அத்தியாயம்-4
சூரியனின் வெப்பம் தணிந்துவிட்டதில் மாலைக்காற்றுச் சுகமாக வீசிக்கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தர்சனின் கார், சற்று வேகமாகவே சாலையில் பயணித்தது. அவன் மனதிலோ ஒருவித உற்சாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
அதற்குக் காரணமானவளை எண்ணியதுமே அவனது இதழோரம் உல்லாசப் புன்னகை ஒன்று இதமாக ஜனித்தது. அவளையும் அவள் வீசும் அக்கினிப் பார்வைகளையும் நினைக்கையிலேயே அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்.
இதற்கே இந்தப் பாடாக இருக்கிறதே.. அவள் காதலுடன் அவனைப் பார்த்தால்? அந்த மான்விழிகள் மயக்கத்துடன் அவனை நோக்கினால்? நினைக்கவே நெஞ்சம் சில்லிட்டது. மனதோரம் அந்தப் பார்வைகளுக்கான ஏக்கமும் உண்டாயிற்று!
இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றின? அவனுக்கே தெரியவில்லை.
ஆனால், அவன் உடலின் ஒவ்வொரு அணுக்களும் அவளுக்காகவும், அவளின் அண்மைக்காகவும் ஏங்கின.
பத்து வயது சிறுமியாக இருந்தவளை அப்போதே அவனுக்குப் பிடிக்கும்தான். ஆனால், அந்தப் பிடித்தத்தின் அர்த்தம் அத்தை மகள் என்கிற சொந்தம் மட்டுமே!
அந்தச் சொந்தம் இன்று நேசமாக மாறிவிட்ட விந்தையை எண்ணி உள்ளூர வியந்தான்.
இருபத்தியாறு வயதானபோதும் திருமணத்தைப் பற்றிச் சற்றும் சிந்தியாமல் இருந்தவனின் மனதை ஒரே நொடியில் தன் காலடியில் விழ வைத்துவிட்டாளே!
அல்லாவிடில், இருபத்தியெட்டு வயதான அமலனிடமே, ‘திருமணத்துக்கு இப்போது உனக்கு என்ன அவசரம்?’ என்று கேட்டவன், இன்று எப்போதடா வெண்பாவை மணந்து அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்வோம் என்று துடிப்பானா?
இந்த ஏக்கத்துக்கும், அவளைப் பார்த்ததும் உண்டான பிடிப்புக்கும், அவளை யாருக்குமே விட்டுக் கொடுக்க முடியாது என்று தோன்றும் பிடிவாதத்துக்கும் காரணம் என்ன?
தெரியவில்லை!
ஆனால், அவளின்றி அவனில்லை! அதுமட்டும் மிக மிக நன்றாகவே புரிந்தது.
அவளுக்கும் அப்படியா? என்கிற கேள்வி தோன்றியதுமே அதுவரை அவன் இதழ்களில் குடிகொண்டிருந்த புன்னகை மடிந்தது.
இல்லையே! அவனுக்குத் தெரிந்தவரையில் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லையே! மனம் கனத்துப் போயிற்று!
ஆனால் ஏன்? அவன் அப்படி என்ன செய்தான்? எதுவுமில்லையே!
அவளிடம் வம்பு வளர்ப்பது கூட அவள் மேலிருக்கும் பிரியத்தினால் அல்லவா.
அதனால் தான் அவனைப் பிடிக்கவில்லையோ?
இருக்காது! அப்படியாக இருக்காது!
ஆனாலும் இனி அவளிடம் வம்பு வளர்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டான், அது தன்னால் என்றுமே முடியாது என்பதை அறியாமலேயே!
அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டு வந்தவனின் விழிகளில் அவன் நினைவுகளின் நாயகியே எதிரே தோன்றினாள்.
இவள் எங்கே இங்கே என்று யோசித்தபடி பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திவிட்டு விழிகளைச் சுழற்றியவனுக்கு அப்போதுதான் புரிந்தது, தான் வீட்டுக்கு வந்துவிட்டதையும், வெண்பா அவர்களின் வீட்டுத் தோட்டத்து வாங்கிலில் அமர்ந்திருப்பதையும்.
கைகள் தானாகக் காரை வீட்டுக்கு விட்டபோதும் இந்த உலகத்தையே மறந்து அவளின் நினைவுகளில் மூழ்கியிருந்திருக்கிறான்!
சின்னச் சிரிப்புடன் பின்னந் தலையில் தட்டிக்கொண்டான். “சரியான வெண்பா பைத்தியம் ஆகிட்டடா நீ..” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டவனின் விழிகளோ காந்தமென அவள் இருந்த திசையை நோக்கி வேகமாக ஓடின.
தலைக்குக் குளித்திருப்பாள் போலும், விரித்துவிட்ட முடிகளைக் காய வைப்பதற்காக ஒரு கையினால் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற கையோ காதுக்கு அருகே கைபேசியைப் பிடித்திருக்க, யாருடனோ பூரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தாள்.
பச்சை நிறத்தில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த பாவாடையும் அதற்குப் பொருத்தமாக மஞ்சள் நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தவள், வாங்கிலில் அமர்ந்து இருந்தபடி தன் பாதங்களைப் பச்சைப் புல்வெளியில் பதித்திருந்தாள்.
காந்தத்தை நோக்கி நகரும் இரும்புத் துகள்களாய் மனம் அவளை நாட, அவளருகே சென்றான் தர்சன்.
அவன் வருவதைக் கூட உணராது கைபேசியில் மூழ்கியிருந்தவள் அருகில் யாரோ அமரும் அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். தர்சனைக் கண்டதும் ஒருநொடி திகைத்து மறுநொடி கைபேசியை வேகமாக அணைத்துவிட்டு சட்டென வாங்கிலில் இருந்து எழுந்தாள்.
திடீரெனப் பக்கத்தில் அமர்ந்ததில் பயந்துவிட்டாள் போலும் என்று எண்ணிய தர்சன், “ஹேய்.. பயப்படாதே நான்தான்.” என்றான் புன்னகையுடன்.
காலையில் அந்தக் கத்துக் கத்திவிட்டுப் போனவன் இப்போது இப்படிச் சாந்தமாகக் கதைப்பதை மெல்லிய ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
அதுநாள் வரை கேலியையும், கிண்டலையும், கடுமையையும் மட்டுமே சுமந்து அவளைப் பார்த்த அவனது விழிகளில் தெரிந்த, இன்னதென்று வரையறுக்க முடியாத பாவத்தில் குழம்பிப் போன வெண்பாவால் ஏனோ அந்தப் பார்வையை ரசிக்க முடியவில்லை.
அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிரியமின்றி அவள் நகர, “யாருடன் கதைத்துக் கொண்டிருந்தாய்?” என்று, அவனுக்கும் அவளுக்குமாகக் கிடைத்த அந்தத் தனிமையில் பேச்சை வளர்க்க விரும்பிக் கேட்டான் தர்சன்.
அப்படியாவது அவர்களுக்குள் திரை மறைவில் இருக்கும் அந்தப் பனிப்போர் முடியாதா என்கிற ஆசை இருந்தது அவனிடம்.
அவளோ, “கட்டாயம் சொல்லவேண்டுமோ?” என்று துடுக்காகக் கேட்டாள்.
தர்சனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
விழிகளால் அவளை விழுங்கியபடி, “கட்டாயம் என்றில்லை. சும்மாதான் கேட்டேன்..” என்றவன்,
“எங்கே உன் கைபேசியைக் காட்டு பார்க்கலாம்..” என்று கேட்டான்.
“முடியாது! ஏன் நான் யாருடனும் கதைக்கக் கூடாதா? உடனேயே யார் என்ன ஏது என்று ஆராய்வீர்களா? இதென்ன இந்தவீட்டில் இப்படி ஒரு அராஜகம்?” என்று வெடித்தவளைத் திகைப்போடு பார்த்தான் தர்சன்.
நல்லதாக ஒரு கைபேசியை அவளுக்கு வாங்கிப் பரிசளிக்கலாம் என்கிற நோக்குடன்தான் அதைப் பார்க்க நினைத்தான். அதற்குப் பெயர் அராஜகமா?
அதோடு, நேசம் வைத்துவிட்டவளின் எடுத்தெரிந்த பேச்சில் நெஞ்சின் ஒரு ஓரத்தில் மெலிதாக வலியொன்று எழுந்தது. தன்னையும் தன் மனதையும் புரிந்துகொள்ள மாட்டாளா என்கிற ஏக்கமும் உண்டானது.
அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு, “அப்படியில்லை.. நல்ல கைபேசி உன்னிடம் இல்லை என்றால் ஒன்று வாங்கித் தரலாம் என்று நினைத்துத்தான் கேட்டேன்.” என்றான் தன்மையான குரலில்.
“எனக்கு வாங்கித் தருவதற்கு நீங்கள் யார்? எனக்குச் செய்ய என் அம்மா இருக்கிறார்.” என்றாள் அவள் மீண்டும் வெடுக்கென.
அவளின் உதாசீனப் பேச்சில் தர்சனான தர்சனே ஒருநொடி வாயடைத்து நின்றான்.
“நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னைக் கண்டதால் இன்று காலையில் சும்மாதான் சீண்டினேன். அதனால் என் மீது கோபமா?” என்று, நயமாகவே கேட்டான் தர்சன்.
எப்படியாவது அவளது கோபத்தை ஆற்றி, அவன் மீதான நேசத்தை விதைத்துவிட வேண்டும் என்கிற ஆசையில் தன்மையாகப் பேசியவனுக்கு, தான்தானா இவ்வளவு பொறுமையாகப் பேசுகிறோம் என்கிற ஆச்சரியமும் உள்ளூரத் தோன்றத் தவறவில்லை.
“உங்களையும் உங்கள் பேச்சையும் ஒரு பொருட்டாகவே நான் மதிக்கவில்லை. பிறகு எதற்காக உங்கள் மீது நான் கோபப்பட?” அலட்சியமாகக் கேட்டவளின் கேள்வியில், மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது அவனுக்கு.
“பேசுவதை யோசித்துப் பேசு வெண்பா. வார்த்தைகளைத் தேவையில்லாமல் விட்டு என் ஆத்திரத்தைக் கிளப்பாதே!” என்றான், உணர்வுகளின் தாக்கத்தால் உண்டான கோபத்தை அடக்கியபடி.
அவளின் இதழ் கடையோரம் ஏளனப் புன்னகை ஒன்று உதித்தது. உனக்கே இவ்வளவு கோபம் என்றால் எனக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் என்று மனதில் நினைத்தவள், “ஆத்திரத்தைக் கிளப்பினால் என்ன செய்வீர்கள்? இந்த வீட்டை விட்டுத் துரத்தி விடுவீர்களோ? அதை முதலில் செய்யுங்கள். தொல்லை விட்டது என்று நிம்மதியாகப் போவேன்.” என்று திமிராகச் சொன்னவள்,
“எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. கண்டவனுடனும் நின்று கதைக்கவேண்டி இருக்கிறது.” என்று, அவனுக்குக் கேட்கும் விதமாகவே வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அது அவன் செவிகளில் மிக நன்றாகவே விழுந்ததில், இழுத்துப் பிடித்த பொறுமையும் பறக்க, “நானாடி உனக்குக் கண்டவன்? ஆசையாகக் கதைக்கலாம் என்று வந்தால் திமிரா காட்டுகிறாய்? அந்தத் திமிரை அடக்கிவிட்டுக் கேட்கிறேன் நான் யார் என்று?” என்று அவன் சீறிக்கொண்டு இருக்கையிலேயே, “டேய் தர்சா.. வேலை முடிந்து வந்துவிட்டாயா?” என்று கேட்டபடி அமலன் தோட்டத்துக்குள் வந்துகொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் பொங்கிய ஆத்திரத்தையும் சினத்தையும் பல்லைக் கடித்து அடக்கிய தர்சன் அவற்றைத் தன் பார்வையாலேயே அவளுக்குக் உணர்த்தினான்.
அவனின் சினம் மிகுந்த விழிகளைப் பார்க்கப் பயந்து அமலனைப் பார்த்தாள் வெண்பா.
“வைட்ரோஸ் நீயும் இங்கேயா இருக்கிறாய்..” என்ற அமலன் தர்சனின் அருகில் அமர்ந்துகொண்டான்.
அதற்குப் பதிலேதும் சொல்லாமல் வெறுமனே புன்னகைத்தாள் வெண்பா. அதைப் பார்த்த தர்சனுக்குள் கோபம் குமிழியிட்டது.
இந்தப் புன்னகையை அவள் அவனைப் பார்த்துச் சிந்தவில்லையே?
அதை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, “வவுனியாவில் இருந்து எப்போதுடா வந்தாய்?” என்று தமையனிடம் விசாரித்தான்.

Last edited by a moderator: