ராகம் - 1
சென்னையின் மையத்தில் உயர்ந்து நிற்கும் கண்ணாடி கட்டிடங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த ஐடி நிறுவனம் காலை நேர சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது.
தன் ஸ்கூட்டியை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு வேகமாக லிப்டில் ஏறினாள் நம் நாயகி ராகவி பார்த்தசாரதி, சுருக்கமாக ஆர்.பி!!
மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாத வகையில் நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் புடவையில் மிளிர்ந்தவள், அதன் நிறத்திற்கு ஏற்றவாறு நீலம் மற்றும் கருப்பு கலந்த வளையல்களை அணிந்திருந்தாள்.
கண்களுக்கு அஞ்சனம் தீட்டியிருந்த அவளின் நெற்றியை விபூதீயும் குங்குமும் அலங்கரித்து ராகவிக்கு தனி சோபை கொடுத்தது.
இருபத்தி மூன்று வயதின் தொடக்கத்தில் இருக்கும் ராகவி தலை குளித்து தளர பின்னப்பட்ட கூந்தலில் மல்லிகையும் ரோஜாவும் மலர்ந்து மணம் வீசியது.
மண்ணின் மணம் கமழ லிப்டில் இருந்து வெளியேறியவளை கடந்து சென்ற யாருமே ஒருமுறைக்கு இருமுறை திரும்பி பார்த்தனர்.
பொதுவாகவே சுடிதார், குர்தி, ஜீன்ஸ், டாப்ஸ் என்று தன் வசதிக்கு ஏற்ப உடை அணிந்தாலும் வெள்ளிக்கிழமை தவறாமல் புடவை அணிவாள். ஆரம்பத்தில் சிலர் அவளை கிண்டல் செய்த போதும் யாருக்காகவும் தன் அடையாளத்தை மாற்றி கொள்ளாதவள்.
கார்டை ஸ்வைப் செய்து உள்ளே நுழைந்தவளை கண்டு அவள் டீம் மெம்பரான புவனாவும் யாதவியும் “குட் மார்னிங் டூட்” என்றனர்.
புன்னகையோடு காலை வணக்கம் சொல்லிவிட்டு தன் கேபினுக்கு வந்தவளிடம் “ஹே ஆர்.பி குட் மார்னிங்!!..” என்றாள் அவள் தோழி ஸ்வேதா.
“குட் மார்னிங்..” என்ற ராகவி தன் லேப்டாப் பையை மேசையில் வைத்து ஒரு கப் காஃபி எடுத்துக் கொண்டாள்.
“என்ன ஸ்வீட்டி உன்னோட முகமே ஒரு மாதிரி இருக்கு எனி ப்ராப்ளம்?” என்றாள்.
“க்ரிஷ்” என்று ஒற்றை வார்த்தையில் தன் பதிலை அவள் முடித்துக் கொள்ள ராகவிக்கு புரிந்து போனது.
“என்ன சொன்னான்? உன்னை ஏதாவது கம்பெல் பண்ணினானா?!”
“இன்னைக்கு தெரியாத்தனமா புது டிரஸ் போட்டுட்டு வந்துட்டேன். அதை கரெக்டா கண்டுபிடிச்சு அவன் கேட்கவும் பக்கத்துல இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு..”
“ஹே அவனை பத்தி தான் தெரியுமேடி இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிட்டு இருப்பியா?”
“அப்படி இல்ல ஆர்.பி என்னமோ அவன் எடுத்துக் கொடுத்த அவுட்ஃபிட்டை நான் போட்டுட்டு வந்த மாதிரி எல்லோர் முன்னாடியும் Portray (சித்தரிக்குறான்) பண்றான். அவங்களும் அதுதான் உண்மை என்கிற மாதிரி சிரிக்கிறாங்க.. எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா?!”
“இதோ பாரு ஸ்வீட்டி அவன் எப்பேர்பட்ட பொறுக்கின்னு நமக்கு நல்லா தெரியும். நம்ம சேஃப்டிக்கு நம்ம தான் பொறுப்பு!! அவனை எந்த எல்லையில் நிறுத்தணுமோ, அந்த எல்லையில் நிறுத்தனும் அதை விட்டுட்டு பயந்துட்டு உட்கார்ந்து இருந்தேன்னா அவன் இப்படித்தான் அட்வான்டேஜ் எடுத்துப்பான்..” என்றாள் கட்டுகடங்கா கோபத்தோடு.
க்ரிஷ் அவர்களின் டீம் லீடர். ஹெச் ஆர் அவனுடைய உறவினர் என்பதாலும் இங்கே அவனுக்கு பத்து வருடங்களுக்கு மேல் அனுபவம் இருப்பதாலும் தன் பதவியையும் பெண்களின் சூழ்நிலையையும் அழகாக பயன்படுத்திக் கொண்டு அவன் தேவைக்கு அவர்களை உபயோகித்து டிஷ்யூ போல குப்பையில் தூக்கிப் போடுபவன் தான் க்ரிஷ்.
அவனுக்கு கம்பெனி கொடுத்தால், அந்த பெண்கள் இந்த கம்பெனியில் சகல வசதிகளோடு எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் வேலை செய்யலாம். அவனுக்கு ஒத்து வரவில்லை என்றால் எஸ்கலேட் செய்து அவர்களின் வேலைக்கு வேட்டு வைத்து விடுவான்.
இங்கு வரக்கூடிய பல பெண்கள் மத்திய தர குடும்பத்திற்கும் கீழான நிலையில் இருந்து படித்து முன்னேறி தங்கள் திறமையின் மூலமாக வேலையில் அமர்ந்திருப்பவர்கள். கல்வி கடன், வீட்டு கடன், அக்கா தங்கை என்று அவர்களின் திருமண கடன் என்று பலவித கடன் சுமைகளால் இந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பவர்கள்.
க்ரிஷ் பொதுவாகவே அவன் டீமில் வந்து சேரும் பெண்களை அவர்களின் பின்புலத்தை நன்றாக அலசி ஆராய்ந்து அனைத்தையும் தெரிந்து கொள்வான். அதன் பிறகு அவர்களுக்கு தூண்டில் போடுவான்.
அனைவருமே மத்திய தர வகுப்பு பெண்கள் என்பதால் முதலில் மிரண்டு போவார்கள். ஆனால், அங்கு இருக்கக்கூடிய மற்ற பெண்களை சுட்டி காண்பித்து அவர்கள் தனக்கு கம்பெனி கொடுப்பதால் பெரும் ஆதாயம். அதனால், அவர்களுக்கு ஏற்படும் வளர்ச்சி என்று அனைத்தையும் அவர்கள் மூலமாகவே சொல்ல வைத்து இவர்களையும் தன் வழிக்கு கொண்டு வருவான்.
அப்படி அவனுக்கு மசியாத பெண்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வேலையில் இருந்து தூக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்வான்.
“வேலை தெரியவில்லை, என்ன படித்து கிழித்தாய், இதுக்கு கல்யாணத்தை பண்ணிட்டு மூணு குட்டி போட்டு இருக்கலாம்” என்று மற்றவர்கள் முன்னிலையில் மோசமாக அவமானப்படுத்துவதில் அவர்களாகவே வேலையை விட்டு சென்று விடுவார்கள் அல்லது வேறு வழி இல்லாமல் அவனுக்கு சம்மதிப்பார்கள்.
இவர்கள் எல்லாமல் பெண்ணியம் பேசிக்கொண்டு கலாச்சாரம், குடும்ப கட்டமைப்பு தங்களை அடிமைகளாக நடத்துகிறது என்று நினைக்கும் பெண்கள் தாமாகவே அவனுக்கு கம்பெனி கொடுப்பது உண்டு.
பெரும்பாலும் தானாக கனியும் பழத்தை விடவும் தடியெடுத்து அதை அடித்து கனிய வைப்பதில் தான் க்ரிஷுக்கு அலாதி சுகம்.
அதனாலயே அவன் இச்சைக்கு எளிதாக ஒத்துக்கொள்ளாத பெண்களை விரட்டி அடித்து தன் வலையில் வீழ்த்துவது அவனுக்கு, அதிக மகிழ்ச்சியையும் கூடவே பெருமையையும் கொடுக்கும்.
இதை அறியும் அவன் நண்பர்கள் எல்லாம் “உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மச்சி அதனால தான் இப்படிப்பட்ட பருவ பஞ்சவர்ண கிளிகள் வந்து சிக்குது.. என்ன ரகசியம்? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுடா” என்று கலாய்ப்பார்கள்.
“ஸ்வீட்டி நான் ஏற்கனவே சொன்னது உனக்கு நியாபகம் இருக்கும்னு நம்புறேன்..” என்ற ராகவி அவளருகே அமர்ந்து தோளில் கை போட்டு அணைத்து கொண்டவள், “லுக், இந்த மாதிரி அவனுக்கு பயந்துட்டு இருந்தேனா அவன் இன்னும் உன்னை ஏறி தான் மிதிப்பான். குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருக்காத உன்னுடைய எதிர்ப்பை காட்டு.. அப்போ தான் அவனுக்கு பயம் வரும்”
“ப்ச் ஆர்.பி அவனோட உயரம் பலத்துக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லை. என்னால எப்படி முடியும்?!” என்றாள் ஸ்வேதா.
“அதுக்காக அவன் பலவந்தப்படுத்துறதுக்கு உடன்பட போறியா? அது இன்னும் அசிங்கம்!! ஸ்வீட்டி பதவியை வச்சு அடுத்தவங்களை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி அநியாயமா பெண்களோட வேலையை பறிப்பதோ அவங்களை யூஸ் பண்ணிக்கிறதோ பலம் கிடையாது, அது பேடித்தனம்!! அதை அடிச்சு விரட்டனுமே தவிர்த்து பயந்து ஓட கூடாது..”
“சொல்றது புரியுது ஆர்.பி ஆனாலும் என் குடும்ப நிலைமை உனக்கு தெரியுமேடி.. நிச்சயமா என்னால அவனுக்கு இணங்கவோ அதே நேரம் இந்த வேலையை விடவோ முடியாது..”
“விட முடியாதுன்னா அதுக்கேத்த மாதிரி போல்டா இருக்கணும். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா அப்படின்னு நீ இருந்தால் உனக்கு எதிரா எதையும் செய்யும் முன்னாடி அவன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பான்.. அதைவிட்டு அழுது புரண்டுட்டு இருந்தா அதுவே அவனுக்கு தனி பலம் கொடுக்கும் புரியுதா?!” என்றிட மெல்லிய தலையசைப்பு.
“இது வரைக்கும் அவன் உன்கிட்ட டைரக்டா அப்ரோச் பண்ணாதது உன்னோட ப்ளஸ் அதுக்குள்ள நீ அவனுக்கான உன்னோட பௌண்டரியை (எல்லையை நிர்ணயம் செய்) செட் பண்ணிடு அவன் நிச்சயமா நெருங்க தயங்குவான்...”
“ட்ரை பண்றேன் ஆர்.பி பட் அவனால் உனக்கு இப்படி எந்த பிரச்சனையும் வந்தது இல்லையா?”
“இதுவரைக்கும் இல்லை..”
“ஏன்?”
“தெரியலை ஒருவேளை ஒவ்வொரு பெண்ணா தான் அப்ரோச் பண்ணுவானோ என்னவோ? இன்னும் என்னோட டர்ன் வரலை.. பட் ஐ’ம் வெயிட்டிங் ஈகர்லி” என்றாள் ஆர்வமும் சிரிப்புமாக.
“அடிப்பாவி! ஒருத்தன் உன்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுவானே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாம சிரிச்சு கிட்டு சொல்ற?”
“நான் எதுக்கு பயப்படணும்? நான் யாருன்னு தெரியாம என்னை அப்ரோச் பண்ண போறவனுக்கு தான் இனி எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்த கூடாது என்ற பயம் வரணும்!! வரும்!! நான் வர வைப்பேன்!!” என்று சிரிப்போடு சொன்னாலும் அவள் பேச்சில் அப்படி ஒரு உறுதி.
ஆனால் ஸ்வேதா இன்னும் அதே நிலையில இருப்பதை கண்டவள், “இதுக்கே இப்படி உக்காந்துட்டா எப்படி? இந்த மாதிரி ஆயிரம் நாய்கள், நமக்கு தெரிந்தது தெரியாததுன்னு போற வர இடத்துல நாம் பின்னாடி சுத்த தான் செய்யும். அனால் அதை விரட்டணுமே தவிர்த்து நாம ஓடக்கூடாது..”
“அப்படி ஓடினா நம்மோட ஒவ்வொரு அடியும் அதுக்கு தான் லாபம் எதிர்த்து நின்னா அவனால் எதையும் பிடுங்க முடியாது.புரியுதா?!”
“புரியுது. ஆனாலும் உன் அளவுக்கு நான் தைரியசாலியும் கிடையாது பணக்காரியும் கிடையாது. உனக்கு என்ன மா இந்த வேலை செய்யணும்னு எந்த கட்டாயமும் கிடையாது. உங்க அப்பா ஊருக்கே நாட்டாமை இன்னும் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கார்.. அது எல்லாமே ஒரே பெண்ணான உனக்கு தான். உனக்கு இந்த வேலை ஜஸ்ட் டைம் பாஸ் எனக்கு அப்படி இல்லை.. என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கு..”
“அதுக்காக?” என்று அவள் கேள்வியாய் நிறுத்த,
“அதுக்காக எல்லாம் அந்த நாய்க்கு அடிபணிந்து போக மாட்டேன். என்னமோ தெரியலை இன்னைக்கு காலையில அவன் பேசினது கொஞ்சம் என்னை அப்செட் பண்ணிடுச்சு. இனி முடிஞ்ச வரைக்கும் அவனை எதிர்த்து நிற்பேன் போதுமா?!”
“இப்போதைக்கு இது போதும் வா, மீட்டிங் டைம் ஆச்சு” என்று ஸ்வேதாவுடன் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றாள்.
மீட்டிங் தொடங்க இன்னும் பதினைந்து நிமிடத்திற்கு மேலிருக்க அவர்களை கண்டு விட்ட க்ரிஷ் வேகமாக அங்கே வந்து சேர்ந்தான்.
உள்ளே நுழைந்தவனின் பார்வை முதலில் ஸ்வேதாவை தழுவி பின் ராகவியிடம் நிலைபெற்றது.
“யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் ஆர்.பி” என்று வாயிலுள்ள அத்தனை பற்களையும் காண்பித்து பாராட்டினான்.
“அப்சல்யூட்லி க்ரிஷ்!! ஐ க்னோ வெல்!!”
“அப்படியா?”
“உங்களுக்கு முன்னாடி என்னோட கண்ணாடி நான் எவ்ளோ அழகுன்னு சொல்லிடுச்சு, ஸோ திஸ் இஸ் நாட் ரியலி ஸர்ப்ரைசிங்..” என்று நிமிர்வாக சொன்னவள், “அட் தி சேம் டைம் யூ டோண்ட் லுக் தட் குட்!!” என்றதும் ஸ்வேதா சட்டென சிரித்து விட க்ரிஷ் முகம் மாறி போனது.
