என் மன்னவன் நீதானோ - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 12
அத்தியாயம் 12.1
அகிலனுக்கு வெளியில் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தன. அதை கவனிப்பதற்காகத் தான் கிளம்பினவன். சௌமிகாவை கண்டதும் அவள் செல்ல வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டு தனது அலுவலைப் பார்க்கலாம் என எண்ணித்தான் அவளையும் காரில் அழைத்து வந்தது.

ஆனால் அவள் ஏதேதோ கதைக்கவும் அவன் தனது எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டு “எனக்கு நேரமாகுது… நான் போகணும்… விரைவாகச் சொல்லும்...” என்றான் அவன்.

“என்னை உங்களுக்கு பிடிக்குமா…? இல்லையா...?” என நேரடியாகவே கேட்டாள் அவள்.

அவனுக்கு, அவளை ஓர் நண்பியாக பிடிக்கும், சிறு வயதில் இருந்தே தெரியும் என்பதாலோ அல்லது தனது தாய்க்கு நிகராக நினைக்கும் தாயின் உயிர் தோழியின் பெறாமகள் என்பதாலோ மற்றவர்களை விட அன்பு, அக்கறை எல்லாம் நிறையவே இருந்தது. எனவே “இதென்ன கேள்வி… எனக்கு உம்மை பிடிக்கும் தானே…” என்றான்.

அவனது இந்தப் பதிலில் உள்ளம் துள்ள “உங்களுக்கு என்னை பிடிக்குமா…?” என சிறு பிள்ளைப் போல கண்களை அகல விரித்து அவனைப் பார்த்து மீண்டும் கேட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது முக மாற்றங்களால் வந்த மென்னகையுடன் ‘ஆம்’ என்பது போல தலையை ஆட்டினான்.

அவனது புன்னகையுடன் கூடிய வசீகரிக்கும் வதனத்தை கண்டவள் உள்ளம் உவகை கொள்ள “எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்...” என மென்மையாக அனுபவித்து சொன்னாள்.

அவள் சொன்ன அந்தக் குரலில் இருந்த அவளின் அன்பு புரிய, அவளைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்தான் அகிலன்.

அவனது கண்களில் தெரிந்த அன்பை உணர்ந்தவள் அதில் மயங்கி தன் வசமிழந்து, “எந்த நேரமும் எனக்கு உங்களோடையே இருக்கணும் போல… என்னை கவர்ந்திழுக்கும் உங்கட முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கணும் போல இருக்கு...” என்றாள் காதலுடன்.

அவள் கூறியதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது, அவன் ஏற்கனவே ஊகித்தது போல் அவளுக்கு தன் மீதுள்ள ஈர்ப்பை அவள் தன் வாயால் சொல்ல கேட்டுக் கொண்டான். அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது கண்களில் தெரிந்த தீவிரமான காதலைக் கண்டு இது நல்லது இல்லையே…, இதை வளர விட கூடாது என எண்ணியவன் “ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீர்…? இப்பிடி கதைக்க கூடாது..,. என்ன கதைக்கிறீர் என்று உமக்கு விளங்குதா… இது எனக்குப் பிடிக்காது?” என்றான் பதட்டத்துடன்.

“ம்.. நல்லா விளங்கித் தான் கதைக்கிறன்” என்றாள் அவள் சாதாரணமாக.

நான் நண்பன் என்ற முறையில் அவளுடன் சகஜமாகப் பழக அவள் அதை தப்பாக புரிந்து விட்டாள் என நினைத்தவன் “இது சரிப்பட்டு வராது…, நான் அப்படியான ஓர் எண்ணத்துடன் உம்மோடு பழகேல்ல...” என்றான் அவன் தன்னை விளக்கும் விதமாக.


அவன் தன்னை மறுப்பதால் ஏற்பட்ட அவமானத்தில் “ஏன் சரிப்படாது…?” என்று கோபத்துடன் கேட்டாள் அவள்.

“அதுதான் சொன்னேனே...., எனக்கு அப்பிடி ஏதும் எண்ணம் இல்லை எண்டு...” என்றவனுக்கு எரிச்சலாக இருந்தது.

நானாகப் போய் அவனிடம் கூறியதால் அவன் என்னை இளக்காரமாக நினைக்கிறான் போலும் என நினைத்தவளுக்கு சினம் ஏற்பட “அது தான் ஏன் எண்டு கேக்கிறன்” என்றாள்.

“நீர் தேவையில்லாமல் ஏதோ கதைக்கிறீர் எண்டதுக்காக நானும் அப்பிடி எல்லாம் கதைக்க ஏலாது” என்றான் கண்டிப்புடன்.

அவனின் புறக்கணிப்பில் அவளுக்கு கோபத்தில் முகம் சிவக்க “நான் மிக முக்கியமான விஷயத்தை தான் கதைக்கிறன்…, என்றவள் தொடர்ந்து, உங்களுக்கு என்னை பிடிக்கும் எண்டு இப்பத் தானே நீங்கள் சொன்னனீங்க…, உங்கட விருப்பத்தை ஏதோ காரணத்திற்காக ஏற்றுக் கொள்ள மறுக்கிறீங்க” என்றாள் தவிப்புடன்.

அவளுக்கு தன் மீதுள்ள காதலை புரிந்தவனாக “சௌமி… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்… எனக்கு உம்மில் அன்பு, அக்கறை எல்லாம் இருக்கு… ஆனால் அது காதல் இல்லை…, உம்மை நல்ல ஒரு ஃப்ரண்டாகத் தான் நான் பாக்கிறன்… காதலியாக இல்லை…, அதோட... ” என அவன் கூறிக் கொண்டிருக்கும் போது

அவள் “என்னில உங்களுக்கு அன்பு இருக்கு எண்டு சொல்லுறீங்க.... அப்ப ஏன் அதை காதல் எண்டு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கு…?” என்றாள்.

“அது ஒரு விதமான மென்மையான உணர்வு… அது இயல்பாக தன்னையே அறியாமல் ஒருத்தர் மீது ஒருத்தருக்கு வரவேணும்… அது எல்லாரிலையும் வராது…, கட்டாயப்படுத்தி வர வைக்கவும் முடியாது...” என்றவனுக்கு அப்பிடியான உணர்வு யார் மீதும் இதுவரை வந்ததாகத் தோன்றவில்லை. ஆனால் அவனுக்கு, சௌமிகா மீது நட்பையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்தது. அது என்ன என்று அவன் ஆராய்ந்து பார்க்கவிரும்பவில்லை. ஏனென்றால் அவன், அவளை தனது மனதுக்குப் பிடித்த இனிமையான நண்பியாக நினைப்பதாலும், சிறு பிள்ளை என்று நினைப்பதாலும் தான். அவளை சிறு பிள்ளையாகஅவன் நினைத்தாலும் மிகவும் மரியாதையாகவே நடத்துவான். அவளது குணங்கள், பண்புகள், குறும்புகள், திறமை, அழகு அனைத்தும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை அவன் மிகவும் இரசிப்பான். அவளுடன் நேரத்தை செலவழிக்கும் போது, அவன் மகிழ்ச்சியாக இருப்பான். அவற்றைத் தவிர அவன் வேறு ஏதும் நினைத்ததில்லை.
அவன் தன்னை மறுக்கிறான் என்பதில் “அந்த உணர்வு எனக்கு உங்களில வந்திருக்குதே…?” என்றவளுக்கு கண்களில் நீர் வடிந்தது.

அவளின் கண்ணீரைக் கண்டவன் “சௌமி ஃப்ளீஸ் அழாதையும்…” என்றவனுக்கு அவளைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

அவனுக்கு முன்னால் அழுவது அவமானமாக இருக்கவே கண்களைத் துடைத்தவாறு “ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை” என அவனைப் பார்த்து கேட்டாள்.

“நான் அப்பிடி சொல்லலையே…?” என்றவனுக்கு அவளை எவ்வாறு சமாதானப் படுத்துவது என்று தெரியாததால் அவளை பார்த்தவாறு மௌனமாக இருந்தாள்.

அவனுக்கு என் மீது காதலும் இல்லை..., அதை தான் வெளிப்படுத்தியும் அவன் ஏற்றுக் கொள்ள விரும்பவும் இல்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்தவளுக்கு சுய பச்சாதாபத்தில் கண்களில் இருந்து நீர் வழிந்தது. அதை அவனுக்கு காட்டவும் அவள் விரும்பவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டாள்.

இனி என்ன செய்வது…? தன்னைக் காதலிக்கும் படி அவனிடம் கெஞ்சி மன்றாட வேண்டுமா…? அது நன்றாக இருக்குமா…? கெஞ்சினால் கூட அவன் சம்மதிப்பானா…? என எண்ணியவளுக்கு, தனது சுயமரியாதையை இழந்து அவனிடம் கெஞ்ச பிடிக்கவில்லை.

ஏன் என்னை மறுக்கிறான்....? நான் அவனுக்குப் பொருத்தமில்லை என நினைக்கிறானோ…? என யோசித்தவளுக்கு விழிகளில் நீர் பெருகியது.


அத்தியாயம் 12.2
அவளது முக மாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தவன்
“சௌமி...” என அழைத்தான்.

இதற்கு மேலும் அவனிடம் கதைப்பதற்கு எதுவும் இல்லை என உணர்ந்தவள், கார் கதவைத் திறந்தாள்.

அவன் “சௌமி… என்ன?” எனக் கேட்க, அவள் எதுவும் கூறாமல் காரில் இருந்து மடமடவென இறங்கினாள்.

அவன் “ஏன் இறங்குறீர்…?, இரும் நான் கொண்டு போய் விடுறன்…” என்று கூறும் போது அவள் கதவை அடித்து சாத்திவிட்டு, விறுவிறு என நடந்தாள்.

அவள் நடந்து செல்வதைப் பார்த்தவன் காரில் இருந்து இறங்கி அதைப் பூட்டியவாறு அவளுடன் கூட நடந்தவன் “என்ன சௌமி… எதுவும் சொல்லாமல் போறீர்…?” என்றான்.

விழிகள் நிறைய நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “சொல்றதுக்கு என்ன இருக்கு…? ஒன்னும் இல்லையே...” என்றாள் மிகுந்த வேதனையுடன்.

அவளது வேதனைகளை உணர்ந்து கொண்டவன் “இது சரிப்பட்டு வராது… இதை மறந்துவிட்டு படிப்பில கவனத்தை செலுத்தும்” என்றான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் “உங்கட அட்வைஸுக்குத் தேங்க்ஸ்...” என்றாள் கோபத்துடன்.

சிறு பிள்ளைத் தனமான அவளது கோபத்தை பார்த்தவனுக்கு இதழ்களுக்கிடையில் புன்னகை அரும்பியது “என்னில கோவமா…?” என்றான்.

அவனது புன்னகையைப் பார்த்தவள் ‘என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறான்’ என அறிந்தவளுக்கு சினம் அதிகரிக்க “இல்லையே...” என்றவள் தனது வாயை இழுத்து சிரித்துக் காட்டினாள்.

அவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்தவாறு “சௌமி...” என்றான்.

“சிரிக்காதையுங்க… எனக்கு சினமாயிருக்கு..” என்றாள் சத்தமாக.

“ஸ்… மெதுவா கதையும்… கத்தாதையும்...., எல்லாரும் பார்க்கினம்... ” என்றான் அகிலன்,

“நான் அப்பிடித் தான் கதைப்பன்...., என்னைப் பற்றி நீங்கள் ஒன்னும் சொல்லத் தேவையில்லை...., என்னைப் பார்க்க உங்களுக்கு சிரிப்பு வருகுதோ....” என்றாள் வேண்டுமென்றே சத்தமாக.

தெருவில் செல்பவர்கள் அவர்களையே ஒரு மாதிரி பார்த்து செல்வதை கண்ட அகிலன் அசௌகரியமாக உணர்ந்தவன் “என்ன சௌமி… சின்னப் பிள்ளை மாதிரி நடக்கிறீர்…?” அதட்டினான்.

மற்றவர்கள் தங்களை திரும்பிப் பார்ப்பது அவளுக்குமே சற்று சங்கடமாகத் தான் இருந்தது, என்றாலும் அவன் அதட்டியதால் ஏற்பட்ட கடுப்பில் “நீங்கள் உங்கட வேலையைப் பார்த்துக் கொண்டு போறீங்களா…?” என்றவளின் குரல் சற்றுத் தணிந்திருந்தது.

உடனே அவன் “நான் என்ர வேலையைத் தான் பார்க்கிறேன்...” என்றான்.

‘என்ன வேலை?’ என்பது போல் அவள், அவனைப் பார்த்தாள்.

“உம்மை நான் தான் கூட்டிக் கொண்டு வந்தனான்… இப்ப கொண்டு போய் விடுறன்…” என்றான் அவன்.

“ம்… நல்ல வேலை தான்…, ஆனால் எனக்கு போகத் தெரியும்… நீங்கள் போங்க... ” என்றாள் அவள் கடுப்புடன். அவர்களின் குடியிருப்பு அருகில் தான் இருக்கிறது.

சற்று நேரம் அவளுடன் கூட நடந்தவன் “சௌமி… உம்மட அம்மா அப்பா படிக்கத்தான் இஞ்ச அனுப்பி வைச்சிருக்கினம்…, நீர் தேவையில்லாத விஷயங்களில நேரத்தை செலவழிக்காமல் படிக்கிற வேலையை மட்டும் பாரும்” எனவும் அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

அவன் எதுவும் கூறாமல் மௌனமாகவே அவளுடன் கூட நடந்தான். அவளும் விறுவிறுவென நடந்து குடியிருப்பினுள் சென்றாள்.

அதைப் பார்த்து விட்டு காரை நிறுத்தி இருக்கும் இடத்தை நோக்கி திரும்ப சென்றவனின் மனதில் அவளின் மனதை நோகடிக்காமல், அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்ற சிந்தனை தான்.

அவள் காதல் என்ற வலைக்குள் சிக்காமல் நன்றாகப் படித்து, முதல் வகுப்பில் சித்தியடைய வேண்டும்...

அதற்கு மேலும் படித்து, நல்ல வேலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறன எண்ணங்களுடன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை அவள் தன் மீது வைத்திருக்கும் காதலை வெகு சுலபமாக விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது.
 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
பாவம் நல்ல பையனா இருக்கான் அகி❤️❤️❤️❤️
இந்த பிள்ளை போட்டு அவனை torture பண்ணுது😏😏😏😏
 
  • Like
Reactions: STN - 78

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.