• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்யாயம் -5

STN20

New member
Staff member



அத்யாயம் -5



யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவளுக்கு அவன் அல்லவா? அவனுக்கு அவளை பற்றி தெரியுமா தெரியாதா ?

வீட்டுப் பெரியவர்களின் அறிவுரையினால், விவாகரத்து ஆனவர்களுக்கான தளம், சாதாரண திருமண தளம் என்று எல்லாவற்றிலும் போட்டார்கள். அத்தனையும் செல்வியின் தலைமையில் தான் நடந்தது.

"இங்க பாரு சிவகாமி . அந்த கல்யாணத்திலேயே உங்க வீட்டுக்காரரோட அண்ணன் நம்மை எல்லாரையும் ஒதுக்கி வைச்ச மாதிரி பண்ணிட்டாரு. அதுனால வந்த வினை தான் இது. என்னதான் இருந்தாலும் , பெண்ணைப் பெத்தவ உனக்குத் தெரியாதா., இல்ல நம்ம செல்வி, வெற்றி, எல்லாரையும் தூக்கி வளர்த்த எனக்கு நம்ம பையன் எந்த மாதிரின்னு தெரியாததா? நிச்சயம் பண்ணவ ஓடிட்டானா ஒடனே அவங்க வீட்டுலே பொண்ணு எடுக்கணுமா என்ன? அதான் கடவுள் இந்த வீடு வேண்டான்னு சொல்லி தானே அந்த சம்மந்தம் வேண்டான்னு நிறுத்தினார். அப்புறம் என்ன உங்க ரெண்டாவது பொண்ணு முனாவது பொண்ணுன்னு.. எனக்கு அப்பவே அவ்ளோ கோபம் வந்துச்சு அந்த மனுஷன் மேல. சரி உங்க வீட்டு ஆளுங்க. அதுனால வாயை மூடிக்கிட்டேன். அவளும் தான் பாக்க அப்படியே ரதி மாதிரியா இருந்தா? குண்டா நல்ல குண்டு பூசணிக்கா மாதிரி. நம்ம பையனோட அழகுக்கு நினச்சுருந்தா எவ்ளோ அழகான பொண்ணுங்க வந்து நிக்கும்.

கதிர் நீ ஒன்னும் கவலைப்படாத. நாங்க எல்லாரும் இருக்கோம். எப்படியோ அந்த மூதேவி வீட்டை விட்டு ஒழிச்சு கட்டியாச்சு. உனக்கு இனிமே எல்லாமே நல்லதாவே நடக்கும். தொழிலும் பாரு அமோகமான வளர போகுது .

பெரியம்மாவின் அறிவுரைப் படித்தான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

"அண்ணா இந்த பொண்ணு பாரேன். பாக்க அப்படியே அசப்புல நம்ம நதியா மாதிரி இல்ல ?

"யாரு நதியா?'

" சினமா நடிகை?"
"ஓ " என்றான். அவனுக்கு எங்கே சினிமா பார்க்கும் பழக்கம் எல்லாம் இருந்தது . மனைவி சாரி! முன்னாள்மனைவி அழுது கேட்டபோது கூட சினிமாவுக்கு அழைத்துச் செல்லாதவனுக்கு நதியாவும் நயன்தாராவும் எங்கே தெரிந்துவிடப் போகிறது?

"இவளைப் பாரேன்.இந்த பொண்ணு அந்த சீரியல் நடிகை மாதிரியே இருக்கா . இவளை பாரேன் அவளை மாதிரி இருக்கா. இவளை மாதிரி இருக்கா."

"அம்மா நீங்களே ஏதோ ஒரு பெண்ணை பாருங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. "

புதியதாக ஒரு அடுக்ககம் முழுக்க இவர்களின் வேலை நடந்து கொண்டிருந்தது.

அதில் இவன் சற்று பிஸியாகவே இருந்தான். அடுத்த சில மாதங்களில் இவனுக்கு வேலை பாதிக்கு மேல் முடிந்திருக்க யாரோ ஒரு பெண் காபி குடிக்க அழைத்தாள்.

அவளுக்கும் இது மறுமணம் தான்.

"ஹை! கதிர் ?"

