அத்தியாயம்-10
ராஜசேகரின் மொத்தக் குடும்பமும் போட்டோ எடுப்பதற்காக மணமேடையில் கூடி நின்றனர். அவர்கள் அனைவரினது முகத்திலும் திருமண வேலைகளினால் உண்டான அயர்ச்சி தெரிந்தாலும் அதையும் மீறிய பூரிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது!
ராஜசேகர் கூடத் தர்சன் மேலிருந்த கோபத்தை எல்லாம் மறந்து அவனோடு எப்போதும் போலவே பேசத் தொடங்கியிருந்தார்.
ஆமாம்! அமலனின் திருமணம் வெகு விமரிசையாகவும் நிறைவாகவும் நடந்து முடிந்திருந்தது!
அன்றைய விழாவின் நாயகனான அமலன், அன்றிலிருந்து தன் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கேற்கப்போகும் துணைவியான ஆரணியின் கரம் பற்றி, முகம் முழுவதும் மகிழ்ச்சி ததும்ப நடுநாயமாக நிற்க, அவர்களுக்கு இருபுறமும் ராஜசேகரும் மஞ்சுளாவும் நின்றிருந்தனர். மஞ்சுளாவின் அருகில் மகேஸ்வரியும், அவரின் அருகில் வெண்பாவும் தர்சனும் நிற்க, ராஜசேகரின் பக்கம் விமலன், அர்ஜூன், ராகினி மூவரும் நின்றிருந்தனர்.
“எல்லோரும் இன்னும் கொஞ்சம் நெருங்கி நில்லுங்கள்:” என்றார் அங்கே புகைப்படக் கருவிக்குள் இவர்களை அடக்க முயன்று கொண்டிருந்த போட்டோகிராபர்.
எல்லோரும் நெருங்கி நிற்க, தர்சனும் தன் மனையாளை நெருங்கி நின்றான். ஏற்கனேவே அவளின் அருகில் நின்றவன் இன்னும் நெருங்கியதில் அவளிடம் இருந்து வீசிய சுகந்தத்திலும் அழகிலும் மயங்கித்தான் போனான்!
அதோடு, அவன் கடைக்கண் பார்வைக்கு விருந்தாக அமைந்த அவளின் கழுத்தோரமும் அதிலே வியர்வையில் நனைந்து சுருண்டுகிடந்த முடிச்சுருள்களும் அவனுக்குள் போதையேற்ற முயன்று கொண்டிருந்தன!
அவரவர் துணையுடன் சகோதரர்கள் இருவரும் நின்றதாலோ அல்லது தன்னால் தடைப்பட்ட அமலனின் திருமணம் முடிந்துவிட்டதால் உண்டான நிறைவினாலோ என்னவோ அவனுக்கும் நடந்தவை அனைத்தும் மறந்திருக்க என்றுமில்லாது அன்று மனைவியின் அருகாமை கசக்கவில்லை! மாறாக இனித்தது!
அந்த இனிமை தந்த கிறக்கத்துடன் அவன் நிற்க, அவனை நிமிர்ந்து பார்த்த வெண்பாவின் விழிகளில் என்ன இருந்தது?
அதை இனங்காண முயன்றபடி அவள் விழிகளையே அவன் தொடர்ந்து பார்க்க, அவள் இதழ்களோ மெலிதாக ஏளனமாக மடிந்தது!
அவனின் புருவங்கள் முடிச்சிடத் தொடங்கவும் தன் பார்வையை விலக்கிக்கொண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்தாள் வெண்பா.
‘ஏன் அப்படிப் பார்த்தாள்?’ என்று சிந்தித்தவனின் சிந்தனையைத் தொடர முடியாமல் ஆரணியின் குடும்பத்தினரும் மேடையேற, அதன்பிறகு அதை மறந்தே போனான் தர்சன்.
மாலையில் நடக்கப்போகும் திருமணப் பதிவையும் அதனோடு ஒட்டிய ரிஷப்சனையும் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடத்துவதாக முடிவு செய்திருந்தமையால் மண்டபத்தை ஒதுக்கிக்கொண்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றனர் ராஜசேகர் குடும்பத்தினர்
தர்சன் வெண்பாவின் திருமணப் பதிவும் நடக்கவிருப்பதால் எல்லோரினதும் கேள்விப் பார்வைக்கும், கேலிப்பார்வைக்கும் உள்ளாக விரும்பாமல், முக்கியச் சொந்தங்களுக்கு மத்தியில் மட்டுமே அதை நடத்த விரும்பினார்கள் ராஜசேகர் தம்பதியர்.
அதன்படி தோட்டத்திலே கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு அலங்கார மேடையும் போடப்பட்டு இருந்தது.
அப்போதே பொழுது மதியத்தைக் கடந்துவிட்ட படியால், அமலனையும் ஆரணியையும் மாலை ரிசப்சனுக்குத் தயாராகச் சொல்லி அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பிவிட்டு வந்த மஞ்சுளா, விருந்தினர்களைக் கவனித்துக்கொண்டிருந்த தர்சனையும் அழைத்தார்.
“நீயும் போய்த் தயாராகு தர்சா! வெண்பா எங்கே? அவளிடமும் சொல்லு. நேரமாகிறது பார்.. பதிவாளர் வரப்போகிறார்.”
“நான் தயாராவது எல்லாம் பெரிய வேலையாம்மா? ஒரு நிமிசத்தில் முடிந்துவிடும். வெண்பா மேலே உடை மாற்றப் போய்விட்டாள்.”
மனைவி அவர்களின் அறைக்குச் சென்றதைக் கண்டவன், உடைமாற்றத்தான் சென்றிருக்கிறாள் என்று கணித்துச் சொன்னான்.
“அப்போ சரி. பதிவாளர் வருமுன் நீயும் தயாராகிவிடு. இல்லாவிட்டால் அப்பா கத்துவார்.”
“சரிமா..” என்றுவிட்டுச் செல்லும் மகனைப் பார்க்கையில் நிறைவாக உணர்ந்தார் மஞ்சுளா.
ஒருவழியாகப் பதிவாளரும் வந்து சேர்ந்துவிட அமலனுக்கும் ஆரணிக்கும் நடந்த திருமணத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார் அவர்.
“வெண்பா எங்கே தர்சன்? அடுத்ததாக உங்களின் திருமணத்தைத்தான் பதியவேண்டும்.” என்றாள் ராகினி மெல்லிய குரலில்.
அப்போதுதான் தன் அருகில் வெண்பா இல்லாததை உணர்ந்தான் தர்சன்.
இருவரும் ஒன்றாகத்தானே தோட்டத்துக்கு வந்தோம், அதற்குள் எங்கே போனாள் என்று எண்ணியவன், “என்னுடன்தான் நின்றாள் அண்ணி. இங்கே எங்கேயாவதுதான் இருப்பாள்.” என்றபடி விழிகளைச் சுழற்றி மனைவியைத் தேடினான்.
தோட்டத்தில் அவளைக் காணவில்லை என்றதும், “நான் வீட்டுக்குள் பார்க்கிறேன் அண்ணி. அவள் வந்தால் இங்கேயே நிற்கச் சொல்லுங்கள்.” என்று ராகினியிடம் சொல்லிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றான் தர்சன்.
நேரமாகிறதே என்று எண்ணி வேக வேகமாகப் படியேறி அவர்களின் அறைக்குள் சென்று பார்த்தான்.
அங்கேயும் அவள் இல்லை!
“வெண்பா.. எங்கே இருக்கிறாய்?” வெளியே கேட்காதபடிக்கு அவளை அழைத்தவன் குளியலறையையும் பார்த்தான். அங்கேயும் இல்லை அவள்.
அதற்கிடையில் எங்கே போனாள்? காலையிலிருந்து நன்றாகத்தானே இருந்தாள்!
திருமணத்தைப் பதிவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ? அப்படி எதுவும் அவள் சொல்லவில்லையே! முகக் குறிப்பிலும் அப்படி எதையும் காட்டவில்லையே என்று சிந்தித்தவனின் நெஞ்சில், போட்டோ எடுக்கையில் அவள் அவனைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு மின்னி மறைந்தது,
அன்றைய தினத்தில் முதன்முதலாகக் காரணமின்றிக் கலங்கியது அவன் நெஞ்சு!
மனதில் பதட்டம் சூழ, மொட்டைமாடி முதற்கொண்டு வீட்டுக்குள் அனைத்து இடங்களிலும் தேடியும் அவளைக் காணாதவனின் நெற்றியில் வியர்வைத் துளிகள்.
இனியும் எங்குத் தேடுவது, என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அவர்களின் அறைக்குள் சென்றவனின் காலில் என்னவோ குத்தியது. “ஸ்ஸ்..” என்றபடி, காலைத் தூக்கியவன் என்ன குத்தியது என்று குனிந்து பார்த்தான்.
பார்த்தவனின் விழிகள் கீழே கிடந்த பொருளிலேயே நிலைகுத்தி நின்றது!
காரணம், அங்கே கிடந்தது வெண்பாவின் கழுத்தில் அவன் கட்டிய தாலி!
நெஞ்சம் துடித்துப் பதற வேகமாகக் குனிந்து அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவனின் விழிகளில் நேரெதிர் சுவரில் தொங்கிய அவன் போட்டோ பட்டது!
அது பட்ட நொடியில், “என் கழுத்தை நெரிக்கும் இந்தக் கயிறை வெகு விரைவில் உன் முகத்திலேயே தூக்கி எறிகிறேன் பார்!” என்று அன்று அவள் சொன்னது அவன் செவிப்பறைகளில் வந்து மோதியது!
சொன்னதைச் செய்துவிட்டாளா?! இல்லை! இருக்காது! இருக்ககூடாது!
கையிலிருப்பது தான் கட்டிய தாலிதானா என்று நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் அதை உற்றுப் பார்த்தான்!
நீ கட்டிய அதே தாலிதான் என்று உறுதிப்படுத்தியது அது!
அப்போ… சொன்னதைச் செய்துவிட்டாளா?
அன்று அவள் கோபத்தில் சொன்னவைகளை எப்படி மறப்பது என்று யோசித்தவன், அடுத்ததாக அவர்களின் வாழ்க்கையை நேராக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அவள் சொன்னதைச் செய்வாளோ என்கிற கோணத்தில் சிந்திக்கவே இல்லையே!
நெஞ்சமும், முகமும் இறுக கையிலிருந்த தாலிக்கயிறை இறுக்கிப் பொத்தியவனின் மனதில் ஆத்திரமும் ஆவேசமும் மேலோங்க, “வெண்பா! எங்கே இருக்கிறாய்? வெளியே வா!” என்றான் அழுத்தமான குரலில்.
அவள் அந்த அறைக்குள் இருந்தால் அல்லவோ வெளியே வர!
பதிலின்றிப் போகவும் வேகமாக அவளின் உடைகள் இருந்த கப்போர்ட்டை ஆராய்ந்தான். அன்றுவரை அவன் திறந்தே பாராத அதற்குள் என்ன இருக்கிறது, என்ன இல்லாமல் போயிருக்கிறது என்பதை அவனால் இனங்காண முடியவே இல்லை.
சட்டென அவளின் கைப்பை வழமையாக இருக்கும் இடத்தைப் பார்த்தான். அதையும் காணோம்!
மனதுக்குள் என்னவோ எச்சரிக்கை மணி ஒலிக்க விழிகளைச் சுழற்றியவனின் பார்வையில், அங்கிருந்த மேசையில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த கடிதம் பட்டது!
விரைந்து சென்று அதனைப் பிரித்தான் தர்சன்!
என் வாழ்க்கை என் விருப்பம்!
எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்!
அதை யாராலும் மாற்றவே முடியாது!
என்ன தர்சன்? ஒன்றுமே புரியவில்லையா?
இது அன்றொருநாள் உன்னிடம் நான் சொன்னவை!
சொன்னது போலவே எனக்குப் பிடித்த வாழ்க்கையை எனக்குப் பிடித்தவனோடு வாழ்வதற்காகச் செல்கிறேன்!
என்னை யாராலும் தடுக்க முடியாது!
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க வில்லையா? நானும்தான் என் வாழ்க்கை இப்படியெல்லாம் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்க வில்லை.
என் சம்மதம் இன்றி, என் விருப்பம் இன்றித் தாலியை கட்டி என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு அன்று என்ன சொன்னாய்? அமலனிடம் மட்டும் தான் நீ மன்னிப்புக் கேட்க வேண்டுமா?

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.