• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 11

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-11


விமலனும் அமலனும் தர்சனின் முன்னால் அமர்ந்திருந்தனர். அவனோ அவர்கள் இருவரையும் கவனியாது எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

அவனது அடர்ந்த சிகை கலைந்துகிடக்க, சிவப்பேறிக் கிடந்த விழிகள் ஆத்திரத்திலும் அவமானத்திலும் கொப்பளிக்க முகத்திலோ மூன்று நாள் தாடி வளர்ந்து கிடந்தது.

கைபேசியையும் அணைத்துவிட்டு இந்த மூன்று நாட்களாக வீட்டுப் பக்கமே வராமல் அவர்களது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய தோட்ட வீட்டிலேயே அடைந்து கிடந்தவனைப் பார்க்கையில் வலித்தது அவர்களுக்கு.

எவ்வளவு கம்பீரமானவன்! எப்போதுமே அவனிடம் ஒருவிதப் பிடிவாதம், அழுத்தம், ஆளுமை, நிமிர்வு நிறைந்திருக்கும்!

இன்றோ அனைத்தையும் இழந்து வேரறுந்த மரத்தைப் போன்று வாடி வதங்கிக் கிடந்தான். தங்களின் தம்பியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வெண்பாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது தமையன்களுக்கு.

அமலன் தமையனைப் பார்த்து கண்ணசைக்க, ஆமோதிப்பாகத் தலையை அசைத்த விமலன், “தர்சா..” என்றான் மெல்ல.

அவனிடம் எந்தவித அசைவும் இல்லை.

அமலனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “டேய் தர்சா! இங்கே பார்!” என்று தம்பியின் முகத்தைப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பினான் விமலன்.

“என்னடா கோலம் இது? ஏன்டா இப்படி வீட்டுக்கும் வராமல் இங்கேயே இருக்கிறாய்?” என்று கேட்டவன், அங்கிருந்த மதுபானப் போத்தல்களைக் கையால் கட்டி, “இதையெல்லாம் எப்போதிருந்து பழகினாய் தர்சன்? குடிப்பதற்கு எப்போது சாட்டுக் கிடைக்கும் என்று காத்திருந்தாயா? அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்.” என்று சற்றே கோபத்தோடு கேட்டான்.

ஆரணியின் குடும்பத்தவர்கள் வீட்டில் இருந்ததாலும், தர்சனுக்கும் தனிமை தேவை என்று எண்ணியதாலும் இந்த மூன்று நாட்களும் அவனை இங்கேயே இருக்க விட்டிருந்தான் விமலன். ஆனாலும் அவனைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர் இருவரும். அது மட்டும் அல்லாது, அங்கிருந்த காவலாளியிடம் கூட அவனைப் பார்த்துக்கொள்ளச் சொன்னவர்கள், அவ்வப்போது அவனுக்கு அழைத்து விசாரிக்கவும் தவறவில்லை.

ஆரணியின் பெற்றோர் கிளம்பிச் சென்றதும் அவனை எப்படியாவது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்கிற பிடிவாதத்துடன் வந்துவிட்டார்கள் இருவரும்.

தமையனின் பேச்சைக் கேட்ட தர்சனின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தது. “வீட்டுக்கு வந்து என்ன செய்யச் சொல்கிறாய்? எல்லோர் முன்னாலும் அவமானப்பட்டு, கூனிக் குறுகி நிற்கச் சொல்கிறாயா?” என்று கேட்டான் அவன்.

“அப்படிக் கூனிக்குறுகி நிற்கும் அளவுக்கு நாங்கள் என்ன உனக்கு யாரோவா? அங்கிருப்பது உன்னுடைய அம்மா அப்பாவும் உன் குடும்பமும். உனக்கு ஒன்று என்றால் அது எங்களுக்கும் தான். இதிலே யார் யாருக்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பது? அதோடு, அவமானமும் கேவலமும் அவளுக்குத்தான். உனக்கில்லை! உனக்கு என்னடா? நீ ஆண்பிள்ளை. நீ என்ன பிழை செய்தாய் என்று இப்படி முடங்கிக் கிடக்கிறாய்?” என்று கோபப்பட்டான் அமலன்.

அமலனைத் திரும்பிப் பார்த்தான் தர்சன். “உன்னையும் கட்டிக்கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லைடா.” என்றான் சம்மந்தமே இல்லாமல்.

சகோதரர்கள் இருவரும் இறுகிய முகத்தோடு கேள்வியாக அவனைப் பார்த்தனர்.

“நம் குடும்பத்தையும் என்னையும் பழிவாங்கவே உன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் சொல்லியிருக்கிறாள். மற்றும்படி, அவள் நம் வீட்டிலிருந்து நல்ல பிள்ளைக்கு நடித்திருக்கிறாள். இப்போது மனச்சாட்சியே இல்லாமல் இன்னொருவனுக்கு மனைவியாகிவிட்டாள்.” என்று வெறுப்பும் அருவருப்புமாகச் சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தனர் இருவரும்.

அன்று, “அவள் யாருடனோ ஓடிவிட்டாள்.” என்றும், “எப்படியாவது அமலனின் ரிசப்ஷன் நன்றாக நடந்து முடியவேண்டும். அது உன் பொறுப்பு!” என்றும் மொட்டையாகச் சொல்லிவிட்டு தர்சன் சென்றதும், அடுத்து என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாது கணநேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் விமலன். அடுத்தக் கணமே தான் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை ஒருவித சிரமத்துடன் உணர்ந்துகொண்டான்.