கண்களில் கேள்விக் குறியுடன் இவனிடம் கைக் குலுக்கினாள். ஸ்டைலாக இருந்தாள். முழங்கால் ஏரிய ஸ்கர்ட்டும், இன் பண்ணி இருந்த மேல் சட்டையும் அவளின் அழகை தெளிவாகக் காட்டியது. "நீ கண்ணை பார்த்து பேச மாட்டியா? உன்னோட கண்ணு மத்த இடத்துல தான் பாக்குமா?" யாரும் கேட்க கூடாது.

இப்போது மலரின் முகமும், உடையும் கண்ணில் வந்து போனது.

வீட்டுல எப்பவும் புடவைதான் கட்டணும். சுடிதார் போடக் கூடாது.

பாவம் அந்த சரியான காற்று வசதிக் கூட சரியாக இல்லாத சமையல் அறையில் நாள் முழுவதும் நின்றுக் கொண்டிருப்பாள். அப்ப அந்த அழுக்கு நைட்டி கதை அது மட்டும் இல்லை எல்லாம் பொய் தான்!

கதிரின் கவனம் அந்த பெண் மீது சென்றது. ஏதேதோ சொன்னாள். நிச்சயம் தனக்கு இது சரியாக வராது. அவன் சொல்வதற்கு முன் அவளே சொல்லி விட்டாள் . இருவரும் கை குலுக்கி விட்டு கிளம்பினார்கள்.

இதேப் போல வேறு ஒருத்தி. செம்மொழி பூங்காவில் சந்திப்பு. அவள் பேண்டும் சட்டையும் போட்டிருந்தாள். உதட்டு சாயம் சற்று அதிகப் படி தான். படபடக்கும் விழிகள் தோரணையாய் பேச்சு எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தால் யாரையும் மயக்கி விடும் . இவன் அங்கே இருந்த ஆவினில் ஒரு காபி குடித்தான். அவள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட இவனும் எதுவும் சொல்லவில்லை. வீட்டிற்குச் சென்று இவன் வேண்டாம் ரொம்ப லோ கிளாஸ் என்றாள் .

வேறு ஒருத்தி.. ஓ அம்மா இருக்காங்களா ? இவனுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது.

வேறு ஒரு அழகி . கல்யாணம் ஓகே. பண்ணிக்கலாம். பட் கிட்ஸ் என்னால முடியாது. எனக்குன்னு நிறைய ஆம்பிஷன் இருக்கு . நான் ரொம்ப கேரியர் போக்கஸ்.

மீண்டும்.. இன்னொரு பெண். அவளுக்கும் திருமணம் ஓகே. ஆனால் குழந்தை வேண்டாமாம். நிறைய ஊர் சுற்ற வேண்டுமாம். அதற்குத் தான் சொந்த தொழில் செய்பவனை பார்த்தாளாம் . வெளியில் வேலை பார்த்தால் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது கஷ்டம் இல்லையா?

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ரகம். கதிர் பொறுத்தவரை இது எல்லாம் தப்பு தான் என்று சொல்லக் கூடியவன். அவன் இன்னும் பழைய காலம் தான் . ஆணாதிக்கம் அதிகப் படிதான் . அவன் எந்தப் பெண்ணையும் புரிந்து கொள்ளவில்லை. அவன் பெண்டாட்டியையும் புரிந்துக் கொள்ளவில்லை. அதனால் தன இப்படி இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

எதுக்கு முதலில் விவாகரத்து என்ற கேள்விக் கணைகள் இவனை நோக்கி வந்தன .இப்போது அவன் மிகவும் சோர்ந்து விட்டான். ஒவ்வொருப் பெண்ணும் பேசும் பேச்சுக்கள் அப்பப்பா .இதற்கு மேல் முடியாது. மலர் போல ஒரு பெண் வேண்டும் முதலில் நினைத்தான் . பிறகு அவளைப் பற்றி யோசித்தவனுக்கு அவள் எப்படிப்பட்டவள் என்று ஆராயத் தொடங்கினான்.

இதற்கு நடுவில், அவன் அன்னை உடலில் மாற்றங்கள் வர ஆரம்பித்தன.

கிட்னி பிரச்சனை இருக்கிறது தான். இத்தனை நாட்கள் உணவு மூலமே பார்த்துக் கொண்டிருந்தாள் மலர். இப்போது எல்லாமே மாறவும் சிவகாமியாலும் முன் போல வேலை செய்ய முடியவில்லை. இரண்டு பிள்ளைகள் தான். இருந்தாலும் அவர்களுக்கு சமையல் செய்து பிறகு தனக்கு தனியாக செய்து முடிவதில்லை. வீட்டு வேலை செய்ய ஆள் போட்டான். அந்தப் பெண் நடுவில் மட்டுமே பெருக்குவாள். ஓரங்களில் குப்பை அப்படியே இருக்கும். பாத்திரம் தேய்ப்பாள். அந்த இடம் சுத்தம் செய்ய மாட்டாள் . "எனக்கு தினமும் காலில காபி டிபன் வேணும்." பல கண்டிஷன்கள். சில வேலைகள்.

அங்கே இங்கே என்று எது தொட்டாலும் பிரச்சனையாகவே போய் கொண்டிருக்கிறது. மலர் தான் அந்த வீட்டிற்க்கு ஆணி வேர். அதை அவனாகவே புரிந்துக் கொண்டிருக்கலாம். அதுதான் இல்லையே. சரி நான் தான் இருக்கிறேனே களமும் அனுபவங்களும். அவன் படட்டும் . பட்டால் தான் மனைவியின் அருமை புரியும்.

============================================

மலருக்கு இரவு உணவு கொடுத்து மாத்திரைக்கு கொடுத்து சமையல் அறை சுத்தம் செய்து என்று அன்றைய நாள் முழுவது ஆரிவ் கண் சிமிட்டவும் மறந்துப் போகும்படி வேலைகள் இருந்தன. அனைத்தும் முடித்து மலருக்கு அருகில் அடுத்த கட்டிலில் வந்து படுத்தவனுக்கு எனோ அந்த கோயில் அழகி நினைவில் வந்தாள். வாலிப வயது வேலை செய்யட்டுமே !

மறுநாள் காலை எழுந்த மலருக்கு இப்போது தலையில் லேசாக வலி தெரிய ஆரம்பித்தது . ஸ்ஸ்ஸ் ! என்ற லேசாக முனங்கியபடி எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சமையல் அறைக்கு விரைந்தாள் .

ஆரிவ் அங்கே கண்களை துடைத்துக் கொண்டு வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தான் கொடு ஆரிவ் நான் செய்கிறேன் என்று இப்போது வெங்காயம் ,காய்கறிகளை

அவள் நறுக்க தொடங்கியிருந்தாள் .இப்போது அவன் அவர்கள் இருவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து வைத்தான் நறுக்கிய காய்கறிகளில் காய்களை அவன் சமையல் செய்ய வசதியாக ஒரு பெரிய தட்டு எடுத்து வைத்துவிட்டு கருவேப்பிலையை எடுத்து மஞ்சள், கல் உப்பு போட்டு நீரில் ஊறவைத்தவள் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு அவன் அருகில் வந்து காப்பியை குடிக்க தொடங்கினாள். "இப்ப வலி எப்படி இருக்கு?" என்று ஆதரவாக அவளை தலைக்கட்டில் லேசாக கை வைத்துப் பார்த்தான் .

"பரவாயில்ல . லைட்டா இப்ப வலி தெரிய ஆரம்பிச்சிருக்கு."

டாக்டர் காலையில போடுறதுக்கும் மருந்து கொடுத்து இருக்காங்க போட்டுகிட்ட வலி தெரியாது.

" இல்லடா நான் வலி தெரியாம இருக்க மாத்திரை எடுத்துக்க வேண்டாம் என்று பார்க்கிறேன் ".

"ஏன்?" என்று புரியாமல் வினவினான் அவன்.

" எவ்வளவு வலி பாத்துட்டேன் . இதெல்லாம் ஒரு விஷயமா? பரவால்ல. இதுவும் கடந்து போகும்." என்றவள் தநது காபி கப்பில் கவனம் செலுத்தினாள் .

மேற்கொண்டு இதைப்பற்றி பேச்சை வளர்க்க விரும்பாதவன் அமைதியாக காப்பியை பருக ஆரம்பித்தான்.

" ஜிம்முக்கு லீவு சொல்லிட்டியா?" அவள்தான் கேட்டாள் .

"ஆ! சொல்லிவிட்டேன் தீனா தான் போன் எடுத்தான் நான் பாத்துக்குறேன் அக்காவ நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க" என்று சொன்னான்

"ம் தேங்க்ஸ் டா!"

"இட்ஸ் ஓகே ! காலேஜ் லீவு தானே "

"ம்! இன்னும் நாலு நாள் கவலைப் படவேண்டாம்."

"நீ இன்னிக்கு முழுக்க ரெஸ்ட் எடு. ஈவினிங் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன் "

"ம் . பரவயில்லை. நீ உன்னோட வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு வா. நான் பார்த்துக்கறேன். சொன்னவள் இருவரின் காபி மஃகையும் எடுத்து கழுவி விட்டு அவனுக்கு சமையல் அறையில் உதவப் போனாள்

இருவருமே பேசிக் கொண்டே வேலை செய்தார்கள்.

“தாத்தா பாட்டியை பார்த்துட்டியா. எப்படி இருக்காங்க?

"ம்! நல்லாத்தான் இருக்காங்க. பாட்டிக்கு தான் லைட்டா கால் வீங்கி இருக்கு. பேரன் அவங்க கூட வந்து இருங்கன்னு சத்தம் போடறானாம். பாட்டிக்குப் போகணும் போல தான் இருக்கு. ஆனா தாத்தாதான் பிடிவாதமா வேண்டாங்கறார் "

"ம்"கொட்டினாள் மலர்.

"யாராவது என் பொண்டாட்டியை ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுங்கறார். எனக்கு யார் பக்கம் சரி தப்புன்னு சொல்லத் தெரில மலர் "

"ம் ! இப்போதும் அமைதியாக "ம்" கொட்டினாள்.

"தாத்தாவுக்கு தான் பாட்டி மேல எவ்ளோ லவ் ! சான்ஸே இல்ல இல்ல ?"

அவள் சொன்னதற்கு இப்போது இந்த கேள்வியை கேட்பதா வேணாமா யோசித்து தான் கேட்டான்.

"ஏன் மலர் ஒரு வேளை உன்னோட கணவர் உன்கிட்ட வந்து தான் செய்தது எல்லாம் தப்பு என் கூட வந்துடுன்னு சொன்னா நீ என்ன முடிவெடுப்ப?"

"ஆரிவ்! நீ தாத்தா பாட்டி கேஸையும் என்னோட கேஸையும் ஒன்னா வச்சு பாக்கறது தப்பு. அவங்க ரெண்டு பேருமே அம்பது வருஷமா ஒண்ணா சேர்ந்தே தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. தாத்தா கூட்டு குடும்பத்துல இருக்கனுன்னு தான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார். அதே சமயம் அவர் எந்த சமயத்துலையும் தன்னோட எந்த உறவுகளையும் விட்டுக் கொடுத்ததே இல்லை. பாட்டி பிரசவத்துக்கு போன போது தாத்தாவால ஒரு மாசம் கூட அவங்க இல்லாம இருக்க முடியலையாம். என்னால நீ இல்லாம முடியாதுன்னு சொல்லி பொண்டாட்டி புள்ளய கையோட கூட்டிட்டு வந்துட்டாராம் . அந்த நிலைமைல மனைவி கூட காமம் வச்சுக்க முடியாதுங்கறது அவருக்கு தெரியாதா ? அந்த இடத்துல உடல் தேவை இல்லாம மனசுதான் அவருக்குத் தேவைபட்டிருக்கு. ஒனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? பாட்டி கிட்ட அவரு, நீ எனக்கு முன்னாடி போய்டு. நான் இல்லாம உனக்கு இந்த உலகத்துல எதுவுமேத் தெரியாது. உன்ன தவிக்க விட்டுட்டு நான் போக மாட்டேன்னு சொல்லுவாராம். அதுக்கு பாட்டி, ஏண்டா கிழவா நான் இல்லமா உன்னால இருக்க முடியுமான்னு கேப்பாங்களாம். அவ்ளோ அன்யோன்யம் இல்ல ? பட் கதிர்! நிச்சயம் இந்த மாதிரி எல்லாம் இல்லை. அவருக்கு எப்பவுமே தான், தன்னுடைய குடும்பம், அவர் அம்மா, அவர் தங்கச்சி, தம்பி அவ்ளோதான் அவர் உலகம். அந்த உலகத்துல என்னிக்குமே நான் கிடையாது. நான் மட்டும் இல்ல எந்த பொழுதுபோக்கும் கூட கிடையாது. அவர் பொறுத்த வரைக்கும் அவர் குடும்பம் சந்தோஷமா இருந்தா அது அவருக்கும் அது சந்தோஷம் . நான், அவர் எங்க குழந்தைங்க இந்த மாதிரி எண்ணம் கூட அவருக்கு வரவே வராது. தன்னுடைய குடும்பம் அப்படிங்கற எண்ணம் கூட வந்துடக் கூடாதுனு அவர் குடும்பத்து ஆளுங்க ரொம்ப கவனமா பார்த்துப்பாங்க . எல்லாத்தையும் மீறி .. யோசிக்கவே யோசிக்காத . "

"அப்ப நீ தாத்தாவோட அவரை கம்பேர் பண்ணறியா ?"

"பண்ணா என்ன தப்பு. எந்த ஒரு பெண்ணும், தன்னுடைய கணவன் தனக்கு மட்டும்தான்னு நினைப்பா தானே. என் கணவர் என் முகம் கூட பார்க்க விடாம எந்நேரமும் அவர் குடும்பம் மட்டுமே தான் உலகம்னு வாழறவரு வீட்டு வேலை செய்ய ஆள் போட்டுக்கணும். மனைவிங்கற பேர்ல ஏமாத்தி கல்யாணம் செய்துக்க கூடாது தானே. நாளைக்கு உனக்கே கல்யாணம் ஆகும். அப்ப உனக்கும் உன் மனைவிக்கும் நான் ஸ்பெஸ் கொடுத்துதான் ஆகணும். இல்லன்னா அது அந்த பொண்ணுக்கு நாம் ரெண்டு பேருமே செய்யற நம்பிக்கை துரோகம் இல்லையா ?"

தாத்தாவுக்கும் அவருக்கும் கம்பரீசனான் னு கேட்டா எனக்கு சரியா பதில் சொல்லத் தெரியல. பட் எனக்கும் தாத்தாவை போல ஒரு கணவன் கிடைக்கலையேன்னு உள்ளுக்குள்ள ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு ஆரிவ்"

"தாத்தா போல கணவனா இல்ல உன் கணவர் தாத்தா போல இல்லையேன்னு கவலையா ?

அவனின் இரட்டை அர்த்தப் பேச்சில் அவனை லேசாக முறைத்தவள், "இது காமெடி டைம்மா? "என்றாள் .

"சரி நான் சீரியஸா கேக்குறேன். ஒரு வேளை அவருடைய முழு உலகமும் நீதாணு வந்து நின்னா நீ ஏத்துக்குவியா?"

"ஆரிவ் ப்ளீஸ் ! கற்பனை கூட எனக்கு அந்த மாதிரி வராது."

"அப்ப நேத்து நடந்தது?"

" அது எதுனாலன்னு எனக்குத் தெரியல . சீக்கிரமா ஏதாவது பூனைக் குட்டி வெளில வரும் . அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரு என்னையே சுத்தி வர்றதுக்கு அவங்க வீட்டுல விட்டுடுவாங்களா? அது ஏதோ தலையணை மந்திரமாமே அது போட்டுட போறேன்னு அவங்க அம்மா அவரை என் பக்கம் கூட பாக்க விட மாட்டாங்க. என்னமோ நானும் அவரும் தினம் தினம் கட்டில்ல கிடந்து உருண்ட மாதிரி. நான் அவரு கூட இருந்த பல நாட்கள் ஒன்னு அவரு அவங்க அம்மாவோட இருப்பாரு. இல்ல ரெண்டு பேருமே ஹால்ல படுப்போம். செல்விக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் எங்க ரூம் கொடுத்திட்டு. பாவம் அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க இல்லையா?"

"ப்ளீஸ் விழி அது எது பத்தியும் யோசிக்காத "

வெளி வந்த கண்ணீரை முழுங்கிக் கொண்டு,

"உன்னோட ஆசைப்படியே அவரு என்னையே உலகமா சுத்தி வந்தாருன்னா என்னால அதை தாங்க முடியுமான்னு கூடத் தெரிலடா!" என்றாள் .

இப்போது முகம் திருப்பி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"இந்த உலகத்துல அன்பைத் தாங்க முடியாதவங்க யாருமே இருக்க முடியாது மலர் "

சொல்லி விட்டு அவள் தலை கோதி விட்டான் .

தொடரும் ...........
 
Top Bottom