அத்தியாயம்-22
கணவன் சொன்னது போலவே அலுப்புத் தீர குளித்துவிட்டு இலக்கியா வந்தபோது, கடையில் வாங்கிய மதிய உணவுடன் வந்தார் ராமையா.
நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டவள், “அவருக்கு?” என்று கேட்டாள்.
“தம்பி அங்கே கடையில் பார்த்துக்கொள்வார் இலக்கியாம்மா..” என்றார் அவர்.
“அப்போ சரி.. என்னை லக்கி என்றே கூப்பிடுங்கள்.” என்றாள் புன்னகையோடு.
“சரிம்மா..” என்றுவிட்டு அவர் செல்ல, முதல் வேலையாகக் கணவனுக்கு அழைத்தாள் இலக்கியா. வேலை நடுவே ஏன் எடுத்தாய் என்று திட்டுவானோ என்று சற்றுப் பயமாகவும் இருந்தது.
“ஹலோ..” என்றான் தர்சன் அழுத்தத்துடன் கூடிய கம்பீரமான குரலில்.
அந்தக்குரல், முதன் முதலாக அவள் அவனுக்கு அழைத்ததை நினைவூட்டியதில் அடைத்த குரலை சிரமப்பட்டு வெளியே கொணர்ந்து, “ நான்.. நான்தான்.. சாப்பிட்டீர்களா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் இலக்கியா.
சற்று நேரம் அந்தப்பக்கம் அமைதி நிலவியது. பிறகு, “இல்லை இனிமேல்தான். கொஞ்சம் வேலை. அது முடிந்ததும் சாப்பிடுவேன்.” என்றவன் இடைவெளி விட்டு, “நீ சாப்பிட்டாயா? ராமண்ணா சாப்பாடு வாங்கித் தந்திருப்பாரே.” என்று விசாரித்தான்.
“ம்.. வாங்கித்தந்தார். நானும் இனிமேல்தான் சாப்பிடப் போகிறேன். ஆனால், நீங்கள் சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமே..”
“பசித்தால் சாப்பிட மாட்டேனா. அதனால் என்னைப் பற்றி யோசிக்காமல் நீ சாப்பிடு.” என்றான் அவன், சற்றே பொறுமை இழந்த குரலில்.
“ப்ளீஸ் அத்தான். கோபிக்காதீர்கள். உணவை முடித்துவிட்டு வேலையைப் பாருங்களேன். சாப்பிட என்ன மணித்தியாலக் கணக்கிலா நேரம் பிடிக்கப் போகிறது. ஒரு பத்து நிமிடம்? அதுவே அதிகம். பசி தீர்ந்துவிட்டால் இன்னும் தெம்பாக வேலைகளைச் செய்யலாமே.” என்றாள் கெஞ்சலாக.
“ம்.. சரி..” என்றான் அவன் சுருக்கமாக.
“மறக்காமல் கட்டாயம் சாப்பிட்டு விடுங்கள்.” என்று அப்போதும் சொல்லிவிட்டே வைத்தாள் இலக்கியா.
தானும் உணவை முடித்துவிட்டு கைகழுவச் சென்றவளுக்கு, கிளிநொச்சி வீட்டுச் சமையலறையின் பிரமாண்டம் சிறிதும் இன்றி சின்னதாய், கச்சிதமாய் இருந்த சமையலறையை மிகவுமே பிடித்துப் போனது.
அங்கே அவள் கையால் சமைத்து கணவனுக்குப் பரிமாறினால் என்ன என்கிற யோசனை தோன்றியதும், அதை அவன் ரசித்து உண்பதும், அவளுக்கும் அவனே ஊட்டி விடுவதும், நேசம் பொங்க அவளும் அவனுக்கு ஊட்டுவதும் என்று பற்பல இனிய கற்பனைகள் எழுந்தது.
அவற்றை எண்ணி மகிழ்ந்தவளின் மனது, உடனேயே இதெல்லாம் நடக்குமா என்றும் ஏங்கியது. பதில் எதிர்மறையாய் இருந்ததில் மனம் வாடினாலும், அவன் வயிற்றைக் கவனிக்கும் ஆவல் அதிகமாய் எழுந்ததில், உடனேயே அதைச் செயலாற்ற எண்ணியவள் ராமையாவை நாடிச் சென்றாள்.
“இரவுக்கு நானே சமைத்துவிடலாம் என்று இருக்கிறேன் ராமண்ணா. அதனால் சமையலுக்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட் எழுதித் தருகிறேன். அதை வாங்கி வாருங்கள்.” என்றாள் அவரிடம்.
“எதற்கு லக்கிம்மா உங்களுக்கு வீண் சிரமம். என் மனைவி நன்றாகச் சமைப்பாள். அவளை இங்கே கூட்டிக்கொண்டு வருகிறேன். சமையல் வேலையை அவள் பார்க்கட்டும்.” என்றார் அவர்.
“பிறகு உங்கள் வீட்டை யார் பார்த்துக்கொள்வது? அதனால் உங்கள் மனைவி வரவேண்டாம். எங்கள் இருவருக்கும் தானே. நானே பார்த்துக்கொள்வேன்.” என்று அவள் முடித்தபோது, அவரின் முகம் மலர்ந்தது.
“அப்படியே மஞ்சு அம்மா மாதிரியே சொல்கிறீர்கள். அவரும் இப்படித்தான். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தன் கையால்தான் சமைப்பார்..” என்று பெருமை பொங்கச் சொன்னவர், இலக்கியா கொடுத்த லிஸ்ட்டை வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றார்.
தங்களுடைய அறைக்குள் வந்தவளுக்கு உண்ட மயக்கம் உறக்கத்துக்கு அழைக்கக் கட்டிலில் சரிந்தாள்.
அவனுக்கும் அவளைப்போலக் களைப்பாகத்தானே இருக்கும். அவளாவது சும்மா அமர்ந்துதான் வந்தாள். அவன் காரையும் அல்லவா ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகும் வேலை என்று ஓடிவிட்டானே.. சாப்பிட்டானோ தெரியவில்லை என்று கணவனைப் பற்றிய எண்ணங்களோடே உறங்கிப்போனாள் இலக்கியா.
மீண்டும் அவள் கண் விழித்தபோது மாலையாகி விட்டிருந்தது. நன்றாகத் தூங்கி எழுந்ததில் சோர்வு நீங்கி மனமும் உடலும் உற்சாகமாக இருந்தது. கணவன் வரமுதல் வேலைகளை முடிக்க எண்ணியவள், முகம் கழுவி தலை வாரி பொட்டை இட்டுக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.
அங்கே தேநீருக்காகத் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு, ராமையா வாங்கி வைத்திருந்த பொருட்களைத் தன் கைக்கு எட்டும் இடங்களில் ஒதுக்கி வைத்தாள்.
கொதித்த நீரில் தேநீரை ஊற்றி அருகில் வைத்துக்கொண்டவள், அதைக் அருந்தியபடி முதலில் பிட்டை அவித்து வைத்தாள். பிறகு காய்கறிகளில் ஒரு சாம்பார், தேங்காய்சம்பல், மிளகாய் பொறியல் என்று எளிமையாக, கணவனுக்குப் பிடித்த உணவாகச் சமைத்தாள். கடைசியாக அங்கிருந்த பழங்களை எடுத்து அதில் ஒரு பழச்சாலட்டும் போட்டு வைத்தாள்.
மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியது. அப்போதும் கணவனைக் காணவில்லை என்றதும், அங்கே கேட் வாசலில் அமர்ந்திருந்த ராமையாவிடம் சென்று, “அவரை இன்னும் காணவில்லையே அண்ணா..” என்று விசாரித்தாள்.
“தம்பி அப்படித்தான்மா. வேலை என்று வந்துவிட்டால் தன்னையே மறந்துவிடுவார். இந்தமுறை நீங்களும் வந்திருப்பதால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்.” என்றார் அவர்.
அங்கே கிளிநொச்சியிலும் அவன் இப்படி நேரம் சென்று வந்திருக்கிறான் தான். அப்போதெல்லாம் அவள் கணவனைத் தேடியதும் இல்லை. தேடத் தோன்றியதும் இல்லை. அவன் வீட்டில் இல்லை என்பதே அவளுக்கு ஒருவித விடுதலை உணர்வைத்தான் கொடுக்கும்.
இன்றோ, அவனுக்காகச் சமைத்து வைத்துவிட்டு, எப்போது வருவான் என்று காத்திருந்தாள்.
