அத்யாயம் -6
"இந்த உலகத்துல அன்பைத் தாங்க முடியாதவங்க யாருமே இருக்க முடியாது மலர் "
சொல்லி விட்டு அவள் தலை கோதி விட்டான் . மலர் பொதுவாக யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள். அதுவே தனக்கு நெருக்கமானவர்களிடம் அவள் கலகலப்பான பேர்வழிதான்.
அரட்டை அதிகமாகவே இருக்கும்.
தோழிகள் நிறையவே இருந்தார்கள் .
என்ன எப்ப பாரு போன்ல அரட்டை. மாமியாரின் சத்தம் கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிறகு அவளுக்கு போன் செய்வதைக் குறைத்துக் கொண்டார்கள். சித்தி அவங்க கூப்பிடறாங்க. மறுபடியும் கூப்பிடறேன். பிறகு எப்போது அழைத்திருக்கிறாள்?
"என்ன மலரு கல்யாணம் தானே ஆச்சு. பேச கூட மாட்டேங்குற?"
"அக்கா நாம எல்லாம் அவளை பார்த்து கண்ணு வச்சுடுவோமோன்னு அவளுக்கு பயம் தாண்டி வேறன்ன?" இது சொந்தங்கள் .
அது மட்டுமா ?
"என்ன நிர்மலா! நம்ம மலர் இப்படி வந்து நிக்குது . அவளுக்கு நீயாவது நாலு நகை நட்டு போட்டு விடக் கூடாது "
இப்படி டிசைன் டிசைனான சொந்தங்கள். கதிரின் அம்மா பண்ணி இருந்த பல கூத்துகளில் அவரின் சொந்தங்கள் யாரும் இருக்கிறார்களா என்றுக் கூட தெரியாது. சிவகாமி அவர் அக்கா, செல்வியின் கூட்டணி அமோகம் தான். போதாதக் குறைக்கு எல்லாரையும் தூக்கி எறிந்து பேசும் வெற்றி, மூஞ்சியிலேயே எரிந்து விழும் கதிர். போதுமா ?
கதிருடனான திருமணத்தில் அவளுக்கு இயல்பான பேச்சு மாறி இருந்தது. எல்லாரிடமும் எரிந்து விழ ஆரம்பித்தாள். தன்னை குறை சொல்ல இவர்கள் யார் என்ற கோபத்தினால் டுத்தவரிடம் குறை காண ஆரம்பித்தாள். சிரிப்பை மறந்தாள் சொந்தங்களால் புறக்கணிக்கப் பட்டாள். போதும் இன்னும் அடுக்க வேண்டாம். இத்யாதி போட்டு விடுவோம்.
ஆரிவ் அவளுக்கு தலை கோதிவிட்டு குளிக்கப் போனான் . எதுவும் நினைக்காத என்று அவன் அவளிடம் சொன்னாலும் அவன் மனம் ஏதோ ஒரு மாதிரி அலைப் பாய்கிறது. வேண்டாம் இந்த பழைய எண்ணங்கள் என்று ஒதுக்கினாலும் அவனால் ஒதுக்கவும் முடிவதில்லை. ஒதுங்கவும் முடிவதில்லை. மனா நல மருத்துவந்தான். இந்த நினைவுகள் தனக்கும் சரி மலருக்கும் சரி எந்த விதத்திலும் உபயோகமில்லை சொல்லிக் கொண்டுதான் இருவருமே நாட்களை கடத்துகிறார்கள். மலருக்கு உடல் தேறி வந்து விவாகரத்து வாங்கி இதோ கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியப் போகிறது. இப்போது கதிரின் வருகை இருவருக்குமே ஏதோ ஒரு விதத்தில் மனதில் சொல்ல முடியாத வருத்தத்தைத் தருகிறது.
அமைதியாக ஷவரில் நின்றாலும் மனம் நினைவுகளில் தான் மூழ்கி இருந்தது.
எனக்கு நிறைய கனவுகள் இருக்கு சொல்லிவிட்டு அவன் படிக்க வெளிநாட்டுக்குப் போய் விட்டான். முதலில் சில காலம் இருவருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. பிறகுதான் ஒரு பெரிய இக்கட்டில் நடந்த இவள் திருமணம். பிறகு வந்த நாட்களில் தொடர்பு இதோ அதோ என்று இருந்தது கூட அறுந்துப் போனது.
படிப்பு, அதற்குப் பிறகு சில காலம் அங்கே தங்க வேண்டிய சூழல் எல்லாம் முடித்துக் கொண்டு இந்தியா வந்த மருத்துவன் இவளை பார்த்த கோலம் என்ன? அந்த நாளை நினைத்து இப்போதும் அவனுக்கும் தான் கண்ணீர் வந்தது. இன்று அப்பாவியாக வந்து கண்ணீர் வடிக்கும் இதே கதிர் வேலு அன்று நடந்துக் கொண்ட விதம்?