உடனேயே அங்கே உடைந்து சிதறிக் கிடந்த கணினியை அப்புறப் படுத்திவிட்டு, கசக்கி எறியப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து வேறு யாரினதும் கண்ணில் படாத வகையில் தர்சனின் கப்போர்ட்டுக்குள் மறைவாக வைத்தான்.

அது வெண்பா எழுதிய கடிதம் என்பதை ஊகிக்க முடிந்தாலும் பிரித்துப் படிக்க விரும்பவில்லை அவன். என்ன இருந்தாலும் அது தம்பியின் தனிப்பட்ட விஷயம் அல்லவா.

விசயத்தைச் சொன்னபோது ஆத்திரத்தில் வெகுண்ட தந்தையைச் சமாளித்து, கண்ணீரோடு பரிதவித்த அன்னையைத் தேற்றி, அழுது புலம்பிய அத்தையை ஆறுதல்படுத்தி, மேடையில் அமர்ந்திருந்த அமலனின் கேள்விகளுக்குத் திக்கித் திணறிப் பதில் சொல்லி, போதாக்குறைக்கு “எங்கே தர்சன்? அவன் திருமணத்தையும் பதிவதாகச் சொன்னீர்களே?” என்று விசாரித்த உற்றார் உறவினர்களுக்கும் பதில் சொல்லி என்று அமலனின் ரிசப்ஷனை நடத்தி முடிப்பதற்குள் செத்துப் பிழைத்துவிட்டான் விமலன்.

இவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தாலும், நடந்தவை என்ன என்று முற்று முழுதாகத் தெரியாத விமலனுக்கும் அமலனுக்கும் தர்சன் சொன்ன விஷயம், அதுவும் அவள் இப்போது இன்னொருவனின் மனைவி என்ற விஷயம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“உனக்கு எப்படித் தெரியும்? அவள் கோபத்தில் பொய் சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான் விமலன்.

“அவள் சொன்னதை மட்டும் நம்பிக்கொண்டு தேவதாசாக இருக்க என்னை என்ன அந்தளவுக்குக் கையாலாகதவன் என்று நினைத்தாயா?” என்று சீறினான் தர்சன்.

“என்னடா செய்தாய்?” என்று விமலன் கேட்க, “அவளைக் கண்டுபிடித்து, கொல்லும் ஆத்திரத்துடன் கொழும்புக்கே ஆள் அனுப்பி விசாரித்தேன். அவள் சொன்னது போல, அங்கே ஒரு சிங்களவனுடன் அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்ததுமே அருவருத்துப் போய்விட்டது எனக்கு. அத்தையின் மகள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவளை உயிருடன் விட்டு வைத்திருக்கிறேன். இல்லையானால்..!!” என்றபடி ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவனின் முகத்தில் ஜொலித்த கோபாக்கினியில் சகோதரர்களே சற்று அஞ்சிப்போயினர்.

“உனக்கு எப்படிடா தெரியும் அவள் கொழும்புக்குத்தான் போனாள் என்று?”

“கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தானே!” என்றான் தர்சன்.

“எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னையே ஏமாற்றி இருப்பாள். எவ்வளவு கேவலம்!” என்று சுயவெறுப்பில் கொதித்தவனின் மனதை அறிந்துகொண்டனர் சகோதரர்கள்.

அதோடு, மூன்று நாட்கள் கடந்தும் அவனிடம் ஒரு தெளிவோ அல்லது நடந்தது நடந்து முடிந்துவிட்டது என்கிற எண்ணமோ இல்லை என்பது புலனானது.

எனவே அவனை இப்படியே விடுவது நல்லதில்லை என்று உணர்ந்து, “உன்னைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனவளைப் பற்றி நீயெதற்கு யோசிக்கிறாய். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இதற்காக அவள் வருந்துவாள். அதனால் நீ எழும்பு, எழும்பி வா வீட்டுக்குப் போகலாம். இங்கேயே கிடந்து இப்படிக் குடித்தது எல்லாம் போதும். அங்கே அம்மாவும் அத்தையும் அழுதே கரைகிறார்கள்.” என்றான் அமலன்.

அப்போதும் அசையாமல், மனதின் ஆத்திரம் அடங்காமல் இருந்தவனைப் பார்த்துவிட்டு, “டேய்! அமலன் சொன்னது உன் காதில் விழவில்லை. வா, வீட்டுக்குப் போகலாம்!” என்றான் விமலன்.

“ப்ச்! நான் வரவில்லை!”

“ஏன்?”

அவன் பதில் சொல்லாது இருக்க, “உன்னைத்தான் கேட்கிறேன் தர்சன். ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று அதட்டினான் அண்ணன்.

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரச் சொல்கிறாய்? அப்பாவின் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? அன்று அவளுக்காக அவரோடு சண்டைக்கு நின்றேனே.. நினைக்கவே வெறுப்பாக இருக்குடா அண்ணா..” என்றவனின் குரலில் இருந்த வலியில் சகோதரர்கள் இருவருமே துடித்துப் போயினர்.

“டேய் தர்சா! என்னடா இது? அவர் நம் அப்பாடா! உன் மீது இருந்த பாசத்தில் தானே, இப்படிச் செய்துவிட்டாயே என்று அன்று கோபப்பட்டார். அவரிடம் போய் ரோசம் பாராட்டலாமா? வாய்விட்டுக் கேட்காவிட்டாலும் நாங்கள் போனதும் அவரது கண்கள் கேட்கும், நீ எங்கே என்று. நாங்கள் சொல்வதைக் கேள் தர்சன். வீட்டுக்கு வா..” என்றான் அமலன் தர்சனின் அருகில் அமர்ந்து, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தபடி.

தன் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையின் பாசத்தை எண்ணித் துயர் கொண்ட அந்தக் கம்பீரமான ஆண்மகனின் விழிகள் கூட மெலிதாகக் கலங்கின. அவமானம் ஒருபுறம் என்றால் குற்ற உணர்ச்சி மறுபுறம் நின்று அவனைத் தாக்கியது.

“பிறகு வருகிறேன்.” என்றான்.

எவ்வளவு சொல்லியும் வருகிறான் இல்லையே என்கிற கோபத்தில், “உன்னைப் பற்றியே நினைத்துக் கவலைப்படும் எங்கள் எல்லோரையும் விட ஓடிப்போனவள் தான் உனக்குப் பெரிதாகத் தெரிகிறாளோ?” என்றான் அமலன்.

தர்சனோ அவனை முறைத்தான். “உன்னிடம் சொன்னேனா நான் அவளைப் பற்றித்தான் யோசிக்கிறேன் என்று? இனி யாரும் என்னிடம் அவளைப் பற்றிப் பேசக்கூடாது சொல்லிவிட்டேன்! இப்போது என்ன? நான் வீட்டுக்கு வரவேண்டும், அவ்வளவுதானே! இன்று மாலை வருகிறேன்!” என்றவனை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தார்கள் சகோதரர்கள்.

“டேய்! நம்புங்கடா. கட்டாயம் வருவேன். இப்போது என்னைக் கொஞ்சம் தனியாக விட்டுவிட்டுப் போங்கடா!” என்றான் எரிச்சலும் இயலாமையுமாக.

“சரி! உன் பேச்சைக் கேட்டுப் போகிறோம். மாலை நீ வரவில்லை என்றால், என்ன ஆனாலும் சரிதான் என்று அப்பா, அம்மா, அத்தை என்று எல்லோரையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிடுவேன். எல்லோரும் பார்க்கட்டும் நீ இங்கிருந்து என்ன செய்கிறாய் என்று.” என்று, அங்கு நிலத்தில் உருண்டு கிடந்த போத்தல்களைக் காட்டிச் சொல்லிவிட்டு அமலனுடன் வெளியேறினான் விமலன்.


மஞ்சுளா வாசலுக்கு வருவதும், வீதியில் மகனின் கார் தென்படுகிறதா என்று பார்ப்பதும், உள்ளே போவதும் என்று ஓரிடத்தில் நில்லாமல் பரபரப்பும் எதிர்பார்ப்புமாக நடை பயின்றுகொண்டிருந்தார்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“என்னடா செய்தாய்?” என்று விமலன் கேட்க, “அவளைக் கண்டுபிடித்து, கொல்லும் ஆத்திரத்துடன் கொழும்புக்கே ஆள் அனுப்பி விசாரித்தேன். அவள் சொன்னது போல, அங்கே ஒரு சிங்களவனுடன் அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்ததுமே அருவருத்துப் போய்விட்டது எனக்கு. அத்தையின் மகள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவளை உயிருடன் விட்டு வைத்திருக்கிறேன். இல்லையானால்..!!” என்றபடி ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவனின் முகத்தில் ஜொலித்த கோபாக்கினியில் சகோதரர்களே சற்று அஞ்சிப்போயினர்.

“உனக்கு எப்படிடா தெரியும் அவள் கொழும்புக்குத்தான் போனாள் என்று?”

“கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தானே!” என்றான் தர்சன்.

“எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னையே ஏமாற்றி இருப்பாள். எவ்வளவு கேவலம்!” என்று சுயவெறுப்பில் கொதித்தவனின் மனதை அறிந்துகொண்டனர் சகோதரர்கள்.

அதோடு, மூன்று நாட்கள் கடந்தும் அவனிடம் ஒரு தெளிவோ அல்லது நடந்தது நடந்து முடிந்துவிட்டது என்கிற எண்ணமோ இல்லை என்பது புலனானது.

எனவே அவனை இப்படியே விடுவது நல்லதில்லை என்று உணர்ந்து, “உன்னைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனவளைப் பற்றி நீயெதற்கு யோசிக்கிறாய். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இதற்காக அவள் வருந்துவாள். அதனால் நீ எழும்பு, எழும்பி வா வீட்டுக்குப் போகலாம். இங்கேயே கிடந்து இப்படிக் குடித்தது எல்லாம் போதும். அங்கே அம்மாவும் அத்தையும் அழுதே கரைகிறார்கள்.” என்றான் அமலன்.

அப்போதும் அசையாமல், மனதின் ஆத்திரம் அடங்காமல் இருந்தவனைப் பார்த்துவிட்டு, “டேய்! அமலன் சொன்னது உன் காதில் விழவில்லை. வா, வீட்டுக்குப் போகலாம்!” என்றான் விமலன்.

“ப்ச்! நான் வரவில்லை!”

“ஏன்?”

அவன் பதில் சொல்லாது இருக்க, “உன்னைத்தான் கேட்கிறேன் தர்சன். ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று அதட்டினான் அண்ணன்.

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரச் சொல்கிறாய்? அப்பாவின் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? அன்று அவளுக்காக அவரோடு சண்டைக்கு நின்றேனே.. நினைக்கவே வெறுப்பாக இருக்குடா அண்ணா..” என்றவனின் குரலில் இருந்த வலியில் சகோதரர்கள் இருவருமே துடித்துப் போயினர்.

“டேய் தர்சா! என்னடா இது? அவர் நம் அப்பாடா! உன் மீது இருந்த பாசத்தில் தானே, இப்படிச் செய்துவிட்டாயே என்று அன்று கோபப்பட்டார். அவரிடம் போய் ரோசம் பாராட்டலாமா? வாய்விட்டுக் கேட்காவிட்டாலும் நாங்கள் போனதும் அவரது கண்கள் கேட்கும், நீ எங்கே என்று. நாங்கள் சொல்வதைக் கேள் தர்சன். வீட்டுக்கு வா..” என்றான் அமலன் தர்சனின் அருகில் அமர்ந்து, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தபடி.

தன் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையின் பாசத்தை எண்ணித் துயர் கொண்ட அந்தக் கம்பீரமான ஆண்மகனின் விழிகள் கூட மெலிதாகக் கலங்கின. அவமானம் ஒருபுறம் என்றால் குற்ற உணர்ச்சி மறுபுறம் நின்று அவனைத் தாக்கியது.

“பிறகு வருகிறேன்.” என்றான்.

எவ்வளவு சொல்லியும் வருகிறான் இல்லையே என்கிற கோபத்தில், “உன்னைப் பற்றியே நினைத்துக் கவலைப்படும் எங்கள் எல்லோரையும் விட ஓடிப்போனவள் தான் உனக்குப் பெரிதாகத் தெரிகிறாளோ?” என்றான் அமலன்.

தர்சனோ அவனை முறைத்தான். “உன்னிடம் சொன்னேனா நான் அவளைப் பற்றித்தான் யோசிக்கிறேன் என்று? இனி யாரும் என்னிடம் அவளைப் பற்றிப் பேசக்கூடாது சொல்லிவிட்டேன்! இப்போது என்ன? நான் வீட்டுக்கு வரவேண்டும், அவ்வளவுதானே! இன்று மாலை வருகிறேன்!” என்றவனை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தார்கள் சகோதரர்கள்.

“டேய்! நம்புங்கடா. கட்டாயம் வருவேன். இப்போது என்னைக் கொஞ்சம் தனியாக விட்டுவிட்டுப் போங்கடா!” என்றான் எரிச்சலும் இயலாமையுமாக.

“சரி! உன் பேச்சைக் கேட்டுப் போகிறோம். மாலை நீ வரவில்லை என்றால், என்ன ஆனாலும் சரிதான் என்று அப்பா, அம்மா, அத்தை என்று எல்லோரையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிடுவேன். எல்லோரும் பார்க்கட்டும் நீ இங்கிருந்து என்ன செய்கிறாய் என்று.” என்று, அங்கு நிலத்தில் உருண்டு கிடந்த போத்தல்களைக் காட்டிச் சொல்லிவிட்டு அமலனுடன் வெளியேறினான் விமலன்.


மஞ்சுளா வாசலுக்கு வருவதும், வீதியில் மகனின் கார் தென்படுகிறதா என்று பார்ப்பதும், உள்ளே போவதும் என்று ஓரிடத்தில் நில்லாமல் பரபரப்பும் எதிர்பார்ப்புமாக நடை பயின்றுகொண்டிருந்தார்.

மகேஸ்வரியோ ஒரு மூலையில் சுவரோடு சுவராக ஒன்றிக்கொண்டு கண்களைத் துருத்தும் கண்ணீரைத் துடைத்தபடி, மகள் செய்த செயலால் மருமகனின் முகத்தை எப்படிப் பார்க்கப் போகிறேன் என்று உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் இரவு பொழுதை நெருங்குகையிலேயே வீட்டுக்கு வரும் ராஜசேகர் கூட அன்று நேரத்தோடு வந்துவிட்டார். இதற்காகத்தான் வந்தேன் என்று அவர் சொல்லாதபோதும் மகனைக் காணும் தவிப்பிலேயே வந்திருக்கிறார் என்பது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.

ராகினியோடு சேர்ந்து வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஆரணி கூட அவ்வப்போது வாசலையும், கணவனையும் பார்த்தபடி இருந்தாள்.

இப்படி எல்லோரையும் காக்கவைத்த தர்சனோ மாலை மங்கி இருள் மெல்ல மெல்ல கவியத் தொடங்கியும் வரவில்லை.

எல்லோரின் விழிகளும் ‘வருவானா?’ என்கிற கேள்வியைத் தாங்கி விமலனைப் பார்க்க, அவனோ பல்லைக் கடித்தான். பின்னே, அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே அவன்!

பொறுமையிழந்து தர்சனுக்கு அழைத்துப் பார்ப்போம் என்று எண்ணியபடி அமலன் தன் கைபேசியை எடுக்க, தர்சனின் கார் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தது.
 