நேரமோ இரவு எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது. எதற்கு வேலை நேரத்தில் அழைத்துத் தொந்தரவு செய்கிறாய் என்று கத்துவானோ என்று நினைத்தவளுக்கு அவனுக்கு அழைக்கவும் பயமாக இருந்தது. மீண்டும் ராமையாவிடம் சென்று விசாரித்தாள். அப்போதும், “தம்பி இப்போ வந்திடும்மா. இனி வீட்டுக்கதவை மூடிக்கொண்டு இருங்கள். இருட்டிவிட்டது.” என்றார் அவர்.
நேரம், இரவு ஒன்பது, பத்து என்று நகர்ந்துகொண்டு இருந்ததே தவிரத் தர்சன் வந்த பாடில்லை. மெல்ல மெல்ல அவளைத் திகில் ஆட்கொள்ளத் தொடங்கியது. அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அவன் திட்டினாலும் பரவாயில்லை என்று அவனுக்கு அழைத்தாள்.
ம்ஹூம்! கைபேசியும் அணைக்கப் பட்டிருந்தது. நெஞ்சோ நடுங்கத் தொடங்கியது.
ஏன் கைபேசியை அணைத்துவிட்டான்? அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு இவ்வளவு நேரம் எங்கே போனான்? அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் விழிகளில் மளுக் என்று கண்ணீர் வழிந்தது.
வரும் வழியில் ஏதும் விபத்தோ? அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் ஏதும் கணவனைச் செய்துவிட்டார்களோ? இந்த உலகத்தில் எங்கெங்கோ எல்லாம் நடந்த பயங்கரங்கள் எல்லாம் கண்முன்னால் வந்து நின்று அவளை அச்சுறுத்தின.
கடவுளே என் கணவனுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்று மனம் பிரார்த்தித்தது. அவன் எப்படிப் போனானோ அப்படியே அவளிடம் திரும்பி வந்துவிட வேண்டும். அவனுக்கு மட்டும் ஏதும் என்றால் அடுத்த நிமிடமே நானும் செத்துவிடுவேன். அவன் இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது என்று எண்ணியவள், தன் எண்ணப்போக்கை உணர்ந்து அதிர்ந்துபோனாள்.
இப்போது அவள் என்ன நினைத்தாள்?
அவனுக்கு ஒன்று என்றால் அவளும் உயிருடன் இருக்க மாட்டாள் என்றல்லவா?
அதன் பொருள்?
ஒன்றே ஒன்றாகத்தானே இருக்க முடியும்!
மனம் மீண்டும் அதிர்ந்தது!
இது எப்போதில் இருந்து?
தெரியவில்லையே..!
காதல் என்ன இந்தத் திகதியில் இன்ன நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டா வருகிறது?
பின்னே, அவன் அவளின் பிறந்தவீட்டுக்கு செய்த உதவியாளா?
உடனேயே இல்லை என்று உறுதியாக மறுத்தது மனம்!
அவன் அதைச் செய்ததில் மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அதை அவளுக்காகச் செய்தான் என்பதுதானே பெரிதாகத் தெரிந்தது. அதில் தானே அவள் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தது.
அப்போ, அவனிடம் தனக்கான உரிமையை, முக்கியத்துவத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததா அவள் ஆழ்மனது? அதை அவன் வழங்கியதும் துள்ளிக் குதித்து அவனிடம் ஓடிவிட்டதா அவள் இதயம்?
அப்போ அவனுடைய முதல் காதலும், முதல் திருமணமும் அவளுக்கு இனி ஒன்றுமே இல்லையா.. அவளைப் பாதிக்காதா என்று நினைத்த மாத்திரத்திலேயே சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்தது.
இல்லையே.. அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லையே.. அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று ஒதுக்க முடியவில்லையே! சட்டப்படியும் சாஸ்திரப்படியும் நான் மட்டும்தான் அவன் மனைவி என்று நினைக்க முடியவில்லையே!
அவனது முதலும் கடைசியுமான காதலியாக அவள் இல்லையே..
அவன் இதயத்தில் வேறு ஒருத்தி அல்லவா இருக்கிறாள்!
அவன் அப்படியில்லை என்று சொன்னாலும் அதுதானே உண்மை!
இதயம் என்ன வாடகை வீடா, ஒருவர் போனதும் பளிச்சென்று அடுத்தவரை உள்ளே அழைத்துக் கொள்வதற்கு?

Last edited by a moderator: