‘கொலைகாரன் குடும்பம்’ என்று சொன்னதில் அனைவருமே ஸ்தம்பித்து போயிருக்க தவிப்போடு முரளியை பார்த்த ராகவி அவனை தடுக்கும் முன் மாப்பிள்ளையை அடித்திருந்தான்.
“என்னங்க உண்மையை மறைச்சது நீங்க! அதை கேட்டா எங்களையே அடிப்பீங்களா?” என்று அவன் நண்பர்கள் எகிறிக்கொண்டு வர “மாமூ, ப்ளீஸ் அவசரப்படாத..” என்று அவனை பிடித்து கொண்டாள்.
“உண்மையை சொன்னா அடிப்பீங்களா?” என்று மாப்பிள்ளையின் அன்னையும் சொல்ல, “போதும்..!!” என்று கர்ஜித்த முரளிதரன் விழிகளில் அத்தனை ஆத்திரம்.
ஆத்திரம் மட்டுமல்ல தங்களை இந்த நிலையில் நிறுத்தி விட்ட தந்தையை எண்ணி அவமானம், இயலாமை எல்லாமும் சேர்ந்து கொள்ள அவன் உள்ளம் உலைகலனென கொதித்து கொண்டிருந்தது.
“மாமூ ப்ளீஸ் பிரச்னையை இன்னும் பெருசு படுத்த வேண்டாம் கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசிக்கிறேன்..” என்று அவன் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்ட ராகவி,
“எப்போ உங்களுக்கு பொண்ணோட அப்பா பற்றி தெரிஞ்சதோ அப்போவே இங்க வராம போயிருக்கலாமே ஏன் வந்தீங்க?..” என்றாள்.
“ஏன் வந்தோமா? அதை கேட்க நீ யாருமா?”
“நான் இவங்களோட அண்ணன் பொண்ணு!!”
“பொண்ணு இங்கிருக்க உன் அப்பா அம்மா எங்கே?”
“இது தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?”
“ஊருக்குள்ள சரியா தான் சொல்லி இருக்காங்க.. இவங்க லட்சணம் எப்படின்னு கூட பிறந்த அண்ணனே இவங்களை ஒதுக்கி வச்சிருக்கிறதுல தெரியுதே..”
“அது எங்களோட குடும்ப விஷயம் உங்களுக்கு தேவை இல்லாதது…”
“...”
“அதுதான் பொண்ணோட அப்பாவை பற்றி இங்கே வரும் முன்னமே தெரிஞ்சுடுச்சே.. உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை கால் பண்ணி சொல்லி இருக்க வேண்டியது தானே?! எதுக்கு தேவையில்லாமல் இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க?” என்றாள் ராகவி.
“என்னமா பேசற? அப்பன் கொலைகாரன் என்பதை மறைச்சு உங்க பெண்ணை எங்க தலையில கட்டி வைக்க பார்ப்பீங்க நான் அமைதியா இருக்கனுமா?” என்றிட முரளியின் பொறுமை முற்றிலுமாக விடைப்பெற்றது.
“நல்ல வேளை உங்களை பற்றி முதல்லையே தெரிஞ்சது இல்லை எங்க மகன் வாழ்க்கை என்னாகி இருக்கும்னு தெரியலை..” என்று மாப்பிள்ளையின் அன்னை சொல்ல,
“இப்போ தெரிஞ்சுடுச்சு தானே அப்புறம் ஏன் இன்னும் இங்கே நின்னுட்டு இருக்கீங்க வெளியே போங்க..” என்றான் கட்டுக்கடங்காத கோபத்தோடு.
“இதுக்கு மேலயும் இங்கே இருக்க நாங்க ஒன்னும் மானம் கெட்டவங்க கிடையாது..” என்றவர்கள் கிளம்பி செல்ல தரகர் அவர்களை சாமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் எதையும் கேட்கும் நிலையில் இல்லாத மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப மங்கை கண்ணீரோடு மகளை பார்த்தார்.
“ம்மா எதுக்கு இப்போ அழறீங்க?” என்று அன்னையை தேற்ற முரளி அன்னையை வெறித்து பார்த்திருந்தான்.
இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே தன் தந்தையால் அவன் சந்தித்து வரும் அவமானம் தான் என்றாலும் இன்று தன் தங்கையையும் அது தொடர்வதில் மனம் கொதித்து கொண்டிருந்தது.
பாரிநேயன் ஜெயிலுக்கு சென்ற போது முரளி ஏழு வயது சிறுவன் என்றால் அபிராமி ஒரு வயது குழந்தை.
தான் செய்த கொலையை பாரிநேயனே ஒப்புக்கொண்டதால் ஊரே இவர்களை ஒதுக்கி வைத்தது. அதிலும் மங்கை ஒருபுறம் அவமானம் ஒத்துக்கத்தை சந்தித்தார் என்றாள் மறுபுறம் ஏழு வயது சிறுவனான முரளி சந்தித்தது அனைத்தும் அவன் வயதிற்கு அதிகமே!!
என்ன தான் ஆசிரியர்கள் கண்டித்த போதும் அவ்வப்போது சக மாணவர்களிடம் இருந்து 'கொலைகாரன் மகன்' என்ற சொல் வந்துவிடும்.
முதலில் அவர்களின் ஏளனத்தால் மனம் உடைந்து அழும் முரளி ‘பள்ளிக்கு செல்ல மாட்டேன்’ என்று மங்கையிடமும் அழுது ஆர்பாட்டம் செய்வான்.
‘யார் சொல்வதையும் கண்டு கொள்ளாதே’ என்று மங்கை சமாதானம் செய்வார்.
என்ன தான் முரளி மற்றவர்களிடம் ஒதுங்கி தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தாலும் அவனை வம்பிற்கு இழுக்கவே சிலர் அவன் தந்தையை வைத்து அவனை பேசுவது உண்டு.
முதல் முறை சக மாணவனை அவன் அடித்த போது ஹெட்மாஸ்டர் முரளியை கண்டித்து மங்கையிடமும் மகனை கட்டுபடுத்த சொல்லி இருந்தார்.
ஆனால் நன்கு படிக்க கூடிய மாணவனான அவனை வேண்டும் என்றே மற்றவர்கள் சீண்டும் போது அவனும் எத்தனை முறை தான் கண்டு கொள்ளாமல் கடக்க?!
வளர வளர மற்றவர்களின் ஏளனமே முரளியின் குணத்தை மிகவும் மூர்க்கமாக மாற்றி விட்டது.
பத்தாம் வகுப்பில் இருந்த போது மிக மோசமாக பேசிய மாணவன் ஒருவனை அவன் அடித்ததில் அது மிகப்பெரிய பிரச்சனையாகி போனது.
மங்கைக்கு அந்த மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு மகனை மீட்பதே பெரும் பாடாகி போனது.
அதன் பிறகு முரளி பள்ளிக்கு செல்லவில்லை.
அதேநேரம் தன்னிடம் பேச வந்த தாயிடம், “படிப்பு ஏறாமல் நான் ஸ்கூல் விட்டு நிற்கலை. எனக்கு நீங்களும் என் தங்கச்சியும் முக்கியம்..இனி என்னை வற்புறுத்தாதீங்க ம்மா…” என்றவனின் உணர்வை புரிந்து கொண்டவரிடம் மௌன கண்ணீர் மட்டுமே!!
“கண்டிப்பா நான் கொலைகாரனாகிட மாட்டேன்..” என்று அவர் கண்ணீரை கண்டு சொன்னவன் அன்றிலிருந்தே மங்கை வளர்த்து வந்த பசுக்களை பராமரிக்க தொடங்கி தோப்பு, தோட்டங்களை தன் பொறுப்பில் எடுத்து கொண்டான்.
அயராது உழைக்க தொடங்கியவன் அதன் பின் மெல்ல தனக்கான தொழிலை உருவாக்கி விரிவாக்கம் செய்து ஊரில் உள்ள பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து தன் சாம்ராஜ்யத்தை கட்டமைத்துள்ளான்.
அவனை பார்த்தாலே பயந்து ஒதுங்கும் மாணவர்கள் மற்றும் ஊரார் மத்தியில் தன் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைக்க வேண்டும் என்பதே அவனை இந்த உயரத்தை எட்ட செய்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தங்கையை பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவன் தன்னை போல அவள் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்று வெளி ஊரிலேயே கல்லூரி படிப்பையும் சிறப்பாக முடிக்க வைத்தான்.
அவர்களை ஒதுக்கிய ஊராரே மெல்ல அவர்களோடு பழக தொடங்கியதும் இல்லாமல் இன்று தங்கள் வீட்டு பெண்களையும் இங்கே வேலை செய்ய அனுப்புகின்றனர்.
வெளிறிப்போன முகத்தோடு உள்ளே வந்த தரகரிடம், “நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்?” என்றான் அடிக்குரலில்.
“தம்பி..”
“அவங்க கிட்ட உண்மையை சொல்லலையா?”
“தம்பி.. அது..”
“சொல்லுங்க..”
“இல்லை தம்பி ஏற்கனவே இரண்டு மூணு பேர் கிட்ட உங்க குடும்பம், வசதி வாய்ப்பு, மாமா பற்றி சொல்லி கடைசியா உங்க அப்பா பற்றியும் சொன்னேன். ஆனா விஷயம் தெரிஞ்சதும் எதை பற்றியும் யோசிக்காமல் இந்த சம்பந்தம் வேண்டான்னு சொல்லிட்டாங்க..”
“அதுதான் இவங்க கிட்ட அப்புறம் பொறுமையா பக்குவமா உண்மையை சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா வழியில என் பங்காளி கிட்ட பேச போயிருந்தப்போ யாரோ விஷயத்தை சொல்லி இருக்காங்க போல அதனால் தான்..” என்றவர், “மன்னிச்சுடுங்க தம்பி..” என்றார்.
“ஆரம்பத்துலயே என் பையன் அவர் ஜெயில்ல இருக்கிற விஷயத்தை சொல்லி தானே மாப்பிள்ளை வீட்டாரை அழைச்சுட்டு வர சொன்னான். அப்புறம் ஏன் மறைச்சீங்க தரகரே..” என்றார் மங்கையும் கண்ணீரோடு.
“அதுக்கில்லை ம்மா.. ரொம்ப நல்ல சம்பந்தம் மாப்பிள்ளையும் நம்ம பாப்பாவுக்கு பொருத்தமா இருப்பாருன்னு தான்..”
“போதும் நிறுத்துங்க.. அப்போவே என் பையன் உண்மையை சொல்லி அவங்களுக்கு சம்மதம் இருந்தா மட்டும் கூட்டிட்டு வாங்கன்னு தானே சொன்னான். நீங்க மறைச்சதோட விளைவை பார்த்தீங்க தானே?!”
“மன்னிச்சுடுங்க ம்மா..” என்று கிளம்பி சென்றார்.
“அன்னைக்கு அண்ணன் சொன்னதை கேட்டிருக்கனுமோ?!”
“ப்ச் த்தை.. என்ன பேசறீங்க?”
“இல்லை ராகவி நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். அன்னைக்கு தங்கச்சியை விட கௌரவம் உனக்கு முக்கியமான்னு என் அண்ணனை கேட்டு உதறின மாதிரி இப்போ என் பிள்ளையை செய்ய முடியலையே..”
“இத்தனை வருஷமா ‘கொலைகாரன் பிள்ளை’ என்ற பட்டம் சுமந்து அவன் படாத அவமானம் இல்லை. அவர் பண்ணின தப்புக்கு என் பையன் படிப்பை இழந்தது மட்டுமில்லாம ஆயுள் வரை தண்டனை அனுபவிக்கிறான். இதுல நானுமே என் பிள்ளையை கஷ்டபடுத்துறேனேடி!” என்றார் கண்ணீரோடு.
“அப்படி எதுவும் இல்லை த்தை.. உங்களை நீங்களே கஷ்ட படுத்திக்காதீங்க..” என்று அவரை சமாதானப்படுத்தி விட்டு அவசரமாக வெளியில் வந்து முரளியை தேட அவன் அங்கு இல்லை.
“தம்பி வண்டியை எடுத்துட்டு வேகமா கிளம்பிடுச்சு பாப்பா..” என்று ரங்கன் தகவல் கொடுக்க முரளி எங்கே சென்றிருப்பான் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் உடனே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ராகவி.