அத்தியாயம்-17
ஐயர் மந்திரத்தைச் சொல்ல, சுற்றியிருந்த சொந்த பந்தங்கள் அர்ச்சதை தூவி வாழ்த்த இலக்கியாவின் கழுத்தில் பொன்தாலியை அணிவித்தான் தர்சன். அதைக் கழுத்தில் வாங்கியவளின் முகத்தில் கலக்கம் நிறைந்திருக்க, அணிவித்தவனின் முகமோ கல்லாக இறுகியிருந்தது.
அவனும் மனையாள் ஆகிவிட்டவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவளும் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அவர்களுக்கான அடுத்தடுத்த சடங்குகள் ஒருவித இயந்திர கதியில் நடந்துகொண்டிருக்க, மகளையும் மருமகனையும் வைத்தவிழி அகற்றாது பார்த்திருந்த கந்தசாமியின் முகம் சந்தோசமான உணர்ச்சிக் குவியல்களைச் சுமந்திருந்தது. சந்திராவினது விழிகள் ஆனந்தத்தில் கண்ணீரைச் சொரிந்தன.
அதுநாள் வரை ஏழைவீட்டின் ராஜகுமாரியாக இருந்தவள் இன்றுமுதல் இன்னொரு வீட்டின் மருமகள் அல்லவா!
ராஜசேகர் குடும்பத்தினருக்கோ சந்தோசமும் நிம்மதியும் பொங்கி வழிந்தது. அவர்களது குடும்பத்தில் அதுவரை காலமும் கறுப்புப் புள்ளியாக இருந்து, எல்லோர் மனதையும் உறுத்திக் கொண்டிருந்த தர்சனின் வாழ்க்கையைச் சரிசெய்துவிட்டதாக உணர்ந்தனர்.
மனதில் இருந்த பெரிய சுமை அகன்றதிலும், கடைசி மகனின் திருமணத்தை எளிமையாக என்றாலும் நல்லபடியாக நடத்திவிட்ட நிறைவிலும் அவ்வப்போது ஆனந்தத்தில் கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டார் மஞ்சுளா.
பலவித உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்த மகேஸ்வரியின் இதழ்கள் புன்னகையைச் சிந்தினாலும் விழிகள் இடைநிறுத்தம் ஏதுமின்றிக் கண்ணீரைச் சொரிந்தபடியே இருந்தன.
அதுநாள் வரை அவரது நெஞ்சை உறுத்திக் கொண்டிருந்த, அழுத்திக் கொண்டிருந்த பெரிய பாரம் இறங்கியிருந்தது.
மகள் செய்துவிட்ட பெரும் பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்துவிட்டதாக எண்ணியவருக்கு, இப்போதுதான் மூச்சே வந்தது.
அன்று பள்ளிக்கூடத்தால் வந்த மகேஸ்வரியிடம், தர்சன் திருமணத்துக்கு மறுத்துவிட்டதையும், இலக்கியா குடும்பத்தினர் சம்மதித்து விட்டதையும் சொன்ன மஞ்சுளா, “இந்தத் தர்சனை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை மகி. எவ்வளவு சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கிறானே இல்லை..” என்று புலம்பினார்.
மஞ்சுளாவின் கரத்தைப் பற்றி, “நீங்கள் கவலைப் படாதீர்கள் அண்ணி. நிச்சயம் தர்சன் சம்மதிப்பான். நான் சம்மதிக்க வைக்கிறேன். என் மகளால் தான் அவனுக்கு இந்த நிலை. அதைச் சரியாக்கவேண்டியது என் கடமை.” என்றார் மகேஸ்வரி.
“எப்படியாவது அவனைச் சம்மதிக்க வை மகி. அப்படி மட்டும் நீ செய்துவிட்டாய் என்று வை, வாழ்நாள் முழுக்க நீ செய்ததை நான் மறக்கவே மாட்டேன். என்னால் முடிந்தவரை அவனோடு போராடிப் பார்த்துவிட்டேன். இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை.” என்று அங்கலாய்த்தவர், “நம் வீட்டில் எனக்கு எந்தக் குறையுமில்லை. கண் நிறைந்த கணவன், நல்ல பிள்ளைகள். நல்ல மருமக்கள், அழகான பேரக்குழந்தைகள் என்று எல்லாமே இருந்தும் என்னால் நிம்மதியாக, சந்தோசமாக இருக்க முடிகிறதா பார்? இவனுக்கு ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டால் அவனும் சந்தோசமாக இருப்பான், நானும் நிம்மதியாக இருக்கலாம் என்றால் எங்கே? அவன் கேட்டால் தானே..”
“அண்ணி! அதுதான் சொல்கிறேனே, அவன் கட்டாயம் சம்மதிப்பான் என்று. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள்.” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தவருக்கும், தர்சனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை.
ஆனாலும், எப்படியாவது இந்தத் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டார்.
