அது ஒரு அழகிய பொன்மாலை வேளை! காலி முகத்திடல் கடற்கரை எப்போதும் போலவே பரபரப்பாக இருந்தது.
மாலை மஞ்சள் வெயில் கூட அவ்வளவாக உக்கிரம் தணியவில்லை; சுள்ளென்று முகத்தில் அடித்தது.
நாங்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆர்ப்பரிக்கும் கடலையே பார்த்தவண்ணம் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தோம்.
கதைப்பதற்கு நிறையவே உண்டு; என் வாயைத் திறந்தால் தடையின்றிக் கொட்டிட அவ்வளவு விசயங்கள் முட்டி மோதி நிற்கின்றன; உயிர்ச்சிநேகிதி இவளிடம் சொல்லாது யாரிடம் சொல்லிவிடப் போகின்றேன்? ஆனாலும், மௌனமாக நடந்தேன்; அதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்தது.
இப்படியே, இருவரும் கரம் கோர்த்தபடி நடந்து வந்து அங்கிருந்த சீமெந்துக் கட்டில் அமர்ந்து கொண்டோம்.
நான் கொழும்புக்கு அடிக்கடி வந்ததில்லை; இதற்கு முதல் இருதடவைகள், அதுவும் சிலவருடங்களுக்கு முதல். அவ்வளவே! இருந்தும், புதுச்சூழலை இரசிக்கும் மனநிலையில் இருக்கவில்லை.
நர்மதாவோ முகத்தில் கல்யாணக்களைத் தெறிக்க அமர்ந்திருந்தாள். சும்மா எல்லாம் இல்லை, காதல் திருமணம்; ஐந்து வருடக் காதல்.
கெளதம் அண்ணா மிகவும் நல்லவர்; என்னுடனும் நர்மதாவின் தோழி என்றில்லாது தங்கச்சி என்று அன்போடு பழகுபவர்.
“நாளைக்குக் கலியாணம்; இப்ப அங்க இங்க எண்டு அலைய வேணாம் பிள்ளைகள்.” என்று, நர்மதாவின் அம்மா, திரும்பத் திரும்பச் சொல்லியும் இவள் கேட்கவிலை.
“நாலு நாட்களுக்கு முதல் வாடி எண்டா, விடியப்புறம் வந்திறங்கிறாள். நாளைக்குக் கலியாணம் முடிஞ்ச கையோட வெளிக்கிடுறாளாம். ஏதோ இப்பிடி அடிக்கடி வெளிக்கிட்டுத் திரியிற ஆள் போல! வீடு, அதைவிட்டா பள்ளிக்கூடம். பச்! நின்றுபோட்டு நாலு நாட்களுக்குப் பிறகு புனிதா ஆன்ட்டி ஆட்கள் போகேக்க போகலாம் தானே?” என்னை முறைத்தாள் நர்மதா.
என் முகம் பிரதிபலித்த உணர்வுகளை அடக்கும் முயற்சியில் நான்.
வீடு, பள்ளிக்கூடம், கோவில் குளம் என்றதோடு என் வாழ்வு அடங்கினாலும், அதில், இதுவரை அவ்வளவாகத் துன்பத்தின் சாயல் விழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் என் வாழ்வை இரசித்து வாழ்ந்தேன். என் இழப்புகள் கூட என்னை அப்படியே துக்கத்தில் மூழ்கிட வைக்கவில்லை. அதுக்கு முக்கிய காரணமே என் செல்லத் தங்கைகள் தான். இருந்தும், இனியும் என் வாழ்வு அப்படியே இருக்குமா? எத்தனை பெரிய கேள்வி திடுமென்று என் முன்னால் எழுந்து நிற்கின்றது!
“சரி சரி, இப்ப என்ன சொல்லீட்டன் எண்டு சோகராகம் பாடுற? விடு விடு!”
என்னையே அவதானித்துக் கொண்டு நின்றவள் சொன்னதும் மெலிதாக முறுவலித்தேன்.
“இனி அதையெல்லாம் கதைச்சுப் பிரயோசனம் இல்ல. வந்தவளை ஒருக்காக் கோல் பேஸுக்குச் சரி கூட்டிக்கொண்டு போறதில்லையாம்மா?” என்று, தாயைச் சமாளித்து இங்கு அழைத்து வந்திருந்தாள்.
தோழியின் திருமணத்துக்கு வரக் கிடைக்குமோ என, பதறிய நாட்கள் இப்போதுதான் கடந்திருந்தாலும், ஏதோ முன் பிறவி போலவே இருந்தது.
அருகிலமர்ந்திருக்கும் நர்மதாவை ஏறிட்டேன். காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில் கலைந்து, கன்னம் தொட்டு உறவாடிய முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டபடி அவளும் என்னைத்தான் பார்த்தாள்.
“என்னடி உதயா, ஒரே அமைதியா இருக்கிற?
“நானா? இல்லயே! நீ தான் அமைதியா இருக்கிற.”
“ஆங் அது...” விழிகள் சுருங்க மெல்லச் சிரித்தவளின் கன்னங்கள் செம்மையுற்றன! படபடக்கும் இமைகுடைகளுள் தத்தளித்த பார்வையை அலையவிட்டபடி, தன் கேசங்களை மீண்டும் ஒதுக்கிக் கொண்டாள் அவள்.
நானும் கலைந்து பரந்த கேசங்களைப் பிடித்து அடக்கிடத்தான் முனைந்தேன், என் மன எண்ணங்கள் போலவே! அது எங்கே? இரண்டுமே சொல் கேளாது மீண்டும் மீண்டும் அதே நிலைக்கு வழுவிப் பறந்து திரிந்தன.
“சரி சரி... நீ கெளதம் அண்ணாவ நினச்சுக் கொண்டிருகிற எண்டு தான் தெரியுமே!”
சொன்ன எனக்கு, என்னையுமறியாது ஒரு முகம் நினைவில் வந்தது. அக்கணமே உள்ளத்தில் திடுக்கிடல் ஓடியது.
‘எப்படிச் சமாளிக்கப் போறன்?’ குளிர் பரவியது.
என்னையே பார்த்திருந்தாள் நர்மதா.
“என்னடி உதயா ஒரு மாதிரி இருக்கிற? வீட்டில கவி, தீபி எல்லாரும் நல்லா இருக்கீனம் தானே?”
அன்பாகக் கேட்டவள், பதிலை எதிர்பாராது தொடர்ந்தாள்.
“என்னவாம் உன்ர சித்தி? என்ர கலியாணத்துக்குப் போறன் எண்டு கேட்டோன்ன விட்டிட்டாவா? வராமல் மட்டும் இருந்திருந்தியோ நேர வந்து அடிச்சிருப்பன் டி.” கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
இங்கு வந்ததிலிருந்து மிக்க கவனமாக என் இடக்கை மோதிரவிரலை அவள் பார்வையிலிருந்து மறைத்து வந்த நான், இப்போதும் இடக்கையை மெல்ல விடுவித்துக் கொண்டேன். உண்மையில் அவள் அந்தளவு உன்னிப்பாகக் கவனிக்கும் நிலையிலும் இருக்கவில்லைதான். தன் கல்யாண விசயங்களில் மூழ்கியிருக்கவில்லையோ வந்திறங்கியதும், எப்படித்தான் நான் மறைத்திருந்தாலும் அந்த மோதிரம் அவள் பார்வையில் அகப்பட்டிருக்கும்.
“உதயா! என்னடி கடுமையான யோசின? நீ ஏதோ சரி இல்ல, ஏன் ஒரு மாதிரி இருக்கிற?”
‘இனியும் அமைதியாய் இருந்து சரிவராது. இவளோட பிறகு ஆறுதலாக இருந்து கதைக்கவும் கிடைக்குதோ தெரியாது. இப்பவே சொல்லி விடுவம்.’ என்ற முடிவில் அவள் முகம் பார்த்தேன்.