"நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்."
சாகம்பரிக்கு வீட்டுக்கு வரும் வழியில் எல்லாம் ஏதோ யோசனை.ஆரம்பத்தில் அவர்கள் தன்னை பார்த்துதான் பேசுகிறார்கள் என்று தோன்றவில்லை.இப்போது என்னவோ மனதில் ஒரு குறுகுறுப்பு.எல்லோரும் தன்னையே பார்க்கிறார்களா என்று வேறு தோன்றியது.
அதை பெரிய பூதக் கண்ணாடி வைத்து பார்த்து மனதை குப்பைத் தொட்டியாக மாற்றிக்கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை . ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருந்தாள் . உறக்கத்திலும் அதன் யோசனை ஓடிக்கொண்டே தான் இருந்தது போலும்.தூக்கத்தில் உளறினாள்.பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ தயா தூக்க கலக்கத்தில் ,அம்மாவின் உளறலில் பயந்து அவளையே இறுக்கிக் கட்டிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் .
மறுநாள் காலையில் முன்தினத்தின் சுவடுகள் எதுவும் இல்லாமல் கிளம்பி வேலை தளத்துக்கு சென்றவளை ,அங்கிருக்கும் ஹௌஸ் கீப்பிங் உதவியாளர்கள் ஒருமாதிரி பார்த்து சென்றது சாகம்பரிக்கு என்னவோ போல இருந்தது. இவள் கூப்பிட்டும் கூட அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை .
சாகம்பரிக்கு முகத்தில் அடி வாங்கிய உணர்வு. கண்டுகொள்ளாமல் விட முடியவில்லை.இதுபோல இவளின் கீழ் வேலைசெய்பவர்கள் இவளை அலட்சியப் படுத்திவிட்டு சென்று கொண்டிருந்தால் தளத்தின் வேலைகளை யார் செய்வது? என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் அதை தெரிந்து கொண்டுதானே ஆகவேண்டும்?
எப்படியோ ,அன்றைய வேலைகள் ஆரம்பமானது. வேலை செய்யும் பொழுது அவர்கள் ஒன்றும் வேலைகளை முடிக்காமலோ, அரைகுறையாகவோ, விட்டுவிடவில்லை. அதுவே பெரிய ஆறுதல் தான். அந்த அளவுக்கு இருந்தது மற்றவர்களின் பார்வை. அரைநாள் முடிவதற்குள் சாகம்பரிக்கு மூச்சு முட்டியது.என்னவென்று தெரியாவிட்டாலும் தனது மீது பெரியதாக ஏதோ பழி விழுந்திருக்கலாம் என்று அவளது உள்ளுணர்வு சொல்ல,வெகுவாக குழம்பி போனாள் .
அது எப்படி சாத்தியம்? இதுவரை தான் எந்த பிரச்சனைகளிலும் தலையை கொடுத்தது இல்லையே! யாரிடமும் பிரச்சனை செய்து ,அப்படியும் எதுவுமில்லையே!
பிறகு எதற்க்காக இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்?ஏதாவது தவறான புரிதலாக இருக்கவும் கூடுமோ...என்றெல்லாம் குழம்பினாள்.
காலை கிளம்பும் பொழுது அம்மா சொன்னது ஞாபகம் வந்தது,மூட நம்பிக்கை என்று எப்போதும் ஒதுக்கி விடுபவளுக்கு இப்போது ஏனோ அது அசந்தர்பமாக நினைவுகளில்,வேறொன்றுமில்லை," சாகி,இன்னிக்கு உனக்கு சந்திராஷ்டமம். ஏதாவது தேவையில்லாத வம்பு வந்து சேர போகுது.அனாவசியமா யாருகிட்டேயும் வாயை விடாதே, அதோட அப்பா கால்ல விழுந்து கும்பிட்டு போ"என்று சொல்லியதும்,"ம்மா.. அப்பாவை கும்பிடுறது நல்லது. அதுக்காக வேணா செய்யுறேன். பட் ,இந்த சந்திரன் புதனெல்லாம் ஏங்கிகிட்டே சொல்லாத " என்றுவிட்டு வந்தாள் .இப்போது அது வேறு ஞாபகம் வர , இன்னமும் தலை வலித்தது.
பிறகு தனக்குத்தானே மீண்டும் சொல்லிக்கொண்டாள்,"ஏ,மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே!"என்று. லேசான புருவச் சுளிப்புடன் வேலைகளை தொடர்ந்தாள் . துணிகள் மதியத்திற்கு மேல் துவைக்கப்பட்டு வந்திருந்தன.அவற்றை ஹௌஸ் கீப்பிங்கில் இருந்து வந்த ஹெல்பேர் இருவர் வந்து தளம் வாரியாக பிரித்து ஆளுக்கொருவராக ஆறு மற்றும் ஏழாம் தளங்களில் கொடுத்துவிட்டு வந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அறைகளில் மாற்றுவதற்கு என்று பூங்கொத்துகள் வந்திருக்க அதை பிரிக்க வரும் ஆயா நிதானமாக வந்தார்.
மற்றவர்கள் பார்வையில் இவளைப் பார்த்து ஒரு இளக்காரம் இருந்தது என்றால் இப்போது வந்த இந்த முதிர்ந்தவரின் பார்வையில் இவளை பார்த்து இரக்கம் இருந்தது . சாகம்பரிக்கு குழப்பம் தான். காலையிலிருந்து..இல்லை,நேற்றிலிருந்து தான் சந்தித்துக் கொண்டிருக்கும் பார்வைகளுக்கு அர்த்தம் என்ன? என்ன பிரச்சனை தன்னை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும் என்றது அவளது மனம்.
avளது இதயம் வேகமாக துடிப்பதை அவள் காதுகளில் விழும் சப்தம் உறுதி செய்தது. பூக்களை, பூஜாடியில் வைப்பதற்கு ஏற்றவாறு பிரித்து அடுக்கி கொண்டிருந்த அந்த ஆயாவிடம் நேரேயே கேட்டாள் . அவளது மெல்லிய குரலை அருகில் கேட்ட பெரியவள் உள்ளுக்குள் லேசாக அதிர்ந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளவில்லை.
"சொல்லுங்க மேடம்,ஏதாச்சும் கேட்கணுமா?"---ஆயா.
ஒரு நிமிஷம் மௌனத்தில் தன்னை சுதாரித்துக் கொண்ட சாகம்பரி,"ம்ம்..ஆமா ஆயா. ஏதாச்சும் எம்மேல புகாரா..பிரச்சனை ஏதாச்சும் வந்திருக்கா... நீங்க என்னைய பரிதாபமா பாக்கறீங்க. மத்தவங்க ரொம்பவே கேலியா பாக்குறாங்க.நேத்தே பார்த்தே, சாயங்காலம் நா வேலை முடிஞ்சி போகும் சமயத்துக்கு ரெண்டு திரிவாருங்க என்னைய காட்டி ஏதோ பேசிகிட்டு இருந்தாங்க. என்ன தான் ஓடுது.எனக்கு ரொம்பவே சங்கடமா இருக்கு.ஒரு மாதிரி படபடத்துகிட்டு வருது .
உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமின்னா சொல்லுங்க.சரி செய்ய முடியுமான்னு பாக்குறேன்."
சாகம்பரி தன்மையாக பேசியதில் அந்த அந்த ஆயாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. மற்றவர்கள் பேசுவதை அவர் இன்னமும் நம்பத் தயாராக இல்லை தான். யாரிடமும் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்ளாத இந்தப் பெண் எத்தனையோ முறைகள் இந்த மூதாட்டி சோர்ந்து உட்காரும் சமயங்களில் டீ ' வரவழைத்து கொடுத்திருக்கிறாள். பசியை உணர்ந்து சாப்பாடு வாங்கி தந்திருக்கிறாள் . இவருக்கு மட்டும் இல்லை. இன்னும் இங்கே இவளின் கீழே வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்கள் யாருக்கு பிரச்சனை என்றாலும் அதை அலட்சியம் செய்தது கிடையாது.
இவளிடம் உதவி வாங்கி கொண்டவர்கள் கூட இப்போது இவளை பற்றித் தரக்குறைவாக பேசுகிறார்கள்.அதை இந்த பெண்ணிடம் என்னவென்று சொல்ல முடியும்?"என்று மனதுக்குள் புழுகினார் அந்த ஆயம்மா .
"ஒண்ணுமில்ல மேடம். நீங்க ... யாராச்சும் இங்கே தங்கியிருந்த பெரிய ஆளுகளோட.. "
முதியவர் மென்று விழுங்கி பாதியில் நிறுத்தியதிலிருந்தே சாகம்பரிக்கு புரிந்து போனது, தன்னைப் பற்றி என்ன இங்கே ஓடிக் கொண்டு இருக்கிறது என்று. அவள் மனம் வித்யாசாகரை பற்றி யோசிக்கவில்லை. பெரிய மனிதர்களுடனா...நானா..என்று உடலும் மனமும் ஒருசேர அருவறுத்துப் போனதில்,புடவையின் தலைப்பை இழுத்து இடது தோளை அனிச்சை செயலாக போர்த்திக்கொண்டது சாகம்பரியின் கைகள்.
அதைப் பார்த்த ஆயாவுக்கு ,இவள் குற்றமற்றவள் என்று புரிந்து போக,அப்போதும் இவள் மீது கழிவிரக்கம். ஆனானபட்ட சீதையை தீக்குளிக்க செய்தும்,சந்தேகப் பட்ட உலகம்.இந்த பெண்ணை நம்பவா போகிறது என்று. தான் யாரிடமாவது சென்று சொன்னாலும் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
இவர்களுக்கு யாரை பற்றியாவது புறணி பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையை உருட்டி சந்தோசம் கொள்ள வேண்டும்.என்ன உலகமோ.."என்று மனதில் ஒரு அங்கலாய்ப்பு.
"சரி மேடம். இந்த பூக்களை போயி ரூம்புங்கள்ல அடுக்கி வைக்கணும். அந்ததந்த தள ஆளுங்களை வர சொல்றீங்களா..." என்று கேட்டுவிட்டு அவர் கிளம்பி விட்டார்.இதெல்லாம் பெரிய பொல்லாப்பு.அவரால் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்த ஒரு விஷயம் மற்றவர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பற்றி தவறாக பேசாமல் இருப்பது ஒன்று தான்.அதை செய்வதாக மனதில் உறுதி கொண்டார் அந்த ஆயா.
அவர் சென்று கொஞ்ச நேரத்திற்கு சாகம்பரிக்கு கை ,கால்கள் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது.எவ்வளவு பெரிய பழி.அதுவும் என் மீது.நான் இவர்களுக்கெல்லாம் என்ன செய்து விட்டேன்.என் வேலையை தவிர வேறு யாரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேசியது கூட இல்லையே.."என்று யோசித்து இருக்கையில் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் .அவளால் வேறு எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.
அரை மணி நேரத்தில் மேலே மேனஜரிடமிருந்து அழைப்பு வந்து விட்டது.அந்த நபர் ,இவளை அடையார் ஹோட்டலில் வித்யாசாகருடன் பார்த்தவர் தான் . இவளை எப்போது கூப்பிட்டு காய்ச்சலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது இவளே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாள் .
எட்டாவது மாடியில் அமர்ந்து கொண்டு,அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு தளத்தையும் அங்கே இருக்கும் லேப்டாப்பில் பார்வையிட்டு கொண்டிருந்தவரின் பார்வையில் இவள் தனது கதிரையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது பட்டுத் தொலைக்க வேண்டுமா!
அந்த நொடியே அவளுக்கு இன்டெர்காமில் அழைப்பு பறந்தது. அவளது கதிரையில் அருகில் அடுக்கிப் பட்டிருந்த பூக்களில் இவளது கால் தடுக்கி கீழே விழப்போக அதற்குமுன் அவசரமாக டேபிளை பற்றிக்கொண்டாள். பூக்களில் கால் பட்டு சுமார் நான்கு அறைகளுக்கான பூக்கள் மிதிப்பட்டன . அதில் இன்னமும் கலவரமடைந்தாள் சாகம்பரி. கண்கள் கரித்துக் கொண்டு வந்தது .
மேலே தனது அறையில் இருந்து கொண்டே இத்தனையையும் பார்த்துக் கொண்டே இருந்தார் அந்த மேனேஜர். அவரது இதழ்களும் கேலியாக வளைந்தது. "ப்ளடி ***" வேலை செய்ய சொன்னா வலிக்குது. மத்ததெல்லாம் சரியா வந்திரும் போல "என்று மனதுக்குள் அவளை திட்டிக் கொண்டிருக்கும் பொழுதே அவரது அறைக்கதவு தட்டப் பட்டது.
"மே ஐ கம்மிங் சார்?" --சாகம்பரியின் குரலில் இருந்த கரகரப்பு அவளது நிலையை சொல்ல 'எஸ்' என்ற ஒற்றை சொல் அதிகாரமாக கேட்டது. அந்த குரலில் இருந்த உணர்வு என்ன? கோவம்..வெறுப்பு? என்றுவென்று பெண்ணால் பிரித்தறிய முடியவில்லை.
அவளது கண்கள் சிவந்து இருந்தது.காலையில் வேலைக்கு கிளப்பிவுதற்கு என்று கண்களுக்கு இட்டிருந்த அஞ்சனம் கலைந்து கண்களுக்கு கீழே வந்திருந்தது. மேனேஜரின் முன் அழுதுவிட கூடாது என்று கட்டுப் படுத்திக்கொண்டு அவர் முன் நின்றிந்தாள் .
அவளை மேலேயிருந்து கீழே ஒரு கேவலமான பார்வை வீசியவரின்(?)வீசியவனின் பார்வையின் அர்த்தம் பெண்ணை கூசிக் குறுக செய்ததில்,தோளில் போர்த்தியிருந்த முந்தானையை இன்னமும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டாள் .
மேனேஜர் அவனுக்கு கோவம் கரை கடந்தது." ஐ கென் அண்டர்ஸ்டாண்ட் . உனக்கு பிராகெட் போடணும்னா நா இங்கே வேலை பாக்குறவனா இருந்தா போதாது.இங்கே ரூம் எடுத்து தங்குறவனா இருக்கணும். உன்னை ரெஃபர் செஞ்சாரே ..மிஸ்டர்.சுந்தர். அவர் உன்னோட நண்பர்னு சொல்லியிருக்கார். இப்போதானே புரியுது...அதுக்கு என்ன அர்த்தம்னு. ஓகேய்... ஒன்னும் பிரச்சனை இல்ல.
உன்னோட தொழில் சிறந்து வளர என்னோட வாழ்த்துக்கள்.ஆனா பாரு,இது ரொம்பவே பிரபலமான ஹோட்டல்.வர்ரவங்க எல்லாரும் ஹை கிரேட் ஆட்கள்.உன்னோட தொழில் எங்களோட ஹோட்டல் ரெப்புட்டேஷனை பாதிக்க நாங்க பார்த்துட்டு இருக்க மாட்டோம். அதே மாதிரி நீ கஸ்டமர் பிடிக்க இது இடமில்லை.
இன்னிலேந்து லீவு எடுத்துக்கோ. ஒன் மந்த் . வேறே வேலை கிடைக்குதா பாரு. ஓஹ் .. மறந்துட்டேன். ஒனக்கு உடம்பு வளைய வேலை செய்ய முடியாது இல்லை ..உடம்பை வளைச்சு தான் வேலை செய்ய முடியும். ம்ம்ம்.. நீ இங்கே வேலை ரிசைன் பண்ண வேணா, என்னை கொஞ்சம் அடஜஸ்ட் செஞ்சுக்க பாரு.நா.. உன்னை கண்டுக்காம விடறேன்.டீல் ஓகேவா..பெரிய பத்தினி வேஷம் வேணா.உனக்கு கொஞ்சமும் சூட் ஆகல பாரு. ஹான்..இப்போ கீழே போயி வேலையை பாரு.
நம்ம டேட்டிங் எங்கே,எப்போன்னு கன்போர்ம் பண்றேன்" என்று வக்கிரத்தை கக்கியது அந்த பாம்பு. சாகம்பரியால் தாங்க முடியவில்லை. உடம்பு முழுவதும் நெருப்பை கொட்டியது போல எரிந்தது. இந்த நொடி உயிர் போனாலும் என்ன.?'என்று யோசித்தவள் மனதில் ஸ்ரீதயா வந்து போனாள் . இருக்கையில் சென்று அமர்ந்தவள் கொஞ்சம் நீரை குடித்து தன்னை சமாதானம் செய்து கொண்டவள்,ஒரு மாதம் விடுப்புக்கு மெயில் எழுதினாள் .
நாற்பது நாட்கள் நோட்டிஸ் கொடுக்க வேண்டும். சட்டென விடுவிக்க மாட்டார்கள்.இந்த நாட்களில் வேலைக்கு வந்து ஆக வேண்டும். லீவு கிடையாது.இல்லாவிட்டால்,ஒரு மாத சம்பளம் கட்டியாக வேண்டும். இப்போதைக்கு அவளுக்கு யோசிக்கவும்,தன்னை சுதாரிக்கவும் நேரம் வேண்டும். நாளை கண்டிப்பாக இங்கே வந்து வேலை செய்ய முடியாது என்பது உறுதி. கண்கள் நீரை சிந்திக் கொண்டே இருக்க அவளது மனம் இந்தக் கணம் வித்யாசாகரை தேடியது. உடம்பு முழுவதும் தவித்தது.அவர் அருகில் இருந்தால் பரவாயில்லை. இந்த உடல் அவருக்கு மட்டும் தானே சொந்தம். இந்த அயோக்கியன் எப்படி பேசுகிறான். நான் என்ன ***? என்று கேட்டுக்கொண்டாள்.
மெயில் எழுதி முடித்தவள் அதை சீனியர் மேனேஜருக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டாள் .

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.