மனம் - 6
நான்கு வருடங்களுக்கு முன்,
“டேய் உங்கள காலைலயே வர சொன்னா எப்படா வரீங்க?” என நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் குருபிரசாத்தையும், அபிலாஷையும் வரவேற்றான் சுதன். சுதன் அக்கா ரேகாவின் திருமணத்திற்கு தான் இருவரும் சேலத்திற்கு வந்திருந்தார்கள். முன்தினம் வரவேற்பு மற்றும் அதற்கு அடுத்த நாள் திருமணம் என முடிவு செய்திருந்தார்கள்.
“எப்ப வந்தா என்னடா அதான் வந்துட்டோமே. நாளைக்கு கல்யாணத்தை முடிச்சிட்டு அப்படியே ஏற்காடு போற பிளான்.” என அபிலாஷ் சொல்ல,
“மேல் மாடில இருக்க ரூம்ல போய் கிளம்பிட்டு வாங்க டா, மூட்டை தூக்குற வேலை உங்களுக்காக வெய்ட்டிங்.” என அவர்களிடம் சொல்ல, அங்கே வந்த சபாபதி அவர்களின் பேச்சை கேட்டு சிரித்துவிட்டான்.
“யார்டா அது? நம்மளையே பார்த்து சிரிக்குறான்?” என்ற குருவிற்கு, “டேய் அது மாப்பிளையோட சித்தி பையன் டா. எனக்கு மச்சான் முறை.” என்றவன் அவர்களை சபாபதியிடம் காட்டி, “ஏதாவது வேலை செய்யணும்னா தயங்காம இவங்ககிட்ட சொல்லு சபா. பக்காவா செய்வாங்க.” என அவர்களை கோர்த்திவிட்டு சென்றான் சுதன்.
“ட்ராவல் பண்ணி வந்திருப்பீங்க. நீங்க போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க.” என அவர்களை அனுப்பி வைத்தான் சபாபதி.
பரிமளத்தின் அக்காவின் கணவர் திருமணம் புரிந்த சில வருடங்களிலேயே தவறி இருந்தார். ஐந்து வயது பையனுடன் தனியாக தவித்தவருக்கு பரிமளமும் அவரின் கணவர் ஆவுடையப்பனும் தான் அடைக்கலம் கொடுத்தனர். வேறொரு திருமண பேச்சை ஆவுடையப்பன் எடுக்கும் பொழுது வேண்டாம் என மறுத்துவிட்டவர் தனியாகவே பையனை வளர்த்து ஆளாக்கினார். இன்று அவர்களின் பையன் ப்ரவீனின் திருமணத்தையும் பரிமளமும் ஆவுடையப்பனும் தான் முன்னின்று நடத்துகின்றனர்.
மேலே சென்ற குருவும், அபிலாஷும் கிளம்பி வந்து சுதனுடன் சேர்ந்துக் கொண்டனர். அவர்கள் மூவருடன் சபாபாதியும் அவ்வப்பொழுது பேசினான்.
“ம்மா இந்த துப்பட்டா நிக்கவே மாட்டிங்குது..” என புலம்பியபடியே அறைக்குள் நுழைந்தாள் பதினெட்டு வயது அட்சயா. பள்ளிப்படிப்பை முடித்து ஒருவருடமே கடந்திருக்க, இன்னமும் அதே பள்ளி செல்லும் சிறுமியாக தான் இருந்தாள்.
“இங்க வா அச்சு. அக்கா பின் பண்ணி விடுறேன்.” என அவளை இழுத்துக் கொண்டாள் கங்கா.
“அக்கா நீ பட்டு சேலை தான கட்டியிருக்க. ஒட்டியாணம் போடலாம்ல க்கா.” என கங்கவாவிடம் கேட்டவள் “ஓ பாப்பா உள்ள இருக்குறதால போடலையா?” என பதிலும் அவளே சொல்லிக் கொண்டாள்.
“சும்மா இரு அச்சு. நானே உன்னோட மாமா இன்னும் வரலனு இருக்கேன்.” என்றவள் தங்கையை தயாராக்கினாள்.
“கோபிமாமா லேட்டாவே வரட்டும் க்கா. அப்புறம் இன்னும் மூணு நாள்ல செமஸ்டர் எக்ஸாம் வெச்சிக்கிட்டு எதுக்கு கல்யாணத்துக்கு வந்த? படிச்சியா இல்லையா? புக் எடுத்துட்டு வா, நான் கேள்வி கேட்குறேன். அப்படியெல்லாம் கேட்டு வாத்தி அவதாரம் எடுப்பாங்க க்கா.” என கங்காவின் கணவர் கோபிநாத்தை போலவே சொல்லிக்காட்டினாள்.
அப்பொழுது, “வாங்க மாமா..” என சபாபதி விளையாட்டாக சொல்ல,
“ஐயோ நானில்லை மாமா.” என பயத்துடன் திரும்பியவளை பார்த்து கங்கா சபாபதி இருவருமே சிரித்துவிட்டனர். அவர்களை முறைத்துவிட்டு அவள் வெளியேற உள்ளே நுழைந்தாள் பூர்ணிமா.
அட்சயாவை போலவே அனார்கலி சுடியில் அழகாக கிளம்பி வந்திருந்தாள். அவளின் கண்கள் ஆவலுடன் சபாபதியை பார்க்க, “வா பூரி. நாம வெளிய போகலாம்.” என வேண்டுமென்றே சபாபதியை வெறுப்பேற்றிவிட்டு வெளியேறினாள்.
பரிமளம் வந்தவர்களை கவனித்து காஃபி கொடுத்துக் கொண்டிருந்தார். அட்சயாவையும், பூர்ணிமாவையும் ஒன்றாக பார்த்த உறவு பெண்மணி ஒருவர், “நம்ம சபாக்கு கூட பொண்ணு ரெடி போலவே. உன்னோட நாத்தனார் சுடர்கொடி பொண்ணு பூர்ணிமாவே அவனுக்கு சரியா இருப்பா போல.” என ஆரூடம் சொன்னார்.
“அச்சுவும், பூர்ணியும் இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்காங்க அத்தை. இப்பவே எதுக்கு அவங்க கல்யாணத்தை பத்தி பேசிக்கிட்டு..” என அவரின் சின்ன மாமியாரை கண்டித்தார்.
“அதான பரிமளா. நேரம் வந்தா பொண்ணு கொடுத்து கூட பொண்ணு எடுத்துக்கலாம். பூரணியோட அண்ணா ரோஷனும் நம்ம அச்சுவுக்கு முறைவரும் தான..” என அவர் அடுத்து பேசும் முன்,
“இதை மாதிரி வேற எங்கேயும் போய் பேசிடாதீங்க அத்தை. ஊர்ல இருக்க அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி வெச்சிருக்கவனுக்கு எதை நம்பி என் பொண்ணு கொடுக்க முடியும்? இனி என் பொண்ணை பத்தி இப்படியெல்லாம் பேசாதீங்க..” என அவரும் காரசாரமாக சொல்லிவிட்டே நகர்ந்திருந்தார். அதனை அங்கிருந்த தூணின் பின்னே மறைந்திருந்த ரோஷன் கேட்டுவிட்டான்.

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.