அத்தியாயம் 18
மனனம் செய்ததை அப்படியே விஹானிடம் ஒப்பித்தான் சித்தார்த்தன்.
“நீங்க அன்னைக்கு என்னை ஆத்மீகா கண்ணபிரான் மேடம் வீட்டுல பார்த்ததுனால தானே பானுவை விட்டு விலக நெனச்சீங்க? நீங்க செஞ்சது தப்பில்ல. உங்க இடத்துல நான் இருந்திருந்தாக்கூட அப்படி தான் செஞ்சிருப்பேன். ஆனா பானு என் மாதிரி கிடையாது. அவ வெகுளி- பாசக்கடல். உங்க மேல உயிரையே வச்சிருக்கா. நீங்கனா அவளுக்கு வானத்தளவு விருப்பம். இந்த ஆறரை வருசமா அவ மனசளவுல செத்துப் போயிருந்தா. இப்ப தான் இயேசு மூனாம் நாள் உயிர்த்தெழுற மாதிரி உங்களால உயிர்த்தெழுந்திருக்கா. எனக்கு அவ சந்தோசத்தை குலைக்க துளியும் விருப்பம் இல்ல. ஒருவேளை கல்யாணத்துக்கப்பறம் நான் பானுக்கூட தொடர்பே வச்சிக்கக்கூடாதுனாலும் எனக்கு சம்மதம் தான். இதை நான் கனத்த மனதோட தான் சொல்றேன். எனக்கு பானுவோட சந்தோசம் ரொம்ப முக்கியம் -என் சந்தோசத்தை காட்டிலும். இன்னொரு விசயம் உங்களுக்கு தெரியுமானு தெரியல. பானு உங்களுக்கு கொடுத்த வாட்ச் அவ வாங்கினது கிடையாது. ஆத்மீகா கண்ணபிரான் மேடம் வாங்கினது. அது வாட்ச் கடையில மாறிப்போயிருக்கு. பானு அந்த விசயத்துல நடந்துக்கிட்டது கண்டிப்பா நியாயம் கிடையாது. ஆனா, காதல் நியாய- அநியாயத்துக்கு அப்பாற்பட்டது தானே? அவ உங்களுக்காக தன்னோட நேர்மையை கூட தியாகம் பண்ண தயாரா இருந்திருக்கா. நீங்க இதை இப்படித் தான் புரிஞ்சிருக்கனும் மிஸ்டர் விஹான். ஆனா, அப்ப அவளுக்கு ஒன்னு புரியல. நேர்மை தவறுறதுங்கறது கண்ணை வித்து சித்திரம் வாங்கற மாதிரினு. அவ செஞ்ச தப்புக்கு இந்த ஆறரை வருசமா மனசுக்குள்ள புழுங்கியே செத்துட்டா. அவளை இதுக்கு மேலயும் சித்ரவதை செய்ய வேண்டாம்.” என்று கைகளை கூப்பினான்.
விஹான் உணர்ச்சிப்பெருக்கில் நின்றிருந்தான். பானுமதிக்கு இந்தளவு தன்னை பிடிக்குமா என்று அவனுக்கு குதூகலிப்பு. உடல் முழுக்க பூக்கள் பூத்து நின்றான்.
சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாற்போல் அவன் விலகப் பார்க்க, தடுத்தான் விஹான்.
“உங்க மேல எனக்கு முன்னாடி கோபம் இருந்தது தான். ஆனா நீங்க என் உயிர்த்தோழிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்றப்ப எல்லாம் கடல்ல கரைஞ்ச உப்பாகிடுச்சி.” என்று மனம் திறந்தான்.
அவனின் கூற்றில் கோபக்கனல் கொளுந்துவிட்டது அவனுள்.
“மன்னிக்கனும். நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கற முடிவுல இல்ல.” என்று குரலின் டெசிபலை கூட்டினான்.
