முரளியும் ராகவியும் கோவிலுக்கு சென்று மதிய உணவை முடித்து இருவருக்குமான உடைகளை வாங்கிக் கொண்டு கிளம்பிய போதே மணி நான்காகி போயிருந்தது.
அங்கிருந்து அவர்கள் பீச் வந்து சேர்ந்த போது, சூரியனின் வெப்பம் முழுதாக விடை பெற்றிருக்க, கடல் காற்று குளிர்வாய் அவர்களை வரவேற்றது.
வண்டியில் இருந்து இறங்கியவள், முரளிக்காக காத்திருக்காமல், நேராக வேர்க்கடலை வாங்க சென்று விட்டாள்.
அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீமோடு அங்கே வந்தவனிடம் “முப்பது ரூபா கொடுத்துடு மாமூ” என்று அவன் கையில் இருந்ததை வாங்கி ருசிக்கத் தொடங்கினாள்.
ராகவி அவளின் வேலை பளு காரணமாக அடிக்கடி ஊருக்கு செல்ல மாட்டாள். மாதம் ஒரு முறை கட்டாயம் சென்று விடுபவளுக்கு சில மாதம் அது கூட இருக்காது.
ஆனால், தன்னுடைய வேலை பளுவிற்கு இடையில் மாதம் இரண்டு முறையாவது முரளி அவளை பார்ப்பதற்காக சென்னை வந்து விடுவான்.
அப்படி தன்னை தேடி வருபவனுடன் செலவழிக்கும் நேரங்கள் அத்தனையும் அவளின் பொன் தருணங்கள். ராகவி மாதம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்த போதும் முரளி உரிமையாக தனக்கு செலவு செய்வதையும் கிளம்பும் போது அவளிடம் பத்தாயிரம் கொடுப்பதையும் மனதார ஏற்று கொள்வாள்.
இது இன்று நேற்றல்ல அவள் படிக்க வந்த போதிருந்தே இப்படி தான்!! அவள் மீதான தன் உரிமையை அவன் விட்டு கொடுத்தது கிடையாது. ஹாஸ்டலில் இருந்தவளை நேரடியாக அங்கே வந்து சந்திக்க முடியாது என்பதால் விடுமுறை தினங்களில் வெளியில் சந்திப்பவன் கிளம்பும் போது ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு செல்வான்.
“அப்பா கொடுத்திருக்காங்க, அதுவே அதிகமா இருக்கு மாமூ” என்று சொன்னாலும் கேட்க மாட்டான் அவள் கையில் திணித்து விடுவான். குடும்பத்திற்கு இடையில் விரிசல் ஏற்பட்ட போதும் ராகவி மீதான உரிமை மட்டுமல்ல தன் பொறுப்பையும் அவன் தட்டி கழித்ததில்லை.
ஆயிரம் ரூபாயில் தொடங்கியது இப்போது பத்தாயிரத்தில் வந்து நிற்கிறது.
“மாமூ இப்போ நானே சம்பாதிக்கிறேனே எனக்கு எதுக்கு?” என்று தெரியாத்தனமாக ஒருமுறை ராகவி வார்த்தை விட்டு விட்டாள்.
“சம்பாதிக்க தொடங்கிட்டா என் பொண்டாட்டி இல்லைன்னு ஆகிடுமாடி?!”
“மாமூ!!”
“இல்லை என் பொறுப்புல இருந்து நான் விலகனும்னு சொல்றியா?” என்றான் கடுமையான குரலில்.
“கோபப்படாத மாமூ, நான் அப்படி சொல்லலை.. முன்ன படிச்சுட்டு இருந்தேன் அதனால செலவுக்கு கொடுத்த சரி ஆனா இப்போ..” என்றவள் முடிக்க கூட இல்லை,
“வேலைக்கு போனா புருஷன் காசை செலவழிக்க கூடாதுன்னு எவன்டி சொன்னான்?” என்று மலை ஏறி விட்டான்.
