அவளது அலறல் சத்தத்தில் சட்டென்று சுதாரித்துக் கொண்டவன், விழுந்துவிடாமல் கஷ்டப்பட்டுத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். அவன் மட்டும் கொஞ்சம் பிசகியிருந்தாலும், நீரோடைக்குள் விழுந்து அங்கிருந்த கற்களில் முகம் மோதிப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்.
அவள் யார் என்பதை ஒரே நாளிலேயே அன்பிற்கினியவன் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும், அவளாகவே உண்மையைச் சொல்ல வேண்டும் என்று அவன் தவம் கிடந்தான்.
எத்தனையோ தனிமைப் பொழுதுகளில், அவள் காதோரமாக ரகசியமாய் இனியன் என்று அவள் அழைத்து மட்டுமே பழகியிருந்த அவனுக்கு, இன்று அதே பெயரை அவள் பொதுவெளியில் உரக்கச் சொல்லக் கேட்டதும் செவிப்பறைகளில் அந்தச் சத்தம் மோதி உடல் சிலிர்த்துப் போனது. அந்த ஒற்றைச் சொல் அவனுக்குள் ஆயிரம் மின்சாரத்தைப் பாய்ச்சியது.
அவன் அந்த அதிர்வில் நின்று கொண்டிருக்க,
நிகாரிகா அவனை இனியன் என்று பெயர் சொல்லி உரிமையோடு அழைத்ததைக் கேட்ட தென்னவனும், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான்.
‘நிஜமாவா? நான் கேட்டது உண்மைதானா? என் காது என்னை ஏமாற்றவில்லையே?’ என்பது போல அவன் விழிகள் நம்பமுடியாமல் அன்பிற்கினியவனை கேள்வியாக நோக்கினான்.
அங்கே அவனும் மோன நிலையில் நிற்கக்கண்டு, அவனிடம் ஒடிவந்த தென்னவன், “நம்ம அழகுடா!” என்று கண்களில் கண்ணீர் அரும்ப சொல்ல,
நிகாரிகா தங்கள் அருகில் வருவதைக் கண்ட அன்பிற்கினியவன், "நேற்றே தெரியும்.. இதைப்பற்றி அப்புறம் பேசிக்கலாம்" என்று அந்தப் பேச்சை நிறுத்தினான்.
அன்பிற்கினியவனோ வலிக்கும் காலைத் தூக்கிக் கொண்டபடி, "கால் பிசகிடுச்சு போலடா..." என்று அவன் வலியில் முணுமுணுக்க, பதறியடித்து அவனிடம் ஓடி வந்த நிகாரிகா, அவனது காலை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தாள்.
கால் சிராய்ப்பு ஏற்பட்டு கசிந்த இரத்தத்தைத் தன் கைக்குட்டையால் அழுத்திப் பிடித்தபடி, "இதுக்குத்தான் உங்களை மேற்பார்வை மட்டும் பாருங்கன்னு சொன்னேன். நான் சொல்லுறதைக் கேட்கவே கூடாது என்று முடிவில் இருக்கிங்க போல.. வாங்க… முதல்ல ஹாஸ்பிட்டல் போவோம்!" என்று அதிகாரமும் அக்கறையும் கலந்த குரலில் அவனை அழைத்தாள்.
ஒரு பெரும் பணக்காரி, தன்னிடம் வேலை செய்யும் ஒருவனின் காலைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துச் சிலர் ஆச்சரியத்தில் விழியை விரித்தனர். ஏற்கனவே அவனுக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதில் பொறாமையில் வெந்து கொண்டிருந்தவர்களுக்கு, இந்தக் காட்சி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது. அவர்களின் கண்களில் தெறிக்கும் ஜுவாலையை வைத்தே அவர்களின் எண்ணத்தை ஓரளவுக்குப் புரிந்துகொண்டான் அன்பிற்கினியவன்.
'இதுவே அவர்களுக்குப் பெரிய விஷயம்... இதில் இவள் இப்படியே இருந்தால், அப்புறம் மெல்லுவதற்கு அவல் கொடுத்த கதையாகிவிடும்' என்று நினைத்தவன், நயமாக அவளது கைகளிலிருந்து தன் காலை விடுவித்துக் கொண்டவன், "நீங்க என் முதலாளி... நீங்க எதுக்கு என் கூட வரணும்? நான் என் நண்பன்கூடப் போய்க்கிறேன். உங்களுக்கு இங்கே ஆயிரம் வேலை இருக்கும், அதைப் பாருங்க" என்று அவன் சற்று விலகியே சொல்ல, அவனைப் பார்வையாலேயே சுட்டு எரித்தாள் நிகாரிகா.
அவளது அந்த அனல் பார்வையின் அர்த்தம் புரிந்த தென்னவன், சட்டென்று இடையில் புகுந்து, “நான் அவனைக் கூட்டிட்டுப் போறேன் மேடம்..” என்று கூறிச் சூழலைச் சமாளிக்க முயன்றான்.
அப்போது சரிகா அங்கே வந்து, "மேடம், அகத்தியன் சார் போன் பண்ணி உங்களுக்காகக் காத்திருக்கிறதா சொன்னார்." என்றாள்.
தன் தந்தையும், அண்ணாவும் தான் ஆரம்பிக்கப் போகும் கார் சோரூம் திறப்பு விழாவுக்கு தங்களின் வேலைகள் அனைத்தையும் விட்டு விட்டு லண்டனிலிருந்து வந்துவிட்டார்கள் என்பதை அறிந்த நிகாரிகா, சந்தோசமானாள்.
சரிகாவின் பார்வை அன்பிற்கினியவன் மீது அக்கறையாக விழுவதைக் கண்டதும் நிகாரிகாவிற்கு கோபம் கிளர்தெள, "நான் கிளம்புறேன் சரிகா... நீ உன் வேலையைப் பார்." என்று கடுமையாகச் சொன்னாள்.
தென்னவன் மெதுவாக அவன் காதில், "நாம கிளம்புவோம்டா... தேவையில்லாம அந்தப் பொண்ணு பேச்சு வாங்க வேண்டாம்" என்றான்.
சின்ன வயதிலிருந்தே நிகாரிகா தனி ரகம். அன்பிற்கினியவன் நட்புக்காகக் கூடப் பிற பெண்களிடம் பேசிவிட்டால் போதும், அவளுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். 'இனிமே அந்தப் பொண்ணுகிட்ட பேச மாட்டேண்டி... அவளாகத்தான் வந்து பேசினா' என்று அவளிடம் கெஞ்சிச் சமாதானம் செய்தால் ஒழிய, அன்று அவளுக்குச் சோறு இறங்காது.
அப்படியே வளர்ந்தவளின் அந்த பழைய குணம் இப்போதும் துளிகூடக் குறையாமல் அப்படியே இருப்பதை எண்ணி, "மேடத்துக்குப் பொறாமைடா... வா போவோம்" என்று நிகாரிகாவைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே தென்னவனை அழைத்தான் அன்பிற்கினியவன்.
போகும் வழியில் தென்னவனிடம் "ஒரு நிமிஷம்டா" என்று சொன்னவன், காலை நொண்டி நொண்டி மெல்ல நடந்து நிகாரிகாவின் அருகில் வந்தான். அவளுக்கு மட்டும் கேட்கும் ரகசியக் குரலில், “இந்த எட்டு வருஷமா நீ என் கூட இருக்கிறாயோ இல்லையோன்னு தெரியாம தவிச்சப்பவே நான் வேற எவளையும் ஏறெடுத்துப் பார்க்கல... இப்போ நீயே திரும்ப வந்துட்டப்புறமா நான் வேற யாரைப் பார்க்கப் போறேன்? என் மேல நம்பிக்கை வைடி என் அழகுப் பதுமையே!” என்று இதமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
'அழகுப் பதுமையே' இது அவன் அவளுக்குச் சூட்டிய செல்லப்பெயர். அவளுக்கு அவன் எப்படி இனியனோ, அப்படியே அவனுக்கு அவள் 'அழகுப் பதுமை'. இன்று பொதுவெளியில் அவனைத் தன்னுரிமையோடு 'இனியன்' என்று அழைத்தது சந்தோசமென்றால் , அவளைத் தான் தள்ளி நிறுத்தியதால் அவன் மனம் தவிக்கக்கூடாது என்று, பதிலுக்கு அழகுப்பதுமை என்று கூப்பிட்டு, அவளது மனதையும் நிறைவாக்கிவிட்டுப் போகிறான் என்பதை அவள் சட்டென்று உணர்ந்துகொண்டாள்.
"மோட்டார் வண்டியில் ஏறிய பின்பும், அவள் அசையாமல் அதே இடத்தில் நிற்பதைக் கண்டான் அன்பிற்கினியவன். சட்டென்று குரலை உயர்த்தி, “மேடம்... உங்ககிட்ட வேலை செய்யுற ஒருத்தனுக்கு அடிபட்டுடுச்சுன்னு இறங்கி வந்து என் காலைப் பிடிச்சுப் பார்த்த உங்களோட அந்த மனிதாபிமானத்துக்கு ரொம்ப நன்றிங்க!” என்று சுற்றியிருப்பவர்கள் எல்லோருக்கும் கேட்கும்படி கத்தினான்.
அவன் இப்போது பேசியது மற்றவர்களின் வாயை அடைப்பதற்காகத்தான் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், அவளது அந்தச் சேவகம் அவனுக்கு மட்டுமே உரித்தானது.
அந்தக் கருணையையும் அக்கறையையும் அவள் மற்றவர்களிடம் எப்போதும் காட்டியதே இல்லை. அவனுக்காக மட்டுமே அவள் முகம் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றது. மற்ற நேரங்களில் எல்லாம் கோபத்தில் அவள் முகத்து நரம்புகள் புடைக்க, பார்ப்பவர்களையே நடுங்கச் செய்பவள் அவள். ஆனால் இன்றோ, ஏதோ ஒரு பற்பசை விளம்பரத்திற்கு வந்தவள் போல, முகம் முழுவதும் அத்தனை சிரிப்புடன் மின்னிக் கொண்டிருந்தாள்.
வைத்தியசாலை சென்று, சின்னத் தோல் சிராய்ப்பும், சுழுக்கும் தான் என்று காயத்திற்கு மருந்து கட்டிவிட்டுத் வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டில் இருந்த நீலகண்டனைக் கூட்டிக்கொண்டு மாரிமுத்துவும், பாக்கியமும் தங்களுக்கு நெருக்கமான ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைப் பார்க்கப் போயிருந்தனர். அந்தத் தனிமையில் தென்னவன், "எப்படிடா கண்டுபிடிச்ச? எனக்குச் சட்டென்று ஞாபகம் வரலையே!" கேட்டான்.
“நேத்து மீட்டிங் போயிட்டு வந்த பிறகு, அவ கண்ணு என்கிட்ட ஏதோ சொல்லத் துடிக்கிற மாதிரி ஒரு உணர்வு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சுடா. அப்புறம் அப்பாவோட அம்மா வீட்டுக்கு வரவும் தான் பொறி தட்டிச்சு. அதான் நேத்து நம்ம ஊர் பெரிய லைப்ரரிக்குப் போய் கொஞ்சம் விபரங்களைச் சேகரிச்சிட்டு வந்தேன். அங்கே இருந்த ஒரு பழைய பேப்பர்ல அவளோட சின்ன வயசுப் படம் ஒண்ணு போட்டிருந்தாங்க... அதைப் பார்த்ததுமே ஓரளவுக்கு ஊகிச்சிட்டேன், இருந்தாலும் முழுசா நம்ப முடியல.”
“அதனாலதான், அவ கார் ஷோரூம் திறக்கிற அந்த இடத்துக்குப் போனேன். அங்கே ‘அனிகா மோட்டார்ஸ்’னு இருந்துச்சு. முதல்ல ஒண்ணும் புரியல, அப்புறம் உத்துப் பார்த்தா... அதுல இங்கிலீஷ்ல AN.NIkaன்னு எழுதியிருந்தது. அதாவது என் பெயரோட முதல் இரண்டு எழுத்தும் , அவ பெயரோட முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்து இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறவ எதுக்குத் திரும்பவும் இங்கே வந்திருக்கான்னு மனசுல பெரிய கேள்வி இருந்துச்சு.”
“அப்பதான் வரும் வழியில் நம்ம வக்கீலை தற்செயலாப் பார்த்தேன். அவர் என்ன சொன்னார்னா... பாட்டி கிட்ட எவ்வளவு வயல் இருக்கு, தோட்டம் துரவு எல்லாம் அவங்க பேர்ல மட்டும்தான் இருக்கான்னு யாரோ வந்து விசாரிச்சிட்டுப் போனதா சொன்னார். அதைப் பார்த்தா, ஒரு காலத்துல அவளை ஒன்றுமில்லாதவளா இந்த ஊரை விட்டுத் துரத்தினதுக்கு, பழிவாங்கத்தான் வந்திருக்காளோன்னு என் மனசுக்குத் தோணுது" என்று அன்பிற்கினியவன் தன் சந்தேகத்தைக் கொட்டினான்.
தென்னவன் சிரித்துக்கொண்டே, “அவளுக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும், அதுக்காகத்தான் வந்திருப்பா. ஒருவேளை அவ பழிவாங்க ஆசைப்பட்டா, நான் அவ பக்கம் தான் நிப்பேன்" என்றான்.
“நான் மட்டும் எங்கே நிப்பேன்?” என்று கேட்ட அன்பிற்கினியவன், தொடர்ந்து, “இன்னைக்கு கவனிச்சியா... என்னால அவளை நீன்னு ஒருமையில கூட அழைக்க முடியல. அந்தளவுக்கு அவளோட உயரம் என்னைப் பயமுறுத்துது. ஒரு காலத்துல அவ ஒண்ணுமில்லாதவளா இருந்தா, இப்போ நான் ஒண்ணுமில்லாம நிக்கிறேன். அதான், அவளா வாய் திறந்து உங்களுக்காகத்தான் வந்தேன்னு சொல்ற வரைக்கும் நான் எதையும் காட்டிக்கப் போறதில்லை. நீயும் எதுவும் தெரிஞ்ச மாதிரி அவகிட்ட நடந்துக்காதே" என்று எச்சரித்தான்.
“இன்னைக்கு அங்கே வச்சு உன்னை இனியன்னு பதற்றத்துல கூப்பிட்டாங்களே... அதைக் கேட்டு அங்கே இருந்தவங்களுக்குச் சந்தேகம் வந்திருக்காதா?” என்று தென்னவன் கேட்க,
“எல்லோருக்குமே என்னோட பெயரின் பின் பகுதியைச் சொல்லி கூப்பிட்டிருக்கான்னுதான் தோணும். ஆனா, நான் இனியன்னு கூப்பிடுற உரிமையை அவளுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கேன்னு யாருக்கும் தெரியாது.” என்றவன் சட்டென்று பேச்சை மாற்றி, “அந்தச் சரிகா மட்டும் அவகிட்ட ஒருநாள் நல்லா வாங்கிக் கட்டிக்கப்போறான்னு தோணுது" என்றான் அன்பிற்கினியவன் சிறு சிரிப்புடன்.
“நான் அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி வைக்கிறேண்டா.. நீயும் நிகாரிகா மேடமும் இவ்வளவு வருசம் பிரிஞ்சிருந்து கஷ்டப்பட்டவரை போதும்.. இனியாவது சேர்ந்திருக்கப் பாருங்க” என்றான்
“உன்னாலையும் அவளை தங்கச்சின்னு கூப்பிட முடியல பார்த்தியா? இதுதான் இப்போ எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு பெரிய திரையா வந்து நிக்கப் போகுது" என்றான் அன்பிற்கினியவன் ஏக்கமாக.
அதற்குத் தென்னவனோ, "என் தங்கச்சி எப்பவுமே காசுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஆள் இல்லைடா. ஆனா, முன்னாடி மாதிரி இப்போ இல்லையே? தனியா இருக்கும்போது வேணும்னா எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். ஆனா, இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சு, உழைச்சு, இவ்வளவு பெரிய இடத்துல நிக்கிற ஒரு பொண்ணுக்கு, நான் சரியான மரியாதை கொடுக்கணும்டா. அதுதான் முறை" என்றான்.
