அத்தியாயம் 21
அன்பிற்கினியனின் மனம் மகிழ்ச்சியில் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் நின்றபடி, வானத்து விண்மீன்களிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தான். சிற்பிகா பதினைந்து வயதில் கண்ணீரோடு இந்த வீட்டை விட்டு வெளியேறியது நேற்று நடந்தது போல அவனுக்குள் நிழலாடியது. ஆனால் அதற்குள் ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.
அன்பிற்கினியன் தன் கல்லூரிப் படிப்பை முடித்து, தந்தை நீலகண்டனுடன் இணைந்து நெல் ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தான். ஆலை வேலை ஒருபுறம் இருந்தாலும், விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்துவதே அவனின் லட்சியமாக இருந்தது. ஆனால், மனதின் ஒரு ஓரத்தில் சிற்பிகாவைப் பற்றிய தவிப்பு எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.
நேரில் சென்று பார்த்தால் எங்கே உணர்ச்சிவசப்பட்டு அவளை அப்போதே வீட்டுக்கு அழைத்து வந்து விடுவோமோ என்ற பயத்தினால், இத்தனை காலம் அவன் அவளைச் சென்று பார்க்கவில்லை.
நீலகண்டனும் பாக்கியமும் மட்டுமே அவ்வப்போது ஆசிரமத்திற்குச் சென்று மாரிமுத்துவையும் சிற்பிகாவையும் பார்த்து வந்தனர். மாரிமுத்துவும் சிற்பிகாவும் பக்கத்துப் பக்கத்து ஊர் என்பதால், அவர்கள் அண்ணன் தங்கையாகப் பழகுகிறார்கள் என்று ஆசிரம நிர்வாகம் நினைத்துக் கொண்டது அனைவருக்கும் வசதியாகப் போய்விட்டது.
பாக்கியம் பிள்ளைகளைப் பிரிந்து ஏங்கித் தவிப்பதைக் கண்ட நீலகண்டன் ஒரு முடிவெடுத்தார்.
ஆசிரம நிர்வாகத்திடம் சென்று, "தன் மனைவி ஊரில் இல்லாத காரணத்தால், தன் மருமகன் மாரிமுத்துவை இரண்டு மாத விடுமுறைக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும், அவனோடு சிற்பிகாவையும் அனுப்பி வைக்க முடியுமா?" என்றும் அனுமதி கோரி இருவரையும் மீண்டும் வீட்டிற்குக் கூட்டி வந்தார்.
அம்புஜத்திற்கும் தன் மகன் சிற்பிகாவை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டான் என்பது புரிந்தது. அவர்களது பிணைப்பு உடல் சார்ந்தது அல்ல, உள்ளம் சார்ந்தது என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஐயமறக் கண்டுகொண்டார். மகனின் உறுதி புரிந்தவுடன், அவரிடமும் சில மாற்றங்கள் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருந்தன.
அப்படியாக, பதினைந்து வயதில் ஒரு சிறுமியாகத் தவிப்போடு அந்த வீட்டை விட்டுப் போன சிற்பிகா, இன்று இருபது வயதில் அரிவைப் பருவத்தின் முழுமையோடு மீண்டும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.
கல்லூரிப் படிப்பு அவளது முகத்தில் ஒரு தெளிவைக் கொண்டுவந்ததுடன், ஆசிரமத்தின் முறையான வாழ்வும், ஆரோக்கியமான உணவும் அவளது தோற்றத்தில் ஒரு பொலிவைத் தந்திருந்தது. அன்று பார்த்த அந்த ஒல்லியான சிறுமி மறைந்து, இன்று ஒரு இளம் பெண்ணாக அவள் நிமிர்ந்து நின்றது அன்பிற்கினியனின் விழிகளை வியப்பில் ஆழ்த்தியது.
வீட்டிற்கு வந்த சிற்பிகா அன்பிற்கினியனிடம் மிகச் சாதாரணமாக நலன் விசாரித்ததோடு தன் வேலை முடிந்தது என்பது போல நகர்ந்துவிட்டாள்.
பிறகு எப்போதும் பாக்கியத்தின் பின்னாடியே அவள் சுற்றிக்கொண்டிருக்க, மாரிமுத்துவோ வந்த வேகத்தில் தன்னுடைய பழைய நண்பர்கள் பட்டாளத்தைக் காணச் சென்றுவிட்டான். இத்தனை காலமாக அவர்களின் பிரிவால் வாடிப் போயிருந்த அன்பிற்கினியனுக்கு, அவர்கள் இருவரும் தன்னைச் சட்டையே செய்யாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
அப்போது மாடிக் கதவு திறக்கும் சத்தம் கேட்டுச் சட்டென்று பார்வையைத் திருப்பினான் அன்பிற்கினியன். அங்கே சிற்பிகா மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
"உனக்கு இனி என்கிட்ட கேட்க எதுவும் இருக்காது... நீ வரமாட்டேன்னுதான் நினைச்சேன்” என்றவனின் முகத்தில் வருத்தம் தெரிந்தாலும், அவளைத் தனிமையில் கண்ட அந்த நொடியில் குரலில் ஒரு துள்ளல் இருந்தது.
அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "நம்ம வாழ்க்கையைப் பற்றி என்ன யோசிச்சு இருக்கீங்க?" என்று நேரடியாகக் கேட்டாள். அந்தப் பேச்சில் பழைய சிறுமியின் தடுமாற்றமோ நடுக்கமோ துளியும் இல்லை.
"நீ ஒரு 'ம்' சொன்னால் போதும்... உன் கூட நான் வாழ்ந்து காட்டிடுவேன்" என்றான் அன்பிற்கினியன் ஆணித்தரமாக.
"ஆனா உங்க பாட்டி?" என்று அவள் இழுக்க,
அவளின் அருகில் நெருங்கியவன், அவள் விழிகளை நேராகப் பார்த்து, "குடும்பம் நடத்தப்போறது நானும் நீயும் தானே தவிர அவங்க இல்லை. எனக்குத் தேவையானது உன்னோட மனசுதான். அது என்கிட்ட இருக்குற வரைக்கும் எனக்கு வேற எதைப் பத்தியும் கவலை இல்லை" என்றான்.
சிற்பிகா சற்றுத் தயங்கி மெதுவான குரலில், "நான் டிகிரியில் கோல்ட் மெடல் எடுத்தால், ஸ்காலர்ஷிப்பில் ஐந்து வருஷம் வெளிநாட்டுக்கு மேல்படிப்புக்கு அனுப்புவாங்களாம்..." என்றாள்.
வாழக்கூப்பிட்டால் படிப்பைக் காரணம் காட்டியவளைக் கண்டு முகம் சுருங்க, "நீ எங்க வேணா போ... ஆனா கடைசியில் என்கிட்டயே திரும்பி வந்திடணும்" என்ற அன்பிற்கினியனின் குரலில் காதலும் ஒருவித யாசிப்பும் தெரிந்தது.
அன்பிற்கினியனுக்கு இன்னுமே அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா இல்லையா என்ற சந்தேகம் இருப்பதை கண்டவளுக்குச் சிரிப்புதான் வந்தது. ஆசிரமத்தில் படிப்பில் கவனம் செலுத்தினாலும், அவளின் ஒவ்வொரு நினைவும் அவனைச் சுற்றியே இருந்தது அவனுக்குத் தெரியவில்லை.
அதனால், "எனக்கு உங்களைப் பிடிக்கும். ஆனா உங்க பாட்டியோட அந்தப் பார்வை என்னை நிம்மதியா மூச்சுவிடக்கூட விடமாட்டேங்குது." என்று தன் ஆழ்மனக் கலக்கத்தை வெளிப்படுத்தினாள்.
"என்னை நம்பு சிற்பி... என்னை மீறி அவங்களால உன்னை ஒண்ணும் பண்ண முடியாது" என்றான் அவன் உறுதியாக.
"நீங்க அதிகப்படியான நம்பிக்கையில இருக்கீங்க..." என்ற சிற்பிகாவிற்கு, மங்கம்மாவின் குரோதப் பார்வை நினைவுக்கு வந்து நடுக்கத்தைத் தந்தது.
அவள் பயத்தை உணர்ந்தவன், அவள் வரப்போவதை அறிந்து, தன் சட்டைப் பையில் ஐந்து ஆண்டுகளாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தத் தாலியை எடுத்து அவள் கழுத்தில் மீண்டும் அணிவித்தவன், "என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்டி..." என்றும் சொன்னான்.
சிற்பிகாவிற்கும் அந்தத் தாலி மீண்டும் திரும்ப தன்னிடமே வந்ததினால் ஒரு நிம்மதியுடன் அந்தத் தாலியைக் கைகளிலெந்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த நிலவொளியில் மீண்டும் தன் தாலியுடன் நின்றிருந்த சிற்பிகாவைக் கண்டவனுக்குள் மோகம் எனும் உணர்வு மெல்லக் கிளர்ந்தது.
அவனது கை விரல்கள் அவளை அறியாமல் அவள் தோள்களைப் பற்றின. அவன் தங்கள் திருமணத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்த விருபுகிறான் என்று அவளுக்கு புரிந்தது.
அவனைத் தள்ளிவிடவும் முடியாமல், அதே சமயம் அவன் விருப்பத்திற்கு முழுமையாக இணங்கவும் முடியாமல் மென்மையாக அவன் கைகளைப் பற்றி, "இப்போதைக்கு இது வேணாமே..." என்று அவள் மிக மென்மையாகச் சொன்ன விதம், ஒரு மறுப்பாக இல்லாமல் கெஞ்சலாக இருந்தது.
அன்பிற்கினியனுக்கு அவளுடன் ஒருநாளாவது வாழ்ந்து பார்த்திட வேண்டும் என்று இந்த ஐந்து வருடங்களாகவே ஆசை இருந்தது. அதனால் அவன் குரலில் ஒரு சின்ன ஏமாற்றத்தோடு, 'ஏன் சிற்பி? நமக்குக் கல்யாணம் முடிந்து ஐந்து வருடம் ஆகுது. இப்போ நீயும் சின்னப் பொண்ணு இல்லையே? நாம முறைப்படி தாலி கட்டிக்கிட்ட தம்பதிதானே?' என்றான்.
அவன் மனம் நோகக் கூடாது என்பதில் அவள் கவனமாக, "தப்பா எடுத்துக்காதீங்க... படிப்பு முடிஞ்சு, ஒரு நல்ல நிலைக்கு வந்து, அவங்க முன்னாடி நிமிர்ந்து நின்னு நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாம். அதுவரைக்கும் இந்தத் தாலி மட்டும் எனக்குத் துணையா இருக்கட்டும்" என்று மென்மையாகச் சொன்னாள்.
அவளது பேச்சில் இருந்த நியாயமும், தெளிவும் அன்பிற்கினியனைச் சிந்திக்க வைத்தது. அவளைக் கட்டாயப்படுத்த அவனுக்கு மனமில்லை. அவளது முதிர்ச்சியான பேச்சைக் கேட்டவன், அவளது நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டு, அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
"சரிடி... உன் இஷ்டப்படியே ஆகட்டும். உன் கனவுகள் எல்லாம் நிறைவேறட்டும். என் காத்திருப்புக்கு வட்டியும் முதலுமா சேர்த்து அப்புறம் வசூல் பண்ணிக்கிறேன்" என்று அவன் விளையாட்டாகச் சொல்ல, சிற்பிகாவின் முகத்தில் நாணம் கலந்த புன்னகை அரும்பியது.
நிலவொளி அந்தத் தாலியில் பட்டு மின்ன, இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் ரசித்தபடி அந்த இரவின் தனிமையை ரசித்தார்கள்.
அடுத்தநாள், தன் கழுத்தில் ஏறிய அந்தத் தாலியை, யாருடையக் கண்களிலும் படாதவாறு தன் உடைக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைத்திருந்தாள் சிற்பிகா.
அன்று மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அன்பிற்கினியனுக்கு வீடே அமைதியாகக் காணப்பட, "எல்லாரும் எங்க போயிருப்பாங்க?" என்று தேடியபடி வீட்டைச் சுற்றி வந்தவன், சிற்பிகாவின் அறை வாசலில் வந்து நின்றான்.
அங்கே சிற்பிகா கட்டிலில் குப்புறப் படுத்தபடி, இரண்டு கால்களையும் காற்றில் ஆட்டிக்கொண்டே ஏதோ ஒரு புத்தகத்தை ஆழமாக வாசித்துக் கொண்டிருந்தாள்.
அந்த அறையின் ஜன்னல் வழியாகப் புகுந்த மாலை வெயில், அவளின் தங்க நிறக் கால்களில் பட்டுப் பிரதிபலிக்க, அந்தப் பார்வை அவனை அப்படியே அவளை நோக்கி ஈர்த்தது. ஐந்து ஆண்டு காலத் தவம் அவனது கண்களில் மோகமாய் உருமாற, தன்னை அறியாமலேயே அவளை நெருங்கிச் சென்றான்.
அவனின் காலடிச் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிய சிற்பிகாவிற்கு, அவன் கண்கள் சொன்ன செய்தி ஏதோ ஒரு புதிய உணர்வைத் தந்தது. "யாரும்... யாரும் வீட்ல இல்ல..." என்று பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க குளறினாள். அனைவரும் ஒரு திருமணத்துக்குச் சென்றிருப்பதை அவசர அவசரமாகச் சொல்ல முயன்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டுத் தன் நடையைச் சற்று நிறுத்தியவன், அவளை ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெல்லத் திரும்பிச் சென்று அந்த அறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டான்.
