• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர் நிலவே - 4

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் -4

“ டேய் எவ்வளவு நேரம் டா…” என கைக்கடிகாரத்தை பார்த்த படியே அருகில் நின்றிருந்த இளம் பெண்களை நோக்கி , “ ஹாய்…க்யூட் கேர்ள்ஸ்…” என கையை அசைத்தான்.

அப்பெண்களும் அவனை மையலாக பார்த்து சிரித்து விட்டு, "ஹாய்….!ஹேண்ட்சம்..” என கையாட்டினர்.

அவர்களை நோக்கி ஒரு மந்தகாசமான புன்னகை வீசி கையசைத்தான் அருண்மொழி.

விசிலடித்தபடியே பைக்கில் இருக்கும் கண்ணாடியை பார்த்து தனது கேசத்தை கோதி விட்டான்.

“ போதும் டா… அவங்களை லுக் விட்டது.‌
என் ஆள் வர்றா…நீ போய் பேசு. “ என அருணை அவசரப்படுத்தினான் அமுதன்.

“ கொஞ்சம் இரேன்..டா. பறக்காத.” என்றவன் சற்று தொலைவில் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்த யுவதியை பார்த்தான்.

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ சீக்கிரம் போடா…! பஸ் வருது போயிடப்போறா.” என அவனை அவசரப்படுத்தினான்.

“ கொஞ்சம் பொறு டா…அவ அந்த பஸ்ல ஏற மாட்டா…நீ வேணாலும் பாரு…”

“டேய்‌…!” என பல்லைக் கடித்தவன், பதட்டத்துடன் அவள் புறம் திரும்பினான்.

அருண்மொழி கூறியது போலவே அப்பெண் பேருந்தில் ஏறவில்லை.

மாறாக தோழிகளிடம் பேசிக் கொண்டே தனது பார்வையை அமுதனும் அருணும் நின்றிருந்த இடத்தில் சுழல விட்டாள்.

அமுதனோ வாயெல்லாம் பல்லாக , “ எப்புடுறா…?” என்றான்.

“ அதெல்லாம் அப்படிதான்” என்றவன் மெதுவாக சிரித்தபடி அவளருகே சென்று நின்றான்.

“ எக்ஸ்கியூஸ் மீ கேர்ள்ஸ்…குழலி கிட்ட நான் கொஞ்சம் பேசணும். சோ…நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் நிக்குறீங்களா..?” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“ ஏன்…எங்க கிட்டயெல்லாம் பேச‌மாட்டீங்களா..?” என்று குறும்புடன் ஒரு பெண் கண்ணடித்துக் கேட்டாள்.

“ஆள…விடுங்க சாமி. உங்க ஆட்டத்துக்கு நான் வரல. நான் குழலி கிட்ட பேசிட்டு போயிடுறேன்..” என்றான் போலியாக பயந்த படி..

“ஏய்…என்னடி குழலி..? ட்ராக் மாறுது…?” என கலகலத்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தனர் அவ்விளம் பெண்கள்.

அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் , "ஹாய்…! குழலி நான் அமுதனோட ஃப்ரெண்ட். “ என்றான்.

“ ம்ம்..பாத்துருக்கேன்…” என்றாள்.

“ ஓ…அப்ப‌ என் வேலை சுலபம். அவன் உன்னை ரெண்டு ‌வருஷமா லவ் பண்ணுறானாம். சொல்றதுக்கு பயமா இருக்குன்னு என்னை தூது அனுப்பி விட்டான். எல்லாத்துக்கும் பயந்து சாகுறான். இப்படி பட்டவன் உனக்கு வேணுமான்னு எனக்கே யோசனையா இருக்கு. நீ என்ன முடிவெடுத்தாலும் ஓகே தான்.” என்றான் இலகுவாக.

“அவரை முதல்ல வந்து என் கிட்ட தைரியமா பேசச் சொல்லுங்க…காதலிக்கணும்ன்னு நினைக்குறவரு தூரத்திலேயே நின்னுட்டு பாத்துட்டே இருந்தா அப்படியே இருக்க வேண்டியது தான். கடைசி வரைக்கும் சிங்கிளா தான் இருக்கணும். மிங்கிளாகவே முடியாது.” என்றாள் சிறு எரிச்சலுடன்.

“இன்னும் ரெண்டு செகண்ட்ல அலறி அடிச்சிட்டு வருவான் பாரு…” என்றபடியே தனது நண்பனருகே சென்றான்.

“ என்னடா…என்ன‌ சொன்னா..? ஓகே சொன்னாளா..? இல்ல வேற என்ன சொன்னா..?” என்றான் பரபரப்புடன்.

அவனோ யோசனையுடன், “குழலி ஓகே சொல்லிட்டா..” என முடிப்பதற்குள், “ தேங்க்ஸ் டா மச்சான்….உன்னை மாதிரி ஃப்ரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். லவ் யூ டா…உம்ம்மா..” என மகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.

“டேய்…! டேய்..! நான் சொல்றதை கொஞ்சம் கேளு டா…” என்றான் தயக்கத்துடன்.

“என்ன டா…? என்ன சீக்கிரம் சொல்லு…”

“ டேய்..! குழலி ஓகேன்னு சொன்னது உனக்கில்லை டா. எனக்கு தான். “ என்று கூறி அவனது இதயத்தை படீரென வெடிக்க வைத்தான்.

“ என்ன டா..? நீ என்ன சொல்ற..? இல்ல.. நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல…?”என்றான் பதட்டத்துடன்.

“ஆமா‌டா…நீ குழலியை காதலிக்கறதா சொன்னதுக்கு , ‘அவர் தைரியமா வந்து நேருக்கு நேரா என் கண்ணைப் பார்த்து லவ்வை சொல்லியிருந்தா நான் ஓகே சொல்லியிருப்பேன். ஆனா பாருங்க நீங்க தான் தைரியமா வந்து என் கிட்ட நேரடியாக பேசுறீங்க. ரெண்டு மூணு தடவை உங்களையும் பாத்துருக்கேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டா டா…” என்றான் மிகவும் எளிதாக.

“ அடேய்…! பாதகத்தா… அதுக்கு நீ ‌என்ன‌ டா ‌சொன்ன..?. இல்லன்னு‌ தானே சொன்ன? ” என்றவன் , “எனக்குத் தெரியும் நீ முடியாதுன்னு தான் சொல்லிருப்ப…ஏன்னா நீ தான் எம்.டி மேடத்தை சின்சியரா லவ் பண்ணுற‌ ல..எனக்குத் தெரியும்…நீ என்‌ உயிர் நண்பேன்டா…”என நடுங்கும் குரலில் கூறிக் கொண்டே அவனது முகத்தை பார்த்தான்.

அருள்மொழியோ தீவிரமான முகப்பாவத்துடன் நின்றிருந்தான்.

“ ஏய்.. அருண்..! என்ன‌டா‌ நான் ‌சொன்னது சரி‌தானே..?” என்றான் கேள்வியாக.

நிதானமாக திரும்பி அவனைப் பார்த்தவன் , “ சாரி‌டா…மச்சி. எனக்கென்னவோ நம்ம எம்.டி மேடம் என்னோட லவ்வுக்கு ஓகே சொல்லுவாங்கன்னு நம்பிக்கை இல்லை. அதனால…” என இழுத்தான்.

அமுதனோ வெளிறிப் போன முகத்துடன், “ அதனால…?” என கேள்வியாக அவனைப் ‌பார்த்தான்.

“அதனால…அதனால…நானு…” என‌ மீண்டும்‌ இழுத்தான்.

“ டேய் எங்கிட்ட இப்ப நல்லா வாங்கப்போற…அதனால…என்னாடா சொன்ன..?” என்றான் அழும் குரலில்.

“ஓகே சொல்லிட்டேன் மச்சி…” என்று கூறி விட்டு போலியாக தலையை குனிந்து கொண்டான்.

“அடப்பாவி…! “ என‌ நெஞ்சில் அடித்துக் கொண்டவன்‌ , "துரோகி…! நாசமா‌ போறவனே…! உன்னோட லவ்வு ‌‌புட்டுக்கும்…டா…! இரு உன்னை வந்து கவனிச்சுக்குறேன்…” என்றவன் ‌நாலு கால் பாய்ச்சலில் குழலி நின்றிருந்த இடத்திற்கு தாவி ஓடினான்.

இவையனைத்தையும் காரிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி தேவி.

“இடியட்…!” என முணுமுணுத்தவள் , விழிகள் இரண்டும் கொவ்வைப்பழமென சிவக்க கட்டுக்கடங்கா கோபத்துடன் காரினை வேகமாக பின்னோக்கி இயக்கி அலுவலகத்தை நோக்கி சீற விட்டாள்.

அருண்மொழியோ நண்பனின் கோபத்தை பார்த்து விட்டு, "நாராயண…! நாராயண..!” எனக்கூறி லேசாக சிரித்தபடி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்தான்.

அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்து விட்டான்.
 
Top Bottom