காவிரியின் டெல்டா சமவெளிகள் முடிந்து, பிரம்மாண்டமான மலைக்காடுகள் தொடங்கும் அந்த நுழைவாயிலின் அருகில் சூரியனின் கடைசிச் சிவப்புக் கீற்றுகள் அந்தப் புல்வெளியின் எல்லையில் மெல்ல மடிந்து கொண்டிருந்தன.
மின்விளக்குகள் இல்லாத அந்தப் பழங்காலத்து உலகில், இந்த நேரமே பகலின் உழைப்பு முடிந்து, இரவின் பயங்கரங்கள் தொடங்கும் ஒரு எல்லையாகக் கருதப்பட்டது. எதிரே ஓங்கி படர்ந்திருந்த மலையில் மினுமினுக்கும் ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மரங்களின் இலைகளுக்கு நடுவே பச்சை நிற ஒளியைச் சிதறி, அந்த இருட்டை இன்னும் மர்மமாகக் காட்டின.
அங்கே, மலைக்காட்டின் நுழைவாயிலில், வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த விருந்தினர் சாவடியை நெருங்கிய மாறன், தன் குதிரையின் மேல் அமர்ந்தபடியே சுற்றியும் பார்வையை சுழலவிட்டான்.
காட்டின் அடர்த்தி இங்கிருந்தே தொடங்குவதால், இந்த அந்தகார இருளில் குதிரைகளை மலைப்பாதைக்குள் செலுத்துவது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்தான்.
சுவர்கள் ஏதுமின்றி, தடித்த கற் தூண்களும், காய்ந்த புற்கள் வேயப்பட்ட கூரையும் கொண்ட அந்தத் திறந்தநிலை மண்டபம், காற்றில் அசைந்தாடும் காட்டு மரங்களின் நிழல்களுக்கு நடுவே ஏகாந்தமாகக் காட்சியளித்தது.
"இன்றிரவு இந்த வழிப்போக்கர் சாவடியே நம் தங்குமிடம்! இருள் விலகும் முன் காரிருள் காட்டின் வழியே நம் குதிரைகள் பாய வேண்டும்!" என்று தன் குதிரையிலிருந்து கீழே குதித்தபடி கட்டளையிட்டான் அந்த இளம் படைத் தளபதி நெடுமாறன்.
மாறனின் கட்டளையை கேட்ட தித்தன், தன் கூர்மையான விழிகளால் அந்த இடத்தை ஆராய்ந்தபடி,
"மாறா ... இந்த இடத்தை விட காட்டிற்குள் சென்றுவிட்டால் சற்று பாதுகாப்பாக இருக்கும் ... இங்கே எதிரிகள் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ..." என்றவனை அலட்சியமாக பார்த்தவன்,
"எதிரிகளை கண்டு பயப்படுகிறாயா தித்தா ..." என்று கொக்களித்து சிரித்தவனை கண்டு பற்களை கோபத்தில் நறநற வென்று கடித்தவன்,
"பயமா ... எனக்காக ..." என்று சீறியவனின் கண்கள் கோபத்தில் கோவை பழம் போல சிவந்திருந்தது.
"இதுவரை கையில் வாள் ஏந்தாத நம் இளவலை நினைத்து தான் அச்சமாக இருக்கின்றது ... உறையூரில் கொண்டு சேர்க்கும் வரை என்னால் ஒரு நொடி கூட அமைதியாக இருக்க முடியாது..." என்று உக்கிரமாக உரைத்தவனிடம்,
"ம்ஹா ... தன்னை காத்துக் கொள்ள தெரியாதவன் எப்படி தன் மக்களை காப்பான் ... இதற்கு மேல் விவாதங்கள் வேண்டாம் ... இதுவே என் இறுதி முடிவு ..." என்று தீர்க்கமாக உரைத்தவன் குதிரையை தூணுனில் கட்டிவிட்டு அருகிலிருந்த நீரோடையை நோக்கி சென்றான்.
அவன் பதிலில் தித்தனின் இதழ்கள் ரகசிய புன்னகையில் துடிக்க, மெல்ல திரும்பி, குதிரையில் அமர்ந்தபடி தங்கள் உரையாடலை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவனை தான் பார்த்தான்.
கண்களில் எந்த வித உணர்வையும் காட்டாமல், முகம் ஒரு பாறைச் சிற்பத்தைப் போல எவ்வித சலனமுமின்றி அமைதியாக இருந்தது. தன்னைச் சுற்றி நடக்கும் அந்த மோதலும், தளபதியின் அலட்சியப் பேச்சும் அவனது அகத்தைத் தீண்டவில்லை. ஆர்ப்பரிக்கும் கடலின் அடியில் இருக்கும் பேரமைதியைப் போல, அவனது மௌனம் ஒரு மாபெரும் புயலுக்கான ஆயத்தமாக அந்த இருட்டில் உறைந்திருந்தது.
"இளவலை பத்திரமாக பாதுகாக்குங்கள் ... நான் அந்த நீரோடை வரை சென்றுவிட்டு வருகிறேன் ..." என்று கட்டளையிட்டு சென்ற தித்தனின் முதுகை சில நொடிகள் வெறித்து பார்த்த வளவன் மெல்ல தன் குதிரையிலிருந்து கீழே இறங்கினான்.
மூன்று நாட்களுக்கு முன்பு வரை, புகார் நகரக் கடற்கரையின் உப்புக்காற்றையும், அங்காடித் தெருக்களின் பரபரப்பையும் ரசித்துத் திரிந்த ஒரு சாதாரண வாலிபன். திடீரென்று அவன் முன்னால் தோன்றிய சோழ வீரர்கள், அரச கட்டளையை ஏற்று அவனை உறையூருக்கு அழைத்து செல்வதாக கூற, அவனால் மறுக்க முடியவில்லை. என்றைக்கு இருந்தாலும் அந்த அரியணை தன்னை தேடி வரும் என்று அறிந்ததால் அவர்களுடன் கிளம்பிவிட்டான்.
அதோ ... எதிரே தெரிகின்ற மலைப்பாதை அதை கடந்துவிட்டால், அரியணை ஏற காத்திருக்கும் இளவரசன், இதை நினைக்கும் போதே விதி ஆடும் ஆட்டத்தை கண்டு அவன் உதடுகளில் விரக்தி புன்னகை குடிக் கொண்டது.
'உறையூர்...' தன் பூர்விக அரியணை. இத்தனை காலமாக சதிகாரர்களும், சுயநலமிக்க குறுநில மன்னர்களும் தன் தந்தையின் குருதி சிந்திய அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆட்டம் போடுவதை கண்டு அவன் ரத்தம் கொதிக்க தான் செய்தது.
கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், ஒரு தூணில் குதிரையை கட்டிவிட்டு அதே தூணில் தலைசாய்த்து அமர்ந்துவிட்டான். அவன் மனதில் பல வித போராட்டங்கள். எதை எதையை நினைத்தபடி அமர்ந்திருந்தவனின் கைகள் தன்னிச்சை செயல் போல காலில் இருந்த அந்தப் பழைய வடுக்களைத் தடவிப் பார்க்க, பாழடைந்த அந்தக் காட்டுக்கோட்டையின் எரியும் தணல் தன் சதையைக் கிழித்த அந்த நள்ளிரவின் வெப்பம் அவனது நினைவுக்கு வந்து போனது. அவனின் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து மென்மை குடிக் கொண்டது.
"செம்பா ... நான் இல்லாமல் எப்படியடா இருக்கின்றாய் ..." என்று முணுமுணுத்தவனின் இதழ்கள் நண்பனை நினைத்து புன்னகையில் மலர, கைகள் மீண்டும் வடுவை வருடி பார்க்க, மூன்று தினங்களுக்கு முன் நண்பன் அந்த வடுவில் களிம்பை தடவிய நிகழ்வு கண் முன் வந்து போனது.
"ம்ப்ச் ... போதுமடா செம்பா ... நீ கொப்பரை கொப்பரையாக கொண்டு வந்து தடவினாலும் வளவனின் காலின் கருமை மாற போவதில்லை..." என்று கேலியாக சிரித்த முத்தழகனை கண்டுக் கொள்ளாமல், பொறுமையாக களிம்பை காலை சுற்றி தடவி விட்டவன்,
"அதையும் பார்ப்போம் ... இதை யாரிடமிருந்து வாங்கினேன் தெரியுமா இரண்டு நாட்களுக்கு முன் வந்த சேர்ந்த ரோமானிய வணிகனிடம் இருந்து பெரும் விலை கொடுத்து வாங்கினேன் ... அவன் என்ன கூறினான் தெரியுமா ..." என்று ஆர்வமாய் தன் நண்பர்களின் முகத்தை பார்த்தவன்,
"அந்த பச்சை கண் மாயக்காரியின் பால் நிறத்திற்கு மாறிவிடுமாம் ... வளவா என்னை நம்புவாய் தானே ..." என்ற நண்பனின் தலையை விளையாட்டாய் களைந்துவிட்ட வளவன் "ம்ம்ம்" என்று சிரிக்கவும்,
"கவலைப்படாதே வளவா நான் இருக்கும் வரை உன்னை யாரும் கருகிய காலன் என்று அழைக்க விட மாட்டேன் ... உன் கால் பால் நிறத்திற்கு மாறியவுடன் குதிரை பூட்டிய தேரில் புகார் நகரையே வளம் வந்து என் நண்பனின் காலை பாருங்கள் என்று அனைவரும் பார்க்கும் படி உன் காலை காட்டி கூச்சலிடுவேன் ..." என்று வெள்ளந்தியாக பேசிய நண்பனின் அன்பு நெகிழ செய்தாலும் அவன் கூறியதை கற்பனை செய்து பார்த்த நண்பர்களுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வர சுற்றுப்புறத்தை மறந்து சத்தம் போட்டு சிரித்தனர்.
பழைய நினைப்பில் வளவனும் தான் இருக்கும் இடத்தை மறந்து, இதழ் விரிய சிரித்துவிட, அங்கே வந்த நெடுமாறனின் கண்களில் இந்த காட்சி பட்டது.
"ம்ம்ம் ... நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பத்திரமாக உறையூர் சென்று விடுவோமா என்ற கவலையில் நாம் இருக்கின்றோம் ... இளவலுக்கு அந்த கவலை இல்லை போல ... அதான் அவர் உயிரை காப்பதற்கு ஐந்து உயிர்கள் தயாராக இருக்கின்றதே ... அப்புறம் எப்படி சிரிக்காமல் இருக்க முடியும் ..." என்று கனலை கக்கியபடி எதிரே இருந்த தூணில் காலை நீட்டிக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தான்.
அவன் கூற்றை கேட்ட வளவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது. முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன்,
'இவன் வேறு சும்மா சும்மா நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கின்றான் ... இவன் கொடுக்கை முறித்தால்தான் இவன் அடங்குவான் போல ... இருக்கட்டும் உறையூர் செல்லும் வரை இவனை பொறுத்துக் கொள்வோம் ...' என்று மனதில் நினைத்தவன், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து நடக்க, வளவனின் கோப பார்வையில் நெடுமாறனின் உதடுகள் கேலியாக வளைந்தன.
"இளவலே ... எங்கு செல்கிறீர்கள் ..." என்று எழுந்து நின்றவனை திரும்பி பார்த்தவன்,
"உடற்கடன் தாளவில்லை... ஏன், தாங்களும் கூட வருகின்றீர்களா? சேர்ந்தே புறம்போவோம் ..." என்று வேண்டுமென்றே நக்கலாக பேசியவனை கண்டு தலைசாய்த்து சிரித்த மாறன்,
"காளியப்பா ... இளவலுடன் சென்று வா ..." என்று தன் சக வீரர்களுக்கு கட்டளையிட பொறுமையை இழந்தான் வளவன்.
"நெடுமாறா ... உமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் நான் சோழ வாரிசு என்பது மறுக்க முடியாத உண்மை ... உன் உடலில் ஓடும் குருதி சோழ பேரரசின் விசுவாசக் குருதி ... நான் பிறக்கும் போதே அரியணை ஏறுபவன் என்ற விதி கொண்டவன் ... நீ எமது சாம்ராஜ்யத்தின் கீழ் இருக்கும் ஒரு படைத் தலைவன், அதற்கேற்ப உன் எல்லைக்குள் நடந்து கொள் ..." என்று தீர்க்கமான குரலில் கூறியவன், அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் நீரோடையை நோக்கிச் சென்றான்.
அவனுடைய அந்தத் திடீர் முழக்கத்தைக் கேட்டு, ஒருநொடி புருவம் சுருக்கிய மாறன், தன் வலக்கையை தூக்கி போக வேண்டாம் என்று காளியப்பனிடம் சைகை செய்துவிட்டு தூணில் சாய்ந்தவனின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது. கண்களில் இருந்து வளவன் மறைந்ததும், அங்கே வந்த தித்தன்,
"என்ன மாறா ... இளவலின் வாய்க் கூர்மை வாள் கூர்மையோடு ஒத்துப் போகும் போலிருக்கிறதே …" என்று கேலியாகக் கேட்க, தன் இடுப்பில் இருந்த வாள் பிடியை வருடியபடியே,
"இளவலின் வாய்க் கூர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ..." என்றவனின் முகம் புன்னகையில் நன்றாகவே மலர்ந்தது.
மனம் கோபத்தில் கொந்தளிக்க வேக நடையிட்டு நீரோடையை நெருங்கிய வளவனின் முகத்தை தீண்டியது குளிர்ந்த காற்று. சிள்வண்டுகளின் இரைச்சலுக்கு நடுவே, அவனது அசாத்தியமான உள்ளுணர்வு ஏதோ ஒரு ஆபத்து தன்னை சூழ்ந்திருப்பதாக பலமாக எச்சரித்தது.
சுற்றியும் பார்வையை சுழலவிட்டவாறே குனிந்து சலசலத்து ஓடும் ஆற்றின் நீரை கையால் அலசி முகத்தில் நன்றாக அடித்து கொண்டவனின், உள்ளுணர்வு பின்னால் ஆபத்து இருப்பதை உணர்த்த, இடையில் சொருகியிருந்த குறுவாளை உருவியவன் மின்னல் வேகத்தில் தன் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தை அறுத்திருந்தான்.
குருதி பீறிட, அந்த இருண்ட உருவம் மண் தரையில் சரிந்து விழ அதே விநாடியில், சுற்றியிருந்த அடர்ந்த மரங்களின் உச்சியிலிருந்தும், பாறை இடுக்குகளிலிருந்தும் மேலும் ஐந்து முகமூடி அணிந்த கொடூரச் கொலைகாரர்கள் கைகளில் நீண்ட வாள்களுடன் வளவனை நோக்கி பாய்ந்தனர்.
இத்தனை பேர் தன்னை தாக்குவதை கண்டு திகைத்து போன வளவன், தன்னுடன் வந்த வீரர்களை அழைப்பதில் எந்தவித நன்மையையும் இல்லை என்று உணர்ந்தவன், காற்றில் தன் குறுவாளைச் சுழற்றி, புலி போல முன்னேறிப் பாய்ந்தான்.
முதல் கொலைகாரன் ஓங்கிய வாள் வீச்சைத் தன் இடது கையால் லாவகமாகத் தடுத்து, தன் வலக்கையில் இருந்த குறுவாளால் அவனது நெஞ்சைப் பிளந்தான். மற்றொருவன் பின்புறமிருந்து தாக்க வர, சடுதியில் கீழே குனிந்து வளைந்து, தன் காலால் அவனது அடிவயிற்றில் ஓங்கி உதைத்து ஆற்று நீரில் வீழ்த்தினான். நீரோடைக் கரையில் எங்கும் வாள்கள் மோதும் 'டிங்... டிங்...' என்ற உக்கிரமான உலோகச் சத்தமும், மனிதர்களின் ஆக்ரோஷக் கத்தல்களும் எதிரொலித்தன.
ஆனால், காட்டின் இருண்ட நிழல்களிலிருந்து கொலைகாரர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் தன்னை விடப் பல மடங்கு அதிகமாக இருப்பதையும், இந்தச் சிறிய குறுவாளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்தவன் அடுத்த நொடி பாயும் காவிரியின் ஆழமான நீரோடைக்குள் "டொபீர்..." என்று தலைகீழாகப் பாய்ந்து மூழ்கினான்.
நீரில் மூழ்கியவனை விடாமல் துரத்தும் நோக்கில் கரையில் நின்றிருந்த அனைவரும் நீரினில் பாய்ந்தனர். நீரில் மூழ்கியபடி இரண்டு வீரர்களை சமாளித்த வளவனுக்கு, இவர்கள் அனைவரும் போர்க்கலையில் தேர்ந்த வீரர்கள் என்று புரிய இனி தனியாளாக அவர்களை சமாளிக்க முடியாது என்ற உண்மை உணர்த்த, அருகில் தெரிந்த கரையில் ஏறி காட்டை நோக்கி ஓடினான்.
தோளில் வழியும் குருதியோடும், மூச்சிரைக்கக் குளிர்ந்த நள்ளிரவுக் காற்றிலும், அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆழத்தை நோக்கி வேகமாக ஓடியவனை ஒருகட்டத்தில் சுற்றி வளைத்தது அந்த கூட்டம்.
என்ன ஆனாலும் இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்களுடன் போராட வேண்டும் என்ற முடிவுடன் தன் குறுவாளை ஓங்கியவனின் தலைமுடியை பற்றி மேலே இழுத்தது ஒரு உருவம்.
வளவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்ப்பதற்குள், அவனது இடுப்பைப் பற்றித் தூக்கிய அந்த மாவீர உருவம், மரங்களின் அடர்ந்த விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஒரே தாவலாக அவர்களை வான்நோக்கி இழுத்துச் சென்றது.
சதிகாரர்களின் வாள்கள் வெறிச்சோடிய காற்றில் வீணாக மோடித் திகைத்தன. "எங்கே அவன்? மேலே பாருங்கள்!" என்று அவர்கள் கத்துவதற்குள், மரத்தின் தடித்த கிளையின் மேல் வளவனைப் பத்திரமாக அமர வைத்தது அந்த மர்ம வீரன்.
அவன் திடுக்கிட்டுப் பார்த்தபோது, தன் முன்னால் நின்ற உருவம் ஆண் வீரர்களுக்குரிய உடைகளை அணிந்து, முகம் முழுவதும் கரிய துணியால் மூடப்பட்டிருப்பதைக் கண்டான். கண்களில் உக்கிரமான போர்க் கனலோடு நின்ற அந்த மாவீரன், தன் வில்லை வளைத்து அடுத்தடுத்து மூன்று அம்புகளைத் தொடுத்தான்.
மரங்களின் உச்சியிலிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த அந்த அம்புகள், கீழே நின்றிருந்த கொலைகாரர்களின் நெஞ்சைத் துளைத்தன. அலறியபடி அவர்கள் மண்ணில் சாய, எஞ்சியிருந்தவர்கள் பயத்தில் பின்வாங்கினர்.
மின்னலென மரத்திலிருந்து கீழே குதித்த அந்த மர்ம வீரன், தன் இடுப்பில் இருந்த நீண்ட வாளை உருவி எஞ்சியிருந்த சதிகாரர்களைத் துவம்சம் செய்யத் தொடங்கினான்.
கிளையின் மேல் அமர்ந்திருந்த வளவனின் கண்கள், கீழே நடக்கும் அந்தப் போர்க் கோலத்தை விட்டு ஒரு விநாடி கூட விலகவில்லை. அவனது நெஞ்சில் அந்த மர்ம வீரனின் மீது ஒரு மாபெரும் வியப்பும் மதிப்பும் வார்த்தையில் விவரிக்க முடியாத ஒருவிதமான உணர்வும் தானாகப் பிறந்தது.
புகார் நகரக் கடற்கரையில் எத்தனையோ மல்யுத்த வீரர்களையும், வாள்வீச்சு வல்லுநர்களையும் அவன் பார்த்திருக்கிறான். ஆனால், இந்த அந்தகார இருட்டில், நிலவின் ஒளியைக் கூடத் தன் வாள் முனையில் பிரதிபலிக்கச் செய்து, காற்றில் நடனமாடுவது போலப் பாயும் இவனது வேகம் வளவனை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒவ்வொரு வாள் வீச்சிலும் அசாத்தியமான துல்லியமும், கால்களின் அசைவில் ஒரு நளினமும், அதே சமயம் எதிரிகளின் குருதியைக் குடிக்கும் உக்கிரமும் கலந்திருந்தது. 'யார் இவன்? இந்த அடர்ந்த காட்டின் ஆழத்தில், ஒரு காட்டுச் சிறுத்தையைப் போன்ற வேகத்துடன் எனக்காகக் களமிறங்கி இருக்கும் இந்த மாவீரன் யார்?' என்று வளவனின் மனம் வியப்பில் ஆழ்ந்தது. அவனது வாள்வீச்சுக்கு முன்னால் அந்த உக்கிரமான கொலைகாரர்களால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. காட்டில் காய்ந்த சருகுகள் எங்கும் சதிகாரர்களின் குருதி சிதறியது.
அனைவரையும் வெட்டி சாய்த்துவிட்டு மேலும் யாரவது இருக்கின்றார்களா என்பதை போல சுற்றியும் பார்வையை சுழலவிட்டவனின் பார்வை தன்னையே இமை சிமிட்டாமல் பார்த்திருந்த வளவனிடம் நிலைத்தது நின்றது. சில நொடிகள் இருவரின் விழிகளும் அந்த நிலஒளியில் ஒன்றை ஒன்று கவ்வி பிடித்திருக்க, அடுத்த நொடியே மின்னலென பாய்ந்து காட்டின் உள்ளே புகுந்து மறைந்து போனான் அந்த வீரன்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வளவன், சுதாரித்து,
"ஏய் ... வீரனே ... நில் ... யாரென்று சொல்லிவிட்டு செல் ..." என்ற அவனது ஏகாந்தமான குரல் காற்றில் கரைந்து போனது.

Author: Kavithillai
Article Title: அத்தியாயம் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.