அலையாடும் மேகங்கள்
அத்தியாயம் – 2
தினம் தினம் யுத்த களத்தில் நின்று போராடுவதெனச் சென்ற வாழ்க்கை, திடீரென்று யாரும் இல்லாமல் பட்ட மரமாகத் தனியாக இருந்தபோது அனுபவித்த நரக வேதனையிலிருந்து வெளி வரத் தனக்காக ஒருத்தி வந்துவிட்டாள். இனிமேல் தன் வாழ்க்கை பசுஞ்சோலையாக மாறப் போகிறது என்ற குதூகலத்தில் இருந்தான் அமர்.
அழுத கண்களுடன் இருந்த கிருத்திகாவின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துத் தன் கைகளுக்குள் பொதிந்தவன், “கிரு, இரண்டாம் கல்யாணம்னு சாஸ்திர சம்பிரதாயங்கள் வேண்டாம்னு” அமர் இழுத்தபடி சொல்ல.
வெடுக்கென்று கையை உருவியவள், “உங்களுக்கு ரெண்டாம் கல்யாணம். எனக்கு இது முதல் கல்யாணம். ஒவ்வொரு பெண்ணுக்கும் பல கல்யாணக் கனவு இருக்கும். எனக்கு ஒரு சில கனவுதான் அதுவும் நிறைவேறாம போச்சு” அமர் அருகிலிருந்து ஒரு அடி விலகி அமர்ந்தாள்.
ஆரம்பமே கோணாலா போகுதேயென முழித்த அமர், “கிரு, நான் சொல்றதை முதல்ல கேட்டுட்டு பேசு.” என்றவளின் குரல் அவள் காதில் கேட்டும் வேறு எங்கோ பார்த்திருந்தவளிடம், “சரி இப்ப நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. தூங்கி எழுந்ததும் பேசிக்கலாம்” என அறைக்குள் செல்ல, கிருத்திகா உட்கார்ந்திருந்த சோபாவில் காலைச் சுருக்கிப் படுத்துவிட்டாள்.
திருமணம் என்ற கனவு பெரிதாக இல்லை என்றாலும் சொற்பமாக நினைத்திருந்ததும் கானலாகப் போனதின் வலியைத் தாங்க முடியாமல் கோபமாக மாறி அமரிடம் அம்பாகப் பாய்ந்தது. பின்னாடி வருவாளென நினைத்து அறைக்குள் சென்று திரும்ப, சோபாவில் கூனிக் குறுகி படுத்தவளை கண் இமைக்காமல் பார்த்துவிட்டுப் பெரு மூச்சை இழுத்துவிட்டபடி படுக்கையில் சரிந்தான்.
கண்களில் தூக்கம் அண்ட மறுத்து இருந்தது. இரண்டாம் திருமணத்திற்கு எல்லோரையும் கூப்பிட்டால் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நேரிடுமென, தன் நிலையிலிருந்து யோசித்தவன் கிருத்திகாவின் ஆசையைப் பற்றிக் கேட்க மறந்திருந்தான். முடிந்து போனதை நினைத்து வருந்துவதால் பயனில்லை. நடக்கப் போவதை சரி செய்வதே சரியானதென எண்ணி, தீவிர சிந்தனைக்குப் பிறகு கைப்பேசியில் நண்பர்கள் மூவரை அழைத்துச் சில ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான்.
மணம் முடித்த சில மணி நேரங்களில் ஒரே வீட்டில் இருவரும் வேறு வேறு மூலையில் இருப்பது மனதை குடைய, அவளிடம் பேச நினைத்து மணித் துளிகள் மெல்ல மெல்ல கரைந்ததே தவிரப் பேசத் தைரியம் வரவில்லை.
அதற்குள் மணி பன்னிரெண்டு அடிக்க, இப்போது புறப்பட்டால்தான் ஓட்டல் போகச் சரியாக இருக்குமென்று கிருத்திகா தூங்கிவிட்டளென நினைத்து எழுப்ப, அவள் கண்களைத் துடைத்தபடி எழ, கிரு, ஓட்டல் போகனும் நீ கிளம்பறியா?” தலை குனிந்தபடியே சரியெனத் தலையை ஆட்டினாள்.
தன் சூட்கேசை திறந்து புடவையை எடுத்து வர, தடுத்து நிறுத்திய அமர், “உனக்காகப் புதுப் புடவை வாங்கியிருக்கேன். உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு தெரியலை. நானா செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்தேன். இதைக் கட்டிட்டு வரீயா?” தயக்கத்தில் அவளிடம் நீட்ட, படக்கென்று பிடுங்கிச் சென்றாள். கிருத்திகா புறப்பட்டு வரும் வரை காத்திருக்க, பல மணி நேரங்களைச் செலவிடமால், சில மணித்துளிகளில் அழகு தேவதையாக வந்து நின்றாள்.
வெள்ளையான பெண்கள்தான் அழகு என்று யார் சொன்னது? கறுப்புதான் அழகோ அழகெனக் கிருத்திகாவை பார்த்ததும் தடுமாறி நின்றான். தன்னையும் அறியாமல் அவள் அருகில் சென்றவன், தன் இரு கைகளில் அவள் முகத்தை ஏந்தி நெற்றியில் இதழ் பதித்துச் சற்ரு கீழே குனிந்தவனை நெஞ்சில் கைவைத்துப் பலம் கொண்டு தள்ளிவிட்டாள். அதை எதிர்பாராத அமர் பின்னந்தலையைச் சொறிந்தபடி நின்றான்.
அமர் தயாராகப் போகிறானென நினைத்து வழிவிட்டவளை திடீரென்று முத்தமிட்டு கீழே குனிந்த அடுத்த நொடி சுதாரித்தவள் தள்ளிவிட, “என் அப்பா, அம்மா கஷ்டப்படக் கூடாதுன்னு நீங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையை ஆட்டினேன். அதுக்காக எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்டுப் பின்னாடி வந்திருவேன்னு நினைக்காதீங்க. எனக்குப் பசிக்குன்னு நீங்க சொன்னதும் ரெடியாகி வந்தேன்” அவள் கண்களே கோபத்தைப் பறைசாற்றியது.
“ஒரு முத்தம் கொடுத்தது தப்பா? அதுக்கு இவ்ளோ பெரிய லெக்சரர் எனக்குத் தேவையா? இதுக்கே இப்படின்னா மத்ததுக்கெல்லாம் என்ன ஆகுமோ தெரியலையே? கடவுளே என்னை ஏன் இப்படிச் சோதிக்க?” சாமி படத்தை நோக்கிக் கைகளை விரித்தான். அமரின் புலம்பலைக் கேட்டு இதழ்களில் புன்னகை தவழக் கைக்குட்டையால் ஒற்றி சிரிப்பை மறைத்தாள். அமரின் செயல் உள்ளுக்குள் மகிழ்ச்சியைத் தந்தாலும் ஏனோ அதை ரசிக்கும் மனம் இல்லாமல் போனது.
‘ரெண்டாவது கல்யாணம்னா வயது அதிகமிருக்குமே! இவரைப் பார்த்தாள் வயது அதிக இருப்பது போல் தெரியலையே!’ முத்தமிட்டதுக்குக் கோபப்பட்டவள் தான் கட்டியிருக்கும் புடவை வண்ணத்தில் உடை அணிந்து வந்தவனைக் கண்டு மெய்மறந்து நின்றாள். அமரின் கைத்தன் முன் ஆடுவதைக் கண்டு சுயநினைவுக்கு வந்தவள் வெட்கம் மேலிடச் சட்டென்று வெளியில் சென்றாள்.
இருவரும் ஓட்டலுக்குள் நுழையப் பணியாள் ரோஜா பூக்கொடுத்து, ஏற்கனவே பதிவு செய்திருந்த அறைக்குள் அழைத்துச் செல்ல, உள்ளே நுழைந்ததும் ரோஜா இதழ்களும், வண்ண வண்ண காகிதங்களும் இருவரின் மீது விழ, பலரின் கைத்தட்டல்கள் ஒலி கேட்டுக் கறுமை நிற கன்னங்கள் சிவந்திருக்க, அமரை ஏறிட்டுப் பார்த்தாள் கிருத்திகா.
அமர் கை நீட்டி நிற்க, அவன் கைப்பிடித்து நடந்து, மேசையில் இருந்த கேக் முன்னாடி நின்று இருவரும் சேர்ந்து வெட்ட, மீண்டும் கரவொலி அறைக்குள் எதிரொலித்தது. அனைவரும் மேசையில் உணவருந்த அமர்ந்தனர்.
குறுகிய நேரத்தில் அனைத்தையும் ஏற்பாடு செய்து மற்ற நண்பர்களையும் குடும்பத்தோடு வர வைத்திருந்த தன் நண்பன் நந்தாவுக்குக் கண்களால் நன்றியைத் தெரிவித்தான் அமர். நந்தாவும் இமைகளை மூடித் திறந்து சிரித்தபடி கண்ணைச் சிமிட்டினான்.
எல்லோரையும் புன்னகையோடு சுற்றிப் பார்த்த கிருத்திகாவின் முகம் மாற, யாரும் விருந்துக்கு வந்தவர்கள்போல் இல்லையே, ஏதோ அவசர கோலத்தில் சாதாரண உடையில் வந்திருப்பதைக் கண்டு, அவள் மனம் எதெதையோ கணக்குப் போட்டது.
நண்பர்களின் பட்டாளமும் அவர்களின் குடும்பமும் உணவருந்திய வேகத்தைவிட அவர்கள் விடை பெற்று சென்ற மின்னல் வேகத்தை வைத்தே புரிந்து கொண்டாள். அலுவலகத்திற்குச் சென்றவர்களைத் திடீரென்று அழைத்து விருந்து வைத்திருப்பதைப் புரிந்து கொண்டாள். எல்லோரும் செல்லும் வரை அமைதியாக இருந்தாள்.
“கிரு, நாம படம் பார்த்துட்டு போலாமா?” அமர் கேட்க,
“வேண்டாம் வீட்டுக்குப் போலாம்” என்று பல்லை நறநறவெனக் கடித்தாள்.
‘எல்லோரிடமும் நல்லா பேசிட்டுதானே இருந்தா இப்ப என்ன ஆச்சு?’ என்ற யோசனையில், “சாமான் வாங்கனும் கடைக்குப் போயிட்டு வீட்டுக்குப் போலாம்” என வண்டியை உதைத்தான்.
“என்னை வீட்டில் விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க. போற இடத்துக்கெல்லாம் வந்து நான் அசிங்கப் படனுமா?” அடித் தொண்டையில் கனைத்தாள்.
“இப்ப என்ன நடந்துச்சு? எதுக்கு இவ்ளோ கோபம்?” என்றவனை இடைமறித்து, “நான் வீட்டுக்குப் போகனும் கூட்டிட்டு போக முடியுமா? முடியாதா?” எனக் கால் போன திசையில் நடக்க ஆரம்பித்தாள். வண்டியைத் திருப்பி அவள் முன் நிறுத்தி உட்காரச் சொன்னான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வேறு உடைக்கு மாறியவள் அவன் வாங்கித் தந்த புடவையை அவன் முகத்திற்கு நேராக வீசி எறிந்தாள். சற்றும் எதிர்பாராதவன் ஆத்திரம் ஏறக் கையை ஓங்கிவிட்டான். சட்டென்று சுதாரித்துக் கையைக் கீழே இறக்கிவிட்டு கதவைப் படாரென்று சாத்திவிட்டுச் சென்றான். கால்களை மடக்கி அதில் முகம் புதைத்துக் கீழே அமர்ந்து அழுதாள் கிருத்திகா.
******
கழுத்தில் விழுந்த மாலை வாடுவதற்குள் ஏன் இந்தத் திருமணத்தைச் செய்தோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக் கடற்கரை மணலில் கடலின் அலைகளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான் அமர்.
கிருத்திகாவிடம் சம்மதம் கேட்காமல் எந்த ஏற்பாடும் செய்யவில்லையே, அவள் சரியெனச் சொன்ன பிறகுதானே எல்லாம் செய்தேன். என்னைப் பற்றி யோசித்த நான் அவளைப் பற்றி யோசிக்காமல் விட்டது தவறுதான். அதுக்காக நான் சொல்ல வருவதைக் கேட்காமல் காதை மூடிக் கொண்டால் நான் என்ன செய்வது? என அமரின் மனம் ஓலமிட்டது.
நேரம் செல்லச் செல்ல இருள் சூழத் தொடங்கியும் உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாமல் இருந்தான் அமர். கடிகார முட்கள் மெல்ல நகர்ந்து ஒன்பதை தாண்டியிருக்க, “அமர்!” என்ற குரல் கேட்டுத் திரும்பியவன், பின்னால் நிற்பவளைக் கண்டு அதிர்ந்து எழுந்து நின்றான். யாரை வாழ்நாளில் திரும்பப் பார்க்கக் கூடாதென்று நினைத்திருந்தானோஅவள் முன் கேலி பொருளாகிவிடுவேனோ என எண்ணிய அமர் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.
அமர் பின்னால் ஓடி அவன் முன் இடைமறித்து நின்று, “அட! நில்லு அமர். எதுக்கு என்னைப் பார்த்துப் பயந்து ஓடுற? இன்னைக்குத்தான் உனக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அப்படின்னா முதல் இரவு கொண்டாட வேண்டிய நேரத்தில் கடற்கரையில் தனியா உட்கார்ந்திருக்க?”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம். உனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை” என அவளைத் தாண்டிச் சென்றான்.
அமர் கையைப் பிடித்து நிறுத்திய சுஜி, “அப்போ முதல் நாளே உன் ரெண்டாவது பொண்டாட்டி ஓடிட்டாளா? நான்தான் சொன்னேனே உனக்குக் கல்யாணம் குடும்பம் எல்லாம் வேஸ்ட்டுனு நீ அதுக்கு இலாயக்கில்லை…” என முடிப்பதற்கு ஒற்றை விரலைத் தூக்கி எச்சரிக்கை செய்தான்.
அமர் கையைத் தட்டிவிட்டு, “சும்மா சீறாத அமர். காலையில் கல்யாணம் இராத்திரி கடல் மணலில் தன்னந்தனியா இருக்க, அப்போ என்ன நினைக்கிறதாம். சரி விடு. அடுத்தக் கல்யாணம் எப்போ? அதான் மூனாவது எப்போ”
“என் வாழ்நாளில் உன்னைப் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிருந்தேன். இப்பச் சொல்றேன் கேளு. நான் சாகுற வரை கிரு மட்டும்தான் எனக்கு. அவளைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை. நாங்க மகிழ்ச்சியா வாழ்றதைப் பார்க்க உன்னைத் தேடி வருவேன்.”
“நான் ஏற்கனவே கடலைச் சாப்பிட்டுட்டு இருக்கேன். நீ வேற கடலைப் போடாத” எனக் கடலைப் பொட்டலத்தை அவன் முன் நீட்டினாள். அதைத் தட்டிவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அமர்.
“கடலை வேண்டாம்னா போக வேண்டியதுதானே. எல்லாத்தையும் கீழே கொட்டிட்டுப் போற. போ! போ! பார்க்கத்தானே போறேன்” எனக் கத்திய சுஜி சிரித்தபடியே வந்த வழிச் சென்றாள்.
******
சென்னைக்கு முதன் முதலாக வந்தவளை தன்னந் தனியாக விட்டு வந்தது மண்டையில் உறைக்க, அசுர வேகத்தில் பறந்து வந்தான். இருளில் மூழ்கிக் கதவு திறந்திருந்த வீட்டைக் கண்டதும் பதறியடித்து வந்தவனுக்கு முன்னாடி இருப்பது எதுவும் தெரியாமல் நின்று, கைப்பேசியின் வெளிச்சத்தை ஒளிரவிட்டு, கிருத்திகாவை தேடினான்.
சோபாவில் தேட அவள் இல்லையென்றதும் நேராக அறைக்குள் சென்று மின் விளக்கை எரியவிட்டு அறை காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தவன், திரும்பவும் முன்னறைக்கு வந்து மின்விளக்கின் பொத்தனை அழுத்திவிட்டுக் காலில் தட்டுபடுவது என்னவென்று பார்க்கக் கீழே குனிந்தவன், “ஐயோ! கிரு என்ன ஆச்சு! ஏன் இப்படிப் படுத்திருக்க!” என அவளைத் தட்டி எழுப்பியவனின் கைகளில் சூடு ஏற, அவள் கழுத்தில் கைகளைப் பிடிக்க, உடல் தணலாகக் கொதித்தது.
சற்றும் யோசிக்காமல் அவளைத் தூக்கியவன் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் மருத்துவரை அழைத்து வர ஓடினான். மருத்துவர் வந்து பரிசோதித்து முடிக்கும் வரை காலில் வெந்நீரை ஊற்றியது போல் துடித்துக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு நேரமா காய்ச்சல் இருக்கு? மதியானம் நல்லா இருந்தா. சாயங்காலத்திலிருந்துதான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.
“நினைக்கிறீங்களா? நீங்க வீட்டில் இல்லையா?”
“ஆமா டாக்டர் வேலையா வெளியில் போயிருந்தேன். வந்தபிறகுதான் தெரிந்தது”
“ஓ! ஓகே. அவங்க கண் விழிச்சதும் முதல்ல ஏதாவது சாப்பிட கொடுங்க. அதுக்குப் பிறகு இந்த மருந்தை நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்டிப்பா கொடுக்கனும். இல்லைன்னா காய்ச்சல் இன்னும் அதிகமாயிடும்” என எச்சரிக்கை செய்து சென்றார் மருத்துவர்.
கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் அவள் முகத்தைப் பார்த்தபடி அருகில் உட்கார்ந்துவிட, “கிரு! கிரு!” என ஸ்லோகம் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் குரல் விடாமல் கேட்க, அரைமணி நேரம் கழித்து மெல்ல கண்விழித்த கிருத்திகா எழுந்து உட்கார முயற்சிக்க, முடியாமல் மீண்டும் படுக்கையில் சரிந்தாள்.
அமர் சட்டென்று அவளைத் தூக்கி உட்கார வைத்தான். அதை எதிர்பார்க்காத கிருத்திகா மிரண்டு அவனைப் பார்க்க, எதையும் கண்டு கொள்ளாமல் சமையல் அறைக்குள் சென்று மூன்று இட்லிகளைத் தட்டில் வைத்து எடுத்து வந்தான்.
இட்லிகளைப் பிட்டு அவள் வாயில் வைக்க, வாயைத் திறக்கமாட்டேன் என்றவளிடம், “எல்லாத்துக்கும் முறைக்காத, கோபப்படாத, காய்ச்சல் குறையனும்னா நீ சாப்பிட்டாத்தான் மாத்திரை போட முடியும். நீ அடம்பிடிச்சா உன்னை ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டியிருக்கும்” என்றதும் மருத்துவமனை கண் முன் வந்து செல்ல, அதற்கு அமரே பரவாயில்லையென்று சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு இட்லிக்கு மேல் வேண்டாமென்றவளுக்கு வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளினான். அவனுடன் போராட வலு இல்லாமல் அமரிடம் சரணடைந்தாள்.
இரவு முழுவதும் தூங்காமல் சரியான நேரத்துக்கு எழுந்து கிருத்திகாவையும் எழச் செய்து மருந்துகளைக் கொடுத்துக் காய்ச்சல் குறைந்ததும், அவள் அருகிலேயே கண்ணயர்ந்துவிட்டான். அமரின் கைப்பேசி ஓயாமல் ஒலிக்க, அந்தச் சத்தத்தில் எழுந்த கிருத்திகா தான் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.
தொடரும்…