“அதுக்கு ஆத்மீ சம்மதிக்கனுமே? உங்களுக்கு அவளைப் பத்தி தெரியாது மிஸ்டர் சித்தார்த்தன் “ என்றதும், அவன் இடைமறித்தான்.
“உங்களுக்கு என்னைப் பத்தியும் தான் தெரியாது” என்றுவிட்டு எட்டுகளில் கோபத்தின் வீரியத்தை காட்டினான்.
விஹான் சிறிது நேரம் அயர்ந்து நின்றவன், தன் ஜெகரண்டா மலரை தேடிச் சென்றான்.
அந்த ஊதாநிற சுடிதாரில் பானுமதி அவனுக்கு அப்படித்தான் தெரிந்தாள்.
சித்தார்த்தனே பச்சை விளக்கு காண்பித்ததும் காதலர்கள் இருவரும் பிரிவுத் துயரை ஆற்ற வேண்டி தனியாக நடை பழகினார்கள்.
சித்தார்த்தனோ அவர்களை கண்களில் நிரப்பிக்கொண்டு குழந்தைகளை தேடிச் சென்றான்.
அவ்விடைவெளியில் தன் மனதை அரிக்கும் விசயத்தை ஆரம்பித்தாள் ஆத்மீகா.
“நீங்க சித்தார்த்தனை விரும்பறீங்களா மிஸ் லீலாவதி?” என்றாள்.
இவள் இவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்கும் அளவிற்கா நாம் சித்தார்த்தனை ஆவலாக நோக்கினோம் என்று அசடு வழிந்தவள், நாணமாக உண்மையை ஒப்புக்கொண்டாள்.
“ஆமாம் மிஸ் ஆத்மீகா. ஐ லவ் ஹிம்.” என்றாள்.
“அவரு?”
வேக வேகமான மூச்சுகளும், இதய படபடப்பும் ஆத்மீகாவை ஐசியூவில் சேர்க்க போதுமானவையாக இருந்தன.
நீண்ட மௌனத்திற்கு பின் இல்லையென்று தலையசைத்தாள் லீலாவதி.
வாய் வழியாகவே நீண்ட சுவாசம் ஆத்மீகா கண்ணபிரானிடம். இந்த ஒரு விசயத்திற்காகவே அவள் கடவுளுக்கு காலம் முழுமைக்கும் நன்றிகடன் பட்டவளாக தன்னை நினைத்தாள்.
சிலைபோல் அசையாமல் இருப்பவளை - குழப்பமாக ஒருமுறை பார்த்துவிட்டு- அவலாஞ்சே ஏரியை வெறித்தாள் லீலாவதி.
மறுபுறம் குழந்தைகள்- தூரத்தில் ஒரு மரத்தில் கட்டித் தொங்கும் டயரில் ஏற முயன்றார்கள்.
சித்தார்த்தன் அருகில் வந்ததும், “சித் அங்கிள் என்னை இதுல ஏத்தி விடுங்க” என்றாள் ஈஷா.
அவனும் சற்று முன்னிருந்த இறுக்கம் தளர்ந்து அவளை அதில் உட்கார வைத்து ஆட்டிவிட்டான்.
ஈஷாவின் சிரிப்புச் சத்தம் எட்டு திக்கும் எதிரொலித்தது.
அவள் ஆசைதீர ஆடி முடித்து கீழே இறங்கிய போது, தனதிரு கைகளையும் தூக்கினாள் சித்தாரா.
அந்த குழந்தைக்கும் அதிலேறி ஊஞ்சலாட ஆசை.
ஆனால், தகப்பன் இருக்கிறானே கல்நெஞ்சக்காரனாய் அவளின் அக்கோரிக்கையை நிராகரித்தான்.
ஈஷாவை தூக்கிக்கொண்டு லீலாவதி இருக்குமிடம் புறப்பட்டான்.
ஆனால், வழியை மறித்துக்கொண்டு ஆத்மீகா கண்ணபிரான் நின்றாள்.
அவளை பார்த்ததும் குழந்தையை இறக்கிவிட்டான். அது தாயை நோக்கி ஓடியது.
அவனுக்கு அவள் தனதருகில் வர வர விஹான் கூறியது அசரீரியாய் ஒலித்தது.
கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான். அவள் அதை அலட்சியம் செய்து அவன் அழகை மனப்பசிக்கு விருந்தாக்கினாள்.
“ஏன்? ஏன் இந்த திரவகப் பார்வை மிஸ்டர் சித்தார்த்தன்? விஹானை இங்க வரவழைச்சு, நான் இப்பவும் உங்களுக்கு நல்லது தான் செஞ்சிருக்கேன். உங்க கடமையை நிறைவேத்த உதவியிருக்கேன். பானு இப்ப ஹாப்பி தானே? ஆனா, நீங்க தான் இப்ப என்னை சூனியக்காரக்கிழவி மாதிரி பார்க்கறீங்க” என்று குறைபட்டாள்.
அவன் அவள் முகத்தில் பதித்த கண்களை எடுக்கவில்லை.
“உங்ககிட்ட பணம் இருக்கு. அதிகமா அழகு இருக்கு. நீங்க எதுக்கு மேடம் என்னை கல்யாணம் பண்ணிக்க நெனைக்கிறீங்க?” என்று கேட்டே விட்டான்.
ஆத்மீகாவின் தன்மானம் ‘அதுக்கு காரணம் காதல் தான்டா’ என்று கூற அனுமதிக்கவில்லை.
ஆனால், அவன் தன்னை அழகு என்றது மட்டும் ஆல்ப்ஸ் மலைக்காற்றாய் சில்லிட்டது.
“காரணம் தெரிஞ்சே ஆகனுமா?” என்று அவனை அதிகமாய் உரசி நின்றாள்.
“எனக்கு உங்களை மாதிரியே அழகான ஒரு ஆண் குழந்தை வேணும் மிஸ்டர் சித்தார்த்தன். தர தயாரா இருக்கீங்களா?” என்று கண்ணடித்ததும், அவன் வெந்நீர் பட்டாற்போல் துடித்து விலகினான்.
தன் மேல் படும் அவளின் ஆர்வப் பார்வை சிதைந்த மாமிசத்தில் நெளியும் புழுவாய் அவனை உணர வைத்தது.
ஆக, என்னுடைய இந்த ஆறடி உடம்புக்காகத் தான் இவள் வந்திருக்கிறாள். குழந்தைக்காகவும் இல்லை, வேறெதற்காகவும் இல்லை. ச்சே! இவளும் பெண் தானா என்று குமைந்தான் சித்தார்த்தன்.
“நீங்க அடிக்கடி நான் பார்க்க சூர்ப்பனகை மாதிரி தெரியுறேனான்னு கேட்பீங்க மேடம்? நான் இல்லைம்பேன். ஆனா இப்ப சொல்றேன். நீங்க சூர்ப்பனகைக்கும் மேல. காமப்பிசாசு. காமக்காட்டேறி. பெண்குலத்தோட மொத்த சாபம். நான் உங்களை சந்திச்சது என் முன் ஜென்ம வினை.”
“போதும் நிறுத்துங்க மிஸ்டர் சித்தார்த்தன்! திஸ் இஸ் த லிமிட்! என்னை பத்தி என்ன நெனச்சீங்க நீங்க? கட்டிலே கதினு கெடக்கறவனா? அப்படி கிடக்கறவ கார்மெண்ட்ஸ் பிசினஸ்ல கோலோச்ச முடியாது ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன். நீங்க என்னை இந்தளவுக்கு இழிவா நெனச்சிட்டதால சொல்றேன். இனி நீங்களா வந்து என்னை தொடற வரைக்கும், என் சுண்டுவிரல் கூட உங்க மேல படாது.” என்று கோபாவேசமாய் கர்ஜித்தாள்.
அவள் சொற்களின் திடம் அவனுள் அதிர்வலைகளை உண்டாக்கின.
இருப்பினும் இகழ்ச்சியாய் இதழ்களை வளைத்தான்.
அவளுக்கு அது இன்னும் கொலைவெறியை உண்டாக்கியது. விருட்டென்று அவனை கடந்து மகளை தேடிச் சென்றாள். அவனும் எதிர்திசையில் நடந்தான்.
பூமியே அதிரும் வகையில் எட்டு வைத்து வந்த ஆத்மீகா கண்டது- தனது மகளின் அழுது வடிந்த முகத்தை தான்.
தாயைக் கண்டதும் சித்தாராவுக்கு மேலும் கண்கள் கரித்தன. மாலை மாலையாய் கண்ணீர் வடித்தாள்.
அந்த குட்டி குருவிக்கு சித்தார்த்தனின் வெறுப்பை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை. தேம்பினாள்.
அவசரமாய் மகளை அணுகியவள் விசயத்தை விசாரிக்க, தெளிவின்றி கூறினாள். ஆனால், தாய்க்கு விளங்கியது.
நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கும் பாய்ந்திருக்கிறது என்று கடுங்கோபம் கொண்டாள். ஆனால், அனைத்திற்கும் பஞ்சாரம் போடும் நிலை.
தரையில் முட்டிப்போட்டு அமர்ந்தவள் மகளின் கண்ணீரை துடைத்து அவளை கட்டிக்கொண்டாள். ஆனால், சித்தாரா விம்மினாள்.
அவளை தானே அந்த டயரில் தூக்கி வைக்க முயன்றபோது, முள்ளிருக்கை போல் திமிறினாள் மகள். அவளின் ஆங்காரம் ஆத்மீகா கண்ணபிரானையே தூக்கி சாப்பிட்டது.
மகளை இறுக்கி அணைத்தவள் லீலாவதி இருக்குமிடம் தூக்கிக்கொண்டு வந்தாள். விஹானும் பானுமதியுடன் திரும்பியிருந்தான். இருள் கவியத் துவங்கியிருந்தது.
ப்ரெட்டில் வெண்ணெயும், ஜாமும் தடவிய பானுமதி அதை ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆத்மீகாவை விட்டு கீழிறங்கிய சித்தாராவும் ப்ரெட்டை வாங்கிக்கொண்டாள் -தாயின் கண்ணசைவில்.
ஆனால், பானுமதி தனக்கு நீட்டிய போது மட்டும் வாங்காமல் நின்றாள் ஆத்மீகா.
பானுமதி தயக்கமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டாள்.
“நான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன் மேடம். சாரி” என்றபோது, லீலாவதி சிரித்தாள்.
“எல்லாருமே அவங்களை தப்பா தான் புரிஞ்சிருக்கோம் பானு” என்று தனது தவறையும் ஒப்புக்கொண்டபோது, சித்தார்த்தன் முகம் இறுகி இருந்தது.
ஆத்மீகா அப்போதும் அந்த ப்ரெட் துண்டை வாங்காமல் விஹானிடம், “உன் சிகரெட் கேஸ் எங்க? லைட்டரோட வேணும்” என்றாள்.
அனைவரின் முகமும் வேப்பெண்ணெய் குடித்தது.
அவளுக்கு இப்போது எதன் வழியாவது அந்த கோபத்தை கடத்த வேண்டும். இப்போது இந்த புகைவழியை தேர்ந்தெடுத்தாள்.
பானுமதியின் முறைப்பையும் மீறி அவற்றை ஆத்மீகாவிடம் நீட்டினான் விஹான்.
பெற்றுக் கொண்டவள் யார் குரலும் எட்டாத- பார்வைக்கும் புலப்படாத இடமாக சென்று, கீழ் வானத்தை வெறித்தபடியே சிகரெட் புகைத்தாள்.
