• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 20

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-20


துடைக்கத் துடைக்கப் பெருகிய கண்ணீரோடு கட்டிலில் அமர்ந்திருந்தாள் இலக்கியா. கணவன் அம்புகளாய் வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் இதயத்தை ஓரிடம் விடாமல் குத்திக் குத்தி குருதியைப் பாய்ச்சி கொண்டிருந்தது.

பார்க்கும் பார்வையில் கூடக் கண்ணியம் தவறக்கூடாது என்று நினைப்பவளை பார்த்து என்னவெல்லாம் சொல்லிவிட்டான்!

இப்படி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டதே என்று தினமும் மருகியபோதும் இதைத்தாண்டி இன்னொரு வாழ்க்கையை அவள் நினைத்துக் கூடப் பார்த்ததே இல்லையே! இதிலிருந்து வெளியேறவோ தப்பவோ அவள் கனவிலும் எண்ணியது இல்லையே!

அப்படியானவளை இன்னொருவனோடு இணைத்துப் பேசிவிட்டானே.. நினைத்த மாத்திரத்தில் மீண்டும் விம்மல் வெடித்தது அவளுக்கு.

கணவனுக்கு மட்டுமே அவளின் தூய்மையான இதயத்தையும் மனதையும் காதலோடு கொடுக்கவேண்டும் என்று, அவற்றை எல்லாம் அவள் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது என்ன? இன்று கட்டிய கணவனின் வாயிலாக அவள் கேட்ட பேச்சு என்ன?

இது ஒருபுறம் என்றால் வேலைக்கும் போகக்கூடாது என்றும் சொல்லிவிட்டானே. அவளின் குடும்பத்துக்கு இனி அவளால் எந்த உதவியும் செய்ய முடியாதே. காலம் பூராவும் அவர்கள் அந்த மண்ணுக்குள்ளேயே கிடந்து கஷ்டப்படவேண்டும் என்பதுதான் விதியா?

அவர்களும் சந்தோசமாக இல்லை. அவளும் மகிழ்ச்சியாக இல்லை. பிறகு எதற்காக இந்தத் திருமணம் நடந்தது என்று நொந்தபடி எவ்வளவு நேரத்தைக் கழித்தாளோ தெரியாது. மீண்டும் தர்சன் அறைக்குள் நுழைந்தபோது பயத்தில் அவள் மேனி தூக்கிப்போட சட்டெனக் கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.

திரும்பவும் என்ன சொல்லி அவளை நோகடிக்கப் போகிறானோ என்று பயந்துபோய் அவள் நிற்க, பாறையைப் போன்றிருந்த முகத்தோடு கட்டிலில் ஒரு கைபேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டுடையை மாற்றத் தொடங்கினான் அவன்.

அவன் அப்படிப் போடுவதற்காகவே காத்திருந்தது போன்று அந்தப் புதுக் கைபேசி அழகாய் இன்னிசை பாடி அழைத்தது.

யார் என்று அவள் பார்க்க, அவளது வீட்டின் இலக்கம் அதில் ஒளிரவும், கேள்வியோடு கணவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.

அவனோ மனைவி என்கிற ஒருத்தி அங்கே நிற்பதாகவே காட்டிக்கொள்ளாமல் உடை மாற்றுவதிலேயே முனைந்திருந்தான்.

அந்த அலட்சியம் மீண்டும் மனதைத் தாக்கினாலும், வீட்டிலிருந்து அழைக்கிறார்களே என்று எண்ணியவள் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

“அக்கா.. அக்கா தாங்க்ஸ்கா.. மிக்க நன்றிக்கா...” என்று ஆர்ப்பாட்டமும் ஆர்வமுமாகச் சொன்னான் சுதன்.

அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்னடா? எதற்கு என்னிடம் நன்றி சொல்கிறாய்?”

“என்னக்கா நீ? நீயும் அத்தானை மாதிரியே கேட்டால், நான் யாரிடம்தான் இதைச் சொல்வது? நன்றி அத்தான் என்று நான் சொன்னதற்கு, அவரும் உன்னைப்போல ‘அதை நீ உன் அக்காவிடம் சொல்லு. அவள்தான் இதையெல்லாம் செய்யச் சொன்னாள்’ என்கிறார். நீயும் அப்படியே சொல்கிறாயே.. சரி விடு. நான் இருவரிடமும் சொல்லிவிடுகிறேன். மிகவும் நன்றிக்கா.” என்று நெகிழ்வும் மகிழ்வுமாகக் குதூகலித்தான் அவன்.

இங்கே அவளுக்கோ தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

“என்னடா சொல்கிறாய்? கொஞ்சம் விரிவாகச் சொல்லு. என்ன நடந்தது? எதற்கு நன்றி?” இருக்கிற பிரச்சினையில் இவன் வேறு என்கிற சினத்தோடு அவள் கேட்க,

“போக்கா நீ. திரும்பத் திரும்ப ஒன்றுமே தெரியாதவள் மாதிரி நடிக்கிறாயே. நீ சொல்லாமல் தான் அத்தான் வந்து எனக்குப் புதுச் சைக்கிள், அதுவும் உடனேயே வாங்கித் தந்தாரா? மோட்டார்சைக்கிள் வாங்கித் தருவதாக வேறு சொல்லியிருக்கிறார். அது வாங்கத்தான் போனாராம். உடனேயே தரமாட்டார்கள் என்றபடியால் சைக்கிள் வாங்கினாராம். மோட்டார்சைக்கிள் வந்ததும் இதைப் பாலனிடம் கொடுக்கட்டுமாம். இதையும் நீதானே சொன்னாயாம். அப்பாவுக்கும் வீல்செயார் வாங்கலாம் என்றும் சொன்னார்..” என்று அவன் பரபரத்தபோது, ஒருவழியாக அவன் சொன்ன விசயத்தின் சாரம்சத்தைக் கிரகித்துக் கொண்டவளுக்கு, மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் மீண்டும் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

இப்போது சுதனிடமிருந்து தொலைபேசியை வாங்கிச் சந்திரா பேசிக்கொண்டிருந்தார். காதுக்கருகில் கைபேசியைப் பிடித்தபடி கணவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, அவனது பரந்த முதுகும், இலகுவான மேல்சட்டை ஒன்றை அவன் மாட்டுவதும்தான் கலங்கலாகத் தெரிந்தது.

அவளிடம் அந்தக் கத்து கத்திவிட்டு போனவன் அவளின் குடும்பத்துக்காக இவ்வளவையும் செய்திருக்கிறானே.

அதுவரை நேரமும் இனி என்ன செய்யப்போகிறேன் என்று அவள் துடித்த துடிப்பை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டானே!

அவளளவில் மிகப்பெரிய விசயமாகத் தெரிந்த ஒன்றை வெகு சாதாரணமாகச் செய்துவிட்டு, அதைப் பற்றி ஒருவார்த்தை தன்னும் அவளிடம் சொல்லாமல் நின்றவனின் அந்த விலகல் முதன் முறையாக அவளுக்கு வலித்தது.

அப்பாக்கு வீல்சேர் வந்தால் அவர் வேலைகளை அவரே செய்துகொள்வார். காலையிலும் மாலையிலும் அப்பாவுக்காக அம்மா சந்தைக்கும் வீட்டுக்குமாக ஓடத் தேவையில்லை. அவருக்கு ஓய்வாக இருக்கக் கொஞ்ச நேரமாவது கிடைக்கும். தம்பிகள் அலையத் தேவையில்லை. அவர்களுக்குப் படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும். எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் மற்றிவிட்டானே..

இவ்வளவையும் செய்தான் என்பதை விட அவளுக்காக ஒன்றைச் செய்திருக்கிறான் என்பதிலேயே நின்றது அவள் மனது!

அதுநாள் வரை, ஊருக்கு முன்னால் பெயருக்கு ஒரு மனைவியாகவும் உள்ளுக்குள் அவனுடைய உடல் தேவையைப் பூர்த்திச் செய்பவளாக மட்டுமே தான் இருக்கிறோம்.. அவளைப் பற்றிய, அவளின் உணர்வுகளைப் பற்றிய அக்கறை அவனுக்குக் கொஞ்சமும் இல்லை என்று எண்ணி நரக வேதனையில் உழன்றவளுக்கு, கணவனின் இன்றைய செயல் பெரும் ஆனந்தத்தைக் கொடுத்தது.

தன் மகிழ்ச்சியை, சந்தோசத்தை அவனிடம் பகிர எண்ணி, அங்கே தாய் என்ன சொல்லிக்கொண்டு இருந்தார் என்று கேட்காமலேயே, “அம்மா, நான் பிறகு பேசுகிறேன்..” என்று சொல்லி கைபேசியை அணைத்துவிட்டு அவள் நிமிர்ந்து பார்க்க, அறையில் அவனைக் காணோம்.

வேகமாகக் குளியலறையில், பால்கனியில் என்று தேடிப்பார்த்தாள். எங்கும் அவன் இல்லை.

கீழே சென்றுவிட்டான் என்று விளங்க மீண்டும் கண்ணைக் கரித்தது அவளுக்கு.

அவள் செய்தது பிழைதான். அதற்காக இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

அதுதான் தன்னால் முடிந்தவரை வார்த்தைகளால் அவளை வதைத்துவிட்டானே. இன்னுமா அவனுக்குக் கோபம் தீரவில்லை?

அவனை எப்படியாவது சமாதானப்படுத்த மனம் துடித்தது.

உடனேயே தண்ணீரை நன்கு அடித்து முகத்தைக் கழுவியவள், அழுததால் உண்டான கண்களின் சிவப்புத் தெரியாமல் இருக்க மெலிதான ஒப்பனைகளையும் முகத்துக்குச் செய்துகொண்டாள்.

தலையை வாரி, வேகவேகமாக உடை மாற்றிக்கொண்டு அவள் கீழே இறங்கியபோது, அமலன், விமலனுடன் தொழிலைப் பற்றி என்னவோ ஆலோசித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

அமலனும் விமலனும் கையில் ஏதோ பழச்சாறுடன் இருப்பதைக் கண்டுவிட்டு, கணவனுக்கும் எடுத்துவர உள்ளே விரைந்தவள், எதிரே வந்த ராகினியின் கையில் பழச்சாறுடன் கூடிய கிளாசைக் கண்டுவிட்டு, “அவருக்கா அக்கா..” என்று கேட்டாள்.

“ம்ம்.. உன்னுடைய அவருக்குத்தான்..” என்று குறும்பும் புன்னகையுமாக ராகினி சொல்ல, லக்கியின் கன்னங்களில் மெல்லிய கதகதப்பு ஏறியது.

“தாங்கக்கா. நான் குடுக்கிறேன்..” என்று வாங்கிக் கொண்டவள், படபடக்கும் மனதோடு கணவனின் முன்னால் சென்று அதை நீட்டினாள்.

அவள் மனமோ என்னை ஒரு தடவையாது நிமிர்ந்து பாருங்களேன் என்று அவனிடம் கெஞ்சியது. அந்தக் கல்நெஞ்சுக்காரனோ அவளை நிமிர்ந்தும் பாராது ‘கிளாஸ்’ சை வாங்கிக்கொண்டான்.

மளுக் என்று கண்களில் நிறைந்துவிட்ட கண்ணீரை பெரும் சிரமப்பட்டு உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள் இலக்கியா.

அதற்கு மேலும் அங்கே நிற்கவும் முடியாமல், யாருடனும் சாதாரணமாகப் பேசவும் முடியாமல் மெதுவாகத் தோட்டத்துக்கு நழுவியவள், ஏன் என்றே இல்லாமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அங்கே அறையில் கணவனின் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தவள் இப்போது அவனால் என்னை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாதாமா என்று அழுதாள்.



இரவு உணவு முடிந்தபிறகு எல்லோருமாக அமர்ந்திருந்து எதைப்பற்றி என்றில்லாமல் சற்றுநேரம் பேசிக்கொண்டு இருப்பது அந்த வீட்டில் வழக்கம். அப்படி அன்றும் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

“அமலன், நாளைக்குக் காலையில் நீ எங்கும் போகவேண்டாம். அம்ருக் குட்டிக்கு சளி பிடித்திருக்கிறது. உடம்பும் மெலிதாகச் சுடுகிறது. நீ எதற்கும் ஆரணியுடன் போய் டாக்டரிடம் காட்டிவிட்டு வா..” என்றார் மஞ்சுளா.

“நாளைக்கா? நாளைக்குத் தர்சனும் இருக்கமாட்டான். பிறகு நான் எப்படிமா வரமுடியும்? எனக்கு வேலை இருக்கிறதே. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நான் என் காரை விட்டுவிட்டு அண்ணாவோடு போகிறேன். நீங்களும் ஆரணியுமாகப் போய்க் காட்டுங்கள்..” என்றான் அமலன்.

அதைக்கேட்டு திகைப்போடு கணவனைப் பார்த்தாள் இலக்கியா. நாளைக்கு எங்கே போகப் போகிறான்? அவளிடம் ஒன்றுமே சொல்லவில்லையே அவன்.

அவனோ மனைவியின் பக்கம் திரும்பவே இல்லை.

“எப்போ பார். வேலை வேலை வேலை! குடும்பத்தைக் கவனிக்காத அளவுக்கு என்ன வேலையோ உங்கள் நால்வருக்கும். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.” என்றார் மஞ்சுளா கோபத்தோடு.

“நாங்கள் அப்படி உழைப்பதால் தானேம்மா நீங்கள் எல்லோரும் இப்படிச் சொகுசாக வாழ்கிறீர்கள்..” என்றான் தர்சன், அன்னையை வம்புக்கு இழுக்கும் விதமாக.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அதுதான் தன்னால் முடிந்தவரை வார்த்தைகளால் அவளை வதைத்துவிட்டானே. இன்னுமா அவனுக்குக் கோபம் தீரவில்லை?

அவனை எப்படியாவது சமாதானப்படுத்த மனம் துடித்தது.

உடனேயே தண்ணீரை நன்கு அடித்து முகத்தைக் கழுவியவள், அழுததால் உண்டான கண்களின் சிவப்புத் தெரியாமல் இருக்க மெலிதான ஒப்பனைகளையும் முகத்துக்குச் செய்துகொண்டாள்.

தலையை வாரி, வேகவேகமாக உடை மாற்றிக்கொண்டு அவள் கீழே இறங்கியபோது, அமலன், விமலனுடன் தொழிலைப் பற்றி என்னவோ ஆலோசித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

அமலனும் விமலனும் கையில் ஏதோ பழச்சாறுடன் இருப்பதைக் கண்டுவிட்டு, கணவனுக்கும் எடுத்துவர உள்ளே விரைந்தவள், எதிரே வந்த ராகினியின் கையில் பழச்சாறுடன் கூடிய கிளாசைக் கண்டுவிட்டு, “அவருக்கா அக்கா..” என்று கேட்டாள்.

“ம்ம்.. உன்னுடைய அவருக்குத்தான்..” என்று குறும்பும் புன்னகையுமாக ராகினி சொல்ல, லக்கியின் கன்னங்களில் மெல்லிய கதகதப்பு ஏறியது.

“தாங்கக்கா. நான் குடுக்கிறேன்..” என்று வாங்கிக் கொண்டவள், படபடக்கும் மனதோடு கணவனின் முன்னால் சென்று அதை நீட்டினாள்.

அவள் மனமோ என்னை ஒரு தடவையாது நிமிர்ந்து பாருங்களேன் என்று அவனிடம் கெஞ்சியது. அந்தக் கல்நெஞ்சுக்காரனோ அவளை நிமிர்ந்தும் பாராது ‘கிளாஸ்’ சை வாங்கிக்கொண்டான்.

