• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 22

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-22

கணவன் சொன்னது போலவே அலுப்புத் தீர குளித்துவிட்டு இலக்கியா வந்தபோது, கடையில் வாங்கிய மதிய உணவுடன் வந்தார் ராமையா.

நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டவள், “அவருக்கு?” என்று கேட்டாள்.

“தம்பி அங்கே கடையில் பார்த்துக்கொள்வார் இலக்கியாம்மா..” என்றார் அவர்.

“அப்போ சரி.. என்னை லக்கி என்றே கூப்பிடுங்கள்.” என்றாள் புன்னகையோடு.

“சரிம்மா..” என்றுவிட்டு அவர் செல்ல, முதல் வேலையாகக் கணவனுக்கு அழைத்தாள் இலக்கியா. வேலை நடுவே ஏன் எடுத்தாய் என்று திட்டுவானோ என்று சற்றுப் பயமாகவும் இருந்தது.

“ஹலோ..” என்றான் தர்சன் அழுத்தத்துடன் கூடிய கம்பீரமான குரலில்.

அந்தக்குரல், முதன் முதலாக அவள் அவனுக்கு அழைத்ததை நினைவூட்டியதில் அடைத்த குரலை சிரமப்பட்டு வெளியே கொணர்ந்து, “ நான்.. நான்தான்.. சாப்பிட்டீர்களா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் இலக்கியா.

சற்று நேரம் அந்தப்பக்கம் அமைதி நிலவியது. பிறகு, “இல்லை இனிமேல்தான். கொஞ்சம் வேலை. அது முடிந்ததும் சாப்பிடுவேன்.” என்றவன் இடைவெளி விட்டு, “நீ சாப்பிட்டாயா? ராமண்ணா சாப்பாடு வாங்கித் தந்திருப்பாரே.” என்று விசாரித்தான்.

“ம்.. வாங்கித்தந்தார். நானும் இனிமேல்தான் சாப்பிடப் போகிறேன். ஆனால், நீங்கள் சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமே..”

“பசித்தால் சாப்பிட மாட்டேனா. அதனால் என்னைப் பற்றி யோசிக்காமல் நீ சாப்பிடு.” என்றான் அவன், சற்றே பொறுமை இழந்த குரலில்.

“ப்ளீஸ் அத்தான். கோபிக்காதீர்கள். உணவை முடித்துவிட்டு வேலையைப் பாருங்களேன். சாப்பிட என்ன மணித்தியாலக் கணக்கிலா நேரம் பிடிக்கப் போகிறது. ஒரு பத்து நிமிடம்? அதுவே அதிகம். பசி தீர்ந்துவிட்டால் இன்னும் தெம்பாக வேலைகளைச் செய்யலாமே.” என்றாள் கெஞ்சலாக.

“ம்.. சரி..” என்றான் அவன் சுருக்கமாக.

“மறக்காமல் கட்டாயம் சாப்பிட்டு விடுங்கள்.” என்று அப்போதும் சொல்லிவிட்டே வைத்தாள் இலக்கியா.

தானும் உணவை முடித்துவிட்டு கைகழுவச் சென்றவளுக்கு, கிளிநொச்சி வீட்டுச் சமையலறையின் பிரமாண்டம் சிறிதும் இன்றி சின்னதாய், கச்சிதமாய் இருந்த சமையலறையை மிகவுமே பிடித்துப் போனது.

அங்கே அவள் கையால் சமைத்து கணவனுக்குப் பரிமாறினால் என்ன என்கிற யோசனை தோன்றியதும், அதை அவன் ரசித்து உண்பதும், அவளுக்கும் அவனே ஊட்டி விடுவதும், நேசம் பொங்க அவளும் அவனுக்கு ஊட்டுவதும் என்று பற்பல இனிய கற்பனைகள் எழுந்தது.

அவற்றை எண்ணி மகிழ்ந்தவளின் மனது, உடனேயே இதெல்லாம் நடக்குமா என்றும் ஏங்கியது. பதில் எதிர்மறையாய் இருந்ததில் மனம் வாடினாலும், அவன் வயிற்றைக் கவனிக்கும் ஆவல் அதிகமாய் எழுந்ததில், உடனேயே அதைச் செயலாற்ற எண்ணியவள் ராமையாவை நாடிச் சென்றாள்.

“இரவுக்கு நானே சமைத்துவிடலாம் என்று இருக்கிறேன் ராமண்ணா. அதனால் சமையலுக்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட் எழுதித் தருகிறேன். அதை வாங்கி வாருங்கள்.” என்றாள் அவரிடம்.

“எதற்கு லக்கிம்மா உங்களுக்கு வீண் சிரமம். என் மனைவி நன்றாகச் சமைப்பாள். அவளை இங்கே கூட்டிக்கொண்டு வருகிறேன். சமையல் வேலையை அவள் பார்க்கட்டும்.” என்றார் அவர்.

“பிறகு உங்கள் வீட்டை யார் பார்த்துக்கொள்வது? அதனால் உங்கள் மனைவி வரவேண்டாம். எங்கள் இருவருக்கும் தானே. நானே பார்த்துக்கொள்வேன்.” என்று அவள் முடித்தபோது, அவரின் முகம் மலர்ந்தது.

“அப்படியே மஞ்சு அம்மா மாதிரியே சொல்கிறீர்கள். அவரும் இப்படித்தான். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தன் கையால்தான் சமைப்பார்..” என்று பெருமை பொங்கச் சொன்னவர், இலக்கியா கொடுத்த லிஸ்ட்டை வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றார்.

தங்களுடைய அறைக்குள் வந்தவளுக்கு உண்ட மயக்கம் உறக்கத்துக்கு அழைக்கக் கட்டிலில் சரிந்தாள்.

அவனுக்கும் அவளைப்போலக் களைப்பாகத்தானே இருக்கும். அவளாவது சும்மா அமர்ந்துதான் வந்தாள். அவன் காரையும் அல்லவா ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகும் வேலை என்று ஓடிவிட்டானே.. சாப்பிட்டானோ தெரியவில்லை என்று கணவனைப் பற்றிய எண்ணங்களோடே உறங்கிப்போனாள் இலக்கியா.

மீண்டும் அவள் கண் விழித்தபோது மாலையாகி விட்டிருந்தது. நன்றாகத் தூங்கி எழுந்ததில் சோர்வு நீங்கி மனமும் உடலும் உற்சாகமாக இருந்தது. கணவன் வரமுதல் வேலைகளை முடிக்க எண்ணியவள், முகம் கழுவி தலை வாரி பொட்டை இட்டுக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

அங்கே தேநீருக்காகத் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு, ராமையா வாங்கி வைத்திருந்த பொருட்களைத் தன் கைக்கு எட்டும் இடங்களில் ஒதுக்கி வைத்தாள்.

கொதித்த நீரில் தேநீரை ஊற்றி அருகில் வைத்துக்கொண்டவள், அதைக் அருந்தியபடி முதலில் பிட்டை அவித்து வைத்தாள். பிறகு காய்கறிகளில் ஒரு சாம்பார், தேங்காய்சம்பல், மிளகாய் பொறியல் என்று எளிமையாக, கணவனுக்குப் பிடித்த உணவாகச் சமைத்தாள். கடைசியாக அங்கிருந்த பழங்களை எடுத்து அதில் ஒரு பழச்சாலட்டும் போட்டு வைத்தாள்.

மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியது. அப்போதும் கணவனைக் காணவில்லை என்றதும், அங்கே கேட் வாசலில் அமர்ந்திருந்த ராமையாவிடம் சென்று, “அவரை இன்னும் காணவில்லையே அண்ணா..” என்று விசாரித்தாள்.

“தம்பி அப்படித்தான்மா. வேலை என்று வந்துவிட்டால் தன்னையே மறந்துவிடுவார். இந்தமுறை நீங்களும் வந்திருப்பதால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்.” என்றார் அவர்.

அங்கே கிளிநொச்சியிலும் அவன் இப்படி நேரம் சென்று வந்திருக்கிறான் தான். அப்போதெல்லாம் அவள் கணவனைத் தேடியதும் இல்லை. தேடத் தோன்றியதும் இல்லை. அவன் வீட்டில் இல்லை என்பதே அவளுக்கு ஒருவித விடுதலை உணர்வைத்தான் கொடுக்கும்.

இன்றோ, அவனுக்காகச் சமைத்து வைத்துவிட்டு, எப்போது வருவான் என்று காத்திருந்தாள்.

நேரமோ இரவு எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது. எதற்கு வேலை நேரத்தில் அழைத்துத் தொந்தரவு செய்கிறாய் என்று கத்துவானோ என்று நினைத்தவளுக்கு அவனுக்கு அழைக்கவும் பயமாக இருந்தது. மீண்டும் ராமையாவிடம் சென்று விசாரித்தாள். அப்போதும், “தம்பி இப்போ வந்திடும்மா. இனி வீட்டுக்கதவை மூடிக்கொண்டு இருங்கள். இருட்டிவிட்டது.” என்றார் அவர்.

நேரம், இரவு ஒன்பது, பத்து என்று நகர்ந்துகொண்டு இருந்ததே தவிரத் தர்சன் வந்த பாடில்லை. மெல்ல மெல்ல அவளைத் திகில் ஆட்கொள்ளத் தொடங்கியது. அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அவன் திட்டினாலும் பரவாயில்லை என்று அவனுக்கு அழைத்தாள்.

ம்ஹூம்! கைபேசியும் அணைக்கப் பட்டிருந்தது. நெஞ்சோ நடுங்கத் தொடங்கியது.

ஏன் கைபேசியை அணைத்துவிட்டான்? அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு இவ்வளவு நேரம் எங்கே போனான்? அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் விழிகளில் மளுக் என்று கண்ணீர் வழிந்தது.

வரும் வழியில் ஏதும் விபத்தோ? அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் ஏதும் கணவனைச் செய்துவிட்டார்களோ? இந்த உலகத்தில் எங்கெங்கோ எல்லாம் நடந்த பயங்கரங்கள் எல்லாம் கண்முன்னால் வந்து நின்று அவளை அச்சுறுத்தின.

கடவுளே என் கணவனுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்று மனம் பிரார்த்தித்தது. அவன் எப்படிப் போனானோ அப்படியே அவளிடம் திரும்பி வந்துவிட வேண்டும். அவனுக்கு மட்டும் ஏதும் என்றால் அடுத்த நிமிடமே நானும் செத்துவிடுவேன். அவன் இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது என்று எண்ணியவள், தன் எண்ணப்போக்கை உணர்ந்து அதிர்ந்துபோனாள்.

இப்போது அவள் என்ன நினைத்தாள்?

அவனுக்கு ஒன்று என்றால் அவளும் உயிருடன் இருக்க மாட்டாள் என்றல்லவா?

அதன் பொருள்?

ஒன்றே ஒன்றாகத்தானே இருக்க முடியும்!

மனம் மீண்டும் அதிர்ந்தது!

இது எப்போதில் இருந்து?

தெரியவில்லையே..!

காதல் என்ன இந்தத் திகதியில் இன்ன நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டா வருகிறது?

பின்னே, அவன் அவளின் பிறந்தவீட்டுக்கு செய்த உதவியாளா?

உடனேயே இல்லை என்று உறுதியாக மறுத்தது மனம்!

அவன் அதைச் செய்ததில் மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அதை அவளுக்காகச் செய்தான் என்பதுதானே பெரிதாகத் தெரிந்தது. அதில் தானே அவள் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தது.

அப்போ, அவனிடம் தனக்கான உரிமையை, முக்கியத்துவத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததா அவள் ஆழ்மனது? அதை அவன் வழங்கியதும் துள்ளிக் குதித்து அவனிடம் ஓடிவிட்டதா அவள் இதயம்?

அப்போ அவனுடைய முதல் காதலும், முதல் திருமணமும் அவளுக்கு இனி ஒன்றுமே இல்லையா.. அவளைப் பாதிக்காதா என்று நினைத்த மாத்திரத்திலேயே சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்தது.

இல்லையே.. அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லையே.. அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று ஒதுக்க முடியவில்லையே! சட்டப்படியும் சாஸ்திரப்படியும் நான் மட்டும்தான் அவன் மனைவி என்று நினைக்க முடியவில்லையே!

அவனது முதலும் கடைசியுமான காதலியாக அவள் இல்லையே..

அவன் இதயத்தில் வேறு ஒருத்தி அல்லவா இருக்கிறாள்!

அவன் அப்படியில்லை என்று சொன்னாலும் அதுதானே உண்மை!

இதயம் என்ன வாடகை வீடா, ஒருவர் போனதும் பளிச்சென்று அடுத்தவரை உள்ளே அழைத்துக் கொள்வதற்கு?
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
ஏன் கைபேசியை அணைத்துவிட்டான்? அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு இவ்வளவு நேரம் எங்கே போனான்? அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் விழிகளில் மளுக் என்று கண்ணீர் வழிந்தது.

வரும் வழியில் ஏதும் விபத்தோ? அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் ஏதும் கணவனைச் செய்துவிட்டார்களோ? இந்த உலகத்தில் எங்கெங்கோ எல்லாம் நடந்த பயங்கரங்கள் எல்லாம் கண்முன்னால் வந்து நின்று அவளை அச்சுறுத்தின.

கடவுளே என் கணவனுக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாது என்று மனம் பிரார்த்தித்தது. அவன் எப்படிப் போனானோ அப்படியே அவளிடம் திரும்பி வந்துவிட வேண்டும். அவனுக்கு மட்டும் ஏதும் என்றால் அடுத்த நிமிடமே நானும் செத்துவிடுவேன். அவன் இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது என்று எண்ணியவள், தன் எண்ணப்போக்கை உணர்ந்து அதிர்ந்துபோனாள்.

இப்போது அவள் என்ன நினைத்தாள்?

அவனுக்கு ஒன்று என்றால் அவளும் உயிருடன் இருக்க மாட்டாள் என்றல்லவா?

அதன் பொருள்?

ஒன்றே ஒன்றாகத்தானே இருக்க முடியும்!

மனம் மீண்டும் அதிர்ந்தது!

இது எப்போதில் இருந்து?

தெரியவில்லையே..!

காதல் என்ன இந்தத் திகதியில் இன்ன நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டா வருகிறது?

பின்னே, அவன் அவளின் பிறந்தவீட்டுக்கு செய்த உதவியாளா?

உடனேயே இல்லை என்று உறுதியாக மறுத்தது மனம்!

அவன் அதைச் செய்ததில் மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அதை அவளுக்காகச் செய்தான் என்பதுதானே பெரிதாகத் தெரிந்தது. அதில் தானே அவள் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தது.

அப்போ, அவனிடம் தனக்கான உரிமையை, முக்கியத்துவத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததா அவள் ஆழ்மனது? அதை அவன் வழங்கியதும் துள்ளிக் குதித்து அவனிடம் ஓடிவிட்டதா அவள் இதயம்?

அப்போ அவனுடைய முதல் காதலும், முதல் திருமணமும் அவளுக்கு இனி ஒன்றுமே இல்லையா.. அவளைப் பாதிக்காதா என்று நினைத்த மாத்திரத்திலேயே சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்தது.

இல்லையே.. அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லையே.. அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று ஒதுக்க முடியவில்லையே! சட்டப்படியும் சாஸ்திரப்படியும் நான் மட்டும்தான் அவன் மனைவி என்று நினைக்க முடியவில்லையே!

அவனது முதலும் கடைசியுமான காதலியாக அவள் இல்லையே..

அவன் இதயத்தில் வேறு ஒருத்தி அல்லவா இருக்கிறாள்!

அவன் அப்படியில்லை என்று சொன்னாலும் அதுதானே உண்மை!

இதயம் என்ன வாடகை வீடா, ஒருவர் போனதும் பளிச்சென்று அடுத்தவரை உள்ளே அழைத்துக் கொள்வதற்கு?

தாளமுடியாத வேதனையோடு கண்ணீர் வடித்தவளுக்கு, நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ளாய் உறுத்தும் இந்த உறுத்தலோடுதான் அவளுடைய மீதி வாழ்க்கை கழியப் போகிறது என்று நினைக்கவே துக்கப் பந்துவந்து நெஞ்சை அடைத்தது.

கணவனை உயிரினும் மேலாகக் காதலிக்கிறோம் என்பதே ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வேதனையைக் கொடுக்க முடியுமா?

ஆனந்தத்தோடு கட்டியவனிடம் பகிரவேண்டிய விஷயத்தை அவனுக்குக் காட்டாமல் மனதோடு புதைக்கவேண்டிய நிலையில் இருக்கிறாளே..!

ஆமாம்!

அவளால், தன்னுடைய சுயமரியாதையை இழந்து அவனிடம் காதலை சொல்லவே முடியாது!

இன்னொருத்தியை மனதில் சுமப்பவனிடம் காதல் பிச்சை கேட்கமுடியாது!

என்ன மாதிரியான நிலை அவளுக்கு வந்திருக்கிறது?

தன் நிலையை எண்ணியதால் உண்டான கழிவிரக்கத்தில் கண்ணீர் வடித்தவள், நீண்ட நேரத்தின் பின்னர் அவளுக்கு விதித்த வாழ்க்கை இதுதான் என்கிற முடிவுக்குப் பெரும் சிரமத்தின் மத்தியில் வந்தாள்.

காதலை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் காதலோடு வாழ இயலுமே!

அப்படித்தான் இனி அவனோடு வாழப் போகிறாள்! அதற்கு முதலில் அவள் கணவன் எந்த ஆபத்தும் இல்லாமல் அவளிடம் வந்து சேரவேண்டுமே!

அதுவரை நேரமும் அவன்மேல் கொண்டுவிட்ட காதலினால் கண்ணீர் வடித்தவளுக்கு, கணவன் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது அப்போதுதான் உறைத்தது.

உடனேயே அவனை எண்ணிப் பதறியவள், நேரம் பன்னிரண்டையும் தாண்டுவதைக் கண்டு, கைகள் நடுங்க மனம் பதைபதைக்க மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளாக அவனைத் தேடித் போகலாம் என்றால் எங்கே என்று செல்வது? அந்த ஊரில் அவளுக்கு ஒன்றும் தெரியாதே..

அவளுக்குத் தெரிந்த ஒரே நபரான ராமையாவிடமே மீண்டும் ஓடினாள்.

“ராமண்ணா அவரை இன்னும் காணோமே. கைபேசிக்கு அழைத்தாலும் எடுக்கிறார் இல்லை. எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைக் கடைக்கு.. அவரிடம் ஒருக்கால் கூட்டிக்கொண்டு போகிறீர்களா?” திடமான குரலில் கேட்க முயன்றும் முடியாமல், உதடுகள் நடுங்கி, குரல் தழுதழுத்து அவளின் நிலையை அவருக்கு நன்றாகவே காட்டிக்கொடுத்தது.

“இப்போது கடை பூட்டியிருப்பார்களே லக்கிம்மா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “ஐயோ.. அப்படி என்றால் அவர் எங்கே? அவருக்கு.. அவருக்கு ஏதுமோ?” என்று பதை பதைத்தவளைப் பார்த்து அவருக்குப் பாவமாக இருந்தது.

ஆனால், அந்த வீட்டு ஆண்கள் வேலை என்று வந்துவிட்டால் மனைவி பிள்ளைகள் என்று அனைத்தையும் மறந்துவிடுவார்களே.

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. சும்மா எதையாவது நினைத்துக் கலங்கக் கூடாது லக்கிம்மா. கடை பூட்டினாலும் லாரிகள் நிற்கும் கொடோனுக்குச் சென்று இருப்பார். அங்கும், லாரியில் லோடுகள் ஏறிவிட்டதா, கொழும்புக்குப் போகவேண்டியவைகள் போய்விட்டதா, கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டியவைகளை அனுப்பியாயிற்றா, எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? அதையெல்லாம் முடித்துக்கொண்டு வர கொஞ்சம் நேரமாகும். தம்பி இங்கே வந்தால் சிலநேரம் காலையில் போய் அடுத்தநாள் காலையிலும் வந்திருக்கிறது. அதனால் ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்த் தூங்குங்கள். தம்பி வந்துவிடுவார்.” என்று பரிவும் பாசக் கண்டிப்புமாகச் சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திக்கொண்டவள் தொப்பென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள். விழிகளோ சாற்றப்பட்டிருக்கும் கதவு திறப்பதற்காகவே காத்திருந்தது.

அப்படியே எவ்வளவு நேரம்தான் சென்றதோ.. கார் ஒன்று வீட்டு வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் அவளின் புலன்கள் அத்தனையும் விழித்துக்கொண்டன.

கணவனின் காரின் ஒலிதான் என்று உள்ளம் கத்திச் சொன்னபோதும் எழுந்து சென்று பார்க்க பயமாக இருந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவள் காத்திருக்க, கதவைத் திறந்துகொண்டு வந்தான் தர்சன்.
 

Vishakini

Moderator
Staff member
அவள் விழிகள் மின்னல் வேகத்தில் கணவனை மேலும் கீழுமாக ஆராய்ந்தது. போனது போலவே வந்திருக்கிறான். முகத்தில் அதீத களைப்பு மட்டும் தெரிந்தது. மற்றும்படி அவனுக்கு ஒன்றுமில்லை என்று அவனை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்டவளுக்கு, அதுவரை நேரமும் நெஞ்சை அடைத்துவைத்திருந்த அழுகை பெரிய விம்மலாக வெடிக்க, “அத்தான்..!” என்று கூவிக்கொண்டு பாய்ந்து சென்றவள், அவனைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள்.

ஒருநொடி திகைத்து நின்ற தர்சனின் கைகளும் மனைவியைக் கட்டிக்கொண்டன. “ஏய்.. என்ன.. என்னம்மா? ஏன் அழுகிறாய்?”

“இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள்? ஏன் நேரத்துக்கே வரவில்லை. உங்களுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று பயந்தே போய்விட்டேன்..” என்று அழுகையோடு அவள் சொன்னபோது, இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றினாலும் மறுபுறம் சந்தோசமாகவும் இருந்தது அவனுக்கு. அவனை அறியாமலேயே மனதுக்குள் ஒரு இதம் பரவியது.

“வேலைகளை முடித்துவிட்டு வரவேண்டாமா?” புன்சிரிப்போடு அவன் கேட்க,

“அதற்கு இவ்வளவு நேரமா? நேரமாகும் என்று அழைத்தாவது சொல்லியிருக்கலாம் தானே. நான் அழைத்தபோதும் நீங்கள் ஏன் எடுக்கவில்லை..” என்று அப்போதும் அழுதாள் அவள்.

“எனக்கு அழைத்தாயா? கேட்கவில்லையே..” என்றவன், மனைவியை ஒருகையால் அணைத்தபடி மறு கையால் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தான். அதுவோ செயல் இழந்து கிடந்தது. “சார்ஜ் போய்விட்டது..”

“அது எனக்கு எப்படித் தெரியும். நான் என்னென்னவோ நினைத்துப் பயந்தே போனேன்..” அவன் நெஞ்சிலிருந்து முகத்தை எடுக்காது சொன்னவள் நன்றாகப் பயந்துவிட்டாள் என்று விளங்கியது அவனுக்கு.

“அதுதான் நான் வந்துவிட்டேனே. பிறகும் எதற்கு அழுகிறாய்?” என்றவன், மனைவியின் முதுகை ஆறுதலாக வருடிக் கொடுத்தான்.

மெல்ல மெல்ல அவளது அழுகை நின்றுவிட்டபோதும், கணவனின் அருகாமை சுகமாக இருக்க, அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே நின்றாள் இலக்கியா.

சற்று நேரம் அப்படியே நின்றவன், “இப்படியே எவ்வளவு நேரம் நிற்பதாக உத்தேசம்?” என்று கிண்டல் குரலில் கேட்டபோதுதான், வேலை முடிந்து வந்தவனை உடை கூட மாற்றவிடாமல் மறித்து வைத்திருக்கிறோம் என்று புரிய, மெல்ல விலகினாள் இலக்கியா.

“இவ்வளவு பயந்தவள் ராமண்ணாவிடம் கேட்டிருக்க, அவர் சொல்லியிருப்பாரே..”

“அவர் வேலையாக இருக்கும் என்று சொன்னார்தான்..” என்று இழுத்தாள் இலக்கியா.

பிறகுமா பயந்தாய் என்கிற கேள்வியோடு அவன் பார்க்க, “மாலை வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர் நடுச்சாமம் வரைக்கும் வராமல் இருந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா?” என்றாள் அவள் முணுமுணுப்பாக.

தர்சனுக்கு மனைவியின் பேச்சில் திரும்பவும் சிரிப்புத்தான் தோன்றியது. அதோடு இறுகிப்போய்க் கிடக்கும் அவன் மனதை அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் மெல்ல மெல்ல இளக்குவதை அவனால் உணரவும் முடிந்தது.

“சரி. நீ சாப்பாட்டை எடுத்துவை. நான் ஒரு சின்னக் குளியலைப் போட்டுவிட்டு வருகிறேன்..” என்றுவிட்டு அவன் அறைக்குள் செல்ல, அவள் சமையல் கட்டுக்குச் சென்றாள்.

குளித்துமுடித்துச் சாரத்தை மாற்றிக்கொண்டு வந்தவனுக்கு உணவைப் பரிமாறினாள் இலக்கியா.

அவன் ஒருவாய் எடுத்து வைத்ததுமே, “எப்படி இருக்கிறது?” என்று ஆவல் பொங்கக் கேட்டாள்.

இன்னொரு வாயையும் உண்டுவிட்டு, “ம்.. நன்றாகத்தான் இருக்கிறது…” என்று அவன் சொல்லிமுடிக்க முதலே, “நானே சமைத்தேன்..” என்று பெருமையோடு அறிவித்தாள் அவள்.

“இரவுக்கு என்றபடியால் சின்னதாக முடித்துவிட்டேன். நாளை மதியத்துக்கு விருந்தே சமைக்கிறேன்.” என்றாள் உற்சாகமாக.

“எதற்குச் சும்மா அடுப்படியில் நின்று கஷ்டப்பட நினைக்கிறாய்? கடையிலேயே வாங்கிக் கொள்ளலாம். நான்கு நாட்களுக்குத் தானே.” என்றான் அவன் உண்டுகொண்டே.

காலையில் அவள் கற்பனையில் கண்டது போல அவன் அவளுக்கு ஊட்டுவானா என்கிற ஏக்கத்தோடு காத்திருந்தவள், அவன் தன் வயிற்றை மட்டும் கவனிப்பதைக் கண்டதும் தன் வேதனையைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு, வலுக்கட்டாயமாக உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாள்.

“இதில் என்னத்தான் கஷ்டம்? இருவருக்குச் சமைப்பது ஒரு வேலையா? அதைவிடக் கடைச்சாப்பாடு எல்லாம் ஒரு சாப்பாடா? உப்பும் இல்லை. புளிப்பும் இல்லை. மனிதன் உண்பானா அதை!” என்றாள் முகத்தைச் சுளித்துக்கொண்டு.

அவளின் முகபாவனையில் அரும்பிய புன்னகையோடு, “அப்போ அதை உண்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?” என்று கேட்டான் அவன்.

“அவர்களுக்கு அது தலையெழுத்து என்றால் நமக்குமா?” தனக்கும் தட்டில் உணவை இட்டபடி சொன்னாள் இலக்கியா.

அதைப் பார்த்துவிட்டு, “இன்னுமா நீ சாப்பிடவில்லை?” என்று திகைப்போடு கேட்டான் தர்சன்.

இதையாவது கேட்டானே என்று மனதைத் தேற்றியவள், “ம்! நீங்கள் வருவீர்கள் என்று காத்திருந்தேன்.” என்றாள்.

அவனுக்கோ கோபம் வந்தது.

“நீ சாப்பிடாமல் இருப்பாய் என்று வேலையை விட்டுவிட்டா நான் வரமுடியும்? இனி எனக்காகக் காத்திருக்காதே!” என்றான் சற்றே சினம் மண்டிய குரலில்.

அதிலே அவள் மனம் மீண்டும் சுணங்கிப் போனது. “மதியமே தனியாக அமர்ந்து சாப்பிட ஒருமாதிரி இருந்தது.” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

அதைப் புரிந்துகொண்டான் போலும், “சரிசரி சாப்பிடு..” என்றான் தன்மையாக.

அதன் பிறகான மூன்று நாட்களும் இலக்கியாவுக்கு மின்னலென மறைந்தது. காலையில் கடைக்குச் செல்பவன் அவளின் கைச்சமையலை உண்பதற்காக ஆவலோடு ஓடிவந்தான். அதன்பிறகு வவுனியா பூங்கா, நூல்நிலையம், சிவன்கோவில் என்று எங்கேயாவது அவளை அழைத்துச் சென்று காட்டினான்.

அவளை வீட்டில் விட்டுவிட்டு திரும்பவும் தன் அலுவல்களைப் பார்க்கச் செல்பவன் மாலையில் தியேட்டருக்கு அல்லது ஏதாவது நல்ல உணவகத்துக்கு என்று மீண்டும் அழைத்துச் சென்றான். இரவினில் ஆசைக்கணவனாய் அவளைக் கொஞ்சினான்.

முக்கியமாக, அவளிடம் அவன் எரிந்து விழவே இல்லை.

இலக்கியா சந்தோசத்தில் மிதந்தாள். இந்த உலகையே மறந்தாள். முக்கியமாக அவனது முன்கால வாழ்க்கையை முற்றிலுமாக மறந்து, சொர்க்கலோகத்தில் மிதந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். கணவனின் நினைவுகளை மட்டுமே மனதில் சுமந்தவள் இன்னுமின்னும் அவன்மேல் உயிராகிப் போனாள்.

அன்று இரவும் கூடலின் பின் அவனது வெற்று மார்பில் சாய்ந்து கிடந்தவள், “நாளைக்குக் கிளம்பவேண்டும் இல்லையா அத்தான்?” என்று கேட்டாள், கிளம்பும் மனமே இல்லாத குரலில்.
 

Vishakini

Moderator
Staff member
கலைந்துகிடந்த அவளின் தலைமுடியை காதோரமாக ஒதுக்கியபடி, ம் கொட்டினான் அவன்.

“இந்த மூன்று நாட்களும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. மின்னல் மாதிரி ஓடிவிட்டதே..” என்றாள் வருத்தத்துடன்.

அவளுக்கு ஏனோ அந்த வீட்டை விட்டு, அவளுக்கும் அவனுக்குமான அந்தத் தனிமையை விட்டுப் போகவே பிடிக்கவில்லை. அங்கேயே அவனோடு காலம் பூராக இருந்துவிட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியப்படாதே!

மனைவயின் பேச்சுக்குப் பதில் சொல்லாதபோதும் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் தர்சன்.


அடுத்தநாள் காலை, அவர்கள் இருவருக்குமான காலைத் தேநீரையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு கணவனைத் தேடி இலக்கியா தோட்டத்துக்குச் சென்றபோது, “இல்லையப்பா. நாங்கள் இன்னும் ஒரு மூன்று நாட்கள் கழித்து வருகிறோம்.” என்று தர்சன் சொல்லிக்கொண்டு இருப்பது கேட்டது.

அதைக்கேட்டு லக்கியின் மனம் துள்ளிக்குதித்தது. அவனுடனான தனிமையும் இனிமையும் நிறைந்த வாழ்க்கை இன்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப் போகிறதே!

அவன் பேசி முடித்ததும், “அப்போ நாம் இன்றைக்குக் கிளிநொச்சிக்குப் போகவில்லையா?” என்று மலர்ச்சியும் துள்ளளுமாகக் கேட்டாள்.

“ம்.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது.” என்றான் அவன், அவளிடமிருந்து பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டே.

அவனது தேநீரையும் எடுத்து நீட்டியவள், “முதலே சொல்லி இருக்கலாமே அத்தான். நான் எல்லாவற்றையும் எடுத்துப் பெட்டியில் அடுக்கிவிட்டேன். அதையெல்லாம் திரும்ப வெளியே எடுத்து வைக்கவேண்டும்.” என்றாள் இலக்கியா.

“அதைப் பிறகு பார். இப்போது போய்ச் சேலையை மாற்றிக்கொண்டு வா. நாம் வெளியே போகிறோம்.” என்றான் அவன்.

“எங்கேத்தான் போகப் போகிறோம்?” ஆவலோடு அவள் கேட்க,

“ஏன்? சொன்னால் தான் வருவாயோ?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டான் அவன்.

கிளுக்கிச் சிரித்துவிட்டு, “சொல்லாவிட்டாலும் வருவேனே.. உங்களுடன் எங்கு வருவது என்றாலும் எனக்குச் சந்தோசம் தான்.” என்றவள், இருவரும் குடித்துமுடித்த கப்புக்களை எடுத்துக்கொண்டு துள்ளல் நடையில் வீட்டுக்குள் சென்றாள்

போகும் மனைவியையே பின்தொடர்ந்தன தர்சனின் விழிகள். பாசம் என்கிற கயிறை வைத்து அவள் தன்னை அவளோடு பிணைப்பதை அவனால் உணரமுடிந்தது. ஆனால் அதற்குள் கட்டுண்டுகிடக்க முடியாமல் ஏனோ அவன் மனம் தவித்தது. ஒரு பெருமூச்சுடன் பார்வையைப் பத்திரிகையில் பதித்தான்.

சற்று நேரத்திலேயே, “அத்தான்.. நான் ரெடி!” என்றபடி வந்தாள் இலக்கியா.

வவுனியாவிலேயே மிகப் பெரிதாக அமைக்கப் பட்டிருந்த ஆடையகத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றான் தர்சன்.

“இங்கே எதற்கு அத்தான்?” அவனோடு உள்ளே நுழைந்தபடி அவள் கேட்க, “உடுப்புக்கடைக்கு எதற்கு வருவார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.

“உடைகள் வாங்கத்தான். அது தெரியாமலா கேட்கிறேன். ஆனால் யாருக்கு, ஏன்?”

“பொறுத்திருந்தால் உனக்கே தெரிந்துவிடப் போகிறது.” என்றவன், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், “நல்ல சுடிதார்கள் காட்டுங்கள்.” என்றான்.

“எனக்கு எதற்கு அத்தான்?” என்று கணவனின் காதைக் கடித்தாள் இலக்கியா.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போடுவதற்குத்தான்.” என்றான் அவனும்.

எதைக் கேட்டாலும் அதற்கு வியாக்கியானம் பேசும் கணவனைப் பொய்யாக முறைத்தாள் இலக்கியா. “போடாமல் சுடிதாரை வைத்துச் சாம்பாரா செய்ய முடியும்? ஆனால் ஏன்? என்னிடம் தான் அத்தை வாங்கித் தந்தது நிறைய இருக்கிறதே. போதாக்குறைக்கு ராகினி அக்காவும் ஆரணி அக்காவும் கூட வாங்கித் தந்தார்கள்.”

“அப்போ நான் வாங்கித் தந்தால் போடமாட்டாயா?” என்றான் சுள்ளென்று.

“அப்படிச் சொல்லவில்லையே நான். இப்போது வேண்டாம் என்றுதானே சொன்னேன்.” என்றாள் அவள் உள்ளே போய்விட்ட குரலில்.

“உனக்கு எதை எப்போது வாங்கித் தரவேண்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் எதுவும் பேசாமல் உனக்குப் பிடித்ததை எடுக்கும் வழியைப் பார்!” அவளுக்கு மட்டுமே கேட்கும்விதமாகக் கடினப்பட்ட குரலில் சொன்னான் தர்சன்.

முகம் வாடிப்போனது இலக்கியாவுக்கு. அதற்குமேல் எதுவுமே பேசாது இரண்டு சுடிதார்களை மட்டும் தெரிவு செய்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, தனக்குப் பிடித்த நிறங்களில் மிக வேகமாக மனைவிக்குச் சுடிதார் மட்டுமில்லை சேலைகள் முதல் கொண்டு ஜீன்ஸ், பிளவுஸ், டாப்ஸ் என்று அனைத்தையும் தேர்ந்து எடுத்தான்.

“ஐயோ அத்தான், இதென்ன ஜீன்ஸ் எல்லாம் வாங்குகிறீர்கள்?” என்று பொறுக்கமுடியாமல் கேட்டாள் இலக்கியா.

“ஏன்.. வாங்கினால் என்ன?”

“ப்ச் அத்தான்! எதையாவது சொன்னால் மட்டும் மூக்குக்கு மேலே கோபம் வந்துவிடும் உங்களுக்கு. அத்தை, மாமா முன்னால் இதையெல்லாம் நான் போடலாமா என்று யோசிக்க மாட்டீர்களா?”

“உன்னை யார் உன் அத்தை, மாமாக்கு முன்னால் போடச்சொன்னது? என் முன்னால் மட்டும் நீ போட்டால் போதும்!” என்றவன், ஒரு ஜீன்ஸையும் டாப்பையும் எடுத்து அவள் கையில் கொடுத்து, “போட்டுக்காட்டு!” என்றான்.

அவளுக்கோ சங்கடமாக இருந்தது. அதுநாள் வரை ஜீன்ஸ் அணிந்தே இராதவளுக்கு அதைக் கணவனிடம் சொல்லவும் பயம். அதோடு சொல்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லையே! தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்று நின்று அவளைப் போடவைக்கத்தான் போகிறான் அவன். பிறகு எதற்கு வீணாக அவனிடம் ஒரு திட்டை வாங்குவான்.

“இது கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்..” டாப்பைக் காட்டி அவள் சொல்ல,

“நீ முதலில் போய்ப் போட்டுக்கொண்டு வா. இறுக்கமா இல்லையா என்று நான் சொல்கிறேன்.” என்றான் அவன்.

அதை அணிந்து கொண்டபோதோ அவளுக்கு என்றே அளவெடுத்துத் தைத்தது போன்று அப்படியே பொருந்தியது இலக்கியாவுக்கு.

இவனுக்கு எப்படி என் அளவு, அதுவும் இவ்வளவு சரியாகத் தெரியும் என்று யோசிக்கையில் கிடைத்த பதிலில் அவளின் காதுமடல்கள் சிவந்துபோனது. வெட்கத்தில் உதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டாள்.

தன்னுடைய தடுமாற்றத்தை கணவனுக்குக் காட்டாது இருக்க முயன்றபடி அவன் முன் வந்து நின்றவளை மேலும் கீழுமாக அளந்தான் தர்சன்.

அவ்வளவுதான்! “சரி! போய் மாற்றிக்கொண்டு வா..” என்றுவிட்டு, மீண்டும் அவளுக்கான தேர்வில் இறங்கிவிட்டான்.
 

Vishakini

Moderator
Staff member
ஏமாற்றமாக உணர்ந்தாள் இலக்கியா. நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொன்னால் தான் என்னவாம்? அவன் சொத்தா குறைந்துவிடும்? குறைந்தபட்சமாக அவனிடமிருந்து ஒரு மெச்சுதலான பார்வையைத் தன்னும் எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. மனம் சுணங்க உடையை மாற்றிக்கொண்டு வந்தவள், அவன் எடுத்து வைத்திருந்த உடைகளைப் பார்த்து மலைத்தே போனாள்.

“இவ்வளவும் எதற்கு அத்தான்? சும்மா காசை வீணாக்காதீர்கள்.” அவன் கோபப்படுவான் என்று தெரிந்தும் மனம் கேளாமல் சொன்னாள் இலக்கியா.

மனைவியின் பேச்சை காதிலேயே விழுத்தாமல், “பில்லை போடுங்கள்..” என்றான் பணிப்பெண்ணிடம்.

பணத்தைக் கொடுத்துவிட்டுக் கைகள் நிறைந்த பைகளோடு வெளியே வந்தவன் அவற்றைக் காரின் டிக்கிக்குள் வைத்துவிட்டு மனைவியோடு நகைக் கடைக்குள் நுழைந்தான்.

அங்கேயும் வீட்டுக்குப் போடக்கூடிய வகையில் சாதரணமாகவும், வெளிக்குப் போடக்கூடிய வகையில் கொஞ்சம் பெரிதாகவும் நகைகளையும் தெரிவு செய்தான் தர்சன்.

“அத்தான் ப்ளீஸ்.. எதற்கு இப்படிச் செலவு செய்கிறீர்கள். என்னிடம் தான் எல்லாமே இருக்கிறதே. சும்மா சும்மா காசை அநியாயம் செய்யாதீர்கள். பணத்திலேயே வாழ்வதால் பணத்தின் அருமை தெரியவில்லையா உங்களுக்கு?” விட்டால் அழுதுவிடும் குரலில் சொன்ன மனைவியை மெல்லிய வியப்போடு திரும்பிப் பார்த்தான் தர்சன்.

அவன் பணத்தை அநியாயம் செய்வதாக அவள் சொன்னதோ, அதன் அருமை தெரியவில்லையா என்று கேட்டதோ அவனுக்குக் கோபத்தை வரவழைக்கவில்லை. மாறாக, அவளின் தம்பிக்கு ஆயிரத்தில் வரும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்ததற்கே அவ்வளவு சந்தோசப்பட்டவள் இன்று லட்சத்தில் நகை வாங்குகையில் இப்படி மறுக்கிறாளே என்று உள்ளூர அதிசயித்துத்தான் போனான் அவன்.

பணத்துக்கு அன்றிப் பாசத்துக்கே அவள் முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பது புரிந்தபோது அவன் மனம் எதையோ சுகமாய் உணர்ந்தது.

அவனின் பார்வையைத் தவறாகப் புரிந்துகொண்ட அவளோ, “தயவுசெய்து கோபப்படாதீர்கள். நீங்கள் வாங்கித் தந்து நான் போட்டுக்கொள்வதில் எனக்குச் சந்தோசம் தான். அதற்காக இப்படிக் காரணமே இல்லாமல் வாங்கவேண்டுமா? கல்யாணத்துக்கு என்று இப்போதுதானே அவ்வளவு நகைகள் வாங்கினோம். திரும்பவும் எதற்கு?” என்று அவசரமாகச் சொன்னாள்.

“அதற்காகப் போட்டதையே திரும்பத் திரும்பப் போடமுடியுமா? அதோடு இது வீண் செலவும் இல்லை!” என்று தன்மையாக என்றாலும் அழுத்தமான குரலில் சொன்னவன், தனக்குப் பிடித்த நகைகளை எல்லாம் மனைவிக்கு வாங்கிவிட்டே அந்தக் கடையை விட்டு வெளியே வந்தான்.



தர்சனும் இலக்கியாவும் உயர்தர ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருந்தனர். உணவை உண்பதுதான் தன்னுடைய தலையாயக் கடமை என்பதைப்போன்று தலையைக் குனிந்தபடி உண்டுகொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில் தர்சனின் இதழ்கடையோரம் மெல்லிய புன்னகையொன்று உதித்தது.

கோபமாக இருக்கிறாளாம்! அவன் முகத்தைப் பார்க்க மாட்டாளாம்! எவ்வளவு நேரத்துக்காம் என்று நினைத்தவன், வேண்டுமென்றே தட்டில் இருந்த உணவை அளைந்துகொண்டு இருந்தான்.

சில கணங்களிலேயே, “இங்கே வந்தது பசிக்குச் சாப்பிட. இப்படி அளைந்துகொண்டு இருப்பதற்கு இல்லை.” என்று அவன் முகம் பாராமல் அறிவித்தது மனைவியின் குரல்.

தன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்று தெரிந்ததில் உள்ளம் துள்ளியபோதும், வேண்டுமென்றே உண்பதை நிறுத்திவிட்டு மனைவியின் குனிந்த தலையையே பார்த்துக்கொண்டு இருந்தான் தர்சன்..

வேகமாக நிமிர்ந்து, “ப்ச்! அத்தான். என்னதான் செய்கிறீர்கள்? சூடு ஆறமுதல் சாப்பிட்டு முடியுங்கள்.” என்றாள் அவள்.

தான் எதிர்பார்த்தது நடந்துவிட்டதில் மனதுக்குள் சிரித்துக்கொண்டவன், “இவ்வளவு நேரமாக இங்கே ஒருவன் இருப்பதையே கவனிக்காமல் இருந்தவளுக்கு இப்போது மட்டும் என்ன அக்கறை?” என்றான் கோபமாக.

“உங்களைக் கவனிக்காமல் தான் நீங்கள் சாப்பிடாமல் இருந்தது எனக்குத் தெரிந்ததா? சும்மா சும்மா எல்லாவற்றுக்கும் பிடிவாதம் பிடிக்காமல் சாப்பிடுங்கள் அத்தான்.” அன்னையாக மாறி அவனைக் கவனித்தவளைப் பார்த்தபடி உணவை அள்ளி வாயில் வைத்தான் தர்சன்.

அவன் உண்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியாகத் தானும் உணவை முடித்தாள் இலக்கியா.

அடுத்ததாகத் தர்சன் மனைவியை அழைத்துச் சென்றது மோட்டார் வண்டிகள் விற்கும் இடத்துக்கு.

சுதனுக்கு என்று புரிந்ததுமே, “அதுதான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தாயிற்றே அத்தான்.” என்றாள் இலக்கியா.

அவன் அவளைத் திரும்பிப்பார்த்து முறைக்க, “நான் வாயைத் திறக்கக் கூடாதே! உடனே முறைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!” என்று நொடித்தவள், அதன்பிறகு ஒன்றுமே சொல்லவில்லை. சொல்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லையே!

அப்படியே அவளின் தந்தைக்குச் சக்கர நாற்காலியும் வாங்கி, அவர்களின் லாரியிலே அவற்றை ஏற்றி கிளிநொச்சிக்கு அனுப்பிவிட்டு இரவு உணவையும் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தனர் இருவரும்.

அடுத்தநாள் மனைவியை மடுவுக்கு அழைத்துச் சென்றான் தர்சன். அவளுக்கோ ஆனந்தத்திலும் ஆனந்தம்!

அங்கே காரைவிட்டு இறங்கியதுமே, “தாங்க்ஸ்த்தான் தாங்க்ஸ்.. மடு மாதாவை பார்க்கவேண்டும் என்பது என்னுடைய எவ்வளவுநாள் ஆசை தெரியுமா. என்னால் இதை நம்பவே முடியவில்லை.” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கினாள் இலக்கியா.

விரிந்த முறுவலுடன் மனைவியின் குதூகலத்தைப் பார்த்து ரசித்தான் அவன்.

மடு மாதாவை சென்று வணங்கியவர்கள், அன்றைய நாளை மன்னாரிலேயே கழித்தார்கள். “என்னுடனேயே இருக்கிறீர்களே அத்தான், வேலைகளைப் பார்க்கவில்லையா?” என்று விசாரித்தாள் இலக்கியா.

“இப்போ என்ன? நான் வேலைவெட்டி இல்லாமல் உன்னுடன் சுத்திக்கொண்டு இருக்கிறேன் என்கிறாயா? சரி! நாளைக்கு நீ தனியாக வீட்டிலேயே இரு. நான் என் வேலைகளைப் பார்க்கிறேன்.” என்று முறுக்கினான் அவன்.

“ஐயையோ! வேண்டவே வேண்டாம்! நான் இனி வாயையே திறக்கமாட்டேன். நீங்கள் எங்கும் போய்விடாதீர்கள். நாளைக்கு ஒருநாள் மட்டும்தானே நமக்கு இருக்கிறது. அதனால் என்னுடனேயே இருங்கள், ப்ளீஸ் அத்தான்.” என்றவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்து ரசித்தான் தர்சன்.

முழுநாளும் நன்றாக ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள், அடுத்தநாள் காலையில் எழுந்துகொள்வதற்கு அவசரம் காட்டவே இல்லை.

அதுவும் இலக்கியா, கணவனின் கைவளைவுக்குள் கோழிக்குஞ்சைப் போல் அடங்கிக்கிடந்தாள்.

அதற்குமேலும் தாமதிக்க முடியாமல், “இனி கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.” என்றான் தர்சன், மனைவியை அணைத்திருந்த கரங்களை விலக்காமலேயே.

“ம்ம்..” என்றவளுக்கும் எழுந்துகொள்ளும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

மனமேயின்றி எழுந்து தயாராகி, உடைகளை எல்லாம் பெட்டிகளில் அடக்கி, ராமையாவிடமும் விடைபெற்று ஒருவழியாகத் தர்சன் தம்பதியினர் கிளிநொச்சிக்கு பயணப்பட்டனர்.

அந்தப் பயணம் முழுவதுமே கணவனின் தோளில் தொற்றிக்கொண்டு வந்த லக்கியின் மனம் நிறைந்து வழிந்தது.

வவுனியாவுக்கு வரும்போது இருந்த மனநிலை மாறி, மனம் முழுவதும் கட்டியவனையே சுமந்தபடி சென்றாள் அவள்.
 
Top Bottom