மனம் - 20 (எபிலாக்)
அன்று தான் ஆவுடையப்பனின் அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாள். அதனுடனே சபாபதியின் மகள் பூர்விதாவிற்கும் அன்று தான் மொட்டையடித்து காது குத்துகிறார்கள்.
ஆவுடையப்பனுக்கு அறுபதாம் திருமணநாள் வந்த பொழுது, அட்சயாவின் வாழ்க்கையில் ஏதேதோ நடந்திருக்க, அதனை கொண்டாடும் மனநிலையில் இல்லை. எனவே, இப்பொழுது பிள்ளைகளின் வற்புறுத்தலில் பிறந்தநாளை கொண்டாட ஒத்துக்கொண்டார்.
காலையிலே அவர்களின் குலதெய்வ கோவிலிற்கு சென்று, குருவின் மடியில் பூர்விதாவை அமர்த்தி மொட்டையடித்து காத்து குத்தினார்கள். பூர்விதா அப்படியே அட்சயாவை போல் தான் இருப்பாள். அவளும் மாமா மாமா என குருவிடம் செல்லம் கொஞ்ச அவனுக்கு அவ்வளவு பிடித்தது அந்த சிறு மலரை.
“பூர்வி.” என அழைத்தாள் அழகாய் திரும்பி பார்ப்பவளிடம் மனது செல்லாமல் இருந்தால் தான் அதிசயம்!
பிரசவ காலத்தில் பூர்ணிமாவிற்கு தாயின் மடியை மிகவும் தேடியது தான். ஆனாலும் அது சாத்தியமில்லை என தெரிந்துவிட அதனை மனதிலே புதைத்துக் கொண்டாள்.
பூர்ணிமாவிற்கு பிறந்த வீடில்லை என்ற குறையே தெரியாத அளவுக்கு தான் அவளை கவனித்துக் கொண்டார் பரிமளம்.
கங்காவும், அட்சயாவும் கூட அவளை மாறி மாறி கவனித்துக் கொண்டனர். ஒரு நல்ல நாளில் அவளுக்கு வளைப்பூட்டி பெயருக்கு ஒருநாள் கோபிநாத்தின் வீட்டிற்கு சென்று வந்தவள், மீண்டும் சபாபதியின் வீட்டிலே இருந்துக் கொண்டாள்.
ஒருநாள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு வலி வந்துவிட மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்கள். அவர்களோ பிரசவத்தில் சிக்கல் என சொல்லி, “அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்.” என சொல்லிவிட்டனர்.
அதன் படிவத்தில் கையெழுத்து போடும் பொழுது சபாபதிக்கு உயிரே இல்லை. அவ்வளவு பார்த்தும் கடைசியில் சிக்கல் வந்ததால் பரிமளத்திற்கும் பதட்டமாக தான் இருந்தது.
அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்து செல்லும் பொழுது, “நான் உனக்கு செஞ்சது எல்லாமே மன்னிக்க முடியாத தப்பு தான் பூர்ணி. ஆனா என்னை விட்டுட்டு போய்டாத..” என்ற சபாபதியின் முகத்தை பார்த்துவிட்டு தான் உள்ளே சென்றாள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த சபாபதியின் காதில் அவர்கள் மகளின் அழுகுரல் கேட்டது. மருத்துவர் வெளியே வந்ததும், “பூர்ணி” என்று தான் முதலில் கேட்டான்.
“அவங்க செஃப் தான். கொஞ்ச நேரத்துல வருவாங்க. உங்க பெண் குழந்தையை நர்ஸ் தூக்கிட்டு வருவாங்க.” என சொல்லிவிட்டு சென்றார். என்ன குழந்தை என்பதெல்லாம் பின்னாடி சென்றிருக்க அவனுக்கு பூர்ணிமாவை பற்றி தான் முழு கவலையும் இருந்தது.
அழகிய பூந்தூவலையில் குழந்தையை வைத்து கொண்டு வந்திருந்த நர்ஸ், “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.” என பரிமளத்தின் கையில் கொடுத்தார்.
குழந்தையை பார்த்த அனைவருமே சொன்ன வார்த்தை, “நம்ம அச்சு மாதிரியே இருக்கா.” என்பது தான்.
அட்சயாவையே, “எங்கம்மா மாதிரி இருக்க பாப்பா.” என ஆவுடையப்பன் சொல்லியிருப்பார். இன்று அவரின் பேத்தி, அட்சயாவை போல் தான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்தது.
“உன்னை மாதிரியே இருக்கா தான அச்சு. உன்னை மாதிரியே இவளும் என்னோட வாழ்க்கைல வந்த வரம் தான்.” என்ற பூர்ணிமா கலங்க அவளை அணைத்துக் கொண்டாள் அட்சயா.
அவளை பார்க்க தனியாக வந்தான் சபாபதி. அவளின் கையை பிடித்து, “செத்துட்டேன் டி.” என்றவனின் வாயிலே போட்டாள்.
“நீ எவ்ளோனாலும் அடிச்சிக்கோ. ஆனா இதை மாதிரி பயமுறுத்தாத பூரணி. என்னால தாங்கவே முடியல. உனக்கு நான் பண்ணது எல்லாமே எனக்கு ரிவீட் அடிக்குற மாதிரி இருக்கு.” என்றவனை பார்த்தவள் இதழ்கள் சிரிக்க பூர்ண நிலவாய் ஜொலித்தாள்.
“சபா. நான் என்னோட அம்மாவை மட்டும் பார்க்கவா ப்ளீஸ். இப்ப உடனே இல்லை. அச்சு கிளம்பினதும். நம்ம கடைல இல்ல கோவில்ல வெச்சி பார்க்கவா..” என கேட்டவளின் விருப்பத்தை நிராகரிக்க முடியாமல், “உங்க அம்மாவை மட்டும் பார்.” என சொல்லியிருந்தான்.
அதன்படி பெயர் சூட்டும் விழாவை முடித்துவிட்டு அட்சயா புறப்பட்டதும் தான் அவளின் தாய் தந்தையை வீட்டிற்கே அழைத்தாள். குழந்தையை பார்த்தவர்கள் கொஞ்சிவிட்டு சென்றனர்.
அப்படியே அவளின் அம்மாவுடன் அலைபேசியில் பேச துவங்கினாள் பூர்ணிமா. ஆனாலும் ரோஷனிடமிருந்து விலகியே தான் இருந்தாள். “அவனுக்கும் ஒரு கல்யாணம் நடந்திட்டா நல்லாருக்கும்.” என சுடர்க்கொடி அவளிடம் புலம்பும் பொழுது அமைதியாகவே இருந்து விடுவாள்.
ஒருநாள் கோவிலில் சுடர்கொடியை பார்க்க சென்ற பொழுது, “பாப்பாவை பிடிங்க ம்மா. நான் விளக்கு போட்டுட்டு வரேன்.” என பூர்ணிமா சென்றுவிட்டு வர, சுடர்க்கொடி மட்டும் அமர்ந்திருந்தார்,
“பாப்பா எங்க மா?” என அவள் பதறி கேட்க,
“என்கிட்டே தான் இருக்கா. அப்படியே நம்ம அச்சு மாதிரியே தான்.” என்ற ரோஷன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடும் முன் அவனிடமிருந்து குழந்தையை பிடுங்கியவள்,
“உன்னோட நிழல் கூட என் குழந்தை மேல படக்கூடாது.” என படபடக்க அவனிடம் சொல்லியவள் தாயையும் முறைத்துவிட்டு நகர்ந்திருந்தாள்.
அனைத்தையும் நினைத்தவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்திருந்தது அவள் மகளின் அழுகை.
குருவின் கையில் இருந்த குழந்தை சினுங்க, “கொடுங்கண்ணா.” என வாங்கியவள், “சரி டா. அழக்கூடாது.” என பத்து மாத குழந்தையை சமாதானபடுத்தியப்படியே சென்றாள்.
ரோஷனின் தங்கையாக இருந்தவளை தவிர்த்த குருபிரசாத், சபாவை கட்டிக்கொள்ள போகிறவள், அட்சயாவின் தோழி என்பதால் அவளிடம் பேச துவங்கியிருந்தான். ஆனாலும், நாட்கள் செல்ல செல்ல அவளின் பூப்போன்ற குணத்திற்காகவே பூர்ணிமாவிடம் உறவை வளர்த்துக் கொண்டான் குருபிரசாத்.
அன்று மாலை ஆவுடையப்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனைவரும் இருந்தனர். கேக்கை தான் வெட்டாமல் பேரன் பேத்திகளை வைத்தே வெட்டினார் அவர். பேரன் பேத்திகள் அனைவரும் போட்டி போட்டு அவருக்கு அதனை ஊட்டினார்கள்.
சற்று முன் பிள்ளைகள், மாப்பிள்ளைகள் என அனைவரும் வைர மோதிரம், தங்க பிரேஸ்லெட் என பரிசளித்ததை விட குழந்தைக்குகள் ஊட்டிய இனிப்பே அவருக்கு மனநிறைவை கொடுத்தது.
பூர்விதாவிற்கு உணவை கொடுத்து கொண்டிருந்த அட்சயாவிடம், “ம்மா. நானு நானு..” என கத்தினாள் இரண்டு வயது நிரம்பிய அப்சரா.
“நீ கீழ கொட்டுவ அப்புமா.” என்றவளை முறைத்துவிட்டு, “ப்பா. அப்பா.” என குருவை அழைத்தாள். அப்சரா அப்படியே பாக்கியத்தின் பிரதிபலிப்பு தான். அப்படி ஒரு அடம். ஆனால் குருவின் பேச்சுக்கு மட்டும் அடங்கிவிடுவாள்.
“என்ன டா. நீ ஊட்டனும்மா” என வந்தவனிடம் பூர்விதா, அப்சரா இருவருமே தாவினர். சிரிப்புடன் இருவரையும் தூக்கியவனை பார்த்த அட்சயா, “நானு..” என்றாள் கண்ணடித்து.
“நைட் முழுக்க உன்னை கொஞ்சுறேன்.” என அவளின் காதில் சொல்லிவிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டான். அட்சயா அவர்கள் இருவருக்குமே உணவை ஊட்டினாள்.
அதனை மாடியில் இருந்து சபாபதியும் பூர்ணிமாவும் பார்த்தனர். “இவங்க இங்க வந்தாலே என்னோட பொண்ணு. பொண்டாட்டி ரெண்டு பெரும் அவங்க கிட்டயே ஒட்டிக்குறீங்க..” என புலம்பியவன்,
“இப்பவும் உனக்கு என்னை விட அச்சு தான் பிடிக்குமா?” என கேட்டவனை சிரிப்புடன் பார்த்தாள் பூர்ணிமா. “சிரிக்க மட்டும் செய். கேள்விக்கு பதிலை சொல்லிடாத.” என்றவனுக்கு எப்பொழுதும் போல் ஒரு அடியை பரிசாக கொடுத்தாள் பூர்ணிமா.
குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்த அட்சயா சோர்ந்து தெரிந்தாள். “நாளைக்கு டாக்டர் கிட்ட போய் கான்பார்ம் பண்ணிட்டு எல்லாருக்கும் சொல்லலாம்.” என குருவை அணைத்துக் கொண்டாள். அவர்களுக்கான மகிழ்ச்சி அந்நேரம் அதிகரித்தது.
நம் ஆழ்மனதில் ஏற்படும் நமது எண்ண அலைகளின் தாக்கத்தின் விளைவாக தான் நமது வாழ்க்கை அமையும். அதற்கு இந்த பிரபஞ்ச சக்தியும் கைகொடுக்கும். ஆகையால் தான் “எண்ணம் போல் வாழ்க்கை!” என நம் முன்னோர்கள் சொல்கின்றனர்.
நேர்மறையாக நாம் சிந்தித்தால் நமது எண்ணங்களே நமக்கு நன்மை நடக்க வழிவகுக்கும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை முழுதாக அழித்துவிடும்.
குருபிரசாத் - அட்சயா, சபாபதி - பூர்ணிமா அவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையும் அப்படித்தான். அவர்களுக்கான பந்தம் அவர்களின் ஆழ்மன எண்ணங்களிலிலிருந்து ஆழமான உறவாக உருவாகியது.
எவனோ ஒருவனின் கேடுகெட்ட செயலின் தாக்கத்தால், பிரிந்த ஜோடிகள் இருவரின் வாழ்க்கையும் அவரவரின் ஆழ்மனதின் எண்ணங்களும், நினைவுகளும் வேரூன்றி இருந்ததால் தான், இரு ஜோடிகளும் மீண்டும் இணையும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் சேருவதற்கு மற்றவர்கள் அனைவரும் கருவியாக பயன்பட்டனர்.
நேர்மறை எண்ணங்களுக்கு இவர்கள் என்றால், எதிர்மறை எண்ணங்களுக்கு ரோஷனே சான்றாவான். அவனின் கெட்ட எண்ணங்களும், கெட்ட பழக்கங்களும் அவனை பிறரிடமிருந்து பிரித்து வைத்தது. அவன் செய்த செயலுக்கான தண்டனை என்பது அது மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அவனுக்கான தண்டனையை காலமே வழங்கும். அதுவும் நம் பிரபஞ்ச ஆற்றலை பொறுத்து அவனுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கும்.
கூடுமானவரை நம்முள்ளும், நம்மை சுற்றியும் நேர்மறை எண்ண அலைகள் இருப்பதை போல் பார்த்துக்கொள்வோம். அது நிச்சயம் நமக்கான பலனையே கொடுக்கும்.
*** சுபம் ***

சேர்வோம் என்ற நினைப்பில்லாமல் நாம் சேர்ந்தோம்..
பிரிவோம் என்ற எண்ணமில்லாமல் நாம் பிரியவும் செய்தோம்.
எதுவாகினும் என்ன? என் ஆழ்மனம் முழுக்க நீயாக இருப்பின் பிரபஞ்சத்தின் கோட்பாடே நம்மை இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கும்.