மனம் - 17
அலுவலகத்திற்கு கிளம்பி ரெடியாக இருந்த அட்சயா அவர்களின் பெட்டில் அமர்ந்திருந்தவள், தலைசீவி கிளம்பிக் கொண்டிருந்த குருவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று பவ்யா ட்ரான்ஸ்பர் வாங்கி அவளது சொந்த ஊரான கேரளத்திற்கே செல்வதால், அன்று அனைவருக்குமே ஒன்றாக டீம் லன்ச் இருந்தது. எனவே, காலைக்கு டிபன் மட்டும் செய்து வைத்துவிட்டு குரு கிளம்புவதற்கு காத்திருந்தாள் அட்சயா.
“அதென்ன டி. எப்ப பார்த்தாலும் ஆளை முழுங்குற மாதிரி ஒரு பார்வை?” என கேட்டுக்கொண்டு தலை வாரிவிட்டு அயர்ன் செய்து வைத்திருந்த வெள்ளைநிற சட்டையை எடுத்து மாட்டியவன், பட்டன்களை அணிந்துக் கொண்டிருந்தான். வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்து அட்டகாசமாக இருந்தவனை விட்டு அவளால் பார்வையை திருப்பவே முடியவில்லை.
“ஏன்? நான் பார்க்க கூடாதா? நான் பார்க்கதான் நீங்க இருக்கீங்க..” என்றவளை கண்ணாடியின் வழியே பார்த்தவன் , “சரிதான்.” என தலையசைத்துக் கொண்டான்.
எழுந்து அவனின் அருகில் வந்து அவனுக்கும் கண்ணாடிக்கும் இடையில் இருந்த இடத்தை நிரப்பியவள் குருவை அணைத்தாள். “அச்சு மேடமுக்கு என்னாச்சு? காலைலயே டெம்ப்ட் பாண்ணுறீங்க?” என்றவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அணிந்திருந்த வெள்ளைசட்டையில் அவனின் இதயப்பகுதியில் முத்தத்தை பதித்தாள். அதில் அவளின் உதட்டு சாயம் அப்படியே அதனின் தடத்தை, சிவப்பு நிறத்தில் சட்டையில் பதித்தது.
அவளின் செய்கையில் சிரித்தவன், “என்ன டி பண்ணுற?” என்றிட, அவனின் முழு சட்டையிலும் அவளின் முத்திரையை தொடர்ந்து பதித்தாள்.
“நீ தான் இதை துவைக்கணும். பார்த்துக்கோ.” என்றவனை பார்த்து சிரித்தவள்,
“இந்த சட்டையை துவைச்சா போகாது..” என உதட்டை சுழித்தாள்.
“ரொம்ப நல்லது. அப்படியே பிரேம் போட்டு மாட்டிவை. அப்ப என்னோட வெள்ளை சட்டை?” என்றவன் சுழித்த அவளின் உதட்டில் இதழ் பதித்தான்.
அவனிடமிருந்து விலகியவள், “பொல்லாத சட்டை. எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணா.. அதை மாதிரியே ஒரு டஜன் சட்டையை அனுப்புவாங்க..” என பெருமை பேசியவளை முழுதாக அவனின் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்திருந்தான். அதன் பின் அவர்கள் இருவரும் அலுவலகம் கிளம்பவே நேரமாகியது.
தாமதமாக வந்த குருவை பார்த்து நக்கலாக சிரித்த அபிலாஷின் தலையில் தட்டியவன், “வேலையை பாரு டா.” என அவனின் இருக்கைக்கு சென்றான்.
அன்று மதியம் போல் அனைவருக்கும் அவளின் திருமண அழைப்பிதழை வைத்த பவ்யா, அவளின் சொந்த ஊரான கேரளாவிற்கே மாற்றல் வாங்கி சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு வந்ததும், “பவ்யா ரொம்ப ஸ்வீட் கேர்ள். தெரியுமா? இந்த மாதிரி ஆபீஸ்ல மட்டும் தான் ஊர், பேர், மொழி எதுலயும் வித்தியாசம் பார்க்காம பழக முடியும். இல்லைங்க?” என்றவளை ஆழ்ந்து பார்த்தான் குரு.
இதுவரை பாக்கியம் அவளின் கையால் ஒரு டம்பளர் தண்ணீர் கூட வாங்கி அருந்தியதில்லை. அதனின் தாக்கம் அவளின் பேச்சில் வெளிப்பட்டது. “அம்மா உன்கிட்ட நடந்துக்குறது உனக்கு பிடிக்கலைனு தெரியுது அச்சு. அதுக்காக அவங்க கெட்டவங்க கிடையாது. நம்ம வேலை பார்க்குற இடம் பழகுற மனுஷங்கனு யாரும் ஜாதியை பார்க்க மாட்டாங்க. ஏன் அபியே எத்தனையோ தடவை எங்க வீட்ல வந்து தங்கிருக்கான். அம்மா அவனை எதுவுமே சொன்னது இல்லை.”,
“வேற ஆட்களுக்கு நடக்குறப்ப புரட்சிகரமா தெரியுற கலப்பு திருமணம், நம்ம வீட்டுக்குனு வரப்ப எல்லாரும் எதிர்க்க செய்யுறாங்க. அம்மாவும் அதையே தான் செய்தாங்க.”,
“ஏன்? நமக்கு அப்படி ஒரு சூழ்நிலை வரலைனா உங்க அப்பா வேற ஆளுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாரா? அந்த நேரத்துல நான் நல்லவனா இருக்க போய் எனக்கு பொண்ணு கொடுத்தாங்க. அவ்ளோ தான். அதுக்காக அம்மா செய்யுற எல்லாமே சரினு சொல்ல மாட்டேன். ஆனா அவங்க கெட்டவங்களும் இல்லை அச்சு. அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்.” என்றவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
அவனின் பின்னே சென்றவள், “ஏங்க, நான் அத்தையை தப்பா எதுவும் சொல்லல.” என அவள் எவ்வளவு எடுத்து சொல்லியும் குருவின் மனம் சமன்படவில்லை.
‘அம்மா, மனைவி’ என இருவரின் உணர்வுகளும் புரிந்தாலும் யாருக்கும் சாதகமாக அவன் பேச முனையவில்லை. ஆனால், பாக்கியத்தின் செயலுக்கு மட்டும் அவ்வப்பொழுது எழும் கோபத்தை அவரிடம் அப்படியே காட்டிவிடுவான்.
“தூங்கு.” என்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு தான் உறங்கினான். காலையில் இருவருக்குள்ளும் அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லாமலே தான் அலுவலகத்திற்கு கிளம்பினர்.
“சொல்லுங்க குரு. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஒரே டீம்ல இருக்க கூடாதுன்ற நம்ம ஆபீஸ் ரூல்ஸ் உங்களுக்கு தெரியும் தான? ” என மனோஜ் அவனை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தான். குழு தலைவர்களுக்கான மீட்டிங் என்பதால் அபிலாஷையும் சேர்த்து ஐந்தாறு நபர்களும் அங்கு அமர்ந்திருந்தார்கள்.
‘குருவை மட்டம் தட்ட வேண்டும்.’ என்ற எண்ணத்தில் இருந்த மனோஜிற்கு இந்த விஷயம் லட்டுவாக கிடைத்தது. “என்னோட பெர்சனல்னா நாம அதை தனியா பேசலாம்.” என்றான் குரு சுற்றியிருந்த அனைவரையும் பார்த்துவிட்டு.
“இது கம்பெனி ரூல். சோ..” என மனோஜ் தோளை குலுக்க,
“வெல். என்னோட மனைவி அட்சயா என்னோட டீமே கிடையாது. அவ அபிலாஷாட டீம். சோ நாங்க ஆபீஸ் ரூலை பிரேக் பண்ணலன்னு நினைக்கிறேன் மனோஜ்.” என சொன்னவன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். ‘அடப்பாவி இப்படி ஒரு ரூல் இருக்குனு தெரிஞ்சி தான் அட்சயாவை என்னோட டீம்லயே இருக்க சொன்னியா?’ என யோசித்த அபிலாஷிற்கு மனோஜை நினைத்து சிரிப்பாக வந்தது.
அவனிடம் காட்ட முடியாத கோபத்தை அட்சயாவிடம் காட்டினான் மனோஜ். “நீங்க வேலைக்கு சேர்ந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. இன்னும் ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்லை.” என கத்தியவனிடம். “அவங்க இன்னமும் ட்ரைனர் தான் மனோஜ்.” என அபிலாஷ் சொன்னவுடன் சென்றுவிட்டான்.
நேற்று குருவிடம் ஏற்பட்ட மனக்கசப்பு இப்பொழுது மனோஜின் செயல் என மனம் கனக்க, அமைதியாக கேன்டீன் சென்றுவிட்டாள். அபிலாஷ் மூலம் விஷயம் அறிந்த குரு அங்கே வந்தான்.
மில்க் ஷேக் அருந்தியபடியே போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவன் அவளிடம் உள்ளதை வாங்கிக் கொண்டான். “உங்களுக்கு வேணும்னா இன்னொன்னு சொல்லுறேன்.”
“இதுவே போதும். லன்ச் டைம் வந்திடும்.” என்றவன் அவளின் முகத்தை தான் ஆராய்ச்சியாக பார்த்தான்.
“அட மனோஜ் சொன்னதுக்கெல்லாம் நான் கவலையே பட மாட்டேன்.” என அவள் சிரித்தும் தான் அவன் இயல்பானான்.
ஒருவாரம் கழித்து பொங்கலுக்கு மீண்டும் குருவின் ஊரிற்கு சென்றனர். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குருவின் வீட்டில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு அட்சயாவின் வீட்டிற்கு சென்றனர்.
அன்று முழுக்க அங்கே இருந்துவிட்டு மூன்று நாட்கள் ஏற்காடு செல்வதாக திட்டமிட்டனர். ஆனால், அன்றிரவே அட்சயாவின் அக்கா கங்காவிற்கு பிரசவ வலி வந்து, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வர, அனைவரும் அங்கு சென்று விட்டனர்.
சில மணி நேரத்திலே அவர்களுக்கு இரண்டாம் மகன் பிறந்து விட்டான். “தங்கம் விக்குற விலைக்கு பையன் பிறந்ததே நல்லது.” என சொல்லிய கங்காவின் மாமியாரை அனைவருமே அல்பமாக பார்த்தனர்.
“ஏன் ம்மா?” என கோபிநாத் சொன்னதும் தான் அவர் வாயை மூடிக்கொண்டார்.
“அம்மா வேணும்.” என அழுத சர்வேஷை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“மாமா கிட்ட வா. ஐஸ் கிரீம் சாப்பிடலாம்.” என சபாபதி அழைத்தும் எந்த பயனும் இல்லை.
கங்காவை அறைக்கு மாற்றியவுடன் சர்வேஷை அழைத்து சென்று பார்த்து வந்தார் கோபிநாத்.
“சித்தி கூட வரியா? வீட்டுக்கு போகலாம்.” என அட்சயா மீண்டும் மீண்டும் அழைத்ததும் தான் அவளிடம் வந்தான்.
கங்காவையும் குழந்தையையும் பார்த்துவிட்டு, அட்சயாவையும் சர்வேஷயும் அவனுடனே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் குருபிரசாத். சிறிது நேரம் அம்மாவை தேடியழுத சர்வா அட்சயாவிற்கும் குருவிற்கும் நடுவில் படுத்துவிட்டான்.
அவனுக்கு அட்சயா கதை சொல்லிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டே குருவின் மேல் காலை போட்டுக்கொண்டு சுகமாக படுத்திருந்தான். குருவின் மேலிருந்த காலை அட்சயா எடுக்க, “இருக்கட்டும்.” என குரு சொல்லிவிட்டான்.
கண்களை உருட்டி உருட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த அட்சயவை தான் பார்த்துக் கொண்டிப்பிருந்தான் குரு. சிறிது நேரத்தில் மூவருமே உறங்கிவிட்டார்கள்.
காலையில் குருபிரசாத் கண்விழிக்கும் பொழுதே, சர்வேஷ், அட்சயா இருவருமே அவனை கட்டிக்கொண்டு உறங்கியது தெரிந்தது. இருவரையும் விலக்க தோணாமல் அவர்கள் மூவரையும் அப்படியே புகைப்படம் எடுத்து சேமித்து வைத்தான்.
கங்கா மருத்துவ மனையில் இருந்து வந்தவுடன் தான் அவர்கள் இருவரும் சென்னை திரும்பினார்கள். “இதென்ன எப்ப பார்த்தாலும். ட்ராவல்லையே நம்ம வாழ்க்கை போய்டும் போல.. வெளியூர்ல வேலை பார்க்குறவங்களாம் ரொம்பவே பாவம்.” என்ற அட்சயாவிடம்,
“அப்ப நாம வேலையை விட்டுட்டு நம்ம ஊருக்கே போய்டுவோமா?” என குருபிரசாத் கேட்டிருந்தான்.
“நானா வேணாம்னு சொன்னேன்?” என கண்ணை உருட்டியவளை சிரிப்புடன் பார்த்தான்.
*****
“அடுத்த வாரம் பவ்யா கல்யாணத்துக்கு போகணும். ஏற்கனவே சொல்லிருக்கேன் தான?” என கத்திக் கொண்டிருந்தாள்.
லேப்டாப்பில் இருந்து தலையை உயர்த்தியவன், “சாப்பாடு ரெடியா?” என கேட்டிருந்தான்.
“சில்லி பன்னீர் ரெடி. சப்பாத்தி சூடா போடலாம். நீங்க சொல்லுங்க பவ்யா கல்யாணத்துக்கு போலாமா. அப்படியே அக்கா பையனையும் பார்த்துட்டு வரணும்.” என திட்டமிட்டவளை பார்த்தவன்,
“சரிங்க மேடம். யார் யாரை பார்க்கணும்னு லிஸ்ட் ரெடி பண்ணுங்க போகலாம்.” என அவளை நெருங்கினான். அந்நேரம் சரியாக பூர்ணிமா அட்சயாவை அழைத்தாள்.
“நீ பேசிட்டு இரு அச்சு. நான் சப்பாத்தி போட்டு எடுக்குறேன்.” என நகர்ந்துவிட்டான் குருபிரசாத்.
பூர்ணிமாவிடம் பேசிவிட்டு வந்தவள் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன?”
“உங்களுக்கு தான் நான் அவகிட்ட பேசுனாலே பிடிக்காதே..” என்றவள், “எனக்கு பிடிக்காதுன்னு அபி அண்ணா கிட்ட பேசாம இருக்க சொன்னா.. நீங்க இருப்பீங்களா?” என வெடுக்கென்று கேட்டிருந்தாள்.
“அபி தப்பு செஞ்ச நானே அவனை கேட்பேன்.”
“ஆனா பூரி ஒரு தப்பும் செய்யலேயே?”
“நிச்சயமா. அந்த பொண்ணு எந்த தப்பும் செய்யல தான். நான் அவளை தப்பும் சொல்லல அச்சு. ஆனா அவகிட்ட பேசி எதுக்கு தேவையில்லாம உறவு கொண்டாடணும்? அதெல்லாம் வேணாம்னு தான் ஒதுங்கி போறது. எனக்கு அந்த பொண்ணு மேல கோபம்லாம் இல்லை. பட் எதுக்கு பேசணும்? பேசி என்ன சாதிக்க போறோம்னு ஒரு தாட். அவ்ளோ தான்.” என அந்த பேச்சுக்கு அப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் குருபிரசாத்.
“கடவுளிற்கு சொந்தமான நாடு” என அழைக்கப்படும் கேரளாவிற்கு தான் குருபிரசாத்தும் அட்சயாவும் வந்திருந்தனர். வாரயிறுதியோடு சேர்த்து ஒருநாள் விடுமுறை எடுத்து பவ்யாவின் திருமணத்திற்கு வந்திருந்தனர். இதனை முடித்துக்கொண்டு அப்படியே கங்காவின் இரண்டாம் மகனுக்கு பெயர் சுட்டும் விழாவையும் முடித்துக் கொண்டு ஊருக்கு செல்வதாக திட்டம்.
ஊருக்கு வரும்பொழுதெல்லாம் நாட்களை கணக்கிட்டு வருவது அட்சயாவிற்கு சலிப்பாக இருந்தது. சீக்கிரமே வேலையை விட்டுட்டு ஊரோட போய்டனும் என நினைத்துக் கொண்டாள்.
கேரள பாணியிலே சந்தன நிற புடவை கட்டியவளின் பின்னே வந்து அணைத்து நின்றிருந்த குருவின் கை அட்சயாவின் இடுப்பை தழுவியது. அதில் சிலிர்த்து இடுப்பை பார்த்தவள் அதிர்ச்சியாக குருவை பார்த்தாள். இடுப்பில் அணியும் ஒருவித சங்கிலியை அவளுக்கு மாட்டினான் குருபிரசாத்.
“என்னங்க இது?” என அட்சயா கேட்டாலும் அதனை எடுக்கவில்லை.
பவ்யாவின் திருமணத்தை முடித்துவிட்டு அறைக்கு வந்தவுடனே அட்சயாவை அணைத்திருந்தான் குருபிரசாத். அந்நேரம் அவனின் ஃபோன் ஒலித்தது. குரு அதனை கண்டுகொள்ளாமல் இருக்க, “என்னங்க ஃபோன்.” என அவனை நிகழ்விற்கு கொண்டுவந்தாள் அட்சயா.
அதனை எடுத்த குரு காதில் வைத்த உடனே, “நீ என்னை கரடின்னு காரித்துப்புனாலும் பரவால்ல குரு. ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு ப்ளீஸ்..” என கெஞ்சினான் அபிலாஷ். சில பல நல்ல நல்ல வார்த்தைகளால் திட்டிவிட்டு லேப்டாப்பை எடுத்து அமர்ந்தான் குருபிரசாத். அட்சயா வெளியேற பார்க்க அவளையும் விடாமலே பிடித்து வைத்துக் கொண்டான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். “இவ்ளோ பெரிய இஸ்ஸு வந்திருக்கு. இதுலாம் அந்த மனோஜ் பார்க்க மாட்டானா அபி?”
“அந்தாள் இப்பலாம் ரொம்ப பண்ணுறான் டா. இப்ப ரீசெண்டா ரெண்டு கம்ப்ளைன்ட் அவன் மேல போயிருக்கு போல.. ஆனாலும் அந்த ஆள் திருந்துற மாதிரி இல்லை.” என சொல்லிவிட்டு வைத்தான் அபிலாஷ்.
தூங்கிக் கொண்டிருந்தவளிம் சென்றவன், “அச்சு..” என அச்ச்சாரமாக முத்தமிட்டு எழுப்பிவன் அவளில் தொலைய துவங்கினான்.
கங்காவின் இரண்டாம் மகனுக்கு ‘விஷ்வேஷ்’ என பெயரிட்டனர். பாக்கியம், குணசீலன் இருவருமே வந்துவிட்டு சென்றனர். அந்த விழாவை முடித்துவிட்டு நெடு நாட்கள் கழித்து பூர்ணிமாவை சந்தித்து பேசினாள்.
அவளை அழைத்து சென்றது குரு தான். அட்சயாவின் வற்புறுத்தலால் பூர்ணிமாவிடம் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசினான்.
அன்று கடைக்கு சீக்கிரமே வந்துவிட்டான் சபாபதி. வேலை நெட்டி தள்ள பன்னிரண்டு மணிப்போல் பூர்ணிமா அவனை அழைத்தாள். நான்கு வருடங்கள் கடந்து இப்பொழுது தான் அவனை அழைக்கிறாள். அதனை ஏற்காமல் தவிர்த்துவிட்டான் சபாபதி.
மீண்டும் மீண்டும் மூன்று முறை அழைக்க, “எதுக்கு என்னை தொந்தரவு பண்ணுற?” என எடுத்தவுடன் கத்திவிட்டான்.
“ச..சபா ப்ளீஸ். நான் சொல்லுறதை பொறுமையா கேளுங்க.”
“...”
“எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. இப்ப நான் என்ன பண்ணட்டும்?” என்றவள் கலங்கிய குரலில் தவித்தான் சபாபதி. ஆனாலும் அவளுக்கு உறுதியாக எதுவும் சொல்லவில்லை.
அவனின் மௌனம் அவளுக்கு புரிந்துவிட கண்ணீரை துடைத்தவள், “நான் வெச்சிடுறேன்.” என வைத்துவிட்டாள்.
அன்றிரவு வெகுநேரம் யோசித்த சபாபதி, தெளிவான ஒரு முடிவிற்கு வந்துவிட்டான். அதனை அப்படியே குரல் வழியில் பூர்ணிமாவிற்கு அனுப்பியும் வைத்தான்.
மறுநாள் காலையில் பரிமளம், ஆவுடையப்பனினிடமும் பூர்ணிமாவை பற்றி சொல்லிவிட்டான்.
“ரொம்ப நல்ல பொண்ணு தான் சபா. ஆனா இப்ப நாம பொண்ணு கேட்டு போனா என்னென்ன பிரச்னையெல்லாம் வருமோ.. இப்ப தான் அச்சுவுக்கும் கல்யாணம் முடிஞ்சுது.” என்ற ஆவுடையப்பன் அவனின் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல் எப்படி செய்யலாம் என்பதை மட்டுமே சிந்தித்தார்.
“பெரியவங்க நாலு பேர் கிட்ட பேசி என்ன பண்ணலாம்னு பாருங்க. சும்மாவே உங்க தங்கச்சி ராங்கியாட்டம் ஆடுவா..” என பரிமளமும் சொல்லியிருந்தார்.