அத்தியாயம் 19
அன்றிரவு உணவை முடித்தக் கையோடு சித்தார்த்தனையும், லீலாவதியையும் தனது அறைக்கு அழைத்தார் அஞ்சலிதேவி.
இருவரும் காதுகளை கூர்தீட்டி நின்றனர்.
தன் முன் நின்ற இருவரையும் மாறி மாறி விழிகளால் விசிறியவர், “காலையில நீ எதுக்கு சித்தார்த்தன் வீட்டுக்குப் போன லீலா? உனக்கு நம்ம அரண்மனையோட சட்ட திட்டம் எல்லாம் மறந்துப்போச்சா? உன்கிட்ட இப்படியொரு அலட்சியத்தை நான் எதிர்பார்க்கல. இது வெறும் அலட்சியமா? இல்ல திமிர்த்தனமா? நீ அங்கப் போனதை நாலு பேர் பார்த்தா என்ன சொல்வாங்க யோசிச்சியா? உனக்கு மட்டுமில்லாம நம்ம பரம்பரைக்கே அவமானம் இது. நீ ஒரு பெண் குழந்தைக்கு அம்மாங்கறதை என்னைக்கும் மறந்துராத. கணவனை வேண்டாம்னு உதறிட்டு வந்தவ மேல தான் இங்க ஆயிரம் கண் இருக்கும். ஜாக்கிரதை!” என்றதும், லீலாவதி அசராமல் அவரை நேர்பார்வை பார்த்தாள்.
தவறிழைத்தவர்கள் தானே கூனி குறுக வேண்டும்? நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று அவளுக்கு அசாத்திய தைரியம்.
“பாட்டி நான் சித்தார்த்தன் வீட்டுக்கு போனதுக்கு காரணம் பானுமதி. அவளும் பக்கத்து பங்களோவ்க்கு குடி வந்திருக்க விஹானும் லவ் பண்றாங்க. அதை பத்தி பேச தான் நான் அங்கப் போனேன். வேற எந்த தவறான எண்ணத்துலயும் இல்ல” என்று நடந்ததை விவரித்தாள்.
அது அஞ்சலிதேவிக்குமே தெரியும். ஆனால், அவர்களை இணைத்து வைக்க இந்தப் பழி தானே வழி?
“நீ சொல்றதை நான் நம்பலாம். ஊர் நம்பனுமே லீலா. முள்ளு மேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம் என்னவோ சேலைக்கு தான்” என்றதும், பேத்தியின் ரத்த அழுத்தம் எகிறியது.
“பாட்டி நான் சேலை இல்ல, மேகம்” என்று நினைவு படுத்தினாள்.
“அது எனக்கு தெரியாம இல்ல லீலா. நாலு பேர் உன்னை தப்பா பேசிடக்கூடாதுனு தான் நான் பயப்படுறேன். இதேயிது நீயும் சித்தார்த்தனும் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இதே அரண்மனைல ஒன்னா வாழ்ந்தா நான் என்ன குறையா சொல்லப்போறேன்?” என்று ஓரக்கண்ணால் பார்க்கவும், இன்பமாக அதிர்ந்தாள் லீலாவதி.
ஆனால், சித்தார்த்தன் தான் பொறிகலங்கி நின்றான்.
அவனுக்கு தன் உயிரையே உருவி எடுத்து கொடுக்கும் அளவு லீலாவதியின் மேல் நன்றியுணர்வு இருக்கிறது தான். ஆனால், லீலாவதியை மனைவியாக ஏற்பதென்பது கனவிலும் நடவாத காரியம்.
“ராணியை மறுத்து பேசுறதுக்கு மன்னிக்கனும். நான் அந்த எண்ணத்துல லீலாவதி மேடம் கூட பழகல. அவங்க துளசி தீர்த்தம். நான் கலங்கிய குட்டை. என்னைக்குமே ரெண்டுபேருக்கும் பொருந்தாது” என்றான் முடிவாக.
ஆத்திரம் கண்ணை மறைத்தது அஞ்சலிதேவிக்கு.