மளுக் என்று கண்களில் நிறைந்துவிட்ட கண்ணீரை பெரும் சிரமப்பட்டு உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள் இலக்கியா.

அதற்கு மேலும் அங்கே நிற்கவும் முடியாமல், யாருடனும் சாதாரணமாகப் பேசவும் முடியாமல் மெதுவாகத் தோட்டத்துக்கு நழுவியவள், ஏன் என்றே இல்லாமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அங்கே அறையில் கணவனின் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தவள் இப்போது அவனால் என்னை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாதாமா என்று அழுதாள்.



இரவு உணவு முடிந்தபிறகு எல்லோருமாக அமர்ந்திருந்து எதைப்பற்றி என்றில்லாமல் சற்றுநேரம் பேசிக்கொண்டு இருப்பது அந்த வீட்டில் வழக்கம். அப்படி அன்றும் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

“அமலன், நாளைக்குக் காலையில் நீ எங்கும் போகவேண்டாம். அம்ருக் குட்டிக்கு சளி பிடித்திருக்கிறது. உடம்பும் மெலிதாகச் சுடுகிறது. நீ எதற்கும் ஆரணியுடன் போய் டாக்டரிடம் காட்டிவிட்டு வா..” என்றார் மஞ்சுளா.

“நாளைக்கா? நாளைக்குத் தர்சனும் இருக்கமாட்டான். பிறகு நான் எப்படிமா வரமுடியும்? எனக்கு வேலை இருக்கிறதே. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நான் என் காரை விட்டுவிட்டு அண்ணாவோடு போகிறேன். நீங்களும் ஆரணியுமாகப் போய்க் காட்டுங்கள்..” என்றான் அமலன்.

அதைக்கேட்டு திகைப்போடு கணவனைப் பார்த்தாள் இலக்கியா. நாளைக்கு எங்கே போகப் போகிறான்? அவளிடம் ஒன்றுமே சொல்லவில்லையே அவன்.

அவனோ மனைவியின் பக்கம் திரும்பவே இல்லை.

“எப்போ பார். வேலை வேலை வேலை! குடும்பத்தைக் கவனிக்காத அளவுக்கு என்ன வேலையோ உங்கள் நால்வருக்கும். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.” என்றார் மஞ்சுளா கோபத்தோடு.

“நாங்கள் அப்படி உழைப்பதால் தானேம்மா நீங்கள் எல்லோரும் இப்படிச் சொகுசாக வாழ்கிறீர்கள்..” என்றான் தர்சன், அன்னையை வம்புக்கு இழுக்கும் விதமாக.

“நான் உன்னிடம் கேட்டேனா என்னைச் சொகுசாக வாழவை என்று? அல்லது என் மருமகள்கள் தான் கேட்டார்களா? நீங்கள் வீட்டுக்குக் கொண்டுவருவதை வைத்துக் குடும்பம் நடத்த எனக்கும் தெரியும், என் மருமகள்களுக்கும் தெரியும். அதனால் எங்கள் மீது பழியைப் போடாதே நீ..” என்றார் அவர் காட்டமாக.

“வருவதை வைத்துக் குடும்பம் நடத்துவீர்கள். சரிதான். போனவாரம் போய் வைரத்தில் நகை வாங்கினீர்களே.. அதுவும் மூன்று மருமகள்களுக்கும் ஒரே மாதிரி வேண்டும் என்று.. அதையெல்லாம் அளவாகச் சம்பாதித்தால் செய்யமுடியுமா?” அவனும் விடவில்லை.

“அது.. அது வந்து…” சட்டெனப் பதில் வராமல் அவர் தடுமாற, “என்ன அது அது என்று இழுக்கிறீர்கள்? நீங்களும் உங்கள் மருமகள்களும் வைரத்தில் நெக்லஸ் போடவேண்டும் என்றால் நாங்கள் இரவுபகல் பாராது உழைத்தால் தான்மா முடியும். உங்களை மாதிரி வீட்டில் இருந்து அதிகாரம் செய்தால் காசும் வராது. நகையும் வராது.” என்று அன்னையை விடாமல் வம்பிழுத்தான் தர்சன்.

"போடா வாயாடி! உன்னிடம் மனிதன் பேசுவானா?” என்றபடி, எட்டி மகனின் முதுகில் ஒன்றைப் போட்டார் மஞ்சுளா.

"ஐயோ.. அம்மா..!" என்று பொய்யாக அலறினான் அவன். "வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு உடம்பை வளர்த்ததில், நீங்கள் அடித்த ஒரு அடியே இடிமாதிரி இருக்கிறது.." என்ற மகனை பொய்யாக முறைத்தாலும் சந்தோசமாக இருந்தது மஞ்சுளாவுக்கு.

அவரது குறும்புக்கார சின்னமகன் திரும்பிக்கொண்டு இருக்கிறானே..

ராஜசேகரும் அதை உணர்ந்தார் போலும். மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நாளைக்குக் கொண்டுபோகத் தேவையானதுகள் எல்லாம் தயாரா தர்சா?” என்று அவனிடம் கேட்டார்.

“ம்.. எல்லாம் தயார்பா. தேங்காய் லாரிகள் காலையில் நேரத்தோடு கிளம்பிவிடும். காய்கறிகள் ஏற்றிய லாரியை இன்றே அனுப்பிவிட்டேன். நான் நாளை காலை ஒரு எட்டுமணி போல் இங்கிருந்து கிளம்பலாம் என்று இருக்கிறேன்.” என்றான் அவன்.

ஆக, முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் இது. அப்படி இருந்தும் அவளிடம் ஒருவார்த்தை அவன் சொல்லவில்லை. அவளைச் சுற்றி மொத்தக் குடும்பம் இருந்தும், அருகில் கட்டிய கணவன் இருந்தும் அந்த இடத்தில் தான் மட்டும் நிர்கதியாக நிற்பதுபோல் வேதனையோடு உணர்ந்தாள் இலக்கியா.

“எப்போது திரும்பி வருவாய் தர்சா?” என்று கேட்டார் மகேஸ்வரி.

“தெரியவில்லை அத்தை. ஒரு.. நான்கு நாட்கள் செல்லும் என்று நினைக்கிறேன்..” என்றான் தர்சன்.

“நான்கு நாட்களா?” என்று கேட்ட மஞ்சுளா, “நீ வவுனியாவுக்குப் போயிருக்கிறாயா லக்கி?” என்று மருமகளை விசாரித்தார்.
 

Vishakini

Moderator
Staff member
“இல்லை மாமி..” என்றாள் அவள், கணவனின் பாராமுகத்தால் அடைத்த குரலை சாதாரணமாகக் காட்ட முயன்றபடி.

“அப்போ அவனோடு நீயும் போ..” என்று மருமகளிடம் சொல்லிவிட்டு, மகனிடம் திரும்பியவர், “நீயில்லாமல் இந்த நான்கு நாட்களும் அவள் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாள்? அதனால் போகும்போது அவளையும் கூட்டிக்கொண்டு போ தர்சன்.” என்றார்.

“இல்லை மாமி. வேண்டாம்.. அவர் வேலையாகப் போகிறார். நான் எதற்கு இடைஞ்சலாக..” என்று தர்சனை முந்திக்கொண்டு சொன்னாள் இலக்கியா.

அதைக்கேட்ட தர்சனின் முகம் கணநேரத்தில் இறுகி சாதாரண நிலைக்குத் திரும்பியது.

“உன்னால் அவனுக்கு என்ன இடைஞ்சல் வர இருக்கிறது லக்கி? வேலை என்று வந்துவிட்டால் அவன் தன்னையே கவனித்துக்கொள்ள மாட்டான். நீயும் போனாய் என்றால் வேளா வேளைக்குக் கவனித்து அவனுக்குச் சாப்பாட்டைக் கொடுப்பாய். நானும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன். அப்படியே நேரம் கிடைக்கும்போது சும்மா வெளி தெருவுக்கும் போய்வாருங்கள்.” என்ற மஞ்சுளா,

“என்னடா? அவளைக் கூட்டிக்கொண்டு போகிறாயா?” என்று மகனிடமும் விடாமல் கேட்டார்.

“அவளை விட்டுவிட்டுப் போய் நான் என்னம்மா செய்ய? அவளும் தான் வருகிறாள்.” என்றான் தர்சன்.

அந்தக் குரலில் இருந்த பிடிவாதம் அவன் மனைவிக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், இந்தப் பயணத்தைப் பற்றி அவனாக அவளிடம் சொல்லவில்லையே என்று, அதிலேயே நின்று சுணங்கியது அவள் மனது.

"ஏன்டா, இவ்வளவு நாளும் தனியாகத்தானே போனாய். இப்போது மட்டும் எதற்கு அவள் வரவேண்டும் என்கிறாய்?" என்று அவனைச் சீண்டினான். அமலன்.

"போனமுறை அமிர்தாவை அம்மாவிடம் விட்டுவிட்டு அண்ணியை நீ எதற்குக் கூட்டிக்கொண்டு போனாயோ, அதற்குத்தான் நானும் அவளைக் கூட்டிக்கொண்டு போகிறேன்." என்று பதிலடி கொடுத்தான் தர்சன்.

அதைக்கேட்டு அங்கிருந்த எல்லோரும் பக்கென்று சிரித்துவிட, ஆரணி அமலனை சிவந்துவிட்ட முகத்தோடு முறைத்தாள்.

அப்படியே ஏதேதோ பேச்சில் நேரம் கடக்க, “நேரமாகிவிட்டது. நடவுங்கள் எல்லோரும் தூங்கப் போகலாம். நாளைக்கு நேரத்துக்கே எழும்பவேண்டும்.” என்றபடி எழுந்துகொண்டார் மஞ்சுளா.

எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் செல்ல, இலக்கியாவும் கணவனைப் பின்தொடர்ந்து அவர்களின் அறைக்குள் சென்றாள்.

அங்கே குளியலறையில் அவள் இரவு உடையை மாற்றிக்கொண்டு வந்தபோது, தர்சன் நெற்றியில் ஒரு கையை மடித்து வைத்தபடி கட்டிலில் படுத்திருந்தான்.

ஒருநாளும் இல்லாத திருநாளாக ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் அருகில் அவனைப்போலவே படுத்தாள் இலக்கியா.

அருகில் வருவான்.. அணைப்பான்.. அப்போது பேச்சைத் தொடங்கலாம் என்று ஆவலோடு அவள் காத்திருக்க, அவள் நினைப்பைப் பொய்யாக்கினான் கணவன்.

நேரம் தான் ஓடிக்கொண்டு இருந்ததே தவிர அவன் அசையக்கூட இல்லை. இவள் புறமாகத் திரும்பவும் இல்லை.

அவள் மறுத்த நாட்களில் எல்லாம் வற்புறுத்திய கணவன் இன்று அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் விலகி நிற்பதைக் கண்டவளுக்கு மீண்டும் கண்களைக் கரித்தது.

அழக்கூடாது! நான் அழக்கூடாது! என்று தன்னைத்தானே பெரும் சிரமத்துடன் தேற்றிக்கொண்டு காத்திருந்த போதும் அவள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவே இல்லை.

அருகிலேயே இருக்கும் ஒரு உயிர் அவனுக்காகத் துடித்துக்கொண்டிருப்பதை அவன் உணரவே இல்லையா?

அவளையும் மீறி வழிந்த கண்ணீர் செவியோரங்களை நனைக்கத் தொடங்கியது. அதற்குமேலும் தாங்க முடியாது முகத்தை மட்டும் அவன்புறமாகத் திருப்பியவள் தன் வெண்பஞ்சு விரல்களால் அவன் கையை மெதுவாக.. மிக மிக மெதுவாகத் தொட்டாள்.

ம்ஹூம்! அவனிடம் அசைவே இல்லை.

அந்த விரல்களாலேயே அவனைச் சற்று அழுத்தமாகப் பற்றியவளை, சடாரென்று திரும்பிப் பார்த்தான் தர்சன்.

அப்போதும் இறுகியிருந்த முகமும், உணர்வுகளை ஒழித்துவிட்ட விழிகளுமாக இருந்தவனைப் பார்க்க, அவள் விழிகளில் கண்ணீர் அரும்பு கட்டத் தொடங்கியது.

“சாரி..” என்றாள் நடுங்கிய தன் இதழ்களை மெதுவாகப் பிரித்து.

அவளை முறைத்துவிட்டு மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டான் தர்சன்.

அந்த முகத்திருப்பலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போனதில் விம்மல் வெடித்தது அவளுக்கு. இப்போது அவன் புறமாகத் திரும்பி இரண்டு கைகளாலும் அவனுடைய கரத்தைப் பற்றியவள், “ப்ளீஸ்.. சாரி..” என்றாள் தழுதழுத்த குரலில்.

“என்னைக் கொஞ்சம் நிம்மதியாகத் தூங்க விடுகிறாயா?” என்று எரிந்துவிழுந்தான் அவன்.

சட்டென முகம் சுருங்கிப் போயிற்று இலக்கியாவுக்கு. ஆனாலும், அவள்மேல் அவன் கோபத்துடன் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதற்கு முதலும் அவன் கோபத்தைக் காட்டியிருக்கிறான் தான். சொல்லப்போனால், அதுநாள் வரை கோபத்தை மட்டுமே தான் காட்டியிருக்கிறான். அப்போதெல்லாம் அவனுடைய கோபம் அவளை இந்தளவு பாதித்ததில்லை.

இன்றோ உள்ளம் தவித்தது.

அவளாக வாயைத் திறந்து கேட்காத பட்சத்திலும், அவள் குடும்பத்துக்கு உதவி செய்த கணவனிடம் ரோசம் பாராட்ட மனம் வரவில்லை. அதோடு அவளின் கைகளை அவன் உதறாமல் இருந்தது வேறு தெம்பைக்கொடுக்க, சற்று அவனை நெருங்கிப் படுத்தவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் தாடையைப் பற்றி, அவன் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினாள்.

“ப்ளீஸ் அத்தான். நான் செய்தது தப்புத்தான். இனி உங்களிடம் ஒன்றையும் மறைக்கமாட்டேன். என்னிடம் கோபிக்காதீர்கள் ப்ளீஸ்..” என்று முடிக்கையிலேயே அவள் குரல் தட்டுத் தடுமாறியது.

அவளின் அந்த ‘அத்தான்’ என்ற அழைப்பில், ஒருவித அதிர்வோடு திரும்பி மனைவியைப் பார்த்தான் தர்சன். அப்படிப் பார்த்தது ஒருநொடிதான். அடுத்தகணமே அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டிருந்தான் அவன்.

அவளின் அதரங்களை ஒருவித ஆவேசத்தோடு முத்தமிட்டு, “திமிருடி உனக்கு. புருஷன் என்னிடம் எதையும் சொல்லாமல் வேலைக்குப் போக நினைத்தவள் தானே நீ.” என்றவனின் கோபம் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.

அவன் கொடுத்த கோப முத்தத்தால் இதழ்களில் வலி தெரிந்தபோதும் புன்னகை அரும்பியது அவளுக்கு. கண்களில் கண்ணீரும் வழிய, “சாரித்தான்.. இனி அப்படிச் செய்யமாட்டேன்..” என்றாள் இலக்கியா.

“இனி அப்படி ஏதும் செய்தாய் என்று வை. கன்னம் கன்னமாக அறைதான் வாங்குவாய்..” என்றவன், அதற்குமேல் அவளைப் பேச விடவேயில்லை.

அதுநாள் வரை அவனோடு ஒன்றமுடியாமல் தவித்தவள் இன்று அவன் கைகளில் தன்னை அறியாமலேயே கரைந்துபோனாள்.
 
Top Bottom