• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 10

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-10

ராஜசேகரின் மொத்தக் குடும்பமும் போட்டோ எடுப்பதற்காக மணமேடையில் கூடி நின்றனர். அவர்கள் அனைவரினது முகத்திலும் திருமண வேலைகளினால் உண்டான அயர்ச்சி தெரிந்தாலும் அதையும் மீறிய பூரிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது!

ராஜசேகர் கூடத் தர்சன் மேலிருந்த கோபத்தை எல்லாம் மறந்து அவனோடு எப்போதும் போலவே பேசத் தொடங்கியிருந்தார்.

ஆமாம்! அமலனின் திருமணம் வெகு விமரிசையாகவும் நிறைவாகவும் நடந்து முடிந்திருந்தது!

அன்றைய விழாவின் நாயகனான அமலன், அன்றிலிருந்து தன் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கேற்கப்போகும் துணைவியான ஆரணியின் கரம் பற்றி, முகம் முழுவதும் மகிழ்ச்சி ததும்ப நடுநாயமாக நிற்க, அவர்களுக்கு இருபுறமும் ராஜசேகரும் மஞ்சுளாவும் நின்றிருந்தனர். மஞ்சுளாவின் அருகில் மகேஸ்வரியும், அவரின் அருகில் வெண்பாவும் தர்சனும் நிற்க, ராஜசேகரின் பக்கம் விமலன், அர்ஜூன், ராகினி மூவரும் நின்றிருந்தனர்.

“எல்லோரும் இன்னும் கொஞ்சம் நெருங்கி நில்லுங்கள்:” என்றார் அங்கே புகைப்படக் கருவிக்குள் இவர்களை அடக்க முயன்று கொண்டிருந்த போட்டோகிராபர்.

எல்லோரும் நெருங்கி நிற்க, தர்சனும் தன் மனையாளை நெருங்கி நின்றான். ஏற்கனேவே அவளின் அருகில் நின்றவன் இன்னும் நெருங்கியதில் அவளிடம் இருந்து வீசிய சுகந்தத்திலும் அழகிலும் மயங்கித்தான் போனான்!

அதோடு, அவன் கடைக்கண் பார்வைக்கு விருந்தாக அமைந்த அவளின் கழுத்தோரமும் அதிலே வியர்வையில் நனைந்து சுருண்டுகிடந்த முடிச்சுருள்களும் அவனுக்குள் போதையேற்ற முயன்று கொண்டிருந்தன!

அவரவர் துணையுடன் சகோதரர்கள் இருவரும் நின்றதாலோ அல்லது தன்னால் தடைப்பட்ட அமலனின் திருமணம் முடிந்துவிட்டதால் உண்டான நிறைவினாலோ என்னவோ அவனுக்கும் நடந்தவை அனைத்தும் மறந்திருக்க என்றுமில்லாது அன்று மனைவியின் அருகாமை கசக்கவில்லை! மாறாக இனித்தது!

அந்த இனிமை தந்த கிறக்கத்துடன் அவன் நிற்க, அவனை நிமிர்ந்து பார்த்த வெண்பாவின் விழிகளில் என்ன இருந்தது?

அதை இனங்காண முயன்றபடி அவள் விழிகளையே அவன் தொடர்ந்து பார்க்க, அவள் இதழ்களோ மெலிதாக ஏளனமாக மடிந்தது!

அவனின் புருவங்கள் முடிச்சிடத் தொடங்கவும் தன் பார்வையை விலக்கிக்கொண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்தாள் வெண்பா.

‘ஏன் அப்படிப் பார்த்தாள்?’ என்று சிந்தித்தவனின் சிந்தனையைத் தொடர முடியாமல் ஆரணியின் குடும்பத்தினரும் மேடையேற, அதன்பிறகு அதை மறந்தே போனான் தர்சன்.

மாலையில் நடக்கப்போகும் திருமணப் பதிவையும் அதனோடு ஒட்டிய ரிஷப்சனையும் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடத்துவதாக முடிவு செய்திருந்தமையால் மண்டபத்தை ஒதுக்கிக்கொண்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றனர் ராஜசேகர் குடும்பத்தினர்

தர்சன் வெண்பாவின் திருமணப் பதிவும் நடக்கவிருப்பதால் எல்லோரினதும் கேள்விப் பார்வைக்கும், கேலிப்பார்வைக்கும் உள்ளாக விரும்பாமல், முக்கியச் சொந்தங்களுக்கு மத்தியில் மட்டுமே அதை நடத்த விரும்பினார்கள் ராஜசேகர் தம்பதியர்.