“உனக்கு சமீபத்துல தலைல எங்கேயாவது அடி பட்டிருக்கனும் சித்தார்த்தன். அதான் இப்படியெல்லாம் பேசுற. என் பேத்தி லீலாவதியை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கனும். அவ உன் மேல ஆசைப்பட்டாங்கற ஒரே காரணத்துக்காக தான் நான் உங்கிட்ட இறங்கி வந்து பேசுறேன். இல்ல உன் இடம் எதுனு உனக்கு புரிய வச்சிருப்பேன். உன் தங்கச்சியை அந்த விஹான் கல்யாணம் பண்ணிக்க இருக்கறதா சொல்றியே, அவன் அப்பா அம்மாவுக்கும் அதுல சம்மதம் தானா? இப்ப விஹானோட விருப்பத்துக்கு சம்மதிச்சாலும், நாளைக்கு கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தற உன்னை அவங்க சமமா நடத்துவாங்களா யோசி? அதுவே என் பேத்தியை நீ கல்யாணம் கட்டிக்கிட்டா நீ தான் இந்த அரண்மனைக்கே ராஜா. பட்டு மெத்தையில -பணக்கட்டுல குளிர் காயலாம். ஊருக்குள்ள உன் மதிப்பும் மரியாதையும் உயரும். லீலாவை கல்யாணம் பண்ணிக்கறதால ஏகப்பட்ட ஆதாயம் உனக்கிருக்கு” என்று அவனை வாமனனாய் நினைத்து ஆசைக்காட்ட, அவன் திருவிக்கிரமனாய் உயர்ந்து நின்றான்.
“நான் என்னைக்கும் பண போதைக்கும், புகழ் போதைக்கும் மயங்கறவன் இல்லங்க ராணி. லீலாவதி மேடம் மேல எனக்கு மலையளவு மரியாதை இருக்கு. வானமளவு அன்பு இருக்கு. ஆனா.. ஆனா.. காதல் மட்டும் இல்ல.” என்று ஆணித்தரமாய் சொன்னான்.
லீலாவதியின் கண்களிரண்டும் நீர்வீழ்ச்சிகளாகின.
அஞ்சலிதேவிக்கு ஒருவன் தனது பணத்திற்கு மயங்காமல் இருப்பது வியப்பாய் இருந்தது. ஆனால், மறுகணமே அவன் தனது விலையை உயர்த்தவே இவ்வாறு பேசுகிறான் என்று தீர்மானம் செய்துகொண்டு வாதத்தை தொடர்ந்தார்.
“லீலாவதிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சே. கூட ஒரு குழந்தை வேற இருக்கேன்னு யோசிக்கிறியா சித்தார்த்தன்? அதுக்கு நீ கேட்கற வரதட்சணை எவ்வளவு?” என்றதும்,
“பாட்டி!” என்று அலறினாள் லீலாவதி.
சித்தார்த்தனுமே முகத்தில் அருவருப்பை சுமந்து நின்றிருந்தான்.
ஆனால், அஞ்சலிதேவி சளைக்கவில்லை.
“எவ்வளவு வேணும்னு கேளு சித்தார்த்தன். ஆனா நீயும் ஏகபத்தினி விரதன் கிடையாதுங்கறதை மட்டும் மனசுல வச்சுக்க. நீயும் ஒருத்திக்கு குழந்தை கொடுத்தவன் தான்.” என்றதும், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியது போல் அவமானமடைந்தான் சித்தார்த்தன்.
அவன் அஞ்சலிதேவிக்கு எப்படி இந்த உண்மையெல்லாம் தெரிந்தது என்று யோசிக்காமல், இந்த பேச்சுக்கெல்லாம் காரணமான ஆத்மீகா கண்ணபிரானை தான் மனதில் கங்குகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.
லீலாவதியோ மூர்ச்சையாகும் நிலையில் இருந்தாள். கடைசியில் சித்தார்த்தனும் மற்ற ஆண்மகன்களை போல் பெண் விசயத்தில் பலவீனமானவன் தானா என்று வெறுப்பு உண்டானது அவளுக்கு.
அவனை மனதில் எவ்வளவு உயரத்தில் வைத்திருந்தாள்! ஆனால், அவன் இப்படி முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு போய்விட்டானே என்று இதயவலியில் துடித்தாள்.
“என்ன சித்தார்த்தன் உன் லீலைகளெல்லாம் வெட்டவெளிச்சமாகிடுச்சேன்னு அசிங்கமா இருக்கா? நான் அதை பத்தியெல்லாம் கவலை படல. நீயும் தலை குனிய வேண்டாம். ஆனா, என் பேத்தி விசயத்துல மட்டும் நல்ல முடிவா எடு” என்றதும்,
“இல்ல என்னால இவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது பாட்டி. வேற ஒரு பொண்ணோட உல்லாசமா இருந்துட்டு, எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட நல்லவன் வேசம் போட்ட இவரை, என்னால ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று உறுதியாய் சொல்லிவிட்டு, சித்தார்த்தனை அருவருப்பாய் பார்த்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினாள் லீலாவதி.
மொத்தமாய் உடைந்து போனான் சித்தார்த்தன்.
இது போன்ற நீச்சபார்வைக்கு தானே அவன் பயந்து நடுங்கினான்? அதனால் தானே யாரிடமும் நடந்ததை கூறாமல் இருந்தான். ஆனால், எல்லாம் தெரிந்து தன்னை சபிக்கப்பட்ட பண்டமாய் பார்க்கிறார்களே என்று மனதுள் அழுது கரைந்தான்.
அவன் அஞ்சலிதேவியிடம், “இப்பவும் என் முடிவுல எந்தவித மாற்றமும் இல்லங்க ராணி” என்றுவிட்டு அவரிடம் விடைபெற முயன்றான்.
ஆனால், அஞ்சலிதேவி விடவில்லை.
“உன் அப்பன் எடுத்த அதே தப்பான முடிவை நீயும் எடுக்கற சித்தார்த்தன்” என்றதும், அதிர்ச்சியாய் பார்த்தான் அவரை.
“உன் அப்பனை எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறியா? முட்டாள்! அவனை பெத்ததே நான் தான். என் மகனோட வாரிசுனு தான் நான் உன்னை லீலாவதிக்கு கட்டி வைக்க ஆசைபட்டதே. இல்ல கேவலம் ஒரு வேலைக்காரனை என் அரண்மனையை ஆள விட்ருவேனா? உன் உடம்புல ஓடுறது என் பரம்பரை ரத்தம். இங்கப்பாரு நீ லீலாவதியை நெனச்சு தயங்க வேண்டாம். அவளை எப்படி சம்மதிக்க வைக்கனும்னு எனக்கு தெரியும். நீ என் பேரனா இந்த சாம்ராஜ்யத்தை ஆள எனக்கு துளியும் விருப்பமில்ல. உண்மையை சொல்லனும்னா உன்னை என் பேரன்னு சொல்லிக்கறதையே நான் வெறுக்கறேன். உனக்கு இந்த அரண்மனையை ஆளனும்னு ஆசை இருந்ததுனா லீலாவதியை கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லு. இல்ல ஒரு பிடி மண்ணை கூட இங்க உன்னால சொந்தம் கொண்டாட முடியாது.” என்று வில்லியாய் மாறி மிரட்டினார்.
அவரின் குறுக்குபுத்தி அவனுக்கு மிரட்சியை உண்டாக்கியது. மேலும் சுகபோக வாழ்க்கைக்கு அவன் ஏங்குவது போல் அவர் கொடுத்த சலுகை இருக்கிறதே? அவனுக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
“நான் நாளைக்கு இந்த அரண்மனையை விட்டு கிளம்பறேங்க ராணி.” என்றான் அறிவிப்பாக.
அவரின் முகம் சிவந்தது.
“நீ என்னை கோபப்படுத்தற சித்தார்த்தன். என் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கற யாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல -உன் அப்பன் உட்பட. உன்னை இங்கயே சிறைபிடிச்சு வைக்க ஒரு சின்ன திருட்டு பழியை உன் மேல போட்டா போதும். நீ ஆயுசுக்கும் வெளிய வர முடியாது” என்றதும், அசராமல் அவரை பார்த்தான் சித்தார்த்தன்.
அவனின் நிமிர்வு அவருக்கு எரிச்சலை தந்தது.
“என் அம்மா தன் வாழ்க்கையில ஒரு நாளும் உங்களை பத்தி எங்கக்கிட்ட சொன்னதில்ல. அதுக்கு காரணம் உங்களோட இந்த பேச்சை கேட்டதுக்கப்பறம் தான் எனக்கு புரியுது. நூலைப் போல சேலை; தாயைப் போல பிள்ளைனு சொல்வாங்க. நான் என் அம்மாவை மாதிரி.” என்று கர்வமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவமானப்பட்டு நிற்பது அஞ்சலிதேவியின் முறையானது.
*
வீட்டிற்குள் நுழைந்த அண்ணனை ஆவலுடன் நோக்கினாள் பானுமதி.
“அண்ணா ராணி எதுக்கு உன்னை கூப்பிட்டனுப்பினாங்க? அதுவும் இந்த நேரத்துலனா ஏதாவது முக்கியமான விசயமாண்ணா?” என்றதும், உள்ளுக்குள் நொந்தான் சித்தார்த்தன்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் ராணி ராணி என்று அழைத்தபோது கூடவா அவரின் பாச பட்டன்கள் வேலை செய்யவில்லை? என்ன மனுஷி இவர் என்று துவேஷம் கொண்டான்.
“அண்ணா கேட்கறேன்ல? பதில் சொல்லுண்ணா? ராணி என்ன சொன்னாங்க?” என்று தொணதொணக்கவும், எரிச்சலடைந்தான் சித்தார்த்தன்.
ஆனாலும், நாளை இங்கிருந்து கிளம்புவதற்கு அவளிடம் காரணம் சொல்லித்தானே ஆக வேண்டும்? அவள் முகம் பார்த்தான்.
“லீலாவதி மேடத்தை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ராணி என்னை கேட்டாங்க பானு. நான் முடியாதுனு சொல்லிட்டேன்” என்றவன் கூறவும்,
அவனை அதிர்ந்த முகமாக நெருங்கியவள், “அண்ணா லீலாவதி மேடம் எவ்வளவு நல்லவங்க தெரியுமா? நீ ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்க இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு பழமொழி கேட்டதில்ல? அதிர்ஷ்டம் ஒரு தடவை தாண்ணா கதவை தட்டும். உனக்கென்ன இப்படி காலம்பூரா பிரம்மச்சாரியாவே இருந்துடறதா உத்தேசமா? இல்ல முனிவரா திரிய திட்டம் போட்டிருக்கியா? நான் உனக்கு வயசுல சின்னவ. நான் உனக்கு புத்தி சொல்லக்கூடாதுணா. புரிஞ்சி நடந்துக்க” என்று படபடத்தாள்.
“நீ என்ன சொன்னாலும் என் முடிவுல எந்தவித மாற்றமும் இல்ல பானு” என்று அஞ்சலிதேவியிடம் சொன்னதையே தங்கையிடமும் சொன்னான்.
“உனக்கு பைத்தியம் தாண்ணா பிடிச்சிருக்கு. நான் நெனைக்கறேன் உன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கான்னு”
“பானு என்ன உளறல் இது?”
“உளறலைண்ணா உண்மையைத் தான் சொல்றேன். உன் மனசுல இன்னும் அந்த நந்தினி தான் இருக்காங்க. அதான் நீ லீலாவதி மேடத்தை வேணாம் சொல்ற”
“புலம்பாம போய் படு. காலைல வீட்டை காலி பண்ணனும்”
“என்னது வீட்டை காலி பண்ணனுமா?”
“ஆமா. லீலாவதி மேடத்தை கல்யாணம் பண்ணிக்கலைனா நமக்கு இங்க தங்க இடம் இல்லைனு ராணி சொல்லிட்டாங்க. நாளைக்கே நாம சென்னை கிளம்பறோம்.”
“அநியாயம்ணா”
“ம், நம்ம விதி”
“நான் நமக்கு நடந்ததை சொல்லல. லீலாவதி மேடத்தை நீ வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருக்கியே அதை சொன்னேன்” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சென்றாள் பானுமதி.
அவன் நாற்காலியில் தொய்ந்து விழுந்தான்.
தொடரும்…
ஆத்மீகாவின் குழந்தைக்கு தான் சித்தார்த்தன் தகப்பன் என்றறியும் போது லீலாவதியின் கோபம் தணியுமா? உயருமா? உங்களின் அபிப்ராயம் என்ன நண்பர்களே?
உங்களின் கமெண்ட்ஸை எதிர்நோக்கி நான்.
அதுவும் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கமெண்ட் இட்டால் எனது வெற்றிக்கு அது உறுதுணையாக இருக்கும்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.