இரவில் மழையில் மனைவியை விரட்டி அடித்தவன். மலர் ஆரிவ் இருவருக்குமே அதே எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.
வேண்டாம் எதுவும் வேண்டாம் அவசரமாக மனதை மாற்றிக் கொண்டாலும் ஒழுங்காக குளித்து விட்டு வந்தான். வெளியில் வந்து உடை மாற்றிக் கொண்டு வந்த போது அவன் பார்த்தது மலரைத்தான் .
கதிர் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது . அவசரமாக அவளுக்குத் தேவையான முதலுதவி செய்து விட்டு மருந்து கொடுத்து அவளை படுக்க வைத்தான் ஆரிவ் .
இது போல சில நேரங்களில் அவளுக்கு பேனிக் அட்டாக் வந்து விடும். அவள் கணவன் சார்ந்த ஏதோ விஷயங்கள் அவளுக்கு நினைவு வரும்போது இந்த நிலைக்கு வந்து விடுவாள். அதுவும் முக்கியமாக அவன் அவளை அடித்த நாட்கள், அல்லது மழையில் அவளை வெளியில் துரத்திய தினம் ஏதோ ஒன்று இன்னும் அவள் மூளைக்கு ஆறாத இரணமாகவே தான் இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மருந்து, மலர் மூளை இது எனக்கு வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும். அதற்குத்தான் அவள் பாடாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள் . நாம் அறியாத மருந்து காதல் செய்யும் மாயம். அவள் வாழ்வில் அவளுக்கென்று ஒரு ஜீவன் வர வேண்டும். அவளுக்கு அள்ள அள்ள திகட்டாத காதலை யாராவது தர வேண்டும். ஆரிவ் அவளுக்கு கார்டியன் தான். காதலன் இல்லையே!
அவளுக்கு ஏன் இப்போது இந்த பீதி நோய் வர வேண்டும்? அவள் கடந்த காலத்தை தான் எண்ணிக் கொண்டிருந்தாள் .
"ஏன் கதிர் ? எதுக்கு இப்ப இந்த டிராமா? எங்கிட்ட பறிக்க இன்னும் என்ன இருக்கு? "மனதிற்குள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு தானாகவே அன்றைய தினம் நினைவுக்கு வந்தது.
"அது என்ன நான் மட்டும் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா ? வீட்டுல வேலை செய்ய ஆள் போடுங்க. இல்ல ரம்யாவையும் வீட்டு வேலைல ஷேர் பண்ண சொல்லுங்க " ரம்யா வெற்றியின் மனைவி. அவர்கள் இருவரும் எப்போதும் ஹனி மூன் மூடிலேயே இருப்பார்கள். அவர்கள் அவிழ்து போட்ட உள்ளாடைகளை மலர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும் என்று மாமியார் சொன்ன போது ஆரம்பித்த பிரச்சனை . ஒன்று மாற்றி ஒன்று என்று வளர்ந்து கொண்டே போனது . என் மனைவி போலவே வெற்றியின் மனைவியும் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் கதிர் சொல்லியிருக்கலாம். சொல்லவே இல்லை. அவனும் தான் மலர் அந்த வீட்டுக்கு வேலைக்கென்றே வந்தவள் என்று நம்பினானோ ! எந்த ஒரு விஷயம் என்றாலும் மனைவிக்கு முன் வெற்றி தான் வந்து நிற்பான். தானாகவே எல்லாருக்கும் வந்த எண்ணம் ரம்யா வாய் திறக்காத மருமகள். தனக்கு நியாயம் கேட்கும் மலர் அடங்காப் பிடாரி.
"அவ சம்பாதிக்கறா. நீ வீட்டுல வெட்டியா தானே இருக்க. " முதல் தாக்குதல்.
"ஏன் அண்ணி எங்க அண்ணா வீட்டுக்கு செய்யறதுல உங்களுக்கு என்ன அவ்ளோ வெறுப்பு? நீங்க உண்மையிலேயே எங்க அண்ணாவை விரும்பினா இதை வேற குடும்பமா பாப்பீங்களா ?" இது செல்வி .
"நீ முதல்ல உன் குடும்பத்தை போய் பாரு. உங்க அண்ணா குடும்பத்தை பார்த்துக்க நான் இருக்கேன் "
மலருக்கு பளீரென்று கன்னத்தில் அரை விழுந்தது.
"அப்படித்தான் போடு டா . நானும் பொறுத்து பொறுத்து போய்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட மாமியார்ங்கற மரியாதை இல்ல. நம்ம செல்வியைப் பார்த்து இவளுக்கு என்ன அப்படி ஒரு ஆங்காரம். ரம்யா வெற்றி சந்தோஷமா இருந்தா இவளுக்கு அடி வயிறு பத்திகிட்டு எரியுதுடா " சிறப்பாக போட்டுக் கொடுத்தது மாமியார்தான் .
"ஆமா! எனக்கு பத்திகிட்டு வருது தான். நான் என் புருஷன் கூட ஒண்ணா உக்காந்தது கூட இல்லை . ஆனா அவங்க ரெண்டு பேரும் அப்படியா இருக்காங்க? எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது. உங்க பையன் என் மூஞ்சி கொண்டு கூட பாக்கறது இல்ல. உங்க அக்கா, அவன் சாமியாரா இருந்தா நீயும் அப்படியே இருன்னு சொல்லறாங்க. காலைல எழுந்துக்கணும். செக்கு மாடு மாதிரி வேலை செய்யணும். இந்த வீட்டுக்கு வந்த இந்த 700 நாளா இதை தான் நான் செய்துகிட்டு இருக்கேன். உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் ஹனி மூன் போகணும். உங்க ரெண்டாவது பையன் மாமியார் வீட்டுக்குபோகணும். ஹனி மூன் போகணும். சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருக்கனும். அதுவே நானும் இவரும் எந்நேரமும் இந்த வீட்டுக்கு உழைச்சு கொட்டிக்கிட்டே இருக்கனும். உங்க முதல் பையன் என்னிக்காவது சிரிச்சுருக்காறா . இல்ல சிரிக்க விட்டுருக்கீங்களா? உண்மையிலேயே உங்க பையன் மேல பாசம் இருந்தா இப்படியா பண்ணுவீங்க?"
"அண்ணா! எப்ப அண்ணிக்கு எங்க மேல இவ்ளோ காண்டு இருக்குதோ இனி நாங்க இங்க இருக்கறது அர்த்தம் இல்ல." வேறு யார் வெற்றி தான்.
"நீ ஏண்டா வெளில போகணும். இந்த நாயி வெளில போகட்டும். "
மழை கொட்டிக் கொண்டிருக்க இவளை கழுத்தைப் ப் பிடித்து வெளியில் தள்ளி விட்டான் கதிர்.
அவன் தள்ளி விட்ட வேகத்தில் கீழே விழுந்தவளுக்கு அந்த மாதத்திற்கான நாட்கள் வர அவமானத்தில் கூனிக் குறுகி போனாள்.
அவள் செல்வியிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் "பேசாதடி" என்று அவள் கழுத்தை நெரித்து கால் கட்டை விரலை அழுத்தி மிதித்திருந்தான் கதிர் . கழுத்தும் காலும் அவளுக்கு விண்ணென்று வலித்தது.
அவன் கழுதை பிடித்து தள்ளியபோது ஒரு நிமிடம் அந்த வீட்டைப் பார்த்தல். அவளுக்கென்று அங்கே யாரும் இல்லை. விரக்தியுடன் அழுதுக் கொண்டே சாலையில் நடந்து வந்தவள் மீது மோதி நின்றது அந்த கார். அதிலிருந்து பதறியபடி ஓடி வந்தவன் தீபக். உடனிருந்த திவ்யாவும் ஓடி வந்து பார்த்து மருத்துவமனையில் சேர்த்து, உயிர் பிழைப்பாளா என்று அக்காவுக்கு பயம் காட்டி விட்டு உயிர் மீண்டாள் மலர். பிறகு அங்கே இருந்து நேராக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் தெப்பக்கும் திவ்யாவும் . அங்கே போன அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. தீபக்கும் மருத்துவன் என்பதால் உடனடியாக மலருக்கு தேவையான அனைத்து மருத்துவ தேவைகளும் நிறைவேறியது.
என்னதான் mமற்ற தேவைகள் கிடைத்தாலும் அதை எல்லாம் மனம் ஏற்க வேண்டுமே. இருபத்து மூன்றே வயதில் வாழ வேண்டும் என்ற ஆசை கூட மறக்கடிக்கப்பட்டவள் மூளை எதையும் ஏற்கும் நிலையில் இல்லை.
திவ்யா எப்படி மலரைப் பார்க்க வந்தாள் ? அவர்களுக்குத் தான் பெரியதாக தொடர்பு இல்லையே !
"என்னங்க எனக்கு என்னவோ போல இருக்கு .ஒடனே மலரைப் பாக்கணும் போல இருக்குங்க "
"அது சரிதான் ஆனா அவங்க வீட்டுல.." தீபக் தயங்கினான் .
"எதுவா இருந்தாலும் பரவாயில்ல. நீங்க வெளில இருங்க. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன். எனக்கு என்னவோ வயத்தை பிசையுதுங்க "
"அவதான் அவ்ளோ தூரம் சொல்லறாளே தீபக். தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்னு சொல்லுவாங்க. அவளுக்கு தங்கச்சிய பாக்கணும் போல இருந்த கூட்டிட்டுப் போப்பா. நாளைக்கே ஏதாவது ஒரு கஷ்டம்னா நம்ம மனசு நம்மளை மன்னிக்காது. அன்னை சொல்வதும் சரிதான் என்று கணவன் மனைவி இருவரும் கிளம்பி விட்டார்கள். தூறலாக இருந்த மழை அவர்கள் வீட்டை நெருங்க நெருங்க அதிகமாக கொட்டியது.