Vishakini

Moderator
Staff member
அதன் ஒலி கேட்டதும் அழுகையும் ஆவலுமாகக், “கண்ணா.. தர்சா..” என்றபடி வாசலுக்கு ஓடினார் மஞ்சுளா.

அவரின் பின்னால் முழுக்குடும்பமும் செல்ல, ராஜசேகர் மட்டும் இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. அவரது விழிகள் மட்டும் மகனின் காரையே பார்த்திருந்தன.

காரைவிட்டுத் தட்டுத்தடுமாறி இறங்கிய தர்சன், “அம்..மா..” என்றான் கோணல் சிரிப்புடன்.

உள்ளே சென்றிருந்த மதுவினால் வியர்த்து வழிந்த முகத்துடன், ஷர்ட்டின் மேல் பட்டன்கள் திறந்துகிடக்க, நிற்கமுடியாமல் தள்ளாடித் தடுமாறிக் காரையே பற்றிக்கொண்டு நின்றவனைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து நின்றுவிட்டனர்.

தன் மகனா இது? என்று நம்ப இயலாமல் அப்படியே திகைத்து நின்றார் மஞ்சுளா.

விமலன் அவசரமாகத் தந்தையைத் திரும்பிப் பார்க்க அவரும் கடினப்பட்ட முகத்துடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அமலனிடம் கண்ணசைத்துவிட்டு வேகமாகத் தந்தையை நெருங்கினான் விமலன். “கவலையில், அவமானத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் குடித்திருக்கிறான் அப்பா. தயவுசெய்து இப்போது அவனைத் திட்டிவிடாதீர்கள். என்ன சொல்வதாக இருந்தாலும் அவன் நிதானத்தில் இருக்கும்போது சொல்லுங்கள்.” என்றான் கெஞ்சலாக..

“நான் அவனுக்கு அப்பாடா! அதை மறந்துவிடாதே நீ. போ, போய் அவனை அவன் அறைக்குக் கூட்டிக்கொண்டு போ. ஆனால், இது தொடரக்கூடாது விமலன்!” என்று, தந்தையின் பாசத்தைக் காட்டிய அதேவேளை கண்டிப்பையும் காட்டத் தவறவில்லை அவர்.

அதுவே போதுமாக இருந்தது விமலனுக்கு.

தமையனின் பார்வையின் பொருளறிந்த அமலன் தர்சனை கைப்பிடியாகப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே வர, மறுபுறம் சென்று தம்பியைத் தாங்கினான் விமலன்.

“டேய்! விடுங்கடா. என்னை ஏன்டா பிடிக்கிறீர்கள்..” என்றவனின் வார்த்தைகள் குளறின.

“வாயை மூடிக்கொண்டு வாடா விசரா! காலையில் அவ்வளவு சொல்லியும் குடித்துவிட்டு வந்திருக்கிறாயே, அறிவிருக்கா உனக்கு? உள்ளே அப்பா நிற்கிறார்.” என்று, அமலன் தர்சனின் காதுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும், விலுக்கென்று நிமிர்ந்து தந்தையை நோக்கினான் தர்சன். அவன் விழிகள் அவர் விழிகளைச் சந்தித்தது ஒரு நொடிதான். அடுத்தகணம் தலை தாழ்ந்தது.

அதற்குமேல் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் தலையைக் குனிந்தபடி அவன் நிற்க, மற்ற இருவரும் அன்றைக்குப் போன்று இன்றும் கோபப் பட்டுவிடுவாரோ என்கிற தவிப்புடன் தந்தையைப் பார்த்தனர்.

தன் முன்னால் நிற்கும் மூன்று மக்களையும் அப்படியொரு கோலத்தில் கண்டவருக்கு நெஞ்சடைத்தது. அதற்குமேலும் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தார் ராஜசேகர்.

தர்சனை தமையன்கள் இருவரும் மேலே அழைத்துச் செல்ல, அதுவரை நேரமும் தான் செல்லமாக வளர்த்த மகனின் நிலையை எண்ணி ஸ்தம்பித்து நின்ற மஞ்சுளா அப்படியே தளர்ந்து நிலத்தில் சரிந்தார்.
“ஐயோ.. ராசா மாதிரி இருந்த என் பிள்ளை இப்படியாகிவிட்டானே..” என்று கண்களில் கண்ணீர் வழிய அரற்றத் தொடங்கினார்.

மகேஸ்வரியின் நிலையோ படு மோசமாக இருந்தது. “என்னால் தான் அண்ணி எல்லாமே. நான் இங்கே வந்தே இருக்கக்கூடாது! அவளை என் அண்ணன் மகனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டுக் கடைசிக் காலத்தை அண்ணாவோடு கழிக்கலாம் என்று நினைத்தேனே. என் நினைப்பில் மண் அள்ளிக் கொட்டியதும் இல்லாமல் இப்படித் தர்சனின் வாழ்க்கையையும் நாசமாக்கி விட்டாளே! எல்லாம் என்னால்தான் வந்தது. நான் ராசியில்லாதவள் அண்ணி. கட்டிய கணவனோடு வாழவும் கொடுத்து வைக்கவில்லை. மகளையும் ஒழுங்காக வளர்க்கவில்லை. என் மருமகனையும் இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டேனே.. அவள் நன்றாகவே இருக்கமாட்டாள் அண்ணி. பெற்ற வயிறு எரியச் சொல்கிறேன் பாருங்கள், அவள் நன்றாகவே இருக்கமாட்டாள்!” விமலனின் வாயிலாக மகளின் திருமணத்தைப் பற்றி அறிந்துகொண்ட மகேஸ்வரி ஆத்திரத்திலும் அழுகையிலும் தன் கவலைகளைக் கொட்டித் தீர்த்தார்.

மஞ்சுளாவோ எந்தப் பதிலும் சொல்லாமல் கண்ணீர் வடித்தார். மகேஸ்வரி வராமல் இருந்திருக்க இதெல்லாம் நடந்திராதோ என்று அவராலும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஆனால், அவரின் வயதுக்கே உண்டான முதிர்வும், நிதானமும் அதை மனதோடு மட்டுமே நினைக்க வைத்தது.

அந்த வீட்டுக்குப் புதியவள் என்பதால் பதட்டத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் ஆரணி நிற்க, “இப்போது எதற்கு அழுகிறீர்கள்? அதுதான் தர்சன் வீட்டுக்கு வந்துவிட்டாரே. இனி எல்லாம் சரியாகிவிடும். அதனால் முகத்தைத் துடையுங்கள்.” என்றாள் ராகினி அக்கறையும் அதட்டலுமாக.

அங்கே அறையில் மதுவின் ஆதிக்கத்தில் இருந்த தர்சன் புலம்பத் தொடங்கினான்.

“போயும் போயும் ஒரு துரோகியைக் காதலித்தேனே. நம்பிக்கைத் துரோகி! டேய் கண்ணாடி, இந்தப் பெண்களே இப்படித்தான்டா. நம்பவைத்துக் கழுத்தை அறுத்து விடுவாளுகள். எல்லாம் சரியாகிப் போகும், என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்பாள்.. நானும் எல்லோரையும் போலச் சந்தோசமாக இருக்கலாம் என்று கனவு கண்டேனேடா.. எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டாளே..” என்று அரற்றியவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாது மௌனமாக இருந்தனர் சகோதரர்கள்.

அதோடு, ஆறுதல் சொன்னாலும் அதைக் கேட்கும் நிலையில் அவனும் இல்லையே! எனவே மனதில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என்று காத்திருந்தனர்.
 

Vishakini

Moderator
Staff member
“எனக்குக் காதலைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியாதாம்டா. நான் காட்டுமிராண்டியாம்.” என்றவன், கட்டிலில் இருந்து தடுமாறி எழ முயன்றபடி, “டேய் அண்ணா! நீ சொல்லுடா, நான் காட்டுமிராண்டியா? உன் தம்பி காட்டுமிராண்டியா? சொல்லுடா?” என்று விமலனிடம் கேட்டான்.

“அவள் தான்டா காட்டுமிராண்டி. மானம் மரியாதையைப் பற்றி யோசிக்காமல் ஒழுக்கம் கெட்டு வீட்டை விட்டு ஓடிப்போன அவள்தான் காட்டுமிராண்டி!” என்றான் அமலன் ஆத்திரத்துடன்.

தர்சனின் புலம்பலுக்குக் அவன் ஏற்றிக்கொண்ட போதைதான் காரணம் என்றாலும், மனதில் இருப்பதுதானே வாயில் வரும். அப்படித் தம்பியை தவிக்க விட்டவளை நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது அமலனுக்கு.

விரக்தி கலந்த ஏளனச் சிரிப்பை இதழோரம் தவழவிட்டு, “என்னை விட அந்த.. அந்த..” என்றவனுக்கு, பெயர் நினைவில் வராமல் போகவே, “அந்தச் சிங்களவன் தான் நல்லவனாம். அவன்தானாம் காதல் மன்னனாம். ஏன்டா கண்ணே மணியே என்றால் மட்டும்தான் இவள் உருகுவாளா? அவளுக்குப் பின்னால் நாய் மாதிரி அலைந்தால் தான் காதலிப்பாளா? நெஞ்சு நிறைய ஆசை இருந்ததேடா.. காதல் இருந்ததேடா.. அதையெல்லாம் சொல்லத்தான் நானும் நினைத்தேன். ஆனால் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் போச்சேடா.. அதுக்கு நான் என்னடா செய்ய?” என்று கேட்டான்.

“நான் வாழ்க்கையில் தோற்றுப் போனேனா அண்ணா? சொல்லுடா? அவளுக்கும் மனம் இருக்கும். அதில் கோபமும் இருக்கும். அந்தக் கோபம் ஆறட்டும் என்று காத்திருந்தேனே.. மனம் மாறி என்னிடம் வருவாள் என்று நினைத்தேனே. இப்படி மனதில் வன்மத்தை வளர்த்து வைத்திருக்கிறாள் என்று தெரியாமல் போச்சேடா..

“அவளை விட்டு வைத்தது தான்டா தப்பு. அவள் சொன்னதுபோலக் காட்டுமிராண்டியாக நடந்து, அவளை என் பிள்ளைக்கு அம்மா ஆக்கியிருந்தால் இப்படி ஓடியிருப்பாளா? இல்லைதானே? இனியாவது எல்லாம் அவள் விருப்பப்படி நடக்கவேண்டும் என்று நினைத்தது தான்டா பிழை. அதைச் செய்திருக்க அடங்கி ஒடுங்கி இருந்திருப்பாள் தானே.” என்றவனின் குமுறலைத் தாங்கமுடியாமல் வெடித்தான் அமலன்.