அதேநேரம் மற்றவர்களும் அங்கே வர சடுதியில் தன் முகத்தை மாற்றிக் கொண்டவன், ஃபாஸ்ட், ஃபாஸ்ட்!! இதுதான் மீட்டிங்க்கு வர நேரமா? வி டோன்ட் ஹேவ் டைம், டேக் யுவர் பிளேஸ் ஃபாஸ்ட் கைஸ் (நமக்கு நேரமில்லை, சீக்கிரமா உங்களோட இடத்தில் உட்காருங்கள்)” என்றதில் அனைவரும் வேகமாக தங்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர்.
“நேத்து என்ன வேலை முடிச்சீங்க? இன்னைக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்க அனைவரும் தாங்கள் செய்து முடித்ததை அப்டேட் செய்தனர்.
அதில் திருத்தங்களை சொன்னவன் தன் முறை வந்த போது “நேத்து கொடுத்த module-ஐ கம்ப்ளீட் பண்ணிட்டேன் ஸர். இன்னைக்கு டெஸ்டிங் ஆரம்பிக்கறேன்…” என்றாள் ராகவி.
அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு பிராஜெக்ட் குறித்த விவாதங்கள் முன்னெடுப்புகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிய “ஓகே கைஸ் யூ கேன் கோ பேக் டு யுவர் பிளேசஸ் அன்ட் ஸ்டார்ட் வொர்க்கிங்” என்றான் க்ரிஷ்.
அனைவரும் கிளம்ப ராகவியும் அவர்களோடு கிளம்பினாள்.
“ஹே ஆர்.பி ஸ்டே பேக்” என்று க்ரிஷ் சொல்ல ஸ்வேதா தவிப்போடு ராகவியை பார்த்தாள்.
“அச்சோ ஸ்வீட்டி இவ்ளோ க்யூட்டா பார்த்து என் மாமூவுக்கு துரோகம் பண்ண வச்சுடாத..” என்றதும் சட்டென சிரித்து விட்டவள்,
“எல்லாமே விளையாட்டு இல்லை ஆர்.பி, அவன் ஏதோ முடிவோடு தான் இருக்கான்.பீ கேர்ஃபுல்” என்று க்ரிஷை பார்த்தபடி சொன்னாள்.
“உனக்கே தெரியும் போது எனக்கு இது தெரியாதா? கட்டத்துரைக்கு ஐ மீன் கைப்புள்ளைக்கு இன்னைக்கு நேரம் காலம் எல்லாமே கூடி வந்திருக்கு. நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்று கண்சிமிட்டி புன்னகைத்தவள், தோரணையோடு மீண்டும் தன்னிடத்தில் வந்து அமர்ந்தாள்.
அவள் அமரும் வரையில் ராகவியின் ஒவ்வொரு அசைவையும் பார்த்திருந்த க்ரிஷுக்கு தன் பார்வையை சட்டென திருப்ப முடியவில்லை. அவனும் எத்தனையோ அழகிகளை பார்த்திருக்கிறான் அவர்களோடு படுக்கையையும் பகிர்ந்திருக்கிறான். ஆனால் அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்ட ராகவியின் அழகு தனித்துவமானது.
ஜீன்ஸ் தொடங்கி புடவை வரை அத்தனை உடையையும் என்ன தான் அவள் கண்ணியமாக உடுத்தினாலும் அதில் பொதிந்துள்ள கவர்ச்சி மட்டுமே அவன் கண்களை கவரும். அவள் பின்புலத்தை வைத்து பட்டிக்காடு என்று ஒதுக்கவும் முடியாது அதேநேரம் மற்ற மாடர்ன் பெண்களை போல என்று எண்ணி நெருங்கவும் முடியாது.
“ஸர் கூப்பிட்டுட்டு அமைதியா இருக்கீங்க.. வாட் ஹாப்பன்ட்?” என்று சொடக்கிட்டு மீட்டாள் ராகவி.
“யாஹ்! யாஹ்! உன்னோட ஐடியால எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு ஆர்.பி”
“இப்ப தானே எல்லாமே ஃபைனல் பண்ணினோம்?!”
“எஸ்! பட் ஸ்டில் அதுல இன்னும் கொஞ்சம் பெட்டர்மென்ட் இருந்தா வொர்க் பண்ண ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன். கேன் யூ எக்ஸ்ப்ளைன் அகைன்” என்றதும் அறையில் இருந்த வெள்ளை திரையை உயிர்பிக்க முயன்றாள்.
“நாம மட்டும் தானே இருக்கோம் ஜஸ்ட் ஓபன் இட் இன் யுவர் Lap..” என்றதில் ராகவி “யாஹ் ஷூர்” என்று தன் மடிக்கணினியை உயிர்பித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள்.
பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் அவள் பின்னே சற்று சாய்ந்து நின்று இருந்த க்ரிஷ் பார்வை லேப்டாப்பை விடுத்து அவளை மேய்ந்து கொண்டிருந்தது.
அவளை நெருங்காமல் சற்று தள்ளி நின்று இருந்தவனை அவளின் பூ வாசம் மயக்க தன்னை மறந்து அவளை நோக்கி குனிந்தான். அதே நேரம் ராகவி தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து கொள்ள அவளின் தலை அவனின் தாடையை வெகுவாக பதம் பார்க்க நாற்காலியோ அவன் வயிற்றிலே பதம் பார்த்தது.
“அவுச்..” என்று தாடையையும் வயிறையும் ஒரே நேரத்தில் அவன் பிடித்துக் கொள்ள “என்னாச்சு ஸர்?” என்றவள் “அச்சோ பின்னாடி தான் நின்னுட்டு இருந்தீங்களா?! ப்ச் பாருங்க வொர்க்ன்னு வந்துட்டா உனக்கு உலகமே மறந்து போகும்னு நம்ம டீம் மெம்பர்ஸ் சொல்றது உண்மை தான் போல..” என்றிட அவனோ வாயில் கசிந்திருந்த ரத்தத்தோடு வலியில் துடித்து கொண்டிருந்தான்.
“எக்ஸ்பிளைன் பண்ற வேகத்துல நீங்க நிற்கிறதை கூட கவனிக்காமல் போயிட்டேன். ரொம்ப வலிக்குதா க்ரிஷ்?” என்றவளின் வார்த்தையில் அக்கரையோ, பதற்றமோ, துளி கூட இல்லை.
‘எந்த அளவு வலியில் துடிக்கிறான்’ என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே!!
“முதலிலேயே உட்கார சொன்னேன்.. அப்படி செய்திருந்தா இப்போ இப்படியாகி இருக்குமா? ஃபர்ஸ்ட் சிட் டவுன் க்ரிஷ்” என்று நாற்காலியை சுட்டி கான்பித்தவளின் வார்த்தைக்கு கட்டுப்படுவதை தவிர்த்து அவனுக்கு வேறு வழி இல்லை. அந்த அளவு சேரின் கூர்மையான முனை பலமாக வேகமாக தாக்கியதில் அப்படி ஒரு வலி.
“ஹேஃவ் ஸம் வாட்டர். யு வில் ஃபீல் பெட்டர்..” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தவள் சற்று நேரம் கழித்து “இப்போ வலி எப்படி இருக்கு க்ரிஷ்?” என்றாள்.
“ஃபீலிங் பெட்டர்..”
“அப்போ நான் கண்டினியூ பண்றேன்..” என்று அவள் கணினியை எடுக்க, “இட்.. இட்ஸ் ஓகே ஆர்.பி எனக்கு இன்னொரு கிளைன்ட் மீட்டிங் இருக்கு நாம நாளைக்கு இதை பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்..” என்று வயிறை பிடித்து கொண்டு ஓட்டமும் நடையுமாக தன் கேபினுக்கு சென்றான்.

Last edited: