தகிக்காதே குளிர் நிலவே - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,562
6,479
113
அத்தியாயம் -4

“டேய் எவ்வளவு நேரம் டா…?” என மணியை பார்த்தபடியே அருகில் நின்றிருந்த பெண்களை நோக்கி , “ ஹாய்…க்யூட் கேர்ள்ஸ்…” என கையை அசைத்தான் அருண்மொழி.

அப்பெண்களும் அவனை மையலாக பார்த்து சிரித்தபடி, “ ஹாய்….!ஹேண்ட்சம்..” என கையாட்டினர்.
அவர்களை நோக்கி ஒரு மந்தகாசமான புன்னகை வீசி கையசைத்தான். விசிலடித்தபடியே பைக்கில் இருக்கும் கண்ணாடியை பார்த்து தனது கேசத்தை கோதிவிட்டான்.
“ போதும் டா…லுக் விட்டது.‌என் ஆளு வர்றா…நீ போய் பேசு. “ என அருணை அவசரப்படுத்தினான் அமுதன்.
“ கொஞ்சம் இரேன்..டா. பறக்காத.” என்றவன் சற்று தொலைவில் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்த யுவதியை பார்த்தான்.
சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ சீக்கிரம் போடா…! பஸ் வருது போயிடப்போறா.” என அவனை அவசரப்படுத்தினான்.

“ கொஞ்சம் பொறு டா…அவ அந்த பஸ்ல ஏற மாட்டா…நீ வேணாலும் பாரு…”

“டேய்‌…!” என பல்லைக் கடித்தவன், பதட்டத்துடன் அவள் புறம் திரும்பினான்.

அருண்மொழி கூறியது போலவே அப்பெண் பேருந்தில் ஏறவில்லை.

மாறாக தோழிகளிடம் பேசிக் கொண்டே தனது பார்வையை அமுதனும் அருணும் நின்றிருந்த இடத்தில் சுழல விட்டாள்.

அமுதனோ வாயெல்லாம் பல்லாக , “ எப்புடுறா…?” என்றான்.

“ அதெல்லாம் அப்படிதான்” என்றவன் மெதுவாக சிரித்தபடி அவளருகே சென்று நின்றான்.

“ எக்ஸ்கியூஸ் மீ கேர்ள்ஸ்…குழலி கிட்ட நான் கொஞ்சம் பேசணும். சோ…நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் நிக்குறீங்களா..?” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“ ஏன்…எங்க கிட்டயெல்லாம் பேச‌மாட்டீங்களா..?” என்று குறும்புடன் ஒரு பெண் கண்ணடித்துக் கேட்டாள்.

“ஆள…விடுங்க சாமி. உங்க ஆட்டத்துக்கு நான் வரல. நான் குழலி கிட்ட பேசிட்டு போயிடுறேன்..” என்றான் போலியாக பயந்தபடி.

“ ஏய்…என்னடி குழலி..? ட்ராக் மாறுது…?” என கலகலத்து சிரித்தபடி அங்கிருந்து நகரந்தனர் அவ்விளம் பெண்கள்.

அவர்கள் வேறு பக்கம் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் ,” ஹாய்…! குழலி நான் அமுதனோட ஃப்ரெண்ட். “ என்றான்.

“ ம்ம்..பாத்துருக்கேன்…” என்றாள்.

“ ஓ…அப்ப‌ என் வேலை சுலபம். அவன் உன்னை ரெண்டு ‌வருஷமா லவ் பண்ணுறானாம். சொல்றதுக்கு பயமா இருக்குன்னு என்னை தூது அனுப்பி விட்டான். எல்லாத்துக்கும் பயந்து சாகுறான். இப்படி பட்டவன் உனக்கு வேணுமான்னு எனக்கே யோசனையா இருக்கு. நீ என்ன முடிவெடுத்தாலும் ஓகே தான்.” என்றான் இலகுவாக.

“அவரை முதல்ல வந்து என் கிட்ட தைரியமா பேசச் சொல்லுங்க…காதலிக்கணும்ன்னு நினைக்குறவரு தூரத்திலேயே நின்னுட்டு பாத்துட்டே இருந்தா அப்படியே இருக்க வேண்டியது தான். கடைசி வரைக்கும் சிங்கிளா தான் இருக்கணும். மிங்கிளாகவே முடியாது.” என்றாள் சிறு எரிச்சலுடன்.

“இன்னும் ரெண்டு செகண்ட்ல அலறி அடிச்சிட்டு வருவான் பாரு…” என்றபடியே தனது நண்பனருகே சென்றான்.

“ என்னடா…என்ன‌ சொன்னா..? ஓகே சொன்னாளா..? இல்ல வேற என்ன சொன்னா..?” என்றான் பரபரப்புடன்.

அவனோ யோசனையுடன், “குழலி ஓகே சொல்லிட்டா..” என முடிப்பதற்குள், “ தேங்க்ஸ் டா மச்சான்….உன்னை மாதிரி ஃப்ரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். லவ் யூ டா…உம்ம்மா..” என மிகவும் மகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.

“டேய்…! நான் சொல்றதை கொஞ்சம் கேளு டா…” என்றான் தயக்கத்துடன்.

“என்ன டா…? என்ன சீக்கிரம் சொல்லு…”
“ டேய்..! குழலி ஓகேன்னு சொன்னது உனக்கில்லை டா. எனக்கு தான். “ என்று கூறி அவனது இதயத்தை படீரென வெடிக்க வைத்தான்.

“ என்ன டா..? நீ என்ன சொல்ற..? இல்ல.. நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல…?”என்றான் பதட்டத்துடன்.

“ஆமா‌டா…நீ குழலியை காதலிக்கறதா சொன்னதுக்கு , ‘அவர் தைரியமா வந்து நேருக்கு நேரா என் கண்ணைப் பார்த்து லவ்வை சொல்லியிருந்தா நான் ஓகே சொல்லியிருப்பேன். ஆனா பாருங்க நீங்க தான் தைரியமா வந்து என் கிட்ட நேரடியாக பேசுறீங்க. ரெண்டு மூணு தடவை உங்களையும் பாத்துருக்கேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டா டா…” என்றான் மிகவும் எளிதாக.

“ அடேய்…! பாதகத்தா… அதுக்கு நீ ‌என்ன‌ டா ‌சொன்ன..?. இல்லன்னு‌தானே சொன்ன…? .” என்றவன் “எனக்குத் தெரியும் நீ முடியாதுன்னு தான் சொல்லிருப்ப…ஏன்னா நீ தான் எம்.டி மேடத்தை சின்சியரா லவ் பண்ணுற‌ல..எனக்குத் தெரியும்…நீ என்‌ உயிர் நண்பேன்டா…”என நடுங்கும் குரலில் கூறிக்கொண்டே அவனது முகத்தை பார்த்தான்.

அருண்மொழியோ தீவிரமான முகப்பாவத்துடன் நின்றிருந்தான்.
“ ஏய்..அருண்..! என்ன‌டா‌ நான் ‌சொன்னது சரி‌தானே..?” என்றான் கேள்வியாக.

நிதானமாக திரும்பி அவனைப் பார்த்தவன் , “ சாரி‌டா…மச்சி. எனக்கென்னவோ நம்ம எம்.டி மேடம் என்னோட லவ்வுக்கு ஓகே சொல்லு வாங்கன்னு நம்பிக்கை இல்லை. அதனால…” என இழுத்தான்.
அமுதனோ வெளிறிப் போன முகத்துடன், “அதனால…?” என கேள்வியாக அவனைப் ‌பார்த்தான்.

“அதனால…அதனால…நானு…” என‌ மீண்டும்‌ இழுத்தான்.

“ டேய் எங்கிட்ட இப்ப நல்லா வாங்கப்போற…அதனால…என்னாடா சொன்ன..?” என்றான் அழும் குரலில்.

“ஓகே சொல்லிட்டேன் மச்சி…” என்று கூறி விட்டு போலியாக தலையை குனிந்து கொண்டான்.

“அடப்பாவி…! “ என‌ நெஞ்சில் அடித்துக் கொண்டவன், “துரோகி…! நாசமா‌ போறவனே…! உன்னோட லவ்வு ‌‌புட்டுக்கும்…டா…! இரு உன்னை வந்து கவனிச்சுக்குறேன்…” என்றவன் ‌நாலு கால் பாய்ச்சலில் குழலி நின்றிருந்த இடத்திற்கு தாவி ஓடினான்.

இவையனைத்தையும் காரிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி தேவி.

“இடியட்…!” என முணுமுணுத்தவள் , விழிகள் இரண்டும் கொவ்வைப்பழமென சிவக்க கட்டுக்கடங்கா கோபத்துடன் காரினை வேகமாக பின்னோக்கி இயக்கி அலுவலகத்தை நோக்கி சீற விட்டாள்

அருண்மொழியோ நண்பனின் கோபத்தை பார்த்து விட்டு,” நாராயண…! நாராயண..!” என்று கூறி சிரித்து விட்டு அங்கிருந்து மரநிழலில் அமர்ந்தான்.

அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்து விட்டான்.

ஊரிலிருக்கும் தனது தாத்தாவிற்கு அலைப்பேசியில் அழைத்தான்.

அவனது அழைப்பை ஏற்றவர் , “சொல்லு அருண்….எப்படியிருக்க..? உன்னோட ஃபோன் காலுக்கு தான் ‌காத்திருந்தேன். உன்னோட வேலை எப்படி போகுது..? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க ?” என்றார் சின்ன சிரிப்புடன்.

“ஹலோ…மை டியர் கிங் மேக்கர்..நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க..? ஊரெல்லாம் எப்படி இருக்கு. நீங்க இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” என அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டான்.

“ டேய்…! ஒவ்வொரு கேள்வியா கேளு டா. நான் இப்ப தான் சாப்டுட்டு உக்காந்திருக்கேன். இங்க இப்போதைக்கு எல்லாம் சரியாதான்‌ போயிட்டு இருக்கு. சரி சொல்லு அங்க எப்படி போகுது…? இப்ப‌ நீ என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றார்.

“ஓகே தாத்தா…இப்ப நான் லேடீஸ் காலேஜ் வாசல்ல உக்காந்துட்டு பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்கேன். நல்லா ஜாலியா போகுது லைஃப்.” என்றான் சிரித்தபடியே.

ஒரு பெருமூச்சுடன், “ உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. லைஃபை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோ. அவ்வளவு தான் சொல்லுவேன். நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும் தானே..? இன்னமும் அப்படியே இருந்துட்டு இருந்தா என்ன அர்த்தம் அருண்மொழி.? இங்க இருந்தா உன்னோட வாழ்க்கை சரி வராதுன்னு தான் அங்க அனுப்பி வைச்சேன்.‌ அங்கயும் போய் நீ இப்படி விளையாட்டுத்தனமா இருந்தா என்னப் பன்றது..?வாழ்க்கையை நீ அடுத்துக் கட்டத்துக்கு எப்ப கொண்டு போகப் போற அருண்மொழி? நான் எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியாது. பார்த்து நடந்துக்கோ.” என்றார் சற்றே கவலையுடன்.

கழுத்தை தடவியபடியே, “நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது தாத்தா. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. அடுத்து என்ன‌ பண்ணலாம்ங்கறதை யோசிக்குறேன். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க உங்க உடம்பை பாத்துக்கோங்க. நேரத்துக்கு தூங்கி எழுந்துக்கோங்க. மாத்திரையெல்லாம் நேரத்துக்கு போடுங்க. ரொம்ப நேரம் பேச வேண்டாம் நான் வச்சிடுறேன் தாத்தா. பை…” என்றான்.

“ சரிப்பா... வைச்சிடுறேன்.” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்..

யோசனையுடன் அமர்ந்திருந்தவனை அமுதனின் குரல் கலைத்தது.

“ ஏன்‌டா….ஒரு நிமிஷத்துல என்னை கதி கலங்க வச்சிட்டியே டா…! நல்லவேளை உடனே போய் அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவளும் என்னோட லவ்வை அக்சப்ட் பண்ணிட்டா. என்னை தான் லவ் பண்ணுறாளாம். எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. “ என்றான் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே.

எழுந்தவன் அவனது சட்டையை நீவி விட்டபடியே, “ நா அப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடலைன்னா காலம் பூராவும் இதயம் முரளி மாதிரி தான் நீ சுத்திட்டு இருப்ப. லவ் பண்ணுறவனுக்கு லவ்வை சொல்றதுக்கும் தைரியம் வேணும். கடைசி வரை நின்னு ஜெயிக்குற உறுதியும் வேணும். “ என்றான்.

அதில் நெகிழ்ந்து போனவன் நண்பனை அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் டா மச்சி ‌..என் உயிர் நண்பன் டா…நீ. நீ சொன்னதையெல்லாம்‌ நினைவுத் வச்சிக்குறேன் டா. நீ தான் டா எனக்கு இன்ஸ்பிரேஷன்…” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

அவனது தோளினைத் தட்டிக் கொடுத்தவன் , “ இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன். குழலியோட அண்ணன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டாம் அவன் கிட்ட அடி வாங்கவும் தைரியத்தை வளர்த்துக்கோ….சரியா..? “ என்றான் அலுங்காமல்.

“ டேய்….! “ என‌ வாயைப் பிளந்து நின்றவனை இழுத்துக் கொண்டு, “ வாயை பொளக்காத…! நேரமாச்சு வா போகலாம்.‌ முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பணும். “ என்றபடி அமுதனின் இருசக்கர வாகனத்தை உறும விட்டான்.

இருவரும் ஏதேதோ பேசியபடி அலுவலுகத்தினுள் நுழைந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்த பாரதி, “ உங்க ரெண்டு பேரையும் நந்தினி மேடம் கூப்ட்டாங்க..எங்க போறீங்க ரெண்டு பேரும். வேலை பாக்குற‌ நேரத்துல எங்க வெளியே சுத்திட்டு‌ வர்றீங்க..?” என்றாள் காட்டமாக.

அருண்மொழியோ, “ ம்ம்…லேடீஸ் காலேஜ் போய்ட்டு வர்றோம். இந்த இன்ஃபர்மேஷன் போதுமா…? எப்படியும் நீ போய் நந்தினி மேடத்துக்கிட்ட வத்தி வைக்கப்போற…ரொம்ப அக்கறை தான் உனக்கு எங்க மேல…மாட்டிவிடுறவளே நீதானே டி.” என்றான் கடுப்பாக.

“ டேய்…!” என்று முறைத்தவளை சட்டை செய்யாமல் அமுதனையும் இழுத்துக் கொண்டு நந்தினியின் அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான்.

இருவரும் திருதிருவென முழித்தபடி நந்தினியின் முன்பு நின்றிருந்தனர்.

நிமிர்ந்து அவர்களை பார்த்தவளின் விழிகள் அனலை கக்கியது.

“ மேடம்….அது வந்து…” என்று ஆரம்பித்த அமுதனை கையமர்த்தினாள்..

நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்து அவர்கள் முன்பு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

“ இது ஆஃபிஸ்ன்னு ‌நினைச்சீங்களா‌‌? இல்ல வேற எதாவது ஃபன் பண்ணுற இடம்ன்னு நினைச்சீங்களா..? உங்க இஷ்டத்துக்கு வர்றீங்க…இஷ்டத்துக்கு போறீங்க.. கொஞ்சமாவது சீரியஸ்னஸ் இருக்கா…? அந்த சி.எஸ் ஃபார்மாவோட புது ப்ராஜெக்ட் என்ன ஆச்சு…? கோடிங்‌ பெர்க் ஆரம்பிச்சாச்சா…?” என்று அருள்மொழியை பார்த்து கேட்டாள்.

“ இ..இன்னும் ஆரம்பிக்கல மேடம். நாளைக்கு ஆரம்பிச்சுடுறேன்‌..” என்றான் தடுமாற்றத்துடன்.

“ அந்த வேலையைத் தவிர மத்த வேலையெல்லாம் நல்லா பண்ணுறீங்க..போயும் ‌போயும் லேடீஸ் காலேஜ் வாசல்ல நின்னு போற வர்ற பொண்ணுங்க கிட்ட பேசி கடலை போட்டுட்டு இருக்கீங்க..ஆஃபீஸ் டைம்ல இங்க இல்லாம வெளியே அநாவசியமா சுத்திட்டு இருக்கீங்க..? என் கிட்ட பெர்மிஷன் கூட கேக்கல..? ஹவ் டேர் யூ‌ ஆல்? அமுதன் உங்க மேல எனக்கு கொஞ்சம் மரியாதை இருக்கு. இவர் கூட சேர்ந்து அநாவசியமாக நேரத்தை வீணடிக்காதீங்க. திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். இனி ஆஃபீஸ் டைம்ல வேலையை விட்டுவிட்டு வெளியே போனீங்கன்னா அப்படியே உங்களோட ரெசிக்னேஷன் லெட்டரை மும் கொடுத்துட்டு போயிடுங்க. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்… ” என்று திட்டியவள் நாற்காலியில் அமர்ந்தாள்.

“ மேடம்…” எனத் தயக்கத்துடன் அழைத்தான் அருள்மொழி.

“ வாட்…” என சீறினாள்.

“ இன்னைக்கு டைம் ஆயிடுச்சு. வீட்டுக்கு போகணும். நாளைக்கு வந்து மீதி வெர்க்கை முடிச்சிடவா..?” என்றான் பாவமாக முகத்தை வைத்தபடியே.
 
Last edited:

Author: Vishakini
Article Title: தகிக்காதே குளிர் நிலவே - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.