புது மங்கள சௌபாக்யம் - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
ஜன்னல் திரையைத் தாண்டி வந்த காலை வெயில் அறை முழுக்க பொன்னிற ஒளியைப் பரப்பியிருந்தது. மெதுவாக விழித்த நித்திக், பக்கத்தில் இருந்தவளைத் தேடி திரும்பிய கணம் அப்படியே அவன் பார்வை நின்றது.

வெண்ணிலா யோகா மேட்டில் அமர்ந்து, கண்களை மூடி அமைதியாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். வெயில் அவளின் முகத்தில் விழுந்து ஒரு மென்மையான ஒளிவட்டத்தை உருவாக்கியது. சில நொடிகள் அவன் கண் இமைக்கவே மறந்தான்.

"எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருப்பீங்க?"

கண்களைத் திறக்காமலே அவள் கேட்டதும், அவன் சிரித்தான்.

"தெரியல... ஆனா பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு."

அவள் உதட்டில் மெல்லிய புன்னகை மலர, கண்ணை திறந்தாள் இருவர் பார்வையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க,

"போங்க சார் கிளம்புங்க.. அம்மா இதோட இரண்டு முறை கால் பண்ணிடுச்சு.."

"ஹான் இதோ!!"

என்றவன் குளித்து கிளம்பி வர, இவளும் சென்று கிளம்பினாள்..

"உங்க அம்மாக்கு என்ன கலர் பிடிக்கும்??" கபோர்டை உருட்டிக்கொண்டே நித்திக் கேட்க,

"ஹாஹா!! பலி வாங்க போறீங்களா சார்??"

"அய்யே!! ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் ரொம்ப முக்கியம் மேடம்.."

"எங்க அம்மாவை நீங்க ஏன் சார் இம்ப்ரெஸ் பண்ணனும்??"

"உன்கிட்ட போய் கேட்டேன் பாரு.."

என்றவன் கருப்பு பாண்ட் அணிந்து பர்பிள் நிற சட்டையில் வர எப்போதும் போல தான் என்றாலும் அவளை மெய் மறந்து தான் ரசித்தது போல தன்னையும் அவள் ரசிக்க வேண்டும் என்று நினைக்க அவளோ,

"கிளம்பலாமா??" என்று வெளியே சென்றுவிட்டாள்..

'என்ன ஒன்னுமே சொல்லாம போறா?? அவ அளவு நம்ம நல்லா இல்லையோ!' என்ற சந்தேகமே வந்துவிட்டது அவளின் இந்த 'சோ வாட்' பார்வையில்.. எப்போதும் போல யசோதாவுடன் சிரித்து பேசி சாப்பிட்டு கிளம்பினார்கள்..

"உனக்கு உடம்பு எதும் பண்ணுதா என்ன??"

"இல்லையே ஏன்??"

"பின்ன ஆபிஸ்ல சாதாரண டிரஸ்ல கூட அப்புடியே என்னைய அடிச்சு பார்ப்ப.. இப்போ உனக்கு பிடிச்ச கலர்ல டிரஸ் பண்ணிருக்கேன்.. கண்டுக்க மாட்ற??"

"தூரத்து பச்ச கண்ணுக்கு குழும கேள்விப்பட்டது இல்ல அதுபோல தான், பக்கத்துல வந்ததும் நீங்க ரொம்ப சாதாரணமா தெரியுறீங்க சார்.."

என்றவள் வெடுக் பேச்சில் ரீர் மிரரில் அவள் முகம் பார்த்தவன் உதட்டை அதக்கி சிரிப்பை கட்டுப்படுத்தினான்.. அதற்கு பிறகு பேசிக்கொள்ளவேயில்லை இருவரும்.. வெண்ணிலா வீட்டிற்குள் நுழைய அவளின் அன்னை சாந்தி ஓடி வந்து மகளை கட்டிப்பிடித்து,

"தங்கம்!! நல்லாருக்கியா?? பவுனு இளச்ச மாதிரி இருக்கியே டி.."

