வாசகர்களுக்கு வணக்கம்!
‘என்றும் உன் நிழலாக’ 2014 இன் இறுதியில் எழுதிய எனது நான்காவது நாவல்.
கதையைப் பற்றிச் சுருங்கச் சொன்னால், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நடுத்தர வர்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவளான நிதி, அவளின் குடும்ப நிலையை முதன்மையாக நிறுத்தி, சிறுமியாக இருக்கையிலேயே அவள் மாமாவோடு நெதர்லாந்து வருகின்றாள். வெளிநாட்டில் அவள் ஆரம்பிக்கும் முற்றிலும் அறிமுகமற்ற வாழ்வு, சந்திக்கும் சேர்ந்திருக்கும் உறவுகள், அவர்கள் காட்டும் பல்வேறான முகங்கள், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் அவள் எதிர்கொண்டு வளர்ந்து வரும் விதம் என்பவற்றோடு, அவளை நேசிக்கும் இரு நெஞ்சங்கள் பற்றியும், அவர்கள் வெளிப்படுத்தும் தன்னலமற்ற நேசத்தையும் சொல்லிச் செல்வதோடு, நம் நாயகியின் இதயத்தில் மலரும் நேசப் பூவின் வாசத்தையும் நுகரச் செய்கின்றது. ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சுவாரசியம் குன்றாது நகரும் இக்கதையில், அங்கங்கே புதிர்கள் முளைப்பதும் பின், கதையோட்டத்தில் அவை மொட்டு விரிப்பதும் நிகழ்கின்றது. பெரும்பாலும் நெதர்லாந்தில் சுற்றிவருகின்ற கதை இந்தியாவுக்குச் செல்வதும் அப்படியொரு புதிரின் விடைகாணவே!
இக்கதை எனக்கு இரு விதங்களில் மிகவும் விசேசமானது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் எழுதிய இரு குறுநாவல்கள் மற்றும் ஒருநாவலுக்குப் பிறகு, என்னால் அழுத்தமாக எழுத முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது இக்கதையே! அடுத்து, இக்கதையே எனக்கு தர்சி கோகுலனை அறிமுகமும் செய்து வைத்தது. அதற்குப் பின்னர் நான் எழுதிய ஒவ்வொரு கதைகளுக்கும் முதல் வாசகி மற்றும் தீவிர விமர்சகி அவர்தான்.
கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம் .
கதை நிகழ்வுகளும், மாந்தர்களும் உங்களோடிணைந்து என்றும் உங்கள் மனங்களில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,
ரோசி கஜன்

Author: ரோசி கஜன்
Article Title: அறிமுகம்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.