“இப்போது இப்படிப் புலம்புபவன் அதையாவது செய்து தொலைத்திருக்க வேண்டியது தானேடா. ஏன்டா அவளை விட்டுவைத்தாய்?” என்று ஆத்திரத்தில் கேட்டான்.

அவ்வளவு நேரமும் தன் பாட்டில் குமுறிக் கொண்டிருந்தவன் அமலனைப் பார்த்து, “ஏன்டா, நான் ஒரு அப்பனுக்குப் பிறக்கவில்லையா?” என்று கேட்டான்.

பொறுமைசாலியான விமலனே அதிர்ந்துபோய்த் தர்சனைப் பார்க்க, அமலனோ தர்சனை அடிக்கக் கையை ஓங்கியே விட்டான். அதற்கிடையில் அவனைத் தடுத்த விமலன், “கொஞ்சம் பொறுமையாக இரு அமலா. அவன் போதையில் பேசுகிறான்.” என்றான் சமாதானப்படுத்தும் விதமாக.

“என்ன அண்ணா போதை? குடித்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசுவானா இவன்?” என்று தமையனிடம் கோபத்தோடு கேட்டவன், “இதற்கு மேல் எதையாவது உளறினாய் என்றால் கட்டாயம் அறைந்துவிடுவேன் தர்சன். வாயை மூடிக்கொண்டு படு! எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. குடித்துவிட்டு என்னவெல்லாம் பேசுகிறாய் நீ? உன் ஆட்டத்துக்குத் தேவையில்லாமல் அப்பாவை இழுக்காதே!” என்றான் சுட்டுவிரலை நீட்டி எச்சரிப்பாக.

அமலனின் கோபத்தில் சற்றும் கலங்காதவனாய், “உனக்கே இவ்வளவு கோபம் வருகிறதே. இதை அவள் என்னிடம் சொன்னபோது எனக்கு எப்படி இருந்திருக்கும்? பிறகு எப்படிடா அவளைத் தொடுவேன்?” என்று வேதனையும் விரக்தியுமாகக் கேட்டவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் சகோதரர்கள்.

அவனை விட்டு ஓடியதும் அல்லாமல் மனதளவில் அவனுக்கு மரணகாயத்தை உண்டாக்கியும் இருக்கிறாள் என்பது அப்போதுதான் புரிந்தது அவர்களுக்கு!

“ஒரு பெண் இப்படி எல்லாமா பேசுவாள்? கேட்கவே அசிங்கமாக இருக்கிறது. ச்சே!” என்றான் அமலன் வெறுப்புடன்.

“நடந்து முடிந்தவைகளைப் பற்றி இப்போ கதைத்து என்ன பிரயோசனம் அமலன். அதனால் கொஞ்சம் அமைதியாக இரு. தர்சா.. நீ தூங்கு. நாம் காலையில் பேசலாம்..” என்றவன், “சாப்பிட்டுவிட்டாயா?” என்று தர்சனிடம் கேட்டான்.

“ம்ம்..”

“சரி.. நீ தூங்கு..”

“இனி உறக்கம் எல்லாம் என் அருகில் கூட வராது..” என்றவனின் விழிகள், அவனையும் மீறியே சொக்கின.

“அதெல்லாம் வரும். நீ கொஞ்ச நேரம் அமைதியாகக் கண்ணை மூடிக்கொண்டு படுத்திரு!” என்றான் விமலன்.

“ம்ம்...” மனதில் இருப்பதைக் கொட்டியதாலா, மூன்று நாட்களாக அவனுக்குக் கிட்டாத தூக்கத்தின் சோர்வினாலா அல்லது இரண்டும் சேர்ந்ததாலோ என்னவோ தர்சனின் விழிகளும் மெல்ல மெல்ல மூடின.

அவன் உறங்கிவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு கீழே இறங்கிச் சென்ற விமலனும் அமலனும் அங்கே சோபாவில் அமர்ந்திருந்த ராகினி மற்றும் ஆரணியிடம் சென்று, “எங்கே எல்லோரும்?” என்று விசாரித்தார்கள்.

“அத்தைக்கும் அம்மாவுக்கும் பாலோடு கலந்து தூக்கமாத்திரை கொடுத்துவிட்டேன். அதனால் உறங்கிவிட்டார்கள். மாமாவும் அறைக்குப் போய்விட்டார்.” என்று பதிலிறுத்தாள் ராகினி.

“நீயும் போ.. போய்த் தூங்கு..” என்றான் அமலன் தன் மனைவிடம்.

சரியெனத் தலையை அசைத்துவிட்டு ஓரடி எடுத்து வைத்தவள் தயங்கி நின்று அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் விழிகளோ நீங்கள் வரவில்லையா என்று கேட்காமல் கேட்டது.

அது விளங்கினாலும் அங்கேயே நின்றான் அமலன்.

“நீயும் போடா. நேரமாகிவிட்டது பார்.” என்றான் விமலன்.

“நேரமானால் என்ன அண்ணா. பிறகு போகிறேன்..” என்று
விட்டுச் சோபாவில் சோர்வோடு அமர்ந்துகொண்டான் அமலன்.
 

Vishakini

Moderator
Staff member
“பால் கொண்டுவருகிறேன். அதைக் குடித்துவிட்டுப் போங்கள்.” என்று அமலனிடம் ராகினி சொல்ல, “தூக்க மாத்திரை கலக்காத பால் கொண்டுவா.” என்றான் விமலன் வேண்டுமென்றே.

அதைக் கேட்டதும் அங்கிருந்த மூவரின் முகத்திலும் மெல்லிய புன்னகை அரும்பியது. அதுவரை கனத்துக் கிடந்த அவர்களின் மனதுக்கு அது இதமாக இருந்தது.

“தூக்க மாத்திரைக்குப் பதிலாகப் பேதி மாத்திரையைக் கலந்துகொண்டு வருகிறேன். அப்போதுதான் நீங்கள் அடங்குவீர்கள்.” என்றுவிட்டு சமையலறைக்குச் சென்றாள் ராகினி.

அவள் சென்றதும், “ஏன்டா, நீ நடந்துகொள்ளும் முறை உனக்கே நல்லாயிருக்கா?” என்று கேட்டான் விமலன்.

“நான் என்ன அண்ணா செய்தேன்?” கேள்வியின் பொருள் விளங்காமல் கேட்டான் அமலன்.

“எதையும் என்னிடம் மறைக்கப் பார்க்காதே அமலா. உன் வாழ்க்கைக்கும் தர்சனுக்கும் சம்மந்தம் இல்லை. பிறகும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?”

தமையன் என்ன சொல்ல வருகிறான் என்று விளங்கத் தொடங்க, அவனிடமிருந்து பார்வையை அகற்றியபடி, “இல்லைண்ணா.. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை..” என்றான் அமலன் திணறலாக.

“டேய்! நான் உன் அண்ணன்டா. எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா?” மெல்லிய புன்னகையோடு அவன் கேட்க, அதற்கு மேலும் பொய் சொல்ல முடியவில்லை அமலனால்.

மாடிப்பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு, “தர்சன் இப்படி இருக்கும்போது, எப்படிண்ணா?” என்று வேதனையோடு கேட்டான்.

“நீ விரதம் இருந்தால் மட்டும் அவனுக்கு எல்லாம் சரியாகி விடுமா அமலா? இல்லைதானே. கொஞ்ச நாட்கள் போனால் அவனும் எல்லாவற்றையும் மறந்துவிடுவான். அதனால் அதைப்பற்றி யோசிக்காமல் நீ சந்தோசமாக இருக்கும் வழியைப் பார். அதைவிட உன்னை நம்பி வந்தவளை சந்தோசமாக வைத்திரு. சகோதர பாசம் எப்படியோ அப்படித்தான் மனைவி மீது வைக்கும் நேசமும் அமலன். யாருக்காகவும் மற்றவரை நோகடிக்கக் கூடாது.” என்றான் அண்ணனாக.

அப்போதும் அமைதியாக அமலன் இருக்க, “ஏன்டா, ஒன்றுக்கு இரண்டாக அண்ணன்கள் என்று சொல்லிக்கொண்டு நானும் நீயும் எதற்கு இருக்கிறோம்? அவனுக்கு ஒரு நல்லதை செய்யாமல் விட்டுவிடுவோமா? நாம் இருக்கும்வரை அவனுக்கு என்னடா வந்துவிடும்? அவன் நம் தம்பிடா! கட்டாயம் இன்னொரு திருமணம் செய்து வைக்கலாம் அமலன். ஆனால், கொஞ்ச நாட்கள் போகட்டும்.” என்றான் விமலன்.

“நிச்சயம் அண்ணா. அவனுக்கும் ஒரு திருமணத்தைச் செய்து, அவன் சந்தோசமாக இருப்பதைப் பார்த்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.” என்றவனை, பாசத்தோடு அணைத்துக்கொண்டான் விமலன்.

“பிறகு என்னடா? நம் தம்பிக்காக நாம் இருக்கிறோம். அவனை நன்றாக வாழவைக்கவேண்டும் என்கிற உறுதி இருக்கிறது. பிறகு எதற்கு நீயும் கவலைப்பட்டு உன் மனைவியையும் வருத்துகிறாய்? சந்தோசமாக வாழும் வழியைப் பார்.” என்றான் மூத்த சகோதரனாக.

“ம்ம்.. சரிண்ணா.” என்று கேட்டுக்கொண்டான் அமலன்.

“இன்னுமொன்று அமலன், வீட்டில் வேறு யாருக்கும் வெண்பா தர்சனிடம் சொன்ன எதுவும் தெரியவேண்டாம். அவர்களின் உறவை பற்றியும். அதைப் பற்றி அறிந்தால் துடித்துப் போவார்கள். அதனால் அம்மா, அப்பா, அத்தை என்று யார் கேட்டாலும் அவளுக்குத் தர்சனோடு வாழப் பிடிக்கவில்லையாம். அதனால் தாலியை கழட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாளாம் என்று மட்டும் சொல்லு.” என்றான் விமலன்.

தம்பி அவமானப்பட்ட கதையைச் சொல்லி பெற்றவர்களையும் வருத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று தமையன் எண்ணுவது அவனுக்கும் சரியாகப் பட, “சரிண்ணா..” என்று கேட்டுக்கொண்டான்.
 
Top Bottom