• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 18

STN - 92

Member
Staff member
மனம் - 18

ஊருக்கு சென்றுவிட்டு வந்து அனைத்தையும் அட்சயா தான் எடுத்து கபோர்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளின் கையில் ஒரு சிறு பை சிக்கியது. அதில் என்னவென்று பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். அதில் தான், முன்பு அவள் கழட்டிக்கொடுத்த மஞ்சள் கயிறு இருந்தது. ‘இதை இவங்க இன்னும் பத்திரமா வெச்சிருக்காங்களா?” என நினைத்தவளுக்கு தொண்டையே அடைப்பது போல் இருந்தது. மெல்ல தன்னை சமன்படுத்தியவள் அதனை குருபிரசாத்திடம் காட்டினாள்.

“மம்ச். இதை எதுக்கு எடுத்த? அங்கேயே வை.” என்றவன், “இல்லை கொடு. நானே வைக்குறேன்.” என கையை நீட்டினான்.

“இது.. அது தானங்க?” என அவனையே வெறித்தவளிடம்,

“ஆமா. நீ அன்னைக்கு கழட்டி கொடுத்தது தான். கொடு.” என சட்டமாக நின்றிருந்தான்.

“அப்படினா? நாழு வருஷமாவா என்னை நினைச்சுட்டு இருக்கீங்க?” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.

“ப்ச் என்ன அச்சு? இப்ப உனக்கு என்ன தெரியணும்.”

“நீங்க உண்மையை சொல்லுங்க. ஆபீஸ்ல நாம பார்த்ததாலே தான நமக்கு மறுபடி கல்யாணம் நடந்தது. இல்ல நான் நினைக்குறது தான் தப்பா?” என யோசனையுடன் சொன்னவளை அருகில் அமர்த்திக் கொண்டான்.

அட்சயாவை பொறுத்தவரை, விவாகரத்து வாங்கியபின் இருவருமே வேறு கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை. விதியின் வசத்தால் மீண்டும் சந்தித்து சேர்ந்திருந்தார் என்றே நினைத்திருந்தாள்.

“உன்னையே நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்ல முடியாது. ஆனா இந்த நாலு வருஷத்துல உன்னை முழுசா கடக்க முடியாம தான் இருந்தேன். நீ சென்னைல படிச்சிட்டு இருக்கன்னு தான் பெங்களுர்ல இருந்து இங்க வந்தேன்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்.

“உன்னை பத்தி அடிக்கடி சுதன் கிட்ட கேட்டு தெரிஞ்சிப்பேன். உன்னை பார்க்க வரலாம்னு யோசிக்குறப்ப தான் உன்னோட டிவோர்ஸ் நோட்டீஸ் வந்துச்சு. உனக்கும் அதுல சம்மதம் போலன்னு விவாகரத்து கொடுத்துட்டேன்.” என்றவன் பெருமூச்சுடன் கைகளை கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தான்.

அட்சயா, “அது.. நீங்க.. என்னால நீங்க வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்க கூடாதுனு கொடுத்தது.” என்றவள் தலை குனிந்துக் கொண்டாள்.

“எனக்கு உன்னை புரிஞ்சிது அச்சு. அதான் உன்கிட்ட எதுவும் வந்து நானாவே பேசல. ஒருவேளை உனக்கு அன்னைக்கு நடந்த கல்யாணத்துல நிஜமாவே விருப்பம் இல்லாம இருந்தா கட்டாயப்படுத்த கூடாதுனு மொத்தமா விலகினேன். உன்னை குழப்ப வேண்டாம்னு தள்ளியே இருந்திட்டேன்.” என்றவனை கண்ணீர் நிறைந்த விழிகளால் பார்த்தாள்.

“சரி காலேஜ் முடிச்சி கல்யாண பேச்சு எடுத்தா என்னோட நினைப்பு வரும்னு நினைச்சேன், பட்..” என்றனின் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“வீட்ல வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ்ளோ சொன்னப்பவும் முடிவா வேணாம்னு இருந்தேன். சுதன், அபிகூட மூவ் ஆன் ஆக சொல்லி அடிக்கடி சொல்லுவாங்க. என்னமோ என்னால வேற எதையும் யோசிக்க முடியவே இல்லை.” என்றவனின் கையை அழுத்தி பிடித்தாள்.

“அப்ப தான் சுதன் நீ வேலைக்கு தேடுறதா சொன்னான். சரி நேர்லயே உன்கிட்ட உன்னோட விருப்பத்தை தெரிஞ்சிக்கலாம்னு உன்னை நான் தான் நம்ம கம்பெனிக்கு ரெஃபர் பண்ணேன்.” என சிரித்தவனை செல்லமாக முறைத்தவள்,

“அப்ப எல்லாமே பக்கவா பிளான் பண்ணி பண்ணிருக்கீங்கா? இது தெரியாம நான் இருந்திருக்கேன்.”, என்றவள் அவனையே தான் இமைக்காமல் பார்த்தாள்.

“இன்னைக்கு நான் வெய்ட் ஷார்ட் போடலையே?” என கண்ணடித்து சிரித்தவனின் உதட்டில் முத்தமிட்டாள். வழக்கத்தை விட அதில் சற்று அழுத்தம் இருக்க, “அச்சு?” என குருதான் அவளை நிதானத்திற்கு கொண்டுவந்தான்.

அந்த தாலியை அவனின் கையில் கொடுத்தவள், “ம்ம்ம் போட்டு விடுங்க ப்ளீஸ்..” என சொல்ல அவளின் கழுத்தில் அதனை மீண்டும் அணிவித்தவன் கழுத்தோடு உரசிய அந்த தாலிக்கு அப்படியே முத்தமிட்டான். அவனை அப்படியே இறுக்கி அணைத்துக்கொண்ட அட்சயா , “குரு” என அழைத்து அவளின் தேடலை அவனிடம் தொடங்கினாள்.

குரு ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல உணர்வு குவியலாக இருந்த அட்சயா மொத்தமாக குருவிடம் செயலில் காண்பித்தாள்.

அன்றிரவு முழுக்க அட்சயா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக தான் இருந்தாள். மாட்டேன், இல்லை, முடியாது என எந்த வார்த்தைகளும் அவளிடம் அன்று வெளிப்படவே இல்லை. குருவே விலகினாலும் அவனை இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்துக் கொண்டாள்.

அட்சயாவின் அன்பும் ஆதிக்கமும் நிறைந்த ஆக்கிரமிப்பில் முழுதாக விரும்பியே சரண் புகுந்தான் குருபிரசாத். அன்றைய கூடலின் சாட்சியாக அட்சயாவின் மணி வயிற்றில் அவர்களின் காதல் பரிசு உதயமானது.

ஆவுடையப்பனும் சிலரிடம் சபாபதியின் திருமணம் பற்றி பேசியிருந்தார். “அவசர படாதீங்க. நீங்க எதையாவது பண்ண போய் உங்க தங்கச்சியும் அவங்க பையனும் சேர்ந்து அந்த பொண்ணுக்கு வேற கல்யாணத்தை பண்ணி வைக்க போறாங்க..” என சொல்லியிருக்க அவரும் அமைதி காத்தார்.

“அது மட்டுமில்லை. இந்த விஷயத்துல அந்த பொண்ணோட சம்மதம் ரொம்பவே முக்கியம். அந்த பொண்ணு தான் திடமா இருக்கணும்.” என்றும் சொல்லியிருந்தார். அதற்காகவே பூர்ணிமாவை கோவிலில் தனியாக சந்தித்தும் பேசியிருந்தான் சபாபதி.

அன்று தான் அட்சயாவின் கர்ப்பத்தை உறுதி செய்தார்கள். உடனே இருவீட்டிற்கும் அழைத்து சொல்லியிருக்க, இரு குடும்பங்களிலில் இருந்தும் அழைத்து வாழ்த்துக்களும் பத்திரங்களும் சொல்லியிருந்தனர்.

பாக்கியலட்சுமி வந்து பார்த்துவிட்டு, “இப்பவாது ஊருக்கு வரலாம் தான குரு.” என இருவரையுமே அழைத்தார்.

“நீங்க அட்சயா கையால என்னைக்கு சாப்புடுறீங்களோ அப்ப வரோம் ம்மா.” என சொல்லியவனிடம்,

“அதுக்காக தான் ஊருக்கு வரமா இருக்கியா குரு.?”

“என்னை வேற என்ன தான்ம்மா பண்ண சொல்லுறீங்க? அட்சயாவை நீங்க நடத்துறது எனக்கு பிடிக்கல. அதுக்குன்னு உங்களை விட்டு கொடுக்கவும் முடியல.. அதான். நீங்க அவளை முழுசா ஏத்துகிட்டா அங்க நாங்க வரோம். இல்லனா இங்கேயே இருந்துக்குறோம்.” என திடமாக நின்றுவிட்டான்.

தயக்கத்தை உதறிய பாக்கியலட்சுமி, ஒரு மனதாக அட்சயாவை ஏற்றுக்கொண்டு அன்றே அவள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டார்.

“உங்க அம்மாவுக்கு பேரன், பேத்தி வர போறதால தான் என்னை ஏத்துகிட்டாங்க..” என அதற்கும் குருவிடம் குறை படித்தாள் அட்சயா.

அதன் பிறகு இருவாரம் போல் பரிமளம் வந்து தங்கிவிட்டுச் சென்றிருந்தார். ஓயாமல் சபாபதியையும், பூர்ணிமாவை பற்றியும் தான் அட்சயாவிடம் பேசினார்.

கர்ப்பத்தை உறுதி செய்தவுடனே அலுவலகத்தில் வேலையை விட போவதாக சொல்லிவிட்டாள் அட்சயா. “இன்னும் மூன்று மாதம் முடிந்தவுடன் தான் ரிலீவ் பண்ண முடியும்.” என சொல்லிவிட அவளும் ஒப்புக்கொண்டாள்.

அவளுடனே குருவும் வேலையை விடப்போவதா சொல்லியிருந்தாலும், அவனை போன்ற தலைமை பதவியில் இருப்பவனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிட அவர்களுக்கு மனதில்லை. எனவே, உங்களின் இடத்தில யாரையாவது அமர்த்திவிட்டு செல்லுங்கள் என கூறிவிட்டனர்.

அன்று காலையில் இருந்தே குருவை முறைத்தப்படி தான் சுற்றி கொண்டிருந்தாள் அட்சயா. குளித்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவன், “இப்படி முறைக்காத டி. அப்புறம் என்னோட பொண்ணு சிரிச்ச முகமா இல்லாம உன்னை மாதிரியே உர்ருனு இருக்க போறா..” என கண்ணாடி முன்னின்று தலைவாரி கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தான்.

நேற்றிரவு தான் சபாபதியையும், பூர்ணிமாவையும் பற்றி முழுதாக அவனிடம் சொல்லியிருந்தாள், அட்சயா. ‘குருபிரசாத் அதில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை.’ என தெரிந்தவுடன் அவனை முறைத்துக் கொண்டே சுற்றுகிறாள்.

“இதை நீ முன்னாடியே என்கிட்டே சொல்லியிருக்கலாம்.”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?” என ஆவலாக அட்சயா கேட்க,

“உன் அண்ணா விஷயத்துல நான் சொல்ல என்ன இருக்கு அச்சு? அது அவங்களே முடிவு பண்ணனும்.” என அப்பொழுதும் பட்டுக் கொள்ளாமல் பேசினான்.

“ஆம்பளைங்க இப்படி தான் இருப்பீங்க போல. ரெண்டு பேரும் எவ்ளோ லவ் பண்ணாங்க தெரியுமா? அவகிட்ட பேசாம இருந்து இப்ப தான் கல்யாணத்துக்கு சரினு சொல்லிருக்கான். ஆனா அவங்க வீட்ல எப்படி போய் பேசனு அப்பா யோசிச்சிட்டு இருக்காங்க.”

சபாபதியின் திருமணத்தை கோபிநாத்திடம் பேசுவதை போல் குருபிரசாத்திடம் ஆவுடையப்பனால் பேச முடியவில்லை. அதனை பற்றி அட்சயாவிடம் சொல்ல்லியிருக்க, அவளே அவனிடம் பேசியிருந்தாள்.

“உனக்கு நடந்த அநியாயத்துக்கு உன்னோட அண்ணனால அந்த நாய்க்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியலனு வருத்தம் நிறையவே இருக்கும். சபான்னு இல்லை, எல்லா ஆம்பளைங்களுக்கும் நம்ம வீட்டு பொண்ணுகிட்ட வம்பு பண்ணவனை ஒண்ணுமே பண்ணமுடியாத சூழ்நிலை வரப்ப எவ்ளோ கோபம், ஆத்திரம் இருக்கும். எங்க அது மொத்தத்தையும் அவகிட்ட காட்டிடுவோமோனு தள்ளி இருந்திருப்பாங்க.” என விளக்கினான்.

“ஆனா ங்க..” என மீண்டும் ஆரம்பித்தவளின் கையை பிடித்தவன்,

“அது மட்டுமில்லை அச்சு. எங்க மறுபடி அவங்க கூட உறவை கொண்டாடுற சூழ்நிலை வருமோ? அதனால நீ வருத்தப்படுவியோனு கூட உங்க அண்ணா நினைக்க வாய்ப்பிருக்கு.” என்றான் சபாபதியின் மனதை படித்தவன் போல்.

அட்சயாவுக்கும் அந்த எண்ணம் தான். மீண்டும் அவள் அத்தை சுடர்கொடியை சந்திக்கும் பக்குவம் அவளுக்கு நிச்சமாக இல்லை. ரோஷனின் பெயரை கேட்க கூட விரும்பவில்லை. அதுவும் கரு சுமந்து கொண்டிருக்கும் பொழுது அதை பற்றி யோசிக்கவே அவளால் முடியவில்லை.

“இப்ப என்ன தான்ங்க பண்ணுறது..”

“என்னென்னமோ பண்ணலாம். ஆனா உன்னோட கண்டிஷனுக்கு இப்ப ஒத்துக்குமா?” என சிரிப்புடன் கேட்க.

அவன் சொல்வது புரிய, “நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா..” என அவனை கிளப்பிக் கொண்டு அலுவலகம் சென்றாள்.

அட்சயாவிடம் அவ்வளவு தர்க்கம் செய்தாலும்,
ஆவுடையப்பனுக்கு அழைத்த குருபிரசாத், “நீங்க சபாவோட கல்யாணத்தை முடிவு பண்ணுங்க மாமா. எங்களை பத்தி யோசிச்சு எதுவும் செய்யாம இருக்காதீங்க. யார்கிட்டயாவது பேசணும்னா சொல்லுங்க நான் வரேன்.” என நம்பிக்கையாக சொல்லிவிட்டு தான் வைத்தான்.

முதலில் பெரியவர்களை கூட்டிக்கொண்டு ஆவுடையப்பன் பொதுவான இடத்தில ராசய்யா(பூர்ணிமாவின் தந்தை)விடம் பேசினார்.

“என் பையன் அவ்வளவு வேலை பார்த்தும் நீங்க வந்து பொண்ணு கேட்குறதே பெருசு தான். இதுக்கு நான் மறுப்பு சொல்லவே மாட்டேன். வீட்ல வந்து பேசுங்க.” என நம்பிக்கையாக சொல்லியிருந்தார்.

அதன் படி அந்த ஞாயிற்று கிழமை பொதுவாக பேச கூடியவர்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஆவுடையப்பன் சென்றிருந்தார். பெண்கள் சார்பாக பரிமளம், மற்றும் அவரின் உறவினர்கள் சென்றிருந்தார்கள். கங்காவையும், அட்சயாவையும் வீட்டிலே விட்டுவிட்டு சென்றிருந்தார்கள்.

யாரென்று சொல்லாமலே பெண் பார்க்க வருகிறார்கள் என சொல்லியிருந்தார் ராசய்யா. அதன்படி மகளை கிளப்பி அமர வைத்திருந்தார், சுடர்கொடி.

அனால், உள்ளே வந்தவர்களை பார்த்து கொதித்துப்போன சுடர்கொடி, “நீ எதுக்கு இங்க வந்த?” என அவுடையப்பனை பார்த்து கத்த துவங்கினார்.

“நான் தான் வர சொன்னேன். சபாவுக்கு தான் என்னோட பொண்ணை கொடுக்க போறேன்.” என ராசய்யா சொன்னார்.

“இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்கவே மாட்டேன். உனக்கு என்னோட பொண்ணு கேட்குதா டா? மரியாதையா இங்க இருந்து வெளிய போங்க.”

“உங்க பொண்ணு மேஜர். சோ உங்க சம்மதம் தேவையே இல்லை.” என சபாபதி சொல்ல,

“நீ உன்னோட தங்கச்சிய எனக்கு கட்டிகொடுத்தியா டா. நான் உனக்கு என்னோட தங்கச்சிய கட்டிக்கொடுக்க..” என வரம்பில்லாமல் ரோஷன் பேசினான்.

“லூசா நீ. அவளுக்கு கல்யாணம் முடிஞ்சி இப்ப வேற ஒருத்தரோட மனைவி. அவளை பத்தி பேசுற?” என பூர்ணிமா சொல்ல,

“உன்னை சொல்லணும் டி. இவன் பெரிய இவன்னு இவனுக்காக நீயும் அலங்கரிச்சு நிற்குறியா?” என அவன் மேலும் பேசும் முன்,

“அவளை பத்தி நீ பேச கூடாது. உன்னைய விட எம் பொண்ணு தங்கம் தான்.” என ரோஷனை அடக்கினார் ராசய்யா.

“பெரிய நகை கடை வெச்சிருக்காங்கனு சொத்துக்காக தான இங்க வந்திருக்கீங்க?” என சுடர்கொடி நக்கலாக சொல்ல,

“உங்க சொத்தும் வேணாம். சொந்தமும் வேணாம்னு தான் நாங்க விலகி இருந்தோம்.”

“இப்பவும் அப்டியே இருக்க வேண்டியது தான. உன் தங்கச்சி கல்யாணம் வரைக்கும் இவளை கண்டுகொள்ளவே இல்லை. இப்ப எந்த இதுக்கு நீ இங்க வந்திருக்க.” என ரோஷன் சொன்னான். ஆக தங்களை அவன் கவனித்திருக்கிறான் என சபாபதிக்கு புரிந்தது.

“அது எங்க ரெண்டு பேருக்குள்ளானது. நீ பேசாத..” என ரோஷனை எச்சரித்த சபாபதி,

“முடிவை நீங்க சொல்லுங்க மாமா. கோவில்ல கல்யாணத்தை முடிச்சிக்கலாம். எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு மாமா. கல்யாணம் அப்புறம் எந்த ஒரு விஷேஷத்துக்கும் உங்க மனைவியும், பையனும் வர கூடாது. கல்யாணத்துக்கு அப்புறம் பூர்ணிமாவை இங்க அனுப்பவே மாட்டேன். மத்தபடி நீங்க கட்டின புடவையோட பூர்ணியை அனுப்பினா கூட நான் கூட்டிட்டு போறேன்.” என நிமிர்ந்து நின்றான் சபாபதி.

“உனக்கு பொண்ணே இல்லைனு சொல்லுறேன். கல்யாணத்தை பத்தி பேசுறியா? இங்க பாரு டி. இவனை கட்டிக்கலாம்னு கனவு கூட காணாத..” என்ற சுடர்கொடி பூர்ணிமாவின் கையை அழுத்தமாக பிடித்தார்.

அதில் வலித்தாலும் முகத்தில் காட்டாமல், “போதும் நிறுத்து ம்மா. உன்னோட பையன் கேடுகெட்ட வேலை பார்த்தாலும் அவனுக்கு சாதகமா தான பண்ண? இப்ப நான் வீட்ல பேசி கல்யாணம் பண்ணாலும் எதுக்கு இப்படி பண்ணுற?” என்றாள் வலி நிறைந்த குரலில்.

ஆனால் ராசய்யா சுடர்கொடியை கண்டுகொள்ளவே இல்லை. அவரும் ஒரு வருடமாக பூர்ணிமாவிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோஷனால் எதுவும் அமையவில்லை. என்ன! அனைத்திற்கும் முன் மகளின் மனதை கேட்காமல் விட்டுவிட்டார்.

“இன்னும் ரெண்டு நாள்ல ஆடி மாசம் வருது. அதுனால நாம பேசுனபடி அதுக்கு அடுத்த மாசத்துலயே கல்யாணத்தை வைக்கலாம்.” என சபையில் இருந்த பெரியவர் சொன்னார்.

அப்பொழுது எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்த தாயையும் தனயனையும் பார்த்த பூர்ணிமாவிற்கு கலக்கமாக இருந்தது. ‘இன்னும் ஒரு மாசத்துக்கு இங்க எப்படி இருக்க?’ என பயந்தாள்.

“அதுவரைக்கும் என்னால இங்க இருக்க முடியாது. இவங்க ரெண்டு பேரையும் நான் நம்ப மாட்டேன்.” என குரல் நடுங்க சபையிலே சொல்லிவிட்டாள் பூர்ணிமா.

“பாத்தியா டி. என் பொண்ணை என்ன பண்ணி வெச்சிருக்கீங்க. ஒரு மாசத்துல கல்யாணம். ஆனா என்னோட வீட்லயே எனக்கு பாதுகாப்பு இல்லைனு சொல்லுறா..” என ராசய்யா தலையில் அடித்துக் கொண்டார்.

“பொண்ணே சொல்லிடுச்சு. கல்யாணம் முடியுற வரைக்கும் வேற யார் வீட்டுக்காவது அனுப்பி வைங்க.” என்றனர் பஞ்சாயத்திற்கு வந்திருந்தவர்கள்.

“எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என சபாபதி முன்னே வர,

“யாருப்பா நீ. பரிசம் போட்டுட்டா கல்யாண பொண்ணும் மாப்பிள்ளையும் ஒரே வீட்ல இருக்க கூடாது. கல்யாண நெருக்கத்துலன்னா கூட பரவால. ஆனா ஒரு மாசத்துக்கு மேலலாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்ல இருக்க கூடாது.” என கண்டிப்புடன் சொல்லிவிட்டார் ஒரு முதியவர்.

‘சொந்த வீட்டை தவிர பெண்களுக்கு பாதுகாப்பானது என்ன இருக்க முடியும்? அனால் அதுவே இங்கு பூர்ணிமாவிற்கு கேள்வி குறியாக தான் இருந்தது.

உறவினர் அனைவரும் ரோஷனை பகைத்து கொண்டு சொந்த செலவில் சூனியம் வைக்க விரும்பவில்லை.

வந்ததில் இருந்து மற்றவர்களை பார்க்காமல் பூர்ணிமாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் குரு. கோபிநாத் வாயை திறக்கும் முன்னே, அவளின் சஞ்சலம் அவனுக்கு புரிந்தது. “எங்க வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன்.” என குருபிரசாத் முன்னே வந்தான்.

“அது சரிப்பட்டு வராது ப்பா.” என சுற்றியிருந்தவர் சொல்ல,

“ஏன் சரிப்பட்டு வராது? அவளுக்கு நான் அண்ணன் முறை தான். பூர்ணிமாவே என்னை அண்ணான்னு கூப்பிட்டிருக்கா. அதுனால எங்க கூடவே கூட்டிட்டு போறேன். எங்க வீட்டுக்கு வர உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே மா?” என்ற குரு பூர்ணிமாவை பார்த்தான்.

“இல்லை ண்ணா.” என சொல்லி சிரித்தாள் பூர்ணிமா.

“இந்த வீட்ல இருந்து எதுவும் எடுக்க வேண்டாம்.” என சபாபதி சொல்லிவிட அப்படியே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.

‘தனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை.’ என பூர்ணிமா சொல்லியதிலே ஆணியடித்தது போல் நின்றுவிட்டார் சுடர்கொடி.

“நீங்க இங்க இருக்க கல்யாண வேலையை பாருங்க மாமா. நான் அவளை எங்களோட கூட்டிட்டு போறேன்.” என அட்சயவையும் பூர்ணிமாவையும் கூட்டிக்கொண்டு சென்னை சென்றுவிட்டான் குருபிரசாத்.

விஷயம் அறிந்த பாக்கியம் கூட, “அந்த குடும்பத்தோட நிழல் கூட படாம அந்த பொண்ணை பார்த்துக்கோ குரு.” என சொல்லியிருந்தார்.

குருபிரசாத் இப்படி ஒரு முடிவெடுப்பான் என அட்சயாவே எதிர்பார்க்கவில்லை. “எப்படிங்க? எனக்காகவா?”

“ஏதே உனக்காகவா? நம்மளால ஒரு லவ்வர்ஸ் பிரிய வேணாம்னு தான். அந்த பொண்ணு அவங்க வீட்ல பிறந்ததை தவிர வேற என்ன அச்சு பண்ணா. அன்னைக்கு உனக்கு உன்னோட குடும்பமே நின்னுச்சு. ஆனா இன்னைக்கு அந்த பொண்ணு அவளோட குடும்பத்தையே எதிர்த்து நின்னா பாரு. நல்லா இருப்பா. உங்க அண்ணா அவளை நல்லா பார்த்துக்கிட்டாலே போதும்.” என மனதார சொல்லியிருந்தான்.

தயக்கமாக அட்சயாவின் வீட்டிற்கு வந்த பூர்ணிமாவை அட்சயாவும் குருவும் தான் இயல்பாக்கினார்கள். கூடவே அபிலாஷும் ஜெசிந்தாவும் சேர்ந்துக்கொள்ள, அவ்வளவு நாட்கள் அட்சயாவை தவிர தனக்கு யாருமில்லை என எண்ணியவளிற்கு அவர்களின் பேச்சுகளும் கிண்டல்களும் இதமாக இருந்தது.

சபாபதி மட்டும் அவளிடம் வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசினான். ‘நாம தான் அவரை கல்யாணத்துக்கு நெருக்கினோமோ?’ என யோசிக்கவும் செய்துவிட்டாள் பூர்ணிமா.

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் அட்சயாவுடன் சேலத்திற்கு வந்திருந்தாள் பூர்ணிமா.

சுபயோக சுபதினத்தில் சபாவின் கையாலே மாங்கல்யம் வாங்கிக் கொண்டாள் பூர்ணிமா. ராசய்யாவும் சில சொந்தங்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

சுடர்கொடியும், ரோஷனும் வராமலே இருக்க, மனதில் வலித்தாலும் சபாபதியின் அண்மையில் அத்தனையும் கடந்துவிட்டாள் பூர்ணிமா.
 
Top Bottom