• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 21

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-21

அந்த அதிகாலைப் பொழுதில் செவிகளைக் குளிர்வித்த பறவைகளின் இன்னிசையில் இலக்கியாவின் உறக்கம் மெல்ல மெல்ல கலையலாயிற்று. மனதைச் சூழ்ந்திருந்த இனிமையோடும், உடலில் தெரிந்த சுகமான அயர்ச்சியோடும் சோம்பலாக விழிகளைத் திறந்தவளின் பார்வையில், ஒரு கரம் அவளது இடையில் அழுத்தமாக விழுந்து கிடக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனின் முகம் நெருக்கத்தில் தெரிந்தது.

அடர்ந்த கேசம் கலைந்துகிடக்க, எதற்கும் வளைந்து கொடுக்கமாட்டேன் என்பதாக நீண்டுகிடந்த புருவங்களும், ஆழ்ந்த உறக்கத்தின் அடையாளமாக மூடிக்கிடந்த இமைகளும், கூர் நாசியும், பிடிவாதமாக வளைந்த உதடுகளும், அந்த உதடுகளை இன்னும் அழுத்தமாகக் காட்டுவதற்காகவே அமைந்த கறுத்தடர்ந்த மீசையும் என்று அவனை அளந்தவளுக்கு, அவன் உதடுகள் முதல் நாளிரவு அவளைப்போட்டுப் படுத்திய பாட்டையும், அடர்ந்த மீசை கன்னங்களில் உரசி இம்சை செய்ததையும் நினைக்கையில் வெட்கத்தில் முகம் சிவந்துபோனது.

சாளரத்தின் வழியே நுழைந்த அதிகாலைக் காற்றின் உபயத்தில் அவனது கருங்குழல்கள் நெற்றியில் புரண்டு விளையாடின. அதோடு விளையாடும் ஆர்வம் அவளுக்குள் எழுந்தது.

எழுந்துவிடுவானோ என்று தோன்றினாலும், ஆசையை அடக்க முடியாது அவன் கேசத்துக்குள் மிக மிக மெதுவாகக் கரங்களை நுழைத்து கோதிக்கொடுத்தாள். அப்போதும் தூக்கம் சற்றும் கலையாது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் தர்சன்.

பொழுது நன்றாகப் புலரத் தொடங்கவும், எட்டுமணிக்கு இங்கிருந்து வவுனியாவுக்குக் கிளம்புவதாகச் சொன்னானே என்று எண்ணியவள், மனமேயின்றி அவன் கேசத்துக்குள் இருந்து கரங்களை விலக்கியபடி எழுந்து, தலைக்குக் குளித்துத் தயாரானாள். அவர்கள் இருவருக்கும் நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகளையும், இதர பொருட்களையும் உற்சாகத்தோடு எடுத்துவைத்தாள்.

தூக்கம் கலைவதற்குச் சான்றாகத் தர்சன் புரண்டு படுப்பதைக் கண்டவளுக்கு, அவன் எழுந்தால் அவன் முகம் பார்த்துப் பேசமுடியும்போல் தோன்றவில்லை. ஒருவிதக் கூச்சம் வந்து அவளைச் சூழவும், வேகமாக அறையைவிட்டு வெளியேறினாள்.

சற்று நேரத்தில் அவனுக்கான டீயோடு மீண்டும் அவள் மேலே வந்தபோது, குளித்துத் தயாராகி நின்ற தர்சன் அங்கே ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பைல்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் விழிகளைச் சந்திக்க வெட்கி சற்றே பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, “இந்தாருங்கள் டீ.” என்றபடி தட்டை நீட்டினாள் இலக்கியா.

அவன் எடுத்துக்கொண்டதும், “விரைவாகக் குடித்தீர்கள் என்றால் அப்படியே காலை உணவையும் முடித்துவிட்டு நாம் கிளம்பலாம்.” என்றபடி கட்டிலை ஒழுங்குபடுத்த தொடங்கினாள்.

“நேற்று வவுனியாவுக்கு வரமாட்டேன் என்று சொன்னவள் இப்போது என்ன இருவருமாகக் கிளம்பலாம் என்கிறாய்?” என்று சூடான குரலில் கேட்டான் அவன்.

அந்த நேரத்தில் அவனது கோபத்தை எதிர்பாராதவள் மெல்லிய அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். இரவு அவளை அந்தக் கொஞ்சல் கொஞ்சியவன் இப்போது எதற்குக் கோபம் காட்டுகிறான்?

அதன் காரணம் புரியாதபோதும் கணவன் காட்டிய கோபத்தில் மற்றைய நாட்களைப்போன்று இன்று ஏனோ அவள் மனம் வேதனையில் உழலவில்லை. மாறாக இதழ்களில் குறும்புப் புன்னகை அரும்பியது. “நான் இல்லாமல் போகமாட்டேன் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். அதுதான்.” என்றாள் இலக்கியா கேலி இழையோடிய குரலில்.

“ஓஹோ..! உனக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா? அது அம்மாவின் மனதை நோகடிக்க வேண்டாமே என்று நினைத்துச் சொன்னது. மற்றும்படி நீ வருவதால் என் வேலைதான் கெடும். எல்லாவற்றையும் அம்மாவுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ” என்றான் அவன் அலட்சியத்தோடு.

அவள் முகம் சட்டெனச் சுருங்கிப்போனது. எவ்வளவு ஆவலோடு தயாரானாள். அவனானால் தாய்க்காக அவளைப் பொறுத்துக் கொள்வதாகச் சொல்கிறானே? கட்டியிருக்கும் சேலையைக் கழட்டி எறிந்துவிட்டு சாதாரண உடைக்கு மாறிவிட மனம் துடித்தது.

“அப்போ நான் வரவேண்டாமா அத்தான்? வீட்டிலேயே நிற்கவா?” ஏமாற்றம் நிறைந்த குரலில் வினவினாள் இலக்கியா.

அவள் முகத்தை ஒருகணம் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். “பிறகு அம்மா ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டு இருப்பார். அதனால் வா.” என்றான் பட்டும் படாத குரலில்.

மாமி கேள்வி கேட்பார் என்பதற்காகத்தான் என்னைக் கூட்டிக்கொண்டு போகிறானா? அவனுக்கு அவள் வேண்டாமா? மனதில் வலித்தது.

“மாமியிடம் நான் எதையாவது சொல்லிக்கொள்கிறேன். அதைப்பற்றி யோசிக்காமல் நீங்கள் மட்டும் போய்விட்டு வாருங்கள்.” என்றாள் இலக்கியா இறங்கிவிட்ட குரலில்.

மனைவியைப் பார்த்து முறைத்தான் தர்சன். “ஏய் என்ன? உனக்கு என்ன நீ பெரிய இவள் என்கிற நினைப்பா? மாமியிடம் சொல்கிறேன் அது இது என்று கதை அளந்துகொண்டு இருக்கிறாய். எனக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று. அதனால் வாயை மூடிக்கொண்டு என்னோடு வருகிற வழியைப்பார். அதை விட்டுவிட்டு தேவையில்லாததுகளை உளறிக்கொண்டு இருக்காதே!” என்று உறுமிவிட்டுச் சென்றான் அவன்.

இலக்கியாவுக்கோ கண்ணைக் கரித்தது. காலையில் கண் விழித்ததில் இருந்து அவளைத் தொற்றிக்கொண்டிருந்த உற்சாகமும், துள்ளலும் மொத்தமாக மடிந்துபோனது.

இரவில் அவளிடம் குழைவதும் பகலில் தீயெனக் காய்வதும் தானே அவன் குணமே! அதுசரி, பிடித்துக் கட்டியிருக்க அவள் மனதைப் பற்றியும் யோசித்திருப்பான். இது, அவள் மறுத்தாள் என்பதற்காக நடந்த திருமணம் தானே! கூடுதலாகத் தன் தேவைகளையும் தீர்த்துக் கொள்கிறான்!

அவ்வளவுதான்! அவ்வளவேதான்!

அவன் காட்டிய கடுமையில், இரவு அவளுக்காக அவன் செய்தவைகள் அவளுக்கு மறந்து போனது.

தர்சனின் கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அவன் அருகில் அமர்ந்திருந்த இலக்கியா ஜன்னல் வழியே வெளியில் பார்வையைப் பதித்தபடி இருந்தாள்.

முதன் முதலாக வெளியூருக்குச் செல்லப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி சிறிதுமின்றி, சற்றுமுன் கணவன் பேசிய பேச்சிலேயே நின்று உழன்றது அவள் மனது. ரோசத்தோடு உங்களுடன் நான் வரவில்லை என்று உறுதியான குரலில் அவளால் சொல்லமுடியாமல் போய்விட்டதே!

அப்படி அடுத்தவரின் முகத்தில் அடிப்பதுபோல் பேசுவது அவளின் இயல்பு இல்லை என்றாலும் இப்படிச் சுயமரியாதையை இழந்து வாழ்வதும் அவளின் இயல்பு இல்லையே!

ஏன் இப்படி ஆனோம்? என்ன நடந்தது எனக்கு?

அதுநாள் வரை அவனின் கோபங்களையும் அலட்சியங்களையும் ஏற்று வாழப் பழகியிருந்தவளுக்கு இன்று மட்டும் ஏன் இந்தப் புதுவிதமான வேதனை?

இரண்டாம் தாரம், பிடிக்காத திருமணம், கணவனின் மனதில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று, இருக்கிற வேதனைகள் போதாது என்று இப்போது அவனுடைய வார்த்தைகளால் உண்டாகும் மனப்புண்ணும் சேர்ந்து அவளை வாட்டியது.

புருவங்கள் சுளித்திருக்கச் சுற்றுப்புறத்தை மறந்து தன்னைப் பற்றிய சுயபரிசோதனையில் ஆழ்ந்திருந்தவளை இரண்டு மூன்று தடவைகள் தர்சன் திரும்பித் திரும்பிப் பார்த்ததை, அவள் உணரவில்லை.

“கோவிலுக்குப் போய்விட்டுப் போகலாமா?” அங்கு நிலவிய அமைதியைக் கலைத்து வினவினான் அவன்.

கணவனைத் திரும்பிப் பார்த்தாள் இலக்கியா. திருமணமாகி அடுத்தநாள் மஞ்சுளா சொல்லி அவர்களின் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்குக் கணவனும் மனைவியுமாகப் போய்விட்டு வந்தார்கள் தான். ஆனாலும், இன்று அவனோடு வெளியே கிளம்புகையில் முதலில் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்விட்டு வவுனியாவுக்குப் போனால் நன்றாயிருக்குமே என்று அவள் நினைத்தது உண்மைதான். காலையில் அவளின் மனதை நோகடிக்கும் விதமாக அவன் பேசாமல் இருந்திருக்க அவளாகவே இதை வாய்விட்டு சொல்லியும் இருப்பாள் தான்.

ஆனால், இப்பொழுதோ சம்மதம் சொல்லவும் பயமாக இருந்தது. மறுக்கவும் பிடிக்கவில்லை. அவள் எதைச் சொன்னால் அவன் எப்படிப் பாய்வான் என்று அவளுக்குத் தெரியாதே.

ஒன்றுமே சொல்லாமல் அவள் அவனையே பார்க்க, கார் ஓரிடத்தில் நின்றது. எங்கே வந்திருக்கிறோம் என்று எண்ணியபடி வெளியே பார்த்தாள் இலக்கியா. அது ஒரு கோவில். அதுவும் அவளின் இஷ்ட தெய்வமாகிய கந்தனின் ஆலயம். எத்தனையோ தடவைகள் இங்கு வர வேண்டுமென்று நினைத்திருக்கிறாள். நேரமின்மையும், அவர்களின் வீட்டிலிருந்து கந்தன் கோவில் சற்றுத் தொலைவு என்பதாலும் அவளால் அது முடியாமலேயே போனது.

அந்தக் கோவிலுக்கு அவள் சொல்லாமலேயே அழைத்து வந்தவனின் செயலில் மனம் இலகுவான போதும், ஒன்றுமே சொல்லாமல் அவனோடு கோவிலுக்குள் சென்றாள் இலக்கியா.

கருணை நிறைந்த அந்தக் கந்தனின் முன் கரங்களைக் கூப்பியபோது, அதுவரை நேரமும் அலைபாய்ந்து கொண்டிருந்த இலக்கியாவின் மனதுக்கு மெல்ல மெல்ல அமைதி கிட்டியது.

கந்தனின் அருபாலிக்கும் முகமும் கருணை கொஞ்சும் விழிகளும் அவளை வாஞ்சையுடன் தழுவுவதை உணர்ந்தாள்.
திருநீறு, சந்தனம், குங்குமத்தை இட்டுக்கொண்டவள், கணவனைத் திரும்பிப்பார்த்தாள். அவனோ ஒருபக்க விழியைக் கையால் கசக்கிக் கொண்டிருந்தான்.

அதுவரை நேரமும் அவன் மீதிருந்த ஆற்றாமை மறந்துவிட, “என்னத்தான்? கண்ணுக்குள் திருநீறு விழுந்துவிட்டதா?” என்று பதட்டத்தோடு கேட்டாள் இலக்கியா.

“ம்ம்..” என்றான் அவன் கண்ணைத் தேய்த்து விட்டுக்கொண்டே.

“அதற்கு இப்படிக் கண்ணைக் கசக்குவீர்களா? பிறகு அது இன்னும் உருட்டிக்கொண்டே இருக்கும். கையை எடுங்கள்.” என்றவள், அவனை நெருங்கி அவனது மேல் இமையை ஒரு கையாலும் கீழ் இமையை இன்னொரு கையாலும் பற்றி விரித்துப் பிடித்தபடி, அவனது உயரத்துக்கு எம்பி, அவன் கண்ணுக்குள் இதழ்களைக் குவித்து ஊதினாள்.

தர்சனோ இமைக்கவும் மறந்து, ஈரலிப்போடு குவிந்துகிடந்த தேனூறும் இதழ்கள் காற்றை ஊதும் அழகில் சொக்கிப்போனான்.

அவனது நிலை அறியாது மீண்டும் மீண்டும் ஊதியவள், “இப்போது சரியாகிவிட்டதா?” என்று கேட்டாள்.

“ம்ம்..” என்றான் அவன் அவளிடம் இருந்து பார்வையை அகற்றாது.
 
Last edited by a moderator:

“கண்களை இரண்டு மூன்று தடவை மூடித் திறந்து பாருங்கள்..” என்று அவள் சொன்னபோதுதான், இமைக்கமறந்து தான் அவளையே பார்த்திருப்பது புரிய, அவள் சொன்னதைச் செய்தான் தர்சன்.

“இப்போது கண்ணை உருட்டவில்லையே..” அக்கறையோடு மீண்டும் கேட்டாள் இலக்கியா.

“இல்லை.. சரியாகிவிட்டது..”

“என்னத்தான் நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளையா? கவனமாக இருக்கமாட்டீர்களா?” என்று கடிந்தபடி அவனை நெருங்கியவள் தன்னுடைய சேலை முந்தானையை எடுத்துக் கலங்கியிருந்த அவன் விழிகளை மென்மையாகத் துடைத்துவிட்டாள்.
 
Vishakini

Moderator
Staff member
ஒன்றுமே செய்யத் தோன்றாமல் அவளையே பார்த்தபடி நின்றான் தர்சன்.

“கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகலாமா? அல்லது நேரமாகிறதா?” என்று கேட்டாள் இலக்கியா.

“வா..” என்றுவிட்டு அவளோடு சென்று அங்கிருந்த தூணின் அருகில் அமர்ந்துகொண்டான் தர்சன்.

முகம் மலர அவனருகில் அமர்ந்துகொண்ட இலக்கியாவின் மனம் எந்தவித அலைபாய்தலும் இன்றி நிறைந்து கிடந்தது. “தாங்க்ஸ் அத்தான்..” என்றாள் புன்னகைத்து.

எதற்கு என்று கேட்காதபோதும் மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான் தர்சன்.

“அது.. எனக்கு இந்தக் கோவிலுக்கு வரவேண்டும் என்பது நிறையநாள் ஆசை. அது இன்றுதான் நிறைவேறி இருக்கிறது.” என்றாள் அவள்.

“ஓ..!” என்று கேட்டுக்கொண்டவன், “வேறு எங்கேயெல்லாம் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

“மன்னாரில் இருக்கும் மடுமாதா கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஐநூறு வருடப் பழையதாமே அந்தக் கோவில். அதேபோல முல்லைத்தீவில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கும் ஒரு தடவையாவது போய்விடவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை அத்தான். அங்கே வைகாசி பௌர்ணமியில் கடல்நீரில் விளக்கு எரியுமாமே? அந்த அதிசயத்தைப் பார்க்கவேண்டும்.” என்றவள், “நீங்கள் அங்கே போயிருக்கிறீர்களா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

“ம்ம்.. இரண்டு மூன்று தடவைகள் போயிருக்கிறேன்..” என்றான் அவன் அசுவாரசியமாக.

“மெய்யாகவே கடல் நீரில் விளக்கு எரியுமா அத்தான்? நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” என்று விழிகளை விரித்து ஆர்வத்தோடு அவள் கேட்டபோது,

“ஆமாம்! பார்த்திருக்கிறேன்.” என்றான் தர்சன், அப்போதும் மனைவியின் முகத்திலேயே பார்வையை நிலைக்க விட்டபடி.

“என்ன பார்க்கிறீர்கள்?”

“ஒன்றுமில்லை. வா போகலாம்.” என்றபடி அவன் எழுந்துகொள்ள, அவளும் எழுந்து இன்னுமொரு தடவை கந்தனைக் கும்பிட்டுவிட்டு கணவனோடு காரில் ஏறினாள்.

மீதிப் பயணம் முழுவதும் அவர்களுக்குள் அமைதியே நிலவினாலும், அந்த அமைதி கூடச் சுகமாக, இதமாக, இனிமையாக இருந்தது இருவருக்கும்.

ஒருவழியாக வவுனியாவுக்கு வந்து சேர்ந்த தர்சனின் கார் ஒரு வீட்டின் முன் சென்று நின்றது.

“தர்சன் தம்பி.. வாங்க வாங்க..”என்றபடி ஓடிவந்தார் அந்தவீட்டின் தோட்டக்காரன், காவல்காரன் என்று அனைத்து வேலைகளையும் கவனிக்கும் ராமையா.

அவரிடம் புன்னகையோடு நலன் விசாரித்தவன், “கார் டிக்கியில் பெட்டி இருக்கிறது. எடுத்து வைத்துவிடுங்கள்.” என்று சொல்லிவிட்டு, மனைவியோடு உள்ளே சென்றான்.

அவளுக்கு வீட்டை சுற்றிக் காட்டினான் தர்சன். முதலிலேயே ஒரு வராண்டா இருக்க, அதற்கு அடுத்ததாக உணவு மேசையுடன் கூடிய சாப்பாட்டு அறை இருந்தது. அதன் இரு பக்கங்களும் இரண்டிரண்டு அறைகள் குளியலறை வசதியுடன் அமைந்திருந்தது. சாப்பாட்டு அறைக்குப் பின்னால் சமையலறை என்று கச்சிதமாக இருந்த அந்த வீட்டை அவளுக்கு ஏனோ மிகவும் பிடித்துப் போனது.

அவர்களின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், “கடைக்கு லாரிகள் வந்து சேர்ந்திருக்கும். நான் போய்விட்டு வர எப்படியும் மாலையாகிவிடும். நீ தனியாக இருந்துகொள்வாய் தானே.” என்று கேட்டான்.

புது இடத்தில் அவள் தனியாக இருப்பதா?

சற்றுப் பயமாக இருந்தாலும், அவளால் அதை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. அவளால் அவனது வேலைகள் கெடும் என்று காலையில் சொன்னானே என்று எண்ணியவள், கலக்கத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயன்றபடி, “ம்ம்.. இருப்பேன்..” என்றாள்.

மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்டான் போலும். அவளின் அருகில் சென்று தோள்களைப் பற்றி, “பயமாக இருக்கிறதா?” என்று இதமான குரலில் வினவினான் தர்சன்.

மேலும் கீழுமாக ஆடத் தொடங்கிய அவளின் தலை சட்டென, “உஹூம்..” என்று மறுத்தபடி வேகமாக இடமும் வலமுமாக ஆடியது.

அவளின் செய்கையில் தர்சனின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பவும், விழிகள் விரிய அதிசயமாகக் கணவனைப் பார்த்தாள் இலக்கியா.

சிரிக்கிறானே.. அதுவும் அவளைப் பார்த்து. நம்ப முடியாத அதிசயத்தோடு வாயைப்பிளந்தபடி அவள் பார்க்க, இடதுபக்க புருவத்தைக் கேள்வியாக ஏற்றி இறக்கினான் அவன். விழிகளோ மனைவியைக் குறும்புடன் நோக்கி நகைத்தன.

அந்தப் பார்வையைத் தாங்கமுடியாது அவள் தலை கவிழ, பொறுமையற்ற வேகமூச்சுடன் மனைவியை வேகமாக அணைத்தவனின் உதடுகள் அதைவிட வேகமாக அவள் இதழ்களில் ஒரு நெடிய முத்தத்தைப் பதித்தது.

“எனக்கு அங்கே நிறைய வேலைகள் இருக்கிறது. இப்போது நீ என்னுடன் வந்தாலும் உன்னை என்னால் கவனிக்க முடியாது. அங்கே உனக்குப் போரடிக்கும். அதனால் குளித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கி எழுந்திரு. அதற்குள் நான் வந்துவிடுவேன்.” என்று கரகரத்த குரலில் சொன்னவன், “இன்று இரவும் உன்னால் தூங்கமுடியாது.” என்றான் கிசுகிசுப்பாக.

அதைக்கேட்டு வெட்கிச் சிவந்தவளை மீண்டும் தன் இதழ்களின் வசம் சிறை செய்துவிட்டே சென்றான் அவளின் கணவன்!
 
Top Bottom