அத்தியாயம்-5
மனதில் திட்டம் தெளிவானதும் அத்தையை நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.
புன்னகையோடு அவளை நோக்கி, “என்னம்மா, சொல்லு?” என்று ஊக்கினார் மஞ்சுளா.
மீண்டும் தலையைக் குனிந்துகொண்டு, “அதுவந்து.. அத்தை.. அமலன் மச்சான்..” என்று அவள் இழுக்கையிலேயே, “அமலனைக் கட்டிக்கொள்கிறாயா?” என்று ஆர்வத்தோடு அவசரமாகக் கேட்டார் மஞ்சுளா.
பிடிக்காத விஷயத்தை வாய்விட்டுச் சொல்லவேண்டிய அவசியத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய அத்தைக்கு மனதால் நன்றியுரைத்தவள், தன் சம்மதத்தைச் சொல்லும் விதமாகத் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.
“அடி என் செல்வமே.. எங்களுக்குப் பிடித்தது மாதிரியே உனக்கும் பிடித்திருக்கிறதே..” என்றபடி அவளை ஆசையோடு அணைத்துக்கொண்டார் மஞ்சுளா.
மகேஸ்வரியின் முகமும் மலர்ந்தது. அந்த வீட்டிலேயே இருக்கவேண்டாம் என்று சொன்ன மகள் திருமணத்துக்குச் சம்மதித்ததில், இனி எல்லாம் சுகமே என்று எண்ணி மகிழ்ந்தார். அவரின் கையோ மகளின் தலையைப் பாசத்தோடு தடவி கொடுத்தது.
“பின்னேரம் அமலன் வந்ததும், அவனிடமும் கேட்கலாம், சரியா..” வெண்பாவின் கன்னம் தடவிச் சொன்னார் மஞ்சுளா.
ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள் வெண்பா.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்? எங்களுக்கு உன் விருப்பம் தானேம்மா முக்கியம். அதனால் நாங்கள் யாரிடமும் இதைப்பற்றி இன்னும் மூச்சுக்கூட விடவில்லை. முதலில் உன்னிடம் கேட்டுவிட்டு உனக்குப் பிடித்தவனிடம் பிறகுதான் கேட்பது என்று நானும் உன் மாமாவும் முதலே பேசிக்கொண்டோம்.” என்றவரின் பேச்சில் மெல்லிய இளக்கம் தோன்றியது அவளுக்கு.
தான் பெற்ற மக்களை விடத் தனக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறாரே, அப்படிச் செய்வதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டுமல்லவா என்று எண்ணியதும் நெகிழ்ந்த மனது, இப்போது நல்லவராக இருந்தால் மட்டும் போதுமா? பத்து வருடங்களுக்கு முதல் அவர் செய்தது பிழை தானே என்று வாதிட்டது.
இப்போது திருந்தி விட்டதாலேயே முன்னர்ச் செய்த தவறுகள் இல்லை என்று ஆகிவிடுமா அல்லது அதற்குத் தண்டனைதான் தேவையில்லையா என்று நினைத்த மாத்திரத்தில் மீண்டும் கடினப் பட்டது அவள் மனது!
எனவே அவரின் கூற்றுக்கு எதுவும் சொல்லாது அமைதியாகவே இருந்தாள்.
“அமலனின் கல்யாணம் முடிந்ததும் தர்சனுக்கும் முடித்துவிட வேண்டும் அப்பா.” என்று மஞ்சுளா கணவரிடம் சொல்ல, கெக்கெலி கொட்டிச் சிரித்தது வெண்பாவின் மனது.
மாலை வேலைமுடிந்து விமலனும் அமலனும் வீட்டுக்கு வர, வாசலுக்குச் சென்று கணவனின் கைப்பெட்டியை வாங்கிய ராகினி, “வாங்க வாங்க புதுமாப்பிள்ளை..” என்றாள் அமலனை குறும்புடன் நோக்கி.
அவனோ தனக்குப் பின்னால் யாராவது நிற்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தான்.
யாருமில்லை என்றதும், “என்னையா அண்ணி புதுமாப்பிள்ளை என்று கூப்பிட்டீர்கள்?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.
“பின்னே, வேறு யாரைச் சொல்வது? ஒரு பிள்ளையோடு இருக்கும் உங்கள் அண்ணாவையா?”
“அப்படி நீ என்னைச் சொன்னாலும் நான் கோபிக்கமட்டேன்..” என்றான் அவளின் கணவன்.
“நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாம்..” என்று ராகினி நொடிக்கையில், முகம் எல்லாம் பூரிக்க நிறைந்த புன்னகையுடன் விரைந்து வந்தார் மஞ்சுளா.
“அமலா..! வாவா..!” என்றவரின் ஆர்ப்பாட்டமான வரவேற்பில், நான் ‘வேலைக்குத்தானே போய்விட்டு வருகிறேன். ஏதோ விண்வெளிக்கே போய்வந்த மாதிரியல்லவா அம்மா வரவேற்கிறார்’ என்று குழம்பியே போனான் அவன்.
“என்னம்மா விஷயம்? இவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள். அண்ணி வேறு புதுமாப்பிள்ளை என்று கேலி செய்கிறார்..” என்று கேட்டான் அவன்.
“அது கேலி இல்லையடா. உண்மை! வெகு விரைவில் நீ புதுமாப்பிள்ளை ஆகப்போகிறாய். அதைத்தான் அவள் சொல்கிறாள்.” என்றார் மகிழ்ச்சியோடு.
தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது அமலனுக்கு. ஆனாலும் பொறுமையாகத் தாயை அவன் பார்க்க, “உனக்கு உன் அம்மா பெண் பார்த்திருக்கிறாள் அமலா.” என்றார் ராஜசேகர்.
“பெண்ணா? யாரம்மா? இதெல்லாம் எப்போது நடந்தது..”
“எல்லாம் இன்றுதான் நடந்தது. பெண் யார் தெரியுமா மச்சான்? உங்களின் வெள்ளை ரோஜாதான்!” என்று போட்டுடைத்தாள் ராகினி.
அதைக் கேட்டவனுக்குச் சற்று அதிர்ச்சி.. அதிர்ச்சி என்பதைவிட ஆச்சரியமாக இருந்தது.
“வெண்பாவா?” என்றான் கேள்வியாக.
“ஏன் கண்ணா, உனக்கு அவளைப் பிடிக்கவில்லையா?” அதுவரை நேரமும் இருந்த மலர்ச்சியும் துள்ளலும் வடியக் கேட்டார் மஞ்சுளா.
மகன் தன் பேச்சைத் தட்டமாட்டான் என்கிற தைரியத்திலும், அவனுக்கும் வெண்பாவை பிடிக்கும் என்கிற நம்பிக்கையிலும் மகனின் திருமணக் கனவுகளைக் காணவே தொடங்கியிருந்தார் அவர்.
தாயின் வாட்டம் கருத்தில் பதிய, “எதற்கு எடுத்தாலும் உடனேயே கவலைப்படுவீர்களா அம்மா? இதை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் கேட்டேன். மற்றும்படி, உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஓகே. அதோடு முக்கியமாக வெண்பாவிடம் சம்மதம் கேளுங்கள்.” என்றான் மகன்.
“அவளிடம் கேட்டுவிட்டோம் அமலா. அவள் சம்மதம் சொன்னபிறகுதான் உன்னிடம் கேட்கிறேன்.”
“அப்போ சரி..” என்றவன், எழுந்து தன்னறைக்குச் சென்றுவிட்டான்.
அதற்குமேல் அவனுக்கு அதைப்பற்றிச் சிந்திக்கப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவனைப்பற்றி, அவன் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி அன்னை மிக நன்றாகவே அறிவார். அவரின் தெரிவு தப்பாக இருக்காது என்பதனால் மறுப்புச் சொல்வதற்கும் காரணங்கள் இருக்கவில்லை.
கோவிலுக்குச் சென்றிருந்த மகேஸ்வரியும் வெண்பாவும் வந்துவிட, அமலனும் சம்மதித்துவிட்டதை ஆரவாரமாகப் பகிர்ந்துகொண்டார் மஞ்சுளா.
மகேஸ்வரிக்கு பெரிய நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
ராகினி கூட மகிழ்ச்சியில் வெண்பாவை அணைத்துக்கொண்டாள்.
ஆனால், வெண்பா கன்றிவிட்ட முகத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல் மறைப்பதற்கும், புன்னகையைப் பொய்யாகச் சிந்துவதற்கும் படாத பாடு பட்டுப்போனாள்.
ஒருவழியாக அந்த இடத்திலிருந்து மெதுவாகக் கழன்றுகொண்டவள் தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அவளுக்கு இனி எப்படி அமலனின் முகத்தில் விளிப்பது என்கிற சங்கடம் தோன்றியது. அவன் காதல் அது இது என்று பிதற்றத்தொடங்கினால் என்ன செய்வது? மனைவியாகப் போகிறவள் என்கிற உரிமை எடுத்துக்கொள்ள முயன்றால்?
நினைக்கவே கசந்தது.
அவளறிந்த அமலன் அப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டான் என்று எண்ணினாலும் ஒருவிதப் பதட்டம் அவளுக்குள் இருந்துகொண்டே இருந்ததில், தலைவலி என்று சொல்லி அன்றிரவு உணவுக்குக் கூட அறையைவிட்டு வெளியே வரவில்லை அவள்.
அனைவரும் அவளுக்கு வெட்கம் என்று எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டனர்.
அடுத்தநாள் காலையும் அமலன் வேலைக்குச் செல்லும்வரை அவன் கண்ணில் படாமல் இருக்க எண்ணி தோட்டத்துக்குள் நழுவியிருந்தாள்.
அவன் கார் வெளியேறுகிறதா என்று வாசல் பக்கமாக ஒரு கண்ணை வைத்தபடி உலவிக்கொண்டு இருந்தவளின் வெகு அருகில், “ஹேய் வைட்ரோஸ், இங்கே என்ன செய்கிறாய்?” என்ற குரல் கேட்டதில், திடுக்கிட்டுத் துள்ளித் திரும்பினாள் வெண்பா.
அதைக் கவனியாதவனோ, “தலைவலி இப்போது சுகமா?” என்று கரிசனையாக விசாரித்தான்.
“அது.. அது..”
“என்ன?” அவளின் தடுமாற்றத்துக்கான காரணம் புரியாமல் கேட்டான் அமலன்.
“அதுவந்து.. மச்சான்..”
அவன் முகம் பாராது தலையைக் குனிந்திருந்தவளின் குழப்பத்தைக் கண்டுகொண்டவனின் புருவங்கள் ஒருநொடி சுருங்கின.
காரணம் பிடிபட்டதும் புன்னகை விரிய, “நமக்கு நடக்கப்போகும் திருமணத்தை எண்ணிக் குழம்புகிறாயா?” என்று கேட்டான்.
ஒன்றும் சொல்லாமல் அவள் நிற்க, “அதற்கு இன்னும் ஆறுமாதம் இருக்கிறது வெண்பா. கண்டதையும் நினைத்து இப்போதே குழம்பாமல் எப்போதும்போல இரு. நீ என் அத்தை மகள். நான் உன் மாமா மகன். அந்த உறவு இப்போதைக்கு நமக்குப் போதும் சரியா..” என்றான் அப்போதும் அவளுக்குப் புரியவைக்கும் இதமான குரலில்.
மெல்லிய நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் தலைநிமிர, “இந்தத் தலையை நிமிர்த்துவதற்குள் நான் பட்ட பாடு இருக்கே.. ஷப்பா!” என்று பொய்யாகச் சலித்துக்கொண்டான் அவன்.
அவள் இதழ்களில் புன்னகை அரும்ப அதைத் திருப்தியோடு நோக்கினான் அமலன்.
“சரி, இப்போது சொல், தலைவலி போய்விட்டதா?”
அது வந்திருந்தால் தானே போவதற்கு?
“ம்ம்..” என்று முனகினாள்.
அதன் பிறகான இரண்டு நாட்கள் மிக வேகமாகக் கழிந்தது. மூன்றாவது நாள் காலை பூமரங்களுக்குப் பைப்பைப் பிடித்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த வெண்பா கார் ஒன்று வீட்டுக்குள் வரவே திரும்பிப் பார்த்தாள்.
வருவது தர்சன் என்று கண்டதும் ஒருவிதப் பதட்டம் சூழ்ந்தாலும், விஷயம் அறிந்ததும் கறுக்கப்போகும் அவன் முகத்தை மனக்கண்ணில் காண்கையில் சந்தோசமாகவும் இருந்தது.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.