மௌனம் -2
“என்ன ஆழி! என்னோட ஆஃபிஸ் ரூமை பார்க்குறதுக்குத் தான் இவ்வளவு காலையில் கிளம்பி வந்தியா?”
“ப்ச்! ஏற்கனவே ஃபோன்ல சொன்னது தான்டி.”
“ ஆர் யூ சீரியஸ் ஆழி!”
“நான் விளையாட்டுக்கு சொல்லுவேன் நினைக்கிறியா மது!” என்று தனது தோழியை ஆழ்ந்துப் பார்க்க.
“சரி விடு! வீட்ல சொல்லிட்டியா? அதான் நேத்து பஞ்சாயத்தா?” என்று அக்கறையாக வினவினாள் மதுரா.
“இன்னும் சொல்லல. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்லலாம்னு இருக்கேன்.” என்று விரல்களை ஆராய்ந்தவாறு கூறினாள் ஆழினி.
“ஓ! நேத்து என்ன ஆலோசனை நடந்தது? எந்த ராஜ்யத்தை பிடிக்க குடும்பத்தோடு திட்டம் தீட்டினிங்க.” என்று தோழியின் மனதை மாற்ற கேலி பேசினாள் மதுரா.
“அது ஒன்னும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. எங்க ஃபிப்த் வெட்டிங் ஆனிவர்சரி கொண்டாடுறதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணாங்க. ம்கூம்! தகவல் சொன்னாங்க. யோசிச்சு எல்லோரும் முடிவு எடுங்கனு சொன்னாங்க. ஆனால் யார் என்ன சொன்னாலும் இந்த பங்ஷன் நடக்காது.”
“ஏன் ஆழினி! இப்படி பேசுற? முதல்ல என்னை நிமிர்ந்துப் பாரு.” என்று மதுரா கோபமாகக் கூற.
அவளை நிமிர்ந்துப் பார்த்தவளோ,” சொல்லு மது?”என்றாள்.
“ இப்படி எல்லாம் அபசகுணமா பேசாதே ஆழினி. உன் முடிவை நல்லா யோசிச்சு எடு.”
“இதுல என்ன அபசகுணமா நான் பேசிட்டேன். நடக்கப் போறதை சொல்றேன். இன்பாக்ட்! நான் நிறுத்த மாட்டேன். பட் இந்த பங்ஷன் நடக்காது. எப்பவும் போல ஏற்பாடு செய்ய போறேன்னு சொல்லுவாங்க. அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி இந்தப் ப்ளான் ட்ராப் ஆகிடும்.”
“என்னடி சொல்ற?”
“ உண்மையைத்தான் சொல்றேன். தன்ஷிகா தனிமரமா இருக்கும் போது இதெல்லாம் தேவையா? அவ மனசு சங்கடப்படாதான்னு யாராவது பாட்டி மனசை கலைப்பாங்க. ஆனால் ஒன்னு யார் இந்த நல்லக் காரியத்தை செய்யுறாங்கனு என்னால கண்டேப் பிடிக்க முடியல.”
“ஆழினி!” என்று மதுரா கவலையாக தோழியைப் பார்க்க.
“நீ கவலைப்படாதே மது. இது இன்னைக்கு மட்டும் இல்ல எங்களோட மொத வெட்டிங் ஆனிவர்சரி லிருந்து ஆரம்பமானது. நான் எங்கேயாவது வெளியே போகணும்னு நினைச்சாலும் இப்படித்தான் நடக்கும். ஏன் கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் டூர் ப்ளான் போட்டாங்க. அப்பவும் இப்படித்தான் நடந்தது. முதல்ல எல்லாம் எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும். இப்ப எந்த எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. ஆனாலும் அந்த வீட்ல மூச்சு முட்டுது. என்னால அந்த வீட்டுல இருக்க முடியல. பளீஸ் எனக்கு டைவர்ஸ் வாங்கித் தா மது.” என்றவாறு தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஆழினி.
“ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு டி. சின்ன வயசுல இருந்து உன்னோட ஆசையே நீ ஒரு பெரிய குடும்பத்துல உறவுகளோட வாழனும்ங்குறது தானே.”
“ஆமா ஆசைப்படுறது எல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிடுமா? அந்த கொடுப்பினை எனக்கு இருந்தா பெத்த அம்மா, அப்பாவோட தானே வாழ்ந்திருப்பேன். இப்படி அனாதையா ஆசிரமத்துல வளர்ந்திருக்க மாட்டேன்.” என்றவளின் கண்களில் தெரிந்த வலியை உணர்ந்த மதுராவோ, தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.
“மது! டைம்மாகுதுடி… அதிசயத்திலும் அதிசயமா வியானே ட்ராப் பண்ணிட்டு போனாரு. இல்லைன்னா அந்த வீட்ல கேள்வி மேல கேள்விக் கேட்டு தொணத் தொணத்திருப்பாங்க. லேட்டா வேற போனா ஏதாவது சொல்லுவாங்க. டைவர்ஸ் அப்ளை பண்ண என்ன ப்ரொஸிஜர்னு சீக்கிரம் சொல்லு.”
“ரொம்ப வேகமா போறேன்னு தோணுது. கொஞ்சம் பொறுமையா இரு ஆழி. இன்னுமே மய்யூ பேமிலியா இப்படின்னு இருக்கு. லீவ் டைம்ல
அடிக்கடி நம்ம அங்க போவோம் தானே. எல்லொரும் எவ்வளவு பிரியமா பேசுவாங்க.”
“ப்ச்! வெளியிலிருந்து பார்க்கும் போது எல்லாமே நல்லா தான் இருக்கும். ஆனால் உள்ள வந்து பார்த்தா தான் தெரியும். உண்மை நிலவரமும் புரியும்.”
“மய்யூ கிட்ட ஒரு தடவை பேசுடி. அவளுக்கு அவக் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும்டி. அவளும் உனக்கு ஏதாவது உதவி செய்வா.”
“ அவ அவ உதவி எனக்கு தேவையில்லை உன்னால எனக்கு டைவர்ஸ் வாங்கி தர முடிஞ்சா வாங்கி தா இல்லன்னா நான் வேற வக்கீல பாத்துக்குறேன்.
“எதுக்குடி ஆழி இவ்ளோ கோபப்படுற? அன்னைக்கு மய்யூவும் இப்படித்தான் கோபப்பட்டு வார்த்தையை விட்டுட்டா. இப்ப வரைக்கும் நீயும் அதைப் பிடிச்சிட்டு நிக்கிற.”
“அன்னைக்கு அவ கோவத்துல ஒன்னும் வார்த்தையை விடல. அவ மனசுல இருந்து உண்மை தான் வெளில வந்துருக்கு.”
“ அப்படியெல்லாம் சொல்லாதடி! அவ நம்ம ஃபிரண்டுடி. சின்ன வயசுல இருந்து நாம மூணு பேரும் எப்படி பழகுனோம்.”
“மது! ஃப்ரண்டா பழகுவதற்கு தகுதி தேவையில்லை. ஆனா அவங்களோட அண்ணன் மனைவியா வாழ்வதற்கு தகுதி இருக்கு. நான் அதுக்கு ஏத்தவ கிடையாது. ஏதோ சூழ்நிலையால என்னை அவர் கட்டுக்கிற மாதிரி வந்திடுச்சு. அதை அவளால ஏத்துக்க முடியல. அதான் வார்த்தைகளை விட்டுட்டா.”
“அவ இடத்தில இருந்து யோசிச்சு பாரு ஆழி.”
“எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அன்னைக்கு நான் எந்த தப்பும் பண்ணல. ஆனா அவ என்னைக் காயப்படுத்திட்டா.”
“புரியுதுடி! அதுக்காக அவ வருந்தாத நாளே இல்ல. உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணுனா. நீ அவ நம்பரைக்கூட பிளாக் பண்ணிட்ட. வேற நம்பர்ல இருந்து போட்டாலும் பேச மாட்டேன்னுட்ட.”
“ ஆமாம்! எனக்கு உண்மையான ஆதரவு தேவையான போது அவ கிட்ட இருந்து கிடைக்கல. அதுக்கு அப்புறம் அவ மன்னிப்புக் கேட்டு எதுவும் ஆகப் போறதில்லை. அவ சொன்ன ஒவ்வொன்னும் இன்னும் என் காதுல ஒலிச்சிட்டு இருக்கு.”
“ நீ ரொம்ப கோவத்துல இருக்க ஆழினி!”
“ இல்ல நான் ரொம்ப கொதிச்சு போய் இப்ப அடங்கி இருக்கேன். அஞ்சு வருஷமா எனக்குள்ளே போட்டு, போட்டு நொந்துப் போயிருக்கேன். இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது.”
“ இன்னும் ஒரு சான்ஸ் குடு ஆழி! காலேஜ் படிக்கும் போது கிடைக்கிற வாழ்க்கை பிடிச்சுக்கணும். வேணாம்னு யோசிக்கிறது விட, அதை தக்க வச்சிக்கிறதுக்கு நம்மளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடணும்னு எல்லோருக்கும் அட்வைஸ் சொல்லுவ தானே.”
“புரியாம முட்டாள்தனமா சொல்லிட்டேன். ஆனால் நிதர்சனம் இப்போ தானே புரியுது.” என்ற ஆழினியை ஆயாசமாகப் பார்த்தாள் மதுரா.
“ ரிலாக்ஸ் மது! நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறன்னு தெரியல. நான் டைவர்ஸ் பண்றேன்னு சொன்னா கூட யாரும் பெருசா ரியாக்ட் பண்ண மாட்டாங்க. நான் அந்த வீட்டில் இருக்கிறதும் ஒன்னு தான். இல்லாமல் இருக்கிறதும் ஒன்னு தான். இன்பாக்ட் விட்டது தொல்லைனு தான் எல்லோரும் நினைப்பாங்க.”
“ நீயா கற்பனை பண்ணாதே ஆழினி. அப்படி நினைக்கிறவங்களா இருந்தா, உன்னை மருமகளா தேர்ந்தெடுத்திருக்க மாட்டாங்க. அதுவும் எந்த குறையும் வரக்கூடாதுன்னு பார்த்து, பார்த்து கல்யாணம் பண்ணாங்க.” என்றவளை முறைத்துப் பார்த்தாள் ஆழினி.
“எதுக்குடி இவ்ளோ பாசமா பார்க்குற?”
“நான் என் வாழ்க்கையில மறக்கணும்னு நினைக்கிறதே அந்தக் கல்யாணத்தை தான். என்னோட இடத்துல தான் நீ இருக்குறேன்னு அந்த தன்ஷிகா தினம்தினம் பார்வையாலே குத்தி கொதறூறா.”
“ அவ சொன்னா அது உண்மையாயிடுமா என்ன? நீ சந்தோஷமா வாழ்ந்து பதில் சொல்ல வேண்டியதுதானே.”
“ என்னால யாரோட மனசு கஷ்டப்படுத்த முடியாது.”
“ நீ இந்த வீட்டை விட்டுப் போனா மட்டும் யாரும் கஷ்டப்பட மாட்டாங்களா ஆழி.”
“ இல்ல! விட்டது தொல்லைன்னு தான் இருப்பாங்க.” என்னவளின் கண்கள் கலங்க.
“சரி டி நீ ரொம்ப கலங்காத.
செழியன் அண்ணா கிட்ட சொல்லிட்டியா? அவங்க ஓகே சொல்லிட்டாங்களா?”
“ அது இன்னும் சொல்லல.”
“ என்னடி சொல்ற? ரெண்டு பேரும் பரஸ்பரமா பிரியறதுக்கு சம்மதம் சொன்னா தான் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும். இல்லன்னா சிக்கல்.”
“ என்னடி சொல்ற உடனே கிடைக்காதா?”
“ அதுக்கு நிறைய ப்ராசஸ் இருக்கு. நீ முதல்ல செழியன் அண்ணா கிட்ட பேசு. அவருக்கும் சம்மதம்னா சீக்கிரமா வாங்கி தரேன்.” என்றவளுக்கு தோழியை நினைத்து வலித்தது.
“தேங்க்ஸ் மது!” என்று அங்கிருந்து கிளம்பினாள் ஆழினி.
அவள் கிளம்பியதும் வேகமாக தனது ஃபோனை எடுத்து வாட்ஸ் அப் கால் செய்தாள் மதுரா.
தூக்க கலக்கத்தில் ஃபோனை அட்டென்ட் செய்தவளோ,” ஹலோ ! எதுக்கு டி காலங்காத்தால போன் பண்ணி உசுர வாங்குற?” என்றாள் நித்யமயூரி.
மதுரா, ஆழினியின் உயிர்தோழி. அதுமட்டுமில்ல வியன்செழியனின் தங்கை.
“ அடியேய்! முக்கியமான விஷயம்?”
“ அப்படி என்ன தலை போற காரியம்டி?”
“ தலை போற காரியமா ன்னு தெரியல? ஆனா உங்க வீட்ல இருந்து நம்ம ஆழினி கிளம்பணும் உறுதியா இருக்கா!”
“ என்னடி சொல்ற கோச்சிட்டு எங்கயாவது போக போறாளா?” என்று படக்கென்று எழுந்தாள் நித்யமயூரி.
“ கோவிச்சுட்டு எல்லாம் போகல. மொத்தமா போக போறா. உங்க அண்ணன்ட்ட இருந்து டைவர்ஸ் கேட்டுட்டு வந்து நிக்கிறா.”
“மது! எங்க அண்ணனுக்கு இது தெரியுமா?”
“ம்கூம்! இப்ப வரைக்கும் அண்ணனுக்குத் தெரியாது.”.
“இவளுக்காக கஷ்டப்பட்டு நாங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணா… ஈஸியா விட்டுட்டு போறேன்னு சொல்றா. எங்கக் குடும்பத்தைப் பத்தி ஏதாவது நினைச்சுப் பார்க்குறாளா?” என்று அந்தப் பக்கம் நித்யமயூரி கொதிக்க.
“அடியே இந்த வார்த்தை சொன்னதுக்கு தான் அவ அவ்வளவு கோபப்படுறா! ”
“ ப்ச்! ஓஹோ! எங்க அண்ணனப் பத்தி மேடம்க்கு இன்னும் சரியாத் தெரியலை. வர்றேன்… நான் உடனே இந்தியாவுக்கு வர்றேன். வந்து புரிய வைக்குறேன்.”
“என்னடி உங்க வீட்டு மேல உள்ள கோபம் எல்லாம் குறைஞ்சிருச்சா?”
“ம் அது இருக்கு தான். ஆனால் இந்த முட்டாளை நான் வந்து தானே சரி பண்ணனும்.”
“என்னடி மய்யூ! ஆழி எவ்வளவு புத்திசாலி. அவளைப் போய் முட்டாள்னு சொல்ற?”
“பின்னே! தன்னோட வாழ்க்கையை அவளேக் கெடுத்துக்குறா. எங்க அண்ணனோட மனைவி இவ தானே. யார் என்ன சொன்னால் என்ன? பேச வேண்டியது தானே.”
என்றவள் ஃபோனை வைத்து விட.
மதுராவோ தலையை பிடித்துக் கொண்டிருந்தாள்.
அங்கு நித்யமயூரி அவளது கணவர் நவீனை பாடாயப்படுத்தினாள்.
“ நவீன்! இந்தியாவிற்கு உடனே டிக்கெட் போடுங்க.” என்றாள்.
“ நான் அஞ்சு வருஷமா கூப்பிட்டப்பல்லாம் வரல. இப்போ உடனே போகணும்னா எப்படி?”
“ நீங்க கேட்ட போது இந்தியா போகணும்னு தோணலை. இப்ப எனக்கு இந்தியா போகணும்னு தோணுது.”
“உனக்கு தோணும்டா! ஆனா டிக்கெட் கிடைக்கணும் இல்ல .” என்றான் நவீன்.
“ப்ச்! எனக்கு அதெல்லாம் தெரியாது சீக்கிரமா ட்ரை பண்ணுங்க.” என்று விட்டு பேக் பண்ணும் மனைவியைப் பார்த்து முறைத்தவனோ, “ எனக்கு லீவ் கிடைக்காதே மய்யூ.”
“உங்களை யார் கூப்பிட்டா? எனக்கு மட்டும் போடுங்க.” என்றவளைப் பார்த்து முறைத்தவன், “உனக்கும் எனக்கும் சேர்த்து இருபது நாள் கழிச்சு டிக்கெட் போட்டுட்டேன்.”
என்றான்.
“என்ன நவீன் சொல்ற.”
“ ஆமாம்! உங்க அப்பா ஃபோன் போட்டாரு. உங்க அண்ணனுக்கு ஃபிப்த் வெட்டிங் ஆனிவர்சரி கொண்டாடுறாங்களாம். நம்மளை வரச் சொல்லி சொன்னாங்க.”
“ என்கிட்ட கேட்காமல் எப்படி டிக்கெட் போட்டீங்க.”
“ம்! அதான் உன்னோட சபதத்துல நீ ஜெயிச்சுட்ட தானே. இனி இந்தியாவுக்கு வர்றதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே.”
“அது வந்து நவீன்… அங்க…” என்று அவள் ஏதோ ஆரம்பிக்க.
“ எதுவா இருந்தாலும் அப்ப போகும்போது பார்த்துக்கலாம். அதுக்குள்ள ஒன்னும் ஆகாது.” என்ற கணவனிடம் நித்யமயூரி வேறு எதுவும் கூறவில்லை.
மருமகளது வாடிய முகத்தைப் பார்த்து மகனுடன் தங்கியிருந்த அவளது மாமியார் மாலினி தான் மகனை கடிந்து கொண்டார்.
“அவளை முதல்ல இந்தியாவுக்கு அனுப்பு. அப்புறமா நீ போ.”என்றுக் கூற.
“இல்லமா முத, முதல்ல அவங்க வீட்டுக்குப் போறோம். ரெண்டு பேரும் சேர்ந்தே போறோம்.” என்று முடித்து விட்டான் நவீன்.
மாலினி இரக்கமாக மருமகளைப் பார்க்க.
“பரவால்ல அத்தை. ரெண்டு பேரும் சேர்ந்தே போறோம். ஆமாம் நீங்க வரலையா அத்தை.” என்று வினவ.
“ வர்ஷா கூப்டுட்டே இருக்கா. அதான் நெக்ஸ்ட் வீக் கனடாவுக்கு டிக்கெட் போட சொல்லிட்டேன்.”
“ஓ சரிங்க அத்தை.” என்றவள் தனது அறைக்கு சென்று விட்டாள்.
தனது கனவு நிறைவேறியதும் தான் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள். இன்று அவளது கனவு நிறைவேறியது அவளுக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால் அன்று அவ்வளவு ஆழினியை வருத்தப் பட வைத்திருக்க வேண்டாம் என்று காலம் கடந்து அவளுக்கு ஞானோதயம் உதித்தது.
தான் விட்ட வார்த்தைகளால்தான் ஆழினி அவளை விட்டு விலகிப் போய்விட்டாள் என்பது நித்யமயூரிக்குப் புரிந்தது.
மன வருத்தத்துடன் பழைய நினைவுகளை மீட்டினாள் நித்யமயூரி.