• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 2

STN 23

New member
அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த ராகவி க்ரிஷ் பற்றி அக்கறையாக விசாரிக்க “ஏதோ பெர்சனல் வேலையாக இருப்பதால் வரவில்லை..” என்றனர்.

“ஒருவேளை நேத்து வாங்கின அடியில தான் இன்னைக்கு வரலையோ?! கெத்தை மெயின்டெயின் பண்ண கதை கட்டி விட்டிருக்கானா ஆர்.பி?..” என்று ஸ்வேதா கேட்க, “அதே!! அதே!!” என்றவள் நேற்று அவன் மருத்துவமனைக்கு சென்றதை பற்றி சொல்லி,

“கைப்புள்ள வாங்கின அடி அந்த மாதிரி! நேத்து நான் இடிச்ச இடியில் வாய் வீங்கவும் யாருக்கும் தெரியாமல் கிளம்பிட்டவன் இன்னும் இரண்டு நாளைக்கு வர மாட்டான்…”

“உனக்கு எப்படி தெரியும்?”

“நேத்து சாயந்திரம் அவனை ஹோட்டல்ல பார்த்தேன்.. அப்போ விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டது தான்!!..”

“அப்படியா?”

“அது மட்டுமில்லை இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கிடையில் இருக்கட்டும் யாருக்கும் சொல்லிக்க வேண்டாம்னு சொன்னான்..” என்று சிரிப்போடு சொல்ல ஸ்வேதாவையும் அவள் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“வேற என்ன சொன்னான்?”

“நீ தெரியாம செய்தது தான் அதுக்காக ஃபீல் பண்ண வேண்டாம் நான் பெருசா எடுத்துக்கலைனு எவ்ளோ பெருந்தன்மையா பேசினான் தெரியுமா?”

“பின்னே, பெண்களின் பாதுகாவலன் ஆச்சே!! இப்படி பேசி தான் பொண்ணுங்களுக்கு வலை விரிப்பான், பொறுக்கி..” என்று பல்லை கடித்தவள், “சரி அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றாள்.

“கெட் வெல் சூன்!! சொல்லிட்டு வந்திருக்கேன் ஸ்வீட்டி” என்று கண் சிமிட்டினாள்.

“அடிப்பாவி!! என்னடி இது? அவனை போய் சீக்கிரம் குணமாக சொல்லி இருக்க.. உனக்கு இரக்க குணம் அதிகம்னு தெரியும் அதுக்காக இப்படியா?”

“ஹே நீ வேற!! அவன் மேல செம காண்டுல இருக்கேன், கைப்புள்ள சீக்கிரம் குணமாகி வந்தா தானே திரும்ப எழவே முடியாதளவு அடிச்சு தோய்ச்சு கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட முடியும்..” என்றவள் விருப்பம் அறிந்தார் போல இரண்டாம் நாள் அலுவலகம் வந்த க்ரிஷ் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளை தன் கேபினுக்கு வரவழைத்திருந்தான்.

இம்முறை அவளை தன் எதிரில் அமர சொன்னவன், “இப்போ எக்ஸ்பிளைன் பண்ணு ஆர்.பி..” என்றான்

அவளும் உள்ளுக்குள்ளே எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு விழுங்கியபடி, “ஆர் யூ கம்ஃபர்டபிள் ஸர்?”

“ஏன்?”

“இல்லை அங்கிருந்து உங்களுக்கு கஷ்டம் என் பக்கத்துல வந்து உட்கார்ந்தா ஈஸியா இருக்குமேன்னு கேட்டேன்..”

“நோ.. நோ.. நான் ஸ்க்ரீன் ஆன் பண்றேன் கனெக்ட் பண்ணிடு..” என்றிட அது போலவே செய்த ராகவி ப்ராஜக்ட் குறித்த விளக்கத்தை முடிக்க அதில் சில சந்தேகங்களை கேட்டவன் “குட் ஜாப் ஆர்.பி! யூ ரியலி ஹவ் பிரைட் ஃபியூச்சர்” என்றான்.

“தேங்க்ஸ் ஸர்..” என்று உற்சாகமாக சொல்ல அங்கே வந்து சேர்ந்தான் க்ரிஷின் நண்பன் சூரஜ்.

“சிவ பூஜையில கரடி..” என்று முணுமுணுத்து, “யூ கேன் கோ ராகவி. ஐ வில் கேட்ச் யூ லேட்டர்..” என்றான்.

