• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 18

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-18


அதுவரை நேரமும் கணவன் வீட்டினருடன் ஒட்டி உறவாட முடியாமல் தவித்துக்கொண்டு நின்றவளின் முகம், உள்ளே வந்த தாயைக் கண்டதும் மல்லிகையாய் மலர்ந்தது. ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர்கூடத் திரண்டது.

தாயைப் பிரிந்த கன்றாக, “அம்மா..!” என்று ஏக்கமும் பரிதவிப்புமாக அழைத்தவள் வேகமாக ஓடிச்சென்று அன்னையைக் கட்டிக்கொண்டாள்.

நெடுநாள் பிரிந்திருந்தவள் போன்ற அவளின் இறுக்கமான அணைப்பில் சிக்குண்ட சந்திராவின் விழிகளும் மெலிதாகக் கலங்கின.

“நன்றாக இருக்கிறாயா லக்கி?” முதல்நாள் இரவுதான் அங்கே விட்டுவிட்டுச் சென்ற மகளிடம் பிரிவுத் துயருடன் விசாரித்தார் அன்னை.

“ம்ம்..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “வாருங்கள் சம்மந்தி. வாம்மா சந்திரா..” என்று வரவேற்றபடி வந்தார் ராஜசேகர்.

அவரோடு மஞ்சுளா முதல்கொண்டு அந்தக் குடும்பத்தின் அனைவரும் வந்து வரவேற்றனர். தர்சன் கூட “வாருங்கள் மாமா, அத்தை.” என்று சொல்லத் தவறவில்லை.

தம்பிகளின் துணையுடன் சோபாவில் அமர்ந்துகொண்ட தந்தையிடம் சென்று, “எப்படிப்பா இருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் கேட்டாள் இலக்கியா.

அவளின் தலையைப் பாசத்தோடு தடவிக் கொடுத்தபடி, “எனக்கு என்னம்மா? நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்றவர், அதே கேள்வியை மகளிடம் கேட்கவில்லை.

மாப்பிள்ளை வீட்டினர் என்கிற மிதப்பு இன்றி, வசதி படைத்தவர்கள் என்கிற திமிரும் இன்றி மொத்தக் குடும்பமுமே வாசலுக்கு வந்து இன்முகத்துடன் வரவேற்றதே, அந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வால் என்பதை அவருக்கு உணர்த்தியது.

ராஜசேகரும் அவரும் நாட்டு நிலவரங்கள் முதல்கொண்டு அரசியல் தொடங்கி விவசாயம் வரை அலசத் தொடங்க, மஞ்சுளா மருமக்களின் உதவியுடன் அவர்களை உபசரித்தார்.

மலர்ந்த முகத்தோடு தன்னையே மறந்து தம்பிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த மனைவியை அவதானித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன்.

“மருமகனையும் மகளையும் விருந்துக்கு அழைக்க வந்திருக்கிறோம், சம்மந்தி. எப்போது உங்களுக்கு வசதி என்று சொன்னால் அதற்கு ஏற்றவாறு நாங்கள் ஏற்பாட்டைச் செய்வோம்.” பலகாரத்தோடு தேநீரையும் அருந்திவிட்டுச் சொன்னார் கந்தசாமி.

ராஜசேகர் தர்சனைப் பார்த்தார். அவனோ, “வேலைகள் நிறைய இருக்கப்பா..” என்றான்.

அதைக்கேட்ட இலக்கியாவின் முகம் வாடியது.

அதைக் கவனித்துவிட்டு, “வேலை எப்போதும்தான் இருக்கும். அதற்காக விருந்துக்குப் போகாமல் இருக்க முடியுமா என்ன?” என்றார் அவன் தந்தை. அந்தக் குரல் அவன் அங்குக் கட்டாயம் செல்லவேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தியது.

தந்தையின் பேச்சை மறுத்து ஏதும் சொல்லாதபோதும் போவதாகவும் அவன் சொல்லவில்லை.

அமைதியாக இருந்தே மறுப்பைத் தெரிவித்துத் தன் பெற்றவர்களை அவன் அவமதிப்பதாக எண்ணினாள் இலக்கியா. அவமானத்தில் அவள் முகம் சிவந்தது.

முதல்நாள் இரவு அதது நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே ஆகவேண்டும் என்று பெரிய இவன் மாதிரி சொன்னவன், இப்போது இதை மட்டும் மறுப்பது ஏனாம்? இந்த விருந்தும் தான் நடக்கவேண்டிய ஒன்று.

இதையெல்லாம் நினைத்து அவளால் மனதுக்குள் மட்டுமே புழுங்க முடிந்தது.

தாய் தந்தையர் கவலைப் படப்போகிறார்களே என்கிற தவிப்போடு அவர்களை அவள் பார்க்க, அப்படி எதுவும் தெரியவில்லை அவர்களின் முகத்தில்.

மாறாக, “உங்களுக்கு எப்போது நேரமிருக்கும் என்று சொல்லுங்கள் தம்பி.” என்றார் அவள் தந்தை நயந்த குரலில்.

இந்த அப்பா எதற்கு மரியாதை தெரியாத இவனிடம் கெஞ்சுகிறார் என்று அவள் நினைக்கையிலேயே, “வருகிற ஞாயிரு பார்க்கலாம்..” என்றான் அவன் பட்டும் படாமல்.

இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதே என்று மனம் சுணங்கியது லக்கிக்கு. அப்படியாவது சம்மதித்தானே என்று ஆறுதலும் பட்டுக்கொண்டாள்.

அன்று இரவும் அவன் அவளை நெருங்கியபோது முதல் நாளைவிடக் கொஞ்சம் திடமாகவே மறுத்தாள் இலக்கியா.

“உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாது?” புருவங்களைச் சுளித்து வினவினான் தர்சன்.

“ஒன்றைச் சொல்பவர்களும் அதன்படி நடக்கவும் வேண்டும்.” கல்லைப் போன்றிருந்த அவன் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருந்தாலும் காலையில் பெற்றவர்களை அவன் அவமதித்த கோபத்தில் சொன்னாள் இலக்கியா.

“அதாவது..?”

“மாமனார் வீட்டுக்குச் சென்று விருந்து உண்பதும் நடக்கவேண்டிய ஒன்றுதான்.”

“வருவதாகத்தான் சொல்லியிருக்கிறேன்!”

“மறுக்கமுடியாத நிலையில் சொன்னீர்கள். நீங்களாக விரும்பிச் சொல்லவில்லை.”

“உண்மைதான்! எனக்கு அங்குப் போகவேண்டிய கட்டாயமில்லை!” என்றான் அலட்சியமாக.

எவ்வளவு அலட்சியம் என்று நெஞ்சம் கொதித்தது இலக்கியாவுக்கு. “எனக்கும் தான் இது பிடிக்கவில்லை.” என்றாள் அவளும், கட்டிலைக் கண்களால் காட்டி.

அது அவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை. தோள்களைத் குலுக்கியவன், “என்னைக் கூடத்தான் பிடிக்கவில்லை என்று சொன்னாய்.!” என்றான் இதழோரம் ஏளனத்தில் வளைய.

நீ அப்படிச் சொன்னதால் ஏதாவது மாறிப்போனதா என்று கேட்கிறான். அவள் பேச்சுக்கு அவனிடம் மதிப்பில்லை என்கிறான். அவளின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றிய அக்கறை அவனுக்கு இல்லை என்கிறான். எவ்வளவு உதாசீனம்?

“பிறகும் எதற்காக என்னைக் கட்டிக்கொண்டீர்கள்?”

“என்னைப் பிடிக்கவில்லை என்று நீ சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான்!”

“என்னது??” அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் இலக்கியா. இப்படி ஒரு காரணத்துக்காக யாராவது திருமணம் செய்வார்களா?

இவன் என்ன மாதிரியான மனிதன்? அவளின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பில்லை, பெற்றவர்களுக்கு மதிப்பில்லை. இப்படி அவன் உதாசீனமாக நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? அவள் செய்த தவறுதான் என்ன? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

“இப்படித்தான் அந்தப் பெண்ணிடமும் அராஜகமாக நடந்துகொண்டு இருப்பீர்கள்.அதுதான் அவள் உங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.” என்றுவிட்டாள் இலக்கியா, மனதின் புழுக்கம் தாங்காமல்.

“ஏய்!!” நொடியில் உக்கிரம் கொண்டவனின் கையில் அவள் கழுத்துச் சிக்கியிருந்தது. இலக்கியாவுக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது. அந்தளவுக்கு விழிகள் சிவந்து, தாடை இறுகி பாராங்கல்லைப் போன்று இருந்தது அவன் முகம்.

“அவளைப் பற்றி எதையாவது பேசினாய் என்றால் கொன்றே போடுவேன்!” என்றான் உறுமலாக.

அவன் கழுத்தைப் பற்றியதில் தொண்டை உலர்ந்து உதடுகள் காய்ந்துவிட, அச்சத்தில் விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தவளிடம், “இனியாவது ஒழுங்காக நடந்துகொள்!” என்றபடி, தன் கையை எடுத்துக்கொண்டான் அவன்.

அவளுக்கோ அவனை வெறுத்தே போனது! அந்த வெண்பாவைப் பற்றிய ஒரு சொல்லை அவனால் பொறுக்க முடியவில்லையாமா? அப்படியானவன் எதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டினான்? எதற்காக அவளைத் தொட்டானாம்?

அவளை நினைத்து இவளையா? சீச்சீ! நெஞ்சு காந்தியது அவளுக்கு. நேற்றிரவு அவன் சுகித்த மேனி நெருப்பாகக் கொதிக்க, “உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை!” என்றாள் வெறுப்புடன்.

அன்று சொன்ன அதே வார்த்தைகளை இன்றும் கசப்பும் வெறுப்புமாக அவள் சொன்னபோது, அவன் முகம் செந்தணலாய் ஜொலித்தது!

அடுத்தக் கணமே அது சாதரணமாக மாற, “நல்லது! இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நிதானமாக.. வெகு நிதானமாக அவன் கேட்டபோது திடுக்கிட்டுப்போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.

அதே குரல்!

அன்று, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் சொன்னபோது ‘நீ யாரையாவது காதிலிக்கிறாயா?’ என்று கேட்ட அதே நிதானமான குரல்!

பிறகு திருமணத்தையே நடத்தி முடித்தானே!

அப்படி இன்றும் என்ன செய்யக் காத்திருக்கிறானோ? நினைக்கவே மேனி சில்லிட்டது அவளுக்கு.

அதோடு, அன்று அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இருந்தது. இன்று கேட்ட கேள்விக்கு?

இனி அவள் என்னதான் செய்யமுடியும்? ஒன்றுமே இல்லையே!

விழிகளில் பெருகிய நீருடன், “என்னால் இனி எதுவுமே செய்ய முடியாதுதான். அதற்காக இன்னொருத்தியை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீங்கள் வாழலாமா? அது எனக்கு அசிங்கம் இல்லையா?” என்று கேட்டாள்.

“என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்தாயா?” என்று அதற்கும் சீறினான் அவன்.

அவளின் ஒரு கையைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன், “கண்டவளையும் நினைத்து உன்னைத் தொடும் அளவுக்கு நான் ஒன்றும் பேடி இல்லை. நீ என் மனைவி. என் மனைவியை நான் தொடுவதில் என்ன அசிங்கத்தைக் கண்டாய் நீ?” என்று அவளின் முகத்துக்கு நேரே கர்ஜித்தான்.

அவ்வளவு அருகில் அவன் கூர்விழிகளைச் சந்தித்ததில் அச்சம் எழுந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு ஆறுதலாகவும் உணர்ந்தாள். இந்த அளவுக்காவது அவளை மதிக்கிறானே.

“என் மனம் மாறும் வரைக்குமாவது நீங்கள் கொஞ்சம் பொறுக்கக்கூடாதா?” தன்னிலை இறங்கிவந்து கெஞ்சலாகக் கேட்டாள்.

இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதை எற்றுக் கொள்வதற்காவது அவளுக்கு அவகாசம் வேண்டாமா?

“பொறுப்பதா? ஏன் நீயும் எனக்கு டாட்டா பாய்பாய் காட்டிவிட்டுப் போவதற்கா?” என்று கேட்டான் அவன் கடினப்பட்ட குரலில்.

அவனது பேச்சில் அவள் அதிர்ந்துபோய் விழிக்க, “கட்டிய கணவனின் தொடுகையை ஏற்பது அவ்வளவு சிரமமா உனக்கு? அப்படி என்னிடம் இருந்து உன்னைக் காத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நஞ்சென அவன் வார்த்தைகளைக் கொட்டியபோது, அவள் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

“ஏன் இப்படி இரக்கமே அற்றவராக நடந்துகொள்கிறீர்கள்?” தாங்கமுடியாமல் அவள் கேட்டபோது,

“ஏன், உன்னை என்ன நான் கடித்தா குதறினேன்?” என்று சீறினான் அவன்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அவளை நினைத்து இவளையா? சீச்சீ! நெஞ்சு காந்தியது அவளுக்கு. நேற்றிரவு அவன் சுகித்த மேனி நெருப்பாகக் கொதிக்க, “உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை!” என்றாள் வெறுப்புடன்.

அன்று சொன்ன அதே வார்த்தைகளை இன்றும் கசப்பும் வெறுப்புமாக அவள் சொன்னபோது, அவன் முகம் செந்தணலாய் ஜொலித்தது!

அடுத்தக் கணமே அது சாதரணமாக மாற, “நல்லது! இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நிதானமாக.. வெகு நிதானமாக அவன் கேட்டபோது திடுக்கிட்டுப்போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.

அதே குரல்!

அன்று, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் சொன்னபோது ‘நீ யாரையாவது காதிலிக்கிறாயா?’ என்று கேட்ட அதே நிதானமான குரல்!

பிறகு திருமணத்தையே நடத்தி முடித்தானே!

அப்படி இன்றும் என்ன செய்யக் காத்திருக்கிறானோ? நினைக்கவே மேனி சில்லிட்டது அவளுக்கு.

அதோடு, அன்று அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இருந்தது. இன்று கேட்ட கேள்விக்கு?

இனி அவள் என்னதான் செய்யமுடியும்? ஒன்றுமே இல்லையே!

விழிகளில் பெருகிய நீருடன், “என்னால் இனி எதுவுமே செய்ய முடியாதுதான். அதற்காக இன்னொருத்தியை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீங்கள் வாழலாமா? அது எனக்கு அசிங்கம் இல்லையா?” என்று கேட்டாள்.

“என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்தாயா?” என்று அதற்கும் சீறினான் அவன்.

அவளின் ஒரு கையைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன், “கண்டவளையும் நினைத்து உன்னைத் தொடும் அளவுக்கு நான் ஒன்றும் பேடி இல்லை. நீ என் மனைவி. என் மனைவியை நான் தொடுவதில் என்ன அசிங்கத்தைக் கண்டாய் நீ?” என்று அவளின் முகத்துக்கு நேரே கர்ஜித்தான்.

அவ்வளவு அருகில் அவன் கூர்விழிகளைச் சந்தித்ததில் அச்சம் எழுந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு ஆறுதலாகவும் உணர்ந்தாள். இந்த அளவுக்காவது அவளை மதிக்கிறானே.

“என் மனம் மாறும் வரைக்குமாவது நீங்கள் கொஞ்சம் பொறுக்கக்கூடாதா?” தன்னிலை இறங்கிவந்து கெஞ்சலாகக் கேட்டாள்.

இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதை எற்றுக் கொள்வதற்காவது அவளுக்கு அவகாசம் வேண்டாமா?

“பொறுப்பதா? ஏன் நீயும் எனக்கு டாட்டா பாய்பாய் காட்டிவிட்டுப் போவதற்கா?” என்று கேட்டான் அவன் கடினப்பட்ட குரலில்.

அவனது பேச்சில் அவள் அதிர்ந்துபோய் விழிக்க, “கட்டிய கணவனின் தொடுகையை ஏற்பது அவ்வளவு சிரமமா உனக்கு? அப்படி என்னிடம் இருந்து உன்னைக் காத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நஞ்சென அவன் வார்த்தைகளைக் கொட்டியபோது, அவள் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

“ஏன் இப்படி இரக்கமே அற்றவராக நடந்துகொள்கிறீர்கள்?” தாங்கமுடியாமல் அவள் கேட்டபோது,

“ஏன், உன்னை என்ன நான் கடித்தா குதறினேன்?” என்று சீறினான் அவன்.

அதை ஒன்றைத்தான் நீ செய்யவில்லை என்றது அவள் மனது.

“இப்படியெல்லாம் நடந்துகொள்வதால் உங்களுக்குக் கிடைத்த இலாபம்தான் என்ன?” பொறுக்கமுடியாமல் குமுறினாள் லக்கி.

சுட்டுவிரலை அவளை நோக்கி நீட்டியவன் அதை மேலும் கீழுமாக அசைத்து, “இந்த அழகான மேனி எனக்குச் சொந்தமாகியிருக்கிறதே!” என்றான் அவளை நெருங்கியபடி.

அந்த மேனிக்குள் இருக்கும் மனதைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே இல்லையா என்கிற கேள்வி எழுந்தாலும், அவன் செய்யப்போவதை உணர்ந்தவள் வேகமாகப் பின்னடைந்தாள்.

“பயனற்ற மறுப்பு!” என்று அலட்சியமாகச் சொன்னவன், அவளை நெருங்கி அணைத்தான். அதற்குமேல் அவளைப் பேச விடவும் இல்லை. அவனிடமிருந்து விலக விடவும் இல்லை! கணவன் என்கிற உரிமையை, அன்று மட்டுமல்ல தொடர்ந்த நாட்களிலும் வலுக்கட்டாயமாக நிறைவேற்றினான் அந்தப் பிடிவாதக்காரன்!



அன்று காலையில் எழும்போதே இலக்கியாவின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. பின்னே, தாய்வீட்டுக்குப் போகப்போகிறாளே!

இப்போதே செல்ல மனம் பரபரத்தாலும் அது தன் கையில் இல்லை என்று இயலாமையோடு எண்ணியவள், தலைக்குக் குளித்துத் தாய் வீட்டுக்குச் செல்வதற்கு ஏற்ற வகையில் சேலையும் அணிந்துகொண்டாள். அவனுக்கான உடைகளையும் எடுத்து வைத்தாள்.

அது அவளுக்கு அவன் இட்டிருக்கும் வேளைகளில் ஒன்று. ஆமாம்! அவளைப் பொறுத்தமட்டில் அது வேலைதான்!

அது மட்டுமல்ல, அவனுக்கு உணவு பரிமாறுவது, வேலை முடிந்து வீட்டுக்குள் வருபவனின் பிரீப்கேசை வாங்கி அறையில் அறையில் வைப்பது, குளிக்கச் செல்பவனுக்குத் துடைக்கும் துவாலை முதல் அணியும் ஆடை வரை அனைத்தையும் எடுத்து வைப்பது, அவன் வீட்டில் நிற்கும் நேரங்களில் அவனுக்கு வேண்டியவைகளைக் கவனிப்பது என்று அவளையும் அவனுடைய தேவைகளைக் கவனிக்க வைத்தான். ஒவ்வொரு செயலிலும் நீ என் மனைவி என்பதை அவளுக்கு வலியுறுத்திக்கொண்டே இருந்தான்.

அவளோ, அவன் கட்டளைக்குப் பணிந்து, ஒருவித கட்டாயத்தில் செய்தாளே தவிர, மனமுவந்து செய்யவே இல்லை. செய்ய முடியவில்லை. மனம் முரண்டிக்கொண்டே இருந்தது.

இன்னொருத்தியை மனதில் சுமப்பவனின் உடல் தேவைக்கு வடிகாலாகிப் போனோமே என்று மருகினாள். இப்படியொரு இழிவான வாழ்க்கை வாழும் அளவுக்குத் தான் செய்த பாவம் தான் என்ன என்று தவியாய் தவித்தாள்.

ஆனால் அவனுக்கு அதெல்லாம் ஒரு விசயமாகவே படவில்லை போலும். எப்போதும்போல வேலைக்குப் போனான், வந்தான், இரவில் வலுக்கட்டாயமாக அவளை அணைத்தான்.

இவள்தான், எதிர்த்துப் பலனில்லை என்று கண்டு, மனதில் மருகிக்கொண்டே அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டாள்.

ஒருவழியாக அவர்கள் இருவரும் தயாராகி இலக்கியாவின் வீட்டுக்குச் சென்றபோது, சுதனும் பாலனும் வாசலுக்கே ஓடிவந்து, “வாருங்கள் அத்தான்.. வாக்கா..” என்று தடல்புடலாக வரவேற்றனர்.

சந்திராவுக்கு மாப்பிள்ளையின் முன் வருவதற்குக் கூச்சமாக இருந்தாலும் ஒரு ஓரமாக நின்று வரவேற்கத் தவறவில்லை.

அந்தச் சின்ன வரண்டாவில் ஒருபக்கமாக இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த கந்தசாமி, புதிதாக வாங்கிப் போடப்பட்டிருந்த பிளாஸ்ரிக் நாற்காலியைக் காட்டி, “அமருங்கள் தம்பி.” என்று உபசரித்தார்.

“வீட்டில் எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா?” என்று, தர்சனிடம் அவர் சம்பிரதாயமாகப் பேச்சைத் தொடங்க, சமையல் செய்துகொண்டிருந்த தாயிடம் சென்றாள் இலக்கியா.

“அப்படியே தம்பிக்கும் குடிக்க எதையாவது வாங்கி வாம்மா லக்கி..” என்றார் அவள் தந்தை.

“இந்த வெயிலுக்கு இளநீர் குடித்தால் நன்றாக இருக்கும் அப்பா..” என்று அவசரமாகச் சொன்ன பாலன்,
 

Vishakini

Moderator
Staff member
“அத்தான், இளநீர் வெட்டித் தரவா? எங்கள் வீட்டில் செவ்விளநீர் மரம் நிற்கிறது..” என்று ஆர்வத்தோடு கேட்டான்.

அவனுக்கு, அசாத்திய உயரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, அளவாய் சிரித்துப் பேசும் அத்தானிடத்தில் ஒருவித மயக்கமே இருந்தது. என்னுடைய அத்தான் என்கிற உரிமையும், அவருக்குப் பிடித்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் மேலோங்கி நின்றது.

“டேய்! அத்தான் வீட்டில் பெரிய பெரிய தோட்டமே வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இல்லாத செவ்விளநீர் மரமா எங்கள் வீட்டில் இருக்கப் போகிறது.” என்று தம்பியிடம் சொன்னாலும், இளநீரைக் கொண்டுவந்து நீட்டவும் தவறவில்லை சுதன்.

“நீங்கள் இன்று வருவதாகச் சொன்னதில் எனக்குப் பெரிய சந்தோசம் அத்தான்..” என்றான் பாலன்.

“ஏன்?” என்று அளவான புன்னகையோடு தர்சன் கேட்க, “கிழமை நாட்களில் என்றால் பள்ளிக்கூடம் இருக்கும். சனியில் டியுஷனுக்குப் போய்விடுவேன். ஞாயிரு என்றால் நானும் நிற்பேன் இல்லையா. உங்களோடு கதைத்துக்கொண்டு இருக்கலாமே..” என்று அவன் சலசலக்க,

“ஓ..” என்றுமட்டும் சொன்னான் தர்சன். அதற்குமேல் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை அவனுக்கு.

பாலனுக்கு அந்த ‘ஓ’ மட்டுமே போதுமாக இருந்தது. அவனுக்குப் பிடித்த அத்தானிடம் பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்கள் தொடங்கி நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு முதல் அனைத்தையும் அளக்கத் தொடங்கினான். சுதனும் கந்தசாமியும் “அத்தானை அறுக்காதேடா” என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.

தவிர்க்க முடியாமல் கேட்டுக் கொண்டிருந்த தர்சன், இவள் எங்கே போனாள் என்பதாக மனைவி சென்ற திசையைப் பார்த்தான்.

அவளோ, “புதிதாக மேசை, கதிரைகள், கட்டில் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கிறீர்கள். ஏதம்மா பணம்?” என்று கவலையோடு அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கணவன் வீட்டினர் சீதனம் என்று எதையும் கேட்காதபோதும், திருமணச் செலவு முழுவதையும் அவர்களே பார்த்துக் கொண்டாலும், திருமணத்துக்குத் தேவையான உடைகள், மெல்லிய நகைகள் என்று அவளுக்காகச் செலவழித்த தொகையே அவர்களின் சக்தியை மீறியது. அப்படியிருந்தும் எதற்கு இந்த வீண் செலவுகள் என்கிற கவலை அவளுக்கு.

“இப்போ அதுவா முக்கியம்? அதை விட்டுவிட்டு நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்லு? உன் புருஷன் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாரா? மாமியார் மாமனார் எல்லோரும் எப்படிம்மா?” என்று விசாரித்தார் சந்திரா.

“எல்லோரும் நல்லவர்கள் தான்மா. என்னையும் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். எனக்குத்தான் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. யாரோடும் ஒட்ட முடியவில்லை. இங்கே எப்போதடா வருவேன் என்று இருந்தது. அப்பா, நீங்கள், தம்பிகள் என்று ஒரே நம் வீட்டின் நினைவுதான்.” என்றாள் தொண்டையடைக்க.

