அத்தியாயம்-14
காலதேவனின் சக்கரம் வேகமாகச் சுழன்றதில் இரண்டரை வருடங்கள் மிக வேகமாகக் கடந்திருந்தது. அன்று, உயர்தரம்(ப்ளஸ் டூ) படித்த மாணவர்கள் பிரியாவிடை கொண்டாடக் காத்திருந்தனர்.
ஆர்ட்ஸ் பிரிவு மாணவியரின் கலை நிகழ்ச்சிகளின் பொறுப்பு மகேஸ்வரிக்கு வழங்கப் பட்டிருந்தது. தன் வகுப்பு மாணவியர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகப் பிரியாவிடை விழா நடப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதான மண்டபத்துக்குச் சென்றார்.
அங்கே அவர் உள்நுழைகையில் எதிரே வந்த இலக்கியாவைக் கண்டவருக்கு அவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.
மெல்லிய தங்கச் சரிகையிட்ட ரோஜாவண்ணச் சேலையில் நிஜ ரோஜாவாகவே நடந்து வந்துகொண்டு இருந்தவளின் கையில் பலவண்ண மலர்கள் கொண்ட பூங்கொத்து இருந்தது. மலர்ந்த முகமும், விரிந்த செம்பவளச் சிரிப்புமாக அழகிய மங்கையென இருந்தவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு.
“எங்கே போகிறாய் இலக்கியா?” அவளுடன் பேசும் ஆவலில் அவர் பேச்சுக் கொடுக்க,
“அங்கே, வரவேற்பு மேசையில் வைக்கவேண்டிய மலர்கொத்து மிஸ் இது. திவ்யா அதை இங்கே கொண்டுவந்துவிட்டாள். அதுதான் இதை வைப்பதற்காகச் செல்கிறேன்.” என்றாள் அவள்.
“ஓ..” என்று கேட்டுக்கொண்டவர், “அப்போ பரீட்சை முடிந்ததும் மேலே படிக்கப் போகிறாயா அல்லது முன்னர்ச் சொன்னது போல வேலைக்குப் போகப் போகிறாயா?” என்று கேட்டார்.
“வேலைக்குத்தான் போகப் போகிறேன் மிஸ். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நர்சரியில் வேலை கிடைத்திருக்கிறது. நல்ல சம்பளமும்.” என்றாள் இலக்கியா மலர்ந்த முகத்துடன்.
அவளைப் பார்த்த மகேஸ்வரிக்கு விநோதமாக இருந்தது. ஓரளவுக்குப் படிக்கும் மாணவர்களுக்கே மேலே படித்து நல்லதொரு உத்தியோகத்துக்குச் செல்லவேண்டும் என்பதுதான் இலக்காக இருக்கும். இவளானால் வகுப்பிலேயே கெட்டிக்கார மாணவியாக இருந்தும், மேலே படித்தால் மிகவும் நல்ல நிலைக்கு வரலாம் என்று தெரிந்தும் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குப் போகிறேன் என்கிறாளே, அதுவும் சிரித்த முகத்துடன்.
“தொடர்ந்து படித்தாய் என்றால் இதைவிட நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்குமே இலக்கியா.”
“மெய்தான் மிஸ். ஆனால், நான் படித்தால் தம்பிகள் மேலே படிப்பது சிரமம். அவர்களை நன்றாகப் படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”
“நல்ல எண்ணம் தான். ஆனால், அதற்காக நீ உன் படிப்பை விடவேண்டும் என்று அவசியம் இல்லையே! அதுதான் சொன்னாயே, இப்போதெல்லாம் சந்தையில் உன் அப்பாவுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதாக. பிறகென்ன?” என்று கேட்டார் மகேஸ்வரி, அதற்கு அவர்தான் வழி செய்தார் என்பதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல்.
அன்று வீட்டில் சென்று நேரடியாகக் கேட்டும் இலக்கியாவின் குடும்பத்துக்கு உதவிசெய்யத் தர்சன் மறுத்துவிடவே, ராஜசேகரிடம் பேசி அதற்கு ஏற்பாடு செய்தார். அவர்களின் தோட்டத்தில் விளையும் பொருட்களை அன்றாட விற்பனைக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் கந்தசாமிக்கு ராஜசேகர் கொடுத்தார். அதைச் சந்தைவிலைக்கு விற்றுக் காசாக்கினார் கந்தசாமி.
“பெரிய தம்பி உயர்தரத்தில்(ப்ளஸ் டூ) விஞ்ஞானம் எடுக்கப் போகிறானாம் மிஸ். சின்னத் தம்பி இனி சாதாரணதரம்(ப்ளஸ் வன்). அவர்கள் இருவரையும் டியுஷனுக்கு விடவேண்டும். நான் தொடர்ந்து படித்தால் அது முடியாது. அதோடு அம்மா அப்பாவும் பாவம் மிஸ். எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து அவர்கள் பட்டது எல்லாம் கஷ்டம்தான். இனியாவது நான் அவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும்.” என்றாள் இலக்கியா தெளிவான குரலில்.
இந்த இரண்டரை வருடகாலமாக மகேஸ்வரி காட்டிய கனிவிலும் அக்கறையிலும் அவரிடம் மனம் திறந்து பேசுமளவுக்கு வந்திருந்தாள் அவள். ஆனாலும், அவரிடமிருந்து எந்தவித உதவியையும் பெற்றதே இல்லை.
“உன்னுடைய அம்மா அப்பாவைப் பற்றியும் தம்பிகளைப் பற்றியும் நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், உன்னைப் பற்றி நீ யோசிக்கவில்லையா?”
புருவங்கள் சுருங்கக் கேள்வியாகப் பார்த்தாள் இலக்கியா. “என்னைப் பற்றி யோசிக்க என்ன மிஸ் இருக்கிறது?”
“இதென்ன கேள்வி இலக்கியா? உனக்கு இப்போது பத்தொன்பது வயதாகிறது. உன் எதிர்காலத்தைப் பற்றியும் நீ நினைக்கவேண்டும்.” என்றார் மகேஸ்வரி, அவளின் மனதை அறியும் விதமாக.
அவள் இதழ்களிலோ புன்னகை மலர்ந்தது. “என் எதிர்காலம் தம்பிகளின் படிப்புத்தான் மிஸ். மூத்தவன் டாக்டராகப் போகிறானாம். மற்றவனுக்கு இஞ்சினியரிங் படிக்க விருப்பமாம். அவர்களை அதைப் படிக்கவைக்க வேண்டும். ” என்றவளிடம், தன் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கலக்கத்தையும் காணோம்.
அவளை நினைத்துப் பெருமையாக இருந்தபோதும், இதெல்லாம் நடந்துமுடிய எவ்வளவு காலம் எடுக்கும், அதன்பிறகு அவளின் நிலை என்ன என்கிற யோசனையும் தோன்றாமல் இல்லை அவருக்கு.
அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “உன் திருமணத்தைப் பற்றி ஏதாவது முடிவு செய்திருக்கிறாயா இலக்கியா? அதாவது யாரையாவது மனதில் நினைத்திருக்கிறாயா?” என்று கூர் பார்வையுடன் கேட்டார் மகேஸ்வரி.
அவர் மனதில் இந்த இரண்டரை வருடங்களாக இருக்கும் ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த அந்தக் கேள்விக்கான பதில் அவருக்குத் தேவைப்பட்டது.
இலக்கியாவுக்கோ அவர் என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. “மனதில் யாரையாவதா.. அப்படி என்றால்..” என்று இழுக்கையிலே புரிந்துவிட, தெளிவான புன்னகை ஒன்றைச் சிந்தினாள் அவள்.
“இல்லை மிஸ். என் மனதில் இருப்பதெல்லாம் என் தம்பிகளின் எதிர்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் தான். அது முடியும் வரைக்குமே என் மனதில் அதுமட்டும் தான் இருக்கும்!” என்றாள் உறுதியான குரலில்.
“அப்போ உனக்கு மேலே படிக்க விருப்பமே இல்லையா?”
“அது இருக்கிறதுதான் மிஸ். ஆனால், அதைவிட என் குடும்பத்தை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அதிகமாக இருக்கிறது மிஸ்.” என்றவள் மகளாகக் கிடைத்ததில் அவளது பெற்றவர்கள் பெரும் தவம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் மகேஸ்வரி.
அடுத்தக் கட்டமாகத் தான் செய்யவேண்டியதை மனதில் கணித்தவர், “உன் விருப்பங்கள் எல்லாமே நிறைவேறும் இலக்கியா. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு என்றுமே இருக்கும்!” என்று மனமார வாழ்த்திவிட்டுச் சென்றார்.
இரண்டு அறைகளையும், ஒரு விறாந்தையையும் கொண்ட அந்தச் சின்ன வீடு தென்னோலையினால் வேயப்பட்டு இருந்தது. அதற்குக் கொஞ்சம் தள்ளி சின்னக் குடில் போன்ற அமைப்பில் சமையல்கட்டு இருந்தது. பெரிதாக நிலப்பரப்பு இல்லாதபோதும், ஒருபக்கம் காய்கறிகள் நடப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் மா, வாழை, தென்னை, பலா மரங்கள் என்று அந்தத் தோட்டம் முழுவதுமே சோலையாகக் காட்சியளித்தது.
வீட்டு முற்றத்துக்கு அருகில் இருந்த பலாமரத்தில் ஊஞ்சல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து மெதுவாகக் காலால் உந்தியபடி ஆடிக்கொண்டிருந்த அவன், சிறுவனும் அல்லாத இளைஞனும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட வயதில் இருந்தான். கையில் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
அந்த வீட்டின் படலையருகில்(கிராமப்புறத்து வீடுகளின் கேட்) காரில் வந்திறங்கிய மஞ்சுளா, “இந்த வீடுதானா?” என்று மகேஸ்வரியிடம் விசாரித்தார்.
“இந்த வீடுதான் அண்ணி. எனக்கு நன்றாகத் தெரியும்.” என்றவர், அங்கு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தவனைக் காட்டி, “அவன் இலக்கியாவின் தம்பிதான். ஒருசில முறை அவளைக் கூட்டிக்கொண்டு போகப் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறான். அப்போது பார்த்திருக்கிறேன்.” என்றார்.
“அப்போ வா, உள்ளே போகலாம்.” என்றபடி, மஞ்சுளா படலையைத் திறக்க, அந்தச் சத்தத்தில் படித்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.
யார் என்பதாகப் புருவங்களைச் சுருக்கியவன், மகேஸ்வரியை இனங்கண்டு, “மிஸ்..! நீங்களா? வாங்க மிஸ்..! நீங்களும் வாங்க மிஸ்.” என்று பரபரப்புடன் ஓடிவந்தவன், மகேஸ்வரியுடன் வந்ததால் மஞ்சுளாவையும் ஆசிரியை என்று நினைத்து இருவரையும் வரவேற்றான்.
“அவள்தான் ஆசிரியை. நான் அவள் அண்ணி.” மகேஸ்வரியைக் காட்டிப் புன்னகையோடு அவனிடம் சொன்னார் மஞ்சுளா.
“ஓ.. சரி மிஸ்.” அவர்களை அங்கே எதிர்பாராததில் உண்டான தடுமாற்றத்தில் மீண்டும் மஞ்சுளாவை மிஸ் என்றான் சுதன்.
புன்னகை விரிய, “என்னை ஆன்ட்டி என்று சொல்லப்பா..” என்றார் மஞ்சுளா.
“சரி ஆன்ட்டி, உள்ளே வாருங்கள்.”
“வீட்டில் வேறு யாரும் இல்லையா சுதன்? நீ மட்டும்தான் இருக்கிறாயா?” என்று கேட்டார் மகேஸ்வரி.
“அம்மா, தோட்டத்தில் இருக்கிறார் மிஸ். சந்தைக்குப் போன அப்பாவைக் கூட்டிக்கொண்டு வர அக்கா போய்விட்டாள். தம்பி டியுஷன் போயிருக்கிறான் மிஸ்.” என்று முழுக் குடும்பத்தின் விபரத்தையும் அவசராமகத் தெரிவித்தான் அவன்.
அதற்கிடையில் அவர்கள் வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டிருக்க, “உள்ளே வாருங்கள் மிஸ். ஆன்ட்டி, நீங்களும் வாருங்கள்.” என்று அழைத்தவன், ஒரு பாயை எடுத்து நிலத்தில் விரித்தான்.
“ஓ..! உன் அப்பாவும் அக்காவும் இந்தநேரம் வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்தேனே..” என்றபடி மகேஸ்வரி பாயில் அமர, மஞ்சுளாவும் அமர்ந்துகொண்டார்.
“அவர்கள் வருகிற நேரம்தான் மிஸ். நீங்கள் இருங்கள். நான் ஓடிப்போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றவன், தோட்டத்துக்குள் தாயைத் தேடி விரைந்தான்.
“எளிமையாக இருந்தாலும் வீடும் தோட்டமும் துப்பரவாகத்தான் இருக்கிறது மகி.” என்றார் மஞ்சுளா திருப்தியோடு.
“இலக்கியாவும் அப்படித்தான் அண்ணி. அவளைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீர்கள் பாருங்கள். அவ்வளவு அழகும், அடக்கமும், பணிவும் நிறைந்த பெண். எனக்கு அவளைப் பார்த்த நொடியிலிருந்து நம் தர்சனுக்கு அவளை எப்படியாவது கட்டி வைத்துவிட வேண்டும் என்று ஒரே ஆசை.” என்றவர், “ஓடிப்போனவளே கணவன் குழந்தை என்று வாழ, அவன் மட்டும் எதற்காகத் தனியாக இருக்கவேண்டும்.” என்றார் ஒருவிதக் கோபத்துடன்.
கொழும்பிலிருக்கும் தன்னுடைய சக ஆசிரியத் தோழிகளின் மூலம் வெண்பாவைப் பற்றி அறிந்துதான் வைத்திருந்தார் மகேஸ்வரி. அவளுக்கு ஒரு மகள் இருப்பதாகவும், இப்போது ஏதோ வேலைக்கு அவளும் போவதாகவும். ஆனாலும் அவளைச் சென்றுபார்க்க பிரியப்படவே இல்லை அவர்.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.