ஏன் வந்த?? அவன் முகத்தில் தெரிந்த உணர்வை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆனால் அந்தக் கேள்வியில் பதட்டம் இருந்தது.நான் இங்க வந்த அவனுக்கு பிடிக்கல்ல போல.ஆனா ஏன்??
பல வருடங்களுக்குப்பிறகு நடக்கும் கார்னிவல் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டம் அலைமோதியது.அத்தனை பேரும் உடல் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.அதற்காக காமுவுடன் மீராவும் வரிசையில் காத்திருந்து அலுத்த போதுதான் தூரத்தில் ரொஷான் நிற்பதை காமு பார்த்தார்.மீராவிற்கும் அவன் இங்கு இருப்பானென்று தெரியாது.
காமுதான் அவனைக்காட்டி அவனின் மனைவியென்று அங்கு நிற்பவர்களிடம் சொல்ல அவர்களும் ரொஷானை அழைத்து வந்தனர்.
வரும்போதே வெகு சீரியசாக யாருடன் ஃபோன் பேசிக்கொண்டு வந்தான்.மீராவைக்கண்டதும் அவன் கண்களில் அதிர்ச்சிதான்.
பேசிக்கொண்டே அவளை ஒற்றைக்கையை நீட்டி அழைக்க அவளும் வேறு வழியில்லாமல் வரிசையில் நிற்பவர்களைத்தாண்டி சங்கடத்துடன் அவனிடம் சென்றாள்.கூடவே காமுவும்.அவன் கைகளுக்குள் மீராவின் கைகளை மிக மென்மையாக பற்றிக்கொண்டவன், சோர்வாகத் தெரிந்த அவள் முகத்தை ஆராய்ந்தான்.
ஃபோனை கட் செய்தவன் “ஏன் வந்த” என்ற முதல் கேள்வியில் மீரா உடைந்து போனாள்.காமு குழப்பமாக மீராவைப்பார்க்க அவளுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.
ஆயிரம்தான் இருந்தாலும் பல அனுபவங்களைத்தாண்டி வந்தவரல்லவா? ஏதோ ஒன்றை புரிந்து கொண்டார்.
“தம்பி….நீங்க இங்கதானே டியூட்டி? நான்தான் புள்ள ஊட்டுக்குள்ளயே தனியா இருக்குதேன்டு கூட்டிவந்த.நீங்க இருக்கீங்க தானே பயமில்ல.நான் வாரன்.”என்றவர் மீராவின் தலையை தடவிக் கொடுத்துவிட்டு சென்றேவிட்டார்.
அவன் பற்றியிருந்த கையை பார்த்துக்கொண்டே இருந்தாள்.அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அவள் மனது முழுக்க ஏன் வந்த என்ற கேள்வியே ஓடிக்கொண்டிருந்தது.சற்றுத்தள்ளி சக்கரநாட்காலியில் அமர்ந்து கொண்டு ஐஸ்க்ரீமை சுவைத்தபடி தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் அந்தப்பெரியவருக்கு இருக்கும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கூட எனக்கு இல்லாம போயிட்டா? நினைத்த உடனே, அவளை பிடித்துக்கொண்டு நடந்து சென்றவனின் கைகளை உருவிக்கொண்டவள் கூட்டத்தில் ஒருத்தியாய் அவன் கண்களைவிட்டு மறைந்தாள்.
அந்த இடத்தைவிட்டு வேகமாக நடந்தவளுக்கு மூச்சுவாங்கியது. மனதுமுழுக்க ரொஷான் மேல் அவ்வளவு கோபம்.அதை நடையின் வேகத்தில் கொஞ்சம் அதிகமாகவே காட்டிவிட்டாளோ.ஏனென்றால் கார்னிவல் நடக்கும் இடத்தைவிட்டே வந்துவிட்டாளே.
“ஹய்யோ…இது எங்க வந்துட்டன்?.நான் எப்டி இங்க? திருப்பி அதுக்குள்ள போறதுக்கு இன்னொரு தடவை வரிசையில காத்திருக்கனுமே.அவசரப்பட்டமே.
திரும்பவும் வீடு போக சுத்தமாக அவளுக்கு வழியே தெரியாது.என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க அப்போது,யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று சுழல் காற்று அடித்தது.புழுதி குப்பை என எல்லாமே காற்றிற்கு இசைந்தபடி சுழன்றுகொண்டிருக்க மீரா கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் அணிந்திருந்த பாவாடை சட்டை கூட தாருமாறாக பறக்க அப்படியே தரையிலே அமர்ந்தே விட்டாள்.அந்தக்காற்றோ நின்றபாடில்லை என்பதை உணர்ந்தவள் கண்களை சுருக்கியபடி இமைதிறக்க அவள் நின்றிருந்த அந்த வீதி வெறிச்சோடிக்கிடந்தது.வானம் நன்றாக இருட்டி அடைமழையொன்றிற்கு தயார் என்பதைப்போல சில துளிகளை சிந்தியது.மீண்டும் கார்னிவல் நடக்கும் இடத்துக்கு ஓடிப்போனாள் மீரா.அதற்கிடையில் காற்று குறைந்து மழை சடசடவென்று கொட்டியது.ஓடியவளது காலில் சுருக்கென்று ஏதோ குத்தியதை உணர்ந்தவள் குனிந்து செருப்பைப் பார்க்க ஆணி ஏறியிருந்தது.அதை இழுத்து கீழே போட்டவள் மீண்டும் செருப்பை மாட்டிக்கொண்டு அங்கு நின்ற பெரிய ஆலைமரத்தின் கீழ் நின்றுவிட்டாள்.எதிர்பாராத மழை என்பதால் கார்னிவல் வந்த முக்கால்வாசிப்பேர் ஒதுங்க இடம்தேடி அலைந்து கொண்டிருக்க சில பேர் நனைந்தனர்.அந்த இடமே குழம்பிவிட்டது.வரிசை கூட இல்லை.காவலுக்கு நின்ற பொலீல் ராணுவங்கள் மட்டும் குடையுடன் கடமையே கண்ணாக இருந்தனர்.
மீராவுக்கு கால் வலித்தது.குனிந்து பார்க்க வாய்ப்பில்லை.அவள் நின்ற இடத்தில் அவ்வளவு கூட்டம்.
“கடவுளே…எப்பவும் ஏன் என்னை மட்டும் சோதிக்கிற.” அவள் கலங்கிய விழிகளில் ரொஷான் தெரிந்தான்.அவன் அவளைத்தான் தேடுகிறானென்று புரிந்தது.குடை கூட இல்லை.கொட்டும் மழையில் நனைந்தவாறே அவன் கண்கள் அவளை தேடி அலைந்து கொண்டிருந்தது.மீரா வலி மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக் கூட்டத்தில் மழைக்கு நடுவில் அவளைப் பார்ப்பது சிரமம்தான் என்றாலும் மீராவுக்கு அவன்முன்னே போய் நிற்க மனசு விடவில்லை.மாறாக கண்டுபிடிக்க மாட்டானா என்று ஏங்கவைத்தது.அவள் மனதை காக்க வைக்காத அவனும் அவளைப் பார்த்துவிட்டான்.
அடுத்தநொடியே மீராவுக்கு நெஞ்சு படபடத்தது.காரணம் ஏன் வந்த என்ற கேள்வியில் இல்லாத கோபம் இந்தப்பார்வையில் கொப்பளித்தது. இதுவரை காணாத உக்கிரமான பார்வையை சந்தித்தாள். அவளுக்குள் குளிர்பவியது.
“ஹய்யோ…என்னை கண்ட சந்தோசத்துல சிரிப்பார் என்டு நினைச்சா இப்படி முறைக்காரே.” அவள் முகம் வெயிலுக்கு சுருங்கிய மலராய் மாறிப்போனது.அவன் அருகே வரவர என்னசெய்வதென்றே தெரியாமல் அணிந்திருந்த சட்டையை இரு கைகளாலும் சுருக்கிக் கொண்டிருந்தாள். அவளருகில் நின்றவர்கள் ரொஷானைக் கண்ட மாத்திரத்தில் விலகி வழிவிட அவள்பக்கம் கைகளைநீட்டினான்.பயந்தவளாய் அவனைப்பிடித்தவள் பக்கத்தில் மெதுவாய் வந்தாள்.
மெல்லிய மழைத்தூறலில் நனைந்தவாறே அவளை வீட்டுக்குக் கூட்டிவந்தான்.உள்ளே சென்றவள் உடைமாற்றிவிட்டு வெளியே வந்தாள்.
மீரா…..என்ற அவன் அழைப்பில் அவளையே அவளுக்குப் பிடிக்காமல் போனது.வரும்போது ஒரு வார்த்தைகூட அவன் பேசவில்லை.
அந்த அமைதியே அவளுக்கு பயத்தை அதிகப்படுத்தியது.வந்த உடனே உடைமாற்றிவிட்டு பேசாமல் தூங்கலாம் என்றுதான் நினைத்தாள்.ஆனால்??
நிச்சயமாக அந்தப்பார்வைக்கு அவளால் தாக்குப்பிடிக்கவே முடியவில்லை.தன் சிறு வயதில் அப்பாவின் கோபத்தை எதிர்கொண்டபோது எப்படி தனித்துவிடப்பட்டது போல் உணர்ந்தாளோ அதைவிட அதிகமாக உடைந்தாள் மீரா.பேபி என்ற அழைப்பு காணாமல் போய் அவன் தன்னை பேர் சொல்லி அழைத்ததும் அவளுக்கு அவ்வளவு வலித்தது.அவன் கண்களில் தெரிந்த கோபத்தை தாக்குப்பிடிக்க முடியாதவளாய் குழந்தையாய் அழுதாள் மீரா.சத்தமே இல்லாத அவள் விசும்பல் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“ஏன் அழுக? நான்தான் அழுகனும்.சொல்லாம போறது பிழை இல்லயா? நான் தேடுவன்டு தெரியாதா?நாட்டு நிலமை தெரியாத பேபியா நீங்க.எல்லாத்தையும் உங்கள்ட சொல்லேலா மீரா.உங்கட சேஃப்டி முக்கியம்.அதுக்கு நான்தான் ரெஸ்பொன்ஸ்.எனக்கி சரியான கோபம்.வேற யாரும் என்ன இப்படி செய்தா நான்…..” வார்த்தைகளை அவன் முடிக்காமல் கைகளை கதவில் ஓங்கிக்குத்தினான். மீராவோ அப்படியே உறைந்து போனாள்.
அவன் உடைகூட மாற்றவில்லை. பகல் சாப்படவில்லை.இரவு எட்டு மணியும் தாண்டியும் விட்டது. அவளை அரைமணி நேரம் தான் காணாமல் தேடினாலும் அதற்குள் அவன் மனதுபட்ட பாடு மிகப்பெரிது. இது ஒன்றும் அவளுக்குத் தெரியாது.அவள் கண்ணீர் அதுபாட்டிற்கு வழிந்து கொண்டிருக்க மேனியோ மெல்லிதாய் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் மேல் உயிராக இருப்பவன் இந்த நிலையில் அவளைப்பார்க்க விரும்புவானா என்ன.பேபி….. அவனது குரலில் அப்படியொரு மென்மை.அவளோ பயத்தில் பின்னால் நகர்ந்தபடி திரும்பி அறைக்குள் சென்றவள் கதவை சாற்ற, ரொஷான் முகத்தில் வேதனை பரவியது.அதே யோசனையுடன் கதிரையில் அமர்ந்தவனுக்கு மனம் உடல் இரண்டின் சோர்வால் என்னவோ தூங்கியும் விட்டான்.மீண்டும் கண்விழித்தபோது இரவு பன்னிரென்டரை.தயக்கத்துடன் சென்று மீராவின் அறைக்கதவை திறந்ந்து பார்த்தான்.அவளோ சிறு முனகலுடன் நடுங்கிக் கொண்டிருந்தாள்.அதற்கு மேல் எதையும் யோசிக்காமல் உள்ளே சென்று அவளைத்தொட்டுப் பார்க்க உடம்பு அனலாய் கொதித்தது.
உள்ளங்கைகளை நன்றாகத் தேய்த்து விட்டவன், சாப்பிட ஏதுவும் உள்ளதா என ஆராய்ந்தான். அன்றைக்கு பார்த்து எதுவுமேயில்லை.வெளியே சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் காமு இரவு சாப்பாட்டை சிந்திக்கவில்லை.
உடனே சீனியை தூக்கலாகப்போட்டு டீ ஊற்றியவன் மீராவை வற்புறுத்திக் குடிக்க வைத்தான்.பிறகு காய்ச்சல் மாத்திரையைக் கொடுக்க அவளோ அதை வாங்கவில்லை.
“ம்ஹும்..” கைகாளால் வாயை இறுகப் பொத்திக்கொண்டாள்.
“பேபி…இது காச்சல் டெப்லட்.பாருங்க” என்று அதிருந்த பாக்கெட்டை தூக்கிக்காட்டினான்.
அவள் அடிப்படையிலேயே ஒரு மருந்துக்கள்ளி என்று ரொஷானுக்குத் தெரியாதே. மருந்தை கையில் எடுத்துக்கொண்டு பாட்டியும் அப்பாவும் அவள் பின்னால் அலைந்து ,பிறகு வாழைப்பழத்திற்குள் மாத்திரையை வைத்து ஒரே முழுக்காக விழுங்குவதே அவள் வாடிக்கை.
“தண்ணீ குடிச்சிட்டு போடுங்க.” வாயருகே பாட்டிலை கொண்டுசெல்ல மீரா முகத்தை தலையணைக்குள் புகுத்திக்கொண்டு, “வேணா…நான் மருந்து குடிக்கிறல்ல.” என்றாள்.
“பேபி….ப்ளீஸ் உங்கள்க்கு சரியா காச்சல்.மருந்து குடிச்சா சரியாகும்”
அவளோ எழும்பிய பாடில்லை.உடல் சூட்டின் வீரியத்தைப் பார்க்கப் பொறுக்காத ரொஷான் ஒரு கட்டத்தில் குரலை உயர்த்தினான். “சொல்ற விளங்கல்யா..?எழும்புங்க”
விருட்டென்று நிமிர்ந்தவளின் கண்கள் பயத்தைக் காட்டியது.மான் விழியாய் அசைந்துகொண்டிருந்த அவள் பார்வையில் இளகத்துடித்த மனதை அடிக்கியவன் கஷ்டப்பட்டு கோபத்தை இழுத்துப்பிடித்தான்.
“குடிங்க…..என்க,மறுபேச்சில்லாமல் வாங்கி விழுங்கினாள்.
அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த நீரை கைகளால் துடைத்தும் விட்டான்.அவளை அப்படியே தூக்கி அவன் மடிமேல் இருத்தியவன்,தலையணையை தன் முதுகுக்கு வைத்து கட்டிலில் சாய்ந்தான்.மீராவோ சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை.அவன் நெஞ்சில் தன் முகமிருந்தாலும் அவனிடமிருந்து திமிறி விடுபடுமளவிற்கு அவளுக்கு வலு இல்லாததாலோ அல்லது அவன் உடல் சூடும் மென்மையான வருடலும் தேவைப்பட்டதாலோ என்னவோ அசையாமலிருந்தவள் ஒரு கட்டத்தில் தூங்கியும் போனாள்.
மீராவின் உடல் அவ்வளவு அயர்வாக இருந்தது.எழ மனதில்லாதவள் கைகளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். கன்னத்தில் ஏதோ குறுகுறுக்க படக்கென்று கண்களைத் திறந்தவளுக்கு அதிர்ச்சியைவிட வெட்கமாக இருந்தது.ஒரு கட்டிலில் தலையணையைக் கட்டிக்கொண்டு எப்படி சுதந்திரமாகத் தூங்குவாளோ அதேபோல் ரொஷானின் கழுத்தைக்கட்டிக்கொண்டல்லவா தூங்கியிருக்கிறாள்.நேற்று நடந்த சம்பவங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நினைவுவர உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டாள்.
நேத்து மட்டும் எவ்வளவு தரம் என்ல கோபப்பட்டுட்டாரு.தன்னைச் சுற்றியிருந்த அவன் கைகளை விலக்கப்பார்க்க ரொஷான் கண்களைத்திறந்தான்.அவள் காய்ச்சல் விட்ட பிறகுதான் அவன் தூங்கியதால் அவன் கண்களில் தூக்கம் இன்னமும் மிச்சமிருந்தது.
அவசரமாக எழுந்து அமர்ந்தவளின் நெற்றியைத் தொட்டுப்பார்க்க அவளோ தலையை பின்னால் சாய்த்தாள்.அவள் தோளைப் பற்றி இழுத்து மீண்டும் தொட்டுப்பார்த்தான். “பேபி….காய்ச்சலா இருக்கே.சாப்பிட்டா ஹாஸ்பிடல் போகலாம்.என்ன வேணும்??”
மீராவுக்கு அவ்வளவு பசி..நாக்கு தொண்டை எல்லாம் உலர்ந்ததைப் போனதைப்போல் உணர்ந்தாள்.டீ குடித்தால் தான் மற்ற சாப்பாடை யோசிக்கலாம் என நினைத்தவள்,
“எனக்கு டீ வேணும் என்க,” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன் எழுந்து சென்றான்.அதன் பிறகு காலை சாப்பாட்டை அவனே மீரா மறுக்க மறுக்க ஊட்டிவிட்டான்.
தொடர்ந்து வந்த நாட்களில் அதுவே வழமையாகிப்போனது.
காய்ச்சல்,தடிமல்,இருமல் என மீரா சுருண்டு கிடந்த போது
வேலைக்கும் போகாமல் அவளுடனே இருந்தான்.ஒரு குழந்தையைப்போல் தன்னை கவனித்துக் கொண்டவனை மெளனமாக ரசித்துக்கொண்டிருந்தாள் மீரா.அவன் உடனிருக்கும் ஒவ்வொரு நொடியும் தாயின் அருகாமையை உணர்ந்தாள்.
அன்றும், வழக்கம் போல அவன் போட்டுத்தந்த டீயை குடித்துக்கொண்டிருந்த மீரா,ரொஷான் வேலைக்குப்போக தயாராவதைக் கண்டதும் முகம் கவலையாகிப்போனது.கூடவே இருந்து பழகியதால் என்னவோ அவன் வேலைக்குப் போவது அவளுக்கு என்னவோ போலிருந்தது.
“பேபி… நான் வர இரவாகும்.சாப்பாடெல்லாம் டைமுக்கு சாப்பிடுங்க.”என்றபடி அவள் குடித்த கப்பை வாங்கி கழுவியும் வைத்தான்.
மீராவோ பூனைக்குட்டி போல் அவன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தாள்.கண்ணாடியில் தலைவாரிக்கொண்டிருந்த ரொஷான் அவள் புறமாகத் திரும்பி என்ன பேபி செய்து என்று கேட்ட மறுநொடியே அவனை அணைத்துக்கொண்டாள் மீரா.
முதல் அணைப்பு…ஆம் இதற்கு முதல் பதட்டத்திலோ அல்லது பயத்திலோ தான் மீரா அவனை நெருங்கியிருக்கிறாள்.இன்று எந்தக்காரணமும் இல்லையே. ஆனாலும் அந்த அணைப்பில் ஒரு தயக்கம்.அவளது மென்மையான இரு கைகளுக்குள்ளும் அடங்காத அவனது முதுக்குப்புறத்தை முழுதாகத் தொடாமல் டீசர்ட்டை பிடித்துக்கொண்டிருந்தாள்.
அதிர்ச்சியில் பதிலுக்கு அணைக்கக்கூடத் தோன்றாமல்,அவளை வேகமாக விலக்கியவன்
“என்ன பேபி?? என அவளை ஆராய்ந்தான்.
பதட்டமாக இருந்தவனைப் பார்த்ததும் மீராவுக்கு சிரிப்பு வந்தது.
“பைத்தியம்” என்றாள்.இன்னமும் அவன் சீரியஸாக இருக்க, அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.இவருக்கு என்னத்துக்கு கல்யாணம்.நானே வெக்கம், வெட்டி வீராப்பெல்லாம் உட்டுட்டு கட்டிப்புடிச்சா,இப்படி முழிக்காரே.சரி வராது நாமளே இன்னுமொரு ஸ்டெப் போயிருவோம் என நினைத்தவள்,அவன் கழுத்தில் கைகளை கோர்க்க எம்பினாள்.
அவன் உயரத்துக்கு எட்டவில்லை என்பதால் அவன் கைகளைப்பிடித்து அவள் இடையை சுற்றி வைத்தவள், தூக்கு என்பது போல் காட்ட அதே பார்வையுடன் அவளைத்தூக்கினான் ரொஷான்.இப்போது அவன் கழுத்தில் கைகளால் மாலையிட்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் இதழ்களின் ஓரமோ புன்னகையில் துடிக்க அவளைப் பார்வையால் சிவக்கவைத்தான்.
அவன் முகமோ இது நாள் வரைக்கும் காணாத மகிழ்வைக்காட்டியது.
அதிர்ச்சி,விரசம்,காதல்,உரிமை என அத்தனையும் அந்தக்கண்களில் தெரிந்தது.மற்ற ஆண்களைப் போல் அவன் சாதாரணமானவன் அல்லவே.இதுவரை காலமும் எந்த உணர்வையும் அவன் வெளிப்படுத்தியதேயில்லை.அவன் ஆழ்ந்த மெளனமான பார்வையைத் தவிர யாருக்கும் எதையும் வெளிப்படுத்தமாட்டான்.
கோபக்காரன், திமிரு பிடித்தவன், முரடன் என்றுதான் அவனை பார்ப்பவர்கள் சொல்லுவார்கள்.
யாரும் அவனோடு நெருங்கிப் பழகாததால் என்னவோ அவனும் மற்றவரோடு ஆழ்ந்து பழகமாட்டான். அவன் வாழ்க்கையில் அவனுக்காக அவனே தேடிய இஷ்டப்பட்ட முதல் உறவு என்றால் அது மீராதான். அவளிடம் மட்டுமே இயல்பாக இருந்திருக்கிறான்.ரொஷான் என்னும் இரும்பு மனிதனை உயிர்ப்பித்த அவன் தேவதை அவள்தானே.
“என்ன? இப்படி பார்க்குற..? என்றாள். ஆனால் சத்தமே எழவில்லை.
“என்னோட உங்கள்க்கு விருப்பமா பேபி??” அந்தக் கேள்வியிலும் அவன் கண்களிலும் அவ்வளவு எதிர்பார்ப்பு.
அந்தக் கேள்விக்கு பதிலாக அவனது மற்ற கன்னத்திலும் முத்தமிட்டு “ம்ம்ம்” என்று தலையாட்டினாள்.
“என்னோட பயமில்லதானே??”
“இல்ல…” என அவன் கண்களைப் பார்க்காமல் சொன்னாள்.
“பேபி….உண்மையாத்தானே? என்னப் பார்த்து சொல்லுங்க.”
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. “மீராம்மா??”
“காமு பாட்டி கூப்பிடுறாங்க.விடுங்க” என கீழே இறங்கப்போனாள்.
அவனுக்கு அவளைவிட மனதேயில்லை.மெதுவாக இறக்கிவிட்ட அவனைத்திரும்பிப் பார்த்த மீராவின் பார்வையில் அவ்வளவு காதல்.