அவன் கதவைப் பூட்டுவதைக்கண்டு, சிற்பிகாவின் இதயம் வேகமாகத் துடிக்க, "இனியன்... நாம நேத்துதான் இதைப் பத்திப் பேசினோம்... இப்போ வேணாமே" என்று தடுமாற்றத்துடன் சொன்னாள்.
அவள் இனியன் என்று தனக்காகச் சூட்டிய அந்தத் தனிப்பெயரைச் சொல்லி அழைத்ததும், அவனுக்குள் இருந்த அணைக்கட்டுகள் அனைத்தும் உடைந்து போயின. எந்த ஆணால்தான் தன் மனைவி அன்போடு அழைக்கும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும்?
"இனியன்... வேணாம்" என்று அவள் மீண்டும் தடுத்தாள். ஆனால் அவனது தீட்சண்யமான கண்கள் அவளையே விழுங்கிக் கொண்டிருக்க, அவனது காதலும் காமமும் கலந்த உணர்வுகள் தறிகேட்டு ஓடின. ஐந்து ஆண்டு காலத் தாகம் அவனது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.
மெல்ல அவளருகே அமர்ந்தவன், அவளது நடுக்கத்தை ரசித்தபடியே அவளது கைகளைப் பற்றி, "எவ்வளவு காலம் சிற்பி தள்ளி நிக்கிறது? இந்தத் தாலி உன் கழுத்துல ஏறுன அந்த நிமிஷமே நீ எனக்குச் சொந்தமாயிட்ட… " என்று அவன் குரல் கமறச் சொன்னான். அவளது மறுப்புகள் யாவும் அவனது நெருக்கத்தில் மெல்லக் கரைந்து போகத் தொடங்கின.
எல்லாம் முடிய, அவளது காதருகே குனிந்து "தாங்க்ஸ்" என்றவனைப் பார்த்ததும் சிற்பிகாவிற்கு வெட்கமும் கோபமும் ஒருசேர தாக்க, "என்னது தாங்க்ஸா?" என்று கேட்டபடியே, பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து அவனை நன்றாக நோகும் படி விளாசினாள்.
"அடியேய்... வலிக்குதுடி! சும்மா கும்முன்னு இருக்காய்ன்னு பார்த்தா, இவ்வளவு அடி அடிக்கிற?" என்று அவன் சிரித்துக்கொண்டே தற்காத்துக் கொள்ள முயன்றான்.
அவன் சொன்ன அந்த வர்ணனையில் முகம் சிவந்தவள், இன்னும் ஆக்ரோஷமாக அவனை அடிக்கத் தொடங்கினாள். தன்னிடம் அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க அவன் போர்வையினால் தன்னை முழுமையாக மூடிக்கொள்ள முயல, போர்வையைப் பிடித்து இழுத்துத் அவனுக்கு அடிப்பதிலேயே முழு கவனமாக இருந்தாள் சிற்பிகா.
அவள் குனிந்து அவனை அடிக்க முயன்ற அந்த வேகத்தில், போர்வையிலிருந்து விலகியிருந்த அவளது தோள்களைக் கண்ட அன்பிற்கினியனுக்கு மீண்டும் தொண்டையில் எச்சில் ஊறியது. அடி வாங்கிக்கொண்டே இருந்தவன் சட்டென்று அவளது கைகளைப் பற்றி அவனை நோக்கி இழுக்க, திடுக்கிட்டு அவன் மார்பில் சரிந்தாள் சிற்பிகா.
"இனியன்... விடு" என்று அவள் மூச்சு வாங்கச் சொல்ல, "அப்போ அடிச்சதுக்குச் சமாதானம் பண்ணு" என்று குறும்புச் சிரிப்புடன் அவளை மீண்டும் தன் அணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான்.
"சொல்லுறது ஒண்ணு... செய்யிறது ஒண்ணு... போடா!" என்று சலிப்புடனும் செல்லக் கோபத்துடனும் அவனைத் திட்டித் தள்ளிவிட்டு எழ முயன்றாள் சிற்பிகா.
அவளை விடாமல் இழுத்து அணைத்துக் கொண்டவன், "ஐந்து வருஷம் காத்திருந்ததே பெருசுடி என் அழகுப் பதுமையே!" என்று அவளது கன்னத்தைப் பிடித்துக் காதலோடு கொஞ்சிக் கொண்டான்.
முதல் முறை மட்டும்தான் அந்தத் தயக்கமும் பயமும் எல்லாம். அதன் பிறகு, ஒருமுறை வழி தெரிந்ததும் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறின. இப்படியாக அவர்களின் பள்ளியறைப் பாடம் மங்கம்மாவின் கண்களுக்கு மறைத்து தினமும் அங்கேயே அரங்கேறியது.
அனைவரும் தூங்கிய பிறகு, பூனைப் பாதங்களாகத் தரை அதிராமல் அவன் அவள் அறைக்கு வருவதும், விடியற்காலை எவரும் விழிக்கும் முன் தன் அறைக்குத் திரும்புவதுமாக அந்த நாற்பது நாட்கள் ஒரு மாயக் கனவைப் போல ஓடிக்கொண்டிருந்தன.
மங்கம்மா, சிற்பிகாவின் கழுத்தைத் தான் எந்நேரமும் கவனித்துக் கொண்டிருந்தாரே தவிர, அவளது முகத்தில் கூடிக்கொண்டே போன அந்தப் புதுப் பொலிவின் ரகசியத்தைப் புரியாமல் தவித்தார். அன்பிற்கினியனின் உற்சாகமான நடையும், சிற்பிகாவின் வெட்கம் கலந்த மௌனமும் அந்த வீட்டின் சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களாயின.
பகல் நேரங்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமே இல்லாதவர்கள் போலப் பார்த்துக் கொள்வதும், யாரும் பார்க்காத நொடியில் கண்களாலேயே முத்தமிட்டுக் கொள்வதும் என அவர்களின் காதல் லீலைகள் உச்சத்தைத் தொட்டன.
அப்படியாக ஒருநாள், அந்த வீடே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகத் தவறாகக் கணக்கிட்டுவிட்டான் அன்பிற்கினியன். சிற்பிகாவிடம் ஒரு இனிய உறவு கொண்டு, அவளது அந்திநேர அழகில் திளைத்துவிட்டு, தன் அறைக்குத் திரும்புவதற்காகத் திருப்தியும் ஒருவித வெட்கமும் கலந்த முகத்துடன் வெளியே வந்தான்.
அதே சமயம், மங்கம்மா தாகத்திற்காகத் தண்ணீர் குடிக்கத் தன் அறையை விட்டு வெளியே வந்தவர்,இருட்டான அந்த நீளவாட்டு வராந்தாவில், ஒரு உருவம் சிற்பிகாவின் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதைக் கண்டதும் அவர் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
அன்பிற்கினியன் தன் திருப்தியான மனநிலையில், மங்கம்மா அங்கே நிற்பதைச் சற்றும் கவனிக்கவில்லை. அவன் தன் அறைக்குத் திரும்பும் அவசரத்தில், குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டான்.
மங்கம்மா வராந்தாவின் இருட்டில் தூணின் நிழலில் மறைந்து நின்றிருந்ததால், அவன் பார்வைக்கு அவர் தென்படவில்லை. ஆனால், அவரோ அவன் வெளியே வந்த விதம், அவன் கலைந்திருந்த தலைமுடி, அவசர அவசரமாகத் தன் சட்டையைச் சரிசெய்த விதம் என அனைத்தையும் அணுவணுவாகக் கவனித்துவிட்டார்.
அவன் சென்ற திசையையே சில நொடிகள் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மங்கம்மா, மெல்லத் தன் பார்வையைச் சிற்பிகாவின் அறைக் கதவை நோக்கித் திருப்பினார். அந்தப் பார்வையில் அனல் தெறித்தது.
"அப்போ... நான் பயந்தது வீண் போகல! இந்தச் சிறுக்கி என் பேரனை வசியப்படுத்தித் தன் அறைக்கே இழுத்துட்டா போல இருக்கே!" என்று அவருக்குள் ஆத்திரம் எரிமலையாய் வெடித்தது.
மங்கம்மா அன்று இரவு முழுவதும் ஒரு நிமிடம் கூடக் கண் மூடவில்லை. ஆத்திரத்தில் அவரது நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. ஆனால், அந்தக் கோபத்தை இப்போதே காட்டிவிட அவர் விரும்பவில்லை. புலியானது தன் இரைக்காகக் காத்திருப்பதைப் போல, சிற்பிகா தனியே சிக்கும் அந்தத் தருணத்திற்காகத் தன் வஞ்சத்தைப் பொறுமையோடு காக்கத் தொடங்கினார்.
அன்பிற்கினியன் பிடிபட்டதைச் சிறிதும் அறியாத சிற்பிகா, அவன் கொடுத்த அந்த இனிய நினைவுகளுடன் மெல்லக் கண்கள் சொருகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.