அன்றிரவு வேலை முடிந்து களைத்துப்போய் வந்த தர்சனுக்கு வாசலிலேயே காத்திருந்த மஞ்சுளாவையும் மகேஸ்வரியையும் கண்டதும், காலையில் நடந்த பேச்சைத் தொடரக் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டது. சட்டெனக் கோபம் மூண்டது!
அதோடு, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொன்னவளின் நினைவும் இலவசமாகத் தொற்றிக்கொள்ள, இறுகிய முகத்தோடு உள்ளே நுழைந்து அவர்களைக் காணதது போன்று சென்றவனிடம், “உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் தர்சன்.” என்றார் மகேஸ்வரி.
பேச முடியாது என்று சொல்லிவிட மனம் துடித்தாலும், தன்னுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏனோ அவனால் அத்தையிடம் காட்ட முடியவில்லை.
கவலையைக் கூடக் கோபமாகக் காட்டும் அன்னையை எதிர்க்க முடிந்தவனால், வேதனை, வலி, ஏக்கம் என்று அனைத்தையும் விழிகளில் சுமந்து ஏக்கத்தோடு தன்னைப் பார்க்கும் மகேஸ்வரியை அலட்சியப்படுத்த முடியவில்லை.
என்ன என்று வாயால் கேட்காதபோதும் அவனது நடை நின்றது.
அதையே அனுமதியாக எடுத்து அவன் அருகில் சென்றவர், “ஏன் கண்ணா இன்னமும் கல்யாணம் வேண்டாம் என்கிறாய்?” என்று வேதனையோடு கேட்டார்.
“ஏன் என்று உங்களுக்குத் தெரியாதா?” அடக்க முயன்றும் முடியாமல் கோப வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.
இலக்கியாவின் பேச்சினால் உசுப்பிவிடப்பட்டு, கல்யாணத்துக்குத் தயாராக இரு என்று அவளிடம் சொன்னபோதும், இங்கே மகேஸ்வரியிடம் அதைச் சொல்ல முடியவில்லை அவனால்.
கலங்கிவிட்ட விழிகளோடு, “அதற்காக இப்படியே எத்தனை நாட்களுக்கு இருப்பாய்?” என்று கேட்டார் அவன் அத்தை.
“இப்படியே என்றால் என்ன அர்த்தம் அத்தை? இப்போது எனக்கு என்ன குறை? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்!”
“நன்றாக இருக்கும் உனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து பார்க்கவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கக் கூடாதா?”
“ஆசைப்படுவது எல்லாம் நடந்துவிடுவது இல்லை அத்தை!” என்றான் கசப்பும் வெறுப்புமாக.
“ஏன் தர்சா இப்படி எல்லாம் பேசுகிறாய்? வெண்பா செய்த காரியமே போதும், இனிவரும் காலம் முழுக்கக் கிடந்து நான் அழுவதற்கு. இதில் நீயும் இப்படி என்னைத் தண்டிக்கிறாயே! இந்த வீட்டை விட்டுப் போன நான் போனவளாகவே இருந்திருக்க இன்று நீ குழந்தை குட்டி என்று வாழ்ந்திருப்பாய் தானே. அதைக் கெடுத்தவள் நான் தானே. உனக்கு ஒரு நல்லதைச் செய்யாமல் நான் செத்தால் கூட என் நெஞ்சுக்கட்டை வேகாது தர்சா. நான் சாகும் முன் நீ சந்தோசமாக இருப்பதைப் பார்க்கவேண்டும் கண்ணா. அதை எனக்கு மடிப்பிச்சையாகக் கொடு..” என்று, கண்களில் வழிந்த கண்ணீரோடு கையேந்தி கேட்டார்.
அப்போதும் அவன் இறுகிப்போய் நிற்க, “இந்தத் திருமணத்துக்குச் சம்மதி தர்சா..” என்றபடி அவன் காலடியிலேயே விழுந்தார் மகேஸ்வரி.
மஞ்சுளாவே அதை எதிர்பாராமல் அதிர்ந்துவிட, “ஐயோ அத்தை..! என்ன இது.. எழுந்திருங்கள். காலில் விழுந்து என்னை ஏன் இப்படிச் சங்கடப்படுத்துகிறீர்கள்.” என்று பதறித் துடித்து அவரைத் தூக்க முயன்றான் தர்சன்.
“மாட்டேன். நீ கல்யாணத்துக்குச் சம்மதம் என்று சொல்லு. அப்போதுதான் எழுந்திருப்பேன்.” என்று அடம்பிடிக்கும் குழந்தையாகக் கண்ணீர் வடித்தார் அவர்.
“சரீ! எதையாவது செய்து தொலையுங்கள். அதற்கு முதலில் எழும்புங்கள்.” என்று பல்லைக் கடித்தபடி சொன்னவன், அவரைப் பற்றி எழுப்பிவிட்டான்.
“மெய்தானே சொல்கிறாய். திருமணத்துக்குச் சம்மதம் தானே..” என்று ஆவலும் மகிழ்ச்சியுமாக அவர் கேட்க, “மெய்யாகத்தான்!” என்றான் அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
மகிழ்ச்சியோடு மகேஸ்வரி மஞ்சுளாவைப் பார்க்க, “அதற்காக எந்த ஆடம்பரமும் இருக்கக் கூடாது. அதோடு என்னை அங்கே வா இங்கே வா என்றும் கூப்பிடக் கூடாது, சொல்லிவிட்டேன்!” என்று இரு பெண்களையும் பார்த்துச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக அகன்றான் தர்சன்.
அது போதாதா அவர்களுக்கு? இதோ, இன்று திருமணத்தையே நடத்தி முடித்துவிட்டார்கள்.
அதுநாள் வரை தர்சனின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டோமே என்று இறுகிப்போய் இருந்தவரின் இறுக்கம் இன்றுதான் தளர்ந்தது! மகளின் நினைவுகள் அவரை ஆக்கிரமித்தது. கூடுதலாகப் பேரக்குழந்தையின் நினைவுகளும் சேர்ந்துகொண்டது.
முன்னரும் அவளின் நினைவுகள் எழும் தான். ஆனாலும் ஒரு தவம்போல் அதை அடக்கிவிடுவார். தன் கடமையை நிறைவேற்றிவிட்ட இன்றோ எப்போதும்போல் அந்த நினைவுகளை அடக்கவும் முடியவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை.
மாறாக, எப்படி இருக்கிறாளோ? சமையல் கூடத் தெரியாதே.. அவள் கணவன் அவளை நன்றாக வைத்திருப்பானா? குழந்தை யாரைப்போல இருக்கும்? என்று எண்ணங்கள் சுற்றிச் சுழன்றன.
மகளைப் பார்க்கவேண்டும் போல்.. ஏனடி இப்படிச் செய்தாய் என்று கேட்கவேண்டும் போல்.. அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கவேண்டும் போல்.. அவரின் பேரக்குழந்தையைக் கையில் தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சவேண்டும் போல்.. இப்படிப் பலவித உணர்வுகள் அவரைத் தாக்கியபோதும் எதையும் வெளியில் காட்டமுடியாமல் புன்னகை முகமாகவே நின்றிருந்தார் மகேஸ்வரி.
மாலைப் பொழுது மங்கி இரவு பொழுது நெருங்கியிருக்க, மெல்லிசையாய் காற்றுச் சாளரம் வழியே அந்த அறைக்குள் வீச, தாயின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் இலக்கியா.
விழியோரங்களில் கண்ணீரின் கோடுகள் தெரிய, முகம் கலக்கத்தில் இருக்க, இதழ்களோ விட்டால் அழுதுவிடுவேன் என்று நடுங்கிக் கொண்டிருந்தன.
“இதே ஊரில் தானே இருக்கப் போகிறோம் லக்கி. நீ நினைத்தால் பத்து நிமிடத்தில் அங்கே வரலாம். நாங்கள் நினைத்தால் இங்கே வரப்போகிறோம். பிறகும் ஏன் இப்படிக் கலங்குகிறாய்.”
அதுநாள் வரை பிரிந்திராத மகளைப் பிரியப் போகிறோமே என்று உள்ளம் கிடந்து அழுதாலும், அவளின் மனப்போராட்டத்தை, பயத்தை எண்ணி உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே மகளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்துச் சொன்னார் சந்திரா. அவரது ஒரு கை மகளின் தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தது.
அந்த வீட்டை நினைத்து, வீட்டு மனிதர்களை நினைத்து, அதுவரை அவளுக்குப் பழக்கமேயிராத வசதியான வாழ்க்கையை நினைத்து, அன்றுமுதல் கணவனாகி விட்டவனுடான உறவை நினைத்து என்று, பலதை எண்ணிக் கலங்கியவள், “பயம்மா இருக்கும்மா.” என்றாள் குரல் நடுங்க.
கண்ணோரம் கண்ணீர்த் துளிகள் இரண்டு கசிந்தன.
நெஞ்சுக்குள் பிசைந்தபோதும், “அசடு! என்ன பயம்? எதற்குப் பயம்? இங்கே இருப்பவர்கள் உன் கணவனும் அவரின் வீட்டு ஆட்களும். அவர்கள் உன் சொந்தம் கண்ணம்மா. உன் மகி மிஸ் வேறு இருக்கிறார். உன் மாமியாரும் நல்ல மாதிரித்தான் தெரிகிறார். பிறகு எதற்குப் பயப்படுகிறாய்?” என்று அன்னை கேட்டபோது, என் கழுத்தில் தாலியைக் கட்டியவனை நினைத்துத்தான் அஞ்சுகிறேன் என்று சொல்ல முடியவில்லை அவளால்.

Last edited by a moderator: