அத்தியாயம் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மனம் - 6

நான்கு வருடங்களுக்கு முன்,

“டேய் உங்கள காலைலயே வர சொன்னா எப்படா வரீங்க?” என நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் குருபிரசாத்தையும், அபிலாஷையும் வரவேற்றான் சுதன். சுதன் அக்கா ரேகாவின் திருமணத்திற்கு தான் இருவரும் சேலத்திற்கு வந்திருந்தார்கள். முன்தினம் வரவேற்பு மற்றும் அதற்கு அடுத்த நாள் திருமணம் என முடிவு செய்திருந்தார்கள்.

“எப்ப வந்தா என்னடா அதான் வந்துட்டோமே. நாளைக்கு கல்யாணத்தை முடிச்சிட்டு அப்படியே ஏற்காடு போற பிளான்.” என அபிலாஷ் சொல்ல,

“மேல் மாடில இருக்க ரூம்ல போய் கிளம்பிட்டு வாங்க டா, மூட்டை தூக்குற வேலை உங்களுக்காக வெய்ட்டிங்.” என அவர்களிடம் சொல்ல, அங்கே வந்த சபாபதி அவர்களின் பேச்சை கேட்டு சிரித்துவிட்டான்.

“யார்டா அது? நம்மளையே பார்த்து சிரிக்குறான்?” என்ற குருவிற்கு, “டேய் அது மாப்பிளையோட சித்தி பையன் டா. எனக்கு மச்சான் முறை.” என்றவன் அவர்களை சபாபதியிடம் காட்டி, “ஏதாவது வேலை செய்யணும்னா தயங்காம இவங்ககிட்ட சொல்லு சபா. பக்காவா செய்வாங்க.” என அவர்களை கோர்த்திவிட்டு சென்றான் சுதன்.

“ட்ராவல் பண்ணி வந்திருப்பீங்க. நீங்க போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க.” என அவர்களை அனுப்பி வைத்தான் சபாபதி.

பரிமளத்தின் அக்காவின் கணவர் திருமணம் புரிந்த சில வருடங்களிலேயே தவறி இருந்தார். ஐந்து வயது பையனுடன் தனியாக தவித்தவருக்கு பரிமளமும் அவரின் கணவர் ஆவுடையப்பனும் தான் அடைக்கலம் கொடுத்தனர். வேறொரு திருமண பேச்சை ஆவுடையப்பன் எடுக்கும் பொழுது வேண்டாம் என மறுத்துவிட்டவர் தனியாகவே பையனை வளர்த்து ஆளாக்கினார். இன்று அவர்களின் பையன் ப்ரவீனின் திருமணத்தையும் பரிமளமும் ஆவுடையப்பனும் தான் முன்னின்று நடத்துகின்றனர்.

மேலே சென்ற குருவும், அபிலாஷும் கிளம்பி வந்து சுதனுடன் சேர்ந்துக் கொண்டனர். அவர்கள் மூவருடன் சபாபாதியும் அவ்வப்பொழுது பேசினான்.

“ம்மா இந்த துப்பட்டா நிக்கவே மாட்டிங்குது..” என புலம்பியபடியே அறைக்குள் நுழைந்தாள் பதினெட்டு வயது அட்சயா. பள்ளிப்படிப்பை முடித்து ஒருவருடமே கடந்திருக்க, இன்னமும் அதே பள்ளி செல்லும் சிறுமியாக தான் இருந்தாள்.

“இங்க வா அச்சு. அக்கா பின் பண்ணி விடுறேன்.” என அவளை இழுத்துக் கொண்டாள் கங்கா.

“அக்கா நீ பட்டு சேலை தான கட்டியிருக்க. ஒட்டியாணம் போடலாம்ல க்கா.” என கங்கவாவிடம் கேட்டவள் “ஓ பாப்பா உள்ள இருக்குறதால போடலையா?” என பதிலும் அவளே சொல்லிக் கொண்டாள்.

“சும்மா இரு அச்சு. நானே உன்னோட மாமா இன்னும் வரலனு இருக்கேன்.” என்றவள் தங்கையை தயாராக்கினாள்.

