அத்தியாயம் 3
சில விடயங்கள் நம்மை அறியாமலேயே நம்முடைய ஆழ் நெஞ்சில் சென்று அழுத்தமாக விழுந்துவிடும். அப்படித்தான் அவளுக்குக் கேசிகன். அதுவரையில் அவளுக்கு அவன் கேசி அண்ணா. ஆனால், அவள் வாழ்வில் ஒரு நாள் வந்தது. அன்று எல்லாம் மாறிப்போயிற்று. மாறிப்போகச் செய்தான் அவன்.
அன்று அவளின் பள்ளிக்கூடத்தில் விஜயதசமி பூசை நடைபெற இருந்தது. தினமும் சீருடையில் செல்லும் பள்ளிக்கூடத்துக்குச் சாதாரண உடையில் செல்லலாம் என்றாலே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதில் பட்டுப் பாவாடை தாவணியில் போகலாம் என்றால்? பதினேழு வயதின் ஆரம்பத்தில் இருந்த சிட்டுக்குச் சொல்லவா வேண்டும்?
காலையிலேயே எழுந்து தலைக்கு முழுகி, அன்னை அழகுறக் கட்டிவிட்ட மயில் நீலப் பட்டுப்பாவாடை சட்டைக்குக் கருஞ்சிவப்புத் தாவணி அணிந்து, தலைக்குக் கனகாம்பரம் பூ வைத்து அவள் தயாராகி வந்த அன்று, எதேற்சையாகத்தான் எதிர்ப்பட்டான் கேசிகன்.
இவளைக் கண்டவன் சட்டென்று பைக்கை நிறுத்தி நின்றுவிட்டான். அவன் விழிகளில் நம்ப முடியாப் பிரமிப்பு. நொடி நேரம் இது அவள்தானா என்று பார்த்தான். அன்று அவன் கண்களில் வந்துபோன மின்னலையும் ரசனையையும் என்றுமே அவளால் மறக்க இயலாது.
அதுவும் கால்களை இரு பக்கமும் ஊன்றி பைக்கில் அமர்ந்திருந்தவன், அவர்களின் வீடு அதே தெருவில் நான்கு வீடுகள் தள்ளித்தான் என்பதில், அங்கு வைத்தே அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி பைக்கின் முன்னே வைத்துக்கொண்டு, நிறுத்தி நிதானமாக அவளைப் பார்த்த பார்வை இருக்கே. அவளுள் இனம்புரியா இனிய படபடப்பு.
“பெட்டச்சி எங்க வெளிக்கிட்டாச்சு?” அன்று விஜயதசமி என்பதும், அவள் அதற்குத்தான் புறப்படுகிறாள் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் பேச்சுக் கொடுத்தான்.
“ஸ்கூலுக்கு.” அவன் பார்வை உண்டாக்கிய சின்ன வெட்கமும் கூச்சமுமாகச் சொன்னாள் நாவினி.
“பாத்தா அப்பிடித் தெரியேல்லையே.”
“வேற எப்பிடித் தெரியுதாம்?” செல்ல ரோசம் பிறக்க வினவினாள்.
“சொல்லவோ?”
அந்தக் கேள்வி இனிய படபடப்பையும் புதிதான உள்ளக் கிளர்ச்சியையும் உண்டாக்க, “நான் போகோணும்.” என்று சொன்னாள்.
“சரி, கவனமா போயிற்று வரோணும்.”
சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு சைக்கிளில் ஏறிப் புறப்பட்டிருந்தாள்.
அன்றிலிருந்துதான் அவர்களுக்குள் புதிதாக ஏதோ ஒன்று ஆரம்பித்தது. அதன் பெயர் என்னவென்று அவளுக்குத் தெரியாது. ஆனால், அன்றிரவு மாத்திரமல்ல அதன் பிறகு வந்த இரவுகள் முழுக்க அவன் தந்த அந்தப் பார்வை அவளை இனிய படபடப்பில் ஆழ்த்தின. பல இனிய புதிய கனவுகளைத் தந்தன.
அதன் பிறகு இரகசியமாக அவள் உள்ளமும் விழிகளும் அவனைத் தேட ஆரம்பித்தன. அவனைக் கண்டுவிட்டால் இனிமையாகப் படபடத்தன. அவனோடு பேசிக்கொண்டிருக்க நிறைய நிறைய ஆர்வம் கொண்டாள். அதுவே அவனைக் கண்டுவிட்டால் பேச்சு வராமல் தடுமாறினாள்.
அவளுக்குள் நடக்கும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளும் நடக்கிறது என்று அதன் பிறகான நாள்களில் கண்டுகொண்டாள்.
அவளுக்கும் அவள் தம்பிகளுக்கும் அவன்தான் பாடம் சொல்லித்தருவான். முன்னர் எல்லாம் அதட்டல் உருட்டல் என்று இருப்பான். இப்போதெல்லாம் மிகுந்த கனிவுடன் ஒவ்வொன்றையும் விளக்கினான். அவளுக்காக நிறைய நேரம் மெனக்கெட்டான்.
எதையாவது அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் உதட்டோரம் கசிந்திருக்கும் சிறு முறுவலோடு அவளிலேயே படிந்திருக்கும் அவன் பார்வை இருக்கிறதே. நீ எனக்குத்தான் என்று சொல்லாமல் சொல்வானா, இல்லை உன்னை நான் ரசிக்கிறேன் என்று மறைமுகமாக உணர்த்த முயல்வானா தெரியாது. அந்தக் கண்களில் அப்படி ஒரு காந்த சக்தி.
அவனுடைய அன்னை அடிக்கடி கோயில்களுக்குச் செல்வார். அப்படிப் போய்வந்தால் இவளுக்கென்று தனியாகத் திருநீறு சந்தனமோ, கோயில் கயிறோ, பிரசாதமோ நிச்சயம் கொண்டுவந்து தருவான்.
அந்தமுறை திருக்கேதீஸ்வரம் போய் வந்தார்களாம் என்று சொல்லி, அவள் நெற்றியில் அவனே திருநீற்றினைப் பூசிவிட்டான். அவள் கன்னங்கள் கதகதத்துப்போயின. குழப்பமும் இனிய படபடப்புமாகப் பார்த்தாள்.
“என்ன? நான் பூசிவிடக் கூடாதா?” என்றான் அவன் சின்ன சிரிப்பும் ரசனையுமாக.
“இல்ல. அப்பிடி இல்ல.” என்று தடுமாறினாள் அவள்.
அவள் கரம் பற்றிக் கோயில் கயிற்றையும் அவன் கட்டிவிட்டபோது அவள் தன் வசத்திலேயே இல்லை. அதைவிட அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாத அளவில் முகம் குங்குமமாகச் சிவந்து போயிற்று.
காதோரமாக அவள் முடியை ஒதுக்கிவிட்டுவிட்டு, “நல்லா சிவந்து, ஜம்புப்பழம்(முந்திரிப்பழம்) மாதிரி நல்ல வடிவா இருக்கிறாய் பெட்டச்சி.” என்று அவன் குரலைத் தணித்துச் சொன்னபோது, அவன் முன்னே நிற்க முடியாமல் ஓடிவிடப் பார்த்தாள் அவள்.
“நவி நில்லு!” என்று எட்டிப் பிடித்து, “இது பிரசாதம். அன்ட்ரி, தம்பியாக்களுக்கும் குடுத்துச் சாப்பிடு.” என்று பைக்கில் இருந்த ஒரு சின்ன ஷொப்பிங் பாக்கை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டான்.
இப்படிப் பல நிகழ்வுகள். அவை உணர்த்தாமல் உணர்த்தும் நெருக்கம் அவளை என்னவெல்லாமோ செய்ய ஆரம்பித்திருந்தன.
அவன்தான் அவர்கள் மூவருக்கும் வீட்டுக்கே வந்து வகுப்பு எடுக்கிறவன் என்பதால் அபிராமியால் இதைக் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. அதைவிட அவர் கண்டுகொள்கிற அளவில் அவன் நடப்பதும் இல்லை. எப்போதாவது அமையும் அவர்களுக்கான நொடி நேரத் தனிமையை ஒரு பார்வையால், சின்ன சிரிப்பால், ஒற்றைப் புருவ உயர்த்துதலால் அவளுக்கு மறக்க முடியாததாக மாற்றிவிடுவான்.
ஒரு நாள், “எங்கட பெட்டச்சி வர வர வளந்துகொண்டு போறா. இந்த டீன் ஏஜ் பருவத்தில வேற வேற ஆசை எல்லாம் வரும். அப்பிடி மனதை அலைபாய விடக் கூடாது சரியா. காலம் வரும், எல்லாம் சரியா நடக்கும். நான் சொல்லுறது விளங்குதா?” என்று சொன்னான்.
இன்னொரு நாள், “கொஞ்சம் கெதியா வளரமாட்டியாடி. சொல்லவும் ஏலாம, சொல்லாம இருக்கவும் ஏலாம மனுசனைப் போட்டுப் பாடா படுத்துறாய்.” என்றுவிட்டு அவன் கேசம் கோதிக்கொடுக்கையில் அவளுக்கு ஓடிப்போய்த் தன் இருபதாவது வயதில் நின்றுவிட முடியாதா என்றாயிற்று.
அன்று அவள் கன்னத்தில் ஒரு பரு. கொஞ்சம் பெருத்து அதைச் சுற்றி இருந்த இடத்தையும் சேர்த்துச் சிவப்பாக்கி வைத்திருந்தது. அவளுக்குக் கன்னம் முழுவதுமே கொதிக்கும் உணர்வு.
அதை அவள் உடைக்கப்போகிறேன் என்று சொல்லவும், “அதுதான் இந்தப் பஞ்சுக் கன்னத்துக்கு வடிவா இருக்கு. உடைக்காத.” என்றவன் தன்னை மீறி ஒற்றை விரலால் அதைத் தடவியிருந்தான்.
குழப்பமும் நம்ப முடியா வியப்புமாக விழிகளை விரித்துவிட்டு அவள் பார்வையை தழைத்துக்கொள்ள, “அது சொறி… யோசிக்காம…” என்று தடுமாறினான் அவன்.
அவளுக்கு உள்ளம் உருகிப்போயிற்று. “இல்ல பரவாயில்ல.” என்றாள் வேகமாக.
“பரவாயில்லையா?” தடுமாற்றம் போய் உதட்டில் சிரிப்பு முளைக்க வினவினான் அவன்.
“பரவாயில்ல.”
“பரவாயில்லையா?” அவள் உயரத்துக்குக் குனிந்து, நிலம் நோக்கியிருந்த அவள் முகத்தைப் பார்க்க முயன்றபடி அவன் வினவியபோது, “நான் போறன்.” என்று ஓடி வந்துவிட்டாள்.
அந்த உறவுக்கு என்ன பெயர் என்று அன்று அவளுக்குத் தெரியாது. அவனைப் பிடிக்கும். அவனைப் பார்க்க, அவனோடு பேச, அவன் வீசும் பார்வைகளை ரசிக்க, அவனை நினைக்க என்று அவன் குறித்த எல்லாமே பிடிக்கும். அண்ணா என்கிற அழைப்பும் விடுபட்டுப் போயிற்று. அவன் பெயரையும் சொல்வதில்லை.
இப்படி இருக்கையில்தான் அவர்களின் ஜெர்மன் பயணம் வந்தது. சின்ன இதயங்கள் இரண்டும் துடித்துப்போயின. கேசிகனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிடைத்த தனிமையில் உண்மையா என்று கேட்டான். கலங்கிவிட்ட விழிகளுடன் ஆம் என்று தலையை அசைத்தாள் அவள்.
“நீ இல்லாம… உன்னைப் பாக்காம… ப்ச்!”
அவன் திணறல் அவளுக்கு அழுகையைத் தோற்றுவித்தது. “நீங்களும் வாறீங்களா?” உலகம் அறியாதவள் ஏக்கமாக வினவினாள்.
“நான்… நான் எப்பிடி?”
அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்கவும் இருவரும் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டனர்.
புறப்பட முதல் பரிமளாவின் நகைகளைக் கொண்டுபோய்க் கொடுத்தார் அபிராமி. நாகரத்தினத்துக்கு அதில் முழு உடன்பாடில்லை. நல்ல எதிர்காலத்தை நோக்கிப் போகிறார்கள், பரிமளா வீட்டினரின் சாபத்தை ஏன் வாங்க என்று நினைத்தார் அபிராமி.
அதைவிட ஏதோ ஒரு வகையில் அவர்களின் எதிர்பார்ப்பும் சரியோ என்றும் நினைத்தார். தொழிலில் நொடிந்துபோன பரமேஸ்வரனுக்கு ஒரு மகள் உண்டு. அவள் திருமணத்துக்காவது இது உதவட்டுமே என்று எண்ணினார்.
அப்போதும் அது போதாது என்று வீட்டினையும் சேர்த்து அவர்கள் கேட்டபோது நேராகவே மறுத்துவிட்டார் அபிராமி.
“உங்கட மகளின்ர நகைநட்டு, வீடு எல்லாமே நாவினிக்குச் சேரவேண்டியது. இந்த நகைகளைத் தாற உரிமை எங்களுக்கு இல்லை. ஆனாலும், தாயின்ர நினைவா அவாக்கு அந்த வீடு இருக்கட்டும், உங்கட மகளின்ர பங்கா உங்களுக்கு இந்த நகைகள் இருக்கட்டும் எண்டுதான் கொண்டுவந்து தந்திருக்கிறன். நாளைக்கு நாவினி வளந்து, அவாவாவே அந்த வீட்டை உங்களுக்குத் தருவாவா இருந்தா எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்றுவிட்டு வந்திருந்தார்.
கடைசியாக அவர்கள் பயணத்துக்குப் பெட்டிகளைக் கட்ட, நிறை பார்க்க என்று கேசிகன்தான் வந்து நின்று உதவி செய்தான். நாவினி எந்த வேலையும் பார்க்கவில்லை. அவனையே பார்த்திருந்தாள். பார்க்க பார்க்க அழுகை வந்தது.
இனி எப்படி அவனைப் பாராமல், அவனோடு கதைக்காமல், அவன் தரும் பார்வைகளின், பிரத்தியேகமான புன்னகைகளின் சுகத்தை அனுபவிக்காமல் இருக்கப்போகிறோம் என்று அவளால் யோசிக்கவே முடியவில்லை.
அவன் வீட்டினரும் அங்கிருந்ததில் அவனால் இவள் புறம் திரும்ப முடியவில்லை. ஆனால், அவனும் இறுகிப்போயிருக்கிறான் என்று அவளால் உணர முடிந்தது.
ஒரே ஊர், ஒரே தெரு என்கையில் அவர்களால் எங்கும் சந்திக்கவும் முடியாது. அப்படி ஒரு சந்திப்பை இதுவரையில் நிகழ்த்தியதும் இல்லை. எதேற்சையாக அவன் வீட்டில் வைத்தோ அவள் வீட்டில் வைத்தோ தனியாகப் பார்க்கக் கிடைத்தால் மட்டுமே நொடி நேரப் பேச்சோ பார்வையோ அவர்களுக்குள் நிகழும்.