“ஓகே, க்ரிஷ்..” என்றவள் கிளம்ப, “என்ன டியூட் கிளி மடியலை போல?” என்று சிரித்தவன், “இவ கண்ணகி பரம்பரைன்னு நான் தான் சொன்னேனே டா! எதுக்கு தேவை இல்லாம ரிஸ்க் எடுக்கிற? நமக்கு தோதா கம்பெனி கொடுக்கிற கிளிகளை கொத்திட்டு போறது தான் நமக்கு சேஃப்டி” என்றான்.

“எத்தனை கிளியை சேர்த்தாலும் அதெல்லாம் இந்த பஞ்சவர்ண கிளிக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை மச்சான்..”

“அதுக்காக இன்னொரு முறை ட்ரை பண்ணி மூக்கை உடைச்சுட்டு வரப்போறியா?”

“ஒரு முறை ஏதோ அசால்ட்டா இருந்துட்டேன் அதுக்காக எல்லா நேரமும் அப்படி இருப்பேனா என்ன?! நீ வேணும்னா பாரு இந்த மாதம் முடியறதுக்குள்ள அவளோடு டேட்டிங் போகலை என் ஒரு பக்க மீசையை எடுப்பேன் டா..” என்று சூளுரைத்தான்.

“என்ன மச்சி சட்டுன்னு இப்படி சொல்லிட்ட? எடுக்கிறதா இருந்தா மொத்தமா எடு இப்படி சவால் விட்டு பின்னாடி ஒரு மீசையோடு ஆபிஸ் வருவது உனக்கு தான் கஷ்டம்..”

“அப்படி எதுவும் ஆகாதுடா”

“எப்படி சொல்ற? டேய் ரொம்ப பவர்புல்லான பேக்ரவுண்ட் இருக்கிறவளை மற்ற பொண்ணுங்க மாதிரி வேலையை வச்சு மிரட்ட முடியாது. போடா நீயும் உன் வேலையும்னு போயிட்டே இருப்பா..” என்றவனின் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை.

அரக்கோணத்தை சேர்ந்த பார்த்தசாரதி பரிமளா தம்பதியரின் ஒரே மகள் ராகவி. ஊரின் பெரிய குடும்பம், ஏக்கர் கணக்கில் சொத்துக்கள், நாட்டமையான பார்த்தசாரதியின் வார்த்தைக்கு அங்கே பெரும் செல்வாக்கு.

என்ன தான் அவள் தந்தை ஊருக்கே நாட்டாமையாக இருந்தாலும் அவருக்கு நாட்டமை என்னவோ ராகவி தான்!! மகள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆனாலும் அவளின் விருப்பத்திற்கு குறை வைக்க கூடாது என்பதாலேயே சென்னையில் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

“தெரியும் மச்சி அதுக்கு தான் அவளுக்கான வலையை ஸ்பெஷலா விரிக்க போறேன். நிச்சயமா அவளால தப்பிக்கவே முடியாது..”

“எப்படி டா?!”

“எல்லாம் கான்ஃபிடன்ஸ் மச்சி.. கான்ஃபிடன்ஸ்..” என்றவன் சூரஜ் கிளம்பவும் ராகவியை மீண்டும் தன் கேபினுக்கு அழைத்தான்.

“எஸ் க்ரிஷ்!!” என்று அவள் கேட்கவும், “ஒய் டோன்ட் வீ கோ ஃபார் எ காபி?” என்றான் நேரடியாக.

“காஃபியா? நாம ஏன் காஃபிக்கு போகணும்? அதுதான் பேச வேண்டியது எல்லாம் இங்கேயே பேசி முடிச்சாச்சே?!”

“யாஹ் தட்ஸ் ஃபைன் அன்ட் டன்!! பட் நீ இங்கே ஜாயின் பண்ணி ஆறு மாசமாகியும் உன்னை பற்றி எனக்கு எதுவுமே சரியா தெரியலை. உனக்கும் என்னை பற்றி தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்..” என்று மெதுவாக தூண்டிலைப் போட்டான்.

அவன் நோக்கம் அறிந்த ராகவிக்கு உள்ளுக்குள் சிரிப்பு எழுந்தாலும், “நான் எதுக்கு உங்களை பற்றி தெரிஞ்சுக்கணும் கிருஷ்...” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்த கொண்டு.

“என்ன கேள்வி இது ஆர்.பி? நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி இல்லையா?!..”

“இது எப்போ இருந்து? ஒருவேளை உங்க தாத்தாவும் என் தாத்தாவும் பிரதர்ஸா இருப்பாங்களா ஸார், எதுக்கும் என் அப்பா கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன் உங்க தாத்தா பேர் சொல்லுங்க?..” என்றாள் சீரியசாக.

“இல்லை அப்படி இல்லை ஆர்.பி, நம்ம எல்லாரும்..” என்றவன் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரை சொல்லி “இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. ஒன்றாக சேர்ந்து வொர்க் பண்றோம் ஸோ நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங், பாண்ட்டிங் இருந்தா தானே சரியா வேலை செய்ய முடியும்?”

“அப்போ இப்ப நான் சரியா வேலை செய்யலைன்னு சொல்றீங்களா ஸர்?! ஜஸ்ட் நொவ் தான் குட் ஜாப்ன்னு சொன்னிங்க.. டஸ் இட் லிட்ரலி மீன் நத்திங்?!”

“நோ.. நோ.. நோ.. அப்படி கிடையாது. ஐ லிட்ரலி மீன் இட் ஆர்.பி..”

“அப்போ ஐ’ம் கேப்பபில்னு சொல்றீங்களா?”

“அஃப்கோர்ஸ்!! அஃப்கோர்ஸ்!! யூ ஆர் வெரி டேலண்டட் கேர்ள். பட் ஸ்டில் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணா ஒரு ஃபேமிலியா இருக்கணும்..”

“அதனால யாருக்கு, என்ன ஸர் லாபம்?” என்று கேட்க ஒரு நொடி மிரண்டு போனான் கிரிஷ்.

“சொல்லுங்க யாரோட லாபத்துக்கு..” என்று மீண்டும் கேட்டதில் சட்டென்று பதில் சொல்லு முடியாமல் திணறியவன், “மோ.. மு.. முதல்ல என்னை ஸர்ன்னு கூப்பிடுறதை நிறுத்து ஆர்.பி..”

“நீங்க என்னோட டீம் லீடர். உங்களை வேற எப்படி ஸார் கூப்பிட?”

“கால் மீ க்ரிஷ்”

“அது எப்படி ஸர் முடியும்? உங்களுக்கு எப்படியும் என் சித்தப்பா வயசிருக்கும் உங்களை போய் நான் எப்படி பேர் சொல்லி கூப்பிட முடியும்?” என்றதில், “வாட் சித்தப்பாவா?” என்று அதிர்ந்து போனான்.

“ஆமா உங்களோட பால் ஹெட்டே உங்க வயசு சொல்லுது..”

“ப்ச் இது ஜெனிடிக் ஆர்.பி.. நீ நினைக்கிற மாதிரி எனக்கு அவ்ளோ வயசு எல்லாம் கிடையாது ஐ அம் ஜஸ்ட் 29..”

“அப்படியா? உங்களை பார்த்தா அப்படி தெரியல.. கல்யாணமாகி குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்கும்னு தான் நினைத்தேன்..”

“ஸீ என்னை பற்றி சரியா தெரியாததால யூ ஹவ் மிஸ்டேக்கன். அன்ட் ஐ ஆம் சிங்கிள் நாட் எட் மேரீட்…” என்றான்.

“அப்படியா? நம்பவே முடியலை ஸர்..” என்றாள் ஆச்சர்யமாக.

“அதுக்காக தான் நமக்குள்ள ஒரு ஃபேமிலி பாண்டிங் இருக்கணும் சொல்றேன். அதுதான் கம்பெனியோட க்ரோத்க்கு உதவும்.. ஸோ நீ என்ன பண்ற இந்த வீக் எண்ட் என்னோட அப்பார்ட்மெண்டுக்கு வந்துடு..” என்றான்.

“அப்பார்ட்மெண்ட்கா எதுக்கு ஸர்?” என்றாள் அசட்டையான குரலில்.

“கிருஷ்!!” என்று அவன் திருத்த, “என்னமோ தெரியலை உங்களை விட சீனியர்ஸ் கூட என்னால பேர் சொல்லி கூப்பிட முடியுது ஆனா உங்களை அப்படி முடியலை.. உங்களுக்கு தனி மரியாதை கொடுக்க தான் தோணுது நான் என்ன பண்ண? ஐம் ஹெல்ப்லெஸ் க்ரிஷ்!! சரி எதுக்கு அப்பார்ட்மெண்ட் வர சொல்றீங்க?”

“சொன்னேனே நாம இரண்டு பேரும் ஒரு ஃபேமிலி ஆகணும்னு..”

“ஓகே ஸர் உங்க ஃபேமிலி என்னைக்கு வருவாங்கன்னு சொன்னீங்கன்னா எங்க அப்பா, அம்மா, அப்பத்தா, அத்தை, மாமான்னு என் ஃபேமிலியை கூட்டிட்டு வரேன்..” என்றாள்.

“நோ நோ நோ நான் பேசறது நம்ம ரெண்டு பேரோட ஃபேமிலி பற்றி இல்லை.. நாம ரெண்டு பேரும் ஒரு ஃபேமிலியா இருக்கிறதை பற்றி பேசறேன்..”

“நாம ரெண்டு பேர் மட்டும் எப்படி ஒரு ஃபேமிலியாக முடியும்? எனக்கு புரியலையே..” என்றவளின் அப்பாவித்தனமான முகத்தை கண்டவன் இதற்கு மேல் சிக்கலாக விரும்பாமல்,

“இப்போ இதை பற்றி பேசுறது சரியா இருக்காது. கம்பனி க்ரோத் தான் நம்மோட ப்ரையாரிட்டியா இருக்கணும் ஸோ நம்மோட பாண்டிங் பற்றி நான் இன்னொரு நாள் பொறுமையா சொல்லி கொடுக்கிறேன்.. பட் நீ அதுக்கு கண்டிப்பா கோ ஆப்பரேட் பண்ணனும் ஆர்.பி..” என்று அசட்டு சிரிப்போடு சொல்ல ராகவிக்கு கை பரபரத்தது.

ஆனாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, “ஓகே கிரிஷ் யுவர் விஷ்..” என்று கிளம்பி தன் இடத்தில் அமர்ந்தவளின் கோபம் தணிவதற்கு வெகு நேரம் பிடித்தது.

**************

மாலை ஏழு மணி போல தன் பிஜி க்கு வந்து சேர்ந்த ராகவிக்கு அவளின் பள்ளி தோழி ரேவதி அழைத்திருந்தாள்.

ராகவியும் ரேவதியும் அரக்கோணத்தில் ஒன்றாக படித்தவர்கள் சிறு வயது முதலே இணைபிரியா நண்பர்கள். ஆனால் மேற்படிப்பு, வேலை என்று ராகவி சென்னைக்கு வந்து விட அவளோ அங்கேயே அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கிறாள்.

ஷாலை கழற்றி மெத்தையில் வீசியவள் அழைப்பை ஏற்றதுமே, “சொல்லுடி” என்று சீறினாள்.

“ஹே என்னாச்சு ராகவி? ஏன் கோபமா இருக்க?” என்றவள் அவளின் ஒற்றை வார்த்தையிலேயே அவளை கண்டு கொண்டாள்.

“கோபமா? கொலை காண்டுல இருக்கேன்..”

“ஏன்? எதனால? யார் மேல?”

“வேற யாரு எல்லாம் அந்த க்ரிஷ் தான்!!”

“அவனா? அவன் என்னடி பண்ணான்?”

“அந்த பொறுக்கிக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் நானும் அவனும் ஃபேமிலி ஆகணும்னு என்னை அப்பார்ட்மென்ட்க்கு வர சொல்வான்?!”

“என்னடி இது?! அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில அடிமடியில கை வச்ச கதையா இருக்கு.. உன்னை பற்றி அவனுக்கு முழுசா தெரியுமா தெரியாதா?”

“தெரியாது!! ப்ச் சரியான எவிடன்ஸ் கிடைக்கனும்னு இந்த நாயை இவ்ளோ நாள் விட்டு வச்சது தப்பா போச்சுடி… பாவம் ஸ்வேதா இவனால எந்தளவு மெண்டலி அஃபெக்ட் ஆகி இருக்கா தெரியுமா?” என்று இன்று காலை முதல் நடந்த அனைத்தையும் ரேவதியிடம் சொல்லி முடித்தாள்.

“ஏய் அவசரப்பட்டு முன்னாடி கம்பனியில் பண்ணின மாதிரி இவனை அடிச்சு வச்சுடாதடி.. பெரிய பிரச்சனையாகிட போகுது..” என்றாள் முன்னேற்பாடாக.

பின்னே!! ஏற்கனவே அவள் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் ஒருவன் அவளிடம் இது போலவே தவறாக பேசி அவளை உபயோகிக்க முற்பட்டதால் அனைவர் முன்னிலையிலும் அவனை அறைந்து இருந்தாள் ராகவி.



அடி வாங்கியவன் மட்டுமில்லை அங்கே பணியாற்றிய யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. ராகவி கை நீட்டியது கம்பெனியின் வரம்புகளை மீறிய செயல் என்பதால் அவளை வேலையை விட்டு நீக்க நிர்வாகம் முடிவெடுத்தது.



ஆனால் ‘தவறு செய்தவனை தண்டிக்காமல், தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லாமல் அவளை வேலையில் இருந்து தூக்கினால் அவனை மட்டுமல்ல துணை இருந்த அத்தனை பேரையும் நிச்சயம் சோஷியல் மீடியாவில் அடையாளம் காண்பிப்பதோடு கோர்ட்டிற்கு இழுப்பேன்’ என்று ராகவியும் தீர்மானமாக சொல்லி விட்டாள்.



ராகவியின் துணிச்சலான செயல் நிச்சயம் மற்ற பெண்களிடமும் தாக்கம் ஏற்படுத்தி மற்றவர்களும் அவளை போலவே கை நீட்ட வாய்ப்பு உள்ளதால் அதை தடுத்தாக வேண்டிய கட்டாயம்.



நிர்வகத்திற்கு அவளை இங்கேயே தொடர வைப்பதில் விருப்பம் இல்லை. அதேநேரம் கோர்ட், மீடியா என்று செல்வதும் அவர்களுக்கு தான் ஆபத்து என்பதால் அவளுடன் சமரச பேச்சில் இறங்கினர்.



ஒருவழியாக ராகவி அவன் தன்னிடம் மன்னிப்பு கேட்டு, அவளுடைய காண்டாக்ட் சர்டிஃபிகேட்டில் அவளை பற்றி நல்லவிதமாக குறிப்பிடுவதாக இருந்தால் நிச்சயம் வேலையில் இருந்து விலகுவதாக சொல்லி இருந்தாள்.



“என்னுடைய தன்மானத்தை விலையாக கொடுத்து ஒரு வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..” என்று முடிவில் தெளிவாக இருந்தவள் தானாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டாள்.



இங்கே அவள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. இப்போது இங்கேயும் இன்னொரு பிரச்சனைக்கு அவள் தயாராக இல்லாததால் க்ரிஷ்ஷை வேறு விதமாக எதிர்கொள்ள முடிவு செய்து இருக்கிறாள்.



“இப்போ என்னடி செய்ய போற?”



“அடுத்த வாரம் அவனை பார்க்ல மீட் பண்ண சொல்லி இருக்கான்…”



“எதுக்கு?”



“அப்பார்ட்மென்ட்க்கு வர சொன்ன பொறுக்கி இப்போ இடத்தை மாத்தி இருக்கானே தவிர்த்து தன் எண்ணத்தை மாத்தி இருக்க மாட்டான்.. ப்ச் நாங்க இரண்டு பேரும் எப்படி ஒரு ஃபேமிலியாகறதுன்னு விளக்கம் கொடுக்கிறதுக்காக..” என்றாள் கட்டுபடுத்த முடியாத ஆத்திரத்தோடு.



“ராகவி பொறுமையா ஹாண்டில் பண்ணு. ஆனா நீ கத்து கொடுக்க போற பாடத்துல இனி எந்த பொண்ணுங்க கிட்டயும் அவன் வால் ஆட்டாமல் இருப்பதோடு உனக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது, சேஃப்டி முக்கியம்..”



“கண்டிப்பாடி!! மத்த பொண்ணுங்க மாதிரி எனக்கு வலை விரிக்கிறதா அவன் நினைச்சுட்டு இருக்கான் ஆனா நான் விரிச்சு இருக்கிற வலையில் தான் அவன் சிக்க போறான் என்பதே தெரியாமல் வர போறான்..” என்றாள் சிரிப்போடு.



“ஆமா அதை தெரிஞ்சுக்கிறப்போ அவன் மூஞ்சி எப்படி மாற போகுதுன்னு தெரிஞ்சுக்க நானும் வைட்டிங்!!..” என்று ரேவதி சொல்ல அவளுக்கு குறையாத ஆவலோடு ராகவியும் காத்திருந்தாள்.
 
Last edited:
Top Bottom