“கோபிமாமா லேட்டாவே வரட்டும் க்கா. அப்புறம் இன்னும் மூணு நாள்ல செமஸ்டர் எக்ஸாம் வெச்சிக்கிட்டு எதுக்கு கல்யாணத்துக்கு வந்த? படிச்சியா இல்லையா? புக் எடுத்துட்டு வா, நான் கேள்வி கேட்குறேன். அப்படியெல்லாம் கேட்டு வாத்தி அவதாரம் எடுப்பாங்க க்கா.” என கங்காவின் கணவர் கோபிநாத்தை போலவே சொல்லிக்காட்டினாள்.

அப்பொழுது, “வாங்க மாமா..” என சபாபதி விளையாட்டாக சொல்ல,

“ஐயோ நானில்லை மாமா.” என பயத்துடன் திரும்பியவளை பார்த்து கங்கா சபாபதி இருவருமே சிரித்துவிட்டனர். அவர்களை முறைத்துவிட்டு அவள் வெளியேற உள்ளே நுழைந்தாள் பூர்ணிமா.

அட்சயாவை போலவே அனார்கலி சுடியில் அழகாக கிளம்பி வந்திருந்தாள். அவளின் கண்கள் ஆவலுடன் சபாபதியை பார்க்க, “வா பூரி. நாம வெளிய போகலாம்.” என வேண்டுமென்றே சபாபதியை வெறுப்பேற்றிவிட்டு வெளியேறினாள்.

பரிமளம் வந்தவர்களை கவனித்து காஃபி கொடுத்துக் கொண்டிருந்தார். அட்சயாவையும், பூர்ணிமாவையும் ஒன்றாக பார்த்த உறவு பெண்மணி ஒருவர், “நம்ம சபாக்கு கூட பொண்ணு ரெடி போலவே. உன்னோட நாத்தனார் சுடர்கொடி பொண்ணு பூர்ணிமாவே அவனுக்கு சரியா இருப்பா போல.” என ஆரூடம் சொன்னார்.

“அச்சுவும், பூர்ணியும் இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்காங்க அத்தை. இப்பவே எதுக்கு அவங்க கல்யாணத்தை பத்தி பேசிக்கிட்டு..” என அவரின் சின்ன மாமியாரை கண்டித்தார்.

“அதான பரிமளா. நேரம் வந்தா பொண்ணு கொடுத்து கூட பொண்ணு எடுத்துக்கலாம். பூரணியோட அண்ணா ரோஷனும் நம்ம அச்சுவுக்கு முறைவரும் தான..” என அவர் அடுத்து பேசும் முன்,

“இதை மாதிரி வேற எங்கேயும் போய் பேசிடாதீங்க அத்தை. ஊர்ல இருக்க அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி வெச்சிருக்கவனுக்கு எதை நம்பி என் பொண்ணு கொடுக்க முடியும்? இனி என் பொண்ணை பத்தி இப்படியெல்லாம் பேசாதீங்க..” என அவரும் காரசாரமாக சொல்லிவிட்டே நகர்ந்திருந்தார். அதனை அங்கிருந்த தூணின் பின்னே மறைந்திருந்த ரோஷன் கேட்டுவிட்டான்.
 

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
“டி ஜே நல்ல நல்ல பாட்டா போடுறாங்க ஆடலாம் வா அச்சு.” என அட்சயாவை இழுத்துக்கொண்டு சென்றாள் பூர்ணிமா. அவர்கள் வயது தோழிகளுடன் சேர்ந்து வட்டமாக நின்றுக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடினர்.

சபாபதி பம்பரமாக சுழன்று வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது அவனின் கண்கள் பூர்ணிமாவையே வட்டமடித்தன. பூர்ணிமாவும் கள்ளத்தனமாக அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். இதுவரை நேரில் காதலை பகிர்ந்துக்கொள்ளாத இருவரும் அவ்வப்பொழுது பார்க்கும் சமயம் பார்வையாலே காதலை பரிமாறிக்கொண்டனர்.

“உன் தங்கச்சி கூட ஆடிட்டு இருக்க பொண்ணு யாரு டா ரோஷன். செம்மையா இருக்கா?” என அட்சயாவின் அங்கங்களை ரசித்தபடி ரோஷனிடம் காண்பித்து கேட்டான்.

“நீ அவளை அப்படி பார்க்காத டா. அவ என்னோட மாமா பொண்ணு தான்.” என ரோஷன் அவனை மிரட்டினான்.

“அப்ப உனக்கு இல்லன்னு சொல்லு. ஊர்ல உனக்குன்னு பொண்ணு கொடுக்க யார் வருவா. இருக்க கெட்ட பழக்கம் எல்லாத்தையும் குத்தகைக்கு எடுத்து வெச்சிருக்க..” அட்சயாவை ரசிப்பதற்கு தடை சொன்ன கடுப்பில் ரோஷனை கீழாக பேசினான்.

“சென்னைக்கு படிக்க போறான்னு வேற சொல்லுற.. இப்பலாம் காலேஜுக்கு படிக்க போறதுக்கு பதிலா எல்லாரும் லவ் பண்ண தான் போறாங்க. கண்டிப்பா உன்னை விட நல்ல பையனை தான் அவளும் லவ் பண்ணுவா. பார்த்துக்கோ ரோஷன்.” என அறிவுரையாக மற்றொருவனும் சேர்ந்து ரோஷனை கடுப்பேத்தினான்.

அட்சயாவின் மேல் ஆசைக்கொண்ட ரோஷனிற்கு அவன் சொல்வது கோபத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது. ஏற்கனவே அவளிடம் காதலை சொல்லி மறுப்பை பெற்றிருந்தவன், இன்று பரிமளத்தின் பரிணாமத்தையும் பார்த்திருக்க, கூடியிருந்த நண்பர்களின் கேலியில் அவனின் மனதில் வன்மம் கூடியது.

அந்த வன்மம் அவ்வளவு நாள் அவனின் மனதில் காதல் என அவன் நினைத்திருந்த நினைப்பை உதறி தள்ளியிருந்தது. அந்த வன்மமே, எப்படியாவது அவளை அடைய வேண்டும் என குறுக்கு வழியில் யோசிக்க வழிவகுத்தது.

நாம் நேசிப்பவருக்கு நம்மை பிடிக்கவில்லையென்றால், அவர்களுக்கு நம்மை பிடிக்க வைக்க நல்வழியில் முயற்சி செய்யலாம்; இல்லை அவர்களை விட்டு முழுவதுமாக விலகிவிடலாம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நன்மை ஆகும். ஆனால் இங்கு ரோஷன் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்திருந்தான். அதன் விளைவு?

இரவின் தனிமையில்
நடந்த அனைத்தையும் ஆவுடையப்பனிடம் பரிமளம் சொல்லியிருக்க, “இருந்தாலும் நீ கொஞ்சம் யோசிச்சி பேசிருக்கலாம் பரிமளா. அவங்க சொன்னா என்ன நாளைக்கேவா நம்ம அச்சுவுக்கு கல்யாணம் பண்ண போறோம்? எதுக்கு இப்படி எடுத்தெரிஞ்சு பேசியிருக்க?” என ஆவுடையப்பன் சத்தமிட,

“உங்களுக்கு என்னோட கவலையை சொன்னா புரியாதுங்க. நம்ம கங்கா வயசு இருக்கும் உங்க தங்கச்சி பையனுக்கு. இன்னும் டிகிரி வாங்காம; உருப்படியா எந்த வேலையும் செய்யாம; கெட்ட பழக்கவழக்கம் இருக்கவன் கூட என்னோட பொண்ணை சேர்த்து வெச்சி பேசினா எனக்கு கோவம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தையெல்லாம் முளையிலே கிள்ளிவிடனுங்க இல்லனா நாமளே அவங்க பேசுறது வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகிடும்.” என தாயாய் சொன்ன பரிமளத்தை அவுடையப்பன் தான் சமாதனப்படுத்தினார்.

மறுநாள் சுபமுஹூர்த்த வேளையில், பிரவீன் மற்றும் ரேகாவின் திருமணம் நடந்து முடிந்தது.

அட்சயா, அடர் பச்சை நிறத்தில் பாவாடையும் சட்டையும் அணிந்திருக்க, வெளிர் பச்சை நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள். இடுப்பில் ஒட்டியாணம், செட்டாக நகை என அணிந்து மண்டபத்தையே வலம் வந்திருந்தாள். பரிமளம் எவ்வளவு சொல்லியும் சேலை காட்டாமல் பாவாடை தாவணி தான் அணிந்திருந்தாள்.

பூர்ணிமாவோ சேலையில் வந்திருக்க அவளை மெச்சும் பார்வை பார்த்திருந்தான் சபாபதி. அட்சயாவுடன் தாவணி தான் அணிவேன் என்றிருந்தவளிடம் சேலையை அணியுமாறு வேண்டுதலை அவன் தான் அவளிடம் வைத்தான். எனவே அவனுக்காகவே சேலை அணிந்திருந்தாள்.

“சேலையை மேனேஜ் பண்ணுறது கஷ்டமா இருக்கு அச்சு. அங்கங்கே குத்தின பின் வேற குத்துது..” என குறைப்பட்டுக்கொள்ள,

“அதுக்கு தான் நான் உஷாரா தாவணி போட்டுட்டேன்.” என சிரித்தவளை வெறித்தன ரோஷனின் வஞ்சக விழிகள்.

அனைத்து உறவினர்களும் மேடையில் பரிசுபொருள் கொடுத்து; ஆசிர்வாதம் வழங்கி; புகை படமும் எடுத்துவிட்டனர்.

காலை பத்து மணியை தாண்டியிருக்க, சிலர் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தனர். மறுவீடு, மதிய சாப்பாடு என ஒரு சிலரே மண்டபத்தில் இருந்தனர்.
 

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மண்டபத்தின் மூலையில் அமர்ந்து ரோஸ் மில்க் குடித்தப்படியே கதை பேசிக்கொண்டிருந்தார்கள் குருபிரசாத்தும் அபிலாஷும். குருபிரசாத்தின் வேட்டியில் தவறுதலாக ரோஸ் மில்க்கை கொட்டிவிட்டான் அபிலாஷ்.

“டேய் எருமை. இப்படியாடா கொட்டுவ?” என அபிலாஷை திட்டிக்கொண்ட எழுந்தான் குரு. வெள்ளை நிற வேட்டியில் ரோஸ் மில்க் கொட்டி சிவப்பு நிறமாக காட்சியளித்தது. அபிலாஷை முறைப்புடன் பார்த்தான் குருபிரசாத்.

“வா டா போய் டிரஸ் மாத்தலாம். மாத்திட்டு அப்படியே கிளம்பலாம்.” என்ற குரு நொடியும் நிற்காமல் எழுந்துச் சென்றான். தனியாக அங்கு மூட்டையை தூக்கி சென்ற சுதனிடம் சென்று அவனுக்கு உதவிவிட்டே அபிலாஷ் மேலேறினான்.

நண்பர்களின் துர்போதனையால் மூளை மழுங்கியிருந்தான் ரோஷன். “என்ன செய்யலாம்? அட்சயா சென்னைக்கு போய்ட்டா அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியாது. அங்க வேற யாரயாவது அவ லவ் பண்ணிட்டா? இல்ல இல்ல அப்படியெல்லாம் நடக்காது.
என்ன செய்யலாம்?” என தீவிரமாக மேல் மாடியின் படிகளில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த ரோஷனின் கண்ணில் அபிலாஷ் அந்த அறைக்குள் செல்வது தெரிந்தது.

உள்ளே சென்ற அபிலாஷ், “இன்னுமா டா டிரஸ் மாத்திட்டு இருக்க?” என பாத்ரூமின் கதவை தட்டினான்.

“இரு டா குளிச்சிட்டே வரேன். ஒருமாதிரி பிசுபிசுன்னு இருக்கு.” என குரு குரல் கொடுத்தான்.

