மிஸ்ஸ்ஸ்…..
பழய நினைவுகளில் லயித்திருந்தவளுக்கு முதலில் அந்த அழைப்புக் கேட்கவில்லை.
இரண்டாம்முறை அழைத்ததும் தான் திரும்பிப்பார்த்தாள்.ராணுவ உடையில் நின்றிருந்த அவன் முகம் எங்கயோ கண்டதுபோல் இருந்தது.புருவம் சுருங்க அவனை யாரென்ற பாவனையில் அவள் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னரே அவன் பேச ஆரம்பித்தான்.
“உங்கள அனுராத சார் வர சொன்னார்.கேம்ப்க்கு வாங்க.”என்றவன் திரும்பிச் சென்று ஜீப்பிற்குள் அமர்ந்துவிட்டான்.
கூடவே வந்த ஒரு ராணுவப் பெண் அவள் வருகைக்காக காத்திருந்தாள்.நீ வந்தேயாக வேண்டும் என்ற தோரணையில் தான் அவர்கள் நடத்தை இருந்தது.ரொஷான் பற்றி ஏதும் முக்கியமான செய்தியா இருக்குமோ என்று நினைத்தவள் வேகமாகச் சென்று அமர்ந்து கொண்டாள்.
மீராவின் வாழ்க்கையில் ஆர்மி கேம்ப், ஜீப் விசாரணை, இது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இப்படியெல்லாம் நடக்குமென்று விளையாட்டுக்குக்கூட நினைத்திருக்க மாட்டாள்.
கேம்பஸ்ஸில் இருந்து வீடு திரும்பும் போது நாலைந்து சோதனைச் சாவடிகளை சந்தித்து இருக்கக்கூடும்.அப்போது ராணுவ உடையில் யாராவது அவள் பக்கத்தில் வந்தாலே நெஞ்செல்லாம் படபடக்கும்.அந்த உடையில் இருப்பவர்கள் யாரின் முகத்தையும் சரியாக நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள்.அந்த அளவுக்கு அவள் பயம் கொண்டிருந்தாள்.ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாகி விட்டது.அதை நினைக்கும் போது சிரிப்பு கூட வந்தது.
மிஸ்….என அழைத்து ஜீப் உரிய இடத்திற்கு வந்துவிட்டதாக சொன்னாள் அந்த ராணுவப்பெண்.
கடைசியாக இந்த கேம்பிற்கு வந்த போது அவளுக்குள் கொஞ்சம் பயம் கூட இருந்தது.ஆனால் இன்று எதிர்பார்ப்போடு உள்ளே சென்றாள்.அவளைக் கண்ட மாத்திரத்திலேயே ஒருவன் நாற்காலியை கொண்டு வருமாரு சைகை செய்து அவளை உட்காரச் சொன்னான்.இவன்தான் அந்த அனுராத போல என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.
“அவர் பற்றி தகவல் கிடைச்சிதா? எங்க இருக்கார்?” ஆர்வம் தாங்கமுடியால் கேட்டுவிட்டாள்.
“முதல் இருங்கோ மிஸ்.தண்ணிய குடிங்கோ” என்றான்.ஏனென்றால் மீராவுக்கு கொஞ்சம் மூச்சுவாங்கியது.
“ரொஷான் சார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கன்.ஆனா அவர கண்டதில்ல.சில்வா சார் ஒரு ட்ரைனிங்ல ரொஷான் சாரை சொல்லி புகழ்ந்தாரு.அவரு லேசுல யாரையும் பாராட்டுறதில்ல.
அப்போதே அவரப் பார்க்கனும் என்டு எனக்கு மட்டுமில்ல.எல்லாருக்குமே ஆர்வமா இருந்தது.கடசியா இங்கதான் தலைமைத்துவ பயிற்சிக்காக மூன்று மாசம் இருந்திருக்கார்ன்டு நேற்றுத்தான் தெரியும்.நான் இங்க வந்து ஒரு மாசம் தான்.இப்போ சார் வடக்குல இருக்கார்.இப்போதைக்கு நம்ம நாட்டுல வடக்கு தவிர எல்லா இடமும் க்ளியர் தான்.ஆனா வடக்குல மட்டும் குறிப்பிட்ட சில இடங்களை இன்னும் நெருங்க முடியாம இருக்குதாம்.அங்கதான் தீவிரமான யுத்தம் நடந்துகிட்டு இருக்கு.அங்க என்ன நடக்குதுதென்று நாங்க கூட மீடியாவுல தான் பார்க்கிறோம்.இங்க இருந்து தயார்படுத்தப்பட்ட ஒரு ஸ்பெஷல் டீம்தான் அங்க போயிருக்கு.அந்த ராணுவ வீரர்கள் எல்லாருமே நேரடியா ராணுவத் தளபதியோட மட்டும்தான் தொடர்பு வைத்திருக்காங்க.வைத்திருக்கவும் முடியும்.அங்கிருந்து எல்லா நகர்வுகளும் ரகசியமா டீல் பண்றதால நடக்குற எதுவுமே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.எப்டியும் ரொஷான்சார் அங்கதான் இருக்கனும் போல” என்றான்.
மீராவுக்கு சந்தோசப்படுறதா இல்லை அழுவதா என்று விளங்கவில்லை. “நீங்க பேசமுடியாதா?? நான் பார்த்த நியூஸ்ல நிறைய ராணுவங்கள் இற….நிறுத்தி மூச்சு வாங்கினாள். “இறந்ததா சொல்றாங்க.இவருக்கு?? அதற்குமேல் அவளால் பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.எதிரே இருந்த கடினமானவனுக்குக் கூட அவளைப்பார்க்க பாவமாக இருந்தது.
“நம்புங்க.உங்க கடவுள பிரார்த்திங்க.சாருக்கு எதுவும் ஆகியிருக்க கூடாதுண்டு” என்றான்.
“நான் வடக்கு போகனும்”என்றாள்.
யோசிக்காத அவள் பேச்சில் கணவன் மீது வைத்திருந்த பாசம் புரிந்தது.
“ப்ளீஸ் நான் போயே ஆகனும்.என்னோட ரொஷானை பார்க்கனும்.ஒரு தரம் பார்த்துட்டு வந்திடுவன்.என்னோட நிலமை…மேடிட்டிருந்த அவள் வயிற்றை தடவியவள் “அவருக்குத் தெரியாது.சார்… நான் எப்படி போறது.ஹெல்ப் பண்ணுங்க சார்”என்று கையெடுத்துக் கெஞ்சி அழுதாள் மீரா.
அனுராதவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.இப்படியொரு பாசமா? இலங்கை ரத்த வரலாறு படைத்துக் கொண்டிருந்த கடைசி நிமிடங்களவை.பொது மக்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக ராணுவங்கள் அங்கிருப்பவர்களை வெளியேற்றிக் கொண்டிருந்த காலமது.பிறந்த மண்ணை விட்டு வெளியேறுவது என்பது உயிரைப் பிடுங்குவதற்கு சமன்.முடியாதென்று மறுத்தவர்களை வெளியேற்ற ராணுவம் அப்போது கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொண்டது.அப்படிப்பட்ட ஒரு சூழலில் அதுவும் கர்ப்பிணியான மீரா அங்கு சென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததைப் பார்த்த அனுராத ஆச்சரியப்படுவதில் ஒன்றுமில்லை.
“நீங்க முதல்ல வீடு போங்க.எதுவும் நியூஸ் வந்தா சொல்லுறம்.நான் இப்போ சொன்னதுக்கு காரணமே நீங்க சார்ட மனைவி என்றதால தான்.மற்றபடி வேறு யார் என்டாலும் நான் கண்டு இருக்கவே மாட்டன்.இனிமேலும் எதும் தகவல் கிடைச்சா உடனே சொல்லுறன்.உங்களுக்கு எதும் உதவி வேணுமென்டா கேளுங்க செய்யிறம்” என்றபடி எழுந்தான். “இவங்கள வீட்டுக்கு விடுங்க” என்றவன் அவ்விடத்தைவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
அவனைப்பின் தொடர்ந்து போகுமளவிற்கு மீரா சக்ததியில்லாதது போல் உணர்ந்தாள்.வடக்கு போறதா சொன்னவர் இப்படி ஒரு நிலமைக்காகத் தான் போறதா ஒரு சொல்லக்கூட அவர் விட்டதில்லை.எனக்கு மட்டும் நூறு பத்திரம் சொன்னவர் அவரப் பற்றி எதுவும் யோசிக்கல்லியா? அங்க நிலமை மோசம் என்டு எல்லா இடமும் பேசுறாங்களே.எத்தனையோ ராணுவங்கள் இறந்ததாவும் சொல்றாங்க.என் ரொஷானுக்கு?? ஐய்யோ…..நினைக்கவே முடியாதளவு அவளுக்கு பயமாக இருந்தது.
எப்படி வீடு வந்து சேர்ந்தாளென்று அவளுக்கே தெரியாது.ஒரு கட்டத்துக்கு மேல் அழுகை நின்று போயிருக்க அவள் மூளை இயக்கத்தை ஆரம்பத்திருந்தது.
எப்படியாவது அங்க போயிடு என்று சொல்லிக்கொண்டேயிருந்த மனதுக்கு போகலாம் கவலைப்படாதே என்று மூளை தைரியம் சொல்லி அதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியது.
ஒரு வாரமாக கேம்பிற்கு நடையாய் நடந்தாள்.அனுராதவை சந்திக்கவே முடியவில்லை.அவள் அடிக்கடி இப்படி கேம்பிற்க்கு வருவது நிறையப் பேருக்கு பிடித்தமில்லை என்றாலும் அவள் முகத்திற்கு நேரே கடிந்து பேசவும் முடியவில்லை.
ரொஷான் மேல் வைத்திருக்கும் மரியாதைதான் முதற்காரணம். எப்படியும் அவளால் தனியே வடக்கிற்கு செல்ல முடியாது.அதற்கு ஆயிரம் பத்திரங்களும் கடிதங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல் சோதனை என்ற பேரில் நிறைய இடத்தில் காத்திருக்க வேண்டிவரும்.தனியே அதுவும் இந்தநிலையில் அவளால் செல்லமுடியாது.துணைக்கு யாருமேயில்லை.
அப்படிப்போனாலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதியில் தான் ரொஷான் இருக்க வாய்ப்பதிகம்.அங்கு போக ஒரு சதவீதம் கூட சாத்தியமில்லை.
இருக்கும் ஒரே ஒரு வழி அனுராத தான் என்பதால் அவனை சந்தித்து எப்படியாவது உதவி கேட்கவேண்டும்.ஆனால்? அவனை பிடிக்கவே முடியவில்லை.
“அம்மா….உனக்கு கஷ்டமாயில்லையா? இந்த வெயிலுக்க நடையா நடந்தா இந்த உடம்பு என்னாகும்? “
கண்களில் கரிசனையுடன் கேட்டார் அந்தப் பெண்.சிங்கள முறைப்படி புடவை கட்டியிருந்த அந்தப் பெண்ணை மீராவிற்கு எங்கேயோ பார்த்தது மாதிரி தான் இருந்தது.உயரத்துக்கு ஏற்ப கச்சிதமான உடல்வாகுடன் மிக அழகாக இருந்தாள்.வயது எப்படியும் 45 க்கு மேல் தான் இருக்கும்.
நீங்க யாரு?
“வா அங்க உட்கார்ந்து பேசலாம்” என்று மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சை கைகாட்டினார்
உட்கார்ந்த மீராவிற்கு சற்று மூச்சு வாங்கியது.
எத்தனை மாசம்?
ஏழு…
என்னை பார்த்த ஞாபகம் இருக்கா?
குழப்பமாக “இல்லை” என்று மீரா பதில் சொன்னாள்.
“அன்று நீ அனுராதா சார் கூட பேசுற போது அவர் பக்கத்துல தான் நான் இருந்தேன்.நான் அவரோட மனைவி என்றார்.அன்று நீ என்னை கவனிக்கவே இல்லை உன் முகத்தில வேற ஏதோ ஒன்றின் தீவிரம் தான் தெரிஞ்சிது.
ம்ம்ம்… என்ற மீராவிற்கு மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை.ஆனால் அவர் முகத்தை பார்த்தால் மனசு விட்டு பேசலாமென்ற ஒரு உரிமை உணர்வு தெரிந்தது.
“உன்னோட ஹஸ்பண்ட் லக்கி. நீ அவர ரொம்ப நேசிக்கிறாய் போல.”
ரொஷான் பற்றி அவர் பேசினவுடன் மீராவிற்கு கொஞ்சம் புத்துணர்வாக இருந்தது.கூடவே வெட்கமும்.
“நீ பார்க்க ரொம்ப அழகா இருக்காய்” என்றார்.
மீரா சங்கோஜத்துடன் நெளிந்தாள்.அவள் தலையை மெல்லமாய் ஆட்டியவர்,
“எனக்கும் அனுராதவிற்கும் திருமணமாகி 25 வருஷமாகுது.எங்களுக்கு குழந்தை இல்லை.எனக்கு பெண் பிள்ளையன்டா கடும் இஷ்டம்.உன்ன பார்த்தா ஏனோ தெரியா சாதாரணமா கடந்து போக முடியல்ல.இவர்கிட்ட நான் பேசி பார்க்கிறன்.என்னால முடிஞ்ச உதவிய உனக்கு கட்டாயம் செய்வன்.இப்படி வெயில்ல அலையாதம்மா” என்றார்.
மீராவிற்கு அவர் பேசியது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.கடவுள் தன் மேல் கொஞ்சம் கரிசனை காட்ட ஆரம்பித்திருக்கிறார் என்று உணர்ந்தாள்.”தேங்ஸ் ஆன்டி” என்று சொல்ல வந்தவள் “மேடம்” என்று முடித்தாள்.
“அம்மா என்றே கூப்பிடு” என்றார்.மீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
“நான் ஒரு Counselor .என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்காக வர்ர எல்லாரையுமே அம்மா என்று தான் அழைக்கச் சொல்வேன்.இந்த உலகத்துல நாம நினைத்தவுடனே மனதுக்கு அமைதிய கொண்டுவார உறவு என்டா அம்மா தானே. அதனால்தான் வயது வித்தியாசம் பார்க்காம எல்லாருமே என்னை அம்மா அப்படி என்றே அழைக்க சொல்லிருக்கன்.” என்றார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்பாக பழகும் ஒரு உறவு அவளுக்கு கிடைத்ததாக தோன்றியது.
சட்டென்று ஏதோ தோன்ற “நீங்க நல்லாவே தமிழ் பேசுறீங்க எப்படி?” என்றாள்.
“நான் சுத்தமான தமிழ் பெண்.நான் யாழ்பாணத்துல மாணிப்பாய் தான் என்னோட ஊர்” என்றார்.
ஓஹ்ஹ்ஹ்….அப்போ.??
“நீ நினைக்கிறது சரிதான்.நாங்கள் காதல் திருமணம்தான் செய்தோம்.
வீட்டில் நிறைய எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் எங்கள் திருமணமும் நடந்தது.ஆனால் இப்போது என்னை விட என் வீட்டார் தான் இவரைக் கொண்டாடுகிறார்கள்.
அனுராத அவ்வளவு நல்ல மனிதர்.உன்னோட கணவர் கூட சிங்களம் தானோ?
ம்ம்ம்..என்றாள் மீரா.அவருடன் கொஞ்சம் பேசலாம் போல மீராவுக்கு இருக்க “அம்மா எனக்கு உதவி செய்வீங்களா?”
“சிரித்தவராக உன்னோட நிலமைய அனுராதா என்கிட்ட நிறைய சொன்னார்.இப்போது இருக்கிற சூழலில் உதவி என்பதை கூட உபத்திரமாக மாற்றி விட்டிருக்கிறார்கள்.ம்ம்ம்….நீ கர்ப்பமா இருக்கிறது உன்னோட கணவனுக்கு தெரியுமா?”
கண்கலங்க “இல்லை” என்றவள் ரொஷானை சந்தித்தது முதல் தன் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் ஒப்பித்தாள் மீரா.பொதுவாக மீராவிற்கு யாரிடமும் அனுதாபத்தை வாங்குவது அறவே பிடிக்காது தான்.ஆனால் ஏனோ இன்று இவருடன் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல் ஒரு உணர்வு தோன்றியது.இவ்வளவு காலமாக தன்னந்தனியே எத்தனையோ சோதனைகளை அனுபவித்திருக்கிறாள்.ஒரு நாள் கூட அது பற்றி யாரிடமும் அவள் சொல்லி அழுதது கூட கிடையாது.தன் சந்தோஷத்தை எல்லாரிடமும் சொல்பவள் சோகத்தை தன்னுடனே வைத்துக் கொள்வாள்.இப்போது தான் அவள் அதிகமாக அழுவது.
ரொஷான் அவள் வாழ்க்கையில் திடீரென்று வந்தான். அவளுக்குக் கிடைக்காத அத்தனை அன்பையும் கொட்டித்தீர்த்தான்.அதை அவள் அனுபவிக்கும் முன்னரே காணாமல் போய்விட்டான்.மீராவின் மனது இந்த சோதனையை மட்டும் ஏற்கவே முடியாது போனது.அவன் காணாமல் போனது முதல் தனியே தான் அலைந்திருக்கிறாள்.என்ன பிரச்சினை என்று கூடக் கேட்க ஆள் இல்லாத அனாதை போல்.
கடவுளுக்கு கூட தன் மேல் பரிதாபம் வந்து விட்டதோ.யார் என்று அறிமுகமே இல்லாத ஒருத்தர் அவளைத்தேடி வந்து நம்பிக்கையாகப் பேசுவது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.
“கவலைப்படாத மகளே கடவுள் எல்லாவற்றுக்கும் காரணம் வைத்திருப்பார்.நீ நிச்சயமா உன்னோட கணவனை பார்ப்பாய்.உன்னோட இந்த இன்பமான அதிர்ச்சியில் உன்னைத் தூக்கி கொண்டாடப் போகிறார்.பொறுத்தே இருந்து பாரு” என்றார்.
நன்றிம்மா…என உணர்ச்சி பொங்கச் சொன்னாள் மீரா.. “அன்று அனுராத சார்கூட பேசும்போது உங்கள பார்க்கல்லியே..”
“நீ கடும் கவலையில வந்தாய்..உன் கண்ணுக்கு நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சார்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.கொஞ்சநாள் ஹாஸ்பிடல்ல இருந்து இப்போதான் வந்தவர்.டைமுக்கு டெப்லட் சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தா தான் சாப்பிடுவார்.அதுதான் என்ன வேலையா இருந்தாலும் நானே எடுத்துவாரது.இரண்டு வாரமா பார்க்குறன் நீயும் வந்துட்டே இருக்காய்.எனக்கு மனசு கவலையாகிட்டு.அதுதான் உன்னோட பேசுறன்.” என்றார்.
“உனக்காக நான் பேசுறன் பயப்படாம வீட்டுக்கு போ” என அவளை அனுப்பி வைத்தார்.
மீராவின் கவலையை அவரால் புரியமுடிந்தது.ஆனால் உள்ளே இருந்துகொண்டே சில சமயம் மீராவிற்குப் போக்குக் காட்டும் அனுராதவிற்கு அது புரியவில்லையே.இதை மீராவிற்கு சொல்ல முடியுமா என்ன? முடிவுக்கு வந்தவளாய் அனுராதவிடம் பேசினார்.
சார்….அந்தப் பெண் மீரா பாவம்.இப்படி அலைய வைக்காதீங்க.வாழ வேண்டிய வயசுல வாழ்க்கைய தேடிட்டு இருக்கா.நீங்க நினைச்சா உதவி பண்ணலாமே சார்.நேற்றும் வடக்கு போனீங்க தானே.கிளிநொச்சி பக்கம் போக முடியாட்டியும் வடக்கு போய் அங்கிருந்தே யாருடனாவது பேசி விசாரிக்கலாமே” என்றார்.
அனுராத அவரை முறைத்துப் பார்த்தான். “செல்வி….அந்த ரொஷான் உயிரோட இருக்குறதே சந்தேகம் என்று நான் சொல்றன்.உறுதியா எதுவும் சொல்ல முடியாம நான் பாட்டுக்கு ஒரு தமிழ் பெண்ண எப்படி அங்க கூட்டிட்டு போறது.இப்ப இருக்குற சூழலல்ல எல்லாரையும் சந்தேகமா பார்க்கத்தான் தோணுது.என்னையும் தூக்கிருவாங்க.அந்தப் பெண்ணை பார்த்தா எனக்கும் பாவமா தான் இருக்கு.என்னால என்னதான் பண்ண முடியும்?”
“நான் ஒரு யோசனை சொல்லுவன் கேக்குறீங்களா சார்?”
“என்ன?? சொல்லு” என்றான்.
“யுத்ததால பாதிக்கப்பட்ட சில ராணுவ வீரர்களுக்கு Counseling உதவி பண்றதுக்காக நாங்க ஒரு குழுவா வார கிழமை அப்படி கிளிநொச்சி முகாமிற்கு போறம்.அப்படி போறபோது மீராவை கூட்டிட்டு போறன்.மறுப்பு சொல்லாம சரிண்டு சொல்லுங்க.
ப்ளீஸ்ப்பா….பாவம் அந்தப்புள்ள.முகத்தைப்பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்றார்.
“அங்க போய் என்ன செய்ற செல்வி? அங்க இருக்கிற ஆக்களைதவிர யாரையும் பார்க்க ஏலாது.”
“பரவாயில்ல.அவட மனசுக்கு அங்க போனா தீர்வு கிடைக்கும் என்டு தோணுது போல.பாவம் பா….மீராவ கூட்டிட்டு போறதுல எனக்கு பிரச்சினை வராதுப்பா..ப்ளீஸ்..” எனக்கெஞ்சிய தன் மனைவியை முறைத்தார் அனுராத.
அவரது அனுமதியை வாங்குவது, செல்விக்கு அவ்வளவு ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.
“அந்த பெண்ணை க்கூட்டிட்டு போனா உனக்குக் கேள்வி கூடவா இருக்கும்” என்றார்.
அவருக்குத் தெரியும்.செல்வி அந்தத் துறையில் எவ்வளவு செல்வாக்கானவர் என்று.
ஏனென்றால் இது செல்வியின் முதல் பயணமில்லையே.அவர் நிறையத் தடவைகள் போயிருப்பதால் அங்கிருக்கும் நிறையப் பேர்களுக்கு அவர்மேல் நன்மதிப்பு அதிகம்.
ஒரு வைத்தியராக சமூக சேவகரான செல்விக்கு,மீராவை அழைத்துச் செல்வது கஷ்டமாக இருக்கவில்லை.கொடுத்த வாக்குறுதியின்படி மீராவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றார்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.