அத்தியாயம் 24
அன்பிற்கினியனின் நாட்கள் மகனோடும் மாமியாரோடும் என அவர்களுக்குத் தன் ஊரைச் சுற்றிக் காட்டுவதிலும், , தன் ஊர்ச் சாப்பாட்டை மகன் 'ஹோட் ஹோட்' என வாயை ஊதிச் சாப்பிடுவதைப் பார்த்து ரசிப்பதிலும், ஊர் வெயில் ஆரியனின் மேனியைச் சிவக்க வைக்க, அதனால் ஏற்படும் எரிச்சலால் அதைச் சொறிந்தபடி "அப்பா... சொறியுதுப்பா" என்று அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சுவதைக் கண்டு, அவனுக்கு சொறிவதில் உதவி செய்தும் என அன்பிற்கினியன் சந்தோசத்தின் உச்சமான நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்தான்.
மகனை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதில் மட்டும் நிகாரிகாவின் மகன் என்று மட்டுமே அறிமுகப்படுத்துவது அன்பிற்கினியனுக்குக் கஷ்டமாக இருந்தது.
மகனிடமும் நிகாரிகா, போகும் இடங்களில் அப்பாவைப் பற்றி வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி வைத்திருந்தாள். ஆரியன் புத்திசாலி குழந்தை என்பதால், வெளியிடத்தில் தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு சுற்றினாலும் 'அப்பா' என்று அழைக்காமல், தனியே இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் அப்பா எனச் அன்பிற்கினியனின் தோளைச் சுற்றுச் செல்லம் கொஞ்சிக்கொண்டிருப்பான்.
நிகாரிகாவும் சிலநாள் வேலைகளை ஒதுக்கித் தன் குடும்பத்தோடு தன் மெளனமலை முருகனையும் சேவித்துவிட்டு வந்தாள்.
மகன் ஒருநாள் இரவு அவனோடு அன்பிற்கினியனைத் தங்கச் சொல்லும் பொழுது, காஞ்சனா கூட அவனை "வீட்டில் தங்குங்கோ மாப்பிள்ளை" எனச் சொல்லும் பொழுது, நிகாரிகா "அதுக்கு இது நேரமில்லை" என்று மறுத்துவிட்டாள். மகனோடு நிற்க ஆசை கொண்டவன், அவன் ஆசை நிராசையானதால் மனைவியை மனசுக்குள் வறுத்தெடுத்தபடி வீட்டுக்கு வந்து, தன் ஆதங்கங்களையெல்லாம் தென்னவனிடம் புலம்பினான்.
தென்னவனும் அதைக் கேட்டுக் கொண்டதோடு, நிகாரிகாவிடமும் பேச, “இன்னும் கொஞ்ச நாள் அண்ணா” என்று அவள் சொல்ல, அதை அப்படியே அன்பிற்கினியனிடம் வந்து தென்னவன் சொல்ல, “எப்பதான் அந்தக் கொஞ்ச நாள் வருமாம் உன் தங்கச்சிக்கு, நானே போய் அவக்கிட்ட எனக்கு வாழ்க்கைப் பிச்சைபோடு.. நீயில்லாமல் வாழவேபிடிக்கலை என்று சொல்லனும் என்று எதிர்பார்க்கிறாளா?” என்று அன்பிற்கினியன் அலுப்போடு கேட்க,
“நீ வாயைத் திறந்து சொல்லத்தேவையில்லைடா.. அது தான் முகத்திலேயே எழுதி ஒட்டிவைச்சிருக்கியே..” என்று சிரிப்புடன் தென்னவன் சொல்ல, அன்பிற்கினியன் நண்பனை பாசமான ஒரு லூக்விட்டு முறைக்க, “எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கு” என்று அந்த இடத்திலிருந்து தென்னவன் மாயமாகிவிட்டான்.
அப்படியாக நாட்கள் விரைய காஞ்சனாவும், ஆரியனும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே ஊரில் இருப்பார்கள் எனும் நிலைவர அந்த நேரத்தையும் மகனோடு கழிக்க நினைத்தான் அன்பிற்கினியன்.
அவனை மில் விஷயமாகத் தாசில்தாரைப் பார்க்கப் போக வேண்டும் என்று அன்பிற்கினியனைத் தவிர்த்துவிட்டு தென்னவனோடு காஞ்சனாவையும், ஆரியனையும் நிகாரிகா பக்கத்து ஊரிலுள்ள ஒரு ரோஜாத் தோட்டத்தைப் பார்க்க என்று அனுப்பியிருந்தாள்.
தாசில்தாரைப் பார்க்க நேரமிருந்ததால் வீட்டில் சமையல் வேலைகளுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தான் அன்பிற்கினியன்.
அந்த நேரம் முகம் வெளுத்துப் போய் பதற்றத்தோடும் பயத்தோடும் ஒரு கடிதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அன்பிற்கினியன் வீட்டுக்கு ஓடோடி வந்தார் மங்கம்மா.
நீலகண்டன், தன் நண்பன் கருப்பண்ணாவோடு வெளியே செல்வதற்காகத் திண்ணையில் காத்திருந்த அந்த நேரத்தில், தன் தாயின் திடீர் வரவைக் கண்டு திகைத்து, “உங்களைத்தான் இந்த வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியாச்சே? அப்புறம் எதுக்குத் திரும்பத் திரும்ப வந்து உயிரை வாங்குறீங்க?” என்று எரிச்சலாகக் கேட்டார்.
மங்கம்மா மூச்சிரைக்க, “இது... இது ஏதோ கோர்ட் கடிதமாம் நீலா. திறந்து பார்த்தா எல்லாம் இங்கிலீஷா இருக்கு. போஸ்ட்மேன்கிட்ட கேட்டதுக்கு, யாரோ ஆரியனாம்... அவன் தன் சொத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேஸ் போட்டிருக்கான்னு சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியலடா!” என்று பதறினார்.
“யார் அந்த ஆரியன்?” என்று முணுமுணுத்த நீலகண்டன், அந்தக் கடிதத்தை தன் தாயின் கையிலிருந்து வாங்கிப் பார்த்தார். ஆங்கில எழுத்துக்கள் அவர் கண்களுக்கு புலப்படாமல் ஆட்டம் காட்ட, தென்னவனும் அப்போது வீட்டில் இல்லை என்பதால், வேறு வழியின்றித் தன் மகனை அழைக்க வேண்டிய கட்டாயத்தினால், “அன்பு... டேய் அன்பு, கொஞ்சம் வெளியே வாயேன்!” என்று குரல் கொடுத்தார்.
சமையலறையிலிருந்து வெளியே வந்த அன்பிற்கினியன், வாசலில் மங்கம்மாவைக் கண்டதும் முகம் சுளித்தான். அவனுக்கு மங்கம்மாவைக் கண்டு ஆத்திரம் பலமடங்கு அதிகரித்தது.
இவரால்தானே அவனின் வாழ்க்கை இப்படி ஊசலாடிக் கொண்டிருக்கிறது? மனைவியை மனைவி என்று வெளியே சொல்ல முடியவில்லை, மகனை மகன் என்று வெளியே சொல்ல முடியவில்லை என்று பல்லைக் கடித்து, மங்கம்மா இருக்கும் பொழுது தன்னை எதற்கு நீலகண்டன் அழைத்தார் என அது வேறு கடுப்பாக, “என்னப்பா?” என்று தந்தையிடம் கேட்டான்.
“யாரோ ஆரியனாம்டா... இவங்க மேல சொத்துக்காகக் கேஸ் போட்டிருக்காராம். யாருன்னு இந்த லெட்டர்ல பாரு" என்று நீலகண்டன் அந்தக் கடிதத்தை அன்பிற்கினியனிடம் நீட்ட, ‘ஆரியன்’ என்ற பெயரைக் கேட்டதுமே அன்பிற்கினியன் திடுக்கிட்டான்.
சட்டென்று கடிதத்தை வாங்கி முழுவதுமாகப் படித்துப் பார்த்தவனின் முகம் இறுக, “இதுல பாக்கியம் அத்தை, மாரிமுத்து, ஆரியன்... இவங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்த கேஸைப் போட்டிருக்காங்க. அவங்களுக்குப் பாரம்பரியச் சொத்துல பங்கு வேண்டும் என்று உரிமை கோரியிருக்காங்க. அத்தோட இவங்க தன் சொத்தைப் பயன்படுத்துவதற்கும் தடை வேண்டியிருக்காங்க. இவங்க உழைத்த சொத்தைத் தவிர தாத்தா சொத்து எதையும் இனி பயன்படுத்த முடியாது” என்றான்.
மாரிமுத்துவின் பெயரும் இங்கே இடம்பெற்று இருப்பதால், மாரிமுத்துவுக்கும் நிகாரிகாவைப் பற்றிய உண்மை தெரிந்துவிட்டது என்று அன்பிற்கினியனுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. 'கடவுளே இனி அண்ணனும் தங்கச்சியும் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ' என்று மனதுக்குள் புலம்பினான் அன்பிற்கினியன்.
மகன் அவரை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டதாலும், தனியே இருப்பதாலும் ஓரளவு புத்தி வரப்பெற்ற மங்கம்மா, மகனும் பேரனும் பேசிக் கொண்டிருப்பதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் பாக்கியத்தின் பெயரைக் கேட்டவுடன் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. விறுக்கென்று தலையை நிமிர்ந்தார். அவர் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. நீலகண்டனும் அதே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
‘பாக்கியம் சொத்துச் சுகத்துக்கு ஆசைப்படும் ஆள் இல்லையே’ என மனதுக்குள் நினைத்துக் கொண்ட நீலகண்டன், “பாக்கியமா? அவ என்னைக்குமே இப்படிச் செய்யமாட்டாளேடா?” என்று நம்ப முடியாமல் கேட்டார்.
"அத்தைக்கு அந்த நோட்டீஸ் விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைப்பா. அதுல என்ன இருக்குன்னே அவங்களுக்குப் புரிஞ்சிருக்காது. எல்லாம் மாரிமுத்துவின் வேலையாகத்தான் இருக்கும். அவன் அத்தைக்கிட்ட வேற எதோ காரணம் சொல்லி கையெழுத்து வாங்கியிருப்பான்" என்று உறுதியாகச் சொன்னான் அன்பிற்கினியன்.
நீலகண்டன் யோசனையுடன் அவனைப் பார்க்க, "ஆங்கிலத்துல நோட்டீஸ் அடிக்கிற அளவுக்கு மாரிமுத்துவுக்கும் விவரம் பத்தாதுப்பா. உண்மையைச் சொல்லப்போனா, மாரிமுத்து வெறும் அம்புதான்... அதை ஏவினது வேற ஒரு ஆள். அவ வேலைதான்பா எல்லாம்" என்றான்.
நீலகண்டன் ஏதோ சொல்ல வர, அவரைத் தடுத்து அவனே தொடர்ந்து, "அத்தை பாவம்... அவங்களுக்கே தெரியாம அவங்களை இந்தப் பகடையாட்டத்துல மாரிமுத்து பயன்படுத்தியிருக்கான்" என்றான்.
பாக்கியமும் மாரிமுத்துவும் சொத்துக் கேட்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது என்று புரிந்த நீலகண்டன், “சரி... எல்லாம் புரியுது. ஆனா யார் அந்தப் புதுப் பேரு ஆரியன்? அவனுக்கு எதற்குடா என் அப்பா சொத்தில் பங்கு கொடுக்கணும்? நீ அவ வேலை என்று சொல்லிறது யாரை?” என்று நீலகண்டன் குழப்பமாகக் கேட்க,
“உங்க பேரன்தான்ப்பா… ” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னான் அன்பிற்கினியன்.
“பேரனா?” என்று மங்கம்மாவும் நீலகண்டனும் ஒருசேரக் கேட்க,
“ஆமா... என் மகன் உங்களுக்குப் பேரன்தானே? எனக்கும் சிற்பிகாவிற்கும் பிறந்த பையன் அவன். அவன் மூலமாத்தான் இப்போ சொத்துகளுக்குத் தடை வாங்கியிருக்காங்க. இனிமே அவங்க அனுமதியில்லாம இவங்க எதையும் பயன்படுத்த முடியாது" என்று குண்டைப் போட்டான் அன்பிற்கினியன்.
“என்னடா... குண்டுக்கு மேலே குண்டு போடுற?” என்று தடுமாறிய நீலகண்டனுக்கு நிகாரிகாவைக் காணும் பொழுதெல்லாம் அவரின் உள்ளத்தில் அவள் யாரையோ நினைவுபடுத்துவது போலவே இருக்கும். அவள் வந்தபின் மகன் முகத்தில் தெரியும் அளவுக்கதிகமான சந்தோசம், இப்பொழுது சில நாட்களாக அவனுக்கு நிகாரிகாவின் மகனிடமிருந்து அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புக்கள் என சட்டென்று பொறி தட்டியவராக மகனை ஏறிட்டுப் பார்த்தார்.
“அப்போ... நம்ம ஊருக்கு வந்திருக்காளே அந்தப் பொண்ணு நிகாரிகா... அவதான் என் மருமகள் சிற்பிகாவா?” என்று அவர் கேட்கும்போதே குரல் நடுங்கியது.
“ஆமாப்பா... அவளேதான்! அன்று பாட்டி வெளியே துரத்தின அந்தச் சிற்பிகாதான், இப்போ நிகாரிகாவா வந்து தன் உரிமையைக் கேட்கிறாள்" என்று அன்பிற்கினியன் சொல்ல,
நீலகண்டன் அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டார். மங்கம்மாவிற்கும் அதிர்ச்சி தான் இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
சரியாக அந்த நேரத்தில் பாக்கியமும் கண்களைத் துடைத்தபடி உள்ளே நுழைந்தார். ஏற்கனவே மாரிமுத்து மூலம் உண்மையை அறிந்திருந்த அவர், தன் அண்ணனின் நிலையைப் பார்த்து வேதனையுடன் அருகில் வந்தார்.
விடியற்காலை அவர்களுக்கும் கோர்ட்டிலிருந்து கடிதம் வந்ததால், என்ன ஏது என்று மாரிமுத்துவிடம் அதட்டிக் கேட்கும் பொழுதுதான், நிகாரிகா தான் சிற்பிகா எனும் உண்மையை அவன் சொல்லியிருந்தான்.
“அண்ணா” எனப் பாக்கியம் நீலகண்டனிடம் செல்ல, “உன் பொண்ணு வந்திட்டாளாம்டா..” என்று சொன்ன நீலகண்டனுக்கு மகனின் வாழ்க்கை மீண்டும் தழைக்கப்போகிறது என்பதே போதுமானதாக இருந்தது.
அன்பிற்கினியன் நீலகண்டனைப் பார்த்து, “உங்கம்மாவோட பாவங்களை அறுவடை செய்யுற நேரம் வந்துட்டு போலப்பா.. இவங்க என்ன விதைச்சாங்களோ, அதுதானே இப்போ அறுவடையாகுது?” என்றான்.
அங்கே மங்கம்மாவைத் தெனாவட்டாகப் பார்த்துக்கொண்டிருந்த மாரிமுத்துவிடம், “உன் தங்கச்சி எங்கே?” என்று கேட்டான் அன்பிற்கினியன்.
“அவ அவ வீட்ல இருப்பா" என்றான் மாரிமுத்து.
“தென்னவன் மாமியையும் ஆரியனையும் கூட்டிக்கிட்டு வெளியே போனானே? அப்போ அழகு கூடப் போகலையா?” என்று மீண்டும் கேட்டான் அன்பிற்கினியன்.
“இன்னைக்கு எப்படியும் கோர்ட் நோட்டீஸ் வந்துடும்னு அவளுக்குத் தெரியும் அன்பு அத்தான். அதான் ஆரியன் முன்னாடி இந்தச் சண்டையெல்லாம் நடக்க வேண்டாம்னு, அவனை மட்டும் பக்கத்து கிராமத்துக்கு அனுப்பிட்டோம்" என்றான் மாரிமுத்து.
“அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து பெரிய பிளான் போட்டுச் செய்யுறீங்க போல? அதை நீங்க ரெண்டு பேரும் மட்டும் செஞ்சிருக்க வேண்டியதுதானே? என் பிள்ளையை ஏன்டா இதுல நடுவுல இழுத்தீங்க?” என்று அன்பிற்கினியன் கோபமாகக் கேட்டான்.
“நானும் இவங்க தனியா இருந்தாலாவது திருந்துவாங்கன்னு பார்த்தேன் அன்பு அத்தான். ஆனா இவங்க திருந்துற மாதிரித் தெரியலை. அதுதான் அழகோடு சேர்ந்து இப்படிப் பண்ணினேன்" என்று மாரிமுத்து தன் நிலையை விளக்கினான்.
“நீங்க எல்லாம் துஷ்டங்கன்னு தெரிஞ்சும் தூரப் போகாம, ஏன் இவங்களைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கே எரிச்சலா இருக்குடா" என்று அன்பிற்கினியன் அலுத்துக் கொண்டான்.
“எதுவும் செய்யாம விட எனக்கு மனசில்லை அன்பு அத்தான். இவ்வளவு காலமும் இவங்க காசு காசுன்னு தானே அலைஞ்சாங்க? இப்போ சிற்பிகாவின் சொத்துல கடுகளவு கூட இவங்களுக்குக் கிடையாது. அந்தக் கடுகளவு கூட இவங்களுக்கு கிடைக்ககூடாது என்று இப்படிப் பண்ணினோம்” என்று மாரிமுத்து சொல்ல,
“சிறப்பு!” என்றவன், தன் அத்தையைப் பார்த்து, “அன்னைக்கு அவங்க அம்மா சொன்னாங்க.. அவளை நகைக்காகக் கடத்துனவனையே அவங்கப்பா உயிரோட விடலை. என் பொண்ணைச் சித்திரவதை செய்த உங்க பாட்டியை மட்டும் தான் உங்களுக்காக உயிரோட விட்டுவைச்சிருக்கோம் என.. இப்ப நானே அவங்ககிட்டப் போய் இவங்களைப் போட்டுத்தள்ள சொல்லிடலாம் போல இருக்கு” என்றான்.
தாயை தன் மகனே கொல்லச் சொல்லப்போகிறேன் என்பதைக் கேட்டு, எதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று புரிந்த நீலகண்டன்,
என்னதான்டா அன்னைக்கு நடந்திச்சு?” என்று நீலகண்டன் ஆதங்கத்துடன் கேட்க, “எல்லாம் உங்கம்மாவோட வேலைப்பா.. அவளைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி, தாலியை எல்லாம் புடுங்கி, வீட்டை விட்டுத் துரத்தியிருக்காங்க!” என்று மங்கம்மாவை ஒரு கணம் முறைத்தபடி சொன்னான் அன்பிற்கினியன்.
சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் அமர்ந்தவனுக்குள் பல எண்ணங்கள் மண்டைக்குள் ஓடின.
இனியாவது நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவனுக்கு, மங்கம்மாவால் திரும்பவும் பிரச்சனை ஆரம்பமாவதை அவன் விரும்பவில்லை.
அவனின் குழப்பத்தைச் சரியாகப் படித்த நீலகண்டன்,“அன்பு நீ மருமகளோட வாழுற வழியைப் பார். இது எங்கம்மாவுக்கும் மருமகளுக்குமான பிரச்சனை அவங்க இரண்டு பேரும் பார்த்துக் கொள்ளட்டும்” என்று நீலகண்டன் சொல்ல,
"அப்பா" என்று இயலாமையுடன் கேட்க, "நாமளா பாதிக்கப்பட்டோம்? என் மருமகள் தானே பாதிக்கப்பட்டா? அது அவளோட வலிடா" என்று சொல்ல,
“ஆமாம்டா அன்பு, நீ உன் வாழ்க்கையைப் பார். இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்தது போதும்” என்றார் பாக்கியமும் தன் தமையனின் முடிவுக்குத் துணை நின்றபடி.
பாக்கியமும் கூடத் தனக்கு ஆதரவாகப் பேசவில்லை என்பதை உணர்ந்த மங்கம்மாவுக்கு, தனக்கு நெருக்கமானவர்களே இப்போது நிகாரிகாவின் பக்கம் நிற்பதைக் கண்டு பெரும் கலக்கம் உண்டானது.
"அப்பா, ஆரியன் மாதிரி இன்னுமொரு பிள்ளையும் இருந்திருக்கும். இவங்க தள்ளிவிட்டதில்தான் அது கலைஞ்சிட்டது.. அது வேற அவளுக்குக் கோபம்" என்று மேலும் சொல்ல,
“என்ன?” என்று நீலகண்டனே திகைத்துப் போனார்.
பாக்கியத்துக்கும் மாரிமுத்து இந்த விடயத்தை காலையில் சொல்லியிருக்க, அவரின் மனமும் மகளை நினைத்துத் தவியாய் தவித்தது.
‘என் குலத்தின் வாரிசை நானே கொன்றுவிட்டேனா?’ என மங்கம்மாவிற்கு பேச்சே வரவில்லை. ‘நான் கொலைகாரியா?’ என மெதுவாக முணுமுணுத்தபடி, புத்தி பேதலித்தவர் போல அவர் நடை தடுமாறியபடி நடந்து செல்வதைப் பார்த்தார் நீலகண்டன்.
மங்கம்மாவின் அந்த நிலையைப் பார்த்துவிட்டுத் தன் மகனிடம் திரும்பிய நீலகண்டன், “அவங்க கோர்ட் கேஸ் எல்லாம் தாங்க மாட்டாங்கடா... சிற்பிகாகிட்ட படு பயங்கரமாக தோத்துப் போயிட்டாங்க” என்று கரகரப்பான குரலில் சொன்னார்.
வழக்கமாகத் தாய்க்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போகும் பாக்கியம், இன்று தன் மகள் சிற்பிகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்துத் தாயின் பக்கம் போகக்கூட மனம் வராமல் திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார்.