"நல்லருக்கேன் ம்மா.. நீங்க எப்புடி இருக்கீங்க??"

"உங்க அம்மாக்கு என்ன நாலு கிலோ ஊதி போயி இருக்கா.. வந்தவங்கள கவனி டி.. உள்ள வாங்க தம்பி.."

வெண்ணிலா தந்தை முரளிதரன் குரலில் தான் சாந்தி நித்திகை பார்க்க, "வாங்க தம்பி உள்ள வாங்க.." என்று அழைத்தார்..

"எங்க வீட்ல கொஞ்சம் சுத்தம் பாப்போம்.. சோ ஷூ வெளிலையே கழட்டிட்டு வாங்க.."

வெண்ணிலாவின் இந்த பேச்சில் திட்டுகிட்டு சாந்தி பார்க்க, நித்திக் இயல்பாக ஷூ கழட்டிவிட்டு காலை தாங்கி தாங்கி உள்ளே வந்தான்..

வந்தவர்களை சோபாவில் அமரவைத்து காபி குடுத்தார் சாந்தி..

"தங்கம் சாப்புடுறீங்களா??"

"இல்லம்மா இப்போ தான் அத்த கையால சூடா மிளகு பொங்கல் வெங்காய சாம்பார் சாப்பிட்டோம்.."

"அது யாரு டி அத்த??"

சாந்தி கேள்வியில் வெண்ணிலா குடித்த காபியை துப்பிவிட்டு இரும, "ஏண்டி என்ன அவசரம் பொறுமையா குடி டி.." என்று டிஸ்ஸு எடுத்து குடுத்தார்..

"ஒன்னுல ஒன்னுலம்மா.. அது அத்த ன்னா நம்ம சரணு தான் அவள அப்புடி கிண்டல் பண்ணுவேன்.."

என்று கேவலமாக சமாளித்து வைத்தாள்..

"ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன் இங்க வர ஒரு நாள் ரெண்டு நாள் கூட உன்னை ஃப்ரீயா விடாமல் சரணும், அபியும் தொத்திக்கிட்டே வருவாங்க இன்னைக்கு எங்க அவங்க ரெண்டு பேரையும் காணோம்??"

"அது அவங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம் அதனாலதான் என்ன தனியா போக வேணான்னு இவர் கூட... இவர் எங்க மேனேஜர் சார் நித்திக் சரண்.. நான் சொல்லி இருக்கேன்லம்மா.."

"யாரு அந்த சிடுவன்னு சொல்லுவியே அவரா?? ச்ச ச்ச பாக்க அப்புடி இல்லையே டி"

"ம்ம்மா!!" என்றவள் முழித்துக்கொண்டே நித்திகை பார்க்க அவனோ இவளை முறைத்து பார்த்தான்..

அம்மாவும் மகளும் அரட்டையில் இறங்க சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்த நித்திக் கண்ணில் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படம் தெரிந்தது.. மெதுவாக காலை ஊன்றி நடந்து அந்த படத்தை கையில் எடுக்க, அவ்வளவு நேரம் அன்னையிடம் கதைகளை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தவள் நித்திக் எழுந்து நடக்கவுமே அவனை பார்க்க அவன் கையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஓடி வந்து புடுங்கிக் கொண்டாள்..

"யாரு அந்த குட்டி பாப்பா??"

"எங்க பக்கத்து வீட்டு பாப்பா.. குடுங்க.."

என்றதும், "ஓஹோ!!" என்று ஒரு அடி நகர்ந்தவன் அவள் சுதரிக்குமுன் அவள் கையிலிருந்த படத்தை புடுங்கியிருந்தான்..

"ஹாஹா ஹாஹா!! யாரு இதுஉஉஉ பக்கத்து வீட்டு பாப்பாவா??" இடைவிடாத சிரிப்பு நித்திகிற்கு ஒரு நிமிடம் அவன் சிரிப்பை கண்ணில் தேக்கிய ஆசையுடன் வெண்ணிலா பார்க்க, அவன் நிமிரவும் இவள் பார்வையை மாற்றிக்கொண்டாள்..

"ஹே நித்திக் எப்புடி கண்டுபிடிச்சீங்க.. இது இவ தான்னு?? இந்த போட்டோவ ஹால்ல மாட்டக்கூடாதுன்னு ஒரே ரகளை எங்களுக்கு இந்த போட்டோ எவ்ளோ முக்கியமானதுன்னு எங்களுக்கு தானே தெரியும் அதனால கழட்ட மாட்டேன்னு சொல்லியாச்சு.. எப்பவும் வர அபி சரண்யா கிட்டயே இது இவ இல்ல பக்கத்து வீட்டு பிள்ளைன்னு சொல்லி ஏமாத்தி வச்சிருக்கா.."

வெண்ணிலா இரண்டுக்கும் குறைவான வயதில் பிறந்த மேனியாக குப்புற படுத்து வாயில் யானை பொம்மையை கவ்விக்கொண்டு பார்ப்பதுபோல இருக்கும் அந்த போட்டோவில் இருப்பது வெண்ணிலா என்று சொல்லாமல் ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது..

"தம்பி இங்க வாங்க!! இன்னும் நிறையா போட்டோஸ் இருக்கு.. உங்களுக்கு ஃபுல் என்டர்டைன்மென்ட்டா இருக்கும்.."

முரளிதரன் ஒரு அறை வாசலிலிருந்து கத்தி அழைக்க சிரித்துக்கொண்டே நித்திக் மெல்ல நடந்து அந்த அறை பக்கம் சென்றான்.. அந்த அறையே சொல்லியது அது வெண்ணிலாவின் அறை என்று..

"வாடி!! உன்கிட்ட நிறைய பேசணும் சாப்பாடு பண்ணிகிட்டே பேசுவோம்.."

வெண்ணிலா கை பிடித்து சாந்தி அழைத்து செல்ல இவளும் நித்திக் தன் தந்தையுடன் தன்னறையில் வெகு உரிமையாக அமர்ந்து பேசுவதை பார்த்துக்கொண்டே சென்றாள்..

"இது நிலாம்மா முதல் முதல்ல ஸ்கூல் போனப்போ எடுத்த போட்டோ.. அய்யோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா.."

அதை வாங்கி ஆசையாக தடவி பார்த்துக்கொண்டான் நித்திக்.. "இது ஸ்கூல்ல கும்மி பாட்டுக்கு ஆடுன போட்டோ, இது ஸ்போர்ட்ஸ் டேக்கு ட்ரில் பண்ணப்போ எடுத்தது, இது அவ சடங்கான போட்டோ.."

என்றதும் நித்திக் யோசனையாக முரளிதரனை பார்க்க, "என்ன தம்பி சடங்கான எல்லாரும் தாவணி பாவாடை தான் கட்டுவாங்க என் பொண்ணு பிராக் போட்ருக்கானு பாக்குறீங்களா??"

"ஆமா!!" என்னும் விதமாக அவன் தலையை ஆட்ட, " என் பொண்ணு ரொம்ப சின்ன வயசுல சடங்காய்டா தம்பி ஆறாவது படிக்கும் போதே.. அந்த குழந்தைக்கு அப்போ என்னத்த தெரியும் வலின்னா என்னன்னு தெரியுமா கஷ்டம்னா என்னனு தெரியுமா?? அத்தோட இதுதான் போடணும் இப்படித்தான் இருக்கணும்னு அவளை அடக்கி வைக்க விருப்பம் இல்லை தம்பி, சத்தான சாப்பாடு தவிர வேற எதுவும் நாங்க சடங்குல செய்யுற மாதிரி செய்யல.. உனக்கு பிடிச்ச டிரஸ் வாங்கிக்கோடான்னு விட்டுட்டோம்..."

"வெண்ணி!! எவ்ளோ வேலையா இருந்தாலும் ஏன் மீட்டிங்ல இருந்தா கூட நீங்க கால் பண்ணா உடனே எடுத்து பேசுவா.. யாரையும் கண்டுக்கமாட்டா நான் கூட நினைச்சிருக்கேன் அவ உங்களுக்கு பயந்துட்டு தான் இப்படி பேசுறானே ஆனா இப்ப தானே தெரியுது அது உங்க மேல இருக்கிற தனி பாசம்னு.."

"ஆமா தம்பி!! அவ இதுவரைக்கும் எங்க கிட்ட எதுவுமே வேணும்னு கேட்டதில்லை அவ முகம் பார்த்து அவ கண்ண பார்த்தே அவளுக்கு இதுதான் தேவைங்கிறதை நாங்களே முடிஞ்ச அளவுக்கு புரிந்துகொண்டு செஞ்சுருவோம் அவ கிட்டயும் கேட்போம் இது உனக்கு பிடிச்சிருக்கான்னு.."

"ம்ம்ம்ம் அவளும் இதையே சொல்லிருக்கா என்கிட்ட.. நல்ல புரிதல் அங்கிள் உங்களுக்குள்ள.."

"ம்ம்ம்ம்!! நீங்க இங்க வந்து ஒரு மணி நேரம் இருக்குமா இந்த ஒரு மணி நேரத்துல அவளுக்கு இப்ப ரொம்பவே பிடிச்சமான விசியம் ஒன்னு இருக்குமோன்னு தோணுது உங்களுக்கும் அது தெரியுமா தம்பி??.."

சட்ரென்று எழுந்துவிட்டான் நித்திக் அதில் அவன் கால் பிசக "தம்பி பார்த்து.." புன்னகை முகமாக தன்னை சமன் படுத்தி கொண்ட நித்திக், "பார்த்துக்கறேன் அங்கிள்.." என்றான்..

"இந்த பாத்துக்கிறேன் என்கிற வார்த்தை எதற்கான பதில் தம்பி??"

"ரெண்டுக்கும் தான்.."

என்றவன் நைசாக அந்த சிறுகுழந்தை புகைப்படத்தை எடுத்து தன் சட்டைக்குள் சொருகி கொண்டான்.. இதை முரளிதரன் கவனித்திருந்தாலும் கண்டுக்காதது போல சிரித்துக்கொண்டார்..

அங்கே அடுப்படியில்,

"ஏண்டி கண்ணெல்லாம் சிவந்துருக்கு நைட் தூங்குறது இல்லையா என்ன??"

"மோவ்!! உனக்கு தெரியாதா என்ன பத்தி.. என்ன நடந்தாலும் பத்து மணிக்கெல்லாம் கண்ணு சொக்கீடும்மா.."

"ஓ!! சரி நீ இளச்ச மாதிரி இருக்கு பசிக்குறது இல்லையா??"

"அடியேய் அம்மா!! காலையில தான் ஒரு தட்டு பொங்கல் சாம்பார்ல முக்கி சாப்பிட்டு வந்தேன் இப்போ நீ கொடுத்த காபி குடிச்சேன்.. இதோ சமைக்கிற வரைக்கும் சும்மா இருக்க முடியாம நீ வாங்கி வச்சிருக்க பப்ஸ், நேந்திரம் சிப்ஸ் வாயில அள்ளி போட்டுக்கிட்டே இருக்கேன் என்னைய பாத்து பசிக்கலையான்னு கேக்குற??"

"அதில்லடி.."

" அம்மா நிப்பாட்டு உனக்கு ஏதோ என்ன பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற அத ஏன் இப்படி சுத்தி வளைச்சு கேக்குற வெளிப்படையாக கேளுமா?? "

" வேற என்னடி கேக்க போறேன்.. நீயும் அபியும் ரொம்ப வருஷமாவே பழகிட்டு இருக்கீங்க ஆனா அவன கூட நீ தனியா வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே இல்ல அது போக எந்த பையனும் உன் கூட தனியா வந்ததே இல்ல ஆனா இந்த நித்திக்சரண் பையன் கூட நீ தனியா வந்திருக்கேன்னா உங்களுக்குள்ள வேற எதுவும் ஓடுதா அம்மாகிட்ட சொல்லுடி காதலிக்கிறாயா?? "

"ஹாஹா பட்டு அம்மா!! சார் என்னோட நல்ல ஃப்ரெண்ட் அதுவும் வெளியில தான் ஆபீஸ்ல அவர் என்னோட மேனேஜர் அவ்ளோ மட்டும் தான்.. அதுபோக அபியை நான் தனியா கூட்டிட்டு வராததற்கு காரணம் சரண்யாவை மட்டும் தனியா விட்டுட்டு எப்படி நாங்க வரது வந்தா நாங்க மூணு பேரும் சேர்ந்தே தான் இருப்போம் எப்பயும்.. இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்கு போய் இருக்காங்க அதனால தான் நான் இவர கூட்டிட்டு வந்தேன்.."

"அவ்வளவு தானா??பேங்கல இருக்கப்போ நான் கால் பண்ணி என்னடி பண்றேன்னு கேட்கும் போது, எங்க மேனேஜர் சார சைட் அடிச்சிட்டு இருக்கேன்மா அப்படின்னு சொல்லுவியா அதான் ஒரு வேல லவ் பண்றியோனு நினைச்சிட்டேன்.."

"ஆஹா எனக்கு மாப்பிள்ளை பார்த்து வைக்க தான் நீங்க இருக்கீங்களேம்மா உங்கள மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன் அப்படியே லவ் பண்ணா கூட ஃபர்ஸ்ட் நான் அந்த பையன் கிட்ட சொல்றது முன்னாடி உங்ககிட்ட தான் சொல்லுவேன்.. "

"அடி தங்கம்!! உன்ன பத்தி தெரியும்டி இருந்தாலும் லவ்வன்னு வந்துருச்சுன்னா தயக்கம் கூச்சம் எல்லாம் வருமேனு தான் நானே கேட்டுகிட்டேன். எங்களுக்காக பயந்துட்டெல்லாம் இருக்க வேண்டாம்.. சின்ன வயசுல இருந்தே நீ எடுக்கிற முடிவு எப்பவுமே கரெக்டா தான்டா இருக்கும் அதனால தைரியமா யாரையாவது பிடிச்சிருந்தா லவ் பண்ணிக்கோ இல்ல நீங்களே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்கன்னாலும் சொல்லு பார்த்துடுவோம்.."

"ஓகேம்மா டன்.. ஒரு ப்ராஜெக்ட்ல கமிட் ஆயிருக்கேம்மா சிக்ஸ் மன்த்ஸ் போகட்டும் அதுக்கப்புறம் நானே உங்ககிட்ட சொல்றேன் மாப்பிள்ளை பாருங்க.." என்றவள் எந்த அலட்டாலும் இல்லாமல் குரல் பிசிராமல் அன்னையிடம் கூற வெண்ணிலாவை தேடி வந்த நித்திக் காதில் ஒன்று விடாமல் அத்தனையும் கேட்டது..

தொடரும்...
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அச்சோ எவளோ Nice ஃபேமிலி 🥰🥰🥰 🥰 🥰 🥰
இப்படி understanding, friendly parents கிடைக்க செம்ம லக்கி நிலா❤️❤️❤️❤️❤️❤️
எல்லாத்தையும் விட .....அவனை பார்த்து சின்ன சுணக்கம் கூட இல்லையே இவங்க கிட்ட.....
அவ அப்பாக்கு டவுட் ஆகிட்டு..,..அது தான் கேட்டுட்டார்......
Aww இப்ப இவன் என்ன சொல்ல போறானோ??????
டேய் நிதி.....உனக்குள்ள நிலா முழுசா வந்துட்டா.....அதை அவ கிட்ட தெளிவு படுத்தறது ரொம்பவே நல்லது......
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online