அதன்படி தோட்டத்திலே கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு அலங்கார மேடையும் போடப்பட்டு இருந்தது.

அப்போதே பொழுது மதியத்தைக் கடந்துவிட்ட படியால், அமலனையும் ஆரணியையும் மாலை ரிசப்சனுக்குத் தயாராகச் சொல்லி அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பிவிட்டு வந்த மஞ்சுளா, விருந்தினர்களைக் கவனித்துக்கொண்டிருந்த தர்சனையும் அழைத்தார்.

“நீயும் போய்த் தயாராகு தர்சா! வெண்பா எங்கே? அவளிடமும் சொல்லு. நேரமாகிறது பார்.. பதிவாளர் வரப்போகிறார்.”

“நான் தயாராவது எல்லாம் பெரிய வேலையாம்மா? ஒரு நிமிசத்தில் முடிந்துவிடும். வெண்பா மேலே உடை மாற்றப் போய்விட்டாள்.”

மனைவி அவர்களின் அறைக்குச் சென்றதைக் கண்டவன், உடைமாற்றத்தான் சென்றிருக்கிறாள் என்று கணித்துச் சொன்னான்.

“அப்போ சரி. பதிவாளர் வருமுன் நீயும் தயாராகிவிடு. இல்லாவிட்டால் அப்பா கத்துவார்.”

“சரிமா..” என்றுவிட்டுச் செல்லும் மகனைப் பார்க்கையில் நிறைவாக உணர்ந்தார் மஞ்சுளா.

ஒருவழியாகப் பதிவாளரும் வந்து சேர்ந்துவிட அமலனுக்கும் ஆரணிக்கும் நடந்த திருமணத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார் அவர்.

“வெண்பா எங்கே தர்சன்? அடுத்ததாக உங்களின் திருமணத்தைத்தான் பதியவேண்டும்.” என்றாள் ராகினி மெல்லிய குரலில்.

அப்போதுதான் தன் அருகில் வெண்பா இல்லாததை உணர்ந்தான் தர்சன்.

இருவரும் ஒன்றாகத்தானே தோட்டத்துக்கு வந்தோம், அதற்குள் எங்கே போனாள் என்று எண்ணியவன், “என்னுடன்தான் நின்றாள் அண்ணி. இங்கே எங்கேயாவதுதான் இருப்பாள்.” என்றபடி விழிகளைச் சுழற்றி மனைவியைத் தேடினான்.

தோட்டத்தில் அவளைக் காணவில்லை என்றதும், “நான் வீட்டுக்குள் பார்க்கிறேன் அண்ணி. அவள் வந்தால் இங்கேயே நிற்கச் சொல்லுங்கள்.” என்று ராகினியிடம் சொல்லிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றான் தர்சன்.

நேரமாகிறதே என்று எண்ணி வேக வேகமாகப் படியேறி அவர்களின் அறைக்குள் சென்று பார்த்தான்.

அங்கேயும் அவள் இல்லை!

“வெண்பா.. எங்கே இருக்கிறாய்?” வெளியே கேட்காதபடிக்கு அவளை அழைத்தவன் குளியலறையையும் பார்த்தான். அங்கேயும் இல்லை அவள்.

அதற்கிடையில் எங்கே போனாள்? காலையிலிருந்து நன்றாகத்தானே இருந்தாள்!

திருமணத்தைப் பதிவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ? அப்படி எதுவும் அவள் சொல்லவில்லையே! முகக் குறிப்பிலும் அப்படி எதையும் காட்டவில்லையே என்று சிந்தித்தவனின் நெஞ்சில், போட்டோ எடுக்கையில் அவள் அவனைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு மின்னி மறைந்தது,

அன்றைய தினத்தில் முதன்முதலாகக் காரணமின்றிக் கலங்கியது அவன் நெஞ்சு!

மனதில் பதட்டம் சூழ, மொட்டைமாடி முதற்கொண்டு வீட்டுக்குள் அனைத்து இடங்களிலும் தேடியும் அவளைக் காணாதவனின் நெற்றியில் வியர்வைத் துளிகள்.

இனியும் எங்குத் தேடுவது, என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அவர்களின் அறைக்குள் சென்றவனின் காலில் என்னவோ குத்தியது. “ஸ்ஸ்..” என்றபடி, காலைத் தூக்கியவன் என்ன குத்தியது என்று குனிந்து பார்த்தான்.

பார்த்தவனின் விழிகள் கீழே கிடந்த பொருளிலேயே நிலைகுத்தி நின்றது!

காரணம், அங்கே கிடந்தது வெண்பாவின் கழுத்தில் அவன் கட்டிய தாலி!

நெஞ்சம் துடித்துப் பதற வேகமாகக் குனிந்து அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவனின் விழிகளில் நேரெதிர் சுவரில் தொங்கிய அவன் போட்டோ பட்டது!

அது பட்ட நொடியில், “என் கழுத்தை நெரிக்கும் இந்தக் கயிறை வெகு விரைவில் உன் முகத்திலேயே தூக்கி எறிகிறேன் பார்!” என்று அன்று அவள் சொன்னது அவன் செவிப்பறைகளில் வந்து மோதியது!

சொன்னதைச் செய்துவிட்டாளா?! இல்லை! இருக்காது! இருக்ககூடாது!

கையிலிருப்பது தான் கட்டிய தாலிதானா என்று நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் அதை உற்றுப் பார்த்தான்!

நீ கட்டிய அதே தாலிதான் என்று உறுதிப்படுத்தியது அது!

அப்போ… சொன்னதைச் செய்துவிட்டாளா?

அன்று அவள் கோபத்தில் சொன்னவைகளை எப்படி மறப்பது என்று யோசித்தவன், அடுத்ததாக அவர்களின் வாழ்க்கையை நேராக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அவள் சொன்னதைச் செய்வாளோ என்கிற கோணத்தில் சிந்திக்கவே இல்லையே!

நெஞ்சமும், முகமும் இறுக கையிலிருந்த தாலிக்கயிறை இறுக்கிப் பொத்தியவனின் மனதில் ஆத்திரமும் ஆவேசமும் மேலோங்க, “வெண்பா! எங்கே இருக்கிறாய்? வெளியே வா!” என்றான் அழுத்தமான குரலில்.

அவள் அந்த அறைக்குள் இருந்தால் அல்லவோ வெளியே வர!

பதிலின்றிப் போகவும் வேகமாக அவளின் உடைகள் இருந்த கப்போர்ட்டை ஆராய்ந்தான். அன்றுவரை அவன் திறந்தே பாராத அதற்குள் என்ன இருக்கிறது, என்ன இல்லாமல் போயிருக்கிறது என்பதை அவனால் இனங்காண முடியவே இல்லை.

சட்டென அவளின் கைப்பை வழமையாக இருக்கும் இடத்தைப் பார்த்தான். அதையும் காணோம்!

மனதுக்குள் என்னவோ எச்சரிக்கை மணி ஒலிக்க விழிகளைச் சுழற்றியவனின் பார்வையில், அங்கிருந்த மேசையில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த கடிதம் பட்டது!

விரைந்து சென்று அதனைப் பிரித்தான் தர்சன்!


என் வாழ்க்கை என் விருப்பம்!
எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்!
அதை யாராலும் மாற்றவே முடியாது!

என்ன தர்சன்? ஒன்றுமே புரியவில்லையா?

இது அன்றொருநாள் உன்னிடம் நான் சொன்னவை!

சொன்னது போலவே எனக்குப் பிடித்த வாழ்க்கையை எனக்குப் பிடித்தவனோடு வாழ்வதற்காகச் செல்கிறேன்!

என்னை யாராலும் தடுக்க முடியாது!

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க வில்லையா? நானும்தான் என் வாழ்க்கை இப்படியெல்லாம் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்க வில்லை.

என் சம்மதம் இன்றி, என் விருப்பம் இன்றித் தாலியை கட்டி என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு அன்று என்ன சொன்னாய்? அமலனிடம் மட்டும் தான் நீ மன்னிப்புக் கேட்க வேண்டுமா?
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
இனியும் எங்குத் தேடுவது, என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அவர்களின் அறைக்குள் சென்றவனின் காலில் என்னவோ குத்தியது. “ஸ்ஸ்..” என்றபடி, காலைத் தூக்கியவன் என்ன குத்தியது என்று குனிந்து பார்த்தான்.

பார்த்தவனின் விழிகள் கீழே கிடந்த பொருளிலேயே நிலைகுத்தி நின்றது!

காரணம், அங்கே கிடந்தது வெண்பாவின் கழுத்தில் அவன் கட்டிய தாலி!

நெஞ்சம் துடித்துப் பதற வேகமாகக் குனிந்து அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவனின் விழிகளில் நேரெதிர் சுவரில் தொங்கிய அவன் போட்டோ பட்டது!

அது பட்ட நொடியில், “என் கழுத்தை நெரிக்கும் இந்தக் கயிறை வெகு விரைவில் உன் முகத்திலேயே தூக்கி எறிகிறேன் பார்!” என்று அன்று அவள் சொன்னது அவன் செவிப்பறைகளில் வந்து மோதியது!

சொன்னதைச் செய்துவிட்டாளா?! இல்லை! இருக்காது! இருக்ககூடாது!

கையிலிருப்பது தான் கட்டிய தாலிதானா என்று நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் அதை உற்றுப் பார்த்தான்!

நீ கட்டிய அதே தாலிதான் என்று உறுதிப்படுத்தியது அது!

அப்போ… சொன்னதைச் செய்துவிட்டாளா?

அன்று அவள் கோபத்தில் சொன்னவைகளை எப்படி மறப்பது என்று யோசித்தவன், அடுத்ததாக அவர்களின் வாழ்க்கையை நேராக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அவள் சொன்னதைச் செய்வாளோ என்கிற கோணத்தில் சிந்திக்கவே இல்லையே!

நெஞ்சமும், முகமும் இறுக கையிலிருந்த தாலிக்கயிறை இறுக்கிப் பொத்தியவனின் மனதில் ஆத்திரமும் ஆவேசமும் மேலோங்க, “வெண்பா! எங்கே இருக்கிறாய்? வெளியே வா!” என்றான் அழுத்தமான குரலில்.

அவள் அந்த அறைக்குள் இருந்தால் அல்லவோ வெளியே வர!

பதிலின்றிப் போகவும் வேகமாக அவளின் உடைகள் இருந்த கப்போர்ட்டை ஆராய்ந்தான். அன்றுவரை அவன் திறந்தே பாராத அதற்குள் என்ன இருக்கிறது, என்ன இல்லாமல் போயிருக்கிறது என்பதை அவனால் இனங்காண முடியவே இல்லை.

சட்டென அவளின் கைப்பை வழமையாக இருக்கும் இடத்தைப் பார்த்தான். அதையும் காணோம்!

மனதுக்குள் என்னவோ எச்சரிக்கை மணி ஒலிக்க விழிகளைச் சுழற்றியவனின் பார்வையில், அங்கிருந்த மேசையில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த கடிதம் பட்டது!

விரைந்து சென்று அதனைப் பிரித்தான் தர்சன்!


என் வாழ்க்கை என் விருப்பம்!
எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்!
அதை யாராலும் மாற்றவே முடியாது!

என்ன தர்சன்? ஒன்றுமே புரியவில்லையா?

இது அன்றொருநாள் உன்னிடம் நான் சொன்னவை!

சொன்னது போலவே எனக்குப் பிடித்த வாழ்க்கையை எனக்குப் பிடித்தவனோடு வாழ்வதற்காகச் செல்கிறேன்!

என்னை யாராலும் தடுக்க முடியாது!

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க வில்லையா? நானும்தான் என் வாழ்க்கை இப்படியெல்லாம் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்க வில்லை.

என் சம்மதம் இன்றி, என் விருப்பம் இன்றித் தாலியை கட்டி என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு அன்று என்ன சொன்னாய்? அமலனிடம் மட்டும் தான் நீ மன்னிப்புக் கேட்க வேண்டுமா?

ஏன்? நீ எனக்குச் செய்தது அநியாயம் இல்லையா? பெரும் தவறில்லையா? அது உன் மரமண்டையில் உறைக்கவில்லையா? அதைப்பற்றி உன் வீட்டினர் கூட யோசிக்கவில்லையே! எல்லோருமே அரணாக நின்று உன்னைத்தானே காத்தார்கள். யாருமே அந்த இடத்தில் என்னைப் பற்றி, என் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லையே! என் அம்மா உட்பட!