“நீ என்ன லூசு மாதிரிப் பேசிக்கிட்டு இருக்க? உனக்கு அவங்க அப்பாவோட சொத்து மதிப்பு தெரியுமா? அவர் பிறவிப் பணக்காரன்... அள்ள அள்ள குறையாத சொத்து அவர்கிட்ட இருக்கு. அவர் தன் மகளுக்குன்னு சும்மா கிள்ளிக் கொடுத்தாலே, நம்ம ஊரே ஒரு வெளிநாட்டு நகரம் மாதிரி மாறிடும்!” என்றான் அன்பிற்கினியவன்.
“ம்ம்... அது பார்த்தாலே தெரியுதுடா. ஆனா, அவ இவ்வளவு பெரிய பணக்காரிங்கிற விஷயம் உன் பாட்டிக்குத் தெரிய வரும்போதுதான் இருக்கு உண்மையான விளையாட்டே!” என்று தென்னவன் ஒரு புன்னகையோடு சொல்ல,
“நீ வேற ஏன்டா... அவ ஏற்கனவே காலுல சலங்கை கட்டாத குறையாத்தான் ஆடிக்கிட்டு இருக்கா. இதுல பாட்டிக்கு உண்மை தெரிஞ்சு, இவளைத் திரும்பவும் ஒட்டிக்கலாம்னு அந்தப் பெரிய மனுஷி யோசிச்சான்னு வை... நிகாரிகா அவங்களை எறும்பு மாதிரி நசுக்கிடுவா!”
“நசுக்கட்டும்... நானும் அந்த நாளுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்!” என்றான் தென்னவன் அழுத்தமாக.
“ஏன்டா... அவங்க வயசான மனுஷிடா.." என்று அன்பிற்கினியவன் சொல்ல,
“அவங்க செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறாங்கடா... ஆடுற மாட்டை ஆடித் தான் அறுக்கணும்னு சொல்வாங்கல்ல, அது இதுதான்!"என்று தென்னவன் ஆணித்தரமாகச் சொன்னான்.
"என்னடா, நீயே அவளுக்கு இவ்வளவு முட்டுக் குடுக்கிற? இதுல இன்னொருத்தன் வேற இருக்கான், அவ என்ன பண்ணாலும் சரின்னு தலையாட்டுற ஆளு! அவனுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சா என்ன ஆகுமோனு பயமா இருக்குடா" என அன்பிற்கினியவன் கலக்கத்தோடு கேட்டான்.
அதைக் கேட்ட தென்னவன் நக்கலாக,"அவனுக்கு மட்டும் விஷயம் தெரியட்டும்... அன்னைக்கு இருக்கு அந்தப் பாட்டிக்குக் கச்சேரி! அதுக்கப்புறம் பாரு, நமக்குச் செம ஃபன்னா இருக்கும்!" என்றான்.
அன்பிற்கினியனோ தன் நண்பன் மீது பக்கத்திலிருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைத் தூக்கியெறிந்து, "அடப்பாவி... நான் இங்க என்னவாகுமோ, எதுவாகுமோனு டென்ஷன்ல சுத்திக்கிட்டு இருக்கேன். உனக்கு இது ஃபன்னா?" என்று போலியான கோபத்துடன் கேட்டான்.
"பின்ன என்னடா? இந்த எட்டு வருஷமா நம்ம லைஃப் எவ்வளவு ஸ்லோவா போச்சு! ஏதோ சாப்பிட்டோம், வயல்ல வேலை செஞ்சோம், தூங்கினோம்னு ரோபோ மாதிரி தான இருந்தோம். அதுல என்ன சந்தோஷத்தை அனுபவிச்சோம்? ஆனா இனிமே பாரு... ஆட்டம் ஆரம்பம், தூள் பறக்கும்!" என்றவனின் குரலில் வழிந்த உற்சாகத்தைக் கண்டு, அன்பிற்கினியவனுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

Author: ரோசி கஜன்
Article Title: அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.