• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 19 (Final)

STN - 92

Member
Staff member
மனம் - 19 (Final)

அன்று கோவிலில் வைத்து பூர்ணிமாவிடம், “உங்க வீட்டை விட்டுட்டு நீ வருவியா பூர்ணி?” என்று கேட்டிருந்தான் சபாபதி.

நெடுநாட்கள் கழித்து அவனை அருகில் பார்க்கிறாள். ஆனால் எனோ அவனை பார்க்கும் பொழுது எழும் பரவசம் எல்லாம் அவளுக்கு வரவே இல்லை. “வீட்டை விட்டு வரணும்னா எனக்கு புரியல சபா..” என திருத்திருத்தவளின் கையை பிடித்தவன்,

“உங்க வீடு, அம்மா, அண்ணா எல்லாம். எல்லாத்தையுமே விட்டுட்டு வருவியா பூர்ணி.” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“ஒன்னு நான். இல்ல அவங்க. முடிவு உன் கைல தான் பூர்ணி. என்னால இதுக்கு மேல உன்கிட்ட எப்படி கேட்கனு தெரியல.. நான் கேட்குறது தப்புனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் எனக்கு வேற வழி இல்லை.”,

“காலம் பூரா உங்க வீட்டாலுங்களையும் அச்சுவையும் ஒரே இடத்துல வெச்சி அச்சுவுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்க நான் விரும்பல பூர்ணி. அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்னை தவிர்த்துக்கிட்டே வந்தேன். இப்ப நீயே உன்னோட முடிவை எடு. உனக்கு சரின்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.” என சொல்லியிருந்தான். அதை தவிர அவளின் மற்ற கேள்விகளுக்கு அவனிடம் பதிலும் இல்லை. அவனிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனதினை அடக்க தெரியாமல் அவனுக்கான பதிலை சொல்லாமலே வந்துவிட்டாள்.

குறிப்பிட்ட நாட்களுக்கு பின், சபாபதி எதிர்பார்த்த முடிவை துணிவாக எடுத்துவிட்டாள் பூர்ணிமா. அதன் பொருட்டே அன்று குரு கூப்பிட்டதும் வீட்டை விட்டு அட்சயாவின் வீட்டிற்கு சென்றது.

காதலை கூட வார்த்தைகளில் பரிமாறிக்கொள்ள வில்லையென்றாலும், அதுனால் வரை இருவரின் மனதாலே உணர்ந்த காதலே சபாபதியையும், பூர்ணிமாவையும் திருமண பந்தத்தில் இணைத்து வைத்தது.

சபாபதி - பூர்ணிமாவின் திருமணம் முடிந்து ஒரு மாதமே கடந்திருந்தது. அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக பேச்சு வார்த்தை என்பதே இல்லை.

‘இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணாங்களா?’ என்ற சந்தேகம் அவர்களை பார்ப்போருக்கு நிச்சயம் வந்துவிடும். அப்படியிருந்தது அவர்களின் நெருக்கம்.

குருபிரசாத் கூட, “ரெண்டு பேரும் டீப்பா லவ் பண்ணாங்கனு சொல்லிட்டு இருந்த அச்சு? இப்ப என்னடானா ஏதோ பழிவாங்க கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த மாதிரி உன்னோட அண்ணா பண்ணிட்டு இருக்கான்.” என அட்சயாவுடன் கேட்டுவிட்டு மொத்து வாங்கியிருக்கான்.

“அவன் ஏதாவது கோபமா இருந்தா நீ தான் அவனை சரிகட்டணும் பூர்ணி. நீயும் மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு இருந்தா வாழ்க்கை என்னாகும்?” என்ற பரிமளத்தின் தொடர் நச்சரிப்பால் அன்றிரவு சபாபதி வரும்வரை உறங்காமல் விழித்தே இருந்தாள், பூர்ணிமா.

‘அவள் தூங்கிவிட வேண்டும்.’ என்று தான் சபாபதி இரவில் தாமதமாக வருவதே. ஆனாலும் அன்று உறங்காமல் விழித்திருந்தவளை பார்த்து அதிர்ந்தான். மெளனமாக உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று வந்தவன், விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்துவிட்டான்.

“நான் பேசணும்.”

“உங்க கிட்ட தான் சபா. நான் பேசணும்.” என்றவள் குரலின் பேதத்தை புரிந்தவன் எழுந்து அமர்ந்தான்.

“நான் கேட்டேன்னு எதுக்கு இந்த கல்யாணம்? உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா சொல்லியிருக்கலாமே..” என தொடங்கும் பொழுதே,

“ப்ச் பேசாம தூங்கு டி.” என படுக்க போனவனின் கையை பிடித்தவள்,

“இன்னைக்கு எனக்கு உண்மை..” என்றவளின் வார்த்தைகள் அப்படியே சபாபதியின் இதழை சேர்ந்தடைந்தது.

“விடுங்க.. என்னை விடுங்க..” என அவனை தள்ள முயன்றவளின் முயற்சி தோல்வியை தழுவிட, “விடு டா..” என மொத்தமாக அவனை தள்ளிவிட்டு முறைத்து கொண்டிருந்தாள்.

அவனை முறைத்தபடி மூச்சு வாங்கியவளின் நெஞ்சுக்கூடு ஏறியிறங்கி சபாபதியை நிலையிழக்க வைத்தது. “ஏய் படுக்க போனவனை நீ தான பேசணும்னு எழுப்பிவிட்ட..”

“நான் பேசதான் எழுப்பினேன்.”

“நானும் பேசத்தான் செஞ்சேன் பூர்ணி.” என சிரித்தவன் பூர்ணிமாவின் சலனமில்லா பார்வையில் தலையை கோதி தன்னை சமன் படுத்தினான்.

“நானா உங்க கிட்ட வந்து கல்யாணத்தை பத்தி பேசுனதால என்னை ரொம்ப கீழா நினைக்குறீங்களா சபா.” என்றவள் கண்ணீரை சிந்தி விடாமலிருக்க மிகவும் சிரமப்பட்டாள்.

“அடிச்சேன்னா தெரியும்.” என்றவன் முயன்று கோபத்தை கட்டுப்படுத்தி, “அப்டிலாம் இல்ல பூர்ணி. உன்ன போய் அப்படி நான் நினைப்பேனா? சொல்ல போனா நான் தான உன்னோட மனசுல காதலை பதினெட்டு வயசுலயே விதைச்சேன்.” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட, அவனின் கைகளை தட்டிவிட்டாள் பூர்ணிமா.

“அப்புறம் எதுக்கு என்னை தவிர்க்குறீங்க சபா.”

“ஒரு மகனா, அண்ணனா சரியா இருந்த நான் ஒரு காதலனா சரியா இல்ல பூர்ணி. அது எனக்கே புரியுது. என்னோட குடும்பத்துக்காக உன்னை மொத்தமா ஒதுக்கி வெச்சிட்டேன். இப்ப உன்னையும் உன்னோட குடும்பத்துகிட்ட இருந்து மொத்தமா பிரிச்சிட்டேன். அந்த குற்றவுணர்வு தான் உன்கிட்ட என்னை நெருங்கவே விடாம தடுக்குது. சத்தியமா சொல்லுறேன் நீயே ஃபோன் பண்ணி கல்யாணத்தை பத்தி பேசாம இருந்திருந்தா நம்ம கல்யாணம் நடந்திருக்காது. உன்னை விட்டுட்டு வேற கல்யாணமும் நான் பண்ணியிருக்க மாட்டேன்.” என அவனின் மனதில் இருந்ததை சொல்லியே விட்டான்.

அவன் சொல்ல சொல்ல அழுகையில் கரைந்தவள், “அவ்ளோ தானா நான் உங்களுக்கு? என்னை பத்தி நீங்க கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லைல..”

“அச்சுக்கு அப்படி ஒன்னு நடத்தப்ப அவ்ளோ ஆத்திரம். அதை யாருமேல கட்டுறதுனு தெரியாம உன்மேல காட்டிடுவேனோனு தான் உன்கிட்ட பேசாம இருந்தேன் பூர்ணி. அச்சுவுக்கு டிவோர்ஸ் ஆனதுக்கு அப்புறம். அவ வாழ்க்கையை சரி செய்யணுன்னு மட்டும் தான் நான் யோசிச்சேன். அந்த நேரம் நான் வேற எதையும் யோசிக்கவே விரும்பல பூர்ணி.” என தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

“அச்சு உன்னை கோவில்ல பார்க்க வரப்ப அவளை நான் தான் கூட்டிட்டு வருவேன். உன்கிட்ட பேச தான் முடியல உன்னோட முகத்தையாவது பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா என்னை மீறி உங்கண்ணா மேல இருக்க கோபம் உன்கிட்ட வெளிப்பட்டுடும். அந்த நேரம் எனக்கு என்னையே பிடிக்காது. அதான் என்னோட கோபம் உன்னை நிச்சயமா பாதிக்கும்னு நானே விலகிட்டேன்.” என்றவனின் இதழ்களில் கசந்த புன்னகை வந்தது.

“அச்சுவுக்கு கல்யாணம் முடிஞ்சதுமாவது என்கிட்டே நீங்க பேசியிருக்கலாம். நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியல சபா. உங்க மனசுல நான் உங்களை புரிஞ்சிக்கவே மாட்டேன்னு தான என்னை பத்தி நினைச்சிருக்கீங்க.” என்றவள் ஆற்றாமையில் கேட்டாள்.

“நான் தான் சொன்னனே பூர்ணி. நான் ஒரு காதலனா தோத்து போய்ட்டேன்னு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும் உன்கிட்ட திரும்பி வர என்னோட ஈகோ தடுத்தது.”,

“ஆனா சாத்தியமா உன்கிட்ட பேசாம இருக்குறது ரொம்ப கொடுமை பூர்ணி. உன்மேல அவ்ளோ ஆசையிருந்தும் உன்னையும் விலக்கி வெச்சி நானும் விலகி இருக்குறது எல்லாம் கொடுமை. நான் எதையும் தெரியாம செய்யல பூர்ணி. எல்லாமே தெரிஞ்சி தான் செஞ்சேன். தெரிஞ்சே உன்னையும் கஷ்டப்படுத்தியிருக்கேன். அதுல இருந்து தான் இப்ப வெளிய வர முடியாம தவிக்குறேன் பூர்ணி. என்னை உனக்கு புரியுது தான..” என அவளின் கையை பிடித்து மன்னிப்பாய் கேட்டான்.

எவ்வளவு சாதாரண சொல்லிவிட்டான். முழுதாக ஐந்து வருடங்கள் கடந்திருந்தது. நானே வந்து கேட்டதும் தான் திருமணமும் நடந்திருக்கிறது. இப்ப வந்து புரியுதான்னு கேட்குறாரே என கோபம் வர அவனின் கன்னத்தில் அடித்தே விட்டாள்,

“அடிப்பாவி. அடிக்குற..” என கேட்டாலும் அவளிடம் அடியை வாங்கிக் கொண்டான் சபாபதி.

“இப்ப கூட நான் தான் கல்யாணத்துக்கு உன்கிட்ட பேசினேன். ஒருவேளை வேற யாருக்காவது என்னைய கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா நீ என்ன பண்ணிருப்ப? அப்படியே போன்னு விட்டிருப்ப தான? இவர் பெரிய தியாகி குடும்பத்துக்காக விலகி போனாராம்.” என மரியாதையை எல்லாம் விட்டவள் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு கேட்டே அவனை அடித்தாள். அத்தனை நாட்கள் அவளின் மனதில் இருந்த வலிகள்யாவும் வார்த்தைகளாகவும் அடிகளாகவும் சபாபதியை சென்றடைய அத்தனையையும் பொறுமையாக வாங்கிக் கொண்டான்.

அடித்து ஓய்ந்தவள் அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள். கீழே சென்று அவளுக்கு சூடாக பால் கொண்டுவந்தான். அவனை முறைத்துக்கொண்டே அதை குடித்தவள் இருவருக்கும் இடையே தலையனையால் சுவரை எழுப்பிவிட்டே உறங்கினாள் .

மறுநாள் சபாபதியின் கையிலும் முகத்திலும் இருந்த நக கீறல்களை கண்ட பரிமளம் சிரிப்புடன் நகர, ‘இவங்க வேற.. அவ கோவை சரளாவுக்கே டஃப் கொடுப்பா..’ என முனகியவனை பார்த்த பூர்ணிமாவிற்கு சிரிப்பாக வந்தாலும் அறைக்குள் அவனை முறைத்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் வெளியே மற்றவரின் கண்களுக்கு அது தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களின் உறவு நிலையில் உடனே மாற்றம் வந்து விடவில்லை. ஆனால் பூர்ணிமாவின் மனதின் காயத்தை ஆற்றும் வல்லமை தன்னிடம் மட்டுமே உள்ளது என சபாபதிக்கு புரிந்தது. ஆகையால் நடந்து முடிந்ததில் யார் சரி, யார் தப்பு என அதற்கு மேல் ஆராயாமல் அவர்களின் வாழ்க்கையை நேர் செய்யும் முயற்சியை தொடங்கினான் சபாபதி.

அட்சயாவிற்கு ஐந்து மாதம் முடிந்திருந்தது. அட்சயா மொத்தமாக வேலையை விட்டுவிட்டாள். கடைசி நாள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது அட்சயாவின் கண்களே கலங்கிவிட்டது.

வேலை என்பது நிச்சயம் அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும். ஆனால் இங்கோ, அட்சயாவின் வாழ்க்கையையே அவளுக்கு திருப்பி கொடுத்தது போல் இருந்தது. அலுவலக வளாகம், லிஃப்ட், கேன்டீன் என ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு எப்பொழுதும் கைகளிலே சுற்றி கொண்டிருக்கும் ஐடி கார்டையும் அவர்களிடம் கொடுத்துவிட்டே வெளியே வந்தாள்.

ஆனால், குருவிற்கு சீக்கிரமாக ரிலீவ் லெட்டர் கொடுக்காமல் மனோஜ் இழுத்தடித்தான். அவனின் மேல் ஒரு கம்பளைண்ட் கொடுத்து விட்டே ஓய்ந்தான் குருபிரசாத். தொடர்ந்து கம்பளைண்ட் வருவதால் அந்த மனோஜை வேறொரு ப்ராஜக்டிற்கும் மாற்றி விட்டனர்.

குருவும் வெளியேறுவதால், மனோஜின் பதவி தானாகவே அபிலாஷிற்கு வந்துவிட்டது. கடந்த மாதம் தான் அபிலாஷிற்கும் பையன் பிறந்திருக்க, இரட்டிப்பு சந்தோசம் அவனுக்கு. ஒருவாரம் கழித்து குருவின் இடத்திற்கு வேறொருவர் வந்துவிட்டதால் குருவும் அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிட்டான்.

ஊருக்கு வருவதை பற்றி பாக்கியத்திடம் பேசிக் கொண்டிருந்தான் குருபிரசாத். ஸ்பீக்கரில் இருந்ததால் அட்சயாவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.

“எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இந்த பிளாட்டை வாடகைக்கு விட்டுடுவோமா மா.?” என்றவனிடம்,

“அதெல்லாம் வேணாம் குரு. அட்சயா மாசமா இருக்கா. இந்த நேரம் வீடை காலி பண்ண கூடாது.” என மறுத்துவிட்டார் பாக்கியம்.

“இதுல என்னம்மா இருக்கு? ” என மறுத்து பேசவந்தவனை இடையிட்டவர்,

“இருக்கு டா. அந்த வீட்டுல நீங்க மட்டும் இல்லை. சின்ன சின்ன பூச்சிங்க கூட இருக்கும். நீங்க காலி பண்ணுறேன்னு அது எல்லாத்தையும் கலைச்சு விட்டுடுவீங்க. அதனால வீடு அப்படியே இருக்கட்டும். அபிக்கிட்ட சொல்லி அதை பார்த்துக்க சொல்லிட்டு வா.” என்று சொல்லிவிட்டார் பாக்கியம்.

அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த குணசீலன், “நீ எப்படி இவ்ளோ சீக்கிரம் மாறுனேனு எனக்கு புரியவே இல்லை பாக்கியம்.”

“ஹ்ம்ம். நான் மாறினா தான் உங்க புள்ளை இங்க வருவேன்னு சொல்லிட்டான். என்ன வேற என்ன பண்ண சொல்லுறீங்க? நாளைக்கு பேரனோ பேத்தியோ வந்ததுக்கு அப்புறமும் கோபத்தை இழுத்து பிடிக்க முடியுமா?” என கேட்டுவிட்டு நகர்ந்தார்.

ஐந்தாம் மாதம் முடியும் முன்னே விருதுநகர் வந்துவிட்டனர் அட்சயாவும் குருபிரசாத்தும். “ஏழாம் மாதம் வளைகாப்பு வைக்கலாம்.” என பாக்கியம் சொல்வதை மறுத்துவிட்டான் குருப்ரசாத்.

“அவ என்கூட இருக்கட்டும் ம்மா. ஒன்பதாம் மாசம் பார்த்துக்கலாம்.” என்றிட பாக்கியத்தால் அவனை மறுத்து பேச முடியவில்லை.

இப்பொழுது அவர்களின் தொழிலை குருபிரசாத் தான் பார்க்கின்றான். சிறுவயதில் இருந்தே அவன் பார்த்தது தான் என்றாலும். இப்பொழுது முழுதாக அனைத்து பொறுப்பும் அவனின் கையிலே வந்துவிட்டது.

சென்னையில் இருப்பது போல், டக்கின் செய்த சட்டையும் பேண்ட்டும் இல்லாமல் சில சமயம் வேட்டியில் கூட செல்பவனை கண்ணாலே சிறையெடுப்பாள் அட்சயா.

அவளையும் சும்மா இருக்க விடாமல் அவர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அவளுக்கு பார்க்க சொல்லி கொடுத்திருந்தான்.

குரு, சொன்னபடி ஒன்பதாம் மாதத்தில் தான் அட்சயாவிற்கு வளைகாப்பு நடத்தினார்கள். வளைகாப்பை காலையிலே வைத்துவிட முன்மாலையில் அவளை அழைத்துக்கொண்டு சேலத்திற்கு வந்துவிட்டார்கள்.

அட்சயா இங்கே வந்ததும் பூர்ணிமாவின் பொழுதுகள் அனைத்தும் அவளிடம் மட்டுமே இருந்தது.

தனிமையில், “என்ன இருந்தாலும் உனக்கு என்னை விட என்னோட தங்கச்சியை தான பிடிக்குது?” என சபா குறைபட்டுக்கொள்ள,

“நடந்த பிரச்சனைல அட்சயாவை விட யாருக்குமே காயம் அதிகம் இல்லை சபா. ஆனாலும் அவ என்னை விட்டுடாம இருந்தா. நான் இப்ப என்னவா இருந்தாலும் அதுல அவளோட பங்கு தான் அதிகம். அதுனால அவகிட்ட நீங்க போட்டி போடாதீங்க..” என்றவளை பார்த்தவனுக்கு தன் தவறின் வீரியம் முழுதாக புரிந்தது.

ஆனால், அதற்காக வருந்தாமல் இன்னுமின்னும் பூர்ணிமாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அவனின் மனதில் வலுத்தது.

“அட்சயா உன்னை நட்பா பார்த்தா பூர்ணி. அதுனால உன்கிட்ட அவளால பேச முடிஞ்சிது. நானும் உன்னை நட்பா பார்த்திருந்தா சகஜமா பழகிருப்பேனோ என்னவோ. நான் எனக்குள்ள உன்னை பார்த்ததாலே தான் நம்ம கல்யாணத்துல எல்லாருக்கும் சிக்கல் வரும். என்னால உனக்கும் கஷ்டம் வேணாம்னு விலகிட்டேன்..” என சொல்லிவிட்டு சென்றான்.

அட்சயாவை அழைத்து வந்து ஒருவாரம் சென்றிருக்க, வலி என அவளை மருத்துவமணையில் சேர்த்துவிட்டு குருவின் வீட்டிற்கு தகவலும் சொல்லியிருந்தார்கள்.

அவர்களும் வந்து அட்சயாவை பார்த்துவிட்டு வெளியே காத்திருந்தார்கள். சிறிது நேரத்திலே அவர்களின் புதல்வி இந்த பூமியில் அவதரித்தாள்.

பெண் குழந்தை என பாக்கியலட்சுமி எதுவும் சொல்ல போகிறாரோ என பரிமளம் அவரை சந்தேகமாக பார்த்தார். அவரின் அனுபவம் அப்படி. கோபிநாத்தின் வீட்டிலே இதை தானே செய்தார்கள்.

ஆனால், பாக்கியமோ, “முதல் குழந்தையா அந்த லட்சமியே வந்திருக்கா..” என அவரே வாங்கினார்.

“அச்சு..” என குரு விசாரிக்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல அறைக்கு மாத்திடுவாங்க.” என செவிலி சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சிறிய ரோஜா பூவை போல் இருந்த குழந்தை அவர்கள் அனைவரையும் பார்த்து பார்த்து அழுதது. பின் குழந்தையை அட்சயாவிடம் கொடுத்தனர்.

குழந்தையை விட்டு பிரியவே மனதில்லாமல் ஒருவாரம் அவர்களுடன் இருந்துவிட்டு தான் குருபிரசாத் ஊருக்கு திரும்பினான். ஆனாலும் வாரயிறுதியில் வந்து பார்த்துவிட்டு தான் செல்வான்.

ஒருமாதம் சென்றிருக்க குழந்தைக்கு பெயரிடும் வைபவம் நிகழ்ந்தது. “அப்சர லட்சுமி” என பெயர் வைத்தனர்.

தேவதை போல் அவர்களின் வாழ்வில் வந்ததால் அப்சரா என பெயர் வைக்க நினைத்தவர்கள் பின் லட்சுமியையும் சேர்த்து, அப்சர லட்சுமி என வைத்துவிட்டனர்.

குழந்தைக்கு மூன்று மாதம் இருக்கும் பொழுது தான் அட்சயாவை அழைத்து வந்திருந்தனர். “நீங்க இல்லாம வீடே வெறிச்சோடி இருக்கும் அச்சு.” என அப்சராவை கையில் வைத்திருந்த பூர்ணிமா சொல்ல,

“அதுக்கென்ன பண்ணுறது. நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ. சரியா போய்டும்.” என்றார் பரிமளம். அதில் அவளை பார்த்து சபாபதி சிரிக்க அவனை முறைத்துவிட்டு நகர்ந்தாள்.

சபாபதி, பூர்ணிமா இருவருக்குமே இன்றும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. ஆனாலும் பூர்ணிமாவின் மனது மாறும்வரை காத்திருந்தான்.

அன்று தீப்பெட்டி அலுவலகத்தில் மெழுகு குச்சிகளை தயாரிக்கும் இடத்திற்கு மேற்பார்வைக்கு சென்றிருந்தார் பாக்கியம். கவன குறைவால் அவரின் காலிலே சில மெழுகு துளிகள் பட்டுவிட்டது.

கொதிக்க கொதிக்க இருந்ததால் அவை கொப்புளங்களாக மாறிவிட்டது. அங்கே தான் குருபிரசாத் இருந்ததால் உடனே அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டான்.

காலிற்கு கட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். “கவனமா இருக்க கூடாத பாக்கியம்?” என அவரின் அம்மா சொன்னார்.

“ப்ச். பார்த்து தான் ம்மா இருந்தேன். எப்படியோ ஆகிடுச்சு.”

“சரி விடுங்க. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்டுச்சுன்னு நினைப்போம்.” என்று சொல்லியவர் அவருக்கு தேவையானதை எடுத்து கொடுத்தார். குழந்தையை உறங்க வைத்த அட்சயாவும் அவருக்கு உதவினாள்.

மறுநாளே, பாக்கியத்தை கவனிக்க நர்ஸை ஏற்பாடு செய்திருந்தான் குருபிரசாத். “நான் பார்க்க மாட்டேனா?” என்ற அட்சயாவிடம்,

“பாப்பாவை வெச்சிக்கிட்டு நீ எப்படி பரப்ப?” என்றவன், “அம்மாவே நர்ஸ் வேணும்னு கேட்டாங்க அச்சு. நீ ஒர்ரி பண்ணிக்காத” என அவளை தான் சமாதானப்படுத்தினான்.

அவன் அப்படி சொன்னாலும் அட்சயாவின் மனம் ஆறவில்லை. பாக்கியம் அவளை ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தாலும் சட்டென்று அவளிடம் பேசிவிட மாட்டார். சென்னையில் இருந்த பொழுது தெரியாதது இங்கே வந்த இரண்டு நாட்களிலே அவளுக்கு புரிந்துவிட்டது. இதற்கு மேல் சண்டையிட்டு அவளுடைய வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ள விரும்பாமல், அப்படியே அட்சயாவும் அவரை ஏற்றுக்கொண்டாள்.

அட்சயா வீட்டில் இருந்தும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். “பொறுப்பா இரு அச்சு.” என சொல்லிவிட்டே தான் பரிமளம் சென்றிருந்தார்.

அன்று வருவதற்கு தாமதமாகும் என நர்ஸ் ஏற்கனவே சொல்லியிருக்க பாக்கியத்தின் அறையை எட்டி பார்த்தாள் அட்சயா. அவரோ பாத்ரூம் செல்ல எழுந்துக் கொண்டிருந்தார். “குரல் கொடுத்திருந்தா நானே வந்திருப்பேனே அத்தை.” என்றவள் அவருக்கு உதவினாள்.

அவளிடம் கேட்க முடியாது என்பதால் தான் நர்ஸை வைத்தது என பாக்கியம் நினைத்துக் கொண்டார். “அப்புக்குட்டியை இங்க தூக்கிட்டு வா. காலைல இருந்து அவளை பார்க்கவே இல்லை.” என அவளிடம் சொல்ல,

“இப்ப தான் பாட்டி அவளை குளிப்பாட்டி தூங்க வெச்சிருக்காங்க அத்தை. எழுந்ததும் தூக்கிட்டு வரேன்.” என அவரின் அறையில் இருந்து வெளியேறினாள்.

*****

ஒருவழியாக பூர்ணிமாவை அவனின் வழிக்கு கொண்டுவந்துவிட்டான் சபாபதி. தூரத்தில் இருக்கும் பொழுது அவளை விலக்கி வைத்திருந்தவனால் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசாமல் கூட இருக்க முடியவில்லை.

ஆனாலும் அவளின் வலியை அவனுக்கு உணர்த்திவிட்டு தான் அவனுடன் இணைந்தாள் பூர்ணிமா.

அவளை தவிர்க்கவிட்ட தன் தவறை உணர்ந்த சபாபதி பூர்ணிமாவை பூரண நிலவாய் ஒளிர செய்து அவளுள் பூரணத்துவம் அடைந்தான்.
 
Top Bottom