அத்தியாயம்-19
மேசையில் இருந்த தொலைபேசியையே பார்த்தபடி குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளின் அம்மா வீட்டுக்கு இதோடு பலதடவைகள் அழைத்துவிட்டாள் யாருமே எடுக்கக் காணோம்.
பள்ளிக்கூடம் முடிந்து அப்படியே டியுஷனுக்கும் போய்விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான் சுதன். ஆறுமணிக்கு அப்பாவை கூட்டிக்கொண்டு வருவதற்குச் சந்தைக்குப் போகும்வரை, அம்மாவுக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுப்பது, நிலம் கொத்திக்கொடுப்பது, குப்பை கூளங்களை ஒன்றாகக்கூட்டி அதற்கு நெருப்பு வைப்பது என்று எதையாவது செய்து கொடுப்பான். அந்த நேரத்தில் அழைத்துத்தான் அவனோடு பேசி, வீட்டு நிலவரங்களை அறிந்துகொள்வாள் இலக்கியா. அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்தபிறகு தம்பிகள் இருவரும் படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் அதன் பிறகு அவர்களுக்கு எடுக்கமாட்டாள்.
அம்மா வீட்டுக்குச் சென்றுவந்து இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கேட்கலாம் என்றால், எங்கே? எடுக்கிறார்கள் இல்லையே என்று கோபம் வந்தது.
என்னவோ ஏதோ என்று பயமாகவும் இருந்தது. அவள் யோசித்தபடி அமர்ந்திருக்க அறைக்குள் நுழைந்தான் தர்சன்.
மனைவியின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் யோசனையையும் கண்டவனின் நடை நின்றது.
“என்ன?” என்று கேட்டான் புருவங்கள் சுருங்க.
அந்த நேரத்தில் கணவனை எதிர்பாராததில் கதிரையில் இருந்து எழுந்தவள் ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.
“பிறகு ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?”
“ஒன்றுமில்லை..” அவன் விழிகளைப் பாராது தலையைக் குனிந்துகொண்டவள் மெல்ல முணுமுணுத்தாள்.
அதைக் கேட்டவனின் முகம் கோபத்தில் இறுக, இடுங்கிய விழிகளோ அவளைத் துளைத்தன.
அந்தப் பார்வையிலேயே நடுக்கம் எடுக்க, “அது.. வ..வந்து சுதன் எடுக்கிறான் இல்லை..” என்றாள், கையால் தொலைபேசியைக் காட்டி.
“அது யார்.. சுதன்?”
அதிர்ச்சியோடு கணவனைப் பார்த்தாள் இலக்கியா. இவன் என்ன என்னோடு விளையாடுகிறானா? அல்லது நிஜமாகவே சுதன் என் தம்பி என்று இவனுக்குத் தெரியாதா? ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
மனைவியின் பார்வையின் பொருள் புரியாமல், “என்ன பார்க்கிறாய்? சுதன் யார் என்று கேட்டேன்.” என்றான் அவன்.
இலக்கியாவுக்கு இப்போது அவமானத்தில் அழுகையே வந்தது.
நீ என் மனைவி என்று அழுத்தமும் அதிகாரமுமாகச் சொன்னவன், கணவனுக்கான அத்தனை உரிமைகளையும் பிடிவாதமாக நிறைவேற்றிக் கொள்பவன் அவளின் தம்பியை யார் என்று கேட்கிறான்.
அந்த லட்சணத்தில் இருக்கிறது அவளது வாழ்க்கை முறை!
“என் தம்பி.” என்றாள் அவன் முகம் பாராது.
“ஓ..!” என்று கேட்டுக்கொண்டவனுக்கு, மனைவியின் மனநிலையும் சற்றுமுன் அவள் பார்த்த பார்வையின் பொருளும் புரிந்தது. அப்படியே அவன் விட்ட தவறும் புரியாமல் இல்லை. ஆனாலும் மன்னிப்புக் கேட்க தோன்றவில்லை.
“அவனுக்கு என்ன?” இடையில் ஒன்றுமே நடவாததுபோல் கேட்டான் தர்சன்.
என் தம்பியின் பெயரே உனக்கு நினைவில் இல்லை. இதில் அவனைப் பற்றி அறிந்து மட்டும் என்ன கிழிக்கப் போகிறாய்? என்று மனம் வெதும்பினாலும், “தெரியவில்லை. அவனாகவும் கூப்பிடவில்லை. நான் அழைத்தாலும் எடுக்கிறான் இல்லை.” என்றாள் கவலை தொனித்த குரலில்.
“அவனுக்குக் கேட்கவில்லையோ என்னவோ.. வீட்டுக்கு அழைத்துப் பார்.”
“வீட்டுக்குத்தான் அழைத்தேன்..”
“அப்போ அவனின் கைபேசிக்கு கூப்பிடு.”
“எங்கள் வீட்டில் யாரிடமும் கைபேசி இல்லை. வீட்டுத் தொலைபேசி மட்டும்தான்.”
“உன்னிடம்?”
“என்னிடமும் இல்லை..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே தொலைபேசி ஒலியெழுப்பியது.
சுதனோ என்று எண்ணி, அதை வேகமாக எடுத்து, “ஹலோ..” என்றாள் லக்கி.
“அக்கா, நான் சுதன். என்னக்கா நிறையத் தடவை எடுத்திருக்கிறாய். ஏதாவது பிரச்சினையா? அத்தான் எப்படி இருக்கிறார்? நீ எப்படி இருக்கிறாய்?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினான் அவன்.
“உன் அத்தான் நன்றாகத்தான் இருக்கிறார். எனக்கும் ஒன்றுமில்லை. என்னைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இவ்வளவு நேரமாக நீ எங்கே போனாய் என்று சொல்லு? அம்மா அப்பா எங்கே? பாலன் கூடவா வீட்டில் இல்லை. எத்தனை தடவையடா நான் கூப்பிடுவது? கூப்பிட்டால் என்ன என்று கேட்கமாட்டீர்களா? என்னவோ ஏதோ என்று பயந்து போனேன்..” என்றாள் லக்கி கோபத்துடன்.
தம்பியை உரிமையோடு அதட்டும் மனைவியையே பார்த்தபடி நின்றான் தர்சன்.
“இப்போதான்கா டியுஷன் முடிந்து வந்தேன். அம்மாவும் பாலனும் அப்பாவைக் கூட்டிக்கொண்டுவரப் போய்விட்டார்கள். அதுதான் நீ எடுக்கும்போது யாருமே இல்லை. பயந்துவிட்டாயா?” என்று பாசத்தோடு கேட்டான் அவன்.
“பின்னே பயப்படாமல்? சரி அதைவிடு! அதென்ன இப்போதான் வந்தேன் என்கிறாய். அப்பாவைக் கூட்டிக்கொண்டுவர நீயேன் போகவில்லை? டியுஷன் நாலரைக்கே முடிந்துவிடுமே.”
“வரும்போது பஸ்ஸை விட்டுவிட்டேன்கா. நடந்துவர பிந்திவிட்டது. அதுதான்..”
“ஏன்? உன் சைக்கிள் எங்கே?”
“அதை விற்றுவிட்டோம்..”
“என்னது?” அதிர்ந்துபோய்க் கேட்டாள் இலக்கியா.
பின்னே, அவள் நர்சரியில் வேலை செய்ததே ஒரு மாதம் தான். அப்படியிருந்தும் அந்தச் சம்பளத்தையும் எடுத்து , அவளிடம் இருந்த குட்டி ஜிமிக்கியுடன் கூடிய தோட்டின் ஜிமிக்கியையும் விற்று வாங்கிய புதுச் சைக்கிள்.
பழைய சைக்கிள் வாங்கலாம் என்று வீட்டில் எல்லோரும் சொன்னபோதும், உயர்தரம் படிக்கப்போகும் தம்பி பாவம் என்று நினைத்து அவள் வாங்கிக்கொடுக்க, அவன் அதை விற்றுவிட்டானா?
கண்டபடி திட்டும் அளவுக்கு ஆத்திரம்தான் வந்தது. கணவனின் முன்னால் தம்பியைத் திட்ட மனமின்றி, “ஏன்டா?” என்று மட்டும் கேட்டாள், கோபத்தை அடக்கிய குரலில்.
“அது.. அதுக்கா..” என்று இழுத்தான் சுதன். பேச்சு வேகத்தில் உளறிவிட்டவனுக்கு இனி அவளிடம் எதைச் சொல்லிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.
“சொல்லு!” என்று அவள் அதட்ட, “அது.. வீட்டுக்கு மேசை கதிரைகள் வாங்குவதற்காக..” என்று சொன்னவன், தமக்கை கவலைப்படப் போகிறாளே என்று எண்ணி, “நான் பாலனின் சைக்கிளில் போய்வருவேன் அக்கா. நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. இல்லையென்றாலும் என் நண்பன் யோகனுடன் ஒன்றாகப் போய்வருவேன். இன்று அவன் வரவில்லை. அதுதான் பஸ்ஸில் வரவேண்டியதாகப் போய்விட்டது..” என்றான் அவசரமாக.
இலக்கியாவுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பாலனின் சைக்கிளில் இவன் போனால் அவன் எதில் போவானாம்? நண்பன் எத்தனை நாட்களுக்கு உதவி செய்வான்? படிக்கிற பிள்ளை மற்றவர்களைப்போல நல்ல சைக்கிளில் பள்ளிக்கூடம் போய்வரட்டும் என்று எண்ணி அவள் வாங்கிக் கொடுக்க, அதை விற்றுவிட்டு, அதுவும் அவளுக்காக விற்றுவிட்டு நிற்கும் அப்பா, அம்மா, தம்பிகள் என்று அனைவர் மீதும் கண்மண் தெரியாத கோபம் வந்தது.
மீண்டும் கணவனின் முன்னால் எதையும் வாய்விட்டுப் பேசப் பிரியமற்று, “நான் வைக்கிறேன்.” என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டாள்.
முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றபடி அவள் திரும்ப, அவள் கணவனோ மீண்டும் ஊடுருவும் பார்வையோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இவன் ஒருத்தன்! கண்ணாலேயே அவள் மனதை சல்லடை போட்டுவிடுவான் என்றி எரிச்சல் வந்தது அவளுக்கு. அதை அவளால் அவனிடம் காட்டிவிட முடியுமா என்ன?
பிறகு கடித்துக் குதறிவிட மாட்டானா?
“உங்களுக்கு டீயும் சிற்றுண்டியும் கொண்டுவருகிறேன்..” என்றபடி அவள் நழுவப்பார்க்க, “நில்!” என்றான் அவன் ஆணையிடும் குரலில்.
“உன் தம்பிக்கு என்னவாம்?”
அவர்களின் வீட்டு நிலவரத்தை, ஏழ்மையைக் கணவனுக்குச் சொல்லப் பிடிக்காமல், “அவனுக்கு ஒன்றுமில்லை..” என்றாள் அவள் மீண்டும்.
“இந்த ஒன்றுமில்லையைத் தவிர வேறு வார்த்தைகளே உன் வாயில் வராதா? சொல்! என்ன பிரச்சினை?” என்று அவன் போட்ட அதட்டலில் அவளுக்கு அச்சத்தில் அடிவயிறே கலங்கியது.
“சைக்கிளை விற்றுவிட்டானாம். பள்ளிக்கூடத்துக்கு நடந்தும் நண்பனோடும் போய்வருகிறானாம்..” என்றது அவள் உதடுகள் தானாக.
“இதையேன் நான் கேட்டபோது நீ சொல்லவில்லை?” மீண்டும் அவன் உறும, அதுதான் சொல்லிவிட்டேனே என்று சொல்லும் தெம்பின்றி உறைந்து நின்றாள் இலக்கியா.
அவளைப் பார்த்து முறைத்துவிட்டு அவன் குளியலறைக்குள் செல்ல, கணவனின் கடுமையிலும் வீட்டினரின் நிலையையும் எண்ணி அழுகை வந்தது இலக்கியாவுக்கு.
அவர்கள் வீட்டில் உருப்படியாக இருப்பதே நான்கைந்து பொருட்கள்தான். அதையெல்லாம் விற்பதற்கா அவளுக்கு இவ்வளவு அவசரப்பட்டு ஒரு திருமணத்தை முடித்து வைத்தார்கள்.
சுதனின் வயதில் இருக்கும் மற்றப்பிள்ளைகள் கைபேசி, கணிணி, ஐபாட் என்று திரிய அவனிடம் ஒரு சைக்கிள் கூட இல்லை. அவள் ஏறினால் கார் இறங்கினால் கார் என்று வசதியான வாழ்க்கை வாழ அவளின் தம்பி கால்நடையில் திரிகிறான். அதற்குக் காரணம் அவள். கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.