புது மங்கள சௌபாக்யம் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
"வெண்ணி!!"

"ஹான் வரேன்.."

வெண்ணிலாவும், சாந்தியும் பேசியதை கேட்ட நித்திகிற்கு எப்படி உணர்கிறோம் என்றே தெரியாத மனநிலை.. ஒச்சமான கால்களில் நரம்புகள் வின் வின் என்று வலி எடுக்க அந்த வலி தலை வரை பரவியது.. வெளியே வந்த நிலா இவனை பார்த்து புரியாது முழித்தாள்.. ஒரு வேலை அப்பா எதும் கஷ்டப்படுத்துவிட்டாரோ என்று பார்க்க அவரோ யாருடனோ போன் பேசி கொண்டிருந்தார் அப்படியானால் என்னவாயிற்று??

"என்னாச்சு சார்??"

"ஒன்னுல.. கிளம்பலாமா??"

"இப்போவேவா? வந்து ஒன் ஹவர் கூட ஆகலையே.."

"இல்ல கால் வலிக்குற மாதிரி இருக்கு.."

"அய்யோ சாரி சாரி!!" என்றவள் கண்ணெல்லாம் கலங்க ஓடி போயி அவன் வாசலில் கழட்டிப்போட்ட ஷூவை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்..

நித்திகின் இடுப்பை பிடித்து நடத்திக்கொண்டு தன் அறை படுக்கையில் அமர வைத்தவள் அவன் பாதத்தில் அமர்ந்து அந்த காலை தூக்கி தன் மடியில் வைக்க இவனோ உணர்வுகளற்ற பார்வை பார்த்து வைத்தான்..

"சாரிப்பா.." என்றவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் காலில் பட்டுவிட,

"பரவால்ல விடு நான் போட்டுக்குறேன்.."

என்றவனின் ஒட்டாத பேச்சு அவள் மனதை மேலும் வதைத்தது..

"நீ போ!! நான் பாத்துக்கறேன்.."

"இல்ல உங்க கூடவே இருக்கேனே.."

"இன்னும் ஆறு மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சதும் விட்டுட்டு போக தானே போற??"

"அது.... ப்ச்.. அது.. ப்ராஜெக்ட் முடியுர வரைக்கும் நான் உங்க பொண்டாட்டி தான்.."

என்றவள் அவன் அருகே அமர்ந்துக்கொள்ள இவனோ காலில் ஷூவை மாட்டிவிட்டு கம்பீரமாக எழுந்து கிட்சன் நோக்கி நடந்தான்..

"ஹாய் ஆண்டி.."

"வாங்க வாங்க தம்பி.. நீங்க ஷூ போட்டுட்டே இருக்கலாம் ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல அவ கிடக்குறா!!"

"ஓகே ஆண்டி.. எனி ஹெல்ப்.."

என்றவன் கேரட்டை எடுத்து ஒரு கடி கடிக்க,

"நைஸ் ஹெல்ப்!!" என்று சிரித்தாள் சாந்தி..

"அப்புறம் நித்திக் என் பொண்ணு வேலைல எப்புடி??"

"வெண்ணி! ரொம்ப சின்சியரான பொண்ணு ஆண்டி.. ஒரு ப்ராஜெக்ட் குடுத்தோம்ன்னா அத பெர்பக்ட்டா முடிக்காம அடுத்த வேலைக்கு போக மாட்டா.."

என்றவன் பார்வை சோபாவில் தந்தை தோளில் கைப்போட்டு சிரித்து சிரித்து பேசும் வெண்ணிலாவின் பக்கமே இருந்தது.. அதை சாந்தியும் கவனிக்காமல் இல்லை..

"ஆமா தம்பி.. இப்போ கூட அவகிட்ட மாப்பிள்ள பாக்கட்டுமான்னு கேட்டதுக்கு அவ அதான் சொன்னா.."

சாந்தி சொல்ல நித்திக் முகம் இறுக்கியது அதையும் குறித்துக்கொண்டார்.. பின்பு வழக்கமாக நித்திக் குடும்பத்தை பற்றி முழுமையாக கேட்டும் தெரிந்துகொண்டார்..

"பாப்பா சாப்பாடு ரெடி வா வந்து எடுத்து வை.."

சாந்தி அழைக்க, ஒவ்வொன்றாக எடுத்து வைத்த வெண்ணிலா நித்திக் அருகில் நின்றுகொண்டாள்..

"அவருக்கு நானே வைக்குறேன்.. நீங்க சாப்புடுங்கம்மா.."

பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக வைக்க இதை அந்த வாழ்ந்த தம்பதிகள் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள்..

"பாயாசம் போடு நிலா தம்பிக்கு.."

"ம்மா அவருக்கு டம்ளர்ல குடிச்சா தான் பிடிக்கும்." என்றவள் கையோடு ஊற்றி குடுத்துவிட்டு, அவன் எழுந்ததும் அதே தட்டில் இவள் சாப்பிட அமர, அன்னையின் திடுகிட்ட பார்வையில், "அது பிளேட் கழுவுற வேல மிச்சம்லம்மா.." என்று இயல்பாக சாப்பிட ஆரம்பித்தாள் கூடவே நித்திக் சரண் நின்று கவனித்து கொண்டான்..

"அம்ம்மா கிளம்புறோம்.." என்றவளுக்கு தொண்டை சற்று செரும்ம, சாந்தி அழுதே விட்டார்..

" ஏண்டி உன் பொண்ணு வேலைக்கு தான போகிறா என்னமோ கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி ஒப்பாரி வைக்கிற இது வாராவாரம் நடக்கிறது தானே. " என்று முரளிதரன் மனைவியை சமாதானம் பண்ண, இளைய ஜோடிகளோ ஒரு பக்கம் மேலே சென்று நித்திக் அவள் தோளில் கைப்போட்டு, "இட்ஸ் ஓகே டி!" என்க அவளும் மூக்கை உறிஞ்சி நித்திக் நெஞ்சில் சாயிந்தாள்.. ஒரு வழியாக கிளம்பியதும் இன்னும் வாசலில் நின்று யோசிக்கும் தன் மனைவி சாந்தியின் தோளை தொட,

"என்னடி அப்புடி பாத்துட்டே நிக்குற??"

"எனக்கு என்னமோ சந்தேகமா இருக்குங்க.."

"என்ன!! அவங்கள பார்த்தா புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு மாப்பிள்ளையும் மறு வீட்டுக்கு வந்த மாதிரி அதானே??"

"எப்புடிங்க??"

"எனக்குமே அப்புடி தான் தோணுது.. நான் ஜாடையா அந்த பையன்கிட்ட கேட்டுட்டேன்.."

என்றவர் அவர்களின் உரையாடலை மனைவியிடம் கூற, "நிஜமாவா?! ஆனா உங்க பொண்ணு வேற மாதிரி சொன்னாலே.." என்று இவளும் இவர்கள் உரையாடலை கூறினாள்..

"அவங்களுக்குள்ள ஏதோ பூவா, தலையா போட்டி இருக்கும் போல டி.. கத்திரிக்கா முத்துனா கட தெருவுக்கு வராமலா போகும்.."

"ஏங்க!! அது நம்ம பொண்ணு வாழ்க்கைங்க.."

"எனக்கு அந்த பையன் மேல நம்பிக்கை இருக்கு டி.."

அத்தோடு அவர்கள் நிறுத்திக்கொள்ள, இங்கே வண்டியில் வீட்டிற்கு போயி கொண்டிருக்கும் ஜோடிகள் ரொம்பவே அமைதியாக,

"என்ன மார்னிங் லொட லொடன்னு பேசிட்டே வந்தீங்க.. இப்போ ரொம்ப அமைதியா.."

"ஒன்னுல.. தலைவலி.."

"ஏன் என்னாச்சு சடன்னா??"

"வலியெல்லாம் தந்தி அடிச்சிட்டா வரும்.."

தாடை இறுக பேசும் நித்திகை அவள் யோசனையாக பார்த்தாள்.. எப்போதும் அவன் சிடுவன் தான் ஆனால் அந்த சிடு சிடுப்பில், 'யாரும் என்னிடம் நெருங்காதீர்கள்' என்ற பாவனை இருக்குமே தவிர, இந்த விரக்தி கோபம், வெறுப்பு புதிதே..

வீட்டிற்குள் வேகமாக உள்ளே நுழைந்தான் நித்திக்,

"தங்கம் என்ன அதுக்குள்ள வந்துடீங்க.. ராவு ஆகும்ன்னு சொன்ன.."

"பேங்க்ல இருந்து ஒரு டீடெயில்ஸ் கேட்டு போன் பண்ணாங்க அது லேப்டாப்ல இருக்குன்னு வீட்டுக்கு வந்தாச்சு.."

"லீவ்ல கூட வேலையா??"

"உங்க மருமகளுக்கு எடுத்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சுடனும்.. யார் எப்புடி போனா அவளுக்கென்ன??.."

என்று கோபமாக கூறிவிட்டு நித்திக் தன் அறைக்குள் செல்ல இருவரையும் மாறி மாறி பார்க்கும் மாமியார் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் பின்னே இவளும் ஓடினாள் அறைக்கு..

அதற்குள் நித்திக் ஆடை மாற்றி படுக்கையில் கண்ணை மூடி கிடக்க,

"இப்போ என்ன பிரச்சனை நித்திக் உங்களுக்கு??"

"ஏன் உனக்கு தெரியாதா??"

"ப்ச் தெரில சொல்லுங்க.."

"உங்க அம்மாகிட்ட நம்ம கல்யாணத்தை ப்ராஜெக்ட்ன்னு சொல்லுற, வீட்ல உனக்கு மாப்பிள்ளை வேற பாக்க சொல்லுற??"

நித்திக் எழுந்து அமர்ந்து சண்டைக்கு ரெடி ஆக அவனை கையை கட்டிக்கொண்டு பார்த்த நிலா,

"வேற என்ன சொல்லட்டும் மிஸ்டர் நீங்களே சொல்லுங்களேன்.?? ஹான் நம்ம கல்யாணம் பண்ணோமா?? ஹெலோ சார்! நீங்க என் கழுத்துல தாலி கட்டிருக்கீங்க என்ன கேட்காமலே.. அது பேர் கல்யாணம் ஆகுமா?? ஓகே விடுங்க.. அடுத்து உங்க மாமா மக தான் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் அப்புடின்னு உங்க அம்மா முடிவுக்கு வந்ததும் நம்ம போட்ருக்க மேரேஜ் டிராமா இஸ் ஓவர்.. அப்போ இது ப்ராஜெக்ட் தானே.. அண்ட் நம்ம போட்ருக்க இந்த ட்ராமா முடிஞ்சதும் எனக்குன்னு ஒரு லைப் வேண்டாமா?? சோ மாப்பிள்ளை பாக்க சொன்னேன்.. இதுல என்ன தப்பு?? நீங்க கல்யாணம் பண்ணிட்டு போவீங்க நான் மட்டும் தேவதாஸ் மாதிரி தனியா சுத்தணுமா??"

என்றவள் ஆடை மாற்ற உள்ளே சென்றுவிட்டாள்.. அவள் பேசிய பேச்சில் இருக்கும் உண்மை சுட மணமகளாக சர்வ அலங்காரத்துடன் அவளை நினைத்தவன் மெய் சிலிர்க்க, அதேபோல அவளின் அருகில் வேறு ஒருவனை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் தலையை உதறினான்..

"சாப்புட வாங்க.."

இரவு உணவை தயாரித்துவிட்டு வந்து கேட்கும் வெண்ணிலாவை தலையை தூக்கி பார்த்தவன்,

"வேண்டாம்!"

"ஏன்??"

"எனக்கு பசிக்கல.."

அவ்வளவு தான் வெண்ணிலா வெளியே சென்றுவிட்டாள்..

"என்ன நிலா அவன் வரல??"

"அவருக்கு பசிக்கலையாம் அத்த.. அதான் நான் சாப்பிட போறேன்.."

என்றவள் அமர்ந்து சாப்பபிட,

"உங்களுக்குள்ள எதுவும் சண்டையா நிலா போன இடத்துல.. "

"இல்ல அத்த.. ஏன்??" சப்பாத்தியை பிட்டு பன்னீர் குருமாவில் நினைத்து வாயில் வைத்தாள்..

"இல்ல அவன் பசி தாங்க மாட்டான்.. கொஞ்ச நேரம் சாப்பாடு லேட் ஆச்சுன்னா கூட ரொம்பவே கோபப்படுவான்.."

"அவருன்னு இல்ல யாரா இருந்தாலும் சாப்பிடுற நேரத்துக்கு சாப்பாடு இல்லனா கோபம் வரத்தான் செய்யும்.. பசின்னு வந்தா எல்லாம் மறந்து தான் போகும்.. "

"ஹான் அதான் நிலா.. பசிக்குமே ஏன் சாப்புட வரலன்னு..."

" அத்தை உங்க பையன் என்ன குழந்தையா தூக்கி பிடிச்சு மடியில உட்கார வச்சு மொபைல்ல கார்ட்டூன் போட்டு ஒவ்வொரு வாயாக ஊட்டி விடுறதுக்கு அவருக்கு பசிச்சா அவரே சாப்பிடுவாரு.. நான் போய் கேட்டு பாத்துட்டேன் கூப்பிட்டேன் வரலை என்கிறவரை பிடித்து தொங்கிக்கிட்டு இருக்க சொல்றீங்களா ஏன் நீங்க இங்கதான இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா போய் கொஞ்சிக்கோங்க.. "

என்றவள் பேச்சில்,

"நிலாஆஆஆஆ!!" என்று அதிர்ந்து விட்டார்.. ஆனால் அவரின் அதிர்வை சற்றும் கண்டுகொள்ளாமல் வயிறு முட்ட தின்றவள் கைபேசியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டாள்..

"தம்பி!!" மருமகளின் இந்த பேச்சு புதிது தான் என்றாலும் தன் மகன் ஏதும் திட்டிருப்பானோ என்று தான் அவர் நினைத்தார்.. அதனால் தான் உடனே அறைக்கு வந்தார் மகனை தேடி..

"சொல்லுங்கம்மா.."

மட்ட மல்லாக்க படுத்து ஒரு கையை முகத்தில் மூடியவாக்கில் இருந்த நித்திக் செவியில் வெளியே இவர்கள் பேசிய அனைத்தும் கேட்டது..

"ஏன் தம்பி சாப்புட வரலையாம்??"

"பசிக்கலம்மா.."

"அம்மா இப்படி கேட்கிறேன்னு கோச்சுக்காதப்பா போன இடத்துல உனக்கும் நிலாவுக்கும் எதுவும் சண்டையா வந்ததிலிருந்து ரெண்டு பேர் முகமும் சரியே இல்லையே.. நீ ரூம விட்டு வெளியில வராம இருக்க அவ ரூமுக்குள்ளேயே எட்டி பாக்காம இப்படி கொட்டுற பனியில் மாடில நிக்கிறாளே?? "

"மாடிலையா??" என்றவன் உடனே எழுந்துகொண்டான்.. அவளுக்கு சைனஸ் இருப்பதும் ஜில் காற்று ஒத்துக்காததும் அவனுக்கு தெரியுமே..

"நீங்க சாப்பாடு எடுத்து வைங்கம்மா நான் நிலாவ கூட்டிட்டு வந்துடறேன். "

வேக வேகமாக மாடிக்கு ஏறியவன் கண்ட காட்சியில் மனம் அவளுக்காக வருந்தியது..

"வெண்ணி!"

வார்த்தைக்கு நோக்காமல் கூப்பிட, அந்த குளிர் கட்டாந்தரையில் அப்படியே படுத்து இருளில் வானத்தை வெறித்தவள் நிமிர்ந்து நித்திகை பார்த்துவிட்டு எழுந்து சுவரில் சாயிந்து நின்றாள்.. அவள் அருகே போன நித்திக் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு இன்ச் இடைவெளியில் மாடி சுவற்றில் கை ஊன்றி வெறிச்சோடி இருக்கும் தெருவை வெறித்தவன்,

"அம்மாகிட்ட ஏன் இப்புடி பேசிட்டு வந்த??" என்றவனை அடிப்பட்ட பார்வை இவள் பார்க்க,

"உன் பார்வைக்கு அர்த்தம் புரியுது.. எங்க அம்மாக்கு அவங்கள கஷ்டப்படுத்துன்னா கூட பெருசா எடுத்துக்க மாட்டாங்க ஆனா என்ன கஷ்டப்படுத்துனா உடஞ்சு போவாங்க.. அவங்க உலகமே நான் தான் டி.."

"அப்போ நான் போற ரூட் கரெக்ட்டுன்னு சொல்லுங்க.."

"வெண்ணி ப்ளீஸ்! என்கிட்ட முகத்த காட்டாத ஒரு மாதிரி இருக்கு.. இங்கேர்ந்து போறவரைக்கும் என்கூட அட்லீஸ்ட் நட்பாவது இரு ப்ளீஸ்.."

"என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க?? எப்ப பாரு உங்க சைடுல இருந்தே தான் யோசிப்பீங்களா என்ன யோசிக்க மாட்டீங்களா?? அதர்ந்து கூட பேசாத நானு இப்புடி அவங்கள கஷ்டப்படுத்துறது எதுக்காக?? உங்க சாரு தான் உங்களுக்கு சரியான ஜோடின்னு அவங்க நினைப்பாங்க அதுக்கு தானே.. ஏற்கனவே இந்த நாடகத்த நம்ம ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டு ஆரமிச்சது தானே.. இப்ப இதுல நீங்களா ஏதேதோ குழப்பிக்கிட்டு நட்பா இருக்கணும்னா என்ன அர்த்தம்.. எப்படி முடியும்?? நான் தெளிவா இருக்கேன்.. குட் நைட்.. "

என்றவள் இறங்கி கீழே செல்ல, திருமணம் என்னும் இடியாப்ப சிக்கலில் சிக்கெடுக்க தெரியாமல் சிக்கி சீட்டியடிக்க போகும் நித்திகை நினைத்து விதி உச்சு கொட்டியது..


தொடரும்...
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
போச்சி போச்சி......நிலா கிட்ட உன் மனதில் இருப்பதை இப்பவே சொல்லிடு டா.....இல்லைனா அவ இல்லைனா என் கிட்ட வரியா அப்படின்னு நிலா கேட்டுட்டா
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online