அத்தியாயம் 8
சாப்பிட்டதும் அவள் அவனை பால்கனி அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசினாள். அவனை பேச விட்டாள். ஓரிரு வார்த்தைகளே அவனிடமிருந்து பதிலாய்.
சித்தார்த்தனுக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அவளின் இளகிய பேச்சு கொடுத்த தைரியத்தில் அதை மறையாமல் கேட்டான்.
“கீழ போட்டோல இருந்தது தான் உங்க அப்பா இல்லையா?”
“ஆஹா! நிச்சயம் நோபல் ப்ரைஸ் கொடுக்கனும் இந்த அரிய பெரிய கண்டுபிடிப்புக்கு”
“ப்ச்! உங்க அம்மா எங்க இருக்காங்க? அவங்க இருக்காங்க தான?”
“யாருக்கு தெரியும்? மிஸ்டர் சித்தார்த்தன் பொதுவா ஒரு குழந்தை பிறக்க ஒரு ஆண், ஒரு பெண் தானே தேவை? ஆனா நான் பிறக்க ஒரு ஆண், ரெண்டு பெண் தேவைப்பட்டாங்களாம் -எங்க டாடி சொல்வாரு. புரியலைல? எந்தப் பெண்ணோட கருமுட்டைல நான் உருவானேனோ, அந்தப் பெண்ணோட கர்ப்பப்பைல நான் வளரல. ஏன்னா அந்தப் பொண்ணு நான் டெஸ்ட் டியூப்ல உருவாகியிருந்த சமயம் ஒரு கார் ஆக்சிடன்ட்ல இறந்து போயிட்டாங்களாம். அப்பறம் என்ன சரோகேசி மெத்தட்ல வேற ஒரு பொண்ணோட கர்ப்பப்பைல தான் வளர்ந்தேன். ஆக்சுவலி எங்க டாடியோட சொத்துக்கு ஒரு வாரிசு தேவையாயிருந்த சமயம், டெக்னாலஜி கைக் கொடுத்திருக்கு. ம்ஹூம், குழந்தை கொடுத்திருக்கு ரைட்? எங்க டாடி ரொம்ப அடமெண்ட். பட் ஸ்வீட். என்னோட ஹீரோ, கைட், ரோல் மாடல் எல்லாமே என் டாடி தான்.”
“உங்க அப்பா இப்படி ஒரு சூழ்நிலைல என்னை உங்களோட வச்சி பார்த்தா என்ன நெனைப்பாரு மேடம்?”
அவளது தந்தை நினைவை தூண்டிவிட்டு தப்பிக்க நினைத்தான் சித்தார்த்தன். அவளோ பளீரென நகைத்தாள்.
“நான் என் டாடியோட இது மாதிரியான விசயங்கள்ல இன்டர்ஃபிய பண்ணதில்ல மிஸ்டர் சித்தார்த்தன். ஸோ ஹீ’இல் டூ த ஸேம். ஒரு காஃபிக்காக காஃபி தோட்டத்தையே வாங்கனுமானு யோசிக்கற ஆளு என் டாடி. உங்க கணிப்பு இதுல தப்பு” என்று முறுவலித்தாள்.
அவன் தோல்வியடைந்தவனாய் தூரத்தில் வெறித்தான். காற்று கலைத்த அவன் முன்னெற்றி முடியில் சிக்கி, அவள் ஆசையாய் அவனை நெருங்கினாள்.
“நான் உங்கக்கூட ஒரு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டா நீங்க மறுப்பீங்களா மிஸ்டர் சித்தார்த்தன்? நான் அதை வச்சு பிளாக்மெயில் எல்லாம் செய்ய மாட்டேன். காட் பிராமிஸ்.” என்றாள்.
சித்தார்த்தனுக்கு அதற்கெல்லாம் பயமில்லை. ஒரு நிமிடத்தில் ஏஐ என்று விட்டு போகலாம். ஆனால், அவளின் அது மாதிரியான ஆண் நண்பர்களின் புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தில் தன் புகைப்படமும் இடம்பெறப்போகிறதே என்று தான் கலங்கினான்.
இதை ஆத்மீகாவிடம் சொல்லியிருந்தால் அவள் புகைப்படமெடுக்க ஆசைப்பட்டது அவன் ஒருவனைத் தான் என்று உண்மையை விளம்பியிருப்பாள். எங்கே?
