மௌனம் -7
வியன்செழியனுக்கு இந்த அவசரக் கல்யாணத்தில் துளிக் கூட விருப்பம் இல்லை. அவனது பெற்றோருக்காக வேறு வழியில்லாமல் சம்மதம் சொன்னவன்,
மனதிற்குள்ளோ,’எப்படியும் திருமணத்திற்கு முன்பு பெண்ணிடம் தனியாக பேச வேண்டும்.
தன்னுடைய மனநிலையை அந்தப் பெண்ணிற்குத் தெளிவாக புரிய வைத்து சம்மதம் வாங்க வேண்டும். இல்லை என்றால் இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும்.’ என்று அவன் எண்ணி இருந்தான்.
ஆனால் சற்று முன் ஆழினி பேசியதை எல்லாம் கேட்டதற்குப் பிறகு கொதித்துப் போய் இருந்தான். மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு கோபத்தை குறைக்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை.
அவள் கூறிய செஞ்சோற்று கடன் என்கின்ற வார்த்தையே காதில் ஒலித்து அவனது நெஞ்சத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது.
அவளைப் பார்க்கவே, பேச்சைக் கேட்கவோ அவனுக்குப் பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.
*****************
ஆழினியும், மதுராவும் அவன் அங்கிருந்ததையும் கவனிக்கவில்லை. அவன் திரும்பிச் சென்றதையும் கவனிக்கவில்லை.
“இங்கே பாரு ஆழி! எதுவா இருந்தாலும் நீ ஒரு முறை செழியன் அண்ணன் கிட்ட பேசிட்டு, அதுக்கப்புறம் ஓகே சொல்லு.” என்றவள் உள்ளே சென்று நித்யமயூரியிடம்,”கல்யாணத்துக்கு முன்னாடி செழியன் அண்ணா கிட்ட பேசுறதுக்கு ஹெல்ப் பண்ணு மய்யூ.”
“அதெல்லாம் பார்த்துக்கலாமடி. முதல்ல கீழ போய் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவோம். அப்புறம் இந்த ரூம் பக்கத்துல தான் எங்க அண்ணனோட ரூம். பிறகு வந்து அவரிடம் பேசலாம்.” என்றவளுக்குத் தெரியவில்லை, அது முடியாத காரியம் என்று…
ஆம்! செழியன் அதற்கான வாய்ப்பை தரவே இல்லை.
அவனுக்கு ஆழினியிடம் பேசுவதற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
அவளது,” செஞ்சோற்றுக் கடன்!. என்ற வார்த்தை அவனை ரொம்பவே காயப்படுத்தியிருந்தது.
நித்யமயூரி, ஆழினியின் கையைப் பிடித்து கீழே அழைத்துச் செல்ல.
அகிலன்,” வா மா… உனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் தானே.” என்றுக் கேட்க.
“மதர் கிட்ட பேசுங்க அங்கிள்.” என்று மெதுவான குரலில் கூறினாள்.
“அப்போ உனக்கு சம்மதம் தானே. அப்புறம் என்ன அங்கிள்னு கூப்பிட்டுக் கிட்டு, இனிமேல் மாமானு கூப்பிடு. மதர் கிட்ட பேசுறேன். அவங்க மறுக்க மாட்டாங்க.” என்றுக் கூற.
அவளும் தலையசைத்தாள்.
அதற்குப் பிறகு எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது.
முதலில் மதருக்கு கால் பண்ணி, அவர்களது விருப்பத்தைக் கூற.
அவருக்கோ ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
“கல்யாணத்துக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க சார். நாங்க எங்க ரூல்ஸ் படி செய்ய முயற்சி செய்யுறேன். ஆழினியோட ஸ்பான்ஸரே நீங்க தான். ஆனால் கல்யாணத்திற்கு உங்கக் கிட்டயே கேட்க முடியாது. பட் எங்களால முடிஞ்சதை செய்யுறோம்.” என்றார் மதர்.
“அதெல்லாம் எதுவும் வேண்டாம் மதர். ஆழினி இனிமேல் எங்க வீட்டு பொண்ணு. அவளுக்குள்ளதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க வந்து பிள்ளைங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணா போதும்.” என்றார் இனியன்.
“கண்டிப்பா வர்றேன் சார்.” என்று மதர் ஃபோனை வைத்து விட.
அதற்குப் பிறகு தான் செழியனிடம், ஆழினி தான் அவனுக்காகப் பார்த்திருக்கும் பெண் என்றுக் கூற.
அவனோ தலையை மட்டும் அசைத்தான்.
ஆனால் அவன் முகம் இறுக்கத்துடனே இருந்தது.
“ சரி! அப்போ மண்டபத்துக்கு நாளைக்கு காலையில கிளம்பிடுவோம்.” என்று அகிலன் கூற.
சுமதியோ,” ஆமாங்க! அப்போ தான் நம்ம பிளான் பண்ண மாதிரி கல்யாணத்தை நடத்த முடியும்.” என்றார்.
“இனியா! உங்க மச்சான் குடும்பத்துக்கு பொண்ணு மாறுன விஷயத்தை சொல்லிடு. நான் சுமதி வீட்டு ஆளுங்களுக்கு நான் சொல்லிடுறேன்.” என்றவர் நித்யமயூரியிடம், “ மய்யூ! இப்போ ஃபோன்லேயே பத்திரிகை மாதிரி ரெடி பண்ணலாமே. எனக்கு அது போல ரெடி பண்ணி அனுப்பு. பொண்ணு, மாப்பிள்ளை பேரு போட்டு தேதி மண்டபம் எல்லாம் போட்டு விடு. சீக்கிரமா ரெடி பண்ணுடா. நான் ஃபோன் பேசிட்டு அப்படியே அத்தை வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்துட்டுறேன்.” என்றவர் தம்பியிடம் திரும்பி, “இனியா! நீயும் வர்றியா?” என்றுக் கேட்க.
“ இல்ல அண்ணா! நீ போய் அக்கா கிட்ட சொல்லு. இன்னும் தனுவை வேற கண்டுப்பிடிக்கல. கோபத்துல ஏதாவது வார்த்தையை விட்டுடப் போறாங்க. நான் நம்ம ஐ.ஜி கிட்ட பேசுறேன். அப்போ தான் சீக்கிரமா தனுவை கண்டுப்பிடிப்பாங்க.” என்று சொல்ல.
அகிலனுக்கும் அது சரியாகப்படவே, அவர் மட்டும் உமாவின் வீட்டிற்கு சென்று வியன்செழியனுக்கு அதே தேதியில் திருமணம் செய்வது பற்றி கூற.
உமாவிற்கு மனம் வலித்தாலும் வேறு வழி இல்லாமல் தலையசைத்தார்.
“ கவலைப்படாதே அக்கா! தனுவை கல்யாணத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்சுடுவோம். இப்போ கூட இனியன் ஐஜி கிட்ட பேசிட்டு வரேன்னு சொல்லி இருக்கான்.” என்று அகிலன் கூற.
“டேய்! தனுவை விட்டுடாதீங்க டா.” என்று உமா கண் கலங்க.
“அக்கா! அப்படியெல்லாம் தனுவை விட்டுட மாட்டோம். நீ கவலைப்படாமல் இரு. நாளைக்கு மண்டபத்துக்கு கிளம்புறோம். ரெடியா இரு. ” என்றுக் கூறிய அகிலன், வேந்தனிடம் திரும்ப.
அவரோ இவர்களைப் பார்த்து முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டார்.
‘இவ்வளவு அவசரமா அவனுக்கு திருமணம் செய்ய வேண்டுமா?’ என்று அவருக்கு கோபம். அவரவருக்கு, அவரவர் நியாயம்.
பெருமூச்சு விட்டவாறே அக்காவைப் பார்க்க.
“அவருக்கு தன் பொண்ணு இருக்க வேண்டிய இடம்னு கோபமா இருக்கார். நான் இப்போ வரலை. கல்யாணத்தன்னைக்கு வர்றேன்.” என்று உமா கூற.
அங்கிருந்த சிந்துஜாவோ,” ஏன்பா இவ்வளவு அவசரமா தம்பிக்கு கல்யாணம் பண்றீங்க. கொஞ்சம் ஆறப் போடலாம்ல. இப்போ பாருங்க என்னால அங்க வர முடியாது. ஆமாம் பொண்ணு யாரு?” என்று வினவ.
அவளது கேள்வியைக் கவனத்தில் வாங்காத அகிலனோ, “அத்தையைப் பாருமா. இப்போ அது தான் உனக்கு முக்கியம். கல்யாணத்தன்னைக்கு மட்டும் எல்லோரையும் எப்படியாவது கூட்டிட்டு வா.” என்று விட்டு சென்றார்.
சிந்துஜாவிற்கோ மணப்பெண் யார் என்று தெரியாமல் மண்டை வலிப்பதுப் போல் இருந்தது.
நித்யமயூரிக்கு அழைக்க.
அவளோ, ஆழினியை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று பேஷியல், பெடிக்யூர், மெடிக்யூர் எல்லாம் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
திரும்ப வந்து அவள் சிந்துஜாவிற்கு அழைக்கும் போது, சிந்து அவளது அத்தை, மாமாவுடன் இருக்க. அவளால் பேச முடியவில்லை.
எப்பொழுதும் அந்த வீட்டு விஷயத்தில் பொறுப்புடன் இருக்கும் சிந்துஜாவால் இந்த முறை எந்த நிகழ்விலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.
இனியனும், அகிலனும் ஏற்கனவே அடித்த தாம்பூல பை, மற்றும் கிப்ட் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு மறுபடியும் வேற ஏற்பாடுகள் செய்தனர்.
“ஆரி ஒர்க் செய்த பிளவுஸ் ஆழினி அளவுக்கு ஏற்ற மாதிரி ஆல்டர் பண்ணனும்.” என்று கவிதா கூற.
“ நோ!” என்று வேகமாக மறுத்தான் வியன்செழியன்.
“ஏன் பா? இரண்டு பேருக்கும் ஒரு அளவா தான் இருக்கும். புது ப்ளவுஸ் ரெடி பண்ண நமக்கு டைம் இல்ல.”
“அதெல்லாம் வேணாம். புடவை, ட்ரெஸ் எல்லாமே புதுசா எடுங்க. ப்ளவுஸ் க்ராண்டா இல்லைன்னா கூட பரவாயில்லை.” என்றவன், நித்யமயூரியிடம் தன்னுடைய வேலட்டை கொடுத்து, “ மய்யூ! நம்ம கடையிலிருந்து புடவைங்களை வர வச்சாலும் சரி, இல்லை வேற கடைக்கு போனாலும் சரி. இதை யூஸ் பண்ணிக்கோ.” என்றுக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவனது அந்த செயலில் ஆழினியின் மனக்கலக்கம் எல்லாம் மறைந்து விலகியது.
‘தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறான்.’ என்று அகமகிழ்ந்து போனாள் ஆழினி.
மகனை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தார் கவிதா.
“அடியே கவி! உன் மகனை அப்புறம் பாரு. இப்போ வேலையைப் பார்ப்போம்.” என்று சுமதி கூற.
சிரிப்புடன் தலையாட்டினார் கவிதா.
“மய்யூ! நம்ம கடையிலிருந்தே எடுத்துட்டு வரச் சொல்லு. முகூர்த்தத்துக்கு க்ராண்டான பட்டுப்புடவை, அஞ்சு, ஆறு செட்டு கொஞ்சம் சிம்பிளா கோவிலுக்கு கட்டிட்டுப் போகுறது போல. அப்புறம் வொர்க் சாரி, காட்டன் சாரி டெய்லி வியர்ஸ், சுடிதார் எல்லாமே எடுத்துட்டு வர சொல்லு. பிளவுஸ் மட்டும் நாளைக்கு மண்டபத்துக்கு போகும்போது அளவு கொடுத்துட்டு, டிசைன் செலக்ட் பண்ணி சொல்லிட்டு வந்துடுங்க. கல்யாணத்துக்குள்ள குடுத்துருவாங்க. நானும் ஃபோன்ல ஒரு வார்த்தை சொல்லிடுறேன்.” என்று சுமதி கூற.
“சரி!” என்ற நித்யமயூரி, பொறுப்பாக அந்த வேலையை செய்தாள்.
எப்பொழுதும் இந்த மாதிரி வேலைகளை சிந்துஜா தான் எடுத்துக் கட்டி செய்வாள். ஆனால் இன்று அவளால் எதிலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் அவள் போட்ட திட்டப் படி ஒவ்வொரு நிகழ்வுகளும் மண்டபத்தில் சிறப்பாக நடந்தது.
ஆனால் அது மகிழ்வுடன் நடந்ததா? இல்லையா என்று கேட்டால் யாருக்கும் அதற்கு விடை தெரியவில்லை.
நித்யமயூரியால் முடிந்தது அவளது தோழிகள் அனைவரையும் மண்டபத்திற்கு வர வைத்து விட.
மெஹந்தி, ஹல்தி, சங்கீத் களைக் கட்டியது.
அவர்கள் கிண்டல், கேலி என ஆழினியை ஒரு வழிப் பண்ண. அவள் முகத்திலோ புன்னகை. மதர் வந்ததும் அவளுக்கு இன்னும் மனநிறைவைத் தந்தது.
இதற்கிடையே அகிலன் சொன்னது போலவே அந்தப் பையனையும், தன்ஷிகாவையும் போலீஸ் கண்டுபிடித்து விட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பேசுவதற்கு அழைக்க.
தனது அக்காவுடன் அகிலனும், இனியனும் சென்று நின்றனர்.
தலைக்கு மேல் கல்யாண வேலை இருந்தாலும் அக்காவிற்கு தாங்கள் தான் துணை என்பது போல் இரு தம்பிகளும் செல்ல.
உமாவிற்கு சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
தன்ஷிகாவைப் பார்த்ததும், உமாவும், வேந்தனும் கண்கலங்க அவளிடம் சென்றனர்.
“தனு! வாடா! நம்ம வீட்டுக்கு போகலாம். உனக்கு செழியன் வேணாம்னா, வேற பையன் பார்க்குறேன். இந்தப் பையன் வேண்டாம்.” என்று வேந்தன் கெஞ்ச.
“செழியன் மச்சானுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? அசோக் தான் என் கணவர். அவரை விட்டுட்டு வர மாட்டேன். வந்தா ரெண்டு பேரும் தான் வருவோம்.” என்று தன்ஷிகா கூற.
அவளுக்கு அருகே தெனவாட்டாக நின்றிருந்தான் அசோக். அவனைப் பார்த்தாலே பணத்திற்காக வந்தவன் என்பது நன்றாகப் புரிந்தது.
“அம்மா சொல்றதைக் கேளு தனுமா. இவன் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.” என்று மகளது கையைப் பிடித்துக் கொண்டு உமா கெஞ்ச.
அவனோ இவர்களை நக்கலாகப் பார்த்தவாறு, “பேபி! உன் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லு. மனசு பொருத்தமா இருந்தா போதும்னு.” என்று சொல்ல.
விகாஷோ கோபத்தில் அவனது சட்டையைப் பிடிக்கச் சென்றான்.
தன்ஷிகா இடையில் நுழைய, சிந்துஜா, “ விக்கி! கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று விகாஷை அடக்க முயன்றாள்.
தன்ஷிகாவோ அங்கிருந்த அதிகாரியிடம், “உங்க முன்னாடியே எப்படி அடிக்க வர்றாங்க பாருங்க சார். இவங்களோட போனால் எங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை.” என்றுக் கூற.
உமாவும், வேந்தனும் வேதனையுடன் அங்கிருந்து கிளம்பினர்.
அகிலன் அவர்களை வற்புறுத்தி மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
சிந்துஜா தன் மாமியாரின் அருகிலே இருந்தாள்.
ஒரு வழியாக வியன் செழியனின் திருமணம் குறித்த நேரத்தில், உறவினர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அவ்வளவு கஷ்டப்பட்டு செய்த திருமணத்தை எவ்வளவு எளிதாக உடைக்கப் பார்க்கிறாள்.’ என்று பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்த நித்யமயூரி நினைத்துப் பார்த்தாள்.
தோழியின் மேல் கடும் சினத்துடன் இந்தியாவிற்கு செல்லும் நாளுக்காகக் காத்திருந்தாள்.
***********************
மதுராவை பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ஆழினியும், அவளுக்கு நடந்த திருமணத்தைத் தான் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீடு வந்து விட்டது தெரிந்ததும், பெருமூச்சு விட்டவாறு தங்களுடைய அறைக்கு வர.
அங்கிருந்த வியன்செழியனோ, அவளை மேலும் கீழும் பார்த்தான்.
‘எதுக்கு இந்த ரோபோ இப்படி பார்க்குது?’ என்று எண்ணியவாறே ரெஸ்ட் ரூமிற்கு செல்ல முயல.
“எங்க போன?” என்று வினவினான்.
‘ நம்மளையா கேட்குறான்?’ என்று எண்ணியவாறே சுற்றும், முற்றும் பார்க்க.
“உன் கிட்ட தான் கேட்குறேன். இங்கே நீயும், நானும் தான் இருக்கோம்.” என்று பல்லைக் கடித்தான்.
‘இந்த ரூம்ல நா இருக்கேனா இல்லையா என்று கூட பார்க்க மாட்டாரு. இதுல அதிசயமா கேள்வி வேற? அப்புறம் எனக்கு ஷாக்காகதா?’ என்று மனதிற்குள் புலம்பியவாறு அவனைப் பார்க்க.
“ என்ன திட்டி முடிச்சாச்சா? இப்போவாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்றியா?”
“அது வந்து…” என்று அவள் பயந்து முழிக்க.
“அதான் வந்தாச்சே? எங்கே போனேன்னு கேட்டேன்.”
“ஃப்ரெண்ட பார்க்க போனேன். நீங்க தானே ட்ராப் பண்ணீங்க?” என்று படபடத்த மனதை சமாளித்து பதில் கூறினாள்.
‘ ஒருவேளை அந்த எருமை டைவர்ஸ் கேட்ட விஷயத்தை போட்டு குடுத்திருச்சா? என்னைக்கா இருந்தாலும் தெரியத்தான் போகுது. ஆனால் எல்லா ஏற்பாடும் செஞ்சதுக்குப்புறம் தெரிஞ்சா பரவாயில்லை. இல்லை ஏதாவது சொல்லி மொத்தக் குடும்பமும் தடுக்கப் பார்ப்பாங்க.’ என்று எண்ணினாள்.
“அதான் தெரியுமே. வேற எங்கேயும் போனீங்களா?” என்று தோண்டித் துருவ.
‘எதுக்கு இப்படி தேவையில்லாத கேள்விக் கேட்குது இந்த ரோபோ?’ என்று எண்ணியவள், இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
அவளது குழப்பத்தை பார்த்தவனோ,”பிஃப்த் வெட்டிங் ஆனிவர்சரிக்கு டிரஸ் எடுக்கிறது பத்தி அக்கா கிட்ட சொல்லிருந்தேன். அக்கா சொல்லலையா? உன் ஃப்ரெண்டோட லெகங்காவுக்கு மெட்டீரியல் வாங்கத்தான் போயிருக்கேனு நினைச்சேன். வெறும் கையோட வர, அதான் கேட்டேன். நமக்கு டைம் வேற இல்லை. நம்ம டிசைனர் நெக்ஸ்ட் வீக்ல இருந்து பிஸியாகிடுவாங்க. நாளைக்கு ரெடியா இரு. நானே கூட்டிட்டு போறேன்.”
“இல்லை அண்ணியோட போறேன்.”
“ யுகாவுக்கு உடம்பு சரியில்ல. அதான் அக்கா வரலை. டைம் இல்ல. நானே நாளைக்கு கூட்டிட்டு போறேன்.” என்றவனைப் பார்த்தவளோ, ‘ நானே விலகிப் போகணும்னு நினைக்கிறேன். இப்ப நெருங்கி வர்றீங்க. ஆனால் இது எதற்காக என்றுத் தெரியல. உங்களோட எனக்குப் போராடவும் தெம்பில்ல.’ என்று எண்ணினாள்.
அவளது பார்வைக்கான பொருள் புரியாத வியன் செழியனோ,” என்னோட வர்றதுல என்ன பிரச்சினை? நாளைக்கு நம்ம கடையிலேயே தேவையான மெட்டிரியல் எடுத்துட்டு டிசைனர் கிட்டப் போறோம். அவ்வளவு தான்.” என்றான்.
அப்போதும் அவள் பதில் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்னைப் பத்தி இவருக்கு இன்னமும் எதுவுமே தெரியல.’ என்று எண்ணியவளுக்கு, தன்னை நினைத்தே கழிவிரக்கம் தோன்றியது.
“ப்ச்! உனக்கு என்னதான் பிரச்சனை? சொன்னா தானே தெரியும்.” என்று எரிச்சலாக வினவினான் வியன்செழியன்.
“என்னோட ட்ரஸை நானே ஸ்டிச் பண்ணித்தான் பழக்கம் .”
“வாட்?” என்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.
எப்பொழுதும் அவள் அணிந்திருக்கும் ஆடை அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
எப்பொழுதும் போல் தங்களுடைய டிசைனரிடம் தான் இவளும் தைத்துக் கொண்டிருப்பதாக அவன் நினைத்து இருக்க. ஆழினியின் பதில் அவனுக்கு அதிர்ச்சி தான்.
தன்னை சமாளித்தவன், “எப்போதிலிருந்து நீ தைக்குற?”
“கல்யாணம் டைம்ல மட்டும் தான் வெளியே தைக்கக் கொடுத்தது. அதுக்குப் பிறகு எல்லாம் நானே தான் தைப்பேன். நான் ஃபேஷன் டிசைனிங் தான் படிச்சேன்.” என்று ஆழினி கூற.
“தெரியும்.” என்றவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
ஆழினியின் திறமையை முடக்கிவிட்டதாக எண்ணியவன், முதல் முறையாக அவளுக்காக வருந்தினான்.