படுத்தினாலும் சாரு முகம் வந்து சாந்தி படுத்தியது..

"எப்புடி இருக்கேன் அத்த??"

"அது.. வந்துடா.. கண்ணு.. ஹான்.. என் மருமக எது போட்டாலும் சூப்பரா தான் இருக்கும்."

என்று கூறிய யசோதா கண்ணை கூர்ந்து பார்த்தவள் பின்னே நித்திக் நின்றான்.. ஏதோ புரிவதுபோல இருக்க அமைதியாக கிளம்பி தன் வண்டியை கிளப்ப அதுவோ ஸ்டார்ட் ஆகுவேன்னா என்றது..

"என்னாச்சு??"

"பெட்ரோல் இருக்கு வண்டியும் கண்டிஷன் வண்டி தான் ஆனா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. "

"இத்தனை நாளா ஓட்டாம இருந்துச்சுல அதான் சீக்கிரம் ஸ்டார்ட் ஆகாது. " என்றவன் அவனும் அழுத்தி பார்க்க வண்டி கிளம்ப மறுத்தது..

"சரி பரவால்ல விடுங்க.. நான் அபிய வர சொல்லி கிளம்பிக்குறேன்.."

"எதே அபியா??" திரும்பி அன்னையை ஒரு பார்வை பார்த்தான்..

"ம்ம்ம்ம்!!"

"இல்ல வேண்டாம்.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நான் கிளம்பி வந்துடறேன்.."

"உங்களுக்கு எதுக்கு சிரமம்.."

"உன்ன வெயிட் பண்ண சொன்னேன்.." என்றவன் ஆபிஸில் பார்க்கும் பார்வை வந்துபோக, 'சிடுவன் மோட் ஆன் ஆகிட்டு. " என்றவள் வாயை இறுக்க மூடிக்கொண்டாள்..

அவசரமாக அறைக்குள் வந்தவன் குளித்து வெளியே வந்து ஆடை மாற்றி சொன்னது போலவே பத்து நிமிடத்தில் நின்றான்..

ஆடை மாற்றி வந்த அவளை இவன் பார்த்தது போலே இப்போது அவள் பார்த்து நின்றாள்.. அதே ப்ளூ ஜீன்ஸ், ஆசையாக வாங்கி அணிய முடியாமல் வைத்திருந்த கருப்பு டீ ஷர்ட் என்று ஆண் அழகானாக வந்து நின்றான்..

"ம்மா போய்ட்டு வரோம்.." என்று ஜோடியாக செல்லும் பிள்ளைகளை பார்த்தவர் கண்ணில் படத்தில் வரும் ஹீரோ ஹீரோயின் போல தன் மகன் மருமகள் தெரிய, "கருப்பு கலர்ல டிரஸ் போட்டாலும் ஜோடியா போட்டா அழகா தான்யா இருக்கு!!" என்று அவர்கள் செல்லும் பாதையை சுற்றி வழித்து நெட்டி முறித்தார் யசோதா..

"குளிச்சிங்களா?? இல்ல சும்மா முகம் கழுவிட்டு வந்திங்களா??"

"குளிச்சேன்.. ஏன்??"

"இல்ல பத்து நிமிசத்துல எப்புடி??"

"ஆண்கள் மா அப்புடி தான்.."

"ஓ!! அப்போ இதான் காக்கா குளியலோ. சோப்பு தேச்சீங்களா இல்லையா??"

பக்கவாட்டில் தலையை திருப்பி அமர்ந்திருப்பவளை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக பிரேக்கை அழுத்த வெண்ணிலா மூக்கு நச்சென்று நித்திக் பின் கழுத்தில் வந்து மோதியது..

"அவுச்!! பாத்து போங்க.."

"சோப்பு வாசம் அடிக்குதா??"

முதலில் புரியாமல் யோசித்தவள் பிறகு புரிந்து கன்னம் சிவந்தாலும் அவளின் குட்டி மூக்கை உறிஞ்சி, "ஹ்க்கும்!! எங்கத்த உங்க ஃபர்ஸ்ட் லவ் வாசம் தான் அடிக்குது.."

என்றதும் ரீர் மிரர் வழியே அவளை முறைக்க, "அய்யோ! நான் உங்க பெர்ஃப்யூம் பேர சொன்னேன்." என்று நாக்கை கடித்துக்கொண்டாள்..

அதற்கு பிறகு அமைதியாக தான் இருந்தது அந்த பயணம், இவள் மட்டும் அவ்வப்போது அவனின் முறுக்கேரிய பூஜத்தில் வண்டியின் ஆக்சிலேட்டர் படும் பாட்டை ரசித்து பார்த்துக்கொண்டே வந்தாள்..

"எங்க போறோம்??"

தன்னை ரசித்துக்கொண்டு வரும் அவளின் ரசனையை கலைக்க எக்கு குரலில் கேட்டான் நித்திக்..

"ரிலையன்ஸ் ஸ்மார்ட் மால்."

"அங்கயா??"

"ம்ம்ம்ம்!!"

"ஏன் வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கணுமா??"

"இல்லையே.. ஏன்??"

"அங்க வேற என்ன இருக்கும்??"

"ஆமா திண்டுக்கல்ல வேற எங்கத்த போறதாம்.."

பைக்கை நிப்பாட்டிய நித்திக் தன் மொபைல் எடுத்து வெண்ணிலா வாட்ஸாபிற்கு ஒரு லொகேஷன் அனுப்பி அவர்களை அங்கே வர சொல்லுமாறு கூறினான்..

"எங்க போறோம்??"

நம்ம ஒரு பிளான் போட்டா இவன் நம்மள வச்சு இன்னொரு பிளான் போடுறானே என்று பேந்த பேந்த முழித்துக் கொண்டு இப்பொழுது கேள்வி கேட்பது வெண்ணிலா முறையாயிற்று..

"விஷால் டி மால், மதுரை.. "

"ஐயோ அவ்வளவு தூரம்மா??"

"உன் சொந்த ஊர் என்ன??"

"மதுரை தான்.. ஏன்??"

"பின்ன பேமஸ் மால் கூட தெரியாம இருக்க??"

"போனதில்ல.."

"ம்ம்ம்ம்!! திண்டுக்கல் நம்ம ரூட்ல இருந்து அந்த மாலுக்கு ஒரு 4 km தான் எப்படியும் ஹாஃப் அன் ஹவர்குள்ள போயிடலாம்."

"ஓஓஓஓ அங்க என்ன இருக்கும்??"

"ம்ம்ம்ம் பெருசா குழி இருக்கும்.. உன்ன தள்ளி மூட போறேன்.."

"ரொம்ப தான் ப்பா.."

என்று அவன் தோளில் இவள் குத்த ஒரு கையில் வண்டியை ஓட்டிக்கொண்டே மறு கையால் தலையை கோதினான்.. அவளின் "ப்பா!!" என்ற அழைப்பு அவனை புருஷன் மோடுக்கு கூட்டி செல்லுமே..

அங்கு வந்து வண்டியை நிப்பாட்டுவிட்டு இறங்கி இருவரும் நடந்து வர அத்தனை பெரிய மால் டோரின் வாசலில் புஷ், புல் என்று எழுதி இருக்க வழக்கம் போல வெண்ணிலா யோசித்து நின்று கொண்டிருக்க ஆனால் அதை வெளிப்படையாக முகத்தில் காட்டவும் இல்லை.. இவளை பற்றி தான் நன்கு புரிந்தவன் ஆயிற்றே நித்திக் தினமும் பேங்க் வாசலில் புஷ், புலில் போராடி முட்டிக்கொள்வாளே.. நமட்டு சிரிப்பு ஒன்று சிரித்து கதவை முன்னால் தள்ளி திறந்து விட அவள் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் இவனும் பின்னையே உரசிக்கொள்ளும் தூரத்தில் வர காதல் ஜோடிகள் போலவே இருந்தார்கள்.. அதை தூரத்திலிருந்த சரண்யா மொபைல் கேமரா அழகாக படமாக்கியது.. ஆனால் இரு கண்களோ அனல் பறக்க வன்மத்தை கக்க நேரம் பார்த்து காத்திருந்தது இந்த காட்சியை பார்த்து..

தொடரும்...
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அபி தான் வேற யார்????
ஆனாலும் நிதி.....உன் possessiveness over time வேல பார்க்குது டா🤭🤭🤭🤭🤭🤭
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.