ஒன்று முடிந்ததும் இன்னொன்று கேட்டது மனம். அது முடிந்ததும் அடுத்தது கேட்டது மூளை. இப்படியே கிட்டத்தட்ட அரைமணிநேரம் அங்கு நின்றிருந்தாள். ஆனாலும் மனதின் சந்தடி அடங்கவில்லை.
“மேடம்” என்று கேட்ட குரலில் படக்கென திரும்பியவள், திடீரென கேட்ட ஹாரன் சத்தத்தில் பின்னால் எட்டு வைத்து அந்த பள்ளத்தில் விழப் பார்த்தாள்.
ஆனால், கைகள் சாலையின் திண்டை பற்றின. அவள் சிகரெட் புகைக்கவென பொடிநடையாய் நடந்து சாலையின் திருப்புமுனைக்கே வந்திருந்தாள். அவள் தொங்கும் கால்களின் கீழோ அதள பாதாளம்.
அவள் மேலே ஏற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தபோது குனிந்து கையை நீட்டினான் சித்தார்த்தன்.
“பிடிச்சிக்கோங்க மேடம்” என்று பரிதவித்து கத்தினான்.
அவள் முகத்தை திருப்பினாள்.
அவனுக்கு புரிந்துவிட்டது. தேன் கசந்தாலும் கசக்கலாம்- அவள் தன் முடிவிலிருந்து பின்வாங்க மாட்டாள் என்று.
“என்னை இப்படியே சாக விட்டுடுங்க மிஸ்டர் சித்தார்த்தன். அது தான் உங்களுக்கு நல்லது.” என்று அந்நிலையிலும் எச்சரித்தாள்.
அவன் மனம் அதற்கு சம்மதிக்கவில்லை.
அவள் அவனுக்கு வேண்டாதவள் தான்- அவனின் வாழ்க்கை பக்கத்தில் மையைக் கொட்டி கறை படுத்தியவள் தான்- ஆனால், அவன் வெறுப்பதற்கேனும் அவள் இந்த உலகில் வேண்டுமே!
அவளின் இறப்பை நிச்சயம் அவனால் ஏற்க முடியாது. அவனுக்கும் மனிதநேயம் உண்டு.
தானே தனது கரங்களால் அவளின் கரங்கள் பற்றினான். அதன் பின் அவனைத் தொட அவளுக்கு சங்கடமேதும் இருக்கவில்லை.
அடர்த்தியான- அதே சமயம் கட்டையான முடிகள் படிந்த- அவனது வலக் கரத்தை இறுகப் பற்றினாள்.
அவளுக்கு முன்னும் பின்னும் எந்தப் பெண்ணையும் தவறான எண்ணத்தில் தொட்டிராத- தன்னை தொட விட்டிராத சித்தார்த்தனின் உடலை நெருப்பு சுட்டது. முகத்தில் அந்த வலியை காண்பித்தான்.
அவள் அதனை கண்டதும், “என்னை தொடுறது என்ன அவ்வளவு கஷ்டமா மிஸ்டர் சித்தார்த்தன்? தீக்குள்ள விரலை விட்ட மாதிரி துடிக்கிறீங்க. அப்ப என்னை தொட்ட உங்களை தொடுறது கூட ஒரு வகையில பாவம் தான் இல்லையா? அந்தப் பாவத்தை வேற எந்தப் பொண்ணையாவது செய்ய வைக்கிற ஐடியா இருக்கா மிஸ்டர் சித்தார்த்தன்? இருந்தா இப்பவே விட்ருங்க. என்னை இல்ல! ஐடியாவை. ஏன்னா நான் நிச்சயம் உங்களை மாத்திருவேன். எப்படி தெரியுமா? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலானு பாரதியார் பாடின மாதிரி -என்னை பார்த்து நீங்க பாடுற அளவுக்கு”
உயிர் ஊசலாடும் நிலையிலும் அவளின் உறுதியை கண்டு அவனுக்கு ஆச்சரியமும், வெறுப்புமாய் இருந்தது.
“பாரதியார் பத்தி பேசறதுக்கும் ஒரு தகுதி வேணும் மேடம்.” என்றான் காட்டமாக.
“ஏன் என்கிட்ட நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் இல்லையா?” என்றாள்.
“இருக்கு. ஆனா அந்த செம்மை மாதர்ல நீங்க இல்ல. அந்த பாரதியார் மட்டும் என் நிலைமையை பார்த்திருந்தார்னா ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’னு எழுதின மாதிரி, ‘ஆடவர் தம்மை இழிவு செய்யும் அநிதீயை கொளுத்துவோம்’னு எழுதியிருப்பாரு.” என்றதும், அவள் பெருங்குரலெடுத்து சிரித்தாள்.
அவன் தனது வலுவால் அவளை மேலே உயர்த்தினான். சற்று மேலே வந்ததும் அருகில் இருந்த கல்லையும் வாகாக பற்றிக்கொண்டு பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.
இன்னும் சிரித்து முடிக்காதவளை அவன் குரல் கலைத்தது.
“இனிமே சிகரெட் குடிக்காதீங்க மேடம்” என்றான் தயக்கமாக.
அவள் கண்கள் பளபளத்தன. அவன் முன்னேயே தனது கோட் பாக்கெட்டிலிருந்த சிகரெட் கேஸையும், லைட்டரையும் வெளியே எடுத்தாள். அவனை முத்தமிட முடியாத துயரத்திற்கு அவைகளுக்கு முத்தமிட்டு தூரமாய் தூக்கியெறிந்தாள்.
அவன் திருப்திகொண்டான்.
“என் நலன்ல ஏன் உங்களுக்கு இவ்வளவு அக்கறை மிஸ்டர் சித்தார்த்தன்? நரி நனையுதேனு ஆடு அழுத கதையா இருக்கு” என்று தன் இயல்புக்கு திரும்பினாள்.
“ப்ச்! நான் உங்க நலன்ல அக்கறைபட்டு சொல்லலை மேடம். என் நலன்ல அக்கறைபட்டு சொல்றேன். நீங்க மட்டும் இங்க சிகரெட் பிடிக்க வரலைனா, நான் உங்களை இங்க கூப்பிட வந்திருக்க மாட்டேன். உங்களை தொட்டிருக்கவும் மாட்டேன். இப்ப எனக்கு நானே செய்வினை வச்சிக்கிட்டாப்ல ஆகிடுச்சில்ல?” என்றதும், மீண்டும் நகைத்தாள் ஆத்மீகா.
“ஏ இஸ் ஈக்குவல் டூ பி. பி இஸ் ஈக்குவல் டூ சி. ஸோ, ஏ இஸ் ஈக்குவல் டூ சி. அப்படி தானே சொல்றீங்க? உங்க கணக்கை நெனச்சா புல்லரிக்குது போங்க. ஆனா இனி நான் உங்களை தொடுறதை எந்த சக்தியினாலயும் தடுக்க முடியாது மிஸ்டர் சித்தார்த்தன். யூ ஆர் மைன்!” என்றதும், அவன் முகத்தில் பெரும் சலிப்பு.
“எல்லாரும் தேடுவாங்க மேடம். போகலாம்” என்று நடக்கத் துவங்கினான்.
அவளும் மேற்கொண்டு வழக்கடிக்காமல் ஏகாந்தமாய் நடந்தாள்.
தொடரும்…
லீலாவதிக்கு உண்மை தெரிய வரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் நண்பர்களே?
உங்களின் லைக், கமெண்ட்ஸ் மூலமான ஆதரவை பொறுத்து தான் அத்தியாயங்கள் விரைவில் வரும் டியர்ஸ்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.