செல்ஃபியை கிளிக்கியதும், “ரொம்ப நேரம் இங்கயே நிற்கறது கால் வலிக்கும். உள்ள போகலாமா?” என்று முன்னே நடந்தாள்.
அவனுக்கு கால்கள் அங்கேயே புதையுண்டன போல் நகரவில்லை.
இங்கே இப்படியே எகிறி குதித்து தற்கொலை செய்து கொண்டால் என்னவென்று அவனுக்கு யோசனை ஓடியது. ஆனால், செய்தித்தாளில் அவன் ஏன் இங்கு வந்தான்? ஆத்மீகா கண்ணபிரானுக்கும் அவனுக்கும் எப்படி தொடர்பு என்று விசாரணை விரிந்தால், அவனது தங்கைகளும் அல்லவா தூக்குக் கயிறுகளை நாட வேண்டியிருக்கும்! நிதானித்தான்.
“வாங்க மிஸ்டர் சித்தார்த்தன்” என்றதும், தலையை உதறி, முயன்று எட்டுகளை எடுத்து வைத்தான்.
அவள் கட்டிலில் அமர்ந்துகொண்டு அவனை தன்னருகில் அமரச் சொன்னாள். தயங்கியே உட்கார்ந்தான்.
அவனது வலது உள்ளங்கையை தனது கைக்குள் எடுத்து வைத்துக்கொண்டு வருடினாள். அவனுக்கு அருவருத்தது.
அவனின் உள்ளங்கையில் இருந்த காய்ப்புகளை கண்டு, “இது என்ன?” என்றவள் யோசனையாக கேட்க,
“என் ஃப்ரண்டோட ஜிம்ல டம்பில்ஸ், பார்பெல்ஸ் தூக்கறதுனால வந்தது. சில நேரம் வெயிட் லிஃப்டிங்கும் பண்ணுவேன்” என்றான் அவள் முகம் பார்க்காமல் பேச முயற்சி செய்து.
அவள் விடவில்லை. முகவாயை திருப்பி அந்த இடப்பக்க காதில் உள்ள தழும்பு எப்போது வந்ததென கேட்டாள். அவன் யோசித்தான். பின், உதட்டை பிதுக்கினான்.
“எனக்கு இந்த சிகரெட் ஃபிளேவர் ரொம்பப் பிடிக்கும். மென்த்தால் ஃபிளேவர். டூ யூ வான்னா ட்ரை?”
“எனக்கு ஸ்மோக் பண்றது பிடிக்காது மேடம்”
“ஓ!” என்றவள் அவனது விருப்பங்களுக்கு மதிப்பளிப்பவள் போல் எழுந்துபோய் பால்கனியில் புகைத்துவிட்டு வந்தாள். அதன் பின் பல்லைக்கூட விலக்கினாள்.
அவளுக்கே தனது செயல் ஆச்சரியமாக இருந்தது. அவள் இதுவரை எந்த ஆணையும் தரக்குறைவாய் நடத்தியதில்லை தான். ஆனால், இவன் அளவுக்கு தாங்கியதும் இல்லை. மீண்டும் அவனருகில் சென்றாள்.
அவனுக்கு எப்போதடா இந்த சித்ரவதையிலிருந்து வெளியேறுவோம் என்றிருந்தது. அவன் கைகளை நடுக்கமாய் இறுக மூடியிருப்பது கண்டு, அவளுக்கு ஆத்திரமாக வந்தது.
அவள் எப்படி கழிக்க நினைத்த பொழுது இது. இவன் என்னடா என்றால்…
அவள் அதை அவனிடம் சொல்லியே விட்டாள்: “மிஸ்டர் சித்தார்த்தன்! என்னை பார்த்தா சூர்ப்பனகை மாதிரி தெரியுதா? கொடூர அரக்கியாட்டம்”
அவன் அவள் அப்படி கேட்டபிறகு தான் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான். இல்லை, அவள் கம்பீரமான அழகி. அதிலும் கண்களில் காந்த தொழிற்சாலை வைத்திருப்பவள்.
நல்ல சூழ்நிலையில் அவளை சந்தித்திருந்தால் ஒருவேளை அவளை மணக்கவும் பிரியப்பட்டிருப்பான் சித்தார்த்தன். ஆனால், சூழ்நிலை கைதியாக அல்லவா ஆகிப்போனான்.
“நீங்க இன்னும் பதில் சொல்லல?”
“இல்ல… உங்களை நான் அப்படி நினைக்கல”
“அப்பறம் ஏன் அசோகவனத்துல சிறை வைக்கப்பட்ட சீதை.. இல்ல ராமன் மாதிரி உட்கார்ந்திருக்கீங்க? கோகுலத்துக்கு சீதை போனா ஹாப்பி எண்டிங். ஆனா அசோகவனத்துக்கு ராமன் வந்தா மட்டும் ட்ராஜெடியா? டென்சன் ஆகுது நீங்க இப்படி அசமஞ்சமா இருக்கறதை பார்த்து. நம்ம ஒப்பந்தத்தை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்தனும்னா, நான் அதுக்கு தயா..” என்று முடிக்கும் முன் அவளின் இதழ்கள் அவனின் ஆளுகையில்.
அதன்பின் ஆத்மீகா கண்ணபிரான் ஆசைப்பட்ட மலர்ச்சரம் அவளுடலில் படர்ந்து மணம் பரப்பியது.
திகட்ட திகட்ட நடந்த கலை நிகழ்ச்சி அவளின் துவளலில் ஒரு முடிவை எட்டியபோது, அவள் கண்மூடி சுகானுபவத்தில் மிதந்தாள்.
அவன் தன் நெஞ்சில் கிடப்பவளை மெதுவாக நகர்த்தி குளியலறை சென்று வந்தான்.
மெதுவாக விழிகளை மலர்த்தியவள், அவன் ஆடைகளை அணிந்து தயாராய் நிற்பதை கண்டு, தானும் குளியலறை சென்று வந்தாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் மடியில் இலகுவாக அமர்ந்து கழுத்தில் கைகளை கோர்த்தாள்.
“நான் இந்த அளவுக்கு இதுவரை ஹாப்பியா இருந்ததே கிடையாது. உங்களை கட்டிக்கப் போறவ ரொம்ப கொடுத்து வச்சவ.” என்றதும், அவன் அமிலம் பட்டாற் போல் அவளை தன்னிலிருந்து பிரித்தான்.
“இனிமே எந்த வகையிலயும் நம்ம கான்டாக்ட் பண்ணிக்க வேண்டாம் மேடம். இது.. இது.. என் வாழ்நாளோட கறை படிஞ்ச பக்கம். இதை என்னைக்கும் எனக்கு நினைவு படுத்திட வேண்டாம்” என்ற கெஞ்சுதலோடு அங்கிருந்து எழுந்தான்.
முகம் வெளிறிப்போனவள், “ஒரு நிமிசம்” என்றாள்.
அவன் நின்றான். தன்னிடம் இருந்த அந்தக் கைக்கடிகார ரசீதை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை கசக்கி அங்கிருந்த குப்பைத்தொட்டிக்குள் வீசி வெளியேறினான்.
அவனது இந்த அவசியமற்ற ரோசங்கள் அவளுக்கு எரிச்சலைத் தந்தன. மீண்டும் போய் மெத்தையில் விழுந்தாள். கற்பனையில் அவளை ஆரத்தழுவினான் சித்தார்த்தன்.
மின்தூக்கியில் கீழே வந்தவனுக்கோ உள்ளம் கொதித்தது. என்னை எப்படியொருவனாக மாற்றிவிட்டாள் இவள்? ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பதும் கூட இதனால் தானா? ஏதோ அசுத்தத்தை சுமப்பது போல் என் உடல் ஏன் இவ்வளவு கூசுகிறது? இனி என்னால் இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா என்று மௌனமாக கதறினான்.
வரவேற்பறையை கடந்தபோதோ டீபாயை துடைத்துக் கொண்டிருந்த அந்த பெரியவரை அவனால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
‘பூமி மாதாவே இப்பவே என்னை பிளந்து உள்ள இழுத்துக்க மாட்டியா? எனக்கு ஏன் இப்படியொரு தண்டனை?’ என்று மனதுள் கரைந்தபடியே வண்டியை நிமிர்த்தினான்.
ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.
அதனுள்ளிருந்து இறங்கியது விஹான்.
ஏற்கனவே பானுமதி தன் அண்ணன் என்று அவனின் புகைப்படத்தை அலைபேசியில் காட்டியிருக்கிறாள் என்பதால், மந்தகாசத்தை பொழிந்தபடியே, “ஹாய்! ஐ அம் விஹான்” என்று கையை நீட்டினான்.
அவனை மேலிருந்து கீழாக அளவிட்ட சித்தார்த்தன், அவன் தன்னை போல் ஒரு ஆணழகனாக இருக்கவும், இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்ற நினைப்பில் இகழ்ச்சியாக உதட்டை வளைத்தான்.
அவனின் இளக்காரப் பார்வையில் திக்கென்றது விஹானுக்கு.
சித்தார்த்தனோ அவனை உதாசீனம் செய்து வண்டியை கிளப்பினான்.
அருகே கார் ஒன்றை ஸ்பாஞ்ச் வைத்து துடைத்துக் கொண்டிருந்தவரிடம், “பாகீரதா இவர் ஏன் இங்க வந்துட்டு போறாரு?” என்று ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை கொடுத்து நைச்சியமாக விசாரித்தான் விஹான்.
“அம்மாவை சந்தோசப்படுத்த தானுங்க” என்றதும்,
“என்ன?” என்று அலறினான்.
“ஆமாங்க. காலைல ஒன்பது மணிக்கு வந்தாரு. மதியம் மூணு மணிக்கு கிளம்பிட்டாரு. அம்மா இந்த மாதிரி ஆளுங்களை மட்டும் தாங்க மேல அவங்க பெட்ரூம் வரைக்கும் கூட்டிட்டு போவாங்க. நீங்க அவங்க உயிர் சிநேகிதர். பல தடவை இங்க வந்திருக்கீங்க. உங்களை ஒரு தடவையாவது லிஃப்ட்ல மேல அவங்க பெட்ரூமுக்கு கூப்பிட்டு போயிருக்காங்களா சொல்லுங்க?” என்று விம்ஜெல் போட்டதும், மண்டையடியானது விஹானுக்கு.
நிச்சயம் பாகீரதன் அவனிடம் பொய் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் அவரை சந்தேகிக்க முடியாது.
ஆனால், பானுமதியின் அண்ணன் இவ்வளவு கேடு கெட்டவனா? இப்படியொரு மானங்கெட்டவனுக்கு தங்கையாக இருந்துகொண்டு தான், தனது சுண்டு விரலை கூட தொட விடாமல் உத்தமி வேடம் போட்டாளா அந்த பானுமதி என்று அவனின் ரத்தம் கொதித்தது.
இவனே இப்படியென்றால் அவள் மட்டும் என்ன இருபத்துநான்கு கேரட் சொக்கத் தங்கமாகவா இருக்கப் போகிறாள்? அண்ணன் தங்கை இருவருமே கூட்டுக் களவாணிகளாகத் தான் இருக்க வேண்டும்! இருவரும் சேர்ந்து பணக்காரனான என்னை மடக்கி கைக்குள் போட திட்டம் போட்டிருக்க வேண்டும்.
என்னை என்ன அவ்வளவு பெரிய முட்டாளாகவா நினைத்துவிட்டாள் அந்த பானுமதி? இப்போதே போய் அவளின் பசுத்தோலை நீக்குறேன் என்று பானுமதியின் கல்லூரிக்கேச் சென்றான் விஹான்.
தொடரும்…
சில படங்களில் ரேப் சீன் என்றாலே புலி மானை வேட்டையாடுவது போன்ற காட்சியை காட்டுவார்கள். நியாயப்படி ஒரு ஆண்புலி இன்னொரு பெண்புலியை வேட்டையாடுவது போன்று தானே காட்டவேண்டும் என்றொரு பதிவை முகநூலில் பார்த்தேன் நண்பர்களே. நான் இப்போது யோசிக்கிறேன். இந்தக்கதை படமாக்கப்பட்டால் எந்த விலங்கு எதை வேட்டையாடுவது போல் காண்பிப்பார்கள் என்று. நாவல் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க மறவாதீர்கள் நண்பர்களே.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.