அந்த நேரம்தான் முடிவு செய்தேன், என் வாழ்க்கையை நாசமாக்கி, என் கனவுகளைச் சிதைத்து, என் எதிர்காலத்தைப் படுகுழியில் தள்ளிய உன்னைத் திட்டம் போட்டு வீழ்த்தி, பழிதீர்க்க வேண்டும் என்று! மனச்சாட்சி என்பதே இல்லாமல் ஒரு நொடியில் என் வாழ்க்கையைச் சீரழித்தாயே, சற்றும் எதிர்பாரா நேரத்தில் தலையில் இடி விழுந்தால் எப்படி இருக்கும் என்று நீயும் உணர வேண்டாமா? ஆசையாசையாக நாம் வளர்த்த கற்பனைக் கோட்டையை யாராவது இடித்து வீழ்த்தினால் எப்படி இருக்குமென்று நீ உணரவேண்டாமா? நீ எனக்கிழைத்த அநீதிக்கு நீதி வேண்டாமா? இனி என்ன செய்து என் வாழ்க்கையை நேராக்குவேன் என்று அன்று நான் துடித்தேனே, அதை நீ அனுபவிக்க வேண்டாமா?

என் திருமணத்தைப் பற்றி எத்தனை எத்தனை கனவுகளைச் சுமந்திருந்தேன் என்று தெரியுமா உனக்கு? ஊரும் உறவும் வாழ்த்த, சீரும் சிறப்புமாக அம்மாவின் சம்மதத்தோடு என் மனதுக்குப் பிடித்தவனின் கரம்பற்ற வேண்டும் என்று கனவு கண்டேனே, அனைத்தையும் கெடுத்துவிட்டாயே!

இன்று இப்படி என்னை ஒரு அனாதையாக, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாக்கினாயே, உனக்குத் தண்டனை வேண்டாமா?

அதற்குத்தான் இந்த மூன்றுமாத காத்திருப்பு! காத்திருந்து உன்னைக் கதிகலங்க வைத்துவிட்டேன், பார்த்தாயா?

இதற்கெல்லாம் காரணம் நான் கிடையாது. நீதான்! நீ நினைத்தது மட்டுமே நடக்கவேண்டும் என்று எண்ணிய உன் சுயநலம்தான்! உன்னையும் உன் குடும்பத்தையும் பிடிக்காமல், வெறுப்போடு ஒதுங்கிப் போனவளைத் தேடிவந்து வம்பு இழுத்தவன் நீ!

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று உன் முகத்துக்கு நேரே சொல்லியும், சுரணையற்றவனாக நடந்துகொண்டாயே.. அதைவிடவும் வேறு எப்படித்தான் ஒரு பெண் தன் மறுப்பைச் சொல்வது? இனியாவது புரிந்துகொள் உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை என்பதை!

அன்று என்ன சொன்னாய்? அமலனை என் மாப்பிள்ளை என்று நான் சொல்லக் கூடாதா? நான் மட்டும் என்ன விரும்பியா சொன்னேன்? உன்னிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், உன் முகத்தில் கரியைப் பூசவும்தான் சொன்னேன்!
 

Vishakini

Moderator
Staff member
மற்றும்படி என் மாப்பிள்ளை எனக்குப் பிடித்தவன்! என்னை உயிராக நேசிப்பவன்! அவனுடன் மட்டும்தான் என் வாழ்க்கை!

நீ தாலியை கட்டியதாலேயே விதியை நொந்தபடி காலம்முழுக்க உன் காலடியில் கிடப்பேன் என்று நினைத்தாயா? அதற்கு நீ வேறு யாரையும் பார்த்திருக்க வேண்டும். இந்த வெண்பாவை அல்ல!

காதல்,அன்பு, நேசம், பாசம் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு?

என் சம்மதம் வேண்டி என் பின்னால் இரண்டு வருடங்கள் அலைந்தான் என் விஜயன். நான் எவ்வளவோ மறுத்தும் ஒற்றைக்காலில் நின்று என் காதலைச் சம்பாதித்த அவன் எங்கே? உருட்டி மிரட்டி ஒரு பெண்ணை அடக்க நினைத்த நீ எங்கே?

என்னைக் கடிந்து ஒரு வார்த்தை அவன் பேசியதில்லை. அவன் கண்களில் நேசத்தையும் கனிவையும் தவிர வேறு எதையும் நான் கண்டதில்லை.
அப்படியானவனின் கால் துரும்புக்கு சமமாவாயா நீ?

நீ ஒரு காட்டுமிராண்டி!

நான் சொன்னது போலவே நீ கட்டிய தாலியை உன் முகத்திலேயே வீசி எறிந்துவிட்டேன்!

உனக்கும் எனக்கும் நடந்த போரில் நானே வென்றேன்! வாழ்க்கையிலும்!

ஆனால் நீ? வாய்ப்பேச்சிலும் தோற்றாய்! வாழ்க்கையிலும் தோற்றாய்!

இந்த மூன்று மாதங்களும் நான் சிந்திய கண்ணீருக்கும், நான் பட்ட வேதனைக்கும் இப்போதுதான் நியாயம் கிடைத்ததாய் உணர்கிறேன்!

உன்னைப் போன்றவனை நான் அல்ல எந்தப் பெண்ணுமே கட்டவும் மாட்டாள்! காதலிக்கவும் மாட்டாள்!

கடைசிவரை நீ பிரமச்சாரிதான்டா! நீ எனக்குச் செய்த பாவங்களுக்கு இதுதான் உனக்குத் தண்டனை!

உனக்கு மட்டுமல்ல உன் குடும்பம் முழுமைக்கும்!

என்னையும் அம்மாவையும் அழவைத்தீர்கள் அல்லவா!

இன்று நடக்கும் அவமானத்தை எண்ணி இனிவரும் காலம் பூரா அழுங்கள்!

என் அம்மாவிடம் மறக்காமல் சொல்லிவிடு, அவர் மகள் சந்தோசமாகக் குடும்பம், குட்டி என்று வாழப் போய்விட்டாள் என்று! அவர் கவலைப்படாமல் அண்ணன் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கட்டும்!

வாழ்க்கையில் முற்று முழுதாகத் தோற்றுப் போனவனே, உனக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!

இனியாவது புரிந்துகொள், கடவுள் எப்போதும் ஒருவர் பக்கமே நிற்கமாட்டார் என்பதை.

இப்படிக்கு,
திருமதி விஜயதுங்க.


அதைப் படித்து முடித்தவனின் நெஞ்சம் எரிமலைக் குழம்புகளாய் வெடித்துச் சிதறியது!

அடி! மரண அடி! வாழ்க்கையில் என்றுமே எழும்ப முடியாத அளவுக்கு அவனை அடித்து வீழ்த்தியிருந்தது அவளின் செய்கை!

மனைவி ஓடிவிட்டாள்!

தர்சனின் மனைவி இன்னொருவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்!

அவனை ஆண்பிள்ளை இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாளே!

நெஞ்சம் கொதித்தது!

அவன் தேகம் முழுவதுமே ஆத்திரத்திலும் ஆக்ரோசத்திலும் நிரம்பி வழிந்தது.

அவமானம்! அவமானம்! அவமானம்! அவனைத் தாக்கிய உணர்வுகள் அத்தனையும் அவமானமே!

அந்தக் காகிதத்தையே அவளாக நினைத்தான் போலும், கைகளால் அதைக் கசக்கித் தூர எறிந்தான்!

அப்போதும் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் மேசையிலேயே ஓங்கிக் குத்தினான் தர்சன்! அந்தக் குத்தலின் வேகத்தில் அதிலிருந்த அவனது மடிக்கணிணி கீழே விழுந்து நொறுங்கியது. அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அதனை எட்டி உதைத்தான்!

அது சுவரோடு சென்று மோதியதில் மீதமிருந்த அதன் பாகங்களும் துண்டாகிப் போயின!

அப்படியிருந்தும் அவன் ஆத்திரம் அடங்க மறுத்தது!

அந்த நொடியில் அவன் கையில் அவள் சிக்கினால் அவள் உடலின் சிறுபாகம் கூட மிஞ்சுமா என்பதே சந்தேகமே!

அந்தளவுக்கு மிருகநிலையில் இருந்தான் தர்சன்!

அவளை அடித்து நொறுக்கவேண்டும் போல் கைகால்கள் துடித்தன!

எவ்வளவு பெரிய அவமானம்!

கன்றிக் கருத்து, கூனிக் குறுகிச் சிறுத்துப் போனது அவனது ஆறடித் தேகம்!

அன்று, என் காதலியின் கழுத்தில் தான் தாலியைக் கட்டினேன் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவன் இனி எப்படித் தந்தையின் முகத்தில் முழிப்பான்?

அண்ணிகளின் பரிதாபப் பார்வையை அவனால் சந்திக்க இயலுமா?

பார்ப்பவர்கள் அனைவருமே அவனைக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் பார்ப்பார்களே!

இனியும் தலையை நிமிர்த்தி அவனால் வெளியுலகில் நடமாட முடியுமா?

இந்த நினைவுகளே அவனைக் கொன்று குவித்தன!

ஆத்திரம், அவமானம், கேவலம் என்று எதிர்மறையான உணர்வுகள் அனைத்தும் ஒன்றாக அவனைத் தாக்கின!

என்றாவது ஒருநாள் எல்லாமே சரியாகிவிடும் என்று எதிர்பார்த்திருந்தவனின் ஆசைகள் நிராசையானது மட்டுமல்லாமல், அவனை அவள் தன் தேவைக்காகப் பயன்படுத்தியிருக்கிறாள் என்பதை நினைக்க நினைக்கக் கேவலமாக, அவமானமாக உணர்ந்தான்!

அற்பபுழுவைப் போல் தான் கீழிறங்கிவிட்டது போலிருந்தது அவனுக்கு!

அதோடு, வார்த்தைக்கு வார்த்தை இன்னொருவனோடு அவனை ஒப்பிட்டுக் கேவலமாகப் பேசியது அவன் தன்மானத்தை முற்றுமுழுதாகத் தாக்கியதில் மனம் வெகுண்டது தர்சனுக்கு!

அன்று காலையில் அவன் வாங்கிக்கொடுத்த ரோஜாவண்ணப் பட்டில் தயாராகிக் அவன் கண்முன்னால் அவள் வந்து நின்றபோது அவன் நெஞ்சம் தடுமாறியதே, அந்த நெஞ்சை அறுத்து எறியவேண்டும் போலிருந்தது!

தடுமாறும் மனதோடு அவளைத் தொடர்ந்துபார்த்தால் ரோசம் கெட்டு அவளை நெருங்கிவிடுவோமோ என்று பயந்து அறையை விட்டு வேகமாக வெளியேறியவனின் மனதில் குதூகலம் எட்டிப் பார்த்ததே, அந்த மனதை வெட்டிப் புதைக்கவேண்டும் போலிருந்தது!

அவளையும் அவள் நினைவுகளையும் சுமந்த இதயத்தைத் துடிக்கத் துடிக்க மார்பிலிருந்து பிடுங்கி எறியவேண்டும் போலிருந்தது!

இப்படிக் கேவலம் கெட்டவளையா அவன் காதலித்தான்? வீட்டினருக்கு முன்னால் குற்றவாளியாக நின்றாலும் பரவாயில்லை என்று ஒற்றைக்காலில் நின்று மணந்தான்?
 

Vishakini

Moderator
Staff member
அவன் மீதே அவனுக்கு ஆத்திரம் வந்தது!

இப்படி வெளியழகைப் பார்த்து மயங்கினோமே, உள்ளே சேரும் சகதியுமாக அல்லவா இருந்திருக்கிறது! ச்சே!

அடிபட்ட நாகமெனச் சீறிக்கொண்டிருந்தவனின் கைபேசி அவன் மனதின் எதிரொலியாய் அலறியது!

அதைக் காதிலேயே விழுத்தாது அந்த அறையிலேயே கூண்டுப் புலியென நடைபோட்டவனை, மீண்டும் மீண்டும் சினமேற்றியது கைபேசி!

ஆத்திரத்தை அடக்க முடியாமல், அதை எடுத்த எடுப்பிலேயே காதுக்குக் கொடுத்து, “என்ன?” என்று, அந்த ஒற்றை வார்த்தையை மூர்க்கத்தனமாகக் கடித்துத் துப்பினான் தர்சன்.

விமலன் தம்பியின் குரலில் இருந்த சினத்திலும் ஆத்திரத்திலும் திகைத்துத்தான் போனான்.

ஆனாலும், தன்னையே பார்த்தபடி கோபத்தோடு நிற்கும் தந்தையின் முகம் கண்ணிலாட, “என்னடா என்ன? உனக்காக நாங்கள் எல்லோரும் இங்கே காத்திருக்க நீயும் உன் மனைவியும் எங்கேயிருந்து என்ன செய்கிறீர்கள்? பொறுப்பு என்பதே கொஞ்சமும் இல்லையா உனக்கு? விரைவாக வாருங்கள். பதிவாளருக்கு நேரமாகிறது.” என்றான் அவன்.

அதுவரை ஆத்திரத்திலும் அவமானத்திலும் துடித்துக் கொண்டிருந்த தர்சனுக்கு அன்றைய தினத்தின் முக்கியத்துவம் அப்போதுதான் நினைவில் வந்தது.

அதுமட்டுமில்லை, அன்றைய தினத்தின் மகிழ்ச்சியைக் குலைக்க என்றே வெண்பா இப்படி நடந்துகொண்டிருக்கிறாள் என்பதும் உறைக்க, இரத்தக்கட்டியெனச் சிவந்திருந்த விழிகளை இறுக மூடித்திறந்து தன்னை முயன்று கட்டுப் படுத்தினான் தர்சன்.

“நீ ஒருக்கால் மேலே வா!” என்றான் இறுகிய குரலில் உத்தரவாக.

“சூழ்நிலை விளங்காமல் பேசாதே தர்சன்! அப்பா கோபத்தில் இருக்கிறார். எப்போதுமே உனக்கும் அப்பாவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பதே என் வேலையாகப் போயிற்று. நீ முதலில் வெண்பாவுடன் கீழே வா.” என்று தந்தைக்குக் கேட்காதவகையில் தாழ்ந்த குரலில் கோபத்தோடு சொன்னான் விமலன்.

“அவள் இருந்தால் தானே அவளோடு வருவதற்கு!” பட்டென எரிச்சலோடு அவன் சொல்ல,

“டேய்! என்னடா சொல்கிறாய்?” என்று அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தமாகவே கேட்டுவிட்டான் விமலன்.

“என்னவாம் அவன்?” அவனையே பார்த்திருந்த ராஜசேகர் கோபத்தோடு கேட்க, “அது.. ஒன்றுமில்லை அப்பா.” என்றவன், வேகமாக வீட்டுக்கு விரைந்தான்.

தர்சனின் அறைக்குள் நுழையும்போதே வெண்பாவை விழிகளால் தேடியபடி தம்பியின் முன்னால் சென்று நின்றான் விமலன். வேகமாக ஓடிவந்து மாடியேறியதில் மூச்சு வாங்க, “என்னடா சொன்னாய்?”என்று பதறிப்போய் அவன் தோள்களைப் பற்றிக் உலுக்கிக் கேட்டான்.

என் மனைவி இன்னொருவனுடன் ஓடிவிட்டாள் என்று சொல்லமுடியாமல் தமையனின் முன்னால் கூனிக்குறுகி நின்றவனுக்கு அவமானத்தில் இறந்துவிடலாமா என்றிருந்தது!

தமையனுக்கோ அவனது அமைதியும் அவன் நின்ற கோலமும் கிலியைக் கிளப்பியது. அந்தளவுக்குச் செத்துச் சுண்ணாம்பாகக் கிடந்தது தர்சனின் முகம்.

“சொல்லு தர்சா? என்ன நடந்தது? எங்கே வெண்பா?” என்று அவனைப் பிடித்து மீண்டும் உலுக்கினான்.

“என்னைக் கேட்டால்? எனக்கென்ன தெரியும்? அவள் எவனோடோ ஓடிப்போய்விட்டாள்.” என்றான் கொதிப்போடு.

“உளறாதே தர்சன்! நேரம் காலம் தெரியாமல் விளையாடாமல் அவள் எங்கே என்று சொல்லு!” என்ற தமையனின் பேச்சுத் தர்சனை உசுப்பேற்றியது.

“நான் எங்கே விளையாடுகிறேன்? அவள்தான் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டாள் அண்ணா..!” என்றவனுக்குக் குரல் அடைத்தது.

“என்னடா சொல்கிறாய்?” நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிர்ச்சியோடு விமலன் கேட்க, அதற்குப் பதில் சொல்லப் பிடிக்காமல் ஆத்திரத்தை அடக்கியபடி நின்றான் தர்சன்.

ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவன் தன் மனக்கொதிப்பை அடக்கிக்கொண்டு தமையனிடம் திரும்பினான். “இங்கே பார் அண்ணா! நம்மை இப்படி வேதனையில் துடிக்கவைக்க வேண்டும் என்பதுதான் அவள் எண்ணம்! அதை நடக்க விடக்கூடாது! நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது. ஆனால், அமலனின் ரிசப்சன் எந்தக் குறையும் இல்லாமல் நடந்து முடியவேண்டும். அது உன் பொறுப்பு!” என்றவன், புயலென அங்கிருந்து விரைந்தான்.

வீட்டிலிருந்து வெளியேறியவனின் மனதைப் போலவே
அவனது காரும் ஆவேசத்துடன் சீறிப் பாய்ந்தது.

 
Top Bottom