அந்நேரம் அபிலாஷுக்கு அழைப்பு வர அங்கு சிக்னல் இல்லாததால் குருவிடம் சொல்லிவிட்டு வெளியேறி மாடிக்கு மேலே சென்றிருந்தான்.

அவன் உள்ளே சென்றது, வெளியேறியது என அனைத்தையும் பார்த்த ரோஷனின் மூளைக்குள் கேடு கெட்ட எண்ணம் உதித்தது. அதன்படி கீழே சார்ஜில் இருந்த பூர்ணிமாவின் ஃபோனை ஏற்கனவே எடுத்து கையில் வைத்திருந்தவன், அவசரமாக மேலே வரும்படி அட்சயாவிற்கு தகவல் அனுப்பினான்.

கீழே, மசக்கையில் மயக்கமாக இருந்த கங்காவுடன் அமர்ந்திருந்த அட்சயா, அந்த மெஸேஜை பார்த்துவிட்டு பூர்ணிமாவிற்கு அழைத்தாள். அவள் அழைப்பை நிராகரித்த ரோஷன், “யார்கிட்டயும் சொல்லாம மேல வா அச்சு ப்ளீஸ்..” என மீண்டும் தகவல் அனுப்பியிருந்தான்.

அட்சயாவும், ‘ஒருவேளை அண்ணா விஷயமா இருக்குமோ? யார்கிட்டயவது மாட்டிக்கிட்டாங்களா?’ என பதறியபடி கங்காவிடம், “பூர்ணிமாவை பார்க்க போறேன்.” என சொல்லிவிட்டு மேல் தளத்திற்கு சென்றாள்.

அந்நேரத்தில் பூர்ணிமாவிடம் வெளிவாயிலில் நின்று சபாபதி பேசிக் கொண்டிருந்தான். அதனால் அவர்கள் இருவருமே அட்சயாவின் கண்ணில் விழவில்லை.

மேலே யாருமில்லாததை பார்த்த அட்சயாவின் உள்ளுணர்வு எச்சரிக்க, மீண்டும் பூர்ணிமாவிற்கு அழைப்பு விடுத்தாள். “நான் ரூம்ல தான் இருக்கேன் அச்சு. எமெர்ஜன்சினு கூப்பிட்டா கூட உள்ள வர மாட்டியா? என்னால வெளிய வர முடியாத நிலைமை.” என சில கண்ணீர் உகுக்கும் பொம்மைகளை சேர்த்தே ரோஷன் அனுப்பினான்.

‘ஐயையோ! பூரிக்கு என்னாச்சு?’ என மனதில் உதிர்த்த பதட்டத்துடன் அறைக்குள் அட்சயா சென்றாள். அவ்வளவு நேரம் அங்கிருந்த தூணின் பின்னே மறைந்து அவளை கண்காணித்த ரோஷனும் அந்த அறைக்குள் சென்றவுடன் அவனின் நண்பர்கள் கதவை வெளியிருந்து தாளிட்டுவிட்டனர்.

கதவை சாத்தும் சத்தத்தில் பதறி திரும்பிய அட்சயா நிச்சயம் அங்கே ரோஷனை எதிர்பார்க்கவில்லை. “என்..என்ன பண்ணுற ரோஷன்? பூரி இங்க இருக்கானு தான் வந்தேன். மரியாதையா கதவை திற..” என கதவை நோக்கி நடந்தாள்.

“இங்க பாரு அச்சு. எனக்கு உன்னை பிடிக்கும். ஆனா எனக்கு வேற வழி தெரியல..” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சபாபதியை அழைக்க முயன்ற அட்சயாவின் ஃபோனை பிடுங்கி கீழே போட்டவன், “இன்னும் கொஞ்ச நேரத்துல நாமளே வெளிய போய்டுவோம்.” என அவன் சொல்லிக் கொண்டிருக்க கதவை தட்ட அதனின் அருகே சென்றாள்.

“உன்னை எதுவும் பண்ணுற ஐடியா இல்லை. நீயா எதையாவது பண்ணி என்னை தூண்டி விடாத..” என அவளை மீண்டும் அறைக்குள் இழுத்தான்.

பயம், பதட்டம், ஏமாற்றம், குழப்பம் என அனைத்து உணர்வுகளின் கலவையாக தவித்தாள் பின் பதின்ம வயதில் இருக்கும் பாவை. ஆனாலும் பின் வாங்காமல், “காப்பாத்துங்க.. யாராவது காப்பாத்துங்க..” என அவள் கத்த துவங்க,

“சொல்லிகிட்டே இருக்கேன். வாயை மூடு டி..” என அவளின் வாயை மூடியபடி இழுத்து கட்டிலில் தள்ளியவன், அவளை நெருங்கினான்.

“இங்க பாரு ரோஷன். நா..நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை விட்டுடு..” என பின்னே நகர,

“எது சொல்ல மாட்டியா? இந்நேரம் என்னோட நண்பன் ஊரையே கூட்டிட்டு வாசல் பக்கம் வந்திருப்பான். நாம ஒண்ணா இருக்குறதை பார்த்தா எல்லாரும் என்ன நினைப்பங்கன்னு சொல்லு அச்சு டார்லிங்..” என அவளின் கன்னத்தை நிமிண்டினேன்.

அவன் சொல்ல சொல்ல தானே வந்து படுகுழியில் மாட்டியதை உணர்ந்தவள் நீயா என அவனை அருவருப்பாக பார்த்தாள். “கையேடு டா நாயே..” என அவனின் கையை தட்டிவிட்டு அவனையும் தள்ளிவிட்டவள் மீண்டும், “யாராவது காப்பாத்துங்க..” என சத்தமாக கத்த துவங்கினாள்.

‘நம்ம ரூம்ல என்ன பொண்ணோட குரல் கேட்குது?’ என அவசரமாக துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்தான் குருபிரசாத். அட்சயா முதல்முறை அப்பொழுது தான் குருபிரசாத்தை காண்கிறாள். அதுவும் இடுப்பில் துண்டுடன்!

ஏற்கனவே காமூகனாக எண்ணம் கொண்டவனின் பிடியில் இருந்தவள் துண்டுடன் வேறொரு ஆடவன் குளியலறையில் இருந்து வரவும் உடல் நடுங்க துவங்கியது அட்சயாவிற்கு. ‘யாராவது கதவை திறக்க மாட்டார்களா?’ என கதவை நோக்கி சென்றவளை மீண்டும் இழுத்து பிடித்தான் ரோஷன்.

“ஏய். நீ யாரு ? அந்த பொண்ணை என்ன பண்ணுற?” என கேட்டுக்கொண்டு முன்னேறினான் குரு.

“இது உனக்கு தேவையில்லாத வேலை. மூடிட்டு போடா..” என சில கேட்ட வார்த்தைகளையும் ரோஷன் சொல்ல பளாரென்று அவனின் கன்னத்திலே அறைய அவனின் பாக்கெட்டில் இருந்த பூர்ணிமாவின் கைபேசி கீழே விழுந்தது.

அந்நேரம் தன்னை காக்க வந்த ரட்சகனாக தான் அட்சயாவின் கண்களுக்கு குருபிரசாத் தெரிந்தான். “சார் ப்ளீஸ்.. என்னை இவங்கிட்ட இருந்து காப்பாத்துங்க..” என கையெடுத்து கும்பிட்ட அட்சயா குருவின் பின்னே சென்று ஒழிந்துக் கொண்டாள்.

கதவு வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டிருக்க, ரோஷனை மிதித்த குரு, அபிலாஷிற்கு அழைக்க கைபேசியை எடுத்தான். அந்நேரம் ஆட்களை கூட்டிக்கொண்டு வந்த ரோஷனின் நண்பன் கதவை திறந்தான்.
 

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
குரு அச்சு ரோஷன் மூலமாக சந்திக்கிறாங்களா ரோஷன் இன்னும் நாலு அடி போடணும்.
 
  • Love
Reactions: STN - 92