முரளிக்கு முன் கோபம் அதிகம். ஆனால் அவன் கண்மூடித்தனமாக கோபம் கொள்பவன் கிடையாது என்றுமே அவன் கோபத்தில் நியாயம் இருக்கும் என்பதை ராகவி நன்கு அறிவாள்!!
அடுத்த மாதம் அவன் வரவில்லை.
வராததோடு அவளிடம் பேசவும் இல்லை. ஒருவழியாக ஊருக்கு சென்று அவனை மலை இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது ராகவிக்கு.
அதில் இருந்து அவளுக்காக அவன் என்ன செய்தாலும் எதுவும் சொல்ல மாட்டாள். அதேபோல அவனும் ராகவி தனக்கு எடுத்து கொடுக்கும் உடைகளை எவ்வித கேள்வியும் கேட்காமல் மகிழ்ச்சியோடு அணிந்து கொள்வான்.
உடை மட்டுமல்ல இதோ அவன் கையில் போட்டிருக்கும் காப்பு தொடங்கி அவன் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலி வரை ராகவி வாங்கி கொடுத்தது தான்.
“என்ன மாமூ யோசனை?” என்றாள் கடந்த பதினைந்து நிமிடங்களாக எதுவும் பேசாமல் தன்னோடு மௌனமாக நடந்து வருபவனிடம்.
“இதுக்கும் மேல வேலை செய்யணுமா ராகா?”
“எதுக்கும் மேல மாமூ? புரியலை..”
“இப்பேற்பட்ட அயோக்கியன் இருக்கிற இடத்துல இதையெல்லாம் தாங்கிகிட்டு வேலை செய்யணும்னு உனக்கு என்னடி கட்டாயம்? இது மட்டும் தான் வேலையா? இதை விட்டா வேற வேலை இல்லையா என்ன?!”
“வேலை இருக்கு மாமூ, ஆனா எல்லா இடத்திலும் இவனை மாதிரி ஆட்கள் இருக்க தானே செய்யறாங்க.. உனக்காக இந்த வேலையை உதறிட்டு இன்னொரு இடத்துக்கு போறேன்னு வச்சுக்கிட்டாலும் அங்கே இவனை விட மோசமான அய்யோக்கியன் இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?!”
“...”
“எல்லா இடத்திலும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான். இவனை மாதிரி மோசமானவனுக்காக நான் ஏன் மாமூ ஒவ்வொரு கம்பெனியா மாறனும்?”
“அப்படி இல்லைடி, காசு பணம் கொஞ்சம் கூட குறைச்சல் இருந்தா என்ன?! எங்கே வேலை செய்தலும் தன்மானத்தோடு எந்த அழுத்தமும் இல்லாமல் சந்தோஷமா வேலை செய்யணும் அதை விட்டுட்டு அவன் இவ்ளோ தூரம் பேசின பிறகு..”
“எவ்ளோ தூரம் பேசி இருந்தாலும் அவனோட பேச்சும் செயலும் தப்பா இருக்கிறப்போ அவன் தான் தன்னை திருத்திக்கனும். திருந்த முடியாதுன்னு இருக்கிறவனுக்காக நான் ஏன் வேலையை விட்டு ஓடனும்?”
“உன்னோட பாதுகாப்பு எனக்கு முக்கியம் ராகா! நீ மட்டும் ஓகே சொல்லுடி இந்த கம்பெனி என்ன இதை விட பெரிய கம்பெனியை நான் வச்சு கொடுக்கிறேன்..”
“ஓஒ அப்படியா? அப்போ இவ்ளோ பெரிய கம்பெனி ஆரம்பிக்கிற அளவுக்கு சண்டியர் எத்தனை கோடி சேர்த்து வச்சுருக்கீங்கலாம்? சொல்லுங்க தெரிஞ்சுப்போம்..”
“என் தலையை அடமானம் வச்சாவது கம்பெனி வச்சு கொடுக்கிறேன் அதை விட்டுட்டு இப்படி அல்லாடனும்னு உனக்கு என்னடி தலையெழுத்து?”
“இன்னும் கட்டாத கட்டிடத்துக்கு தொடங்காத கம்பெனிக்கு எவ்ளோ நேக்கா ஆள் சேர்க்கிற பார்த்தியா மாமூ, இதுக்கு பேர் தான் வாயிலேயே வடை சுடுறதுன்னு சொல்லுவோம்..” என்றாள் சிரிப்போடு.
“ஏன்டி என்னால முடியாதுன்னு சொல்றியா?”
“அப்படி சொல்லுவேனா? என் மாமூவால முடியாதது எதுவும் இல்லைன்னு எனக்கு தெரியும்! ஆனா யாருக்காகவும் பயந்து வேலையை விட்டு நான் ஓட மாட்டேன். அதே சமயம் என் வழியில குறுக்கே வருபவனை சும்மாவும் விட மாட்டேன்..”
“ப்ச் சொன்னா கேளு ராகா, நான் கம்பெனி ஆரம்பிக்கிறேன் நீ மகாராணியா உட்கார்ந்து அரசாட்சி செய்!!” என்றதில் புன்னகைத்தவள்,
“ராணியை அரசாட்சி செய்ய வச்சுட்டு மகாராஜா என்ன செய்ய போறீங்களாம்?” என்று இடையில் கரம் வைத்து தலை சாய்த்து முரளியை பார்த்தாள்.
“நீ பாதுகாப்பா இருக்கிற என்கிற நிம்மதியோடு எந்த மண்டை குடைச்சலும் இல்லாமல் என் வேலையை பார்ப்பேன்..”
“கேட்க நல்லா தான் இருக்கு மாமூ, ஆனா நான் மட்டுமே வேலை பார்க்கலையே இது போன்ற ஆயிர கணக்கான கம்பெனியில் லட்ச கணக்கான பெண்கள் வேலை செய்யறாங்க.. என்னோட பாதுக்காப்புக்காக நீ கம்பெனி வச்சு கொடுக்கலாம் ஆனா அவங்களுக்கு இந்த வசதி கிடையாது...”
“இவனை போன்ற ஆட்களை பகைச்சுகிட்டாலோ எதிர்த்துகிட்டாலோ அடுத்த வேலை அவ்ளோ சுலபமா கிடைச்சுடாது மாமூ.. அவங்களை எப்படி பாதுகாப்ப?”
“அதுக்கு என்ன உன் ஃப்ரெண்ட் ஸ்வேதாவில் தொடங்கி நம்ம கம்பெனியில் பெண்களை மட்டும் வேலைக்கு எடுப்போம்.. எந்த தொல்லையும் இல்லாமல் வேலை செய்யட்டும்..”
“இதனால குறிப்பிட்ட சதவிகிதம் தான் பலனடையும். பெரும்பாலான பெண்கள் குடும்பம், குழந்தைகள், சமூகம், மரியாதைன்னு பல காரணங்களுக்காக இவனுங்களை பொறுத்துகிட்டும் ஒதுங்கியும் போறாங்க.. அப்படி இல்லாம இவங்களை காட்டி கொடுத்து தண்டிக்க முன் வந்தாலே அவங்க அடங்கிடுவாங்க..”
“ஒருவேளை எல்லா தடைகளையும் மீறி முறையா கம்ப்ளைன்ட் பண்ணி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் இங்கே விக்டிம் பிளேமிங் தான் அதிகமா இருக்கு. அதனால இவனை போன்ற ஆட்களை ஸ்ட்ராங் எவிடென்ஸ்ஸோடு எக்போஸ் செய்து களை எடுக்கிறதன் மூலமா எல்லா பெண்களும் நீ சொல்ற பாதுகாப்போடும் நிம்மதியோடும் இருக்கலாம் மாமூ..” என்றவள் தன் கைபேசியை திறந்து காண்பித்தாள்.
அதில் அவள் அப்லோட் செய்திருந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து சமூக வலைதளமே பற்றி எரிந்து கொண்டிருந்தது. க்ரிஷ்ஷை உடனே கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பலர் கண்டன வீடியோக்கள் பதிவேற்றி இருந்தனர்.
“இதனால உனக்கு எந்த பாதிப்பும் வராதே..”
“வராது மாமூ”
“உன் அப்பாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அந்த மனுஷன் தாங்குவாராடி?
“ஏன் தாங்காமல்?! ஒரே ஊருக்குள்ள இருந்தும் இத்தனை வருஷம் தங்கச்சி குடும்பத்தை தள்ளி வைக்கும் அளவுக்கு வைரம் பாஞ்ச கட்டை அது எல்லாமே தாங்கும்..” என்று சிரிக்க முரளி முறைத்தான்.
“அப்பப்பா!! தாய்மாமனை ஒரு வார்த்தை சொல்லிட கூடாதே அப்படியே கோபம் பொத்துகிட்டு வந்துடும்..” என்று அவனுக்கு மேலாக முறைத்தவள்,
“இதோ பாரு மாமூ இதெல்லாம் தெரிஞ்சா உடனே என் கையை பிடிச்சு இழுத்துட்டு போய் அவசரமா எனக்கு கல்யாணம் பண்ண தான் பார்ப்பாரே தவிர்த்து ஊர் கூட்டி உனக்கு கட்டி வைப்பாருன்னு மட்டும் கனவு காணாத..” என்றவள் சுந்தரவல்லிக்கு வீடியோ காலில் அழைத்தாள்.
பேரன் பேத்தி இருவரையும் ஒன்றாக பார்த்த சுந்தரவல்லிக்கு கண்களில் நீர் தேங்கி விட்டது.
“உன் பேரனை வச்சு எப்படி குப்பை கொட்ட போறேன்னு ஒப்பாரி வைக்கிறியா அப்பத்தா? கவலைபடாத கல்யாணத்துக்கு பிறகு உன் சாமிக்கு எந்த குறையும் வராம கண்கலங்காம பார்த்துக்கிறேன்..” என்று எடுத்ததுமே அவரை வம்புக்கிழுத்தாள்.
“சும்மா இருடி!!” என்று அவளிடம் கைபேசியை வாங்கியவன் பாட்டியிடம் பேச தொடங்கினான்.
மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில்:
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பெட்டி படுக்கைகளோடு வீடு வந்து சேர்ந்திருந்த மகளை பார்த்தசாரதி அதிர்வோடு பார்த்திருக்க, “எதுக்குடி வேலையை விட்டுட்டு வந்த?” என்று எகிறினார் சுந்தரவல்லி.
“ஏன் நான் சம்பாதிச்சு தான் இங்க உலை கொதிக்கனுமா என்ன?”
“பார்த்தியா பார்த்தா என்ன பேச்சு பேசுறான்னு?!” என்றவர் அவன் முகத்தில் இருந்த அதிர்வை கண்டு,
“ஏன்டி ஊருக்குள்ள எவனும் படிக்காத படிப்பை படிக்க வச்சு என் மவளை மெட்ராஸ்ல பெரிய சம்பாத்தியத்துல உட்கார வச்சிருக்கேன்னு என் மவன் ஊரெல்லாம் பெருமையா சொல்லிக்கிட்டு திரிறான்.. நீ என்னடானா சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு வந்து இருக்க?”
“உங்க பெருமைக்கு நான் எருமை மேய்க்க முடியாது…”
“எருமையா? பார்த்தியாடி இவ பேசுற பேச்சை!! எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான் இவளை இப்படி பேச வைக்குது..” என்று மருமகளை குற்றம் சாற்றியவர்,
“பொட்ட புள்ளையை வீட்டோட வைக்கிறதை விட்டுட்டு அம்பளை கணக்கா உடுப்பு போட்டு திரிய விட்டா இப்படி தான் ஆகும்னு சொன்னேனே இந்த வீட்ல யாராவது என் பேச்சை கேட்டீங்களா?!..”
“ஏன் கெழவி உன்னால மாடர்னா ட்ரெஸ் பண்ண முடியலைன்னா அதுக்கு நான் என்ன செய்ய? இப்போ கூட நீ ‘ம்ம்!!’ன்னு சொல்லு உனக்கும் ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் மாட்டி விடுறேன்..” என்றாள் சிரிப்போடு.
“இந்த அநியாயத்தை பார்த்தீங்களா?!..” என்று சுந்தரவல்லி ஒப்பாரி வைக்க “என்ன ராகவி வந்ததும் வராததுமா பாட்டியை வம்பிழுக்கிற?” என்ற பரிமளா மாமியாருக்கு துணையாக வந்து நின்றார்.
“இப்போ எதுக்கு கெழவி இப்படி சலம்பிகிட்டு கிடக்கிற? சரி சொல்லு எனக்கு என்ன வயசு ஆச்சு இப்போ?!” என்றாள்.
“இதை மட்டும் எதுக்குடி என்னை கேட்கிற? ஏன் உனக்கு தெரியாதா?!”
“கேட்ட கேள்விக்கு சொல்ல போறியா இல்லை உனக்கு சம்பந்தத்தை நான் பார்க்கட்டுமா?” என்றாள் மிரட்டலாக.
“வைகாசி வந்தா 23 முடியுது.. அதுக்கு என்னடி?!”
“நம்ம ஊருக்குள்ள 20 வயசுக்கு மேல எந்த பொண்ணுங்களை நீங்க விட்டு வச்சிருக்கீங்க? பெரும்பாலும் ஸ்கூல் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிடுவீங்க அப்படியே அவ தப்பிச்சு காலேஜ் போனாலும் படிச்சுட்டு இருக்கிறப்போவே ரொம்ப நல்ல வரன்! ஜில்லாவுலயே இப்படி ஒருத்தன் கிடைக்க மாட்டான்னு அவ மண்டையை கழுவி கட்டி வச்சுடுவீங்க…”
“ஒருவேளை நீங்க விட்டு வச்சாலும் ஊரு சும்மா விடுமா?! ‘பொண்ண கட்டி கொடுக்க வக்கில்லாம இருக்கானான்னு பெத்தவனை கேவலம் பேசுறதுல தொடங்கி வயசு போனா திரும்ப வராது! எத்தனை காலத்துக்கு பொண்ண நாம பொத்தி வச்சிருக்க முடியும்? இப்படி ஒரு மாப்பிள்ளை போனா கிடைக்காது பொழுது போனா திரும்பாதுன்னு’ ஆளாளுக்கு உசுப்பேத்தி ஜாதகத்தை தூசி தட்ட வச்சுடுவாங்க..”
“புரோக்கர் வந்துட்டு போறது உனக்கு எப்படிடி தெரியும்?!”
“ஓ! அப்போ ஏற்கனவே மாப்பிள்ளை பார்க்கிற படலத்தை ஆரம்பிச்சிட்டீங்களா?!”
“ஏன் ஆரம்பிச்சா என்ன?”
“கட்டிக்க போறது நான் தானே?! எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம எப்படி நீ ஜாதகத்தை கொடுப்ப?” என்றவள் சுந்தரவல்லியை சும்மா விடுவதாக இல்லை.
“உன்னை எதுக்கு கேட்கணும்? உன் தாத்தனை கல்யாண நாள் அன்னைக்கு வரையிலும் என் கண்ணுலேயே காட்டலை…”
“அப்படி காட்டியிருந்தா என் தாத்தா தப்பிச்சிருப்பார்.. எல்லாம் கொள்ளு தாத்தா பண்ணின சதி..” என்று சொல்ல தன்னை மீறி பார்த்தசாரதி சிரித்து விட்டார்.
இன்று நேற்றல்ல பாட்டியும் பேத்தியும் எப்போது சேர்ந்தாலும் ஒருவரை ஒருவர் சீண்டி சண்டை பிடிப்பது மட்டுமல்ல, கேலி, கிண்டல் செய்து, சிரிப்பும் சப்தமுமாக வீடே கோலாகலமாக இருக்கும்.
சாரதியும் பரிமளாவும் இதில் எப்போதுமே தலையிட மாட்டார்கள். அப்படி தலையிட்டு விட்டால் போதும் நான் முக்கியமா நீ முக்கியமா என்று அவர்களின் தலை தப்பாது.
“பார்த்தியாடி உன் மகளுக்கு வாய் வேலூர் வரைக்கும் நீளுது…”
“எல்லாம் ஜீன்!! என்ன பண்றது” என்றாள் சீண்டலாக.
“என்னடி சொன்ன?”
“உனக்கு கம்மியா இருந்தா தானே கெழவி எனக்கு கம்மியா இருக்கும்னு சொன்னேன்..?”
“பேச்சாடி பேசற? பேசு பேசு உன் வாயை அடக்கவே என் பேரன் சீக்கிரம் வருவான்..” என்று சொல்ல, “ஆத்தா!!” என்றார் பார்த்தசாரதி.
“என்னடா?”
“யாரை பேரன்னு சொல்ற?”
“என் பேத்தியை காட்டிக்க போறவனை தான்!!” என்று சமாளித்தவர் அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன்பாக.,
“ஏன் பெத்தவங்க பேச்சை கேட்ட நாங்க நல்லா இல்லாமலா போயிட்டோம்?!.. உனக்கு எது நல்லதுன்னு என் மவனுக்கு தெரியும்டி! ஒழுங்கு மரியாதையா அவன் கை காட்டுற மாப்பிள்ளையை கட்டிக்கிற வழியை பாரு..” என்றார் கறாராக.
“இப்படி சொல்லி என்னை கண்காணாத தூரத்துல இருக்கிறவனோடு தொரத்தி விட பார்க்கிறியா கெழவி?”
“என் மக அழகுக்கும் அறிவுக்கும் இந்த ஜில்லாவுல மட்டுமில்லை இந்தியாவுலையே மாப்பிள்ளை இல்லைன்னு என் மவன் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்திருக்கான்.. அதுல என்ன குத்தத்தை கண்டுட்டடி நீ!!”
“வெளிநாட்டு மாப்பிள்ளையை நான் கேட்டேனா? உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு இருக்கீங்க?!”
“நாங்க பார்க்கலை ராகவி, தரகர் தான் அப்பா கிட்ட கொண்டு வந்து கொடுத்தார்..” என்று பரிமளா சொல்ல,
“எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் தானே ம்மா..” என்றிட அவரோ பதிலின்றி பார்த்தார்.
“இதோ பாரு கெழவி வேணும்னா அவனை நீயே கட்டிக்கோ அதுவும் இந்த ட்ரெண்ட்கு ஏற்ற படி ட்ரெஸ், மேக்கப்னு எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அந்த மாப்பிள்ளை கிட்டயும் நானே பேசறேன்..” என்றாள் கோபமாக.
“வேலையை விட்டுட்டு வர இது தான் காரணமா தங்கம்மா?” என்றார் பார்த்தசாரதி.
“இது மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது ப்பா ஆனாலும் இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்துட்டதால கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் காலம் அப்பா அம்மா அப்பத்தா கூட இருக்கலான்னு தான் வேலையை விட்டுட்டு வந்தேன்”
பார்த்தசாரதி பேசும் முன், “ஏதே!! என் கூட இருக்க வந்தியா?”
“ஆமா இப்போவே தரகர் வீடு தேடி வந்தாச்சு. இன்னும் 24 வயசு ஆச்சுன்னா எனக்கு என்ன குறையோ ஏது குறையோன்னு ஊரே பேச ஆரம்பிச்சுரும். நீங்களும் அதுக்கப்புறம் என்னை வேலை பார்க்க விட போறதில்லை அவசரமா கூப்பிட்டு கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள என்னை ஃப்ளைட் ஏத்தி அனுப்பிடுவிங்க..” என்று ஆதங்கத்தோடு அனைவரையும் பார்த்தாள்.
“என்னடா புடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா உட்கார்ந்திருக்க.. அவளை ஏதாவது கேளு..” என்றார் மகனிடம்.
“இந்த பார் கெழவி என்கிட்டே ஒரு வார்த்தை சம்மதம் கேட்காம புரோக்கர் கிட்ட பேசினதுலயே காண்டாகி போய் இருக்கேன்.. தேவை இல்லாம அப்பாவை உசுப்பேத்தி என்னை விரட்ட பார்த்த அவ்வளவு தான்!!” என்றவள்,
“நீங்க சொல்லுங்க ப்பா, இவ்ளோ நாள் ஹாஸ்டல், பிஜின்னு இருந்துட்டேன்.. எனக்கு கல்யாணம் பண்ணிட்ட பிறகு நினைச்ச நேரம் உங்க கூட வந்து இருக்க முடியுமா?!” என்றிட தவிப்போடு மகளை பார்த்தார்.
பின்னே, ஒரே மகள்!! ஏதோ நவீன தொழில் நுட்பத்தின் உதவியில் தினமும் அவளை நேரில் பார்த்து பேசுவது போல வீடியோ காலில் பேசும் வாய்ப்பு இருப்பதால் அத்தனை தூரம் மகளை அனுப்பினார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மகளிடமான தன் உறவும் உரிமையும் நிச்சயம் ஏற்ற இறக்கம் பெரும் அல்லவா?! அதை தாங்கும் சக்தி இல்லாததால் தான் மனிதர் தரகரிடம் இந்த வருடம் போகட்டும் அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார்.
“முடியாது. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீடு தான் பொண்ணுங்களுக்கு நிரந்தரம்!!” என்றார் பரிமளா.
“கல்யாணத்துக்கு முன்னாடி அப்பா வீடு கல்யாணத்துக்கு பிறகு புருஷன் வீடு அப்போ எது தான் ம்மா என் வீடு!!” என்றாள் ராகவி சலிப்போடு.
மகளின் கேள்வியில் நொடிப்பொழுது கூட தாமதிக்காமல், “இது உன் வீடு தங்கம்மா!! இங்க நீ உன் இஷ்டபட்ட படி இருக்கலாம்..” என்றார் பார்த்தசாரதி.
“அப்பான்னா அப்பா தான்!!” என்று அவரை கட்டிக்கொண்டவள், “பார்த்தியா கெழவி இது என் வீடுன்னு உன் மகனே சொல்லியாச்சு அதனால எப்படி அடக்க ஒடுக்கமா இருக்கணுமோ அப்படி இரு..” என்றாள் மிரட்டலாக.
சுந்தரவல்லி மகனை பார்க்க, “நாலு மாசமோ, ஆறு மாசமோ இல்லை ஒரு வருஷமோ உங்க எல்லாரோடும் இருந்துட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வந்துட்டேன் ப்பா..”
“அப்போ நீ எந்த வேலையும் பார்க்க போறது இல்லையாடி?!”
“ஏன் பார்க்காம? அதெல்லாம் படிச்ச படிப்பு வீணா போகாத மாதிரி பார்த்துப்பேன் அப்பத்தா!!” என்று சுந்தரவல்லியை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.
“என் பொண்ணு எது செய்தாலும் சரியா தான் இருக்கும். கல்யாணமாகிற வரைக்கும் தங்கம்மா இங்கேயே இருக்கட்டும் அமைதியா இரு த்தா..” என்று பேச்சை முடித்து கொண்டு கிளம்பி விட்டார்.

Last edited: