சாதாரணமாக முகத்தை வைக்க முடியாதளவு மூட் அப்செட் ஆகியிருந்தாள் மீரா.நடு வீட்டுல அதுவும் உள்ள ஒருத்தி இருக்காளேன்னு ஒரு சென்ஸ் கூட இல்லாம என்ன வேல பண்ணிட்டு இருக்கான்.இவனப்பத்தியா யோசிச்சிட்டு இருந்தன். சே….. பொறுக்கி.ரூமுக்கு போகவும் முடியாமல் நிற்கவும் சகிக்காமல் கை விரல்களை முறித்துக் கொண்டிருந்தாள் மீரா.
ஒரு வழியாக இவளை அந்த விது பார்த்திருக்க வேண்டும்.அவனைத் தளுவியிருந்த கைகளை தளர்த்தியவள் கோபமாக மீராவை நெருங்கி அடிக்க கை ஓங்கினாள்.அதற்குள் ரொஷான் பிடித்துவிட்டான்.அவனது முகத்தில் கோபம் தெரிந்தது.இருந்தும் நிதானமாக அவளிடம் பேசினான்.பதிலுக்கு அவள் கத்தினாள்.அவனைத் தள்ளி விட்டவள் பென்டேஜ் சுற்றப்பட்ட மீராவின் கையை முறுக்கினாள்.விதுவின் தோற்றம் ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போலவே இருந்தது.கண்களில் அத்தனை வன்மம்.
விது….என மீராவின் கை இழுபடாதவாறு அவளது கரத்தில் அழுத்தம் கொடுத்து அவளைத் இழுத்துச் சென்றான். வலியால் துடித்துப் போய்விட்ட மீராவை அவன் கவனிக்கவே இல்லை.
முணகியவாறு கைகளை தடவிக்கொண்டாள்.வெளியே ஜீப் ஸ்டார்ட்டாகும் சத்தம் அதைவிட எரிச்சலைத் தந்தது.
அவளுக்கு பளார்ன்னு அறை விடாம கூட்டிட்டு போறான்.இவனுக்கும் அந்த பைத்தியக்காரிக்கும் என்ன லிங்க்? எதுக்கு நம்மள பார்த்தா இப்டி எமோர்ஷனாகுறா? என்னவா இருந்துட்டுப் போகட்டும் என மீராவுக்கு விடமுடியவில்லை.
அன்றும் இப்படித்தான் கத்தினாள்.அதன் பிறகுதானே அவள் வாழ்க்கையே மாறியது.
நீண்டநேரமாகியும் ரொஷான் திரும்பி வராதது ஏனோ மனதின் ஒரு ஓரத்தில் அரித்துக்கொண்டிருந்த வேளை இரவு எட்டரை மணியளவில் வந்து சேர்ந்தான்.அவளை எதிர்கொண்ட போதும் கை வலி பற்றி எதுவும் கேட்காதது மீராவிற்கு ஏமாற்றமே. ய் யே
விடிகாலையிலேயே எழுந்து குளிக்கச் சென்றாள்.அவனிருக்கும் போது குளியலறைக்குச் செல்வது இதுவே முதல் தடவை.எழுவதற்குள் அவசரமாக வெளியே வரவேண்டும் என்ற பதட்டத்துடன் வேகமாக காலைக்கடன்களை முடித்தாள்.ஒரு கையால் தலைக்கு டவலைச் சுற்றியபடி கதவைத் திறந்தவளுக்கு வெற்று மேனியுடன் கொட்டாவி விட்டபடி தரிசனம் தந்தான் அவளது பதட்டத்தின் நாயகன்.
சரியாக துடைக்கப்படாததால் ஈரமேனியோடு அவளது கறுப்பு டீசர்ட் ஒட்டியிருக்க,இடுப்பில் தூக்கி சொருகியிருந்த பாவாடையால் நீர்த்துளிகள் கோலமிட்ட அவளது கெண்டைக்காலோ அதற்கு இணையாகப் போட்டிபோட்டது.
இவனைக் கண்டதும் அவளையறியாமல் டவல் நளுவ, கையை எட்டி அதைப் பிடித்துக்கொண்டவன் அவளருகில் இன்னும் நெருங்கினான்.நீளமான அவளது கூந்தல் முன்னால் விழ,மிக மெதுவாக அதன் நுனிவரை குனிந்து துடைத்தான்.தட்டிவிட்டு விலகத் தோன்றாமல் அப்படியே நின்றாள் மீரா.ஒரு நிமிடம் அவளைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் டவலை அவள் தோளில் போட்டுச் சென்றுவிட்டான்.திரும்பிப் பார்த்தாள்.அவன் பாத்ரூம் கதவை லாக் செய்திருந்தான்.மீரா சற்று நேரம் அங்கேயே நின்றவள்,
ஒருவழியாக தலை வாரி தயாராகி அவனுக்காய் காத்திருந்தாள்.
அவனும் யூனிபார்ம் அணிந்தபடி பெரிய ட்ரவலிங்க் பையுடன் ரூமை விட்டு வெளியேறினான்.
புலராத காலை வேளையில் சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது அந்த ஜீப்.
வெளிக்காற்றில் இதமாக இருந்த பயணத்தை அனுபவித்தபடி வந்த மீராவின் மனது நிறைய அப்பாவினதும்,பாட்டியினதும் முகமே இருந்தது.எவ்வளவு நாள் காத்திருப்பு.எங்க இருக்கா? என்ன பண்றான்னு ஒரு தகவலும் தெரியாம தவிச்சிட்டு இருப்பாங்க.பாவம் பாட்டி.அன்னை இல்லாத குறையே தெரியாமல் வளர்த்தவர்.பள்ளி விட்டு வீட்டுக்குப் போனா ஒரு தாய் மாதிரி கட்டி அணைத்து முத்தமிட்டுத் தான் வீட்டுக்குள்ள கூட்டிப்போவாங்க.
இரவுல தனியா முழிச்சிருந்து படித்ததே இல்லியே.கூட இருந்து இதக் குடிச்சிட்டு தெம்பா படின்னு எதையாவது தந்துட்டே இருப்பாங்க.நீ போயி படு பாட்டிம்மான்னு சொன்னாலும் காது கொடுத்து கேட்கமாட்டாங்க.ஏனோ தன் தாயின் நினைப்பு மீராவுக்கு வருவதே இல்லை.வந்தாலும் சாதாரணமாகத் தான் இருப்பாள்.அதற்கெல்லாம் பாட்டி தான் காரணம்.அந்த அன்பு அன்னையையும் விஞ்சிவிட்டது.
திடீரென்று நின்று விட்ட ஜீப்பின் சத்தத்தில் சுற்றுப்புறம் பார்த்தாள்.பெற்றோலுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தான் ரொஷான்.சிங்களத்தில் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தவனின் பக்கவாட்டுத் தோற்றம் அவளை கொஞ்சம் ஈர்த்ததென்றே சொல்லலாம்.அணிந்த பின்னர் தைத்தானோ என்னுமளவு அவனது கையோடு இறுகிப்பிடித்திருந்தது அந்த சட்டை. இரட்டை நாடி அவனது சிரிப்பைத் தனித்துவமாய்க் காட்டியது.சீராக வெட்டப்பட்டிருந்த நகங்கள் அவன் மீதான நல்ல எண்ணங்களைத் தந்தது.சட்டென்று அவளைப் பார்த்து தடுமாற வைத்தான்.அதிகப்படியாக கறுத்திருந்த அவனது புருவங்கள் என்ன? என்ற கேள்வியைத் தொடுத்திருந்தது.அதையும் விடாமல் கண்காட்சிக்கு வந்தது போல் பார்த்தாள்.
பசிக்குதா?? என்றான்.
“ஹா…… அ..அது ம்ம்ம் பசிக்குது” என்றாள் மீரா.அவளுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.சே...இனிமே அவனப் பார்க்கவே கூடாது என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
இதுதானே அவனுக்கும் தனக்குமான கடைசி சந்திப்பு.அதுக்குப் பிறகு அவன் யாரோ நான் யாரோ.பிறகென்ன? என நினைக்கும் போதே அவள் மனதில் மெதுவாக ஒரு மாற்றத்தை உணர்ந்தாள்.என்னவென்று யோசிக்கும் முன்னமே ஹோட்டலின் முன்னால் நிறுத்தினான்.
எதுவும் பேசாமல் நிதானமாய் சாப்பிட்டாள்.அவனது கைக்கடிகாரத்தில்
நேரத்தை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொண்டாள்.இது என்ன ஊர் என்ற கேள்விக்கும் இடம் வைக்காமல் போகும் வழியெல்லாம் கடைகளில் ஊரின் பெயரோடு சேர்த்து பலகைகள் தொங்கவிடப்படிருந்தது.இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவளது ஊர் வந்துவிடும்.இந்தப்பயணமும் முடிஞ்சிடும்.
இன்டர்வியூன்னு எத்தனையோ கனவுகளோடு வந்த இதே மாதிரி ஒரு பயணம் அவள் நினைவில் வந்தது.கனவிலும் நினைக்காத சம்பவங்கள் நடந்துவிட்டதே.
அதெல்லாம் கடந்துவிட்டாலும் அத்தனையும் இறக்கும் வரை மறக்கமுடியாத பதிவுகளல்லவா?? கடைசி நொடிகளில் குண்டு தாக்குதலில் இருந்து தப்பியது..அந்த மோர்ச்சரி இரவு நினைக்கும் போதே அவளுக்குப் பதறியது.
ஹாஸ்பிடலில் இருந்து வந்து எங்கே போவதென்று தெரியாமல் தனியாகத் தவித்ததும் பிறகு நடந்த தாக்குதல்களும் என மனது பதறிய நாட்களெல்லாம் மீட்டிக்கொண்டிருந்தாள்.
எல்லா மீட்டல்களிலும் கடைசி முடிவாக ரொஷான் தான் வந்தான்.அவளைப் பாதுகாத்தவன்.அடைக்கலம் தந்தவன்.அத்துமீறாத அவனது தொடுகைகளும்,விரசத்தை தராத அவனது பார்வைகளும் முகம் சுழிக்க வைக்காத நினைவுகளாய்த் தான் இருந்தது.கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்த அவன் முகத்திலிருந்து எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை.
“விது உங்களுக்கு யாரு??” எனக் கேட்டாள்.ஏனோ அவளுக்கு பதில் தெரிந்தேயாக வேண்டும் போலிருந்தது.
அவன் நிதாமாக பதில் சொன்னான்.”என்னோட லவ்வர்”.
மீரா அவனை முறைத்துப் பார்த்தாள்.அவன் பார்வை இம்மியும் அவள் பக்கம் திரும்பாதது அவளுக்கு இன்னும் கோபத்தைத் தந்தது.
“உங்க ஊர் வந்துட்டு” என வண்டியை நிறுத்தினான்.
இவ்வளவு நேரம் இருந்த சந்தோசம் இப்போது இருக்கவில்லை.
அவனைப் பார்த்தவாறே இறங்கினாள்.மனதுக்குள் ஏதோ ஒரு வெறுமை பரவுவதை உணர்ந்தவள், என்ன செய்து வெளிக்காட்டுவதென்று தெரியாமல் படாரென்று ஜீப் கதவை மூடினாள்.அப்போது அவள் சல்வாரின் நுனி சிக்கியதை அறியாதவள் வேகமாக நகரப்போக மீண்டும கதவிடம் மோதி நின்றாள்.
“சே...வரமாட்டுதா…? என வேகமாக இழுத்தாள்.கிழிந்த நிலையில்தான் அது கிடைத்தது.
“ஹய்யோ….இப்படியே நடந்து போறதா?” என சோகமாக யோசித்தவள் அடுத்த நொடி வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.
“எங்க வீட்டுக்கு வாங்க.அப்பாகிட்ட உங்கள காட்டனும்.எனக்கு நிறைய உதவி செயதிருக்கீங்க.
அதுக்கெல்லாம் நன்றிக்கடனா என்னால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது.அதனால சாப்பிட்டு போலாம்.எங்க பாட்டி சூப்பரா சமைப்பாங்க.வாங்க போலாம்.”.என அவன் முடிவு சொல்லும் முன்னமே அவள் வீட்டுக்கான வழியை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவன் பார்வை சொல்வதை உணர்ந்தவள், சாரி…..நான் கூப்பிடத்தான் இருந்தன் என குற்ற உணர்வாய் பேசினாள்.ஆனாலும் அவன் பார்வை அவளிடமே இருந்தது.
“இப்போ என்ன? இது கிழிஞ்சதனால தான் வழியே இல்லாம உங்க ஜீப்ல திரும்பவும் ஏறிட்டதா நினைக்கீங்களா?? நான் போனாலும் திரும்பி ஓடி வந்து உங்கள விருந்தோம்பால் பண்ணித்தான் இருப்பன்.இந்த மண்ணுல பொறந்தவங்க விருந்து கொடுக்கிறதுல பேர் போனவங்க..
அதுலயும் நான் விஷேசம்” என்றாள்.
அவளின் பேச்சு பாதி புரியாவிட்டாலும் பேசிய விதம் அவனை சிரிக்க வைத்தது.அவள் தலையைப் பிடித்து ஆட்டினான் ரொஷான்.
முதன் முறையாக அவன் தொடுகைக்கு எதிர்ப்புக் காட்டாமல் அவனைப் பார்த்தாள் மீரா.அவள் வழி சொல்ல ஐந்து நிமிடத்தில் அவள் வீடு வந்தது. “இதான் எங்க வீடு.நிறுத்துங்க.” வண்டி நிற்கும் முன்னமே கதவைத் திறந்து விட்டாள். வாங்க.. என அவனை அழைத்தவள் மான்குட்டியாய் தாவி உள்ளே சென்றாள்.
"இங்க பாருங்க...ஏதோ வயசானவங்கன்னு பொறுத்துக்குறேன்.இல்லன்னா நடக்குறதே வேற..” வேறு யார் விசாலத்தின் குரல் தான்.கேட் வரை கேட்டது.
“என்னடி செய்வ? நீதான் அரக்கியாச்சே.என்ன வேண்ணாலும் செய்வ.எல்லார்க்கும் சொல்லிட்டன்.என் உசுருக்கு ஏதாச்சும் நடந்தா நீதான் காரணம்னு.பொலிசு உன்ன அள்ளிட்டு போவான்.” இது அவள் பாட்டி.
“ஆக்கி திங்கிறது என் கையால.வாய் மட்டும் வங்காளமா நீளுதோ..”
“அப்படியே உன் பணம் பாரு.பிச்சக்காரியா இருந்த உன்ன கூட்டியாந்ததுக்கு இன்னமும் பேசுவ.எல்லாம் எம்புள்ள பணம்.எம்பேத்தியோடது டீ.”
வீட்டை நெருங்கும் சமயம் மீராவின் காதுகளில் இந்தப்பேச்சுக்கள் தெளிவாக விழுந்தது.இந்த சண்டை மட்டும் குறையல.பாட்டீடீடீ….. என ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.
எதிர்பாராத மீராவின் வருகையில் அதிர்ந்தவர்,ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார். “எந்தங்கமே….சுருக்கங்கள் நிறைந்த கையால் அவளைத் தடவித் தடவி முத்தம் வைத்து பேச்சே வராமல் திக்குமுக்காடிப் போனார் கமலம்.
“எங்கடி போன? உன்னப் பத்தின ஒரு தகவலும் இல்லாம நாங்கல்லாம் எப்படி துடிச்சம் தெரியுமா? “
“பாட்டிம்மா..அழாத.எனக்கு ஒன்னுமில்ல.என்னப்பாரேன் நல்லாத்தான் இருக்கன்.நீ அழுதா எனக்கும் அழுக வருது பாரு.அழுவாத பாட்டிம்மா.அழுதா நீ பார்க்க அழகாவே இல்ல தெரியுமா.சிரி பாட்டிம்மா.” அவர் கன்னத்தைப் பிடித்து ஆட்டினாள் மீரா.
அவள் முதுகில் மாறிமாறி நாலு போட்டார் கமலம்.புடவை முந்தானையால் மீராவின் கண்களைத் துடைத்து விட்டவர் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார்.மீரா நினைவு தெரிந்த நாளில் இருந்து கமலம் இப்படி அழுது பார்த்ததில்லை.
அப்படியிருக்க இவரின் அழுகை அவளைக் மிகவும் பாதித்தது என்றே சொல்லலாம்.அவள் கையால் அவரின் முதுகை நீவி விட்டவள் கமலத்தின் நெற்றியில் முத்தமிட்டாள்.
“பாட்டி….இப்டியே அழுதுட்ட இருந்தன்னா நா திரும்ப காணாம போயிடுவன் பாரு.உன் கண்ணீரே இப்டி பெருகுதுன்னா உன்னோட மகன எப்டி சமாளிக்க? பாவம் மீரா நீ.பாசமலரா ஓட்டப்போறாங்க” என விளையாட்டாய் கவலைப்பட்டாள்.
“ஐய்யோ….நான் என்னடீ சொல்ல.உனக்கு என்ன விடை சொல்ல.” தன் நெஞ்சில் அடித்துக் கதறினார் கமலம்.மீராவுக்குத் திக்கென்றது.தன்னால் இயன்றவறை சமாளித்துப் பார்த்தவளுக்கு திடீரென்று ஏதோ தோன்ற அப்பா எங்க ப...பாட்டி? ஒரு கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்னே ஏகத்துக்கு மூச்சு வாங்கினாள்.
“சொல்லு பாட்டி…” என உலுக்கியவள் அப்போதுதான் விசாலாட்சியைப் பார்த்தாள்.அவள் எப்போதும் போல அலட்சியமாய் எரிச்சலான முகபாவத்துடன் இருந்தாலும் தோற்றத்தில் மாறுபாடு இருந்தது.அவள் நெற்றியின் வெறுமையும்,வெண்ணிறப் புடவையும் மீராவுக்கு புரியும்படியாக விஷயத்தைச் சொன்னது.
உணர்வுகள் மரத்துப்போக பேதலித்தவளாய் “அப்பாக்கு என்னாச்சு பாட்டிம்மா.இறந்துட்டாரா?” கமலத்தின் மடியில் விழுந்து கதறினாள் மீரா.எவ்வளவு அழுதாலும் மாண்டார் மீண்டு வரப்போவதில்லைதான் என்றாலும் இறப்பு என்ற உண்மையை எந்த உறவாலும் ஏற்க முடியாது.எல்லாம் அப்பா பார்த்துப்பார்.அவர பார்த்ததுமே மனசு இலேசாகிடும் என தன் நம்பிக்கை மொத்தமும் அப்பா மீது வைத்தவளுக்கு அவரில்லாததை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது.
கமலத்திற்கும் அவளைத் தேற்றும் வழி தெரியாததால் தன் அழுகையை நிறுத்திவிட்டு அமைதியாய் அவள்முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
முகமெல்லாம் வீங்கி,கண்ணெல்லாம் சிவந்திருந்தாள் மீரா.பாட்டி சொன்ன விடயங்கள் அவளை சிதைத்துக் கொண்டிருந்தது.தன் மீது சுமத்தப்பட்ட பழியை அப்பா நம்பியிருப்பாரா?இல்லயா?அவர் மரணத்திற்கு அவள் தான் முழுக்காரணமா?நினைக்க நினைக்க மீராவின் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டே போனது.
இந்திராவுக்கும்,மதனுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்த வேளை இந்திரா வேறு ஒருத்தனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.இந்த அவமானத்தை கோபாலால் தாங்கமுடியாமல் தன் மொத்த கோபத்தையும் விசாலத்தின் மீது காட்டினார்.
“இதுவே மீராவுக்கு சரியாகியிருந்தா இன்னேரத்துக்கு அவ கல்யாணத்த எதிர்பார்த்திருந்திருப்பன்.ஆனா… இப்போ உன் பொறாமையால எல்லாம் பொசுங்கிப் போச்சு.ஒழுங்கா ஒரு புள்ளய வளக்கத் தகுதில்லாத நாயே….”என வாய்க்கு வந்ததை எல்லாம் ஏசித்தீர்த்தார் கோபால்.
விசாலத்திற்கு, மகள் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்ற கோபத்தையும் தாண்டி மீராவின் மீதான வன்மம் முன்னின்றது.
வாரங்கள் தாண்டியும் மீரா ஊர் திரும்பாமல் மெளனம் காத்தது அதற்கான சந்தர்ப்பமாய் அமைய பழிதீர்க்க காத்திருந்த பாம்பாய் படமெடுத்தாள் விசாலாட்சி.
மீரா ஃபோன் பண்ணி சொன்ன செய்தியை யாருக்கும் சொல்லாமல் மறைத்தது மட்டுமில்லாது சிம் காட்டையும் உடைத்தெறிந்தாள்.அப்போது ,தன் புதுக்கணவனுடன் திரும்பிவந்த இந்திராவை கோபால் விரட்டியடித்தார்.விசாலம் எவ்வளவு கெஞ்சியும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை.
“கட்டுன பாவத்துக்கு நீ வேணும்னா தின்னுட்டு ஒரு மூலையில இரு.உன் பொண்ணு தான் வேணும்டா,அவ கூட போய்த் தொலை.எனக்கு என் பொண்ணு மீரா மட்டும் போதும்" என முடிவாகச் சொல்லிவிட்டார் கோபால்.
முழு சொத்தும் மீராவிற்கு போய்விடுமோ என பயந்தவள் இந்திராவைத் தனியே அழைத்து,கோபம் தீரா அவளை சாத்தினார்.ஏகத்துக்கும் அவளைத் திட்டி ஓய்ந்து போனவள் “ இப்போ நீ போ.அந்த மீராட பெயர இவர் வெறுக்கும்படியா நான் வேலை பண்ணுறன்.ஒரு புடி மண்ணும் அவளுக்கு போக நா விடமாட்டன்”
என தன் புது மாப்பிள்ளைக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லி அனுப்பினாள் விசாலாட்சி.பின்னர் மீராவிற்கு எதிரியாக இந்திராவின் கணவன் பாபுவும் இணைந்து கொண்டான். தன் நண்பி அலமுவின் ஆலோசனைப்படி பாபுவின் உதவியுடன் மீராவின் கையெழுத்தில் ஒரு கடிதத்தை எழுதி கோபாலுக்கு அனுப்பி வைத்தாள் விசாலாட்சி.
அந்தக்கடிதத்தில் "அப்பா நான் என் மனசுக்கு புடிச்சவரோட சந்தோசமா வாழப்போறன்.உங்ககிட்ட சொன்னா சம்மதிக்கமாட்டீங்க.இவரு நம்ம இனமில்ல.அதான் இப்டி ஒரு முடிவு
எடுத்திருக்கன்.இனிமேல் நான் திரும்பி வரமாட்டேன்" என எழுதப்பட்டிருந்தது.
ஊர் முழுக்க இந்த விஷயம் பரவியிருந்த நிலையில்."இதுக்குத் தான் சொல்றது பொம்பளப் புள்ள அளவுக்கு அதிகமா படிக்க வைக்கக் கூடா.தூரத்துக்கும் அனுப்பக்கூடான்னு".
"எல்லாம் படிச்ச திமிறு" என வாய்க்கு வந்தபடி நிறையபேர் வசைபாடிக்கொண்டிருந்தனர்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.