தன்னுடைய பிறந்தநாளான அன்று அதிகாலை முதலே தாய் தந்தை தொடங்கி அனைவரின் வாழ்த்தையும் பெற்று கொண்ட ராகவி புத்தம் புது இளமஞ்சள் நிறத்திலான ஃபுல் ஸ்லீவ் சுடிதாரில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தோடு தயாராகி கொண்டிருந்தாள் ராகவி.
பின்னே இன்று அவளின் பிறந்த நாள் மட்டுமல்ல க்ரிஷின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டும் நாளும் அல்லவா?!
ஆம் க்ரிஷின் ஆசைக்கு இணங்காததால் பல்வேறு காரணங்களுக்காக வேலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்களில் பலர் அவனுக்கு இருக்கும் தொடர்புகளால் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் அவன் செய்த அக்கிரமங்களை பற்றி மற்றவர்களிடம் பேசினாலும் தைரியமாக புகார் அளித்தது கிடையாது.
இப்படி ‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று பலரும் ஒதுங்கி இருக்கும் நிலையில் ராகவி அதை செய்ய போகும் மகிழ்ச்சியில் தான் உற்சாகமாக தயாராகிறாள்.
என்னதான் க்ரிஷின் அய்யோக்கியதனம் நிறுவனத்தில் அனைவருக்கும் தெரியும் என்றாலும் யாரும் அவனுக்கு இருக்கும் செல்வாக்கை அறிந்ததால் க்ரிஷுக்கு எதிராக புகார் என்ன ஒரு வார்த்தை கூட தவறாக பேச மாட்டார்கள்.
அப்படியே துணிந்து பெயரை வெளிபடுத்தாமல் அவனை பற்றி தெரிவித்தாலும் சாட்சி சொல்வதற்கும் வர மாட்டார்கள். இன்று அவனை கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவன் சொன்னதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பார்க்கிற்கு வந்து சேர்ந்தாள் ராகவி.
வந்ததோடு மட்டுமல்லாமல் கொண்டு வந்திருந்த இரண்டு ஸ்பை கேமராக்களை இருவருக்கும் இடையிலான உரையாடலை ரெக்கார்டிங் செய்ய வேண்டி அவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்து விட்டு அவனுக்கு அழைத்தாள்.
“ஒரு சின்ன எமர்ஜென்சி அதனால தான் லேட் ஆகிடுச்சு. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா ஆர்.பி?” என்றான்.
“இல்லை நான் இப்ப தான் வந்தேன் ஜஸ்ட் டென் மினிட்ஸ் ஆச்சு.. பொறுமையா வாங்க..”
“இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்..”
அன்று சனிக்கிழமை மட்டுமின்றி காலை ஒன்பது மணி என்பதாலும், பெரும்பாலான ஆட்கள் கிளம்பியிருக்க அங்கே அதிக கூட்டம் இல்லை.
அத்தனை பெரிய பூங்காவில் ஒருபுறம் குழந்தைகள் மறுபுறம் சில பெண்கள் என்று இருந்தனர். அவர்களில் இருந்து தள்ளி க்ரிஷ் சொன்னது போல சற்று மறைவான யாரும் அவர்களை சட்டென இனம் காண முடியாத இடத்தில் தான் காத்திருந்தாள்.
ராகவியை அதிகம் காக்க வைக்காமல் சொன்னது போலவே பதினைந்து நிமிடத்தில் அவளுக்கான பூங்கொத்தோடு அங்கே வந்த க்ரிஷ், அவளை அணைக்கப் போக “ஸ்டாப் க்ரிஷ்” என்று இரண்டடி பின்னே நகர்ந்தாள்.
“ஹே இட்ஸ் ஜஸ்ட் ஃபிரண்ட்லி ஹக்!! தள்ளி போனால் எப்படி?!” என்றான் சிரிப்போடு.
“ஃபர்ஸ்ட் ஆப் ஆல் யூ ஆர் நாட் மை ஃப்ரெண்ட் க்ரிஷ்!! அதுக்கு சில தகுதிகள் வேண்டும்… அதேபோல உங்களுக்கு இது ஜஸ்ட் ஹக்காக இருக்கலாம் பட் எனக்கு அப்படி கிடையாது..”
“ப்ச் இதுதான் உன்னுடைய பிரச்சனையே ஆர்.பி… வீ ஆர் இன் டிஜிட்டல் இரா!! இன்னும் பழைய பஞ்சாங்கமா இருந்தா எப்படி? யு ஹவ் டு அடாப்ட் யுவர்செல்ஃப் டு தி கல்ச்சர்”
“யூ ஆர் அப்சலூட்லி ரிட் பட் திஸ் இஸ் நாட் மை கல்ச்சர் க்ரிஷ் அன்ட் ஐ டோன்ட் வான்ட் டூ அடாப்ட் எ நியூ ஒன் (நீங்க சொல்றது சரி ஆனால் இது என்னுடைய கலாச்சாரம் கிடையாது எனக்கு தேவையும் இல்லை க்ரிஷ்)” என்று அசராமல் சொல்ல, அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்திருக்க அவர்களை கடந்து மாஸ்க் அணிந்த ஒருவன் ஜாக்கிங் சென்றான்.
“எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..”
“என்ன?” என்றவனிடம் தன் கைபேசியை திறந்து ஒரு புகைப்படத்தை காண்பிக்க அதில் க்ரிஷ் அவன் மனைவி இரண்டு பிள்ளைகளுடம் இருக்கும் புகைப்படம் இருந்தது.
அதை கண்டவனின் முகம் அப்பட்டமாக திகைப்பில் ஆழ்ந்தது.
ராகவி அவன் தாடையை பதம் பார்த்ததில் இரு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தவன், இரண்டாம் நாள் தன் மனைவியின் சித்தி மகன் திருமணத்திற்கு சென்ற போது எடுத்த புகைப்படம்.
‘இது எப்படி ராகவி கையில்?!’ என்ற கேள்வியோடு அவளை பார்க்க, “என்னோட கசினும் இந்த கல்யாணத்துக்கு வந்திருந்தான். அவனுக்கு உங்களை தெரியும் நீங்க அங்க இருக்கிற விஷயத்தை சொல்லவும் டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்க சொன்னதா தானே சொன்னீங்க அப்புறம் எப்படி அங்கே இருக்க முடியும்னு நான் நம்பவே இல்லை..”
“இப்போ நம்புறியான்னு கேட்டு அவன் அனுப்பின பிக்சர் தான் க்ரிஷ் இது!” என்றதில் அவன் முகம் இருண்டு போனது.
நிஜத்தில் அவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி வேறு வழியில்லாமல் அவன் அழைக்கும் போதெல்லாம் அவனோடு இருக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறாள். அவள் மூலமாக அவன் பெங்களூருக்கு சென்றிருக்கும் செய்தி அறிந்து அங்கிருக்கும் தன் தோழி ஒருத்தி மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படம் இது!!
அதை அவனிடம் காண்பித்த ராகவி அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. அமைதியாக அவனை பார்த்திருந்தவளின் பார்வை அவனை துளைத்து கொண்டிருந்தது.
‘முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?’ என்று முடிவெடுத்தவன், “எஸ் எனக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு.. அதுக்காக உன்னோடு லைஃப்பை என்ஜாய் பண்ண கூடாதா என்ன?” என்றதில் ராகவியின் கண்கள் புன்னகைத்தது.
“திருமணம் தாண்டிய உறவு தப்பு இல்லை, கிரிமினல் அஃபென்ஸ் கிடையாது அதிபட்சம் விவாகரத்துக்கு காரணமாக எடுத்து கொள்ள முடியும். அதோடு தனி மனித சுதந்திரத்தில் நாங்கள் தலையிட முடியாதுன்னு கோர்ட்டே சொல்லிடுச்சு.. அப்புறம் என்ன?” என்றான் எள்ளலாக.
“இதுக்கு மேல நான் சுத்தி வளைக்க விரும்பலை ஆர்.பி, ஐ வான்ட் டூ ஸ்லீப் வித் யூ!! உன்னால முடியுமான்னு கேட்க வரலை.. கண்டிப்பா முடியனும்!! அதற்கான நாள், நேரம் இடத்தை குறிக்க தான் வந்திருக்கேன்..” என்று நேரடியாக சொல்ல ராகவி கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக பார்த்திருந்தாள்.
“லுக் உனக்கு இந்த வேலை பெருசா இல்லாம போகலாம். ஆனா அவ்ளோ சுலபமா உன்னால இந்த வேலையை விட்டு போக முடியாது.. அதுக்கான ஏற்பாட்டை நான் ஏற்கனவே…” என்று நிறுத்தியவன்,
“ப்ச் இதெல்லாம் நீ ஒத்துக்காம போனா தான்.. மற்றபடி இதுக்கு அவசியம் இல்லாம போகலாம்…”
“இதுவரை எத்தனையோ பொண்ணுங்களோடு நான் இருந்திருந்தாலும் உன் மேல இருக்கிற கிறுக்கு மட்டும் போகவே மாட்டேங்குது..” என்று சொல்ல, ‘சனி பகவான் உன் நாக்கிலே இவ்ளோ ஃபோர்ஸ்ஸா நர்த்தனம் ஆடுறாரே.. அது சரி அணைய போற விளக்கு பிரகாசமா எரிவது உலக வழக்கம் தானே?! நீ பேசு ராசா’ என்பதாக அவனை பார்த்திருந்தாள்.
“உனக்கு என்ன வேணும் சொல்லு, எல்லாமே செய்யறேன்.. ஆனா கல்யாணம், கற்பு, கலாச்சாரம், ஒருத்தனுக்கு ஒருத்தின்னு பேசிட்டு இருக்காத.. இப்படி பலர் பேசி அதை கேட்டு என் காதே புளிச்சு போச்சு..”
“இருக்கிறது ஒரு லைஃப் அதை நமக்கு பிடிச்ச மாதிரி அனுபவிக்கவும்.. இன்ஃபாக்ட் கற்பு, கலாச்சாரம்னு பேசின பொண்ணுங்க தான் மற்ற மாடர்ன் பொண்ணுங்களை விட பெஸ்ட்டா கம்பெனி கொடுத்திருக்காங்க..” என்றவன்,
“இதுல இருந்து என்ன தெரியுது?” என்றான் பெருமிதத்தோடு.
“அதையும் நீங்களே சொன்னா நல்லா இருக்கும் க்ரிஷ்..” என்றாள் சிரிப்பை கட்டுபடுத்தி.
“காலம் காலமா பொண்ணுங்களை ஒரு கூட்டுக்குள்ள போட்டு அடைச்சு வச்சா இப்படி தான்!! வெடிச்சு வரும் போது விளைவு நாம எதிர்பார்க்காததா இருக்கும்.. என்ன இங்க அது எனக்கு சாதகமா அமைஞ்சுடுச்சு..” என்று கண்சிமிட்டி சிரிக்க ராகவிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“நாம சுவாசிக்கிற காற்று, தண்ணி, சாப்பாடு மாதிரி தான் செக்ஷுவல் டிசையர்ஸ்சும்.. ரொம்ப நாள் கட்டுபடுத்த கூடாது, அது உடம்புக்கும் மனசுக்கும் நல்லதில்லை…” என்று பெரிய லெக்சரே எடுத்தான்.
ராகவிக்கு ரத்தம் கொதித்தாலும் தன் கட்டுப்படுத்தி கொண்டு பேச்சை கேட்டவள் பார்வை என்னவோ அவர்களுக்கு எதிரில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்த இளைஞனை தான் அளவிட்டு கொண்டிருந்தது.
மாஸ்க் அணிந்திருந்தவன் போட்டிருந்த டீஷர்ட், ஜீன்ஸ், கையில் கட்டப்பட்டு இருந்த கருப்பு சாமி கயிறு அதனோடு உறவாடிய காப்பு மற்றொரு கையில் இருந்த வாட்ச் என்று அவனை மொத்தமாய் அவதானித்தது ராகவியின் விழிகள்.
அவர்கள் எதிரே இருந்த வாலிபன் என்ன தான் கைபேசியில் மூழ்கி இருப்பது போல தோன்றினாலும் அவன் பார்வையும் கவனமும் இவர்கள் பேச்சில் தான் இருந்தது.
பதினாறு பெண்களுடன் அட்ஜஸ்ட்மென்டில் இருந்ததை பற்றியும் எந்தெந்த டேட்டில் எங்கு சென்றார்கள் என்பதை எல்லாம் லிஸ்ட் போட்டு கொண்டிருந்தான்.
ராகவியோ எங்கும் குறுக்கிடாமல் அவனை பேச விட்டு கேட்டு அதை வாக்குமூலமாக மாற்றி கொண்டிருந்தாள்.
“இதுவரை நான் சொன்னது அத்தனையும் நம்ம கம்பெனியில் இருக்கிற பெண்கள் தான்!! ஆனால் எங்களை இத்தனை நாள் பார்க்கிற உனக்கு ஏதாவது சின்ன டவுட்டாவது வந்திருக்கா?” என்று கேட்க ‘இல்லை’ என்று தலை அசைத்தாள்.
“அதுதான் க்ரிஷ்ஷோட ஸ்டைல்!! பெட்டை ஷேர் பண்ணினோமா அந்த நைட் விதவிதமா என்ஜாய் பண்ணினோமான்னு இருப்பேனே தவர்த்து அனாவசியமா அதை பற்றி வெளியில பேசிட்டு இருக்க மாட்டேன்..”
“இன்ஃபாக்ட் ரிசார்ட்ல இருந்து கிளம்பும் போதே ஒன் நைட் ஸ்டான்ட்க்கு தெளிவான க்ளோசர் (Closure) கொடுத்துடுவேன்…”
“ஏன்?”
“இதை காரணமா வச்சு யாரும் எமோஷனல் பான்ட் கிரியேட் பண்ணிட்டு நாளைக்கு லவ், மேரேஜ்ன்னு எனக்கு இம்சை கொடுக்க கூடாது இல்லையா? சிலருக்கு பணம், சிலருக்கு கிஃப்ட் இரண்டு பேருக்கு தங்க நகை வரையிலும் கொடுத்திருக்கேன்..”
“ரிலேஷன்ஷிப் அன்னைக்கு நைட்டோட முடிஞ்சது என்பதை உறுதி படுத்த.. அப்படி தானே க்ரிஷ்?!”
“அப்சலூட்லி!! இதுவே வேற யாராவதா இருந்திருந்தா அடுத்தடுத்து வர சொல்லி தொந்தரவு கொடுத்து அதுவே பெரிய ப்ராப்ளம் ஆகியிருக்கும். பட் எனக்கு கேர்ள்ஸோட வொர்க் ஷூரிட்டியும், ரெஸ்பெக்டும் ரொம்ப முக்கியம் அதுல ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்..”
“அதைவிட என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிகிட்டவங்க எல்லாம் இப்போ டெல்லி, மும்பை, ஹைதிராபாத் என்று அவங்களுக்கு பிடிச்ச இடத்துல எவ்ளோ பெரிய பொசிஷன்ல இருக்காங்க தெரியுமா?”
“அவங்க கேட்டது எல்லாம் நிறைவேற்றி வச்சுருக்கேன் ஆன்சைட் ஆஃபரில் தொடங்கி லோன் சென்க்ஷன் வரையில் எல்லாமே!! ஸோ இங்கே அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாம எதுவும் நடக்காது..”
“இது எல்லாம் உங்க பொண்டாட்டிக்கு தெரியுமா க்ரிஷ்?”
“இப்ப அவளை எதுக்கு இழுக்கிற? அவ கிட்ட இதை பற்றி ஏதாவது சொல்லப் போறியா?”
“ச்ச்சே.. ச்சே இது நம்மோட பெர்சனல் பான்ட்!! இதுக்குள்ள எப்படி மற்றவர்களை கொண்டு வருவேன்?” என்றாள் அசட்டையான குரலில்.
“தட்ஸ் குட்! பட் அப்படி ஒரு எண்ணம் இருந்தா தராளமா சொல்லலாம் பட் சொன்னா என்ன நடக்கும்னு நான் சொல்லி தான் தெரியனுமா ஆர்.பி?!” என்றான் வில்ல சிரிப்போடு.
“அது கூட தெரியாம இங்கே வந்திருப்பேனா க்ரிஷ்? ஒருவேளை அப்படி இருந்தா இந்நேரத்துக்கு நான் பெங்களூர்ல இல்லை இருந்திருக்கணும்!!” என்றாள் புன்னகையோடு.
“ஐ ட்ரஸ்ட் யூ!!” என்று சிரித்தவன், “இப்போ நான் சொன்னதால தானே உனக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சது?” என்றான்.
“அஃப்கோர்ஸ்!!” என்றாள் உற்சாகமான குரலில்.
“என்னைக்காவது நான் இந்த ரிலேஷன்ஷிப் பற்றி ஹின்ட் கொடுத்து இருப்பேனா இல்லை அவங்க தான் இதை குறையா சொல்லி இருப்பாங்களா? திஸ் இஸ் எ கிவ் அன்ட் டேக் பாலிசி!!”
“ஸோ மற்றவங்களுக்கு தெரிஞ்சுடுமோ ஏதாவது ப்ராப்ளம் வருமோன்னு நீ பயப்பட வேண்டியது இல்லை.. ஜஸ்ட் ஒன் நைட் ஸ்டான்ட்!! அதுக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ..” என்றான் பெருமிதத்தோடு.
“ஐ காட் இட் க்ரிஷ்!! பட் எனக்கு என்ன வச்சுருக்கீங்க?”
“வாட்?”
“சிலருக்கு பணம், நகை, கிப்ட்ன்னு சொன்னீங்கலே அதுபோல எனக்கு என்னன்னு கேட்டேன்..”
“நான் ஏற்கனவே சொன்னது போல ஆர்.பி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஸோ நீ எனக்கு கம்பெனி கொடுக்கிறதை பொறுத்து என்னோட பொண்டாட்டியை டிவோர்ஸ் பண்ணிட்டு லைஃப் லாங் உன்னோடு இந்த ரிலேஷன்ஷிப் தொடரவும் நான் தயாரா இருப்பேன்..”
“யூ மீன் என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?..” என்றிட முன்பு அவர்களைக் கடந்து ஜாகிங் சென்றவன் இப்போதும் அவர்களை நெருங்கினான். ஆனால், கையில் ஒரு கப்போடு.
“நோ.. நோ.. நோ.. கல்யாணம், குழந்தை, குட்டி, பொண்டாட்டி, பொறுப்பு இதெல்லாம் நச!! ஸோ திரும்ப அந்த தப்பை செய்ய மாட்டேன். நமக்கு பிடிக்கும் வரை லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம் அதுக்கப்புறம் வீ வில் பார்ட் அவே!!”
“இன்ஃபாக்ட் அதுக்கு அப்புறம் உனக்கு பிடிச்சவனோடு நீ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடலாம், குழந்தை பெத்துக்கலாம்.. யாருக்கும் கிடைக்காத ஆஃபர் உனக்கு கிடைச்சுருக்கு.. நல்ல பதிலா..” என்று சொல்லி கொண்டிருந்தவன் மேல் சூடான காபி ஊற்றப்பட்டது.
எதிரும் புதிருமாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, வேக நடையோடு க்ரிஷ் அருகே வந்தவன் கைத்தவறிகொண்டு வந்திருந்த சூடான காபியை அவன் மீது கொட்டிக் கவிழ்த்து வந்தான்.
எதிரும் புதிருமாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, வேக நடையோடு க்ரிஷ் அருகே வந்தவன் கைத்தவறி கொண்டு வந்திருந்த சூடான காஃபியை அவன் அடிவயிற்றின் மீது கொட்டிக் கவிழ்த்திருந்தான்.
சூடான காஃபி ஊற்றப்பட்டதில் துடிதுடித்துப்போன க்ரிஷ் வேகமாக தண்ணீரை தேடி ஓடினான்.
“என்னாச்சு க்ரிஷ்?” என்று அவன் பின்னே சிரிப்போடு அன்ன நடையிட்டு சென்ற ராகவியின் விழிகள் நொடிக்கு ஒருதரம் அவள் பின்னே வந்து கொண்டிருந்த வாலிபனை வட்டமடித்தது.
தண்ணீர் பிடித்து வயிற்றின் மீது ஊற்றிய போதும் சூடான காஃபி பட்ட இடத்தில் அப்படி ஒரு எரிச்சல்!! டக் இன் செய்திருந்த ஷர்ட்டை எடுத்து விட்டவன் ராகவியை தாண்டி சென்று “டேய் கண்ணு தெரியாதா உனக்கு?” என்று அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவன் சட்டையை பிடித்தான்.
அந்த வாலிபனோ அனாயசமாக அவன் கையை உதறி, “இது நடைபாதைன்னு உனக்கு தெரியாதா? ஏதோ உன் அப்பன் போட்டு வச்ச மாதிரி வழியை அடைச்சுகிட்டு நிற்கிற உனக்கு அறிவில்லை?” என்றான்.
“அதுக்காக காபியை ஊத்துவியா?”
“டேய் உன்னால ஐம்பது ரூபாய் காஃபி போச்சேன்னு நானே கடுப்புல இருக்கேன். தேவையில்லாம பேசின மனுஷனா இருக்க மாட்டேன், போடா...” என்று அனாயசமாக அவனை தள்ளிவிட்டு முன்னேறியதில் க்ரிஷ்க்கு அப்படி ஒரு ஆத்திரம்.
அதோடு, “என்ன க்ரிஷ் ஒரு ஸாரி கூட கேட்காதவன் உங்களையே இப்படி பேசறான்?” என்று ராகவி தூபம் போட க்ரிஷுக்கு கோபம் கண்ணை மறைத்தது.
பாய்ந்து சென்று அவன் வழியை மறித்து, “டேய் நான் யாருன்னு தெரியாம…” என்றவனை இடையிட்டு, “நீ என்ன அம்பானிய இல்லை பில் கேட்ஸ்ஸா?” என்றவன் கையைப் பிடித்து பின்னே முறுக்கிய வாலிபன் அடுத்து அவன் என்னவென்று உணரும் முன்பே க்ரிஷ்ஷை அடித்து நொறுக்கினான்.
அவனின் அடி ஒவ்வொன்றும் இடியாக க்ரிஷ் மீது இறங்கி கொண்டிருந்தது.
கைகளை கட்டிக்கொண்டு எவ்வித பதற்றமும் இல்லாமல் இமைக்காது இருவரின் சண்டையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘சண்டையென்றால் இருவரும் சரிசமமாக அடித்துக் கொண்டு இருந்தனர் என்று அர்த்தம் அல்ல’ புதிதாக மாஸ்க் அணிந்து வந்திருந்தவன் க்ரிஷ்ஷை போட்டு பொளந்து கட்டிக் கொண்டிருந்தான்.
“யார் நீங்க எதுக்காக அவரை அடிக்கிறீங்க? தப்பு பண்ணினதுக்கு ஸாரி கேட்க தெரியா..” என்றவளின் வார்த்தை அவன் பார்வையில் முழுமை பெறாமல் இதழ்களுக்குள் அமிழ்ந்து போனது.
“க்ரிஷ் இப்படியே இருந்தா எப்படி?! அவன் ஒரு ஸாரி கூட கேட்காம அடிக்கிறான்.. இப்படி வாங்கிட்டு இருக்கீங்களே திருப்பி கொடுங்க” என்று அவனை உசுப்பேற்ற வீராவேசமாக வாயிலும் மூக்கிலும் வழிந்த ரத்தத்தோடு எழுந்து கொண்டவனால் கையை கூட உயர்த்த முடியவில்லை.
தடுமாறி எழுந்து நின்றவனின் பின்னங்காலிலேயே அவ்வாலிபன் ஓங்கி உதைக்க அப்படியே மடங்கி அமர்ந்தவன் அடுத்தடுத்து அவன் மிதித்த மிதியில் வலி தாங்க முடியாமல் கதற, இறுதியாக அவன் உயிர் நாடியிலேயே ஓங்கி மிதித்தவன் “என் வழியில குறிக்கிட்ட இது தான்டா நடக்கும்..” என்று எச்சரித்து விட்டு கிளம்பினான்.
விழியகலாமல் புன்னகையோடு அவனை பார்த்திருந்தவள், “க்ரிஷ், ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்க ‘அவன் எங்கே பதில் அளிக்கும் நிலையில் இருந்தான்?!’
அரை உயிராக கிடந்தவனிடம் “டோன்ட் வொரி க்ரிஷ் ஐ’ம் வித் யூ!! நான் இப்போவே ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்” என்று கேமராக்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று அவற்றை கைப்பையில் பத்திரபடுத்தியவள் பத்து நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸிற்கு அழைத்திருந்தாள்.