அத்தியாயம்-13
பள்ளிக்கூடத்தில் வகுப்புக்கள் பிரிக்கப்பட்டுவிட, தீபாவும் இலக்கியாவும் ஒரு வகுப்பில் அமர்ந்திருந்தனர். மாணவிகள் சலசலத்துக் கொண்டிருக்க வகுப்புக்குள் நுழைந்தார் மகேஸ்வரி. அவர்களின் தமிழ் ஆசிரியையாக மட்டுமின்றி, வகுப்பாசிரியையாகவும் அவரே நியமிக்கப் பட்டிருந்தார்.
அவரைக் கண்டதும் அனைவரும் எழுந்து காலை வணக்கத்தைத் தெரிவித்தார்கள்.
பெரும்பான்மை மாணவியர் அதே பள்ளிக்கூடத்தில் சாதரணதரம் வரை படித்தவர்கள் என்பதால், “எல்லோருக்கும் விடுமுறை எப்படிப் போனது? என்ன செய்தீர்கள்?” என்று புன்னகையோடு விசாரித்தார் மகேஸ்வரி.
“நான் கொழும்புக்கு போனேன் மிஸ்..”
“நான் கம்பியூட்டர் கிளாஸ்க்கு போனேன் மிஸ்..”
“நான் நல்லாத் தூங்கி, நிறையப் படங்கள் பார்த்தேன் மிஸ்..” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொல்ல, தீபாவும், “நான் சித்தி வீட்டுக்கு யாழ்பாணம் போனேன் மிஸ்..” என்றாள்.
அங்கிருந்த மாணவிகளைத் தன் பார்வையால் அளந்தபடி, “அப்போ எல்லோரும் விடுமுறையைச் சந்தோசமாகக் கழித்து இருக்கிறீர்கள். சரி.. நம் பள்ளிக்கூடத்துக்குப் புதியவர்களும் வந்திருக்கிறார்கள் போலவே.“ என்றவர், அவர்களை ஒவ்வொருவராகத் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்யச் சொன்னார்.
ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு வர, இலக்கியாவின் முறையும் வர, தயக்கத்தோடு எழுந்து நின்றாள்.
வெள்ளைச் சீருடை அணிந்து கழுத்தில் டை கட்டியிருந்தவள், நடு உச்சி பிரித்து இரட்டைப் பின்னலிட்டு அதைக் காதருகில் கருப்பு ரிப்பனால் மடித்துக் கட்டியிருந்தாள். ஒரு பின்னல் முன்பக்கம் விழுந்துகிடக்க, மற்றொரு பின்னல் முதுகில் தவழ்ந்தது. முன்னுச்சியில் இருந்து பிரிந்த சுருள்முடி நெற்றியில் புரண்டு ஒருபக்கப் புருவத்தைத் தொட்டபடி நின்றது. பிறை போன்ற நெற்றியில் திருநீறு தீட்டியிருந்தாள். கரிய நீண்ட புருவங்கள் காவல் காக்க, மை தீட்டியிருந்த மருண்ட பெரிய விழிகளைச் சுற்றியிருந்த இமைகள் அவளின் மனத்தைப் போன்று படபடத்தன! பவளச் செவ்வாயை ஒத்த இதழ்கள் பேசத் தயங்கியபடி சற்றே பிரிந்து நின்றன.
மகேஸ்வரிக்கு ஏனோ அவளைப் பார்த்த நொடியில் பிடித்துப் போனது. அந்தளவுக்கு மனத்தைக் கவர்ந்தாள்.
அந்த வானத்து நிலவையே போட்டிக்கு அழைக்கும் நிறத்தையும், முக அழகை கொண்டவளிடம் பணிவும், பயமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
அதைக் கண்டுகொண்டவர், “பயப்படாமல் சொல்லு. உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“இலக்கியா..” என்று, அப்போதும் தயங்கிப் பதில் சொன்னவள், அப்படியே தான் படித்த பள்ளியின் பெயரையும் சொன்னாள்.
அது சாதாரணதரம் மட்டுமே உள்ள பள்ளி என்பதால் உயர்தரம் படிக்கவே அவள் இங்கு வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது அவருக்கு.
“படித்து என்னவாக விரும்புகிறாய்?”
எல்லா மாணவர்களுக்கும் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதால், அவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மகேஸ்வரி எப்போதுமே இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார். இலக்கியாவிடம் அவரையும் மீறிக் கேட்டுவிட்டார்.
ஒருகணம் மௌனம் சாதித்தவள், “உயர்தரம் முடித்துவிட்டு வேலைக்குப் போகப்போகிறேன்.” என்றாள் மெல்லிய குரலில்.
உயர்தரம் முடித்து, மேல்படிப்பையும் முடித்து அவள் என்னவாகப் போகிறாள் என்று தெரிந்துகொள்ளத்தான் கேட்டார். ஆனால், அவள் சொன்ன பதிலே அவளின் வீட்டு நிலைமையை எடுத்துரைக்க, அவள் விரும்பிய படிப்பை படிக்க வைக்கவேண்டும் என்கிற அவா அவருக்குள் பிரவாகித்தது.
அந்த அவாவையும், “ஏன் மேலே படிக்க விருப்பமில்லையா?” என்று கேட்கத் துடித்த நாவையும், அங்கிருந்த மற்ற மாணவர்களைக் கருத்தில் கொண்டு பெரும் பாடுபட்டு அடக்கிக்கொண்டார்.
ஆனாலும், பதில் சொல்கையில் அவளிடம் தெரிந்த பணிவு, அமைதி, முகத்தில் தெரிந்த அறிவுக்களை அனைத்துமே வெண்பாவை அவருக்கு நினைவு படுத்தியது.
அவரின் மகளிடம் இதில் எதுவுமே இருக்காது. படபடவென்ற பேச்சும், மூக்குக்கு மேல் வரும் கோபமும் எதிலும் ஒரு பிடிவாதமும் என்று இந்தப் பெண்ணுக்கு நேரெதிர் அவள்.
அப்படியிருந்தும் ஏனோ அவருக்கு அவளை நினைவுபடுத்தினாள் இலக்கியா.
அப்பா இல்லையே, என்னை விட்டால் வேறு யார் அவளுக்கு இருக்கிறார்கள் என்று எண்ணி, அளவுக்கு அதிகமாகத் தான் கொடுத்த செல்லம் தான் வெண்பாவின் செயல்களுக்கெல்லாம் காரணமோ என்று இப்போதெல்லாம் அவர் அடிக்கடி நினைப்பதுண்டு.
மாணவர்களின் சலசலப்பு செவிகளை எட்டவே தான் வகுப்பறையில் நின்றுகொண்டு தன் சிந்தனையை எங்கோ தவறவிட்டது புரிந்தது மகேஸ்வரிக்கு.
அதை எண்ணி மனதால் வருந்தியபடி, இலக்கியாவை அமரச் சொல்லிவிட்டு தன்னுடைய பாடத்துக்குத் தேவையான கொப்பிப் புத்தகங்களின் பட்டியலை மாணவர்களுக்குக் கொடுத்தார்.
“இன்று முதல் நாள் என்றபடியால் படிப்பை ஆரம்பிக்கவில்லை. நாளையிலிருந்து தொடங்குவோம். அதனால், நாளையே இதையெல்லாம் கொண்டுவாருங்கள்.” என்று அவரும் சொல்லிமுடிக்க, அந்தப் பாடநேரம் முடிந்ததற்கான மணியும் அடித்தது.
காலை உணவுக்கான இடைவேளையின்போது, ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் அமர்ந்திருந்தார் மகேஸ்வரி. அங்கே தயங்கியபடி வந்து நின்றாள் இலக்கியா.
“என்ன இலக்கியா?” அவளைக் கண்டுவிட்டுக் கேட்டார் மகேஸ்வரி.
“அது மிஸ்.. அது.. நீங்கள் தந்த லிஸ்ட்டில் இருக்கும் எல்லாப் புத்தகமும் கொப்பியும் நாளைக்கே வேண்டுமா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் லக்கி.
“ஆமாம்! அப்போது தானே படிக்க, நோட்ஸ் எடுக்க இலகுவாக இருக்கும். ஏன் கேட்கிறாய்?”
“இல்லை.. என்னால் இந்த மாத கடைசியில் தான் அதையெல்லாம் வாங்க முடியும்..” அதற்கு மேலே தன் நிலையைச் சொல்ல முடியாமல் போகவே தயக்கத்தோடு அவரைப் பார்த்தாள் இலக்கியா.
“ஏன்?”
“அது.. சின்னப்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன் மிஸ். அவர்கள் மாத கடைசியில் தான் பணம் தருவார்கள்.”
“ஓ..!” என்று கேட்டுக்கொண்டவருக்கு, அவளின் வீட்டின் நிலை இப்போது மிக நன்றாகவே பிடிபட்டது. “அப்பா அம்மா என்ன செய்கிறார்கள்?”
“அம்மா, எங்கள் நிலத்திலேயே சின்னதாகத் தோட்டம் செய்கிறார். வாழைப்பழம், மாம்பழம், தேங்காய், காய்கறிகள் என்று எங்கள் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களை அப்பா சந்தைக்குக் கொண்டுபோய் விற்பார்.”
“ஏன், உன் அப்பா தோட்டம் செய்யமாட்டாரா?”
“அப்பாக்கு நடக்க முடியாது மிஸ்.” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.
அவர் நன்றாக இருக்கும்வரை எவ்வளவு சந்தோசமாக இருந்தார்கள். அப்போதும் அவர்கள் காசு பணம் என்று வசதியாக வாழவில்லைதான். ஆனாலும் சந்தோசம் நிறைந்து கிடந்ததே! எப்போதும் சிரிப்பும் கும்மாளமும் தானே.
அந்த நினைவுகள் கொடுத்தத் துக்கத்தினால் வரப்பார்த்த அழுகையை அடக்கிக்கொண்டு, “இரண்டு வருடங்களுக்கு முன் சைக்கிளில் வந்த அப்பாவை லாரி மோதிவிட்டது. அதிலிருந்து அப்பாவால் நடக்க முடியாது.” என்றாள் கரகரத்த குரலில்.
அதைக்கேட்ட மகேஸ்வரிக்கும் கவலையாக இருந்தது. “சரி. நீ ஒன்றும் வாங்கவேண்டாம். நானே நாளை வரும்போது எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வருகிறேன்.” என்றார் அன்போடு.
“இல்லை மிஸ். எனக்கு இந்தமாதக் கடைசிவரை நீங்கள் பொறுத்துக் கொண்டாலே போதும். பிறகு நானே வாங்கிவிடுவேன்.” மெல்லிய குரலில் தயக்கத்தோடு சொன்னாலும், அதைச் சொல்லத் தயங்கவில்லை அவள்.
ஆத்திரப்படாமல், அவசரப்படாமல், பணிவையும் கைவிடாது தன்னுடைய சுயகவுரவத்தைக் காத்துக்கொண்டவளின் மனதின் அழகில் கரைந்தே போனார் மகேஸ்வரி.
கஷ்டமே தெரியாமல் வளர்ந்து, அருமையாகக் கிடைத்த பொன்னான வாழ்க்கையையும் தூக்கி எறிந்துவிட்டு, ஓடுகாலி என்கிற பட்டத்தைச் சுமந்து சென்ற தன் மகளெங்கே, பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே படாதபாடு படும் இந்தப் பெண் எங்கே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.
அவளின் அந்த நிமிர்வை, தன்மானத்தைத் தகர்க்க விரும்பாமல், “சரிம்மா. உன்னால் எப்போது முடியுமோ அப்போது வாங்கிக்கொள்.” என்றவர், “அதுவரைக்கும் என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“என்னிடம் இருக்கும் பணத்தில் சில கொப்பிகள் வாங்கமுடியும் மிஸ். அதைவைத்து சமாளிப்பேன்.” என்றாள் அவள்.
“அப்போ சரி. உனக்குத் தம்பி தங்கைகள் இல்லையா..?” என்று அவளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கேட்டார்.
அதுநாள் வரை மகள் மகள் என்று மகளுக்காகவே வாழ்ந்தவரின் நெஞ்சம், அந்த மகளை ஏதோ ஒருவகையில் நினைவுபடுத்தும் இலக்கியாவின் மீது பாசத்தைப் பொழியத் துடித்தது.
“இரண்டு தம்பிகள் மிஸ்.” என்றாள் இலக்கியா.
“என்ன படிக்கிறார்கள்?”
“பெரிய தம்பி ஒன்பதாவது வகுப்பு. சின்னத் தம்பி ஏழாம் வகுப்பு மிஸ்.”
“ஓ..” என்று கேட்டுக்கொண்டவர் இடைவேளை முடியப்போவதை உணர்ந்து, “சரி, நீ போய்ச் சாப்பிடு.” என்று அனுப்பிவைத்தார்.
தலையாட்டிவிட்டு திரும்பிச் செல்லும் அவளையே பார்த்திருந்தவர், “ஏதாவது உனக்குத் தேவையென்றால் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னிடம் கேள்.” என்றார், தன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
நின்று ஒருநிமிடம் தயங்கிவிட்டு, “சரி மிஸ்..” என்றுவிட்டு நடந்தாள் இலக்கியா.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.