மகளின் பாசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்தாலும், திருமணமாகி புகுந்தவீட்டுக்குச் சென்ற பெண்பிள்ளை பிறந்தவீட்டு நினைவில் அங்கு ஒட்டாமல் இருப்பது ஆரோக்கியமான விஷயம் அல்லவே!

“இதென்ன பேச்சு லக்கி? இனி அதுதான் உன் வீடு. அவர்கள் தான் உன் சொந்தம். கணவன், கணவன் வீடு என்று வாழப்பழகு. அந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக, உன் கணவனுக்கு நல்ல மனைவியாக நீ வாழ்ந்து காட்டுவதுதான் உனக்கும் பெருமை. உன்னைப் பெற்ற எங்களுக்கும் பெருமை.” என்றார் தாய் கண்டிப்புடன்.

ஏற்கனவே மனதில் இருந்த வேதனைகளை யாரிடமும் சொல்லாமல் அடக்கிக்கொண்டு இருந்தவளுக்குத் தாயின் கண்டிப்பில் விழிகள் கலங்கியது.

“இப்போ உங்களுக்குக் கெட்ட பெயரை வாங்கித் தரும் விதமாக நான் என்னம்மா செய்துவிட்டேன்?” என்று மனத்தாங்கலுடன் கேட்டாள்.

“அங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றாயே. அது போதாதா? இதை மாப்பிள்ளையோ அல்லது அவர் வீட்டு ஆட்களோ கேட்டால் என்ன நினைப்பார்கள்?” என்று அதட்டினார் அன்னை.

முகச் சிணுக்கத்துடன் அவள் அமைதியாக இருக்க, “திருமணமான புதிதில் கணவன் வீட்டாரோடு பழகக் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அதற்காக அங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்பாயா? நம் மனதை நாம்தான் மாற்றவேண்டும் லக்கி. இனி அங்கேதான் உன்வாழ்க்கை. கடைசிவரை நீ அந்தவீட்டு மருமகள் தான் என்பதை உன் மனதில் பதியவை! உன் கணவன் என்று உரிமையோடு நினைத்துப்பார். பிறகு அந்தவீடும், அங்கிருப்பவர்களும் உன் சொந்தம் என்கிற எண்ணம் அதன்பாட்டுக்கு வந்துவிடும்.” என்று புத்தி சொன்னார் அவர்.

ஏற்றுக்கொள்ளப் பிடிக்காவிட்டாலும் உண்மை அதுதான் என்று விளங்கியது. இனி என்ன நடந்தாலும் அவள் பிரியதர்சனின் மனைவி. ராஜசேகர் குடும்பத்தின் கடைசி மருமகள்.

அதை இனி யாராலும் மாற்றமுடியாது என்று வேதனையோடு நினைக்கையிலேயே, அதை ஒருபெண் மாற்றிவிட்டுச் சென்றிருக்கிறாள் என்கிற எண்ணம் தானாக வந்தது.

அந்த எண்ணத்தோடு கணவன் அந்தப் பெண்ணைக் காதலித்ததும், அவளுடன் மூன்று மாதமும் வாழ்ந்ததும் நினைவில் வர நெஞ்சடைத்தது அவளுக்கு. அதை மறக்கவும் முடியாமல், இனி இதுதான் என் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறும் தன்னிலை எந்தப் பெண்ணுக்குமே வரக்கூடாது என்று எண்ணினாள்.

அப்போது, “சமையல் முடிந்துவிட்டதா என்று அப்பா கேட்கிறார் அம்மா. அத்தானுக்குப் பசிக்கப் போகிறது. இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?” என்றபடி அங்கே வந்தான் பாலன்.

“இதோ, தக்காளிப்பழச் சம்பல் ஒன்றுதான் செய்யவேண்டும். அதுவும் முடிந்துவிடும்.” என்று மகனிடம் சொன்னவர், “நீயும் மாப்பிள்ளையுமாகப் போய்க் கைகால்களை அலம்பிக்கொண்டு வாருங்கள்.” என்றார் மகளிடம்.

“நான் அத்தானைக் கூட்டிக்கொண்டு போகிறேன்...” என்று முந்திக்கொண்டு சொன்ன மகனிடம், “அதை அக்கா செய்யட்டும். நீ வா. இந்த உணவுப் பாத்திரங்களை எல்லாம் புதிதாக வாங்கிய சாப்பாட்டு மேசையில் கொண்டுபோய் வை! சுதனையும் இங்கே வரச் சொல்லு!” என்றார் அதட்டலாக.

தாய் அறியாத சூழ் ஏது? மகளின் பேச்சிலிருந்தும் நடவடிக்கைகளில் இருந்தும் கணவன் மனைவிக்குள் இன்னும் ஏதோ ஒரு இடைவெளி இருப்பதை அவர் புரிந்துகொண்டார். திருமணமாகி ஐந்தே நாட்கள் ஆனவர்களுக்குள் பெரிய அன்னியோன்யம் வந்துவிடப் போவதில்லை தான். என்றாலும், ஒருவித ஈர்ப்பு இருக்கும். அதை வைத்தே புதிதாகப் பார்ப்பவர்கள் கூட உணர்ந்துகொள்வார்கள் இவர்கள் புதுமணத் தம்பதிகள் என்று.

அப்படியான ஈர்ப்பை இங்கே காணவில்லை என்பதை மகளையும் மருமகனையும் விருந்துக்கு அழைக்கப் போன அன்றே அவர் புரிந்துகொண்டாலும், அது இன்னும்
சீராகவில்லை என்பது இப்போதும் தெளிவாகத் தெரிந்தது.
 

Vishakini

Moderator
Staff member
எனவே முடிந்தவரை அதற்குத் தன்னாலான முயற்சிகளைச் செய்ய நினைத்தார்.

ஒரு பெரிய சொம்பு நிறையத் தண்ணீருடன் சென்று, “கை கழுவ வாருங்கள்..” என்று கணவனை அழைத்தாள் லக்கி.

எழுந்து வெளியே வந்தபடி, “முகத்தையும் கழுவினால் நல்லது. வெயிலுக்கு வியர்த்துக் கொட்டுகிறது.” என்றான் அவன்.

“தம்பியை கிணற்றடிக்கு அழைத்துப்போ லக்கி. அங்கே வாளியில் தண்ணீர் இருக்கும்.” என்றார் கந்தசாமி.

சொம்பை வைத்துவிட்டு, கிணற்றடிக்கு கணவனை அழைத்துச் சென்றாள் லக்கி.

அங்கே வாளியில் இருந்த நீரைத் தொட்டுப்பார்க்க, அது வெயிலில் கிடந்ததில் சுட்டது. குளிர் நீரில் முகம் கழுவினால் தானே இந்த வெக்கை கொஞ்சமாவது அடங்கும் என்று நினைத்தவள், சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் செருகிவிட்டு, வாளியில் இருந்த நீரை நிலத்தில் ஊற்றிவிட்டு வாளியை கிணற்றுக்குள் போட்டாள்.

அதுவரை நேரமும் மனைவியின் செயல்களை வேடிக்கை பார்த்தவன், அவள் செய்யப்போவதை உணர்ந்து, “நீ தள்ளு..” என்றுவிட்டுக் கயிறை பற்றினான்.

“உங்களுக்குக் கிணற்றில் நீர் அள்ளத்தெரியுமா?” ஆச்சரியத்தில் விரிகள் விரியக் கேட்டாள் இலக்கியா. பிறந்ததில் இருந்தே சொகுசு வாழ்க்கையில் மிதந்தவனுக்கு இதெல்லாம் எங்கே தெரிந்திருக்கப் போகிறது என்று நினைத்தாள் அவள்.

அவளின் பாவனையில் சற்று அதிகமாகவே அவன் பார்வை மனைவியின் முகத்தில் படிந்து விலகியது. “ஒரு விவசாயின் மகனுக்கு இது தெரியாமல் இருக்குமா?” என்று கேட்டுவிட்டு, மிக லாவகமாக நீரை அள்ளினான்.

அணிந்திருந்த சட்டையைக் கழட்டி அவளிடம் கொடுத்துவிட்டு கைகால், கழுத்து முகம் என்று கழுவிவிட்டு அவன் நிமிர்ந்தபோது, துவாலையைக் கையில் பிடித்திருந்தவளின் பார்வை வேறு எங்கோ இருந்தது.

துவாலையை வாங்கி முகத்தைத் துடைத்தபடி, “அங்கே என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டான் தர்சன்.

“அது நான் வைத்த ரோஜாத்தோட்டம்..” என்றாள் இலக்கியா.

“ஓ..! வா பார்த்துவிட்டு வரலாம்..” என்றுவிட்டு அவன் நடக்க, அவனைப் பின்தொடர்ந்தாள் லக்கி.

அங்கே மஞ்சள், சிவப்பு, ஆரெஞ்ச், வெள்ளை என்று பலவண்ணத்தில் ஒரு ரோஜாக்காடே நின்றது.

அவன் ஆச்சரியத்தோடு பார்க்க, “எல்லாமே நான் வைத்தது.” என்றாள் அவள் பெருமையாக.

அவளளவு உயரத்தில் நின்ற ரோஜாச் செடியைக் காட்டி, “இது நான் ஒன்பதாவது படிக்கும்போது ஒரு குட்டிச்செடியாக வைத்தேன். பாருங்கள் இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டது...” என்று சொன்னாள் அவன் மனைவி.

“இந்த வெள்ளை ரோஜாச்செடி நான் பத்தாவதில் நல்ல மார்க்ஸ் எடுத்தேன் என்று அப்பா வாங்கித் தந்தது.”

“இதைப் பாருங்கள், ஒருபக்கம் சிவப்பு ரோஜாக்களும் இன்னொரு பக்கம் மஞ்சளும் பூத்திருக்கிறது. ஒட்டுமரம். நானே ஒட்டினேன் தெரியுமா?” என்றாள் பெருமையோடு.

முகம் விகசிக்க, விழிகள் பளிச் பளிச்சென்று மின்ன, முத்துப்பற்கள் ஒளிவீச, செவ்விதழ்களில் புன்னகை மின்ன உற்சாகப் பந்தாய் தன்னை மறந்து அவனிடம் இயல்பாகப் பேசும் மனைவியை வியப்போடு நோக்கினான் தர்சன்.

அந்த நான்கு நாட்களில் முதன்முறையாக அவனது விழிகளைப் பார்த்து, தயக்கம் எதுவுமின்றிப் பேசுகிறாள்!

அதிலும், எரிக்கும் அந்த வெயிலிலும் சிரித்துக்கொண்டு நின்ற அடர் சிவப்பு ரோஜா ஒன்றை இரு கைகளினாலும் தாங்கி, ஆசையோடு தன்னுடைய இதழ்களை அவள் அதில் பதித்தபோது அவன் பார்வையே மாறிப்போனது.

விழிகளோ, அந்த ரோஜாவைவிட மென்மையான அவளின் செப்பிதழ்களில் நிலைத்தது.

“இது இப்போதுதான் முதன் முதலாகப் பூத்திருக்கிறது..” என்று குதூகலத்துடன் சொல்லிக்கொண்டு நிமிர்ந்தவள், கணவனின் பார்வையின் பொருள் புரியாமல் குழம்பிப் போனாள்.

அதற்குமேல் அங்கு இயல்பாக நிற்க முடியாமல், “சாப்பிடப் போகலாம் வாருங்கள்..” என்று அவள் முணுமுணுக்க, அவனோ அதற்கு ஒன்றும் சொல்லாது அவளை நெருங்கினான்.

ஒவ்வொரு அடியாக அவன் நெருங்க நெருங்க, விரிந்த விழிகளால் அவனையே பார்த்தபடி அப்படியே நின்றாள் இலக்கியா.

அவளின் முகத்திலேயே பார்வையைப் பதித்தபடி அவளை நெருங்கியவன், ஒருநொடி தாமதித்து அவளது தோளில் கிடந்த சட்டையை எந்த அவசரமும் இன்றி எடுத்தான்.

‘ஹப்பா.. இதை எடுக்கத்தான் அருகில் வந்தானா?’ அதுவரை அடைத்திருந்த மூச்சு அப்போதுதான் அவளிடமிருந்து வெளியேறியது.

அவளைக் கண்டுகொண்டான் போலும், விழிகளில் குறும்பும் இதழ்களில் கேலிப்புன்னகையும் ஒருங்கே தோன்ற ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் அவன்.

அதைப் பார்த்தவளுக்கு மீண்டும் மூச்சடைத்தது!

“அத்தான்! இங்கே என்ன செய்கிறீர்கள்? வாருங்கள் சாப்பிட. அக்கா நீங்களும் வாருங்கள்..” என்றபடி அங்கு வந்தான் பாலன்.

அவனிடம் கணவனின் பார்வை திரும்பவும் தான், நெஞ்சப் படபடப்பு சற்று அடங்கியது அவளுக்கு.

ஏன் இந்தப் படபடப்பு? ஏன் புதுவிதமான இந்தத் தடுமாற்றம்? அவளுக்குப் புரியவே இல்லை.

தாய் வீட்டுக்கு வந்திருக்கிறோம் என்கிற சந்தோசத்தினாலா? அல்லது அவள் ஆசையாசையாக வளர்த்த ரோஜாத் தோட்டத்தையும், அங்கே மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த ரோஜாக்களையும் பார்த்ததில் இளகிப் போயிருந்த மனதினாலா? அல்லது அன்னையின் அறிவுரைகளைக் கேட்டதாலா? அல்லது என்னதான் அவள் மனம் முரண்டினாலும் அவளுக்கு விதித்திருக்கும் வாழ்க்கை இதுதான் என்று மனதில் பதிந்ததாலா?

எதனால் என்று தெரியாத போதும் ஏதோ ஒரு மெல்லிய மாற்றம் அவளுக்குள் அவள் அறியாமலேயே!

அதன்பிறகு அவர்களுக்காக என்று கொடுக்கப்பட்ட விருந்தின்போதும், அதன்பிறகு எல்லோருமாகப் பேசிக்கொண்டு இருக்கையிலும், காரில் அவளும் அவனுமாக வீட்டுக்குச் செல்கையிலும் கணவனின் பார்வை அவள் மீது அவ்வப்போது படிந்து விலகியது.

அதை உணர்ந்தவளுக்கோ, ஏன் இப்படிப் புரியாத பார்வை பார்த்து அவளைப் படபடக்க வைக்கிறான் என்கிற கேள்வி எழுந்தது.

அதை வாய்விட்டுக் கேட்கும் துணிவு இல்லாததில் வீட்டுக்குச் சென்றபிறகு முடிந்தவரை அவன் பார்வையில் படாமல் இருந்துகொண்டாள். மனமோ புதுவிதமாகக் குழம்பித் தவித்தது. இருக்கிற குழப்பங்கள் போதாது என்று இதுவேறா என்றிருந்தது அவளுக்கு.

என்னதான் ஒளிந்து ஓடினாலும் இரவு என்கிற ஒன்று வருமல்லவா! அவர்களின் அறைக்குள் உறங்குவதற்காக அவள் செல்லவும் வேண்டும் அல்லவா!

அப்படிச் சென்றவளை அணைத்தவன் பதித்த இதழ் முத்தங்களிலும் அதை அவன் வழங்கிய வேகத்திலும் மீண்டும் திக்குமுக்காடிப் போனாள் இலக்கியா.


அன்றைய அவனுடைய தேடலிலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்துகொண்டாள் அவன் மனையாள்!
 
Top Bottom